பூரணணே யினபப் பிராதனனே பொன்னளிசேர்
தாரணனே தந்தாயித் தாரணியின் - காரணனே
மன்னவா ளீச மகிழ்ந் திருநெல்லை
கன்னலே யென்னைமிகக் கா. | 1 |
காரூர் மிடற்றானைக் கண்ணுதலைக் காணுமா
றூரூர்க டோறுநீ யுற்றுழன்றா - யேரூரும்
வன்னை வனத்தை வணங்கிலையா னெஞ்சகமே
யன்னைவனைக் காண்ப தரிது. | 2 |
அரிதா யமதா யாரறிவா யொன்றா
யுரிதோ லுடையானா மொண்சீர் - விரிதேனா
ராறோ டுடையாருக் கன்பியற்று நெஞ்சகமே
மாறே டுடையார்க்கு மற்று. | 3 |
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகையென்றிங் - கற்றார்க
ளோதும் பெருமொழியை யுட்கொண்டு வன்னிவனத்
தாதியினை நெஞ்சே யறி. | 4 |
அறிவே யெனதுருவ மாவா னடைந்தேன்
குறியேதோ யானறியேன் கூரோய் - பொறியோடே
யோடே வெனிளுள்ள மோயா வளிநிகர்நிற்
கூடவெனி னோவ்சையாக் குன்று. | 5 |
குன்றாக் குடியர் குறத்தி மணவாளர்
கன்றாப் புதல்வருமக்க காமாமா - மென்றாக்கா
னீயசியைக் கொண்டுவர னீதியே நீலிமலை
யாய்வயலைக் காப்பதுவு மாம். | 6 |
ஆமோ வலவோவென் றையமுறும் பாடில்லை
காமாரி யாமென்னுங் கட்கேசன் - பூமாதண்
வன்னி வனத்தை வளம்படவே நீயடையி
லுன்னதிநன் குள்ளமே யுண்டு. | 7 |
உண்டோ விலையோதா னொள்ளிடையின் னெல்லைக்கென்,
றுண்டாம் பெரும்பீதி யுற்றோதான் - கொண்டாய்நீ,
நல்ல விடபான நங்கொற்ற வாளீச
வொல்லை யெனக்கே யுரை. | 8 |
உரையா யுசியுடையா யோகரமோ பாம்பை
யிரையா யரியாவை யேற்குந் - திரையாளு
நென்மாதுங் காதலரு நீங்கார் முரணென்றோ
சன்மார்க்க சங்கரனா னாய். | 9 |
ஆனா யுலகா யதனுண் ணுழைந்தனைநீ
வானேய் க்டத்தின் வள்னெப்ப - வேனோதான்
பேதத்தைப் பேசிப் பிறழ்ந்து திரிகின்றா
ரோதத்தை வாளோ யுக. | 10 |
உகத்தொ லொடுமிகத்த லொன்றேனுந் துன்றா
திகத்தி லடிநாயே னின்பே - யகத்துறுமா
செய்வாய் கழனித் திருநெல்லைக் கின்னமுதே
ஐவா ளிரதத்தாஅ யான். | 11 |
ஆனை முகனானா யாறுமுக னும்மானாய்
வானை முக்னானாய் வாளீச - வானையுகந்
தேறினாய் நெல்லைக் கினிய தவனானாய்
பாறினா யென்னையினிப் பார். | 12 |
பாராதி யெட்டாய்ப் பரந்து விளையாட
றேரா திருப்பார்க்குத் தெய்வமாய்க் - காரோதி
நென்னா யகியோடு நீகொற்ற வாளீச
பொன்னா லயமமர்ந்தாய் போய். | 13 |
போக்கும் வரவும் புணர்வுமிலாப் பூரணத்தைத்
தேக்குந் திரமனத்துத் தேன்முனிக்குத் - தீக்கானிற்
சாம முடிகாண்பார் சார்வான் வரந்தந்தா
யேமமுற நின்கருணை யே. | 14 |
ஏதோ வறியே னினிவருவ தெந்தாயே
மாதே சரணாய் மருவினேன் - றீதேதான்
செய்து திரிகின்றேன் சின்மயமாய் நின்றில்லை
னெய்துவதிங் கென்னே யினி. | 15 |
இனியா யினிநாயே னின்றாளிற் சேர்ந்தாற்
கனியாதோ நின்னுள்ளங் கட்கோய்f - பனியாலே
வாடுங் கமலத்தில் வாடியதிங் கென்னுள்ளங்
கூடுங் கருணையினைக் கூர். | 16 |
கூரா ரிறைவாளைக் கொண்டுபணி கொண்டாய்முன்
னேரார் திருநெல்லைக் கேற்றோனே - வீரேச்ற்
கென்ன வியற்றிநீ யிந்நகரைத் தொல்லிலிலு
முன்னதியாய்ச் செய்துகொண்ட தோ. | 17 |
ஓங்கார துட்பொருளா யொன்றா யமலமதா
யாங்கார நீங்கினார்க் காரமுதாய்ப் - பாங்காக
நின்றா னசியீச னீங்காம லெங்கெங்கு
நன்றாய்ப் பணிந்திடவே நாம். | 18 |
நாம வுருவெல்லா நங்கொற்ற நாதனைவிட்
டாமணுவு மில்லையவ னானையெனிற் - பீமமுறக்
காய்வதுவு மாய்வதுவுங் கானிகர்த்த நெஞ்சகமே
தோய்வதுவு மாராரைச் சொல். | 19 |
சொல்லாய் மடநெஞ்சே சொன்ன மலைவிலியைப்
புல்லாய்ப் புரத்தை யெரித்தானை - நெல்லாய்க்
கினியானைப் போற்றா திருந்தாயே யென்னென்
னினியார்ந்து துன்பளிப்ப தே. | 2 |
தேனா கமலத் திரள்சேருஞ் செந்தடமார்
வானோர் பணிகழனி வாளீச - மானார்
மயலிற் சுழலாமன் மன்னிடுவா னீயுன்
புயலிற் கருணையவுன் போது. | 21 |
போத்தனைப் போக்கப் புகல்வாய் பெருநூலாம்
வாததனை நெஞ்சகமே வாடாதே - தீதகலக்
கள்ளந் தனைத்தவிர்ததுக் கட்கேசன் கான்மலரை
யுள்ளபடி யுள்ளத்தே யுன். | 22 |
உன்னவுன்ன வோடிவிடு முன்னுருவங் கட்கேச
வுன்னா திருந்தா லுணரலாம் - பின்னமிலா
நல்லாற்றை விட்டுவிட்டு நாயே நலைந்தேனே
சொல்லாற்ற லென்பயக்குஞ் சொல். | 23 |
சொல்லிற் கடங்காத சோதியுனை வாதியர்கள்
சொல்லிற் க்டங்கச் சொலவுறுத - ன்ல்லெழிலா
ரம்பரத்தைத் திக்கா யணிந்த வசியீச
வம்பரத்தைக் கட்டலையொப் பாம். | 24 |
ஆமோ வயின்றிடுத லைம்முகத்தெம் வாளீச
மாமா முகன்னீயு மற்றாறா - மாமுகனு
மன்னத்தின் பூரணியா ளாவியென வில்லக்கா
லென்னத்தைப் பண்ணுகிற் பீர். | 25 |
ஈசாறை யையைந்தோ டீர்நான்கிற் கப்பாலாஞ்
சீராருங் கொற்றேசன் சேவடிக் - ளோராமற்
கற்றாற் கலைகளையே கண்டார் நகையாரோ
பற்றார் புரிவாரோ பார். | 26 |
பாரோரும் விண்ணோரும் பற்றாப் பரஞ்சுடரைத்
தோரதே நெஞ்சே திரிந்தெய்த்தாய் - பேரேது
மில்லானே யென்றாலு மேற்றானெங் கட்சேச
னல்லார் தொழும்பதமே நாடு. | 27 |
நாடிகழிஞ் சோரமுற னன்கெனினென் னற்றாதாய்
தோடமுறென் றீமனதைச் சோரஞ்செய் - தோடிவிடு
நாயே னெவ்ர்பாள் நாட்டே னுந்தாணை
பேயேன்பொய் பேசுவனோ பேசு. | 28 |
பேச்சும் பொருளும்போற் பேதையொடு நீநின்றான்
மூச்சும் விடப்படுமோ மோகத்தை - யோச்சமென
மற்றவர்கள் கொற்றேச மாகருணை நீபுரியி
லற்று விடலடியே னாம். | 29 |
ஆமோ வகிலத் தரும்போகி த்யாகிகடாங்
கோமா னுனையன்றிக் கொற்றேச - சீமானே
மாதுக்குப் பதிகொடுக் காடையென மாதிக்கை
தீதற் றுடுத்ததிரத் தே. | 30 |
தேவாதி தேவன் றிருநெல்லை நாயகனற்
பூவார் திருவடியிற் போந்தக்காற் - சாவாதே
யோவ லெளிதென் றுயர்மா ளிகைமாட்டுக்
கூவி யழைக்குங் கொடி. | 31 |
கொடிமேன் மலையிருக்குங் கொற்றேச ரூரி
லடியா ரதனருகே யாரார் - பிடியோட
வன்னம் பயின்றுவர வாவா குயில்பாடப்
பொன்னம் ம்யிலாடும் போய். | 32 |
போயழைகான் மைத்துனனைப் பொங்கரவ நாணாயாத்
தேய்சருமங் கோவணமா யேனென்று - காய்கலுழற்
கண்டரியுங் கீழ்வீழக் கானோக்குங் கட்கேசன்
புண்டரிகத் தாணிதமுதம் போற்று. | 33 |
போற்றுங் குமரேசன் பொற்றலையின் மேலேறி
யாற்றிற் கரமிட்டே யாகாவென் - றேற்றுகணிற்
காய்ச்சற்கோ கட்டழலுங் கங்கையதுங் கட்கேச
தூய்ச்சற் றணிந்ததுநீ சொல். | 34 |
சொல்களனி லேலகளமுந் தூய்சிரசிற் பெண்ணிடபா
னெல்லைமுகந் தோலிடையினேரார்க்குத் - தொன்மாலார்
சஞ்சேர்க்குஞ் சம்புசல பிந்துசல சஞ்சம்பா
லஞ்சாலம் போலவனு லா. | 35 |
உலாவித் திரிதேனோ வொண்பசுவா மோதே
னிலாகற் பகதருவோ நீள்கோ - நிலாவணியாய்
சிந்தா மணியோ சிறுகல்லா மென்றாலும்
வந்தார்க் குதவும் வளன். | 36 |
வளமார் கருணையினல் வாரிதியாய் வாடா
வுளவாற்றல் பூரணமா யுள்ளாய் - களவாணீ
யென்றாலுங் காட்சியினை யெற்கே னளித்திலைநீ
கன்றாத நெற்பெணின்கொண் கா. | 37 |
காலிலியிற் றண்மதியிற் காணென்பிற் கங்கையினில்
வாலடலைப் பானெலையின் வார்முலையின் - மேல்சியற்
கச்சம் பிரிய மசுசிசுசி கோரஞ்ச
மெச்சம்பந் தந்தானு மில். | 38 |
இல்லாண் மலைநீலி யின்றனய ரின்றீன்பெண்
ணல்லாது வேறுநினைப் பார்ப்பில்லா - ரல்லலெனச்
சங்கரனே சங்கரனாய்ச் ச்ந்யாசஞ் சார்ந்தக்கா
லிங்குரனி லிற்பேண் லேன். | 39 |
ஏனோ விரக்கந்தா னென்பேரி னிற்கிலைதான்
வானோர் பணிகழனி வாளீச - நானோதா
னன்பிலனோ வன்பிலனே லன்பதனைத் தந்துநித
மென்புருகப் பாடவா மீ. | 40 |
ஈயென்றே காட்டியிவ ணீர்பதினா றேரெயிறை
யீயென்றா லீவாயோ வீர்வாளோ - யோயுள்மாய்
நின்னுருவத் தேநின்றா னீயருள்வா யாதலினா
லன்னவணஞ் செய்வா னருள். | 41 |
அருளே திருவுருவா மாரியனார்க் கேவல்
புரியாது நெஞ்சகமிப் பூமீ - தருமாலுற்
றோடி யுழன்றிடுமா லோடா தருள்புரிவான்
வாடிருடும் வண்மையனே வா. | 42 |
வாளா வனையுவதி வாளாயான் வந்ததலான்
மாளாத காதலினை மாய்த்துன்றான் - வாளீச
சித்துருவை யேநினைந்து சித்துருவே யாயிலனோர்
சத்துருவென் சித்தமே தான். | 43 |
தானே யலதுசக சீவபரஞ் சற்றுமிலை
யேனோ வறிந்து மிடர்கின்றேன் . கோனசியாய்
நின்னருள்சற் றில்லையதே நின்மலனே காரணமாம்
பன்னுகுடம் போலதிலே பால். | 44 |
பாலே மதுரமதாம் பற்றிவிடிற் சர்க்கரையை
மேலே விளம்பலெவன் மின்வாளோய் - போலேகே
ணின்னை நினைத்தலதே நின்மலமா நேர்துதுயே
னன்னய்த்தை யென்சொலுவே னான். | 45 |
நானோ வசுசியெனி னன்காமோ வென்பாரங்
கானார் கசடனெனிற் கட்செவியென் - றோனாறோ
யென்னை யிகழாதே யின்னருடந் தாளுதியே
லுன்னதியுற் குண்டெனவே யுன். | 46 |
உன்னை யலதொன்றை யுன்னேனே யிந்நாயே
னென்னை நினையாமை யேசலவோ - மன்னசியாய்
சென்னியா லென்றதனைத் தீரமறந் தாய்கொன்னீ
சென்னியா றொன்றுடையாய் செப்பு. | 47 |
செப்பிடிலோ நின்சரிதஞ் சித்திரமாங் கொற்றேச
திப்பியவை ராகியுமாஞ் சேர்ராகி - முப்பிரிவேற்
கொண்டு நிராமயனாங் கொண்டும் பலியதனை
யண்டு மகேச்சுரனா மால். | 48 |
8
ஆலநிழற் கீழேயா மாச்சரியங் கண்டோமே
சாலமிகப் பாலியரிச் சாயகனார் - கோலமிகுஞ்
சிட்டர்களோ சீர்க்கிழவர் செப்பிடலோ மோனமொழி
கெட்டவரா மையமதைக் கேள். | 49 |
கேளுந் திருநெல்லை கேள்வனே யொன்றுரைப்ப
வாளின் றிருட்டில் வழக்கெடுக்கி - னாளைபினைப்
பொல்லாத பொய்ச்சான்று போடில் வருகின்றேன்
வல்லை யெனக்கருள வா. | 50 |
வாரா விடினும் வளநெல்லை நற்றாய்க்காய்ச்
சாரா துரைப்பேனச் சான்றதனைத் - தீரமுட
னீயருளா தேகிடினு நென்மா நினையாளோ
தாய்மனமுங் கல்லாமோ தான். | 51 |
தானே விளையாடத் தன்சங்கற் பத்தாலே
வானே முதலாய் வகுத்ததலாற் - கேனமுளா
யுண்டோ சிறிதேனு மோதாயெங் கொற்றேச
மண்டானன் றிக்குடத்தின் மாண். | 52 |
மாணார் மனோலயத்தை மாசற்றார் மன்னிடயான்
பூணா ரரிவையர்தம் போகத்தை - வீணேதா
னாடி யுழன்றேனே நங்கொற்ற நாதாகாற்
றாடி யெனவெற் கருள். | 53 |
அருளே யவயவமா மாகாகா நாடாத்
தெருளே திருவுருவந் தேரீர் - பொருளோதுங்
கொற்றேசர்க் காதலினிக் கோண்மனமாம் வெம்பகையற்
றுற்றோரே பற்றார்பற் றோர். | 54 |
ஓர்கொம் புடையானே யொருருவா யிங்குற்றுப்
பார்கொற்ற நாதனைநீ பாங்கென்றா - னேர்கோளுவீர்
பார்த்தேனே பார்த்தவெனைப் பற்றிச் சுகோததியி
லார்த்தானே யந்தோ வவன். | 55 |
அவனே யிவனா மிவனே யவானாஞ்
சிவனே யிவையாவுந் தேரீர் - பவநோயற்
றர்வாளி தீக்கானி லாடும் பொருளீதே
பேர்வாழி சொல்லியிருப் பேம். | 56 |
பேமற்றோ நாமளவில் பேரற்றோ மற்றோமென்
னாமற்றோங் கொற்றேசர் நாடுற்றே - யோமுற்றார்க்
கென்றும் பணிசெய்வோ மேமாறோ மேயுலகின்
முன்றுன் பினியிடைவோ மோ. | 57 |
மோதப் பெருங்கடலே மும்முலையா ணாயகனே
யோதப் பெரிதருளு முண்மையனே - கோதற்ற
முத்தீசன் போற்று முளரிப் பதத்தோனே
சத்தீவா ளோயெற்குத் தான். | 58 |
தானே யுலகன்றிச் சத்தியமே சத்தியமே
யூனார் சிறிதிலைமற் றோர்வீர்நீர் - கோனசியோ
னன்னகரில் வீரேச னாயேற் குரைத்ததிதே
யெந்நகர்க்கு மெட்டா திதே. | 59 |
தேவாதி தேவனிவன் றென்கழனி வாளீசன்
காவார் வனிக்கானைக் காதலிமி - னோவாதே
தன்மயமே யாகித் தணர்ந்தே பிணமதியை
யின்மயமே யாகியிடு வீர். | 60 |
ஈரார் கருங்குழலா ரீமக் குண்பம்போ
லோரா ருடனுறவோ வூன்றியெனா - நேராரும்
வாளீசன் மாநகரில் வாழடியார் தாளிணையி
னாளாக் நெஞ்சே யமை. | 61 |
அமையாய் மடநெஞ்சே யங்கிங்கும் பற்றல்
குமையோ விதுவுண்ணக் கூறாய் - நமையாளும்
வீரேசன் கொற்றேசன் வெற்றிநக ருற்றேநற்
சீரா யளித்தமொழித் தேன். | 62 |
தேனார் குணமார் திருச்சனகன் போலேமற்
றேனோ வுணரா யிடர்நெஞ்சே - தேனாறோன்
பாதம் பணிதருநற் பண்ணவனாம் வீரேசன்
பாதம் பணிந்தென்றன் பால். | 63 |
பாலார் கடலினையப் பாலகனுக் கீந்தருளு
மேலாங் கருணையசி மேலோனே - நூலளவே
யாகுமா நுண்ணறிவிங் கந்தா மரைநீர்போற்
போகுமே யன்பருளுன் போல். | 64 |
போலி யுலகிதனைப் பொய்யென்றே யெண்ணாமற்
கோலி யலைந்தேனே கோனசியாய் - பாலியென
நின்றாட் பணிந்தேனே னீயருளைச் செய்தெனையே
கன்றாக் கருணையினிற் கா. | 65 |
காடுங் கடிவீடுங் கண்ணாரு மொண்ணாரு
மோடுங் கனகமதூஉ மொப்பாக - நாடுமவர்
வாழிங் கழனிநகர் வாளீச னேநினதாட்
டாழும் வரமெனக்குத் தா. | 66 |
தாரணியென் சொல்லன்றித் தாரணியென் றொன்றில்லை
பூரணிநெற் கொண்கனெனும் போர்வாளோய் - தாரணியி
னின்பா லடைந்தாரே நேரா விதைநேர்வார்,
மன்பா லடைவார்போன் மன். | 67 |
மன்னப் பெரியோர்கண் மாசிலா நிட்டையினை
யுன்னப் படுநீள்கா ரோதியரோ - டின்னட்பாய்ச்
சேர விரும்புஞ் சிறியேனை யாட்கொள்வாட்
சார விரும்புறுநா தா. | 68 |
தாமரையைக் கண்டே தண்ந்தார்நற் றையலர்த
மாமரிபர் ணம்புசிக்கு மாரியருங் - காமரியே
நன்னெய்பா லேகொள்ளு நாயேன் புலன்றாண்ட
லென்னயமார் கன்னாவா யே. | 69 |
ஏசாத நிட்டை யிசைந்தானந் தக்கண்ணீர்
கூசா தயிலக் குறங்கமிசைப் - பேசாதே
வந்து ககங்கூடி வாணாளு முண்டுகொலோ
தந்திரவாட் கொண்டருடா தாய். | 70 |
தாயார் திருநெல்லைத் தாய்நீநற் றந்தைகணத்
தூயோர் கடவுளுநற் றோகையனு - மாயாத
சேட்டரா நின்னடியார் சேட்டமுறுஞ் சுற்றத்தார்
வாட்டமிலை வாளெடுத்த வா. | 71 |
வாக்கு மனமும் வருந்தித் திரும்புறுநீ
போக்கும் வரவற்ற பூரணனீ - காக்குமெழிற்
காவலனற் கட்கத்தைக் கண்டுயிலக் கொண்டுவரு
மாவலனு நீயன்றோ வா. | 72 |
ஆரார் பழித்தென்னா மாரார் துதித்தென்னாஞ்
சீரார் நினதாளே சேர்ந்தேன்யான் - கூர்வாளோ
யென்னைக் கருணைசெய னின்கடனா மென்கடனோ
வுன்னைப் புகழுதலே யோ. | 73 |
ஓயா துளப்பேய்தா னோடிப் படிமிசையே
வீயா மடந்தையர்மேல் வேட்கையுறுங் - கூயதனை
வேண்டா மெனவல்லார் வெற்றிவா ளோயுனையற்
றீண்டாரு மில்லையெனக் கே. | 74 |
ஏதக் களஞ்சியநா னென்றாலு நின்றாளை
யோதக் கழியேனீ யோர்வாயால் - போதமருள்
வீரமுத்தி யாரியனை வேண்டிக் கொணர்ந்தருளக்
காரைசெலுங் கன்னியின்கொண் கா. | 75 |
காலைப் பிடித்துங் கடுமனதைக் கண்டித்தும்
பாலைக் குடித்தும் பலபுரிந்தும் - வாலைமண
வாளனெனும் வாளனுனை வந்தடைவார் வந்தடையத்
தாளைப் புகழுவன்யான் றான். | 76 |
தானே பகையுறவுந் தானே சுகந்துயருந்
தானே யுருநாமத் தாரணியுந் - தானேதா
னெல்லா மெனவே யெளியேற் கியம்பினைவா
ணல்லோய்பின் னாடுவதென் னான். | 77 |
நானா விதவுயிரா நாதாநீ செய்பவனா
மூனா ரக்மதியா மோதலெலாந் - தேனாறோய்
பேய்த்தேரே யென்றுரிய பேரின்ப மாயினபின்
னாய்த்தேயெற் கந்தோவா வா. | 78 |
ஆக்க லளித்த லழித்தன் முதலவெலா
நோக்கின் மனமொன்றே நுண்ணசியாய் - வாக்கிற்கு
மெட்டாத நின்னுருவை யெட்டிவிடிற் சுட்டாதே
மட்டுண்டோ வின்பழியு மால். | 79 |
மாலா ய்ரனாய் மலரோனாய் மற்றவராய்க்
காலா யறறீயாய்க் கம்பாராய் - மேலசியோய்
மெய்யா யுனையல்லால் வேறிலைநன் னீநானே
பொய்யோது மோமறைதான் போய். | 80 |
போயெட்டிப் பாராதே பொய்ம்மாயா வாதமெனும்
பேய்மட்டிப் பேதையுடன் பேசாதே - வாய்கட்டிப்
பொல்லா வுளமொருக்கிப் பூரணமே காணென்றாய்
கொல்லேதி யோனையென் கோ. | 81 |
கோணா மதுமுனிவன் கோறவமே நற்றவமா
மாணா ருனதுவர மாண்பேமாண் - பேணோர்க
ளென்ன வரம்பெற்றா ரித்தகைய மெய்த்தவர்வா
ழின்னவாம் போலோதி லே. | 82 |
ஏமாந் திருந்தேனே யித்துணையு மைய்யய்யோ
நீமாந்த வைத்திலையே நீளமுதைப் - பூமாந்தண்
வல்லபத்தி னாயகனே வந்திலையோ பக்குவமுங்
கல்லிபத்திற் கிக்களிப்போய் கா. | 83 |
காவிற் சொரிதேனே கண்டோநற் றேனாறாய்
மாவிற் குயில்கூவும் வல்லபமே - தேவிற்
சிறந்ததிருக் கட்கேசன் சோநகராங் கண்டீ
ரிறந்திடினு நீர்மறவீ ரெல். | 84 |
எல்லாம் புலப்பந்தா னென்றுரைத்த முத்தீசன்
சொல்லாற் சுகம்பெறலாஞ் சோர்வின்றி - யல்லாமல்
வேறு வழியிலையெம் வெற்றிவா ளீசரைவிட்
டேறுங் கரையேது மில். | 85 |
இல்லா தறிவான்மூன் றேய்ந்திருப்ப தேமுத்தி
யல்லாமல் வேறின்றென் றாரியனோர் - சொல்லாலே
சொன்னவுப தேசத்தைத் தோமறுநற் கொற்றேச
வின்னபடி யென்றிலக்கி டே. | 86 |
ஏதக் கடுவுடையோ ரின்னமுதீ வாரெனினு
மோதத் தலைமாலை யோரெனினும் - பூதரிவ
ரோதத் தகுமோவிங் கோர்வாரார் கொற்றேச
ராதலெலாஞ் சித்திரமே யாம். | 87 |
ஆமெனினு நற்பவனா யான்றோர் பவந்துடைப்பன்
காமனெரி கோடிட்டிக் காரனுமே - யாமெனினுஞ்
சீரார் சமதிருட்டித் தேவனிவன் கொற்றேசற்
சேரா ரறிவாரோ செப்பு. | 88 |
செப்பேம் பவன்சருவன் சீரார் பசுபதியா
மொப்பா ருருத்திரனோ டுக்கிரனும் - மெய்ப்பீம
னீசானன் மாதேவ னென்றருள்வா ளீசனுடைத்
தேசார்ந்த நாமமதின் சீர். | 89 |
சீரார் கழனித் திருவே திருநெல்லைக்
காரா வமுதே யருளுருவே - தேராதார்க்
க்ல்லேயா மாதியற்ஞ் சோதியனை யாழ்நெஞ்சே
யல்லும் பகலும் மறி. | 90 |
அறிவுருவாங் கொற்றேச னானபினர் நோக்கிச்
செறியுலகஞ் சித்துருவாய்ச் சேர்ந்தே - பொறியாறு
மோட லொழிந்ததுவே யோர்சாந்தி வந்ததுவே
கேடதற வுற்றனமிங் கே. | 91 |
கேதாரா போற்றியொரு கேடில்லா விஸ்வேசா
தாதாவே போற்றி சயபோற்றி - யாதியிலாய்
போற்றி யசியீசனே போற்றிநெலை நாயகனே
போற்றியுன தாமரையின் போது. | 92 |
போதா ரயனுடனே புள்ளோனுங் காணாத
தாதாவே சீர்கழனித் தண்ணிறையே - நீதாதா
நாயேற் குனைமறவா நல்வரத்தை நல்குதியேற்
பேயேற்கு முண்டோ பிணி. | 93 |
பிணியார்ந்து மங்கும் பிணவுடலைப் பேயே
னணியா மெனக்கருதி யார்ந்தே - துணியாமற்
றோயாம னின்னுருவைத் தோத்திரமுஞ் செய்யாம
லோயாமற் றுன்புற்றே னோ. | 94 |
ஓகோ திருநெல்லைக் கொப்பான நாயகரே
ஆகாயம் போலகண்ட மானவரே - தேகோகம்
புந்தியினைத் தீர்த்தே புலையனையு மாட்கொளுவீர்
மந்திரவாட் கொள்பவரே மா. | 94 |
மாவும் வளர்தெங்கு மாகத்தின் சோலையாங்
கோவிற் பெருமூரோய் கொற்றேச - கூவியிடுங்
கோகிலமே போலமிகக் கூடிதனை விட்டொழித்திங்
காகிலனே நின்றா ளனி. | 96 |
அணியும் பணிபோற்றி யம்பலவா போற்றி
பணியு மடியவர்தம் பாதந் - துணிவாக
நிற்பாதி கொண்டதிரு நெல்லை வயற்கேகு
நற்பாதம் போற்றுவனே நான். | 97 |
நானேநீ யாகிப்பன் னீயேபின் னானாகி
யூனே முதலாய தோட்டிமிக - வானேவா
னானவா போலரிய வையாவெம் வாளீச
வானோமே நாமிருவோ ரா. | 98 |
ஆச்சரியங் கண்டோமே யம்மா வசியீசன்
பேச்சிறக்கப் பண்ணுவனே பேணினரைச் - தூர்ச்சடிதன்
போற்றும் பதந்தனையே போற்று. | 99 |
போற்றிநங் கொற்றேசற் போற்றுவார் பொற்கழல்கள்
போற்றிநம் வீரேசன் பொன்மலர்கள் - போற்றிமிகப்
போற்றி கழனிநகர்ப்ப பொன்னடியார் பொற்றாள்கள்
போற்ரிகரிப் பாதமரைப் பூ. | 100 |