|
Home > Scriptures & Stotras > Tamil scriptures and literature > kandha purANam
kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
5. தக்ஷ காண்டம்
***
11. சா லை செ ய் ப ட ல ம்
அன்றுமுன் னாகவே அளப்பில் காலமா
ஒன்றுமவ் வேள்வியில் ஓம்பு கின்றிலர்
துன்றிய முனிவருஞ் சுரரும் பார்தனில்
முன்றிகழ் அந்தணர் முதலி னோர்களும். 1
ஓர்ந்தனன் அன்னதை ஊழின் தீநெறி
சார்ந்திடு தக்கன்ஓர் வைகல் தன்முனஞ்
சேர்ந்திடும் இமையவர் திறத்தை நோக்கியே
ஈர்ந்திடு தீயதொன் றியம்பு கின்றனன். 2
எடுத்திடு சுருதியின் இயற்கை முற்றுற
வடித்திடு தேவிர்காள் வரம்பில் காலமா
அடுத்திடும் வேள்விய தாற்றல் இன்றியே
விடுத்ததென் அனையது விளம்பு வீரென்றான். 3
வேறு
எய்யாது வெய்ய வினையீட்டு தக்கன் இவைசெப்ப லோடும் இமையோர்
மெய்யார ணத்தன் முதனாள் இயற்று வேள்விக் களத்தில் அவியூண்
ஐயான னத்தர் பெறநல்கல் என்றி அதனாலும் நந்தி யடிகள்
பொய்யாத சாப உரையாலும் யாங்கள் புரியாதி ருத்து மெனவே. 4
அந்நாளில் ஈசன் விடுகின்ற நந்தி அறைகின்ற சாபம் அதனுக்
கிந்நாளும் அஞ்சி மகவேள்வி தன்னில் யாதுஞ்செ யாது திரிவீர்
முன்னாக யானொர் பெருமா மகத்தை முறைசெய்வன் முற்றி இடுமேல்
பின்னாக நீவிர் புரிமின்க ளென்று பீடில்ல வன்பு கலவே. 5
நீமுன்னொர் வேள்வி புரிகின்ற தைய நெறியென்றி சைப்ப அவரைப்
போமின்கள் யாரும் எனவேபு கன்று புரிதோறு மேவி மிகவும்
ஏமங்கொள் சிந்தை யுளதக்கன் ஊழின் இயல்பால்அ தற்பின் ஒருநாள்
ஓமஞ்செய் வேள்வி புரிவான்வி ரும்பி உள்ளத்தில் உன்னி முயல்வான்.6
தொட்டாம னுத்தொல் மயனைத் தனாது சுதரென்ன முன்னம் உதவிக்
கட்டாம ரைக்குள் விதிபோல நல்கு கலைகற்று ளானை விளியா
முட்டாத வேள்வி யதுவொன்று செய்வன் முனிவோர்கள் தேவர் உறைவான்
எட்டாத வெல்லை தனில்இன்றொர் சாலை இயல்பால்வி தித்தி எனவே.7
(1. அன்று - நந்தியம் பெருமாள் சபித்த காலம்.
4. நல்கல் - அளிக்காதே. என்றி - என்றனை.
5. பீடில்லவன் - பெருமையற்ற தக்கன். 6. ஏமம் - இறுமாப்பு.
7. தொட்டா மனு மயன் - துவட்டா, மனு, மயன் என்போர்;
இவர்கள் விசுவகன்மாக்கள். தனாது சுதர் - தன்னுடைய புதல்வர்கள்.)
வேறு
இனிதென இறைஞ்சியே ஏகிக் கங்கையம்
புனனதி அதனொரு புடைய தாகிய
கனகலம் என்பதோர் கவின்கொள் வைப்பிடை
வினைபுரி கம்மியன் விதித்தல் மேயினான். 8
பத்துநூ றியோசனைப் பரப்பும் நீளமும்
ஒத்திடும் வகையதா ஒல்லை நாடியே
வித்தக வன்மையால் வேள்விக் கோரரண்
அத்தகு பொழுதினில் அமைத்து நல்கினான். 9
நாற்றிசை மருங்கினும் நான்கு கோபுரம்
வீற்றுவீற் றுதவிய வியன்கொள் நொச்சியில்
ஏற்றிடு ஞாயில்கள் இயற்றி அன்னதை
ஆற்றலை யுடையதோ ரரணம் ஆக்கினான். 10
உள்ளுற அணங்கினர் அறைதற் கோரிடை
தௌ¢ளிதின் நல்கியே தேவர் தம்மொடு
வள்ளுறை வேற்கணார் மருவி ஆடுவான்
புள்ளுறை வாவியும் பொழிதலும் ஆக்கினான். 11
அப்பரி சமைத்துமேல் அமரர் வேதியர்
எப்பரி சனரும்வந் தீண்டி வெ·கின
துய்ப்பதற் கொத்திடு சுவைகொள் தீம்பதம்
வைப்பதோர் இருக்கையும் மரபில் தந்தனன். 12
அந்தண ராதியோர் அமரர் யாவரும்
வந்துண வருந்துவான் வரமபில் சாலைகள்
இந்திர வுலகென இமைப்பில் ஈந்தனன்
முந்தையின் மகவிதி முழுதும் நாடினான். 13
விருந்தினர் பெற்றிட விரைமென் பாளிதம்
நரந்தமொ டாரம்வீ நறைகொள் மான்மதம்
அருந்துறு வௌ¢ளடை ஆன பாகிவை
இருந்திடு சாலையும் இயற்றி னானரோ. 14
ஆனபல் வகையுடை ஆடை செய்யபூண்
மேனதொர் அம்பொனின் வியன்கொள் குப்பைகள்
ஏனைய வெறுக்கைகள் மணிகள் யாவையுந்
தானம தியற்றிடத் தானம் நல்கினான். 15
கடிகெழு சததளக் கமல மேலுறை
அடிகள்தன் நகர்கொலென் றையஞ் செய்திட
நடைதரு வேள்விசெய் நலங்கொள் சாலைய
திடையுற அமைத்தனன் யாரும் போற்றவே. 16
(8. கனகலம் - கங்கையின் அருகுள்ள ஓர் இடம்.
9. வித்தக வன்மை - கல்வித் திறம். 10. நொச்சி - மதில்.
ஞாயில் - மதிலுறுப்பு.
11. வள் - கூர்மை. 14. பாளிதம் - பாற்சோறு. ஆரம் - சந்தனம்.
நரந்தம் - வாசனைப் பொருள். வீ - மலர். மான்மதம் - கஸ்தூரி.
வௌ¢ளடையான பாகு - வெற்றிலைப் பாக்கு.)
நூறெனும் யோசனை நுவலும் எல்லையின்
மாறகல் சாலையின் வன்னி சேர்தரக்
கூறிய மூவகைக் குண்டம் வேதிகை
வேறுள பரிசெலாம் விதித்தல் செய்தனன். 17
மேலொடு கீழ்புடை வெறுக்கை யின்மிசைக்
கோலநன் மணிகளாற் குயிற்றி வாவியுஞ்
சோலையும் பறவையுந் தோமில் தேவரும்
போலிய ஓவியம் புனைந்திட் டானரோ. 18
புண்டரீ காசனம் பொருந்து நான்முகன்
தண்டுள வோன்இவர் தமக்கி ருக்கையும்
எண்டிசை வாணருக் கியலி ருக்கையும்
அண்டருக் கிருக்கையும் அருளல் செய்துமேல். 19
தொக்குறு முனிவரர் தொல்லை வேதியர்
ஒக்கலின் மேயினர் உறையி ருக்கையுந்
தக்கனுக் கிருக்கையுஞ் சமைத்து நல்கினான்
வைக்குறு தவிசின்நூன் மரபின் நாடியே. 20
தக்கனை வணங்கிநின் சாலை முற்றிய
புக்கனை காண்கெனப் புனைவன் செப்பலும்
அக்கண மதுதெரிந் தளவி லாதர
மிக்கனன் மகிழ்ந்தனன் விம்மி தத்தினான். 21
பூங்கம லத்தமர் புனிதன் கான்முளை
பாங்கரின் முனிவரில் பலரைக் கூவியே
தீங்கனல் மாமகஞ் செய்ய நூன்முறை
யாங்கனம் வலித்தனன் அவர்க்குச் செப்புவான். 22
தருவுறு சமிதைகள் சாகை தண்ணடை
பரிதிகள் மதலைநாண் பறப்பை பல்பசு
அரணிநன் முதிரைகள் ஆதி யாவிதற்
குரியன உய்த்திரென் றொல்லை ஏவினான். 23
ஆனொடு நிதிகளை மணியை ஐந்தருக்
கானினை அழைத்துநம் மகத்தைக் காணிய
மாநிலத் தந்தணா¢ வருவர் உண்டியும்
ஏனைய பொருள்களும் ஈமென் றோதினான். 24
(17. மூவகைக் குண்டம் - சதுரம், வட்டம், கோணம் என்னும் முத்திற
அமைப்பான ஓம குண்டங்கள்.
19. எண்டிசை வாணர் - அட்ட திக்குப் பாலகர்.
20. ஒக்கல் - சுற்றத்தார். 22. கான்முளை - புதல்வன்.
23. சாகை - கிளைகள். தண்ணடை - பச்சிலைகள்.
பரிதிகள் - யாக மேடைகள். மதலை - யூபஸ்தம்பங்கள்.
நாண் - தருப்பைக் கயிறு. பறப்பை - சிருக்கு சிருவம்.
பல்பசு - ஆடு முதலிய பசுக்கள். அரணி - தீக்கடைக்கோல்.
24. ஆன் - காமதேனு. ரூதி - சங்கநிதி, பதுமநிதி. மணி - சிந்தாமணி.
தரு - கற்பகத்தரு.)
நல்விடை கொண்டுபோய் நவையி லான்முதற்
பல்வகை யவையெலாம் படா¢ந்து வீற்றுவீற்
றொல்வதோ ரிடந்தொறும் உற்ற ஆயிடைச்
செல்வதோர் பொருளெலாஞ் சிறப்பின் நல்கவே. 25
தனதுறு கிளைஞராய்த் தணப்பி லாததோர்
முனிவரர் தங்களின் முப்ப தாயிரர்
துனியறு வோர்தமைச் சொன்றி ஏனவை
அனைவரும் விருப்புற அளித்தி ரென்றனன். 26
மற்றவர்க் கிருதிற மாத வத்தரை
உற்றனர் யாவரும் உண்டி அன்றியே
சொற்றன யாவையுந் தொலைவின் றீமென
நற்றவத் தயன்மகன் நயப்புற் றேவினான். 27
தீதினை நன்றெனத் தௌ¤யும் நான்முகன்
காதலன் ஓர்மகங் கடிதி யற்றுவான்
வேதியர் விண்ணவர் யாரும் மேவுவான்
தூதரை நோக்கியே இனைய சொல்லுவான். 28
நக்கனை யல்லதோர் நாகர் தங்களை
மிக்குறு முனிவரை வேத மாந்தரைத்
திக்கொடு வான்புவி யாண்டுஞ் சென்றுகூய்
உய்க்குதி ராலென உரைத்துத் தூண்டினான். 29
முந்துற வரித்திடும் முனிவர் அவ்வழித்
தந்தனர் மகஞ்செயத் தகுவ யாவையும்
வந்தன நோக்கியே மரபில் உய்த்திரென்
றெந்தைதன் அருளிலான் இயம்பி னானரோ. 30
வரித்திடு பான்மையின் வழாது போற்றிடும்
இருத்தினர் தமிற்பலர் யாக சாலையுள்
திருத்திய வேதிவாய்ச் செறிபல் பண்டமும்
நிரைத்தனர் பறப்பையும் நிலையிற் சேர்த்தினார். 31
அசைவறு வேதியின் அணித்தி னோரிடை
வசைதவிர் மதலைகள் மரபின் நாட்டுபு
பசுநிரை யாத்தனர் பாசங் கொண்டுபின்
இசைதரு பூசையும் இயல்பின் ஆற்றினார். 32
(26. துனி - துன்பம். சொன்றி - சோறு. 29. நாகர் தேவர்கள்.)
வேறு
நடையிது நிகழும் வேலை நலமிலாத் தக்கன் நல்கும்
விடைதலைக் கொண்டு போய வியன்பெருந் தூதர் தம்மில்
புடவியின் மறையோர்க் கெல்லாம் புகன்றனர்சிலவர் வெய்யோன்
உடுபதி நாள்கோள் முன்னர் உரைத்தனர் சிலவா¢ அன்றே. 33
காவல ராகி வைகுங் கந்தரு வத்த ராதி
ஆவதோர் திறத்தோர்க் கெல்லாம் இறைந்தனர் சிலவர் ஆசை
மேவிய கடவு ளோர்க்கும் விளம்பினர் சிலவர் முப்பால்
தேவா¢கள் யாருங் கேட்பச் செப்பினர் சிலவ ரன்றே. 34
விண்ணக முதல்வ னுககு விளம்பினர் சிலவர் ஆண்டு
நண்ணிய தேவர்க் கெல்லாம் நவின்றனர் சிலவர் மேலைப்
புண்ணிய முனிவ ரர்க்குப் புகன்றனர் சிலவர் ஏனைப்
பண்ணவர் முன்னஞ் சென்று பகர்ந்தனர் சிலவர் அம்மா. 35
வானவர் முதுவன் தொல்லை மன்றன்மா நகரத் தெய்திக்
கோனகர் வாயில் நண்ணிக் குறுகினர் காப்போர் உய்ப்ப
மேனிறை காத லோடும் விரைந்தவற் றாழ்ந்து நின்சேய்
ஆனவன் வேள்விக் கேக அடிகள்என் றுரைத்தார் சில்லோர். 36
மேனகு சுடர்செய் தூய விண்டுல கதனை நண்ணி
மானிறை கின்ற கோயில் மணிக்கடை முன்னர் எய்திச்
சேனையந் தலைவன் உய்ப்பச் சீதரற் பணிந்து வேள்விப்
பான்மையை தியம்பி எந்தை வருகெனப் பகர்ந்தார் சில்லோ£¢. 37
மற்றது போழது தன்னில் மாயவன் எழுந்து மா£¢பூ
டுற்றிடு திருவும் பாரும் உடன்வர உவணர் கோமான்
பொற்றடந் தோள்மேற் கொண்டு போர்ப்படை காப்பத் தன்பாற்
பெற்றனர் சூழத் தானைப் பெருந்தகை பரவச் சென்றான். 38
செல்லலும் அதனை நாடித் திசைமுகக் கடவுள் அங்கண்
ஒல்லையில் எழுந்து முப்பால் ஒண்டொடி மாத ரோடும்
அல்லியங் கமலம் நீங்கி அன்னமேற் கொண்டு மைந்தர்
எல்லையில் முனிவர் யாரும் ஏத்தினர் சூழப் போந்தான். 39
மாலொடு பிரமன் ஈண்டி வருதலும் மகவான் என்போன்
வேலொடு வில்லும் வாளும் விண்ணவர் ஏந்திச் சூழ
நாலிரு மருப்பு வௌ¢ளை நாகம துயர்த்துத் தங்கள்
பாலுறை குரவ ரோடு பாகமார் விருப்பில் வந்தான். 40
ஆயவன் புரத்தில் வைகும் அரம்பையே முதலா வுள்ள
சேயிழை மார்கள் யாருந் தேவரோ டகன்றா£¢ எங்கள்
நாயகன் போந்தான் என்றே நலமிகு சசியென் பாளுந்
தூயதோர் மானத் தேறித் தோகையர் காப்பச் சென்றாள். 41
எண்டிசைக் காவலோரும் ஈரிரு திறத்த ரான
அண்டரும உடுக்கள் தாமும் ஆரிடத் தொகையு ளோரும்
வண்டுளர் குமுதம் போற்றும் மதியமும் ஏனைக் கோளும்
விண்டொடர் இயக்கர் சித்தர் விஞ்சையர் பிறரும் போந்தார். 42
(33. புடவி - பூமி. சிலவர் - சிலர். உடுபதி - சந்திரன்.
நாள் - நட்சத்திரம். கோள் - கிரகம்.
34. ஆசை - திக்கு. 37. சேனையந் தலைவன் - சேனாதிபதி.
38. திருவும் பாரும் - திருமகளும் பூமகளும். உவணர் கோமான் - கருடன்.
39. மைந்தர் - உபப்பிரமர். 40. குரவர் - வியாழன் முதலியோர்.
பாகம் - அவிர்ப்பாகம்.
42. ஈரிரு திறத்தரான அண்டர் - ஆதித்தர், உருத்திரர், வசுக்கள்,
மருத்துவர் என்னும் நால்வகை தேவர்கள்.
ஆரிடத்தொகை - முனிவர் குழாம்.)
சேணிடை மதியி னோடு செறிதரும் உடுக்க ளான
வாணுதல் மகளிர் யாரும் மகிழ்வொடு தந்தை வேள்வி
காணிய வந்தார் ஈது கண்ணுறீஇ அவுணர் கோமான்
சோணித புரத்துக் கேளிர் தொகையொடுந் தெடா¢ந்து சென்றான். 43
வனைகலன் நிலவு பொற்றோள் வாசவன் முதலா வுள்ள
இனையரும் பிறரும் எல்லாம் இருவர்தம் மருங்கும் ஈண்டிக்
கனகல வனத்திற் செய்த கடிமகச் சாலை எய்த
முனிவர ரோடுந் தக்கன் முன்னெதிர் கொண்டு நின்றான். 44
எதிர்கொடு மகிழ்ந்து மேலாம் இருவர்தங் களையும் அங்கண்
முதிர்தரு காத லோடு முறைமுறை தழுவி வானோர்
பதிமுத லோரை நோக்கிப் பரிவுசெய் தினையர் தம்மைக்
கதுமெனக் கொண்டு வேள்விக் கடிமனை இருக்கை புக்கான். 45
மாலயன் தன்னை முன்னவர் மணித்தவி சிருத்தி வான
மேலுறை மகவா னாதி விண்ணர் முனிவர் யார்க்கும்
ஏலுறு தவிசு நல்கி இடைப்பட இருந்தான் தக்கன்
காலுறு கடலா மென்னக் கடவுள்மா மறைக ளார்ப்ப. 46
அல்லியங் கமல மாதும் அம்புவி மகளும் வேதாப்
புல்லிய தெரிவை மாரும் பொருவிலா உடுவி னோருஞ்
சொல்லருஞ் சசியும் ஏனைச் சூரினர் பிறரும் வேத
வல்லிதன் இருக்கை நண்ணி மரபின்வீற் றிருந்தார் மன்னோ. 47
மாமலர்க் கடவுள் மைந்தன் மகத்தினை நாடி யாருங்
காமுறும் உண்டி மாந்திக் கதுமென மீடும் என்றே
பூமிசை மறையோர் தாமும் முனிவரும் போந்து விண்ணோர்
தாமுறும் அவையை நண்ணித் தகவினால் சார்த லோடும். 48
அழைத்திடப் போன தூதர் அனைவரும் போந்து தக்கன்
கழற்றுணை வணங்கி நிற்பக் கருணைசெய் தவரை நோக்கி
விழுத்தகு தவத்தீர் நீவிர் விளித்தனர் தமிலு றாது
பிழைத்தனர் உளரோ உண்டேல் மொழிமெனப் பேசல் உற்றார். 49
அகத்தியன் சனகன் முன்னோர் அத்திரி வசிட்டன் என்பான்
சகத்துயர் பிருகு மேலாந் ததீசிவெஞ் சாபத் தீயோன்
பகைத்திடு புலத்தை வென்ற பராசரன் இனைய பாலார்
மகத்தினை இகழா ஈண்டு வருகிலர் போலும் என்றார். 50
மற்றது புகல லோடு மலரயன் புதல்வன் கேளா
இற்றிது செய்தார் யாரே முனிவரில் இனையர் தாமோ
நெற்றியங் கண்ணி னார்க்கும் நேயம துடைய ரென்னாச்
செற்றமொ டுயிர்த்து நக்கான் தேவர்கள் யாரும் உட்க. 51
(43. சோணிதபுரம் - ஒரு நகரம். இ·து அசுரர்கள் இருக்கும் ஒரு நகரம்.)
ஆகத் திருவிருத்தம் - 454
- - -
12. த தீ சி ப் ப ட ல ம்
அன்ன வேலையில் ஆரிடர் தம்மொடுந்
துன்னி னானொரு தொல்லிறைக் காகவே
முன்ன மாலமர் மூண்டெழ மற்றவன்
தன்னை வென்ற ததீசிஎன் பானரோ. 1
கடிது போந்து கடிமகச் சாலையின்
இடைய தாகி இமையவர் யாவரும்
அடையும் எல்லை அணுகலுங் கண்ணுறீஇக்
கொடிய தக்கன் குறித்துணர் கின்றனன். 2
ஆகும் ஆகும் அரற்குரித் தல்லன்இப்
பாக மாமகம் பார்க்கும் பொருட்டினால்
ஏகி னானெனக் கஞசி எனாநினைந்
தோகை யெய்தி உளங்குளிர்ப் பாகியே. 3
வருக ஈண்டென மற்றவன் தன்னிடை
ஒருபெ ருந்தவி சுய்த்தலும் மாதவர்
இரும ருங்கும் இருந்திட ஆயிடைப்
பொருவின் மாதவப் புங்கவன் மேவியே. 4
ஆக்கந் தீரும் அயன்புதல் வன்தனை
நோக்கி எம்மை நொடித்ததென் நீயிவண்
ஊக்கி யுற்றதென் ஒல்லையில் யாவையும்
நீக்க மின்றி நிகழ்த்துதி யென்னவே. 5
தக்கன் ஆண்டுத் ததீசியை நோக்கியே
நக்க னென்பவன் நான்பெறுங் கன்னியை
மிக்க காதலின் வேட்டொளித் தோர்பகல்
உக்க மேலுய்த் துயர்வரை ஏகினான். 6
போய பின்னைப் புதல்விக்குத் தன்பெரு
மாயை செய்தனன் மற்றவர் தங்களை
ஆயு மாறவ் வகன்கிரி எய்தினேன்
ஏய தன்மை இருவருந் தேர்ந்தரோ. 7
அடுத்த பூதரை ஆங்கவர் கூவியே
தடுத்தி டுங்களத் தக்கனை நம்முனம்
விடுத்தி ரல்லிர் விலக்குதி ராலென
எடுத்தி யம்பினர் ஏயினர் போலுமால். 8
(1. ஆரிடர் - முனிவர்கள். தொல் - பழைய.
இறை- இங்குக் குபன் என்னும் அரசன்;
இக் குபன் என்னும் அரசனுக்காகப் போர் செய்த திருமாலைத் ததீசி
முனிவர் வென்றார் என்பது வரலாறு; இதன் விரிவை இந்நூலில் முன்னர்க் காண்க.
5. நொடித்தது - அழைத்தது. ஊக்குதல் - முயற்சித்தல்.
6. உக்கம் - இடபம். உயர்வரை - கயிலைமலை.)
இற்று ணர்ந்திலன் ஏகினன் பூதர்கள்
நிற்றி நீயென்று நிந்தனை எண்ணில
சொற்ற லோடுந் துணையதில் வௌ¢ளியம்
பொற்றை நீங்கிப் புரம்புகுந் தேனியான். 9
தங்கண் மாநகர் சார்ந்தனன் நீங்குழி
எங்கண் மாதும் எனைவந்து கண்டிலன்
மங்கை யென்செய்வள் மற்றவன் மாயையால்
துங்க மேன்மை துறந்தனள் போயினாள். 10
அந்த வேலை அரும்பெரும் வேள்வியொன்
றெந்தை செய்துழி யான்சென் றரற்குமுன்
தந்த பாகந் தடுத்தனன் அவ்வழி
நந்தி சாபம் நவின்றனன் போயினான். 11
வேறு
எறுழ்படு தண்ணுமை இயம்பு கையுடைச்
சிறுதொழில் லவன்மொழி தீச்சொற் கஞ்சியே
முறைபடு வேள்வியை முற்றச் செய்திலன்
குறையிடை நிறுவினன் குரவ னாகியோன். 12
நஞ்சமர் களன்அருள் நந்தி கூறிய
வெஞ்சொலும் என்பெரு விரத முந்தெரீஇ
அஞ்சினர் இன்றுகா றாரும் வேள்வியை
நெஞ்சினும் உன்னலர் நிகழ்த்தும் வேட்கையால். 13
ஆனதொர் செயலுணர்ந் தையம் ஏற்றிடும்
வானவன் தனக்கவி மாற்றும் பான்மையான்
நானொரு வேள்வியை நடாத்து கின்றனன்
ஏனைய தோர்பயன் யாதும் வேண்டலன். 14
அப்பெரு மகந்தனக் கமரர் மாதவர்
எப்பரி சனரும்வந் தீண்டு தொக்கனர்
ஒப்பருந் தவத்தினீர் உமக்கும் இத்திறஞ்
செப்பினன் விடுத்தனன் செயலி தென்னவே. 15
(9. இற்று - இதனை. 10. மாது - இங்கு மகள்.
11. எந்தை - என் தந்தையான பிரமன்.
12. எறுழ் - வலிமை. தண்ணுமை - மத்தளம். எறுழ் படு...
சிறுதொழிலவன் - நந்தியம் பெருமான். குரவனாகியோன் - பிரமன்.
14. ஐயம் ஏற்றிடும் வானவன் - சிவன்.)
வேறு
தண்ணளி புரித தீசி தக்கன துரையைக் கேளாப்
புண்ணியம் பயனின் றம்மா பொருளினிற் பவமே யென்னா
எண்ணினன் வினைக ளீட்டு இழிதகன் இயற்கை போலாம்
அண்ணல்தன் செயலும் என்னா அணியெயி றிலங்க நக்கான். 16
நக்கதோர் வேலை தன்னில் நலத்தகும் ஊழிக் கான்மேன்
மிக்கெழும் வடவை என்ன வெய்துயிர்த் துரப்பிச் சீறி
முக்கணன் அடியான் போலும் முறுவலித் திகழ்ந்தாய் என்னத்
தக்கனீ துரைத்த லோடுந் ததீசிமா முனிவன் சொல்வான். 17
மலரயன் முதலே யாக வரம்பிலா உயிரை முன்னந்
தலையளித் துதவு தாதையாய் அளித்து மாற்றி
உலகெலா மாகி ஒன்றாய் உயிர்க்குயி ராகி மேலாய்
இலகிய பரனை நீத்தோ யாகம்ஒன் றியற்ற நின்றாய். 18
புங்கவர் எவர்க்கும் நல்கும் புவிபுகழ் அறிகொள் வானும்
அங்கியின் முதலும் வேள்விக் கதிபனும் அளிக்கின் றானுஞ்
சங்கரன் தானே வேதஞ் சாற்றுமால் மகத்துக் காதி
இங்கொரு தேவுண் டென்னின் எழுகென உரைத்தி மாதோ. 19
மாலயன் முதலோர் யாரும் வரம்பிலித் திருவை எய்த
மேலைநாள் அளித்தோன் தானும் விமலனும் இனையர்க் கெல்லாம்
மூலமுந் தனக்கு வேறொர் முதலிலா தவனும் எங்கள்
ஆலமர் கடவுள் அன்றி அமரரில் யாவர் அம்மா. 20
தேவதே வன்மா தேவன் சிறப்புடை ஈசன் எங்கோன்
மூவரின் முதல்வன் ஏகன் முடிவிற்கு முடிவாய் நின்றோன்
ஆவியுள் ஆவி யானோன் அந்தண னாதி என்றே
ஏவரை யிசைத்த அம்மா எல்லையில் மறைக ளெல்லாம். 21
விதிமுறை லாகி உள்ளோர் வியனுயிர்த் தொகையாம் ஈசன்
பதியவன் பணிய தன்றே பரித்தனர் இனையர் எல்லாம்
இதுவுமச் சுருதி வாய்மை இவையெலாம் அயர்த்து வாளா
மதிமயங் கினையால் பேரா மாயையூ டழுந்து கின்றாய். 22
அந்தணர்க் காதி ஈசன் ஏனையோர்க் கரியே வேதா
இந்திரன் என்று வேதம் இயம்பிய மறையோர் தங்கண்
முந்தையின் முதலை நீத்து முறையகன் றொழுகல் பெற்ற
தந்தையை விலக்கி வேறு தேடுவான் தன்மை யன்றே. 23
ஆதலின் எவர்க்கும் மேலாம் ஆதியை இகழா நிற்றல்
பேதைமை யன்றி யீதோர் பெருமித மன்றால் ஆற்ற
நோதக உன்னி யாரே நோற்பவா¢ அனையை நீயே
வேதம தொழுக்கம் நீத்திவ் வேள்வியைப் புரிய நின்றாய். 24
விலக்கினை மறையின் வாய்மை வேள்விசெய் யினுமுற் றாது
கலக்குமேல் அமல னாணை காண்டியால் அவனுக் கஞ்சா
வலத்தினர் யாவ ருண்டேல் மாய்வரே மறையும் எம்முன்
இலைப்பொலி சூலம் ஏந்தும் ஏகனென் றேத்திற் றன்றே. 25
(16. வினைகள் - பாவச் செயல்கள். ஈட்டும் - செய்யும்.
17. ஊழிக்கால் - ஊழிக்காற்று. வடவை - வடவாமுகாக்கினி.
19. மகத்துக்கு ஆதி - யாகத்தலைவன்.
20. விமலன் - மலமற்றவன்; பரிசுத்தன். 21. ஏவரை - எவரை.
22. அயர்த்து - மறந்து. வாளா - வீணாக. பேரா - நீங்காத.
23. முந்தையின் முதலை - முழுமுதற் கடவுளாகிய சிவனை.)
ஆதியு முடிவும் இல்லா அமலனுக் கவியை நல்கி
வேதக முறைவ ழாது வேள்விஓம் புவது நாடாய்
தீதுநின் எண்ணம் என்னச் சிவன்தனச் கருள்பா கத்தை
மாதவன் தனக்கு நல்கி மாமகம் புரிவன் என்றான். 26
அவ்வுரை கொடியோன் கூற அருந்தவ முனிவன் கேளா
அவ்வமீது துரைத்தாய் மேலாய் யாவரும் புகழ நின்ற
செவ்வியர் தமையி ழித்துச் சிறியரை உயர்ச்சி செய்தல்
உய்வகை அன்றா னும்மோ ருயிர்க்கெலா முடிவீ தென்றான். 27
ஊறுசேர் தக்கன் சொல்வான் உனதுருத் திரனை ஒப்பார்
ஆறின்மே லைந்த வான உருத்திரர் அமர்வான் ஆசை
ஈறுசேர் தருமீ சானர் இருந்தனர் அவர்க்கே முன்னர்
வீறுசேர் அவியை நல்கி வேள்வியை முடிப்ப னென்றான். 28
என்னலும் முனிவன் சொல்வான் ஈறுசெய் தகில மெல்லாந்
தன்னிடை யொடுக்கி மீட்டுந் தாதையாய் நல்கி யாரு
முன்னருந் திறத்தில் வைகும் உருத்திர மூர்த்திக் கொப்போ
அன்னவன் வடிவும் பேரும் அவனருள் அதனாற் பெற்றோர். 29
உருத்திர மூர்த்தி என்போன் உயர்பரம் பொருளா யுள்ளே
நிருத்தம தியற்று கின்ற நித்தனாம் அவன்தன் பொற்றாள்
கருத்திடை நினைந்தோர் அன்னான் காயமுந் திருப்பேர் தானும்
பரிப்பரால் அனையர் எல்லை பகர்ந்திடின் உலப்பின் றாமால். 30
ஆதிதன் நாமம் பெற்றோர் அவனியல் அடையார் கொண்ட
ஏதமில் வடிவும் அற்றே என்னினும் இறைவ ரென்றே
பூதல முழுதும் விண்ணும் போற்றிட இருப்பர் இந்த
வேதனும் புகழு நீரான் மெய்ந்நெறித் தலைமை சார்வார். 31
ஈசனை அளப்பில் காலம் இதயமேல் உன்னி நோற்றே
ஆசக லுருவம் பெற்ற அன்பினர் போல்வர் இன்னோர்
வாசவன் முதலோர் போல வரத்தகார் எந்தை பால்நீ
நேசமில் லாத தன்மை நினைந்திலர் போலு மென்றான். 32
வேறு
என்ற காலை இருந்ததக் கன்னிது
நன்று நாரணன் நான்முகன் நிற்கஈ
றொன்று செய்யும் உருத்திர னாதியாய்
நின்ற தென்கொல் நிகழத்துதி யென்னவே. 33
விதிசி ரங்கள் வியன்முடி வேய்ந்திடும்
பதிசி வன்தன் பதத்துணை உட்கொடு
மதிசி றந்திட வாலிதின் வைகிய
ததீசி யென்னுந் தவமுனி சாற்றுவான். 34
(26. நாடாய் - கருதுகின்றிலை. 27. எவ்வம் - குற்றம்.
28. ஆறின் மேல் ஐந்து ஆன உருத்திரர் - ஏகாதச ருத்திரர்.
ஆசைஈறு - வடகிழக்குத் திசை.
32. உருவம் பெற்ற - சாரூபம் பெற்ற. 34. விதி சிரங்கள் -
பிரமர்களின் தலைகள். முடி - தலைமாலை.)
இருவர் தம்மொடும் எண்ணிய தன்மையால்
ஒருவ னான உருத்திர மூர்த்தியைப்
பெரியன் என்று பிடித்திலை அன்னதுந்
தெரிய ஓதுவன் தேர்ந்தனை கேட்டியால். 35
ஆதி யந்தமி லாதஎம் மண்ணலுக்
கோது பேரும் உருவுமொர் செய்கையும்
யாது மில்லையிவ் வாற்றினை எண்ணிலா
வேதம் யாவும் விளம்புந் துணிபினால். 36
அன்ன தோர்பரத் தண்ணல்தன் னாணையால்
முன்னை யாரிருள் மூடத்துண் மூழ்கிய
மன்னு யிர்த்தொகை வல்வினை நீக்குவான்
உன்னி யேதன்னு ளத்தருள் செய்துமேல். 37
உருவுஞ் செய்கையும் ஓங்கிய பேருமுன்
அருளி னாற்கொண்ட னைத்தையும் முன்புபோல்
தெரிய நல்கித் திசைமுக னாதியாஞ்
சுரர்கள் யாரையுந் தொன்முறை ஈந்துபின். 38
ஏற்ற தொல்பணி யாவும் இசைத்தவை
போற்று செய்கை புரிந்துபின் யாவையும்
மாற்று கின்றது மற்றெமக் காமெனச்
சாற்றி னான்அத் தகைமையுங் கேட்டிநீ. 39
வேறு
அந்தம் ஆதியின் றாகியே உயிரெலாம் அளிக்குந்
தந்தை யாகிய தனக்கன்றி முழுதடுந் தகைமை
மைந்த ராகிய அமரரான் முடிவுறா மையினால்
எந்தை தன்வயிற் கொண்டனன் ஈறுசெய் யியற்கை. 40
அன்று தேவர்கள் யாவரும் எம்பிரான் அடியில்
சென்று தாழ்ந்தெமக் கிப்பணி புரிந்தனை சிறியேம்
என்று தீருதும் இப்பரம் என்றலும் எங்கோன்
ஒன்று கூறுதுங் கேண்மினோ நீவிர்என் றுரைத்தான். 41
ஆயுள் மற்றுமக் கெத்துணை அத்துணை யளவு
நீயிர் இச்செயல் புரிமின்கள் பரமெ நினைந்தீர்
தூய வித்தையால் நீறுள தாக்கியே தொழுது
காய மேற்புனைந் தஞ்செழுத் துன்னுதிர் கருத்தின். 42
(37. தன்ஆணை - தனது அருட் சத்தி. 40. ஈறுசெய் இயற்கை -
சங்காரத் தொழில். 42. பரம் - பாரம்; சுமை. தூய வித்தையால் -
பரிசுத்தமான பஞ்சப்பிரம மந்திரங்களால். உன்னுதிர் - நினையுங்கள்.)
தன்மை யிங்கிவை புரிதிரேல் இத்தொழில் தரிக்கும்
வன்மை யெய்துவீர் அன்றிநங் கலைகணும் மருங்கு
தொன்மை யுள்ளன காட்டிநின் றருளுமால் தொலைவில்
நன்மை எய்துவீர் என்றருள் செய்தனன் நம்பன். 43
அன்ன வர்க்கொடே யெவ்வகைச் செய்கையும் அளித்துப்
பின்னை யுள்ளதோர் செய்கையும் புரியுமெம் பெருமான்
முன்னை வேதங்கள் அவன்தனை ஐந்தொழில் முதல்வன்
என்னும் மற்றிது தேருதி கேட்டியால் இன்னும். 44
வேறு
உருத்திரன் என்னும் நாமம் ஒப்பிலா அரற்கும் அன்னான்
தரத்தகு சிறார்கள் ஆனோர் தங்கட்கும் அனையன் பாதங்
கருத்திடை உன்னிப் போற்றுங் கணங்கட்கும் அவன்றன் மேனி
பரித்திடு வோர்க்குஞ் செந்தீப் பண்ணவன் தனக்கும் ஆமால். 45
இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்
அன்னவன் தரவந் தோர்க்கும் அடியடைந் தோர்க்கும் அன்னான்
தன்னுரு வெய்தி னோர்க்குஞ் சார்ந்ததால் அவன்த னிப்பேர். 46
செந்தழ லென்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர்
வந்தது புகல்வன் கேட்டி வானவன் யாரும் ஈண்டி
முந்தையில் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல
அந்தமில் நிதியந் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார். 47
பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலால் கனல்பால் வைத்துச்
செற்றலர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர்
உற்றுழி அதுகொ டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ
மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையுங் கூறும். 48
ஓதுமா மறைகள் தம்மில் உருத்திரன் எனும்பேர் நாட்டி
ஏதிலார் தம்மைச் சொற்ற தீசன்மேற் சாரா வந்த
ஆதிநா யகனைச் சுட்டி அறைந்ததும் பிறர்மாட் டேறா
மேதைசா லுணர்வின் ஆன்றோர் விகற்பம்ஈ துணர்வ ரன்றே. 49
ஓங்கிய சுருதி தன்னுள் உருத்திரன் எனுநா மத்தால்
தீங்கன லோனை ஏனைத் திறத்தரை உரைத்த வாற்றை
ஈங்கிவண் மொழியல் எங்கோற் கியம்பிய இடங்கள் நாடி
ஆங்கவன் தலைமை காண்டி அறைகுவன் இன்னும் ஒன்றே. 50
(46. அன்னான் தன்உரு - சிவசாரூபம். 48. கலுழ்தல் - அழுதல்.
49. மேதை - சிறந்த அளிவு. 50. மொழியல் - கூறாதே.
காண்டி - காண்பாயாக.)
வேறு
முந்தை யோர்பகன் முனிவர்கள் யாவரு முதலோ
டந்த மில்லதோர் பரம்இவர் அவரென அறைந்து
தந்தமிற் சென்று வாதுசெய் தறிவருந் தகவால்
நொந்து மற்றவர் பிரமனை வினவுவான் நுவன்றா£¢. 51
மல்லல் மேருவின் முடிதனில் மனோவதி வைகும்
அல்லி வான்கம லத்திடை அண்ணலை அணுகி
எல்லை தீர்ந்திடு பரம்பொருள் உணர்கிலேம் இவரென்
றொல்லை தன்னில்நீ உரைத்தருள் செய்யனெ உரைத்தார். 52
உரைத்த வாசகங் கேட்டலும் நான்முகத் தொருவன்
கருத்தில் இங்கிவை தௌ¤தர மறைமொழி காட்டி
விரித்து மென்னினுந் தௌ¤வுறார் மெய்மையால் விரைவில்
தெரித்து மிங்கென உன்னினன் அவர்மயல் தீர்ப்பான். 53
நாற்ற லைச்சிறு மாமகன் தாதைதன் னலஞ்சேர்
தோற்ற முள்ளுற உன்னியே விழபுனல் சொரிய
ஏற்றெ ழுந்துமீக் கரம்எடா வுருத்திர னென்றே
சாற்றி மும்முறை நின்றனன் தௌ¤தருந் தகவால். 54
அங்கண் நான்முகன் சூளினால் ஆதியம் பகவன்
சங்க ரன்எனக் காட்டியே பொடிப்புமெய் தயங்க
வெங்க னற்படும் இழுதென உருகிமீ மிசைசேர்
செங்கை மீட்டனன் முனிவருக் கினையன செப்பும். 55
வம்மி னோவுமக் கோருமரை மொழிகுவன் வானோர்
தம்மை எங்களை அளித்தனன் மறைகளுந் தந்தான்
மெய்ம்மை யாவர்க்குஞ் செய்பணி உதவினன் மேனாள்
மும்மை யாகிய செய்கைநம் பாலென மொழிந்தான். 56
அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி
பரமன் நின்மலன் ஏதுவுக் கேதுவாம் பகவன்
ஒருவா¢ பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய்
இருமை யாயுறை பூரண னியாவர்க்கும் ஈசன். 57
முற்று மாயினான் முடிவிற்கும் முடிவிற்கும் முடிவாய்
உற்றுளான் என்றும் உள்ளவன் அனைத்தையும் உடையோன்
மற்றென னாலுரைப் பரியதோர் சீர்த்தியன் மலர்த்தாள்
பற்றினோர்க் கன்றி உணரவொண ணாததோர் பழையோன். 58
அன்ன தோர்சிவன் பரமென மறையெலாம் அறையும்
இன்னு மாங்கவன் நிலையினைக் கண்ணனும் யானும்
உன்னி நாடியுங் காண்கிலம் அவன்பதி ஒழிந்தோர்
மன்னு யிர்த்தொகை யென்றனன் அன்னதொல் மலரோன். 59
அருள்பு ரிந்துபின் சிவனடி கைதொழு தந்நாள்
மருள கன்றிடு பிதாமகன் இருந்தனன் மற்றப்
பொருளின் நீர்மையைத் தெரிந்துதம் புந்திமேற் கொண்ட
இருள ழிந்தனர் மகிழ்ந்தனர் முனிவரர் இசைப்பார். 60
(51. பரம் - பரம்பொருள். 55. இழுது - நெய்.
மீமிசை - மிகமேலே; தலைக்குமேல்.
58. மலர்த்தாள் பற்றியரா அன்பினர். 60. மருள் - மயக்கம்.
பிதாமகன் - பிரமதேவன்.)
தாதை யாய்எமை அளித்தனை யாங்கள்உன் தனயர்
ஆத லால்எமக் கித்திறம் தேற்றினை அடிகேள்
ஈதலால் இன்று குரவனும் ஆயினை என்றே
பாத தாமரை வணங்கினர் முனிவரர் பலரும். 61
அடிவ ணங்கினர் தமைத்தெரிந் தின்றுதொட் டமலன்
வடிவம் உன்னுதிர் அருச்சனை புரிகுதிர் வயங்கும்
பொடிய ணிந்துநல் லஞ்செழுத் தியம்புதிர் புரைசேர்
கொடிய வெம்பவம் அகலுதிர் எனவிடை கொடுத்தான். 62
ஆதலால் எங்க ளீசனே பரம்பொருள் அல்லா
ஏதி லாரெலா உயிர்த்தொகை யாகுமால் இதனைக்
காத லாலுரைத் தேன்அன்று வாய்மையே காண்டி
வேத மேமுத லாகிய கலையெலாம் விளம்பும். 63
அன்றி முன்அயன் உன்றனக் கரன்புகழ் அனைத்தும்
நன்று கேட்டிட உணர்த்தினன் நீயது நாடி
நின்று மாதவம் புரிந்திது பெற்றனை நினக்குப்
பொன்று காலம்வந் தெய்தலின் மறந்தனை போலாம். 64
தந்தை யேமுதல் யாவரும் முடிவுறுந் தகவால்
வந்து நின்னவை இருந்தனர் மாயையால் மருண்டாய்
உய்ந்திடு டும்படி நினைத்தியேல் அரற்கவி உதவி
இந்த மாமகம் புரிந்திடு வாயென இசைத்தான். 65
(62. பொடி - விபூதி. அஞ்செழுத்து - பஞ்சாட்சரம்.
63. ஏதிலார் - அயலார்.
65. நின் அவை - உனது சபை.)
ஆகத் திருவிருத்தம் - 519
- - -
13. த தீ சி யு த் த ர ப் ப ட ல ம்
இந்த வண்ணமத் ததீசிமா முனிவரன் இயம்பக்
கந்த மாமலர்க் கடவுள்சேய் நகைசெய்து கானிற்
சிந்து மென்பொடு சிரத்தொகை அணியுமோ தேவர்
வெந்த சாம்பரும் பூசுமோ பரனெனும் மேலோன். 1
கழிந்த தீயுடல் ஏந்தியே தி£¤யுமோ கானில்
இழிந்த கேசமுந் தரிக்குமோ ஏனத்தின் எயிறு
மொழிந்த கூருமத் தோடுமேற் கொள்ளுமோ உலகம்
அழிந்தி டும்படி உயிர்களை முடிக்குமோ அமலன். 2
புலியின் ஈருரி உடுக்குமோ தந்தியின் புன்றோல்
வலிய தன்புயம் போக்குமோ செந்தழல் மழுமான்
இலைகொள் முத்தலை வேற்படை ஏந்துமோ எங்கும்
பலியு மேற்குமோ நிருத்தமுஞ் செய்யுமோ பகவன். 3
மிக்க சாரதர் படையெனத் திரியுமோ விடமே
கக்கும் வெம்பணி பூணுமோ வெண்டலை கலமாச்
செக்கர் மாமுடி தரிக்குமோ அம்பரந் திசையா
நக்க னாகுமோ வேற்றுருக் கொள்ளுமோ நாதன். 4
விடையும் ஏறுமோ ஆலமுங் கொள்ளுமோ வீந்தோர்
சுடலை தன்னினும் ஆடுமோ ஒருத்தியைச் சுமந்தோர்
மடம கட்கிடங் கொடுக்குமோ மகவையும் பெறுமோ
கடிய தோர்குணம் படைக்குமோ பரமெனுங் கடவுள். 5
ஆதலால் உங்கள் ஈசனோர் குணமிலன் அவனுக்
கீத லின்றியாம் புரிகின்ற மகத்தவி எனலும்
நாத னைக்கொலோ பழிக்குவன் இவனென நகையாக்
கோதின் மாதவ முனிவரன் அழலெனக் கொதித்தான். 6
தீர்த்தன் உண்மையை உணர்கிலன் இவனொடு சிறிதும்
வா£¢த்தை கூறுதல் தகாதுமால் அயன்முதல் வானோர்
ஆர்த்தசங் கத்தில் இகழ்ந்தவற் கெதிர்மொழி யறைய
ஈர்த்த தென்னுளம் உணர்த்துவன் சிலவென இசைந்தான். 7
இந்த வாறிசைந் தெம்பெரு மான்றனக் கிவண்நீ
நிந்தை போற்சில கூறினை நிமலனுக் கவைதாம்
வந்த வண்ணமோர் சிறுவதும் உணர்ந்திலை மருண்டாய்
புந்தி யில்லதோர் கயவநீ கேளெனப் புகல்வான். 8
நிலவு கின்றதன் னருளுருக் கொண்டிடு நிமலன்
தலைமை பெற்றிடு புங்கவர் தம்மைமுன் தந்தே
உலகம் யாவையும் அளித்தருள் செய்திட உதவி
அலகி லாவுயிர் யாவையும் அயன்கண்நின் றளிப்பான். 9
மாய வன்கண் நின் றவையெலாம் போற்றிமற் றவைக்குத்
தூய துப்புர வருத்தியே மேல்வினை தொலைச்சி
ஆய வற்றிலோர் பற்பல வீடுற அருளி
மேய ஆருயிர் உலகெலாம் பின்னரே வீட்டும். 10
அன்ன வேலையில் அவையெலாம் அழித்தபின் னளிப்போர்
என்ன நின்றவர் தன்மையும் ஒடுக்குறும் இதற்பின்
முன்ன ருள்ளதோர் ஏகமாய் உறையும்எம் மூர்த்தி
பின்னும் இம்முறை புரிந்திடும் என்றும்இப் பெற்றி. 11
(1. கந்தமாமலர் - சிறந்த தாமரைமலர். 2. கேசம் - மயிர்;
இது பிரம்மவிஷ்ணுக்களின் சிகை. ஏனத்தின் எயிறு - பன்றிக்கொம்பு.
கூருமம் - ஆமை. 3. தந்தி - யானை. பலி - பிச்சை.
பகவன் - சகல குணங்களும் உடையவன்; சிவன்.
4. வெண்டலை - தசைநீங்கியதலை. அம்பரம் - ஆடை. நக்கன் - நிருவாணி.
6. ஈதல்இன்று - கொடுப்பதில்லை.
7. தீர்த்தன் - பரிசுத்தன்; சிவபெருமான். சங்கம் - சபை.
8. நிந்தைபோல் - பழிப்பினையுடையவைபோல்.
சிறுவதும் - சிறிதும். கயவ - கீழ்மகனே! 9. மேல் வினை - ஆகாமியவினை.
10. துப்புரவு - போகம்.)
பரமன் இவ்வகை அடுந்தொறும் அடுந்தொறும் பலவாம்
பிரம னாதியோர் என்பினைத் தரிக்குமப் பெரியோர்
சிரமெலாந் தொடுத்த தணியலா அணிந்திடுஞ் சிகைதன்
உரமு லாவுமுந் நூலென வேயணிந் துறையும். 12
அல்ல தங்கவர் தங்களை முத்தலை அயிலால்
மெல்ல வேயெடுத் தேந்திடும் அவர்தமை விழியால்
தொல்லை நாளின் நீறாக்கியும் புனைந்திடுந் தூயோன்
மல்லல் மாதவம் அனையவர் இயற்றிய வகையால். 13
ஆத லால்தனை வியப்பதற் கன்றவை அணிதல்
ஈத லாதொரு திறமுள தியாவரும் எவர்க்கும்
நாத னேயிவன் என்றுதன் பாங்கரே நண்ணித்
தீதெ லாமொரீஇ முத்திபெற் றுய்ந்திடுஞ் செயலே. 14
என்பு நீறொடு கழியுடல் சிகைமுடி எனைத்தும்
முன்ப ணிந்திடும் இயல்பினை முழுதுயிர்த் தொகைக்கும்
அன்பு செய்திடுஞ் செயலிது வாமென அறிநீ
பின்பு முள்ளதுங் கேண்மதி அகந்தையாற் பெரியோய். 15
விண்ணு ளோர்க்கெலாம் அல்லலே வைகலும் விளைத்து
நண்ணும் ஆடக் கண்ணினன் முன்னமோர் நாளில்
மண்ண கந்தனை வௌவியே வயிற்றிடை வைத்துத்
துண்ணெ னப்பிலம் புக்கனன் உயிரெலாந் துளங்க. 16
கண்டு வானவர் யாவரும் அஞ்சினர் கரிய
கொண்டல்நன் மேனியம் பண்ணவன் கோகன தத்தோன்
துண்ட மாகிய விடத்திலோர் ஏனமாய்த் தோன்றி
அண்ட மீதுபோய் வடவரை எனவளர்ந் தார்த்தான். 17
ஓரி மைக்குமுன் பாதலந் தன்னில்மால் உற்றுக்
கூரெ யிற்றினாற் பாய்ந்துபொற் கண்ணனைக் கொன்று
பாரி னைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
வீர முற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும். 18
மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வின்றி மருப்பால்
ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனிசூழ்
வேலை தன்னையும் உடைத்தனன் அன்னதோர் வேலை
ஆல மார்களத் தண்ணல்கண் டெய்தினான் அங்கண். 19
(12. உரம் - மார்பு. முந்நூல் - பூணூல். 13. அயில் - சூலம்.
நீறாக்கி - விபூதி ஆககி.
15. கழியுடல் - வெண்டலை. முடி - தலைகள்.
16. ஆடகக் கண்ணினன் - இரணியாட்சன்.
17. கொண்டல்நன் மேனியம் பண்ணவன் - திருமால்.
கோகனதத்தோன் துண்டமாகிய இடத்தில் - பிரமனுடைய நாசியினிடத்தில்.
துண்டம் - நாசி. ஏனம் - (வௌ¢ளைப்) பன்றி. வடவரை - மேருமலை.
18. பொற்கண்ணன் - இரணியாட்சன். 19. மருப்பால் - கொம்பினால்.
இடந்து - கிளரி. வேலை - கடல்.)
கண்டு கண்ணுதல் அவன்மருப் பொன்றினைக் கரத்தால்
கொண்டு வல்லையிற் பறித்தலும் உணர்வுமுன் முறுக
விண்டு மற்றதும் பறிப்பன்இங் கிவனென வெருவிப்
பண்டு போலநின் றேத்தலும் போயினன் பரமன். 20
அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
இன்றும் அங்கவன் மார்பிடைப் பிறையென இலங்கும்
ஓன்று மற்றிது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திறம் நவிலும். 21
அடலின் மேதகு தேவரும் அவுணரும் அந்நாட்
கடல்க டைந்திடும் எல்லையின் மந்தரங் கவிழ
நெடிய மாலது நிறுவியே பொருக்கென நீத்தந்
தடவி உள்ளணைந் தாமையாய் வெரிநிடைத் தரித்தான். 22
தரித்த வேலைஅவ் வேலையை மதித்திடத் தன்கண்
அருத்தி மிக்குறும் அமிர்தினைத் தருதலும் அதனைத்
தெரித்து மற்றிது நமதென நமதெனச் செப்பி
மருத்தின் நம்மையால் அமரரும் அவுணரும் மலைந்தார். 23
மலைந்த போரினை நீக்கலன் மாயன்இவ் வரையை
அலைந்த வேலையின் நிறுவியே வெரிநிடை ஆற்றி
உலைந்தி டாவகை காத்துமா லெனப்பெரி துன்னக்
கலந்த தால் அவன் உளத்தினில் அகந்தையங் கடலே. 24
அகந்தை எய்தியே யாவையுந் தேற்றலான் அலைபோய்த்
திகந்த முற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
சகந்த னக்கழி வெய்தலும் தனதருட் டன்மை
இகந்த னன்கொலாம் கண்ணனென் றுன்னினன் எங்கோன். 25
அற்றை நாளவண் வல்லையில் ஏகியே அரிதன்
முற்ற லாமையின் உருவினை நோக்கியே முனிந்து
கற்றை வார்சடைக் கண்ணுதல் யாப்புறக் கரத்தாற்
பற்றி யாங்கவன் அகந்தையும் வன்மையும் பறித்தான். 26
நினைந்து தொல்லுருக் கொண்டனன் புகழ்தலும் நிலவைப்
புனைந்த செஞ்சடை நின்மலன் அவுணரைப் போக்கி
இனைந்த தேவருக் கமிர்தினை ஈகென ஏக
வனைந்த மேனிமான் மாயைமால் அவுணரை மாய்த்தான். 27
மாய்த்து வானவர்க் கமுதினை நல்கினன் வையங்
காத்த கண்ணனென் றுரைப்பரால் அவனுறு கமடம்
மீத்த யங்கிய காப்பினை வாங்கியே விமலன்
சாத்தி னான்முனம் அணிந்திடு மருப்புடன் சார. 28
(22. வெரித் - முதுகு. 23. மருத்து - அமிர்தம்.
24. அகந்தையங் கடல் - அகங்காரமாகிய கடல்.
25. திகந்தம் - திக்கின் முடிவு. இகந்தனன் - இகழ்ந்தனன்.
26. முற்றல் ஆமை - முதிய ஆமை.
28. கமடம் மீத் தங்கிய காப்பு - ஆமை ஓடு.)
வாரி சூழ்புவி அகழ்தரு கேழலின் மருப்பும்
மூரி யாமையின் ஓடுமேற் கொண்டது மொழிந்தாம்
தாரு காவனத் தெம்பிரான் பலிக்குறு தகவுஞ்
சேர வேயவண் நிகழ்ந்தவுங் கூறுதுந் தௌ¤நீ. 29
வேறு
முன்பு தாருக வனத்தின் முனிவரர் யாரும் ஈசற்
கன்பி லராகி வேள்வி அளப்பில புரிந்து தாமே
இன்புறு முத்தி தன்னை எய்துவான் உன்னி அங்கம்
துன்புற வாளா நோற்றுத் துணிவினால் ஒழுக லுற்றார். 30
ஒழுகிய வேலை தன்னில் உயிர்க்குயி ராகி உற்றோன்
பழுதினை அகற்றித் தன்னோர் பாங்கரில் உமையாள் மேவ
விழுமிய கயிலை நாப்பண் வீற்றிருந் தருள்வோன் அங்கண்
இழுதையர் புரியும் நீர்மை யாவையும் உணர்ந்தான் அன்றே. 31
முன்னவன் இதனை நாடி முழுதுணர் முகுந்தன் தன்னை
உன்னினன் அன்ன பான்மை ஒய்யென உணர்ந்து மாலோன்
என்னையும் முதல்வன் தன்பால் எய்துவான் பணித்தான் என்னாப்
பன்னப அமளி நீத்துப் பணியினாற் கயிலை உற்றான். 32
உற்றனன் நகர்முன் எய்தி உணர்த்திய நந்தி உய்ப்பப்
பற்றலர் புரமூன் றட்ட பரனடி பணிந்து முன்போய்
நிற்றலுங் குறிப்பால் அங்கண் நினைத்தன உணர்த்தி மாயன்
பொற்றடஞ் செங்கை பற்றிப் புனிதன்ஆண் டெழுந்து போந்தான். 33
கயிலையங் கிரியை நீங்கிக் கண்ணனை நோக்கித் தொன்னாள்
இயலுறு நினது பெண்மை எய்துதி இவண்நீ யென்னப்
புயலுறழ் மேனி மாயோன் பொருக்கென அளப்பில் காமர்
மயலுறு பான்மை அங்கோர் மடந்தையாய் மருங்கு வந்தான். 34
வந்திடு கின்ற காலை மாயைசேர் பொருண்மை முற்றுந்
1தந்திடும் உமையுங் காணில் தளர்ந்து வீழ்பான்மை தானும்
அந்தமில் யாணர் மேல்கொண் டாயிடைப் பெயர்ந்தான் முக்கண்
எந்தைதன் வடிவின் நீர்மை யார்விரித் துரைக்கற் பாலார். 35
(பா-ம் 1 - தந்திடு முறையும்.)
முன்பன துருவை எல்லாம் முகனுறு விழியால் மாந்தித்
முன்புறு மால்மீக் கொள்ளத் துண்ணென அரியுஞ் சோர்ந்தும்
அன்புடை அருளால் வந்தான் மற்றவன் தனக்கு மாலோன்
என்பதோர் பெயரும் அஞ்ஞான றெய்திய போலும் அன்றே. 36
(29. கேழல் - பன்றி. மூரி - பெரிய. 30. வாளா - வீணாக.
31. அங்கண் - இங்குத் தாருகாவனம். இழுதையர் - அறிவிலிகள்.
32. முதல்வன் - இறைவன்; சிவன். பன்னக அமளி - சேஷசயனம்.
32. பற்றலர் - பகைவர் ; திரிபுரர். 35. யாணர் - அழகு.
36. முன்பன் - முதல்வன்.)
நராரியின் உரிவை நீத்து நக்கனே யாகி முக்கட்
பராபரன் சூலத் தோடு பலிக்கலன் அங்கை கொண்டு
முராரிதன் பாங்கர் செல்ல முனிவருக் கிருக்கை யாகத்
தராதல மதிக்க நின்ற தாருகா வனத்திற் புக்கான். 37
புக்கனன் மாலை நோக்கிப் போந்துநீ நமைஎண் ணாது
தொக்குறு முனிவர் வைகுஞ் சூழல்கள் தோறும் நண்ணி
மிக்கமால் பூட்டி அன்னோர் விரதங்கள் மாற்றி நந்தம்
பக்கநீ வருதி என்னப் பகர்ந்தனன் விடுத்துச் சென்றான். 38
விடுத்தலும் முராரி ஏகி வேள்வியுந் தவமுந் தாமே
கொடுத்திடு முத்தி யென்னுங் கொள்கைசேர் முனிவர் யாரும்
அடுத்திடும் அவைக்கண் எய்தி அளவையில் அநங்கர் வல்லே
தொடுத்திடு சரங்க ளேபோல் துணைவிழி பரப்பி நின்றான். 39
கண்டனர் முனிவர் அம்மா கதுமெனக் காம வேட்கை
கொண்டனர் விரத நோன்மை குலைந்தனர் மகத்தின் செய்கை
விண்டனர் மதனீர் பாய மெலிந்தனர் வெதும்பி வேழம்
உண்டிடு கனியாம் என்ன உணர்வுபோய் உருகா நின்றார். 40
ஆலமார் கண்டத் தெந்தை அருளினால் மாயோன் கொண்ட
கோலமார் வடிவ மெல்லாங் குறிப்புடன் நோக்கி நோக்கிச்
சீலமாம் அனைத்தும் வீட்டிச் செழுஞ்சுடர் மலர்ச்சி கண்ட
ஓலமார் விட்டி லென்ன ஒல்லென வந்து சூழ்ந்தார். 41
பார்கொலோ விசும்பு கொல்லோ பங்கயன் பதியோ காமன்
ஊர்கொலோ முகுந்தன் வைகும் உலகமோ உறையுள் அன்றேல்
நீர்கொலோ அமரர்க் காக நிருதரைத் தொலைத்தீர் உன்மை
ஆர்கொலோ உணரு கிற்பார் அடியருக் கருளு மென்றார். 42
என்றிவை பலவும் பன்னி இடருழந் தெரியிற் பட்ட
மென்றளிர் அலங்க லென்ன வெதும்பியே விரகத் தீயால்
பொன்றினர் போன்று நின்றார் பொருவரு முனிவர் பொன்னார்
கொன்றையஞ் சடையோன் செய்த செயலினைக் கூறல் உற்றேன். 43
கண்ணனை விடுத்தத் தானோர் கலனொடு சூலம் ஏந்தி
எண்ணரும் முனிவர் வைகும் இருக்கையின் மறுகு சென்று
பண்ணிசை மறைகள் பாடி ஐயமேற் படர்வார் போன்றான்
உண்ணிகழ் உணர்வாய் என்றும் உயிரினுக் குயிராய் நின்றான். 44
(37. நராரி - நரசிங்கம். உரிவை - தோல். நக்கன் - நிருவாணி; சிவன்.
முராரி - திருமால்.
38. மால் பூட்டி - மோகத்தை உண்டாக்கி. 39. அளவைஇல் அநங்கர் -
அளவற்ற மன்மதர்கள்.
40. விண்டனர் - விடுத்தனர். மதநீர் - காமநீர். வேழம் உண்டிடு கனி -
வேழம் என்னும் நோய் பிடித்த விளாங்கனி;
வேழம் என்னும் நோய்பிடித்த விளாங்கனி உள்ளீடின்றி இருக்கும்;
இதனைத்தான் 'யானையுண்ட விளாம்பழம்' என்பது.
41. ஓலம் - இரதல். விட்டில் - விட்டிற் பறவை; இ·து உருவைக் கண்டு
அழியும் தன்மையது.
43. பன்னி - சொல்லி. 44. கலன் - பிட்சாபாத்திரம். மறுகு - வீதி.
பண்ணிசை மறைகள் - பண்ணோசையோடு உள்ளாளக்கீதம்.)
பாட்டியல் இசையை அங்கண் முனிவர்தம் பன்னி மார்கள்
கேட்டலும் எவர்கொல் அம்மா கிடைத்தனர் அவரைக் காண்பான்
வேட்டன விழிகள் இன்னே விரைவினில் சேறும் என்னா
ஈட்டமொ டெழுந்து வீதி எய்தியங் கிறைவற் கண்டார். 45
கண்ணுறு மாதர் யாருங் காமன்ஐங் கணையின் மூழகி
உண்ணிகழ் உணர்வு மாழ்க உயிர்பதை பதைத்துச் சோர
அண்ணல்தன் காத லென்னும் ஆழ்திரைப் பட்டார் அன்னார்
பண்ணிய செய்கை தன்னில் சிறிதியான் பகர்தல் உற்றேன். 46
வேறு
காய மேல்அணி கண்டிலம் இத்தவர்
தூய பாடலைத் துண்ணெனக் கேட்டலும்
மேய காமத்தின் 1வீழ்ந்தனம் ஆகையால்
மாய மேஇவ் வடிவம்என் பார்சிலர். 47
(பா-ம் 1 - வீழ்ந்தன வாகையால்.)
ஐயர் செய்கை அறிந்தனம் இவ்விடைப்
பைய வந்து பலிதனைக் கேட்பது
மெய்ய தன்றிது மெல்லிய லார் தமை
மையல் செய்திட வந்ததென் பார்சிலர். 48
நன்று நன்றிந்த நற்றவர்க் காந்துகில்
ஒன்று நல்கி உணவளித் கோவிலா
மன்ற லின்புற மங்கையர் ஏவரும்
இன்று கொல்என் றிரங்குகின் றார்சிலர். 49
மாறி லாஇவ் வனத்திடை வந்தனன்
வேறொரு ரூரிடை மேவிலன் போலுமால்
தேறில் யாமுனஞ் செய்திடு செய்தவப்
பேறி தாமெனப் பேசுகின் றார்சிலர். 50
ஈண்டு வந்த இருந்தவன் யாரையும்
வேண்ட லன்இது மெய்மை அவன்பதம்
பூண்டு காதலிற் போற்றுநர் போலமெய்
தீண்டு தும்மெனச் செப்புகின் றார்சிலர். 51
பூணி லங்கிய பொற்றொடி சங்கினம்
மாணு றுந்துகில் மற்றிவை சோர்தலுங்
காணு கின்றனர் கைநெரித் தஞ்சியே
நாணி வீதி நடுவிருந் தார்சிலா¢. 52
ஏமம் பாயமெய் எங்கணுங் காமவேள்
தூமம் பாயவை சூழ்ந்துயிர் வாட்டிட
வாமம் பாய்புனல் போல்மயிர்க் கால்தொறுங்
காமம் பாயக்க லுகின் றார்சிலர். 53
(47. காமமேல் - உடலின்மேல். 49. துகில் - ஆடை.
ஏவரும் - எவரும்.
51. பதம் - பாதம். மெய் - உடல். 53. ஏமம் - கலக்கம்.
தூம் அம்பு - விடும் அம்புகன்.
வாமம் - மலை. புனல் - பால்நீர்.)
பாசம் நீங்கிப் பரபதம் ஈதென
ஆசை யோடுகண் டன்புசெய் வாரென
வாசம் நீங்கி வளையுகுத் தையர்தங்
கோசம் நோக்கினர் கும்பிடு வா£¢சிலர். 54
இளையி னோடுறும் எந்தைதன் வேட்கையால்
களையி னோடு கதுமெனச் சென்றுபால்
அளையி னோடுறும் ஓதனம் அங்கைவீழ்
வளையி னோடு வழங்குகின் றார்சிலர். 55
பாவை மார்முன் பலிக்குறுந் தன்மையால்
நீவி இன்றிந் நெற்றியங் கண்ணுதல்
மேவும் நந்துகில் வீழ்கினும் வீழுக
ஏவ மோஎமக் கென்றுரைப் பார்சிலர். 56
போய நாணம் புகுந்தது மால்உளந்
தீயு மால்நிறை சிந்திய தாருயிர்
வீயும் மெய்யும் விளிந்திடும் எம்முயிர்
ஈயும் எங்களுக் கென்றுரைப் பார்சிலர். 57
தண்டு லங்கொல் தவத்தர் இரப்பெனக்
கொண்டு சென்று குறுகினர் காமமாம்
மண்டு தீச்சுட வண்பொடி ஆதலும்
அண்டர் நாயகன் போலணிந் தார்சிலர். 58
வடிவி னால்எமை மாலுறுத் தாளுமென்
றடியில் வீழினும் ஆரருள் செய்கிலர்
கடிது போவது போலுங் கருத்திவர்க்
கிடுகி லீர்ஐயம் என்றுரைப் பார்சிலர். 59
ஆர மற்றனர் ஆரமும் வீழமெய்
ஈர மற்றனர் ஈரம் அதன்படை
தீர மற்றனர் தீரவு மேகலா
பாரம் அற்றனர் பாரமற் றார்சிலர். 60
சூலம் உண்டு சுடர்விழி மேல்நிமிர்
பாலம் உண்டு படர்சடை யுண்டுசெங்
கோலமுண்டு குறைமதி உண்டிவர்
ஆல முண்டவர் ஆகுமென் பார்சிலர். 61
எந்தை யார்தம் இருங்குறி யின்கணே
சிந்து கின்ற திவலையொன் றல்லவோ
உந்தி மேல்வந் துலகனைத் துந்தரும்
அந்த நான்முகன் ஆனதென் பார்சிலர். 62
(54. வாசம் நீங்கி - ஆடை இழந்து. வளை - வளையல்.
கோசம் - ஆண்குறி.
55. இளை - இளமை. அளை - தயிர். ஓதனம் - சோறு.
56. நீவி - ஆடை. ஏவமோ - குற்றமோ.
58. தண்டுலம் - அரிசி. 59. கடிது விரைந்து ஐயம் இடுகிலீர் - பிச்சையிடாதிர்கள்.
62. இரும்குறி - பெருமை பொருந்திய ஆண்குறி. திவலை - துளி.)
சங்கும் ஆழியுந் தாங்குதல் இன்றியே
பொங்கு காமரம் பொன்னந் துகிலொரீஇத்
துங்க மாதவர் துண்ணென மால்கொள
அங்கண் மேவும் அரியையொத் தார்சிலர். 63
கட்டு செஞ்சடைக் கண்ணியின் உள்ளகப்
பட்ட மான்எனப் பார்த்தகண் வாங்கலர்
சட்டு வந்தனில் தாங்கிய ஓதனம்
இட்டு வௌ¢ளிடை ஏமரு வார்சிலர். 64
கிளியின் மேற்செலுங் கேழ்கிளர் ஓதிமம்
களிம யக்குறு காளகண் டத்திறை
வௌ¤யின் மேனியும் மெய்ப்படு கோலமுந்
தௌ¤கி லாது தெருமரு வார்சிலர். 65
அளியின் அட்ட அடிசில்கொண் டாயிடைக்
களிம மயக்கங் கருத்துற ஏகியே
ஔ¤யி னுக்கோ ளியாகி உள்ளாருரு
வௌ¤யி னுக்கு விரைந்தளிப் பார்சிலர். 66
அண்ணல் மேனிகண் டார்வமுற் றாடைபோய்ப்
பெண்ணின் நீர்மைப் பெருங்குறி மூடியும்
கண்ணை மூடியும் வைக்கடங் காமையால்
விண்ணை மூடினர் போல்வௌ¢ கினார்சிலர். 67
விருந்த ராயிவண் மேவினிர் விண்ணவர்
மருந்து போல்வதொர் வண்பதம் உண்டவை
அருந்தி யேநல் லருள்புரிந் தோரிறை
இருந்து போமென் றிசைத்திடு வார்சிலர். 68
கையி லேந்து கலனொடு சூலமும்
வையும் நம்மனை வந்திடும் பாலொடு
நெய்யும் உண்டியும் நிற்றலும் உண்டியாம்
உய்ய நீரிங் குறையுமென் பார்சிலர். 69
பார்க்குமா தர்க்கும் பல்குழு ஆடவர்
ஆர்க்கும் மையல் அளிக்கும் வடிவுளீர்
சீர்க்கும் ஓடொன்று செங்கைகொண் டெங்கணும்
ஏற்கு மோவிதென் என்றுரைப் பார்சிலர். 70
இன்றுமைக் கண்டி யாங்களும் ஆடைபோய்
ஒன்று காதலுற் றோய்ந்தனம் இங்கிது
நன்று கூடுதிர் நங்களை நீரென
நின்று கூறி நெடிதுயிர்த் தார்சிலர். 71
(63. சங்கு - பாஞ்ச சன்னியம்; வளையல். ஆழி - சக்கரம்; மோதிரம்.
பொன்னம் துகில் - பீதாம்பரம்;
அழகிய ஆடை. 64. செஞ்சடைக் கண்ணி - செஞ்சடையாகிய வலை.
சட்டுவம் - அகப்பை.
65. கிளியின் மேற்செலும் கேழ்கிளர்ஓ திமற் - திலோத்தமையாகிய கிளியின்மேல்
ஆசைகொண்டு தொடர்ந்து சென்ற அழகு பொருந்திய பிரமதேவனாகிய அன்னம்.
67. பெண்ணின் நீர்மைப் பெருங்குறி - பெண்தன்மைக்குரிய பெண்குறி.
68. மருந்து - தேவாமிர்தம். பதம் - சோறு. 69. கலன் - பிரம கபாலம்.)
நந்தும் இவ்வனம் நண்ணிய மாதவர்
இந்த வேலையில் ஏகலர் யாவதுஞ்
சிந்தை கொள்ளலிர் சேக்கையுண் டோரிறை
வந்து போமென வாய்மலர்ந் தார்சிலர். 72
எம்மை ஆரிட மாதரென் றெண்ணியோ
வெம்மை பேசினும் மேவுகி லீர்பவம்
உம்மை மேவுங் கொலோஒழிந் தார்கள்போல்
அம்ம வந்தெமை ஆளுமென் பார்சிலர். 73
ஆடை தாரும் அதன்றெனில் கொண்டதோர்
வேடை தீரும் விளம்பு கிலீரெனில்
கூட வாருங் குறிப்புமக் கென்னெனப்
பாடு சோ¢ந்து பகர்ந்திடு வார்சிலர். 74
ஒல்லு கின்ற துமக்கிவ் வடிவினால்
செல்லு கின்ற தெரிவையர் யாரையுங்
கொல்லு கின்றது வோபலி கொள்வதோ
சொல்லு மென்று தொடர்ந்திடு வார்சிலர். 75
போற்றி இங்கெமைப் புல்லும்என் றாலுமால்
ஆற்றி இன்பத் தணைகிலிர் யாவருஞ்
சாற்று கின்றனர் சங்கரர் என்றுமை
ஏற்று தோவதற் கென்றுரைப் பார்சிலர். 76
அணங்கின் நல்லவர் அண்ணல்தன் கோசமேல்
நுணங்கு மாலொடு நோக்கி அதற்குமுன்
வணங்கு மாறென மற்றவர் நாணுபு
கணங்க ளோடு கவிழ்ந்துசென் றார்சிலர். 77
வேறு
இன்னவர் பலருஞ் சூழா ஈண்டுபு கலையுஞ் சங்குந்
துன்னிய கலனும் நாணுந் துறப்பருங் கற்புஞ் சிந்தி
மன்னுயிர் ஒன்றுந் தாங்கி மால்கொடு தொடர எங்கோன்
பொன்னடிக் கமலஞ் சேப்பப் புனிதமா மறுகிற் போனான். 78
சில்லிடை வீணை நாதஞ் செய்திடும் அ·தே அன்றிச்
சில்லிடை மறைகள் பாடுஞ் சில்லிடைச் சிவநூல் ஓதுஞ்
சில்லிடைத் தன்மெய் காட்டுஞ் சில்லிடை ஐயங் கேட்குஞ்
சில்லிடை அன்பர் போல்தன் சீர்த்தியைப் புகழ்ந்து செல்லும். 79
(72. இந்த வேலையில் - இப்பொழுது. ஏகலர் - வாரார். சேக்கை - படுக்கை.
74. வேடை - விரகதாபம். குறிப்பு - கருத்து.
76. சங்கரன் - இன்பத்தைச் செய்பவன்.
79. சிவநூல் - சிவாகமம்.)
தேமலர்க் கமலை அன்ன தெரிவையர் தொழுங்கால் ஈசன்
மாமலர்த் தாள்மேல் இட்ட மலர்களும் அன்னார் சிந்துந்
தூமலர்த் தொடையுஞ் சங்குந் துலங்குபொற் கலனுங் காமன்
பூமலா¢த் தொடையும் ஈண்டப் பொலிந்ததப் புனித வீதி. 80
ஊனுலாம் உயிர்கட் கெல்லாம் உணர்வுடன் உயிராய் நின்றோன்
வானுலாம் பலிக்கு வந்த வடிவினை நினைக்கின் மாயோன்
தானுமா லாகி இன்னுந் தளர்வுறும் என்றால் அம்மா
ஏனையோர் செய்கை தன்னை இனைத்தென இயம்ப லாமோ. 81
செந்திரு வனைய மேனிச் சீறடிக் கருங்கட் செவ்வாய்ப்
பைந்தொடி மகளிர் கற்பாம் பரவைகள் மதிக்கும் எண்ணில்
மந்தரம் போன்றான் எங்கோன் மற்றவர்க் கெல்லாம் வெவ்வே
றிந்திர ஞால மென்று எல்லையில் உருக்கொண் டெய்தி. 82
நீண்டஅந் நிகமம் புக்க நிமலன்மேல் ஆர்வம் வைத்துக்
காண்டகு மாதர் யாருங் கருவுறு நிலையராகி
மாண்டகு வயாவும் மற்றோர் வருத்தமும் இன்றி யாங்கே
ஆண்டகை மகார்க ளாக வாறெண்ணா யிரரைப் பெற்றார். 83
பந்தைபால் விழைவு செய்தாங் கிமைப்பினின் மடவார் ஈன்ற
மைந்தர்கள் யாரும் ஐயன் மலரடி முன்னர்த் தாழ்ந்து
புந்திகொள் அன்பின் நின்று போற்றிட அனையன் நீவிர்
நந்தமை உன்னி ஈண்டு நற்றவத் திருத்திர் என்றான். 84
நெட்டிருஞ் சடில மீது நிலவினை முடித்த அண்ணல்
கட்டுரை செய்தல் கேளாக் கைதொழூஉ விடைபெற் றேகி
உட்டௌ¤ வெய்தி நோற்றாங் கொருசிறை இருந்தார் நாற்பான்
எட்டுள பத்து நூற்றின் எண்டொகை முனிவர் யாரும். 85
சேயென வந்தோர் நோற்பச் சென்றுழித் தெரிவை மாராம்
மாயிரும் பரவை நீத்தம் மால்கொடு தொடர்ந்து செல்லப்
போயினன் என்ப மன்னோ புரியிகந் தரிமுன் ஈந்த
ஆயிரங் கமலங் கொண்டோர் ஆழியை அளிக்க வல்லோன். 86
போதலும் அதனை நோக்கிப் பொற்றொடி யாகி நின்ற
சீதரன் அமலன் தன்பாற் சேறலுந் தொடர்ந்து பின்னா¢
மாதவர் யாரும் போந்தார் மற்றதன் இயல்பு நோக்கி
ஏதமில் கங்கை பாலாம் யமுனையைக் கடுத்த தன்றே. 87
மெல்லியல் வடிவ மாகி மேயினோன் தன்பால் வீழ்ந்து
செல்லுறு முனிவர் ஆற்றத் தீவினை புரிந்த நீரால்
அல்லுறழ் மிடற்றுப் புத்தேள் அவர்க்கெலாந் தனதாய் உள்ள
தொல்லுரு மறைத்து வேறோர் வடிவொடு தோன்றி நின்றான். 88
(82. கற்பாம் பரவைகள் - கற்பெனும் கடல்களை. மதிக்கும் - கடைகின்ற.
83. நிகமம் - வீதி. கரு - கருப்பம். வயா - கருப்பநோய்.
ஆண்டகை மகார்கள் - ஆண்மக்கள்.
86. ஓர் ஆழி - ஒப்பற்ற சுதரிசனம் என்னும் சக்கரப்படை.
87. சீதரன் - திருமால்.
கங்கை - இது தௌ¤ந்த நீர். யமுனை - இது கலங்கிய நீர்.
கங்கை மாயோன் உள்ளத்திற்கும்; யமுனை தாருக முனிவர் உள்ளத்திற்கும் உவமைகளாகும்.)
மடந்தை யாய்வந்த மாலோன் மணிமிடற் றிறைவன் தன்பால்
அடைந்திட முனிவர் தத்தம் அரிவையா¢ தம்மை நோக்கித்
தொடர்ந்தனர் இவரும் நம்போல் தோற்றனர் கலையும் நாணுங்
கடந்தனர் இவனைக் கண்டு காதலித் தார்கொல் என்றார். 89
மோனமா நெறியின் நோற்கும் முனிவரர் முகுந்தன் தன்பால்
ஆனமால் சிறிது நீங்கி அருங்குலப் பன்னி மார்கள்
ஈனமா நிலையை நோக்கி இன்னலுற் றிரங்கி ஏங்கி
மானமேல் கொண்டு வீடா மன்னுயி ரோடு நின்றார். 90
பொன்னுலாம் அல்கு லாள்இப் பொற்றொடி ஒருத்தி எம்பால்
மன்னிய தவத்தைச் சிந்தி மால்செய்தாள் ஒருவன் வந்து
பன்னிமார் கற்பை வீட்டிப் படுத்தினன்¢ மோகம் அந்தோ
என்னமா யங்கொ லீதென் றெண்ணினர் யாரும் ஈண்டி. 91
எண்ணிய முனிவர் தேறி இயம்புவார் கயிலை வைகுங்
கண்ணுத லாகும் இன்னோர் கற்பினை உடைத்தான் யாமுன்
பண்ணிய தவத்தை வீட்டப் பைந்தொடி யாகி வந்தோன்
மண்ணுல கனைத்தும் உண்ட மாயவன் போலும் அன்றே. 92
நந்தவந் தன்னை வீட்ட நாரணன் தானே நம்பால்
வந்தனன் அன்றால் ஈசன் பணியினால் மாயை செய்தான்
இந்திரை கேள்வன் செய்த தென்கொலோ எமது நோன்பு
சிந்தினும் நன்றால் இன்னுந் தீர்வுநேர்ந் தியற்று கின்றோம். 93
அங்கையிற் கபால்ஒன் றேந்தி ஐயம்ஏற் றிடுவான் போலச்
சங்கரன் வந்து மற்றித் தாருகா வனத்தின் மேவு
மங்கையர் கற்புச் சிந்தும் வசையுரைக் கொழிவு முண்டோ
செங்கதிர் மதியஞ் செல்லுந் திசையெலாம் பரவும் அன்றே. 94
தானொரு வேடங் கொண்டுந் தண்டுள வலங்கற் சென்னி
வானவன் தன்னை விட்டு மற்றிவை அனைத்துஞ் செய்தோன்
கானுறு கடுக்கை வேய்ந்த கண்ணு தலேகொல் என்றே
மானவெங் கனலுஞ் சீற்ற வன்னியுங் கிளர நின்றார். 95
நின்றிடு முனிவர் யாரும் நெருப்பெழ விழித்துச் செம்பொற்
குன்றுறழ் முலையி னார்தங் குழுவினைக் கூவி யார்பின்
சென்றிடு கின்றீர் கற்பின் செய்கைய திகந்தீர் இங்ஙன்
பொன்றுதல் அழகி தன்றேல் போமின்நும் புரியின் என்றார். 96
இத்திற மாதர் கேளா ஈங்கிவர் தம்மைக் கண்டோர்
முத்தராய் உறுவ தன்றி முடிவரோ முனிவர் தாமும்
பித்தர்கொல் என்றே அன்னான் பிறங்குரு வினையுட் கொண்டு
நித்தன தருளால் மீண்டு நீணகர் இருக்கை புக்கார். 97
(90. மோனமா நெறி - மௌன வழி. மானம் - அபிமானம். வீடா - இறவா.
93. இத்திரை கேள்வன் - இலக்குமி நாயகன்; திருமால். 94. கபால் - கபாலம்.)
நீணகர் புகுந்த பின்னர் நேழிழை மகடூஉ வாகித்
தாணுவின் அயலின் நின்ற தண்டுள வலங்கற் புத்தேள்
ஆணுவின் உருவு கொண்டான் அருளினால் அனைய தன்மை
காணிய விரிஞ்ச னாதிக் கடவுளர் யாரும் வந்தார். 98
கடவுளர் யாரும் வந்த காலையில் அங்கண் நின்ற
முடிவறு முதல்வன் தன்னை முனிவொடு நோக்கி ஈண்டுக்
கொடியதோர் வேள்வி ஆற்றிக் கொல்லுதும் இவனை என்னா
மடமைகொள் முனிவர் சூழ்ந்து மற்றொர்தீ மகத்தைச் செய்தார். 99
எள்ளுதற் குரிய வேள்வி எரியதன் இடையே யாரும்
உள்ளுதற் கரிய தோற்றத் துருமிடிக் குரல பேழ்வாய்த்
தள்ளுதற் கரிய சீற்றத் தழல்விழித் தறுகட் செங்கால்
வள்ளுகிர்ப் புலியொன் றம்மா வல்லையின் எழுந்த தன்றே. 100
எழுதரு புலியை நோக்கி ஈசனை முடித்தி என்றே
தொழுதனர் விடுப்ப ஆங்கே துண்ணென வருத லோடும்
அழல்விழிப் பரமன் நேர்போய் அங்கையால் உரித்து மற்றவ்
வுழுவையந் தோலை முன்னம் உடுத்தனன் தானையொப்ப. 101
இங்கிது போய பின்றை இறுதிசெய் கணிச்சி ஒன்று
செங்கன லிடையில் தோன்றித் தீயவர் விடுப்ப ஏகிச்
சங்கரன் தனது முன்னஞ் சார்தலும் அதனைப் பற்றி
அங்கையில் ஏந்தி நீநம் அடுபடை யாதி என்றான். 102
பின்னுற ஒருமான் அங்கட் பிறந்தது முனிவர் எல்லாம்
அன்னதை அரன்பால் உய்ப்ப அந்தரத் தெழுந்து பாய்ந்து
தன்னெடுங் குரலால் வல்லே சராசரம் வீட்டிச் செல்ல
முன்னவன் உயிர்கள் அற்றால் முடிவுறா தருட்கண் வைத்தான். 103
மற்றதன் பின்றை எந்தை மான்பிணை அதனை நோக்கித்
தெற்றென விளித்து நத்தஞ் செவியினுக் கணித்தாய் மேவி
நிற்றலுங் கூவு கென்றே நீடருள் செய்து வாமப்
பொற்றடங் ககையிற் பற்றிப் பொருக்கென ஏந்தி நின்றான். 104
ஏந்திய பின்னர் வேள்வி எரியழற் கிடையே எண்ணில்
பாந்தளங் கெழுந்து தீயோர் பணியினாற் சீற்றத் தோடும்
போந்தன அவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பாற்
சேர்ந்திடு பணிக ளோடுஞ் செவ்விதிற் புனைந்தான் எங்கோன். 105
(98. மகடூஉ - பெண். தாணு - அசைவில்லாதவன்; சிவன்.
99. தீமகம் - அபிசார வோமம்.
100. வேழ்வாய் - பிளந்த வாய். 101. முடித்தி - சொல்வாயாக.
உழுவை - புலி. தானை - ஆடை.
102. கணிச்சி - மழு. தீயவர் - தாருகவன முனிவர்.
104. வாமம் - இடதுபக்கம்.
105. பாந்தள் - பாம்பு. பணிகளோடு - பாம்புகளோடு.)
பணியெலாம் பணிய தாகிப் பரனிடைத் திகழப் பின்னர்
அணிகெழு கனலின் நாப்பண் அசனிகள் எழுந்தா லென்னக்
கணிதமில் பூத வௌ¢ளங் கதுமென எழலும் நீவிர்
மணிகிளர் மிடற்றோன் வன்மை மாற்றுதிர் என்றே உய்த்தார். 106
ஆரிடர் ஏவல் போற்றி அண்டமுந் துளங்க ஆர்த்துச்
சாரதர் வருத லோடுஞ் சங்கரன் அவரை நோக்கி
நீரெமை அகன்றி டாது நிற்றலுந் தானை யாகிச்
சேருதி ரென்றான் உற்றோர் தீவினை தீர்க்க வல்லான். 107
ஆற்றல் சேர்பூதர் யாரும் ஆதியீ துரைப்ப அன்னான்
போற்றியே தானை யாகிப் புடையுற நிற்ற லோடுஞ்
சீற்றமா முனிவர் வேள்வித் தீயில்வெண் டலைதான் ஒன்று
தோற்றியே உலகம் யாவுந் தொலையநக் கெழுந்த தன்றே. 108
நக்கெழு சிரத்தை அன்னோர் நாதன்மேல் விடுத்த லோடும்
அக்கணம் அணுக வற்றால் அகிலம திறவா வண்ணம்
முக்கணன் அருள்செய் தந்த முணடமுண் டகக்கை பற்றிச்
செக்கரஞ சடைமேற் கொண்டுன் செயலினைப் புரிதி யென்றான். 109
அறுகுறை முடிமேற் கொண்ட அமலனை நோக்கி நோக்கி
இறுகிய முனிவர் தத்தம் வாய்மை மந்திரங் களேவி
இறுதி செய்திடுதி ரென்ன இனையவை துடியொன் றாகிச்
செறிதரு புவனம் யாவுஞ் செவிடுற ஒலித்த தன்றே. 110
பொருவருந் துடியின் ஓதை பொம்மெனக் கேட்ட லோடுந்
தரணியின் வானி னுள்ள சராசரம் யாவும் ஈசன்
அருளினால் வீடிற் றில்லை அசனியின் ஆர்ப்புக் கேட்ட
உரகர் தங்குலங்க ளென்ன ஒய்யென மயங்கிற் றன்றே. 111
அத்துடி ஆர்த்துச் செவ்வே அமலன்முன் அணுக மற்றைக்
கைத்தலம் அதனிற் பற்றிக் கறங்குதி கன்னத் தென்று
வித்தக மரபில் யாரும் வியப்புற ஏந்தி நின்றான்
இத்திறம் யாரே செய்வார் என்றனர் முனிவ ரெல்லாம். 112
இனையது கண்டு பின்னும் இறுதிசெய் இறைவற் கின்றால்
அனைய தென்றறிதல் தேற்றார் அடுசினங் கடவத் தொல்லூழ்
வினையது விளைவாற் பின்னும் வேள்வியை இயற்றல் உற்றா£¢
முனிவரர் கனற்க ணேயோர் முயலகன் எழுந்த தன்றே. 113
முயலகன் தன்னை நோக்கி முகமனுஞ் சொற்றுத் தங்கள்
செயலகன் றிருந்த வேள்வித் தீயையும் விளித்து நந்தம்
இயலகன் றிடவே செய்த ஈசனை முடித்தி ரென்றே
மயலகன் றிலாதார் உய்ப்ப வல்விரைந் தணைந்த அம்மா. 114
(106. அசனி - இனி. 107. ஆரிடர் - முனிவர்.
109. நக்கு எழு சிரம் - சிரித்தலையுடைய வெண்டலை.
110. இனையவை - இங்கு, மந்திரங்கள். துடி - உடுக்கை.
111. ஓதை - ஓசை. பொம்மென - விரைந்து.
ளுரகர் - தாகங்கள். 113. முயலகன்- இவன் ஒருபூதம்.
114. முகமன் - உபசார வார்த்தை. சொற்று - உரைத்து.)
வன்னியந் தேவும் உட்க வந்திடு கனலை யார்க்கும்
முன்னவன் ஒருகை ஏந்தி முயலகன் தன்னை மெல்லத்
தன்னடி அதனால் வீழத் தள்ளிஅக் கமலத் தாளை
வென்னிடை அருளால் ஊன்றி விண்ணவர் போற்ற நின்றான். 115
நிற்றலும் அதனைத் தீயோர் நெருப்பெழ விழியா இன்னும்
உற்றனன் பரமன் அந்தோ உஞற்றி யாமுய்த்த வெல்லாம்
இற்றன கொல்லோ என்றே இரங்கியே எண்ணில் சாபஞ்
சொற்றனர் உலக மெல்லாந் தொலைப்பவன் தொலைய வென்றே. 116
சங்கையில் முனிவர் யாருஞ் சாற்றிய சாபம் யாவும்
எங்கடம் பெருமான் முன்னும் எய்திய தில்லை அன்னோர்
எங்கவன் தன்பால் உய்க்கும் அளவையில் இறுதி நாளிற்
பொங்கெரி அதன்மேற் செல்லும் பூளைபோல் மாய்ந்த அன்றே. 117
சாபமும் பயனின் றாகத் தவத்தர்கள் யாருங் கொண்ட
கோபமும் நீங்கி ஆற்றல் குறைந்தொரு செயலும் இன்றிச்
சோபமும் நாணுங் கொண்டு துளங்கியே தொலைவி லாத
பாபமும் பழியும் பூண்டு படிக்கொரு பொறையாய் நின்றார். 118
ஏற்றமில் முனிவர் தங்கள் ஏழைமை தனையென் னென்று
சாற்றுதும் இறுதி இல்லாத் தாணுவை முடிப்பான் வேள்வி
ஆற்றினர் பலவும் உய்த்தார் அறைந்தனர் சாபம் அற்றால்
மாற்றி அற்றோ தங்கள் வன்மையும் இழந்தோர் மாதோ. 119
கடுக்கையும் நதியும் பாம்புங் கலைமதிக் கொழுந்துஞ் சென்னி
முடித்தவன் பதத்தில் ஊன்று முயலகன் மெல்ல மெல்ல
எடுத்தெடுத் தசைத்த லோடும் ஏதுவங் கதனை நோக்கி
நடித்தனன் என்றும் நீங்கா நடம்புரி கின்ற தேபோல். 120
ஆண்டவ ணிமையா முக்கண் ஆதிநா யகன்அஞ் ஞான்று
தாண்டவம் புரித லோடுஞ் சகமெலாந் துளங்கிற் றங்கண்
ஈண்டிய வுயிர்கள் அச்சுற் றிரங்கிய நடுக்கம் எய்தி
வீண்டனர் வேள்வி செய்து வினையினை ஈட்டும் வெய்யோர். 121
நஞ்சணி கண்டத் தெந்தை நடநவில் செய்கை தன்னைக்
கஞ்சனும் ஆழி யானுங் கண்டுகண் களித்துப் போற்றி
செஞ்சகம் மகிழ்ந்து பாங்கர் நின்றனர் மகவான தன்னோ
டெஞ்சிய அமரர் யாரும் இறைஞ்சுவார் போல வீழ்ந்தார். 122
அருளடு நிருத்தஞ் செய்யும் அண்ணலிப் புவனம் யாவும்
வெருவுறு செயலும் வீழும் விண்ணவர் அயர்வு நோக்கித்
திருநட மொழிந்து நிற்பத் தேவருந் தேவர் கோனும்
பருவுடன் எழுந்து நின்று கைதொழூஉப் பாங்கர் உற்றார். 123
(115. வன்னியந்தேவு - அக்கினிதேவன். 116. உஞற்றி - உண்டாக்கி.
117. இறுதி நாளில் பொங்குஎரி - ஊழித்தீ பூளை - பூளைப்பஞ்சு.
119. ஏழைமை - அறியாமை.
120. கடுக்கை - கொன்றை. 121. விண்டனர் - விலகி நின்றனர்.)
மாதொர்பா கத்தோன் தன்னை மதித்திடா முனிவர்க் கெல்லாம்
போதமே யருள லோடும் பொருக்கென எழுந்து பொல்லா
ஏதமே இயற்று கின்ற எம்பெரும் பிழைகள் யாவும்
நாதநீ பொறுத்தி என்று நடவில் கழல்முன் வீழ்ந்தார். 124
பொறுத்தி எம்பிழையை என்றே போற்றிசெய் முனிவர் தங்கள்
திறத்தினை நோக்கி நந்தஞ் செந்நெறி யொழுதித் தீய
மறத்தினை அகற்றி மேலை மாதவம் புரிதி ரென்று
நிறுத்தினன் அடையா தார்க்கும் நீடருள் புரியும் நித்தன். 125
முனிவரை நிறுவி அங்கண் முக்கணன் மீண்டு வௌ¢ளிப்
பனிவரை ஏகி மாலும் பங்கயத் தவனும் வானோ |