kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம்





உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

5. தக்ஷ காண்டம்

*** 14. க ய மு க ன் உ ற் ப த் தி ப் ப ட ல ம் பாக சாதனன் தொல்லைநாள் வானவப் படையோ டேகி யேயசு ரர்க்கிறை தன்னைவென் றிகலில் வாகை சூடியே விஞ்சையர் முதலினோர் வாழ்த்தப் போக மார்தரும் உலகிடை மீண்டுபோய்ப் புகுந்தான். 1 பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி வன்னி யுற்றிடும் அலங்கல்போ லுளநனி வாடி வென்ன ளித்திடும் அவுணர்தங் கோமகன் வினையேற் கென்னி னிச்செயல் எனப்பெரி துன்னியே இனைந்தான். 2 வெருவ ரும்படி மலைந்திடும் அமரர்பான் மேவிப் பொருது வென்றிகொண் டேனக்குமப் பெரும்புகழ் புனைய ஒருவ ரெங்குலத் தில்லைகொ லோவென உரையாக் குருவி ருந்துழி அணுகியே வணங்கினன் கொடியோன். 3 பொற்றை யின்சிறை தடிந்தவன் கரரொடும் போர்மேல உற்ற காலையில் படையுடன் யான்பொரு துடைந்து மற்ற வற்குவென் னளித்தனன் நம்பெரு மரபிற் கொற்ற வீரர்க ளியாவரு முடிந்தனர் கூற்றால். 4 கழிய மாசினை அடைந்தனம் இன்னலே கரையாம் பழிகொள் வேலையில் அழுந்தினம் உடைந்திடு பகைவர்க் கழிவும் உற்றனம் பெருந்திறல் அற்றம் அவுணர் ஒழியும் எல்லைவந் தெய்திய தோவிவண உரைத்தி. 5 சிறுவ ராயினோர் பெருமையிற் பிழைப்பரேல் தெருட்டி உறுதி பற்பல கொளுத்திமற் றவர்தமை உயர்ந்த நெறியின் ஆக்குதல் குரவர்தங் கடனது நீயே அறிதி யாதலின் உய்யுமா றுரைத்தியென் றறைந்தான். 6 உரைத்த வாசகங் கேட்டலும் மன்னநீ உளத்தில் வருத்த முற்றிடல் என்னவே தேற்றிமேல் வருவ கருத்தி லுன்னினன் தெரிதலும் வெதும்பிய காயத் தரைத்த சாந்தினை அப்பினன் போலஒன் றறைந்தான். 7 (1. பாகசாதனன் - இந்திரன். விஞ்சையர் - வித்தியாதரர். 2. வினையேற்கு - பாவியாகிய எனக்கு. 3. குரு - சுக்கிரன். கொடியோன் - அசுரர் அரசன். 4. பொற்றை - மலை. 7. வெதும்பிய - வெப்பமுற்று. சாந்து - சந்தனம்.) வேறு ஆதியம் பரமன் தாளே அடைதரு புனிதன் தொல்லை வேதியர் தலைவ னான வி£¤ஞ்சன்மெய் யுணர்விற் பூத்த காதலன் புலன்க ளாய பகைஞரைக் கடந்த காட்சி மாதவ முனிவர்க் கீசன் வசிட்டனென் றுரைக்கும் வள்ளல். 8 அன்னவன் மரபின் வந்தோன் அறிஞர்க்கும் அறிஞன் மேலாய் மன்னிய நெறிக்கண் நின்றோன் மாகதன் என்னும் பேரோன் உன்னரு மறைகள் யாவும் உணர்ந்தவன் உயர்ந்த வீடு தன்னையிங் கடைவன் என்னாத் தவந்தனை இயற்ற லுற்றான். 9 ஆயவன் தன்பால் இன்றோர் அசுரகன் னிகையைத் தேற்றி ஏயினை என்னின் அன்னாள் எய்தியே அவன்ற னோடு மேயின காலை ஆங்கோர் வேழமா முகத்தன் உங்கள் நாயகன் ஆகத் தோன்றி நற்றவம் புரிவன் அன்றே. 10 நற்றவம் புரிதல் காணா நண்ணலர் புரங்கள் மூன்றுஞ் செற்றவன் மேவி மேலாஞ் செல்வமுந் திறலும் நல்க மற்றவன் வானோர் தொல்சீர் மாற்றியெவ் வுலகும் ஆளுங் கொற்றவ னாவன் என்று கூறினான் குரவ னானோன். 11 அவ்வுரை கேட்ட லோடும் அடித்துணை இறைஞ்சி ஈது செவ்விது செவ்வி தெந்தாய் செய்வல்நீ பணித்த தென்ன எவ்வமில் புகரும் அற்றே இயற்றிய சென்மோ என்ன மைவரை அனைய மேனி மன்னவன் கடிது மீண்டான். 12 மீண்டுதன் னிருக்கை எய்தி விபுதையென் றொருத்தி அன்னாள் காண்டகும் எழிலின் மிக்க கன்னிதன் குலத்தில் வந்தாள் பூண்டகு நாணி னோடும் பொருந்தினள் அவளை எய்தி ஈண்டொரு மொழிகேட் டன்னாய் என்னிடர் சீர்த்தி யென்றான். 13 மன்னவர் மன்னன் கூறும் மாற்றமங் கதனைக் கேளாக் கன்னிகை யாகி நிற் காமரு வல்லி அன்னாள் நின்னடித் தொண்டு செய்யும் நிருதர்தங் குலத்து வந்தேன் என்னுனக் கியற்றுஞ் செய்கை இசைந்தன இசைத்தி என்றாள். 14 உரையென லோடு மன்னன் உன்குலத் தோரை விண்ணோர் பொருதுவென் கண்டு மீண்டு போனதை அறிதி அன்றே மருவருங் குழலாய் போரில் வானவர் தம்மை வெல்ல ஒருவரும் இல்லை நின்னால் உற்றிட வேண்டுங் கண்டாய். 15 ஆங்கதற் கேதுக் கேட்டி அம்பொன்மால் வரைத்தெ னாது பாங்கரில் அரிய நோன்பு பயிலுமா கதன்பாற் சென்று நீங்கல்செல் லாது பன்னாள் நினைவறிந் தொழுகிக் காலந் தீங்கற நாடி அன்னான் செய்தவஞ் சிதைத்துச் சேர்தி. 16 சேருதி யென்னின் அங்கோர் சிறுவன்நின் இடத்தில் தோன்றிப் பாருல கனைத்தும் மேலாம் பதங்களும் வலிதிற் கொண்டு வீரரில் வீர னாகி வெம்பகை வீட்டி எங்கள் ஆரஞர் துடைக்கும் அன்னாய் அன்னவா றமைதி என்றான். 17 (8. விரிஞ்சன் : காதலன் - சனகாதியோர். 9. அன்னவன் - அவ்வசிட்டன். மாகதன் - ஒரு முனிவன். 12. புகர் - சுக்கிரன். 13. விபுதை - இவள் ஒரு அசுர கன்னிகை. 15. வென் - முதுகு. 16. ஏது - காரணம்.) வேந்தன் துரையைக் கேட்ட விபுதையம் முனிவன் தன்பால் போந்துன தெண்ண முற்றப் புதல்வனை அளித்து மீள்வல் ஏந்தல்நீ இரங்கல் என்றே ஏகினள் இறைவன் வானோர் மாய்ந்தனர் இனியென் றுன்னி மகிழ்ச்சியோ டிருந்தான் அங்கண். 18 ஏகிய அசுர கன்னி ஏமமால் வரையின் சார்போய் மாகதன் பாற்சென் றன்னான் மாதவத் திறத்தை நோக்கி ஆகொடி திவனே அல்லா தாரிது புரியும் நீரார் மோகமிங் கிவனை யாக்கி முயங்குவ தெவ்வா றென்றாள். 19 நேமிகள் அனைத்தும் ஆர நிவந்தெழும் வடவை தன்னை மாமுகில் மாற்ற அற்றோ மாற்றவே வல்ல தென்னில் காமவேள் எடுத்த செய்ய கணையெலாம் ஒருங்கு சென்றித் தோமில்சீர் முனியை வாட்டித் துறவையும் மாற்றும் என்றாள். 20 வானுயர் தவத்தின் நிற்கும் மாகதன் யானே யல்ல மேனகை வரினும் நோக்கான் விண்ணவர் பகைஞர் தங்கள் கோனி· துணரான் போலுங் குறுகிநீ புணர்தி என்றால் நானதற் சிசைந்த வாறும் நன்றென நகைத்து நின்றாள். 21 போந்தனென் மீண்டும் என்னிற் போற்றலர்க் குடைந்து சோரும் வேந்தனென் னுற்றாய் என்று மீளவும் விடுப்பன் அம்மா ஏய்ந்தநே யத்தி லென்பால் எய்திமற் றிவனே எற்குக் காந்தனே யாக நோற்றுக் காலமும் பார்ப்பன் என்றாள். 22 என்றிவை உன்னி உற்றோர்க் கினிதருள் புரியும் வௌ¢ளிக் குன்றுறை பெருமான் செய்ய குரைகழல் கருத்துட் கொண்டு வன்றிறல் நோன்பின் மிக்க மாகத முனிவன் நேரா நின்றருந் தவத்தை யாற்ற நெடும்பகல கழிந்த தன்றே. 23 மாதுசெய் தவத்தி னாலும் வரன்முறை வழாத ஊழின் ஏதுவி னாலும் அங்கண் இருங்களிற் றொருத்தல் ஒன்று காதலம் பிடியி னோடு கலந்துடன் புணரக் காணுஉ ஆதரம் பெருகப் பல்கால் நோக்கினன் அருந்த வத்தோன். 24 மறந்தனன் மனுவின் செய்கை மனப்படு பொருளை வாளா துறந்தனன் காமம் என்னுஞ் சூழவலைப் பட்டுச் சோர்வுற் றிறந்தனன் போல மாழ்கி இன்னுயிர் சுமந்தான் இன்று பிறந்தனன் இனைய கூட்டம் பெற்றிடு வேனேல் என்றான். 25 என்றிது புகன்று முன்செய் தவக்குறைக் கிரங்கி என்றும் நின்றது பழியே யேனும் நீடுமேற் காமச் சூர்நோய் தின்றுயிர் செகுக்கும் அந்தோ செய்வதிங் கெவனோ என்னா வென்றிகொள் முனிவன் தானும் மனத்தொடு வினவல் உற்றான். 26 (18. மீள்வல் - திரும்புவேன். 20. நேமிகள் - கடல்கள். 21. மேனகை - தேவ மாதரில் ஒருத்தி. 22. காந்தன் - காதலன். 24. களிறு ஒருத்தல் - ஆண் யானை. பிடி - பெண் யானை. 25. மனுவின் செய்கை - மந்திரம் செபிக்கும் தொழில். 26. சூர் - அச்சம்.) தீவிடந் தலைக்கொண் டாங்கே தெறுதரு காமச் செந்தீ ஓய்வது சிறிதும் இன்றி உள்ளுயிர் அலைக்கும் வேலை யாவதென் றாக்கின் இன்னும் அருந்தவங் கூடும் ஆவி போவதிற் பயனியா தென்னாப் புணர்ச்சிமேற் புந்தி கொண்டான். 27 பேவதற் கெண்ணுப் போதில் பொருவில்சீர் அசுரர்க் கெல்லாங் காவலின் ஏவல் போற்றும் கன்னிகை முனிவன் காமத் தோய்வதும் பிறவும் எல்லாம் ஒருங்குடன் நோக்கி எண்ணம் யாவதும் முடிந்த தென்னா எல்லையில் மகிழ்ச்சி பெற்றாள். 28 ஈங்கிது கால மாகும் இடனுமாம் இதற்கு வேறு தீங்கிலை இனைய கூட்டஞ் செய்தவஞ் செய்த தென்னா வாங்கிய நுதலி னாளும் வல்விரைந் தெழுந்து தூயோன் பாங்கரின் அணுகிப் பொற்றாள் பணிந்தனள் பரிவு கூர. 29 மின்னிடை பணிந்து நிற்ப மெய்யுறுப் பனைத்தும் நோக்கிப் பின்னரும் மால்மீக் கொள்ளப் பித்தரின் மயங்கா நின்று கன்னியும் என்னை வெ·குங் காந்தரு வத்தி னாளும் இன்னவ ளாயின் அன்றோ என்னுயிர் உய்யும் என்னா. 30 கருத்திடை உன்னி யார்நீ கன்னியோ என்ன லோடும் அருத்திகொள் முனியை நோக்கி அன்னதாம் என்ன நம்பால் வரத்தகுங் கருமம் என்கொல் வல்லையில் இயம்பு கென்றான் விரத்தரில் தலைவ னாகி வீடுபெற் றுய்ய நோற்றான். 31 முருந்தெனும் முறுவ லாளும் முனிவநீ கணவ னாக இருந்தவம் புரிந்தேன் பன்னாள் இன்றது முடிவ தாகப் பொருந்தினன் ஈண்டு நின்னைப் புல்லிய வந்தேன் என்ன வருந்துறா தமுதம் பெற்ற மாக்கள்போல் மகிழ்ச்சி உற்றான். 32 என்பெருந் தவமும் பன்னாள் என்பொருட் டாக நோற்ற நின்பெருந் தவமும் அன்றோ நின்னுடன் என்னை ஈண்டே அன்புறக் கூட்டிற் றம்மா அடுகளி றென்னப் புல்லி இன்புற வேண்டும் நீயும் இரும்பிடி யாதி என்ன. 33 மெல்லியல் தானும் அங்கோர் வெம்பிடி யாகித் தோன்றி எல்லையில் காதல் பின்னும் ஈதலும் முனிவன் தானும் மல்லலங் களிற தாகி வானுயர் புழைக்கை நீட்டிப் புல்லினன் ஊற்றந் தானே புணர்ச்சியிற் சிறந்த தன்றே. 34 நையுறும் உள்ளம் ஆதி நான்மையும் பொறியில் நண்ணி ஐயுறு புலனோர் ஐந்தும் ஆவியின் ஒருங்க அன்னாள் மெய்யுறு புணர்ச்சித் தாய வேட்கையின் மேவ லுற்லுச் செய்யுறு காம முற்றித் தீர்ந்திடு காலை தன்னில். 35 (29. கூட்டம் - சேர்க்கை. பரிவு கூர - அன்புமிக. 32. முருந்து - மயிலிறகின் அடி. 35. உள்ளம் ஆதீ நான்மை - மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும்.) அயன்முதல் தலைவர் வானத் தமர்தரு புலவர் ஆற்றுஞ் செயன்முறைக் கடன்கள் யாவுஞ் சிந்தினன் சிதைக்கும் வண்ணம் வயமுகத் தடவு கொண்ட வயிர்த்திடு மருப்பின் நால்வாய்க் கயமுகத் தவுணன் ஆங்கே கதுமென உதயஞ் செய்தான். 36 பற்றிய பலகை ஔ¢வாள் விதிர்த்தனன் பரவை ஞாலஞ் சுற்றினன் வரைகள் யாவுந் துகள்பத் துணைத்தாள் உந்தி எற்றினன் உருமே றஞ்ச இரட்டினன் உலக மெல்லாஞ் செற்றிடுங் கடுவ தென்னத் திரிந்தனன் சீற்றம் மிக்கான். 37 அன்னதோர் பிடியு ரோமம் அளப்பில அவற்றில் ஆங்கே மின்னிலங் கெயிற்றுப் பேழ்வாய் விளங்கெழில் செக்கர் வாய்ந்த சென்னியங் குடுமி வீரர் தெழித்தெழீஇச் செங்கை தன்னில் துன்னிரும் படைக ளோடுந் தோன்றினர் தொகையில் ஆன்றோர். 38 இன்னவ ரோடு கூடி இபமுகத் தவுணன் ஆர்ப்பத் தன்னையும் பயந்தோன் தானுந் தளர்ந்தனர் இரியல் போகி முன்னுறும் உருவங் கொள்ள முனிவரன் உணர்வு தோன்ற உன்னிநின் றிரங்கி யேங்கி ஊழ்முறை நினைந்து நைந்தான். 39 மாயமாங் காமம் என்னும் வலையிடைப் பட்டு நீங்குந் தூயவன் முன்னம் நின்ற தோகையைச் சுளித்து நோக்கி நீயெவர் குலத்தில் வந்தாய் நினைந்ததென் கழறு கென்னச் சேயிழை மரபும் வந்த செய்கையும் உணர்த்தி நின்றாள். 40 வரன்முறை ணர்த லோடும் மாகத முனிவன் யானே தரணியில் உயிர்க ளான சராசரந் தனக்கு மேலாஞ் சுரகுலந் தனக்கும் இன்றே துன்புறு வித்தேன் என்னா எரியுறு தளிர்போல் வாடி இன்னலங் கடலுட் பட்டான். 41 சிலபொழு திரங்கித் தேறிச் செயிழை மடந்தை நுங்கோன் மெலிவுநின் னெண்ணந் தோனும் வீடுபெற் றுய்ய யான்முன் பலபகல் புரிந்த நோன்பும் பாருல கனைத்தும் வானோர் உலகமு முடிந்த வேநீ ஒல்லையிற் போதி என்றான். 42 போதிநீ என்ன லோடும் பொன்னடி வணங்கிச் சென்று தாதுலாந் தெரிய லாகத் தயித்தியர்க் கிறைபால் எய்தி ஈதெலாம் உரைத்த லோடும் எல்லையின் மகிழ்ச்சி யாகிக் காதல்கூர் தபனற் காணுங் காலையங் கமலம் போன்றான். 43 (36. வய - பெருமை. தடவு - வளைவு. வயிர்த்திடும் - வைரம் பொருந்திய. நால்வாய் - தொங்குகின்ற வாய். 37. பலகை - கேடகம். 39. இபமுகம் - யானைமுகம். 40. தூயவன் - இங்கு மாகத முனிவன். சுளித்து - கோபித்து. சேயிழை - இங்கு விபுதை. 41. சராசரம் - சரம் + அசரம். சரம் - அசையும் பொருள்; இது இயங்கியற் பொருள் (இயங்குதிணை) அல்லது சங்கமம் எனவும் பெயர்பெறும். அசரம் - அசையாப்பொருள் இது நிலையியற் பொருள் (நிலைத்திணை) அல்லது தாவரம் எனவும் பெயர்பெறும். 43. தாது - மகரந்தம். தயிர்த்தியர் - அசுரர். தபனன் - சூரியன். காணும் காலை - உதயகாலம்; கண்டபொழுதுமாம்.) தாங்கரும் உவகை யோடுந் தானவர்க் கரசன் நண்ண ஈங்குறு முனிவன் முன்போல் இனிதுநோன் பியற்றப் போனான் ஆங்கவண் உதித்த மைந்தர் அனைவரும் முதல்வன் தன்னோ டோங்கலின் குலங்கள் மேரு வுடன்நடந் தென்னச் சென்றார். 44 சீற்றங்கெகள் தறுகண் நாகம் ஒருவழித் திரண்ட தென்னக் கூற்றம்பல் லுருவு கொண்டு குலாயகொட் பென்ன ஊழிக் காற்றெங்கும் பரவிற் றென்னக் கடலிடைப் பிறந்த நஞ்சம் ஊற்றங்கொண் டுலாய தென்ன உலகெலாந் திரிதந் துற்றார். 45 மலையிஆ¨பி பொடிப்பர் ஏனை மண்ணினை மறிப்பர் வாரி அலையினைக் குடிப்பர் கையால் ஆருயிர்த் தொகையை அள்ளி உலையினைப் பொருவு பேழ்வாய் ஓச்சுவா¢ பரிதி யோடு நிலையினைத் தடுப்பர் சேடன் நெறிதரப் பெயர்வர் மாதோ. 46 தக்கதோர் அவுண ரோடுந் தந்திமா முகத்து வீரன் திக்கெலாம் உலவி யெல்லாத் தேயமும் ஒருங்கே சென்று மக்களே யாதி யான மன்னுயிர் வாரி நுங்கித் தொக்கதோர் செந்நீர் மாந்தித் துண்ணெனத் திரியும் அன்றே. 47 அத்திறம் வைகல் தோறும் அவுணரும் இறையும் ஏகிக் கைத்துறும் உயிர்கள் யாவுங் கவர்ந்தனர் மிரைந்தா ராகப் பொய்த்தவர் வெறுக்கை என்னப் பொயின உயிர்கள் சால எய்த்தனர் முனிவர் தேவர் இறந்தது மறையின் நீதி. 48 முகரிமை அடைந்த வன்தோன் முகத்தவன் அவுண ரோடும் அகலிட மிசையே இவ்வா றமர்தலும் அனைய தன்மை தகுவர்கள் முதல்வன் ஓர்ந்து தமதுதொல் குரவ னான புகரினை விடுப்ப அன்னான் போந்திவை புகலல் உற்றான். 49 வேறு ஔ¢ளி தாகிய உங்குலத் துற்றுள மள்ளர் யார்க்குமொர் வான்குரு வாயினேன் தௌ¢ளு பன்மறைத் திட்பமுந் தேர்ந்துளேன் வௌ¢ளி என்பதொர் மேதகு பேரினேன். 50 உங்கு லத்துக் கொருமுத லாகிய சிங்க மன்ன திறலினன் உய்த்திட இங்கு நின்புடை எய்தினன் மேல்நெறி தங்கு நன்னயஞ் சாற்றுதற் கேயென்றான். 51 குரவ னாகிக் குறுகிய சல்லியன் பரிவொ டீது பகர்தலும் ஆங்கவன் திருவ டித்துணை சென்று வணங்கியே கரிமு கத்தன் கழறுதல் மேயினான். 52 (45. தறுகண் - அஞ்சாமை. கொட்புஎன்ன - உலவினாற்போல். 46. சேடன் - ஆதி சேடன். 47. நுங்கி - விழுங்கி. செந்நீர் - இரத்தம். 48. பொய்த்தவர் - பொய்யுரைப்போர். 49. முகரிமை - முதன்மை. தோல்முகத்தவன் - கயமுகாசுரன். 50. மள்ளர் - வீரர். 52. சல்லியன் - சுக்கிரன்.) இறுவ தின்றிய எங்குலத் தோர்க்கெலாம் அறிவ நீஅரு ளால்அடி யேற்கிவண் உறுதி கூறுகின் றாய்இதன் ஊங்கினிப் பெறுவ தொன்றுள தேயெனப் பேசினான். 53 அந்த வேலை அவுணர்கள் யாவருஞ் சிந்தைமேல் கொண்ட தீதினை நீத்திடா எந்தை யார்தங் குரவர் இவரெனா வந்து பார்க்கவன் தாளில்வ ணங்கினார். 54 சீத வான்முகிற் கோள்எனுஞ் செவ்வியோன் ஆதி தன்னரு ளால்அவு ணர்க்கிறை போத கன்முகம் நோக்கிப் பொருவிலா ஓதி மாண்பின் இவையுரைக் கின்றனன். 55 வேறு மீயுயர் தவத்தை ஆற்றாய் விமலனை உணராய் ஒல்லார் மாயமுந் திறலுஞ் சீரும் வன்மையுஞ் சிறிதுந் தேராய் ஏயவிவ் வுடலம் நில்லா தென்பதுங் கருதாய் வாளா போயின பன்னாள் என்நீ புரிந்தனை புந்தி இல்லாய். 56 முப்பகை கடந்து மற்றை முரட்பகை முடித்திட் டைம்பான் மெய்ப்பகை கடந்து நோற்று விழுத்தகும் ஆற்றல் பெற்றுத் துப்பகை தொண்டைச் செவ்வாய்ச் சூரொடு புணரும் வானாட் டப்பகை கடந்து தொல்சீர் அடைந்திலை போலும் அன்றே. 57 இம்மையில் இன்பந் தன்னைப் புகழொடும் இழத்தி மேலை அம்மையில் இன்பந் தானும் அகன்றஆ போலும் அன்றே உம்மையும் இன்பம் என்ப துற்றிலை என்னிறி¢பின்னை எம்மையில் இன்பந் துய்க்க இசைந்துநீ இருக்கின் றாயால். 58 ஆக்கமுந் திறலுஞ சீரும் ஆயுவும் நலனும் மேலாம் ஊக்கமும் வீடும் எல்லாம் தவத்தின தூற்றம அன்றோ நோக்குறும் இந்நாள் காறும் நோற்கலா தினை வெல்லாம் போக்குவ தென்னை கொல்லோ புகலுதி இகலும் வேலோய். 59 ஆற்றிடு தருமம் விஞ்சை அரும்பெறல் மகவும் சீர்த்தி ஏற்றிடு கொற்றம் ஆற்றல் இருநிதி பெருமை இன்பம் நோற்றிடு விரதஞ் சீலம் நூவலரும் போதம் யாவுங் கூற்றுவன் கூவும் ஞான்று குறித்திடிற் கூடு மோதான். 60 (53. இறுவது - அழிவது. அறிவ - ஞானாசிரியனே. 54. பார்க்கவன் - சுக்கிரன். 55. முகிற்கோள் எனும் செவ்வியோன் - சுக்கிரன். 57. முப்பகை - காமம், வெகுளி, மயக்கம் என்னும் முப்பகை. முரட்பகை - வலியபகை. ஐம்பால் மெய்ப்பகை - ஐம்புலனாகிய உட்கபகை. 58. அம்மை - அவ்வுலகம். உம்மை - நடுவணதான இக்காலம். எம்மை - எந்தச்சென்மம். 60. விஞ்சை - வித்தை. மகவு - புத்திரப்பேறு. சீலம் - ஒழுக்கம். போதம் - நல்லுணர்வு. குறித்திடில் - கருதினால்.) காலனா கியதோர் சேர்ப்பன் காலமாம் வலையை வீசி ஞாலமாந் தடத்தில் வைகும் நல்லுயிர் மீன்கள் வாரி ஏலவே ஈர்த்து நின்றான் இறுதியாங் கரைசேர் காலை மேலவன் கையுட் பட்டு மெலிவொடு வீடும் அன்றே. 61 சீரிர துடலம் என்கை தெரிந்திலை நிலைத்தல் செல்லா தாருயிர் வகையும் என்ப தறிந்திலை ஆயுட் பன்னாட் சாருதல் வேண்டு மென்னுந் தகைமையும் நினைத்தி அல்லை பாருயிர் இறப்ப நுங்கி இருப்பதோ பரிசு மாதோ. 62 மந்திரம் இல்லை மாயம் இல்லையோர் வரமும் இல்லை தந்திரம் இல்லை மேலோர் தருகின்ற படையொன் றில்லை அந்தர வமர ரெல்லாம் அனிகமாய்ச் சூழ நின்மேல் இந்திரன் போருவான் செல்லின் யாதுநீ செய்தி மாதோ. 63 சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ் சூழ்ச்சி அறிகில வாகி வீழவுற் றகப்படு மாவும் மீனும் பறவையும் என்ன எல்லார் புணர்ப்பினிற் படுதி இன்னே விறலொடு வலியுஞ் சீரும் மேன்மையும் இன்றி உற்றாய். 64 ஆதலின் எவர்க்கும் மேலாம் அரன்றனை உன்னி ஆற்ற மாதவம் புரிதி அன்னான் வரம்பல கேட்ட வெல்லாந் தீதற உதவும் பின்னர்த் தேவர்உன் ஏவல் செய்வார் மேதகும் உலகுக் கெல்லாம் வேந்தனாய் இருத்தி என்றான். 65 சொன்னவை கேட்ட லோடுந் தொழுதகை அவுணர் தோன்றல் முன்னிவை யாவ ரேனும் மொழிந்தனர் இல்லை யானும் இன்னவை புரிதல் தேற்றேன் இனித்தவம் இயற்று கின்றேன் அன்னவை புரியுந் தன்மை அருள்செயல் வேண்டும் என்றான். 66 (61. காலன் - எமன். சேர்ப்பன் - நெய்தனிலத்தவனான செம்படவன். மேல் - பின்னர். அவன் - அந்த எமன். வீடும் - அழியும். 63. அனிகம் - சேனை. 64. வீழவுற்று அகப்படும் - வலையிலும், தூண்டிலிலும், கண்ணியிலும் முறையே அகப்பட்டுக் கொள்ளுகின்ற. விறல் - வெற்றி. ) வேறு ஐயவினைசெய் பொறிகளெலாம் அரங்கமெனக் கறங்கும்அறி வடங்கு கின்ற மெய்வினைய மந்திரமுந் தந்திரமும் அங்கமுறு விதியி னோடு கைவினையும் உட்கோளும் புறங்காப்பும் விரதஞ்செய் கடனும் ஏனைச் செய்வினையும் உணர்வித்து மேருவின்பால் தவம்புரியச் செல்லு கென்றான். 67 ஏவுதலுங் கயமுகத்தோன் அவுணரொடும் புகரடியின் இறைங்சி அங்கண் மேவுவன்யான் எனவுரையா விடைகொண்டு நோற்றிடுவான் விரைவின் ஏகக் காவதமங் கோரிரண்டு கடப்பளவுந் தானின்று கண்ணின் நோக்கிப் போவனினி எனமகிழ்ந்து மீண்டுபோய் அவுணர்பதி புகுந்தான் அன்றே. 68 அக்காலத் தெதிர்வந்த இறைவனுடன் புகுந்தவெலாம் அறைய அன்னான் இக்காலந் தானன்றோ அருள்செய்தீர் எனவியம்ம்பி ஏத்தி அன்பால் முக்கால்வந் தனைசெய்து விடுத்திடப்போய்த் தன்பதத்தின் முன்ன மேபோல் மிக்கானும் வீற்றிருந்தான் கடவுளரும் புரந்தரனும் விழுமங் கொள்ள. 69 மாண்டகுமவ் வலியகலன் மருப்பதனை எதிர்ந்துதொல்லை வைப்பின் ஈங்கு மீண்டியதிண் காழிரும்பின் எ·கமுதல் வியன்படைகள் இயற்சை என்னக் காண்டகைய தங்குரவ னானபுகர் உரையதனைக் கருத்துட் சேர்த்தி ஆண்டகைசேர் இபமுகத்தோன் அவுணருடன் தவம்புரிவான் அகலல் உற்றான். 70 அங்கண்முகில் படிந்தறியா மேருவினுக் கொருசார்போய் அவுணர் வேந்தன் துங்கமிகு கருவிகளாய் வேண்டுவன கொணர்வித்துத் தூநீர் ஆடிச் செங்கதிரோன் தனைநோக்கி ஆற்றுகடன் முடித்துமுன்னைத் தீர்வு நேர்ந்து தங்கள்குர வன்பணித்த பெற்றியினால் மிக்கதவந் தன்னைச் செய்வான். 71 பொறியிலுறு புலனவித்து நவைநீக்கிக் கரணவியல் போக்கி ஆசான் குறிவழியே தலைநின்று மூலவெழுத் துடனைந்துங் கொளுவி எண்ணி அறிவுதனில் அறிவாகி உயிர்க்குயிராய்ப் பரம்பொருளாய் அமல மாகிச் செறிதருகண் ணுதற்கடவுள் அடிபோற்றி அவனுருவைச் சிந்தை செய்தான். 72 (68. காவதம் - காதம்; ஓர் அளவு. 69. விழுமம் - துன்ப 70. அகலம் - மார்பு. கயமுகன் தவத்திற்குச் செல்கை, அவன் தந்தங்களில் பட்டுத் திரும்பும் எ·கம் முதலிய ஆயுதத்தின் மீட்சியை ஒத்து என்க. 71. செங்கதிரோன்தனை நோக்கி ஆற்றுகடன் - சூரிய நமஸ்காரம். 72. முதல் இரண்டடிகள் இறைவனைத் தியானிக்க வேண்டும் முறையினை விளக்குகின்றன. கரணம் - அந்தக் கரணம். மூவவெழுத்து - பிரணவம். ஐந்து - பட்சாட்சரம். கொளுவி - கலந்து.) வேறு ஆயிரம் ஆண்டுபுல் லடகு மேயினான் ஆயிர மாண்டுசில் புனல்அ ருந்தினான் ஆயிர மாண்டள வனிலம் நுங்கினான் மாயிரும் புவியுயிர் மடுக்கும் வாயினான். 73 காலமூ வாயிரங் கழிந்த பின்முறை மாலுறு மருத்தெனும் மாவைத் தூண்டியே மூலவெங் கனலினை முடுக்கி மூட்டுறா மேலுறும் அமிர்தினை மிசைதல் மேயினான். 74 கண்டனர் அதுசுரர் கவலுஞ் சிந்தையர் திண்டிறல் அவுணன்இச் செய்கை முற்றுமேல் அண்டமும் புவனமும் அலைக்கு மேயெனாக் கொண்டனர் தம்பதி அறியக் கூறினார். 75 கூறிய செயலினைத் தேர்ந்து கொற்றவன் ஆறிய வெகுட்சியன் அயர்ந்து சோர்வுறா வீறியல் வாய்மையும் விறலும் ஆண்மையும் மாறிய வோவெனா மறுக்கம் எய்தினான். 76 புலர்ந்தனன் இரங்கினன் பொருமல் எய்தினான் அலந்தனன் உயிர்த்தனன் அச்சங் கொண்டனன் உலந்தனன் போன்றனன் ஒடுங்கித் தன்னுளங் குலைந்தனன் அவன்செயல் கூறற் பாலதோ. 77 ஈசனை யன்றுகா றெதிரக் கண்டிலன் காய்சினம் அகன்றிடு கயமு கத்தினான் தேசிகன் அருளினால் தீயின் கண்ணுறீஇ மாசறு தவஞ்செய மனத்து முன்னினான். 78 சுற்றுற நாற்கனல் சூழ நள்ளிடை மற்றொரு பேரழ வதிய அன்னதில் கொற்றவெங் கயமுகக் குரிசில் தாள்நிறீஇ நற்றவம் இயற்றினான் நாதற் போற்றியே. 79 (73. அடகு - இலைகள். அனிலம் - காற்று. 74. மருத்தெனும் மாவை - பிராண வாயு என்னும் குதிரையை. மூல வெங்கனல் - மூலாக்கினி. மூட்டுறா - (பிரம நாடியில்) மூட்டச்செய்து. 75. தம்பதி - தமது அரசன்; இந்திரன். 76. வெகுட்சி - கோபம். 77. புலந்தனன் - வருந்தி. பொருமல் - அழுதல். அலந்தனன் - துன்பமுற்று. உலந்தனன் - வாடி. 78. தேசிகன் அருளால் - (தவத்திற்கு இரங்கி இறைவன் வராவிடில் தீயினின்று தவம்செய் என்று) சுக்கிரன் அருளியபடி. 79. நள்ளிடை - நடுவிடம்.) மேயின கொழும்புகை மிசைக்கொண் டாலெனத் தீயழல் நடுவுறச் செந்நின் றையிரண் டாயிரம் ஆண்டையின் அவதி ஆருயிர் நோயுற இபமுகன் நோற்றல் ஓம்பினான். 80 புழைக்கையின் முகத்தினன் புனித மார்தரு தழற்சிகை மீக்கொளத் தனது தாள்நிறீஇ விழுத்தக நோற்றலை வியந்து நோக்குறீஇ அழற்பெருங் கடவுளும் அருள்செய் தானரோ. 81 அன்னதோர் அமையில் அவுணன் மாசுடல் வன்னியில் உறுத்துகார் இரும்பின் மாண்டது பொன்னினும் மணியினும் பொலிந்து பூத்தது மின்னிவர் வச்சிர மிடலுஞ் சான்றதால். 82 ஏற்றநந் தொன்மர பியல்வ ழாமலே போற்றிய வருமிவன் பொறையும் மேன்மையும் நோற்றிடு திட்பமும் நுவலற் பாலவோ நூற்றுதும் அலரெனா அவுணர் தோன்றினார். 83 வீசினர் நறுமலர் வியப்பின் நன்மொழி பேசினர் புகழ்ந்தனர் பிறங்கும் ஆர்வத்தால் ஆசிகள் புகன்றனர் அமரர் தானையை ஏசினர் அவர்தம தின்னல் நோக்குவார். 84 தளப்பெரும் பங்கயத் தவிசின் மீமிசை அளப்பருங் குணத்துடன் அமா¢ந்த நாயகன் உளப்பட நோக்கினன் உவந்து பூமுடி துளக்கினன் அமரர்கள் துணுக்கம் எய்தினார். 85 இன்னணம் அருந்தவம் இயற்றும் எல்லையில் பொன்னவிர் சடைமுடிப் புனித நாயகன் அன்னது நாடியே அவுண ருக்கிறை முன்னுற வந்தனன் மூரி யேற்றின்மேல். 86 (80. அவதி - காலம். 81. புழைக்கை - துதிக்கை. 82. கார் இரும்பின் - காய இரும்பைப்போல. மாண்டது - மாட்சிமையுற்றது. மிடல் - வலிமை. 83. பொறை - சாந்த குணம். திட்பம் - திண்மை. 85. நாயகன் - சிவன்; கயமுகனுமாம். 86. மூரி - வலிமை; திமிலுமாம்.) வேறு வந்து தோன்றலும் மற்றது நோக்கியத் தந்தி மாமுகத் தானவன் நோன்பொரீஇச் சிந்தை அன்பொடு சென்னியிற் கைதொழு தெந்தை தன்னை இறைஞ்சிநின் றேத்தினான். 87 போற்று கின்றுழிப் புங்கவன் இன்றுகா றாற்று நோன்பில் அயர்ந்தனை நீயினிப் பேற்றை வேண்டுவ பேசினை கொள்கெனத் தேற்ற மிக்கவன் செப்புதல் மேயினான். 88 வேறு மாலயன் இந்திரன் முதல்வ ரம்பிலோர் மேலுறு தகையினர் வெய்ய போரிடை ஏலுவர் என்னினும் எனக்கு வென்னிட ஆலமர் கடவுள்நீ அருளல் வேண்டுமால் 89 எற்றுவ வெறிகுவ ஈர்வ எய்குவ குற்றுவ முதலிய குழுக்கொள் வான்படை முற்றுற வரினும்யான் முடிவு றாவகை அற்றமில் பெருமிடல் அளித்தல் வேண்டுமால். 90 மிக்கதோர் அமரரால் வியப்பின் மானுட மக்களால் அவுணரால் மற்றை யோர்களால் தொக்குறு விலங்கினால் துஞ்சி டாவகை இக்கணந் தமியனேற் கீதல் வேண்டுமால். 91 என்னிக ராகிவந் தொருவன் என்னொடு முன்னுற வெஞ்சமர் முயலும் என்னினும் அன்னவன் படையினும் அழிவு றாவகை பொன்னவிர் வேணியாய் புரிதல் வேண்டுமால். 92 வரந்தரு கடவுளர் முனிவர் மற்றையோர் இருந்திடும் உலகெலாம் என்ன தாணையில் திரிந்திடும் ஆழியுங் கோலுஞ் சென்றிடப் புரிந்திடும் அரசியல் புரிதல் வேண்டுமால். 93 அன்றியும் ஒன்றுள தடியன் சூழ்ச்சியால் பொன்றினும் பிறவியுட் புகாமை வேண்டுமால் என்றலு நோற்றவர்க் கேதும் ஈபவன் நன்றவை பெறுகென நல்கி யேகினான். 94 பெற்றனன் படைகளும் பிறவுந் தன்புறஞ் சுற்றிடு கிளையெலாந் தொடர்ந்து சூழ்தர உற்றனன் காண்டகும் உம்பர் உங்குவன் மற்றொரு கயமுகன் என்று மாழ்கினார். 95 காழுறு பெருந்தரு நாறு காசினி வீழுறு தூரொடு மெலிந்து நின்றன ஊழுறு பருவம்வந் துற்ற காலையில் சூழுறு தொன்னிலை என்னத் தோன்றினான். 96 (89. ஆலமர் கடவுள் - கல்லால் நிழலில் அமரும் கடவுள்; தக்ஷ¢ணாமூர்த்தி. 93. ஆழி - ஆக்கினா சக்கரம். கோல் - செங்கோல். 94. சூழ்ச்சி - பகைவர் வஞ்சனை. 95. தவம் செய்யு முன் இரும்பென விளங்கிய உடலம் தவம்செய்த பின் பொன்னென விளங்கியதால் கயமுகனை, “மற்றொரு கயமுகன்” என்றார். 96. பெருந்தரு - ஆலமரம். நாறு - நாறுகள். தூர் - சிறு வேர்களான விழுதுகள். ஊழுறு பருவம் - நற்பருவம். கயமுகன் பிற்காலத்தில் தவப் பெருமையால் சேனை வன்மை, ஆயுத வன்மை முதலியவற்றுடன் விளங்கினான் என்பது இச்செய்யுளின் உட்கருத்து.) அற்புதம் எய்தினன் அலைகொள் வாரியில் புற்புத மாமெனப் புளகம் பூத்துளான் சொற்பகர் வரியதோர் மதர்ப்பின் சும்மையான் சிற்பரன் கருணையில் திளைத்தல் மேயினான். 97 அன்னது தேர்வுறீஇ அவுணர் தொல்குல மன்னனும் வௌ¢ளியும் மதங்க மாமுகன் தன்னைவந் தெய்தியே சயமுண் டாகெனப் பன்னரும் ஆசிகள் பகர்ந்து மேயினார். 98 தண்ணளி யில்லதோர் தந்தி மாமுகன் அண்ணலங் கடகளிற் றமரர் கோனையும் விண்ணவர் பிறரையும் வென்று மீண்டுபின் மண்ணுல கதனிடை வல்லை எய்தினான். 99 வேறு புவனி தன்னிடைப் போந்துபின், அவுணர் கம்மிய அறிஞனை, நுவலும் அன்பொடு நோக்குறா, உவகை யால்இவை யுரைசெய்வான்.100 நாவ லந்தரு நண்ணுமத், தீவின் மேதகு தென்றிசைப், பூவி லோர்நகர் புரிதியால், மேவ வென்று விளம்பவே. 101 பூவின் மேல்வரு புங்கவத், தேவு நாணுறு செய்கையில், காவன் மாநகர் கண்டதிற், கோவி லொன்று குயிற்றினான். 102 வேறு வெங்கண் மேதகு வேழமு கத்தனைத் தங்கள் தொல்பகை தாங்குவ தாமெனச் சிங்க மாற்றுந் திருமணிப் பீடமொன் றங்கவன் வைக ஆற்றினன் அவ்விடை. 103 இனைத்தி யாவும் இமைப்பினில் கம்மியன் நினைப்பி னில்செய் நிலைமையை நோக்கியே சினத்தின் நீங்கிய செய்தவத் தேசிகன் மனத்தி னூடு மகிழ்ச்சியின் மேயினான். 104 காமர் தங்கிய காப்பியன் அந்நகர் தூம தங்கெழு தோல்முகற் காதலான் மாம தங்க புரம்என மற்றொரு நாமம் அங்கதற் கெய்திட நாட்டினான். 105 (98. அவுணர் தொல்குல மன்னன் - அசுரேந்திரன். 104. தேசிகன் - சுக்கிரன். 105. காப்பியன் - சுக்கிரன். தூ - சிந்துகின்ற. மதங்கபுரம் - இது கயமுகன் நகரம்.) அந்த மாநகர் ஐதெனக் கம்மியன் சிந்தை நாடினன் செய்திடு காலையில் தந்தி மாமுகத் தானவன் கண்ணுறீஇ அந்தம் இல்லதொ ரார்வமொ டேகினான். 106 காத மங்கொரு பத்தெனக் கற்றவர் ஓதுகின்ற ஒழுக்கமும் ஒன்றெனும் பாதி யெல்லைப் பரப்பும் பெறுநகர் வீதி நோக்னின் விம்மிதம் எய்தினான். 107 அரக்கர் தொல்லை அவுணர்க் கரசொடு தருக்கு தானவர் தம்முடன் எய்தியே பெருக்க முற்றதன் பின்னவர் இன்னவர் இருக்க நல்கினன் இந்நகர் யாவையும். 108 அங்கண் மேவும் அணிமணிக் கோயிலின் மங்க லத்தொடு வல்லையின் ஏகியே சிங்க ஏற்றின் சிரங்கெழு பீடமேல் வெங்கை மாமுகன் வீற்றிருந் தானரோ. 109 போந்து பின்னர்ப் பொருவருந் தானவர் வேந்தன் மாமக ளான விசித்திர காந்தி தன்னைக் கருதுநன் னாளினில் ஏந்தல் முன்வரைந் தின்புற மேவினான். 110 விண்ணின் மாந்தர்கள் மேதகு தன்குலம் நண்ணு மாதர்கள் நாகர்தம் மாதர்கள் வண்ண விஞ்சையர் மாதர்க ளாதியாம் எண்ணில் மாதரைப் பின்வரைந் தெய்தினான். 111 பொன்ன கர்க்கும் பொலங்கெழு புட்பக மன்ந கர்க்குமவ் வானவர் ஈண்டிய எந்ந கர்க்கும் இலாவளம் எய்திய அந்ந கர்க்கண் அமர்ந்திடல் மேயினான். 112 சூழும் வானவர் தானவர் துன்னியே தாழ ஏழுல குந்தன தாணையால் வாழி சேர்கொடுங் கோலொடு மன்னுபேர் ஆழி செல்ல அரசுசெய் தானவன். 113 ஆவுஞ் சங்கமும் அம்புய மும்மலர்க் காவும் மாமணி யுங்கம லாலயத் தேவும் பின்வருந் தேவரும் மாதரும் ஏவல் செய்ய இனிதிருந தானரோ. 114 (106. ஐது என - அழகென. 109. வெங்கைமாமுகன் - கயமுகன். 110. விசித்திர காந்தி - இவள் கயமுகன் மனைவி; அசுரேந்திரன் மகள். 111. வரைந்து - மணந்து. 112. புஷ்பக மன் - குபேரன். 114. ஆ - காமதேனு. சங்கம் - சங்கநிதி. அம்புயம் - பதுமநிதி. கா - கற்பகத்தரு.) புந்தி மிக்க புகரும் புகருடன் அந்த மற்ற அவுணர்கள் மன்னனும் தந்தி யின்முகத் தானவ னுக்குநன் மந்தி ரத்துணை யாய்அவண் வைகினார். 115 அன்ன காலை அடுகரி மாமுக மன்னன் முன்வரும் வாசவ னாதியாந் துன்னு வானவர் சூழலை நோக்கியே இன்ன தொன்றை இயம்புதல் மேயினான். 116 வைக லும்மிவண் வந்துழி நுங்கள்தம் மொய்கொள் சென்னியில் மும்முறை தாக்கியே கைகள் காதுறக் கால்கொடு தாழ்ந்தெழீஇச் செய்க நம்பணி தேவர்கள் நீர்என்றான். 117 அன்ன தோதலும் அண்டர்கள் யாவரும் மன்னன் தானும் மறுப்பதை அஞ்சியே முன்னரே நின்று மொய்ம்புடைத் தோல்முகன் சொன்ன தோர்புன் தொழின்முறை ஆற்றினார். 118 எழிலி யூர்தியும் ஏனைய வானவர் குழுவி னோர்களுங் குஞ்சர மாமுகத் தழித கன்பணி அல்கலும் ஆற்றியே பழியெ னும்பர வைப்படிந் தாரரோ. 119 கரிமு கத்துக் கயவன தேவலால் பருவ ரற்பழி மூழ்குறு பான்மையைச் சுரர்க ளுக்கிறை தொல்லைவி ரிஞ்சன்மால் இருவ ருக்கும் இயம்பி இரங்கினான். 120 இரங்கும் எல்லையில் இந்திர முற்றுளந் தரங்க மெய்தித் தளர்ந்திடல் நீயெனா உரங்கொள் பான்மை உணர்த்தி அவனொடும் புரங்கள் அட்டவன் பொற்றையிற் போயினார். 121 மாகர் யாவரும் வாசவ னும்புடை யாக வந்திட அம்புயன் மாலுமை பாகன் மேய பனிவரைக் கோயிலுள் ஏகி னார்நந்தி எந்தை விடுப்பவே. 122 கண்டு நாதன் கழலிணை தாழ்ந்துநல் தொண்டு காணத் துதித்தலும் ஆங்கவன் அண்ட ரோடும் அலமரல் எய்தியே வண்டு ழாய்முடி வந்ததென் னென்னவே. 123 (119. எழிலி ஊர்தி - இந்திரன். அல்கலும் - நாடோறும். பழியெனும் பரவை - துன்பக்கடல். 122. மாகர் - தேவர். 123. அலமரல் - துன்பம்.) வேறு ஆனதோர் பொழுதின்மால் அரனை நோக்கியோர் தானவன் கயமுகன் என்னுந் தன்மையான் வானவர் தமையெலாம் வருத்தி னானவன் ஊனமில் தவம்புரிந் துடைய வன்மையால். 124 வெங்கய முகத்தினன் விறலை நீக்குதல் எங்களுக் கரியதால் எவர்க்கும் ஆதியாம் புங்கவ நினக்கது பொருளன் றாகையால் அங்கவன் உயிர்தொலைத் தருள வேண்டுநீ. 125 என்றுரை செய்தலும் ஈசன் யாமிவண் ஒன்றொரு புதல்வனை யுதவித் தோல்முக வன்றிறல் அவுணனை மாய்த்து மற்றவன் வென்றிகொண் டேகுவான் விடுத்துமேல் என்றான். 126 வீடிய பற்றுடை விரதர்க் கென்னினும் நாடிய அரியவன் நவின்ற வாய்மையைச் சூடினர் சென்னிமேல் தொழுத கையராய் ஆடினர் பாடினர் அமரர் யாருமே. 127 பாங்கரில் அனையரைப் பரிந்து நோக்கியே ஈங்கினி நும்பதிக் கேகு வீரென ஆங்கவர் எம்பிரான் அடியில் வீழ்ந்தனர் வீங்குறு காதலால் விடைகொண் டேகினார். 128 ஏகிய எல்லையில் எண்ணி லாவிதி சேகரம் மிலைச்சிய சென்னி வானவன் பாகமுற் றுலகெலாம் பயந்த சுந்தரத் தோகையை நோக்கியே இதனைச் சொல்லுவான். 129 யாம்பெரு விருபபுடன் இயற்று வித்திடுந் தேம்படு தருவனந் தெரித்துஞ் செல்கென வாம்பரி சருளினை வருவன் ஆங்கெனாக் காம்படு தோளுடைக் கவுரி கூறினாள். 130 ஆயது கேட்டனன் அகிலம் யாவையுந் தாயென அருளுமத் தையல் தன்னொடுஞ் சேயுயர் விசும்பினைச் செறிதண் சோலையில் போயினன் மறைக்கெலாம் பொருள தாயினான். 131 நீணுதற் கனல்விழி நிமலத் தேவெனுந் தாணுவைப் போலவே தனது பாதமுஞ் சேணுடைச் சென்னியுந் தேவர் யாரினுங் காணுதற் கரியதக் கடிகொள் சோலையே. 132 (125. விறலை - வெற்றியை. 129. விதி சேகரம் - பிரமகபாலம். உலகெலாம் பயந்த சுந்தரத் தோகை - உமாதேவியார். 130. காம்படு தோள் - மூங்கிலைப்பழிக்கும் தோள். 131. தையல் - உமாதேவியார். 132. கடி - வாசனை; இது முதல் சோலை வருணனை ஆகும்.) தேசுடைத் தருநிரை திருமென் போதொடு பாசடைத் தொகுதியும் பரித்து நிற்பன ஈசனுக் கருச்சனை இயல்பின் ஆற்றிட நேசமுற் றுடையவர் நிலைய தொக்குமால். 133 பாலுற வருவதோர் பரைதன் மெய்யொளி மேலுறு பைங்கொடி வேத நாயகன் ஏலுறு தாருக வனத்தில் எய்தமுன் மாலுறு மங்கையர் வடிவம் போலுமால். 134 கொடிகளுந் தருக்களின் குழுவு மாதுடன் அடிகளங் கேகலும் அனையர் செம்மையுஞ் சுடர்கெழு பசுமையந் துவன்றி அன்னதோர் வடிவுகொண் டிருந்திடும் வண்ணம் போலுமால். 135 பூந்தரு நிரைகளில் பொருவில் கோட்டிடைச் சேந்திடு நனைபல திகழ்வ பார்ப்பதி காந்தனை அன்பொடு கண்டு பாங்குளார் ஏந்திய தீபிகை என்ன லானவே. 136 வான்தரு ஓர்சில மலரின் கண்டொறுந் தேன்றுளி விடுவன சிவனைக் கண்டுழி ஆன்றதோர் அன்பினார் அகம்நெ கிழ்ந்துகட் கான்றதோர் புனலெனக் கவின்று காட்டிய. 137 வண்தரு ஓர்சில மருப்பில் வானிறங் கொண்டிடு மதுமலர் குழுமி யுற்றன எண்டிரு மலையிடை வீழுங் கங்கையில் தண்டுளி சிதறிய தன்மை போன்றவே. 138 கற்றையஞ் சுடர்மணி கனகம் ஏனைய பிற்றையென் னாதருள் பெரியர் வண்மைபோல் மற்றவ ணுள்ளபவன் மரமுந் தம்பயன் எற்றையும் உலப்புறா தீகை சான்றவே. 139 காவதன் இயல்பினைக் கண்டு தன்னொரு தேவியொ டேயருள் செய்து சிற்பரன் ஆவியுள் ளுணர்வென அதனுள் வைகுமோர் ஓவிய மன்றிடை ஒல்லை ஏகினான். 140 எண்டகு பெருநசை எய்தி ஐம்புலன் விண்டிடல் இன்றியே விழியின் பாற்படக் கண்டனள் கவுரிஅக் கடிகொள் மண்டபங் கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே. 141 (133. பாசடை - பசியஇலை. 135. கொடிகளின் பசுமையும் தருக்களின் செம்மையும் அம்மை அப்பரை ஒத்து விளங்குகின்றன. 136. தீபிகை - தீபத்தட்டு. 138. வான்நிறம் - வெண்ணிறம். மதுமலர் - தேன்மலர். 140. கா - சோலை. ஓவிய மன்று - சித்திர மண்டபம். 141. பெருநசை - பெருவிருப்பம். விண்டிடம் - விலகாமல். ஓவியக்கோலம் - சித்திர வடிவம்.) பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால் ஆங்கதன் நடுவணில் ஆதி யாகியே ஓங்கிய தனியெழுத் தொன்றி ரண்டதாய்த் தூங்குகைம் மலைகளில் தோன்றிற் றென்பவே. 142 அன்னவை உமையவள் காண ஆங்கவை முன்னுறு புணர்ச்சியின் முயற்சி செய்தலும் என்னைகொல் இதுவென எண்ணித் தன்னொடு மன்னிய முதல்வனை வணங்கிக் கூறுவாள். 143 மூலமாம் எழுத்திவை முயங்கி மால்கரிக் கோலமாய்ப் புணர்வதென் கூறு கென்றலும் ஏலவார் கருங்குழல் இறைவி கேளென ஆலமார் களத்தினன் அருள்செய் கின்றனன். 144 வேறு முன்புநீ காண்டலின் மூலமாய் உடையதோர் மன்பெருந் தொல்பொறி மருவியீர் உருவுறீஇ அன்பினால் ஆனைபோற் புணருமால் ஆகையால் நின்பெருந் தகவினை நினைகிலாய் நீயுமே. 145 காட்சியால் இதுசெயுங் காரணம் பெற்றநின் மாட்சிதான் யாமலான் மற்றியார் உணர்குவார் ஆட்சியாய் உற்றதொல் அருமறைக் காயினுஞ் சேட்செலா நிற்குநின் திருவருட் செய்கையே. 146 என்னவே முகமனால் எம்பிரான் அம்பிகை தன்னொடே மொழியஅத் தந்தியும் பிடியுமாய்த் துன்னியே புணர்வுறுந் தூயசெய் தொழில்விடா முன்னமே போன்றதால் முடிவிலாக் குடிலையே. 147 அக்கணத் தாயிடை ஐங்கரத் தவன்அருள் முக்கண்நால் வாயினான் மும்மதத் தாறுபாய் மைக்கருங் களிறெனும் மாமுகத் தவன்மதிச் செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன்வந் தருளினான். 148 ஒருமையால் உணருவோர் உணர்வினுக் குணா¢வதாம் பெருமைதயான் எங்கணும் பிரிவரும் பெற்றியான் அருமையான் ஏவரும் அடிதொழுந் தன்மையான் இருமையாம் ஈசனே என்னநின் றருளுவான். 149 (142. தனி எழுத்து - ஏகாட்சரம்; பிரணவம். தூங்கும் - தொங்குகின்ற. கைம்மலைகள் - யானைகள். 144. மூலமாம் எழுத்து பிரணவாட்சரங்கள். 147. குடிலை - ஓங்காரம். 148. மும்மதம் - கன்னமதம், கபோலமதம், பீசமதம்; சிலர் பீசமதத்தை நீக்கிக் கைம்மதம் என்றும் கூறுவர்.) மருளறப் புகலுநான் மறைகளில் திகழுமெய்ப் பொருளெனப் படுமவன் புவனமுற் றவர்கள்தம் இருளறுத் தவர்மனத் திடர்தவிர்த் தருளவோர் அருளுருத் தனைஎடுத் தவதரித் துளனவன். 150 வந்துமுன் னிருவர்தம் மலரடித் தலமிசைச் சிந்தையார் வத்தொடுஞ சென்னிதாழ்த் திடுதலுந் தந்தையுந் தாயுமுன் தழுவிமார் புறவணைத் தந்தமில் கருணைசெய் தருளினார் அவ்வழி. 151 என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல் முன்னரே உனதுதாள் முடியுறப் பணிவரேல் அன்னர்தஞ் சிந்தைபோல் ஆக்குதி அலதுனை உன்னலார் செய்கையை ஊறுசெய் திடுதிநீ. 152 சேயநன் மலர்மிசைத் திசைமுகன் மால்முதல் ஆயபண் ணவர்தமக் காருயிர்த் தொகையினுக் கேயபல் கணவருக் கெத்திறத் தோர்க்குநீ நாயகம் புரிதியால் நல்லருட் டன்மையால். 153 கானுறுங் கரடவெங் கயமுகத் தவனெனுந் தானவன் வன்மையைச் சாடியே தண்டுழாய் வானவன் சிறுமையும் மாற்றியே வருகெனா ஆனையின் முகவனுக் கைம்முகன் அருள்செய்தான். 154 மோனமே குறியதா முதலெழுத் தருளிய ஞானமா மதலைபால் நண்ணவே பூதவெஞ் சேனையா யினஅருள் செய்துசிற் பரையொடும் ஆனைமா முகனொடும் அமலன்மீண் டருளினான். 155 புங்கவர்க் கிறைவனாம் புதல்வனை நோக்கிடா நங்கடைத் தலையினில் நாயகம் புரிகெனா அங்கருத் தியொடிருத் தினன்அணிக் கோயிலுட் சங்கரக் கடவுள்சுந் தரியொடு மருவினான். 156 தந்திமா முகமுடைத் தனயன்அங் கணுகியே முந்துபா ரிடமெலாம் மொய்த்துமுன் சூழ்தர நந்திவந் தனைசெய நான்முகன் முதலினோர் வந்துவந் தடிதொழ மகிழ்வொடே வைகினான். 157 (152. என்னரே ஆயினும் - எத்தகையோராயினும். அன்னவர்தம் சிந்தை போல் - அவர் எண்ணம்போல. உன்னலார் - நினைந்துவழிபடாதவர். ஊறு - இடையூறு. 153. நாயகம் - தலைமைத்தன்மை. 154. கான் - நாற்றம். கரடம் - மதம். சாடி - அழித்து. ஆனையின்முகவன் - விநாயகன். ஐம்முகன் - சிவபெருமான். 155. மோனம் - மௌனம். முதலெழுத்து - பிரணவம். ஞானமாமதலை - விநாயகன். 156. அருந்தி - விருப்பம். மருவினான் - சென்றான்.) அன்னதற் பின்னரே ஆயிரம் பெயருடைப் பொன்னுலாம் நேமியான் புனிதனைக் காணிய மின்னுதண் சுடர்விடும் வௌ¢ளிமால் வரைமிசைக் துன்னினான் ஆலயச் சூழல்முன் அணுகினான். 158 அந்தியார் சடைமுடி அண்ணல்தன் அருளினால் நந்திதே வுய்த்திட நங்கையோர் பங்கனாம் எந்தைபா லெய்தியே இணைமலர்த் தாள்தொழாப் புந்தியார் வத்தொடும் போற்றிசெய் தருளவே. 159 வேறு நிருத்தனவ் விடைதனில் நேமி யான்தனை இருத்தியென் றருள்புரிந் திடத்தின் மேவிய ஒருத்தியை நோக்கிஒன் றுரைப்பங் கேளெனா அருத்திசெய் ஆடல்ஒன் றருளிற் கூறுவான். 160 சூதனை எம்மொடே பொருதி தோற்றனை ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும் ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு பாதியாஞ் சசிமுதற் கலவுங் கோடியால். 161 என்னலும் உமையவள் இசைவு கோடலும் அன்னதொ ரெல்லையின் அரியை நோக்கியே தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென மன்னினை இருத்தியான் மாயநீ என்றான். 162 பற்றிகல் இன்றியே பழவி னைப்பயன் முற்றுணர்ந் துயிர்களை முறையின் வைப்பவன் மற்றிது புகறலும் வனசக் கண்ணினான் நற்றிறம் இ·தென நவின்று வைகினான். 163 இந்தவா றாயிடை நிகழும் எல்லையில் சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர் அந்தமில் பெருங்குணத் தாதி ஏவலில் தந்தனர் காசொடு பலகை தன்னையே. 164 அதுபொழு தண்ணலும் அரியை நோக்கியிம் முதிர்தரு கருவியை முறையின் வைக்கெனக் கதுமென வைத்தலுங் கவுரி நீநமக் கெதிருறு கென்றுமுன் னிருத்தி னானரோ. 165 (158. நேமியான் - திருமால். 160. ஒருத்தி - ஒப்பற்ற உமாதேவியார். 161. சூது - சூதாட்டம். சசி - சந்திரன். கோடி - கொள்வாய். 162. சான்று - சாட்சி. மன்னினை - பொருந்தி. 163. இகல் - வெறுப்பு. வனசக்கண்ணினான் - திருமால். 164. உழையர் - ஊழியர்கள். காசு, பலகை - இவை சூதாடு கருவிகள்.) கவற்றினை முன்னரே உய்ப்பக் கண்ணுதல் அவற்றினைப் பின்னுற அவளும் உய்த்தனள் தவற்றியல் பல்லதோர் வல்ல சாரியால் எவற்றினும் மேலையோர் இனிதின் நாடினார். 166 பஞ்சென வுரைசெய்வர் பாலை என்பர்ஈர் அஞ்சென மொழிவர் அஞ்சென்பர் அன்றியுந் துஞ்சலின் நடம்என்பர் துருத்தியீ தென்பர் விஞ்சிய மகிழ்வொடு வெடியென் றோதுவார். 167 அடியிது பொட்டைஈ தென்பர் அ·தென முடிவில குழூஉக்குறி முறையின் முந்துறக் கடிதினில் கழறினர் கவறு சிந்தினார் நொடிதரு கருவிகள் எதிரிகள் நூக்கினார். 168 வேறு ஏற்றா னவன்எய்திய இன்னருள் யாவ தேயோ தேற்றாம் அ·தியார்க்கு மளப்பருஞ செய்கை யாலே மேற்றான் எதிராவுடன் ஆடிய மெல்லி யற்குத் தோற்றான் நெடுமாலயன் நாடவுந் தோற்றி லாதான். 169 ஒன்றாய பரஞ்சுட ரோன்உமை தன்னை நோக்கி நன்றா யதுநின் வலியென்று நகைத்து நம்மை வென்றா யலைதோற் றனைமுன்னர் விளம்பு மாற்றால் நின்றா ரொடுபூணும் எமக்கினி நேர்தி என்றான். 170 மூன்றாம் உலகங்களும் ஆருயிர் முற்று முன்னம் ஈன்றாள் அதுகேட்டலுந் தான்இகல் ஆடல் அஞ்சி வான்றா வியபே ரடிமாயனை வல்லை நோக்கிச் சான்றா மெனவை கினைநீயிது சாற்று கென்றாள். 171 சொல்லும் அளவிற் சுடர்நேமியன் சூது டைப்போர் வெல்லுந் தகையோன் பரனென்று விளம்ப லோடும் நல்லுண்மை சொற்றாய் திறநன்றிது நன்றி தென்னாச் செல்லுண்ட ஐம்பால் உமைஆற்றச் சினம்பு ரிந்தாள். 172 பாராயலை கண்ணனு மாயினை பாலி னுற்றாய் தேராதது ஒன்றிலை யாவருந் தேர ஒண்ணாப் பேராதி யோன்நவை கூறினும்நீயிது பேச லாமோ காராமெய் என்பர் மனமுங்கரி யாய்கொல் மன்னோ. 173 (166. கவறு - சூதாடுகருவி. 167. பஞ்சு, பாலை, ஈரைஞ்சு, அஞ்சு, நடம், துருத்தி, வெடி - இவை சூதாட்டத்தின் குழூஉக் குறிகள். 168. அடி, பெட்டை - இவை சூதாட்டத்தின் குழூஉக்குறிகள். கவறுசிந்துதல் - காய்களைவெட்டுதல். நூக்கினார் - தள்ளினார். 169. ஏற்றான் - இடபத்தையுடையவன். 170. வென்றாய் அலை - வெற்றி பெறவில்லை. தார் - மாலை. நேர்தி - அளித்தி. 171. இகல்ஆட - பகைத்து நானே வென்றேன் என்று கூற. 172. செல் - மேகம். ஐம்பால் - கூந்தல். ஆற்ற - மிகவும். 173. கண்ணனுமாயினை - இங்கு, நீ கண்ணுடையவனான் இருந்தும் அதற்குரிய செயலினை இழந்தாய் என்பது குறிப்பு.பாலினுற்றாய் - பக்கத்திலிருந்தாய்; பாற்கடலிலிருந்தாய்; பாலை வைத்துக்கொண்டு பொய் சொல்லலாகாது என்பது கருத்து.) ஏம்பா லிதுசொற் றனைஆதலின் என்று மாயை ஓம்பா வருவா யுறுகைதவத் தூற்ற மிக்காய் பாம்பாதி யென்னப் பகர்ந்தாள் பகர்கின்ற எல்லை ஆம்பால் உருவம் அ·தங்கண் அடைந்த தன்றே. 174 அவ்வா றவன்பால் அணைகின்றதொர் போழ்தில் ஆழிக் கைவா னவனும் அதுகண்டு கவற்சி எய்திச் செவ்வான் உறழும் முடியோன்அடி சென்று தாழா எவ்வா றெனக்கிவ் வுருநீங்கும் இசைத்தி என்றான். 175 காலாய் வௌ¤யாய்ப் புனலாய்க் கனலோடு பாராய் மேலாகி யுள்ள பொருளாய்எவற் றிற்கும் வித்தாய் நாலாய வேதப் பொருளாகி நண்ணுற்ற நாதன் மாலா யவனுக் கி·தொன்று வகுத்து ரைப்பான். 176 என்பால் வருமன்பின் இசைத்தனை ஈது பெற்றாய் நின்பால் வருமின் னலைநீக்குவன் நீங்கு கின்றாய் தென்பா லுலகந்தனில் அன்னதொர் தேய மீதில் முன்பால வனம்மென ஒன்றுள மொய்ம்பின் மிக்காய். 177 ஆங்கே யினிநீ கடிதேகினை அன்ன கானில் பாங்கே ஒருதொன்மரம் நின்றது பார்த்த துண்டே ஊங்கே பராரையின் மேயபொந் தொன்றி னூடு தீங்கே குறப்போய்ப் பெருமாதவஞ செய்து சேர்தி. 178 அஞ்சேல் அவண்நீ உறைகின்றதொர் காலை யானே எஞ்சே யவனாங் கயமாமுகன் எய்து வானச் செஞ்சே வகனுக் கெதிர்கொண்டனை சென்று காண்டி மஞ்சே யனையாய் உனக்கிவ்வுரு மாறும் அன்றே. 179 வேறு என்னுமள வில்தொழுதி றைஞ்சிஇனி தேத்தி அன்னதொர் வனத்திடை அமர்ந்ததொன் மரத்தில் துன்னுவன் எனக்கடிது சொல்லுதலும் யார்க்கும் முன்னவ னுமேகென முராரியை விடுத்தான். 180 விட்டிடுத லுங்கயிலை நீங்கினன் விரைந்தே கட்டழகின் மேதகைய காமனது தாதை சிட்டர்கள் பயின்றுறை தெனாதுபுலம நண்ணி மட்டொழுகு தொன்மர வனத்தினிடை உற்றான். 181 (174. ஏம்பால் - மகிழ்ச்சியால். கைதவம் - வஞ்சனை. பாம்பு ஆதி - பாம்பாகக்கடவாய். 175. கவற்சி - கலக்கம். செவ்வான் - செவ்வானம். 176. கால் . காற்று. வௌ¤ - ஆகாயம். நாதன் - சிவன். 177. இசைத்தனை - தவறுகூறினை. ஈது - பாம்பு வடிவாகும் இச்சாபத்தினை. ஆலவனம் - திருவாலங்காடு. 178. தொன்மரம் - ஆலமரம். பராரை - பெரிய அடிப்பாகம். 179. கயமுகன் - விநாயகன். சேவகன் - வீரன். மஞ்சே அனையாய் - மேக வண்ணனே! இவ்வுரு - இப்பாம்பு வடிவம். 180. முரா£¤ - திருமால். 181. காமனது தாதை - திருமால். சிட்டர்கள் - மேலானவர்கள். தெனாது புலம் - தென்னாடு. மட்டு - தேன்.) நன்மதி யுடைப்புலவர் நால்வர்களும் உய்யச் சின்மயம் உணர்த்தியருள் தேவன்அமர் தாருத் தன்மையது பெற்றுநனி தண்ணிழல் பரப்புந் தொன்மர வியற்கைஅத னிற்சிறிது சொல்வாம். 182 பசுந்தழை மிடைந்தஉல வைத்திரள் பரப்பி விசும்பளவு நீடியுயர் வீழினிரை தூங்கத் தசும்பனைய தீங்கனிகள் தாங்கியது தாளால் வசுந்தரை அளந்தநெடு மாயவனை மானும். 183 அண்டநடு வாயவுல கேழினையும் அந்நாள் உண்டருளி ஒல்லைதனில் ஓர்சிறுவ னாகிப் பண்டுகரி யோன்தயில்கொள் பாசடைகள் தன்பாற் கொண்டவட மன்னதொரு கொள்கைய துடைத்தால். 184 மழைத்தபசு மேனியது மாதிர வரைப்பில் விழுத்தகைய வீழினிரை வீசுவட தாருத் தழைக்குல மருப்புமிசை தாங்கியிடை தூங்கும் புழைக்கைகொடு மால்களிறு நாடுகரி போலும். 185 பாசடை தொடுக்கப்பட லைப்பழு மரத்தின் வீசிநிமிர் கின்றபல வீழின்விரி கற்றை பூசலிடு கூளியொடு பூதநிரை பற்றி ஊசல்பல ஆடியென ஊக்கியன அன்றே. 186 ஆல்வரையின் வீழ்நிரைகள் ஆசுகம் உடற்றப் பால்வரையின் எற்றிவரு மாறிரவி பாகன் கால்வரையின் ஏகவெழு கந்துகம தென்னும் மால்வரையின் வீசுபல மத்திகைய தொத்த. 187 ஆசறுதெ னாதுதிசை ஆளுமிறை எண்ணில் பாசமொடு நின்றதொரு பான்மைய· தன்றேல் வாசவனும் ஆகமிசை மாலிகையு மாமால் வீசுபழு மாமர விலங்கலும்அவ் வீழும். 188 மாநிலமெ லாந்தனை வழுத்தவரு மன்னற் கூனமுறு காலைதனில் ஒண்குருதி வாரி வானமுகில் கான்றனைய மாண்டதொன் மரத்தின் மேனிதரு செய்யபல வீழின்விரி மாலை. 189 (182. புலவர் - அறிஞர். தாரு - கல்லால விருட்சம். 183. இது முதல் ஆல மரத்தின் வருணனை ஆகும். உலவ¨திதிரன் - கிளைகள். வீழின் நிரை - விழுதின் வரிசை. தசும்பு - குடம். வசுந்தரை - பூமி. 184. வடம் அன்ன - அந்த ஆலேபோல. 185. கரி - இங்குப் பெண் யானை. 186. படலை - மாலை. பழுமரம் - ஆலமரம். பூசல் - சிறுசண்டை. 187. ஆல்வரை - ஆலமரமாகிய மலை. ஆசுகம் - காற்று. இரவிபாகன் - அருணன். கந்துகம் - சத்தமா என்னும் குதிரைகள். மத்திகை - குதிரைச் சம்மட்டி; சவுக்கு. 188. தெனாதுதிசை யாளும் இறை - எமன். மாலிகை - பூமாலை. பழுமாமர விலங்கல் - ஆலமரமாகிய மலை. 189. ஊனம் - அழிவு. கான்றல் - பெய்தல். மாண்ட - மாட்சிமை வாய்ந்த.) இரும்பறை ஆலமிசை எம்முருவு கொள்ளா வம்புலவு தண்டுவள மாயன்வரும் என்னா வெம்பணிகள் தம்பதியின் மேவுவன போலாம் தம்பமென வேதரை புகுந்ததனி வீழ்கள். 190 கடித்தன எயிற்றின்அழல் காலவர வின்மேல் நடிக்குமொரு கட்செவி நமைக்குறுகும் என்னாத் துடித்தன எனத்தலை துளக்கின உரோமம் பொடித்தன நிகர்த்துள புனிற்றினுறு புன்காய். 191 கிளர்ப்புறு கவட்டிலை கிடைத்த கிளையாவும் அளப்பில்புகை சுற்றிட அனற்கெழுவு கற்றை துளக்குறு தரக்குழுவு தோன்றியது போன்ற விளக்கழல் நிகர்த்துள விரிந்தமுகை யெல்லாம். 192 செருப்புகு சினத்தெதிர் செறுத்தமத வெற்பின் மருப்பின் ஒசிப்பவன் வரத்தினியல் காணா விருப்பமலி வுற்றதன் விழித்தொகைகள் எங்கும் பரப்பிய நிகர்த்துள பயங்ககெழுவு பைங்காய். 193 வௌ¢ளிபடு கின்றமதி விண்படர் விமானங் கள்ளிபடு பால்கெழு கவட்டினிடை தேய்ப்பத் துள்ளிபடு கின்றளவி லோர்திவலை தொத்தப் புள்ளிபடு மாறுமுயல் என்பர் புவிமேலோர். 194 காவதமொ ரேழுள பராரை கணிப்பின்றால் தாவறும் உயர்ச்சியத னுக்குமதி சான்றே பூவுலகம் எங்குநிழல் போக்கிநெடி தோம்புங் கோவதென நின்றதுயர் கோளியெனுங் குன்றம். 195 அவ்வகைய தாருவினை நோக்கினன் அணைந்தான் பவ்வநிற வண்ணல் துயில் பாசடை கள்தம்மோ டெவ்வகை கமத்திரென வேவினவ என்றே வெவ்வரவி னுக்கிறைவன் மேவியது மான. 196 அந்தமில் பெருங்கடல் வளாகம்அனைத் துந்தன் உந்தியில் அடைந்ததென ஓங்கல்கெழும் ஔ¢வாள் வந்துறை யினிற்புகுவ தென்ன வடதாருப் பொந்தினிடை யேயணுகி னான்உலகு பூத்தோன். 197 (190. வெம்பணிகள் - கொடிய பாம்புகள். தம்பதி - பாதாளம். 191. கட்செவி - கண்ணே காதாக உடையது; பாம்பு. புனிறு - இளமை. 192. கவடு - பெருங்கிளை. முகை - மொட்டு. 193. பயம் - பால். கெழுவு - பொருந்திய. 194. கள்ளிபடு - கள்ளியிலும் அதிகமாக உண்டாகின்ற. தொத்த - பட. முயல் - முயல் என்னும் களங்கம். 195. மதிசான்று என்றது ஆல மரக்கிளைகள் சந்திர மண்டலத்தை முட்டியதை. கோ - இறைவன். அது : பகுதிப்பொருள் விகுதி. கோளி - ஆலமரம். 196. நோக்கினன் - நோக்கி. வினவஎன்றே - வினவி அறிதற்கு என்றே. அரவினுக்கு இறைவன் - ஆதிசேடன். 197. உந்தியில் - வயிற்றில். ஓங்கல் - உயர்ந்த. வாள் - வாட்படை. ஓங்கல் கெழும் ஔ¢வாள் வந்துறையினில் புகுவதென்ன - உதயி கிரியில் உதித்து விளங்கிய சூரியன் சென்று கடலுள் புகுந்தாற்போல எனவும் பொருள்கொள்ளலாம்.) சத்தியுரை யால்அரி தனிப்பணிய தான இத்திறமி சைத்தனம் இனிச்சுரரை வாட்டும் அத்திமுக வெய்யவனை ஆதியருள் செய்யும் வித்தக முதற்புதல்வன் வென்றமை உரைப்பாம். 198 வேறு முந்து வேழ முகத்தவன் ஏவலால் நொந்து சிந்தை நுணங்கிய தேவரும் இந்தி ராதிபர் யாவரும் ஐங்கரன் வந்த தோர்ந்து மகிழச்சியின் மேயினார். 199 ஏத மில்மகிழ் வெய்திய இந்திரன் ஆதி யோர்கயி லாயத் தணுகியே போத கத்துப் புகர்முகப் புங்கவன் பாத முற்றுப் பணிந்து பரவினார். 200 பரவல் செய்திடுக பான்மையை நோக்கியே கருணை செய்த கயமுகத் தெம்பிரான் உரையும் நுங்கட் குறுகுறை என்றலும் வரன்மு றைப்பட வாசவன் கூறுவான். 201 தொல்லை நாண்மதி சூடிய சோதிபால் எல்லை நீங்கும் வரந்தனை எய்தினான் கல்லென் வெஞ்சொற் கயாசுரன் என்பவன் அல்லல் செய்தனன் ஆற்றவும் எங்களை. 202 பின்னும் நங்களைப் பீடற வைகலுந் தன்னை வந்தனை செய்யவுஞ் சாற்றினான் அன்ன செய்தனம் அன்றியும் எங்கள் பால் மன்ன வேபுதி தொன்று வகுத்தனன். 203 கிட்டித் தன்முன் கிடைத்துழி நெற்றியிற் குட்டிக் கொண்டு குழையிணை யிற்கரந் தொட்டுத் தாழ்ந்தெழச் சொற்றனன் ஆங்கதும் பட்டுப் பட்டுப் பழியிடை மூழ்கினேம். 204 கறுத்து மற்றவன் கட்டுரைக் கின்றசொல் மறுத்த லஞ்சி வரும்பழி தன்னையும் பொறுத்து நாணமும் போகஇன் றந்தமுஞ் சிறப்பி லாவச் சிறுதொழில் செய்தனம். 205 (198. சத்தி உரை - தேவியின் சாபமொழி. ஆதி - சிவன். விததக முதற்புதல்வன் - ஞானவடிவினனாகிய விநாயகன். 199. ஐங்கரன் - விநாயகன். 200. போதகம் - இளமை. புகர் - புள்ளி. 204. கிடைத்துழி - அடைந்தபோது. குழைஇணை - இரு காது.) ஆங்க வன்தன் தாவியொ டெங்குறை நீங்கு வித்திட நீவரு வாயென ஓங்கல் நல்கும் உமையவள் தன்னொரு பாங்கர் வைகும் பராபரன் கூறினான். 206 ஆத லால்நின் னடைந்தனம் எம்முடை ஏத மாற்றுதி என்று வழிபடீஇ மோத காதிகள் முன்னுற வார்த்திடப் பூத நாதன் அருளில் புகலுவான். 207 அஞ்சல் அஞ்சல் அவுணர்க் கரசனாம் விஞ்சு வேழ முகமுடை வீரனைத் துஞ்சு வித்துந் துயர்தவிர்ப் போமெனாக் குஞ்ச ரத்திரு மாமுகன் கூறவே. 208 இறைவ னோடும் இமையவர் எம்முடைச் சிறுமை நீங்கின செல்லலும் நீங்கின மறுமை இன்பமும் வந்தன வால்இனிப் பெறுவ தொன்றுள தோவெனப் பேசினார். 209 வேறு துன்பினை உழந்திடு சுரர்கள் இவ்வகை இன்புறு காலையில் ஈசன் தந்திடும் அன்புடை முன்னவன் ஆனை மாமுக முன்பனை யடுவது முன்னி னானரோ. 210 பொருக்கெனத் தவிசினின் றெழுந்து பூதர்கள் நெருக்குறு வாய்தலின் எய்தி நீள்கதிர் அருக்கனின் இலகிய அசலன் என்பவன் தருக்கிய புயத்தின்மேற் சரண்வைத் தேறினான். 211 ஏறியங் கசலன்மே லிருந்து செல்லுழிக் காறொடர் முகிலினங் கவைஇய காட்சிபோல் மாறில்வெம் பூதர்கள் வந்து சுற்றியே கூறினர் அவன்புகழ் குலாய கொள்கையார். 212 சாமரை வீசினர் தணப்பில் பன்மணிக் காமரு தண்ணிழல் கவிகை ஏந்தினர் பூமரு மதுமலர் பொழிதல் மேயினர் ஏமரு பூதரில் எண்ணி லோர்களே. 213 துடியொடு சல்லரி தோமில் தண்ணுமை கடிபடு கரடிகை கணையம் சல்லிகை இடியுறழ் பேரிகை இரலை காகளங் குடமுழ வியம்பினர் கோடி சாரதர். 214 (206. ஓங்கல் - இமயமலை. 207. ஏதம் - துன்பம். மோதகாதிகள் - மோதகம் முதலியபொருள்கள். 208. துஞ்சுவித்து - இறக்கச்செய்து. 210. முன்னவன் - விநாயகப்பெருமான். 211. அசலன் - பூதகணங்களில் ஒருவன். 213. ஏமரு - மகிழ்வுற்ற. 214. துடி - உடுக்கை. தோம்இல் - குற்றமில்லாத. தண்ணுமை - மத்தளம். இரலை, ஊதுகொம்பு, சல்லரி, கரடிகை, கணையம், சல்லிகை காகளம் குட முழவு - இவைகள் வாத்திய வகைகள்.) சிந்தையில் உன்னினர் தீமை தீர்ப்பவன் வந்திடு காலையின் மகத்தின் வேந்தனும் அந்தர அமரரும் அடைந்து போற்றியே புந்திகொள் உவகையால் போதல் மேயினார். 215 தாருவின் நறுமலர் தத்தங் கைகொடு பேரருள் நுதல்விழிப் பிள்ளை மீமிசை சேருற வீசியே புடையிற் சென்றனர் காரினை யடைதரு கடவுள் வில்லென. 216 விரைந்தெழு சாரத வௌ¢ளம் எண்ணில நிரந்தன சூழ்தர நிமலன் மாமகன் பெருந்தரை ஏகியே பிறங்கு தோல்முகன் புரந்திடு மதங்கமா புரமுன் போயினான். 217 ஆயது கயமுகத் தவுணர் கோடியே வேயினர் புகறலும் வெகுட்சி கொண்டெழீஇ ஏயதன் படையெலாம் எடுத்து மற்றவன் சேயுயர் தனதுபொற் றேரில் ஏறினான். 218 பல்லியம் இயம்பின பரிகள் சுற்றின சில்லிகொள் ஆழியந் தேர்கள் சூழ்ந்தன எல்லையில் இபநிரை யாவும் மொய்த்தன வல்லியல் அவுணர்கள் வரம்பின் றீண்டினார். 219 ஆயிர வௌ¢ளமாம் அனிகஞ் சுற்றிடக் காய்கனல் விழியுடைக் கயமு காசுரன் ஏயெனும் அளவையில் ஏகிக் கண்ணுதல் நாயகன் மதலைதன் படைமுன் நண்ணினான். 220 நண்ணிய காலையின் நவையில் பூதரும் அண்ணலங் கழலடி அவுண ருங்கெழீஇப் பண்ணினர் பெருஞசமர் படையின் வன்மையால் விண்ணவர் யாவரும் வியந்து நோக்கவே. 221 புதிதெழு வெயிலுடன் பொங்கு பேரிருள் எதிர்பொரு மாறுபோல் இனங்கொள் தானவர் அதிர்கழற் பூதரோ டமர்செய் தாற்றலர் கதுமென அழிந்தனர் கலங்கி ஓடினார். 222 ஓடினர் அளப்பிலர் உயிரைச் சிந்தியே வீடினர் அளப்பிலர் மெய்கு றைந்துபின் ஆடினர் அளப்பிலர் அகலு தற்கிடந் தேடினர் அளப்பிலர் தியக்கம் எய்தினார். 223 (216. கடவுள்வில் - இந்திரவில். 218. வேயினர் - ஒற்றர். சேய் - செவ்விய. 219. சில்லிகொள் - தகடுகள் பதித்த. 223. தியக்கம் - கலக்கம்.) ஒழிந்தன கரிபரி உலப்பில் தேர்நிரை அழிந்தன இத்திறம் அவுணர் தம்படை குழிந்திடு கண்ணுடைக் குறள்வெம் பூதர்கள் மொழிந்திட அரியதோர் விசய முற்றினா£¢. 224 உயர்தரு தானவர் உடைந்த தன்மையும் புயவலி கொண்டுள பூதர் யாவருஞ் சயமுடன் மேல்வரு தகவு நோக்கியே கயமுக அவுணர்கோன் கனலிற் சீறினான். 225 உளத்தினில் வெகுண்டுசென் றொருதன் கைக்சிலை வளைத்தனன் அத்துணை வளைத்துப் பேரமர் விளைத்தனர் பூதர்கள் அனையர் மெய்யெலாந் துளைத்தனன் கணைமழை சொரிந்து துண்ணென. 226 அரந்தெறு பகழிகள் ஆகம் போழ்தலும் வருந்தினர் திறலொடு வன்மை நீங்கினர் இரிந்தனர் பூதர்கள் யாரும் ஓடினார் புரந்தரன் இமையவர் பொருமல் எய்தவே. 227 கணநிரை சாய்தலுங் கண்டு மற்றது மணிகிளர் கிம்புரி மருப்பு மாமுகன் இணையறும் அசலன்மேல் ஏகி வல்லையில் அணுகினன் இபமுகத் தவுணர் கோனையே. 228 காருடை இபமுகக் கடவுள் மேலையோன் ஏருற வருதலும் நின்ற தூதரைச் சீருறு கயமுகத் தீயன் நோக்கியே யாரிவண் பொருவதற் கணுகுற் றானென. 229 பரவிய ஒற்றர்கள் பணைம ருப்புடைக் காரிமுக முடையன்முக் கண்ணன் ஐங்கரன் உருகெழு பூதன்மேல் உறுகின் றான்சிவன் பெருமக னாகும்இப் பிள்ளைதான் என்றார். 230 அன்னது கேட்டலும் அவணன் சீறியே பன்னருங் கலைதெரி பாகை நோக்கிநம் பொன்னி ரதத்தினை புழைக்கை மாமுகன் முன்னுறக் கடவுதி மொய்ம்ப என்னவே. 231 கேட்டிடு கலவையோன் கிஞ்சு கக்குரத் தாட்டிறற் பரியினந் தன்னின் மத்திகை காட்டினன் தவறிலாக் கனகத் தேரினை ஓட்டினன் ஐங்கரத் தொருவன் முன்னுற. 232 (224. குறள் - குறுகிய. விசயம் - வெற்றி. 227. அரம்தெறு - அரத்தால் கூராக்கிய. ஆகம் - உடல். 228. கிம்புரி - பூண். 230. பணை - பருமை. 231. கடவுதி - செலுத்து வாயாக.) ஆயிடைக் கரிமுகத் தவுணன் ஐங்கரத் தூயனை யழல்விழ சுழல நோக்கியே காயெரி எயிறுகக் கறைகொள் பற்களால் சேயிதழ் அதுக்கியே இனைய செப்புவான். 233 நுந்தையென் மாதவம் நோக்கி முன்னரே தந்திடு பெருவரந் தன்னைத் தேர்கிலை உய்ந்தனை போதிநின் னுயிர்கொண் டென்னெதிர் வந்தனை இறையது மதியி லாய்கொலோ. 234 அன்றிநீ யமர்செய அமைதி யென்னினும் வன்றிறல் உனக்கிலை மைந்த என்னெதிர் பொன்றினர் அல்லது போர்செய் தென்னைமுன் வென்றவர் இவரென விளம்ப வல்லையோ. 235 தேன்பெறு தருநிழல் திருவின் வைகிய வான்பெறு தேவரால் மக்க ளாலவர் ஊன்பெறு படைகளால் ஒழிந்தி டேன்இது நான்பெறு வரத்தியல் நவிலக் கேட்டியேல். 236 பின்னரும் பலவுள பெற்ற தொல்வரம் என்னைவெல் பவர்எவர் இந்தி ராதிபர் தன்னிடர் தணிப்பவர் போலச் சார்ந்தனை உன்னைவென் றன்னவர் உயிரும் உண்பனால். 237 பொருதெனை வென்றனை போக வல்லையேல் வருதியென் றுரைத்தலும் வானு லாவிய புரமெரி படுத்தவன் புதல்வன் அவ்விடை அருளுட னொருமொழி அறைவ தாயினான். 238 வேறு நிரந்தபல் படையும் நாளும் நிலைபெற நினக்குத் தொன்னாள் வரந்தரு கின்ற எந்தை வல்லைநின் னுயிரை வவ்விப் புரந்தரன் முதவி னோர்க்குப் பொன்னினா டுதவி அன்னார் அரந்தையும் அகற்றிச் செல்கென் றருளினன் எனக்கும் அன்றே. 239 உன்னுயிர் காத்தி என்னின் உறுதியொன் றுரைப்பன் கேண்மோ பொன்னக ரதனை இந்தப் புரந்தரன் புரக்க நல்கி இந்நிலத் தரசு செய்தே இருத்திய· திசையா தென்னின் நின்னுயிர் முடிப்பான் நேர்ந்து நின்றனன் இனைவென் னென்றான். 240 (232. வலவையோன் - சாரதி. கிஞ்சுகம் - செந்நிறம். 234. நுந்தை - உனது தந்தை. இறையது - சிறிதும். 236. ஊன் - மாமிசம். படை - ஆயுதம். 239. நிரந்த - வரிசையான. எந்தை - சிவன். அரந்தை - துன்பம்.) என்னலும் அவுணன் பொங்கி எரியுக விழிழிழிழித்துச் சென்றோர் பொன்னெடுஞ் சிலையை வாங்கிப் பொருக்கெனப் புரிநாண் ஏற்றி மின்னுடை வடிம்பின் வாளி வீசலும் விமலன் நல்கும் முன்னவன் எழுவொன் றேந்தி முரணொடு சிந்தி நின்றான். 241 பொற்றனு முரிந்து வீழப புழைக்கையிற் பிடித்த தண்டால் எற்றினன் அனைய காலை இபமுகத் தசுரன் என்போன் மற்றொரு சிலையைக் கையால் வாங்கினன் வாங்கு முன்னர்ச் செற்றனன் அதனை மைந்தன் திசைமுகன் முதலோர் ஆர்ப்ப. 242 திண்டிறல் பெற்ற வீரச் சிலைமுரிந் திட்ட பின்னர்த் தண்டமொன் றேந்தி ஈசன் தனயனோ டெதிர்த லோடும் விண்டது சோரும் வண்ணம் வெய்தெனப் புடைத்து மாயாக் கண்டகன் உரத்தில் தாக்கக் கையற வெய்தி நின்றான். 243 நடுங்கினன் சிந்தை ஒன்று நவில்கிலன் நாணத் தாலே ஒடுங்கினன் கயவெஞ் சூரன் உலந்தனன் போல நின்றான் அடும்பரி களிறு திண்டேர் அணிகெழு தானை பாரிற் படும்படி நினைந்து முன்னோன் பாரம்ஒன் றுய்த்தான் அன்றே. 244 விட்டவெம் பாசம் அங்கண் வெய்யதோர் சேனை முற்றுங் கட்டிய தாக மைந்தன் கணிச்சியும் அதற்பின் ஏவ அட்டதால் அதனை நோக்கி ஆடினர் அமரர் தானை பட்டன உணர்ந்து தீயோன் பதைபதைத் துயிர்த்து நொந்தான். 245 முந்துதன் கரத்தி லுள்ள முரண்கெழு படைகள் யாவுஞ் சிந்தினன் அவைகள் எல்லாஞ் சேர்ந்தன திங்கள் சூடும் எந்தையை வலஞ்செய் தேத்தி ஏவலின் இயன்ற மாதோ வெந்திறல் அவுணன் மேன்மேல் வெகுளித்தீக் கனல நின்றான். 246 நின்றவன் தன்னை நோக்கி நெடியபல் படைகள் ஏவில் சென்றிவன் தன்னைக் கொல்லா சிவனருள் வரத்தின் சீரால் இன்றினிச் செய்வ தென்னென் றிறைவரை உன்னி எந்தை யூன்றிருக் கோட்டில் ஒன்று தடக்கையின் முரித்துக் கொண்டான். 247 தடக்கையி லேந்து கோட்டைத் தந்தியாம் அவுணன் மீது விடுத்தலும் அனையன் மார்வை வெய்தெனக் கீண்டு போகி உடல்படி மிசையே வீழ்த்தி ஒல்லையில் ஓடித் தெண்ணீர்க் கடல