kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, TSCII format)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம்





உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

5. தக்ஷ காண்டம்

*** 1. உ ப தே ச ப் ப ட ல ம் மாயையின் வலியோ னாகி மான்முத லோரை வென்றே ஆயிரத் தோரெட் டண்டம் அரசுசெய் துகநூற் றெட்டுக் காயம தழிவின் றாகிக் கடவுளர்க் கலக்கண் செய்த தீயசூ£¢ முதலைச் செற்ற குமரன்றான் சென்னி வைப்பாம். 1 உலகினுள் மேல தாகி ஓங்குபே ரொளியாய் வான்மேல் தலைமைய தாகி வைகுஞ் சத்திய வுலகந் தன்னில் புலனுணர் முனிவர் தேவர் புதல்வர்கள் புடையிற் போற்ற மலரயன் தனது கோயில் மன்றில்வீற் றிருந்தான் அன்றே. 2 இருந்திடு காலை வேதா யாவையும் அளிப்ப மேனாள் தெரிந்தருள் பதின்ம ராகுஞ் சீர்கெழு குமரர் தம்முட் பொருந்திய தக்கன் என்னும் புந்தியின் மேலோன் முன்செய் அருந்தவ நெறியால் ஈதொன் றையனை வினவ லுற்றான். 3 தேவரின் முதல்வ ராகிச் சிற்குணத் தலைவ ராகி மூவரில் உயர்ந்தோ ராகி முடிவிலா ஒருவ ராகி ஓவற வுயிர்கள் தோறும் உயிரென வுறைவோ ராகி மேவினர் தம்மைத் தேற விளம்புதி மேலோ யென்றான். 4 என்றுதன் மைந்தன் இவ்வா றியம்பலும் மலரோன் கேளா நன்றிது மொழிவன் கேட்டி நாரணன் தானும் யானும் அன்றமர் இயற்றும் எல்லை அழலென எழுந்து வானில் சென்றதோர் சிவனே யார்க்கு மேலவன் தௌ¤நீ என்றான். 5 (1. மாயையின் - மாயை செய்வதில். சூர்முதலை - சூரபன்பமனை. 2. புதல்வர்கள் - உபப்பிரமர்கள். அயன் - பிரமதேவன். 3. ஐயனை - பிரமதேவனை. 4. சிற்குணம் - தூயகுணம். 5. அன்று - ஒரு பிரம கற்பத்தில்.) தருசெயல் வல்லோன் ஈது சாற்றலுஞ் செயலோர் மூன்றின் இருசெயல் புரியும் நீவிர் ஏதில ராகப் பின்னர் ஒருசெயல் புரியும் ஈசன் உங்களுக் கிறைவ னாகி வருசெயல் என்னே சிந்தை மயக்கற வுரைத்தி யென்றான். 6 தற்புகழ் கருத்தின் மிக்க தக்கன்ஈ துரைத்த லோடுஞ் சிற்பரன் நிலைமை அன்னான் அருளினால் தெரிந்த வேதாச் சொற்படு மறைகள் முன்நீ துகளறக் கற்றுத் தூய நற்பொருள் தெரிந்த வாறு நன்றுநன் றென்ன நக்கான். 7 பின்னுற முடிப்பான் தன்னைப் பிரானெனத் தேற்றுந் தன்மை என்னென வுரைத்தி மைந்த எங்களைச் சுரரை ஏனைத் துன்னிய வுயிர்கள் தம்மைத் தொலைவுசெய் திடுவன் ஈற்றில் அன்னவர் என்னில் முன்னம் அளித்தவன் அவனே அன்றோ. 8 அந்தநாள் ஒருவ னாகி ஆருயிர்த் தொகையைத் தொன்னாள் வந்தவா றொடுங்கச் செய்து மன்னியே மீட்டும் அன்னை தந்தையாய் உயிர்கட் கேற்ற தனுமுதல் அளிக்கும் முக்கண் எந்தைதன் செய்கை முற்றும் இனையதென் றிசைக்கற் பாற்றோ. 9 செங்கண்மால் தன்னை என்னைத் திண்டிறல் மொய்ம்பின் நல்கி அங்கண்மா ஞாலங் காப்பும் அளிப்பதும் உதவி யாமும் உங்கள்பால் இருத்து மென்றெம் முயிருள்நின் றியற்றா நின்றான் எங்களால் முடியுஞ் செய்கை யாவதும் இல்லை கண்டாய். 10 உயிருள்நின் றியற்றல் அன்றி உற்றநஞ் சிந்தை உள்ளும் இயன்முறை வழாது காப்போன் இருவிழி யகத்து மானான் மயலுறு பொழுதும் எம்பால் வந்தருள் செய்வன் தானோர் செயல்புரி கின்றான் போல எம்மொடு செறிவன் அன்றே. 11 எள்ளுறும் எண்ணெய் என்ன எறிமணி அரவ மென்னக் கள்ளுறு போது கான்ற கடியெனச் சலாகை தன்னில் தள்ளுற அரிய சோதி தானென உலக மெங்கும் உள்ளடு புறமு மாகி ஒருமையாற் பரவும் அன்றே. 12 வேதமே முதலா வுள்ள வியன்கலை அனைத்துந் தொன்னாள் ஓதினான் அவனே எங்கட் குரைத்திட உணர்ந்தா மன்றே ஈதுநீ அவற்றிற் காண்டி யாருமொன் றாகக் கொண்டாய் பேதையோ பெரிது மென்னப் பிதாமகன் இனைய சொற்றான். 13 அவனிது புகற லோடும் அருள்மகன் இசைப்பான் மேலாஞ் சிவனருள் வேதம் பூதத் திறத்தையும் உயிர்க ளோடும் எவரையும் பிர மென்றே இசைப்பதென் எனது நெஞ்சங் கவலுறு கின்ற தெந்தை கழறுதி கடிதின் என்றான். 14 (6. தருசெயல் வல்லோன் - படைக்கும் தொழிலில்வல்ல பிரமன். 7. சொற்படு - சத்தவடிவான. நாக்கான் - சிரித்தான். 10. கண்டாய் - முன்னிலையசை. 11. ஓர்செயல் - அழித்தலாகிய ஒரு தொழில். 12. ஒருமையால் - ஒன்றாகி வியாபித்து. பரவும் - நிற்பான். 13. பெரிதும் பேதையோ - நீ மிகவும் பேதையே. பிதாமகன் - பிரமன். 14. பிரமம் - பரம்பொருள்.) என்னலுங் கமலத் தண்ண லியாவருந் தெரிதல் தேற்றா உன்னரும் பெற்றி ஈதென் றுணர்தரக் கேட்டி அன்னான் சொன்னதோர் மறைகள் தம்மில் துணிபுகேள் இறுதி யில்லா முன்னவற் காத லுண்மை ஒழிந்தன முகம னாமால். 15 ஆதலால் ஈசன் அல்லா அனைவர்க்கும் உயிர்க்கும் ஐந்தாம் பூதமா னவைக்கும் ஏற்றம் புகலுதல் முகமா னாகும் ஒதலா மேல தாக ஒருபொருள் புகழ வேண்டின் வேதபா ரகரை அன்றோ யானென விளம்பு கின்றார். 16 யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய் முக்கண் ஆதியை அடையும் அம்மா அங்கது போலத் தொல்லை வேதம துரைக்க நின்ற வியன்புகழ அனைத்தும் மேலாம் நாதனை அணுகும் எல்லா நதிகளுங் கடல்சென் றென்ன. 17 கேளினி மைந்த வேதக் கிளையெலாம் இயம்பு கின்ற சூளுரை சிவனே யெல்லாந் தோற்றுவித் தளித்து மாற்றி மீளவுந் தருகின் றானும் வியனுயிர்க் கருளை நல்கி ஆளும்நா யகனும் ஆதி அந்தமி லோனும் என்னும். 18 அத்தனும் பகவன் தானும் அருவமும் உருவு மாகுஞ் சுத்தனும் உணர்தற் கொண்ணாச் சோதியு மியாண்டு மேவுஞ் சித்தனும் அநாதி தானுந் தேவர்கள் தேவு மென்று நித்தனும் உயிர்க்குள் நீங்கா நிருத்தனும் அவனே என்னும். 19 மூன்றெனும் உலகந் தன்னில் முளைத்திடு பொருளை யெல்லாம் ஈன்றருள் புரியுந் தாதை எனுந்திரயம் பகனும் யார்க்குஞ் சான்றென நிற்கின் றோனும் தாணுவும் பரனுந் தன்னைப் போன்றவர் உயர்ந்தோர் இல்லாப் புங்கவன் தானும் என்னும். 20 அண்ணலும் ஏகன் தானும் அளப்பருங் குணத்தி னானும் கண்ணனும் அயனுந் தம்மால் காணிய நில்லான் தானும் பெண்ணொடாண் அலிய தென்னும் பெற்றியி லோனும் யாரும் எண்ணிய எண்ணி யாங்கே ஈபவன் தானும் என்னும். 21 விதிமுதல் உரைக்க நின்ற வியனுயிர்த் தொகைகட் கெல்லாம் பதியென அருளுந் தொன்மைப் பசுபதி தானும் அன்னோர்க் கதிகனென் றெவருந் தேற ஆங்கவர் துஞ்ச வெந்த பொதிதரு பலியும் என்பும் புனைபவன் தானும் என்னும். 22 (15. முகமன் - உபசார மொழி. 17. இங்கு, “யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே, மாதொரு பாகனார்தாம் வருவர்” எனவரும் சிவஞான சித்தியார் அடிகளை ஒப்புநோக்குக. 21. இங்கு, 'எண்ணிய எண்ணியாங்கே ஈபவன்' என்பதனோடு, “மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே” என்ற அப்பர் சுவாமிகள் தேவார அடி ஒப்புநோக்கற்பாலது. 22. விதி - பிரமன், பலி - சாம்பல்.) ஊன்புகும் எவரை யுந்தன் ஒண்குணத் தொடுக்கித் தானே வான்புக லாகி நின்று மற்றவர் குணங்க ளூடு தான்புக லில்லா தோனுந் தன்னியல் இனைய தென்றே யான்புக லரிய தேவும் ஈசனும் அவனே என்னும். 23 அன்றியும் ஒன்று கேண்மோ அம்புய னாதி யாகி நின்றவர் தம்மை யெல்லாம் நீக்கியச் சிவனென் றுள்ள ஒன்றொரு முதல்வன் தானே உய்த்திடு முத்தி வேண்டின் என்றும்அ· தியம்பிற் றென்னின் யாவரே தேவர் ஆவார். 24 பரசிவன் உணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையு மென்றும் விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல் உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றும் உண்டோ. 25 இன்னமும் பலவுண் டன்னாற் கியம்பிய மறையின் வாய்மை அன்னதை எனக்கும் உன்னி அறையொணா தறைவன் என்னில் பன்னெடுங் காலந் தேயும் பகரினும் உவலா தென்பால் முன்னமீ துணர்ந்தா யேனும் மோகமுற் றாய்கொல் ஐயா. 26 காரெழில் புரையும் மேனிக் கண்ணனை என்னைப் பின்னை ஆரையும் புகழும் வேதம் அரன்றனைத் துதித்த தேபோல் ஓருரை விளம்பிற் றுண்டோ உரைத்தது முகமன் என்றே பேருல கறிய முன்னும் பின்னரும் விலக்கிற் றன்றே. 27 நான்மறை தனிலோர் பாகம் நாரமார் கடவுட் சென்னி மேன்மைய தியம்பும் எம்மை விண்ணவர் தம்மை ஏனைப் பான்மைகொள் பூதந் தன்னைப் பல்பொருள் தனையும் பாதி தான்மொழிந் திடுமால் ஈது தவறல உணர்தி தக்கோய். 28 நம்மையும் பரமென் றுன்னி நாதனிற் சிறப்புச் செய்யும் வெம்மைகொள் நெஞ்சமர் தீரா விழுமவெந் நிரயம் வீழ்வர் தம்மைய· தெடுத்தல் செய்யா சமமெனப் புகல்கிற் போர்கள் எம்மையுந் துயர மென்னும் இருங்கடற் படுப்பர் அன்றே. 29 கானுறு புலித்தோ லாடைக் கண்ணுதற் கடவுட் கன்பர் ஆனவ ரென்றும் அன்னாற் கடித்தொழில் புரிந்து வாழும் வானவ ரென்றும் எம்மை வழுத்தினர்க் கருள்வோம் அல்லா ஏனையர் தம்மைத் தெவ்வென் றெண்ணியே இருந்தும் யாமே. 30 பதியரன் பாசந் தன்னில் பட்டுழல் பசுநாம் என்றே விதியொடு மறைகள் கூறும் மெய்ம்மையைத் தௌ¤ய வேண்டின் இதுவென வுரைப்பன் யாங்கள் இவ்வர சியற்ற ஈசன் அதிர்கழல் அருச்சித் தேத்தும் ஆலயம் பலவுங் காண்டி. 31 அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால் அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான். 32 (26. மோகம் - மயக்கம். 27. என்னை - இங்குப் பிரமனை, ஆரையும் - பிறரையும். 28. நாரம் - கங்கை, பாதிதான் - பாதி வேதம்தான். 30. தெவ் - பகைவர். 32. அவன் - இங்குச் சிவன், யாரும் - மற்றைய உலக வாசிகளும், ஆணை - உறுதி.) ஆகத் திருவிருத்தம் - 32 - - - 2. த க் க ன் ற வ ஞ் செ ய் ப ட ல ம் தந்தை இவ்வகை உரைத்தலுங் கேட்டுணர் தக்கன் முந்து வீடுசேர் செறியினை முன்னலன் முக்கண் எந்தை யால்அயன் முதலவர் தம்மினும் யானோற் றந்த மில்வளம் பெறுவனென் றுன்னினன் அகத்துள். 1 ஏத வல்வினை உழந்திடும் ஊழினால் இதனைக் காத லோடுதனித் தந்தையை வணங்கிநீ கழறும் ஆதி தன்னையான் பரமென அறிந்தனன் அவன்பால் மாத வத்தினால் பெற்றிட வேண்டினன் வளனே. 2 கணிப்பில் மாதவம் புரிதர ஓரிடங் கடிதில் பணித்து நல்குதி விடையென நான்முகப் பகவன் இணைப்பி லாததன் மனத்திடைத் தொல்லைநாள் எழுந்த மணிப்பெ ருந்தடத் தேகென விடுத்தனன் மன்னோ. 3 ஈசன் நல்லருள் அன்னதோர் மானதம் என்னும் வாச நீர்த்தடம் கோகிஓர் சாரிடை வைகி வீசு கால்மழை ஆதபம் பனிபட மெலியாய் பாசம் நீக்குந ராமென அருந்தவம் பயின்றான். 4 காலை நேர்பெற ஓட்டியே கனலினை மூட்டிப் பால மார்பயன் வீட்டியே தன்னுறு படிவத் தேலும் அன்பினில் மஞ்சனம் ஆட்டியே இறைக்குச் சீல மாமலர் சூட்டியுட் பூசனை செய்தான். 5 சுத்தம் நீடிய தன்னுளம் ஒருமையில் தொடர இத்தி றத்தினால் எம்பிராற் கருச்சனை இயற்றிச் சித்த மேல்அவன் நாமமும் விதிமுறை செப்பிப் பத்து நூறியாண் டருந்தவம் புரிந்தனன் பழையோன். 6 (1. முன்னலன் - நினைத்தானல்லன். 2. உ(ன்)னி - நினைத்து. 3. மணிப்பெருந்தடம் - மானச சரோவம் என்னும் அழகிய தடாகம். 5. கால் - பிராணவாயு, கனல் - மூலாக்கினி. 6. பழையோன் - புராதனனான தக்கன்.) அன்னம் ஊர்திசேய் அன்னமா தவஞ்செயும் அதனை முன்னி நல்வளன் உதவுவான் மூரிவௌ¢ ளேற்றில் பொன்னின் மால்வரை வௌ¢ளியங் கிரிமிசைப் போந்தால் என்ன வந்தனன் உமையுடன் எம்மையாள் இறைவன். 7 வந்த செய்கையைத் தெரிதலும் விரைந்தெழீஇ மற்றென் சிந்தை எண்ணமும் முடிந்தன வால்எனச் செப்பி உந்து காதலுங் களிப்புமுள் புக்குநின் றுலவ எந்தை தன்னடி பரவுவல் யானென எதிர்ந்தான். 8 சென்று கண்ணுதல் அடிமுறை வணங்கியே சிறப்பித் தொன்று போலிய ஆயிரந் துதிமுறை யுரையா நின்ற காலையில் உன்செயல் மகிழ்ந்தனம் நினக்கென் இன்று வேண்டிய தியம்புதி யால்கடி தெனலும். 9 ஆற்று தற்கரு தோன்மைய னாகியோன் அமலன் பேற்றின் வேண்டுவ கொள்கென இசைத்தலும் பிறவி மாற்றும் முத்திய திரந்திலன் தொல்விதி வழியே ஏற்ற புந்தியுஞ் சேறலின் மயங்கியீ திசைப்பான். 10 வேறு நீணி லப்பெரு வைப்பும் நிகரிலா வீணை வல்லவர் ஏனையர் மேவிய சேணும் மாலயன் ஊரும் திசையுமென் ஆணை செல்ல அளித்தருள் செய்தியால். 11 உன்னை வந்து வழுத்தும் உயிரெலாம் என்னை வந்து வழுத்தவும் யானினி நின்னை யன்றி நெஞ்சாலும் பிறர்தமைப் பின்னை வந்தியாப் பெற்றியும் ஈதியால். 12 ஆய தேவர் அவுணர்கள் யாரும்யான் ஏய செய்கை இயற்றவும் எற்குநற் சேயி னோர்களுஞ் சிற்றிடை மாதரும் மாய்வில் கொள்கையில் மல்கவும் நல்குதி. 13 ஆதி யாகி அனைத்தையும் ஈன்றநின் பாதி யான பராபரை யான்பெறு மாத ராக மறையவ னாகிநீ காத லாகக் கடிமணஞ் செய்தியால். 14 என்று தக்கன் இயம்பலும் இங்கிது நன்று னக்கது நல்கினம் நன்னெறி நின்றி யென்னில் நிலைக்குமிச் சீரெனா மன்று ளாடிய வானவன் போயினான். 15 (8. பரவுவல் - துதிப்பேன். 9. கடிது - விரைவில். 10. நோன்மையனாகியோன் - இங்குத் தக்கன். 11. வீணை வல்லவர் - கந்தருவர். 13. எற்கு - எனக்கு, மாய்வுஇல் - இறப்பு இல்லாத. 14. பராபரை - பராசக்தி, கடிமணம் - திருமணம். 15. நன்னெறி - சன்மார்க்கம், மன்று - சிற்சபை.) ஈசன் அவ்வரம் ஈந்தனன் ஏகலும் நேச மோடவன் நீர்மையைப் போற்றியே தேசின் மிக்க சிறுவிதி யாரினும் பேசொ ணாத பெருமகிழ் வெய்தினான். 16 ஓகை மேயவன் ஓதிம வூர்திமேல் ஏகும் ஐயனை எண்ணலும் அச்செயல் ஆக மீதுகண் டன்னவன் மங்கையோர் பாகன் ஈந்த பரிசுணர்ந் தானரோ. 17 வேறு பெற்றிடு மதலை யெய்தும் பேற்றினை அவன்பால் மேல்வந் துற்றிடு திறத்தை யெல்லாம் ஒருங்குற வுணர்வால் நாடித் தெற்றென உணர்ந்து தக்கன் சிவனடி உன்னிப் பன்னாள் நற்றவம் புரிந்த வாறும் நன்றென உயி£¢த்து நக்கான். 18 முப்புர முடிய முன்னாள் முனிந்தவன் நிலைமை யான மெய்ப்பொருள் பகர்ந்தேன் மைந்தன் வீடுபெற் றுய்ய அன்னான் இப்பரி சானான் அந்தோ என்னினிச் செய்கேன் நிம்பங் கைப்பது போமோ நாளுங் கடலமிர் துதவி னாலும். 19 ஆலமார் களத்தோன் தானே ஆதியென் றுணர்ந்து போந்து சாலவே இந்நாள் காறுந் தலையதாந் தவத்துள் தங்கி ஞாலமேல் என்றும் நீங்கா நவையொடு பவமும் பெற்றான் மேலைநாள் வினைக்கீ டுற்ற விதியையார் விலக்க வல்லார். 20 செய்வதென் இனியான் என்னாச் சிந்தையின் அவலஞ் செய்து மைவளர் தீய புந்தி மைந்தனை அடைந்து வல்லே மெய்வகை யாசி கூறி மேவலும் வெய்ய தக்கன் இவ்விடை நகர மொன்றை இயற்றுதி ஐய வென்றான். 21 அன்னஅத் தக்கன் கூற இமைப்பினில் அமைப்பன் என்றே கொன்னுறு கமலத் தண்ணல் குறிப்பொடு கரங்க ளாலே தன்னகர் என்ன ஒன்று தக்கமா புரியீ தென்றே பொன்னகர் நாணுக் கொள்ளப் புவியிடைப் புரிந்தான் அன்றே. 22 அந்தமா நகரந் தன்னில் அருந்தவத் தக்கன் சென்று சிந்தையுள் உவகை பூத்துச் சேணகர் தன்னுள் ஒன்றும் இந்தவா றணிய தன்றால் இணையிதற் கி·தே என்னாத் தந்தைபால் அன்பு செய்து தன்பெருங் கோயில் புக்கான். 23 (16. சிறுவிதி - தக்கன். 17. ஓதிமம் - அன்னம், ஆகம் - மனம். 18. உயிர்த்து - பெருமூச்சு விடுத்து. 19. நிம்பம் - வேம்பு, கைப்பது - கசப்பது. 20. ஆதி - முழுமுதற் கடவுள், பவம் - பிறவி. 22. கொன்உறு - பெருமை பொருந்திய, தக்கமாபுரி - தக்கன் நகரம், புவியிடை - பூமியில். 23. அணியதன்று - அழகானதன்று.) தன்பெருங் கோயில் எய்தித் தவமுனி வரர்வந் தேத்த மன்பெருந் தன்மை கூறும் மடங்கலந் தவிசின் உம்பர் இன்புறு திருவி னோடும் இனிதுவீற் றிருந்தான் என்ப பொன்புனை கிரியின் மீது பொலஞ்சுடர்க் கதிருற் றென்ன. 24 கேசரி அணையின் மீது கெழீஇயின தக்கன் எண்டோள் ஈசன்நல் வரம்பெற் றுள்ள இயற்கையை ஏமஞ் சான்ற தேசிக னாகும் பொன்போய்ச் செப்பலுந்* துணுக்க மெய்தி வாசவன் முதலா வுள்ள வானவர் யாரும் போந்தார். 25 (பா-ம் * துன்ப) வானவர் போந்த பான்மை வரன்முறை தெரிந்து மற்றைத் தானவர் குரவ னானோன் தயித்தியர்க் கிறையைச் சார்ந்து போனதுன் னவலம் அஞ்சேல் புரந்தரன் தனக்குத் தக்கன் ஆனவன் தலைவ னானான் அன்னவன் சேர்தி என்றான். 26 சேருதி யென்னு மாற்றஞ் செவிதளிர்ப் பெய்தக் கேளா ஆரமிர் தருந்தி னான்போல் அகமுறும் உவகை பொங்க மேருவின் ஒருசார் வைகும் வெந்திறல் அவுணா கோமான் காரென எழுந்து தொல்லைக் கிளைஞரைக் கலந்து போந்தான். 27 ஆளரி ஏறு போலும் அவுணர்கோன் சேற லோடும் வாளுறு கதி£¢ப்புத் தேளும் மதியமும் மற்று முள்ள கோளடு நாளும் ஏனைக் குழுவுறு கணத்தி னோரும் நீளிருந் தடந்தேர் மீதும் மானத்தும் நெறியிற் சென்றார். 28 மங்குல்தோய் விண்ணின் பாலார் மாதிரங் காவ லோர்கள் அங்கத நிலயத் துள்ளா£¢ அனையவர் பிறரும் உற்றார் இங்கியவர் யாருந் தக்கண் இணையடி வணங்கி ஈசன் பொங்குபே ரருளின் ஆற்றல் புகழந்தன ராகி நின்றார். 29 அவ்வகை முளரி அண்ணல் ஆதியாம் அமரர் தத்தஞ் செய்வினை யாக வுன்னி வைகலுஞ செறிந்து போற்ற மெய்வகை உணராத் தக்கன் வியன்மதிக் குடையுங் கோலும் எவ்வகை உலகுஞ் செல்ல இருந்தர சியற்றல் செய்தான். 30 ( 24. பொன்புனைகிரி - மேருமலை, பெருந்தன்மை கூறும் - பெருந்தன்மையினைக் காட்டும். 25. ஏமம் - கலக்கம். பொன் - வியாழன், துணுக்கம் - நடுக்கம், வாசவன் - இந்திரன். 26. தானவர் குரவன் ஆனோன் - சுக்கிரன், தயித்தியர்க்கு இறை - அசுராதிபன். 28. ஆளரிஏறு - நரசிங்கம், மானம் - விமானம். 29. அங்கதநிலையத்துள்ளர் - பாதலத்தார்.) ஆகத் திருவிருத்தம் - 62 - - - 3. த க் க ன் ம க ப் பெ று ப ட ல ம் ஆங்கவன் தேவி யானாள் அருந்ததிக் கற்பின் மிக்காள் வாங்கிய நுசுப்பின் நல்லாள் மறைக்கொடி யெனுநா மத்தாள் பூங்கம லத்துப் புத்தேள் பொன்னடி தன்னில் வந்தாள் ஓங்குதொல் லுலகுக் கெல்லாம் ஒருதனி முதல்வி யானாள். 1 வேறு சேயிழை அவளடு செறிந்து புல்லியே மீயுயர் கமலமேல் விரிஞ்சன் காதலன் மாயிரும் பணிபதி மணிகள் ஈன்றென ஆயிர மைந்தரை அருளி னானரோ. 2 அப்பெரு மைந்தர்கள் ஆயி னோர்க்கெலாம் முப்புரி நூல்விதி முறையின் ஆற்றியே செப்பரு மறைகளின் திறமும் ஈந்துபின் இப்பரி சென்றினை இசைத்தல் மேயினான். 3 நல்லதோர் மானதம் நணுகி நீவிர்கள் எல்லிரும் ஈசனை எண்ணி நோற்றிரீஇப் பல்லுயி ருந்தரும் பரிசு பெற்றிவண் செல்லுதி ராலெனச் செப்பி ஏவினான். 4 ஏயின காலையில் இறைஞ்சி மைந்தர்கள் போயினர் மானதப் பொய்கை புக்கனர் ஆயிடைப் படிந்தனர் அரனை உன்னியே மாயிரு நோன்பினை இயற்றி வைகினார். 5 நேரற இன்னணம் நெடிது நோற்புழி நாரதன் என்பவன் நண்ணி ஆயிடை வாரியுள் ஆற்றவும் வருந்து கிற்றிரால் காரியம் யாவது கழறு வீர்என்றான். 6 என்னலும் முனிவகே ளியாங்கள் **நல்கிடும் முன்னுற நல்குவான் முயன்று முக்கணான் தன்னடி உன்னியே தவத்தை ஆற்றுதும் அன்னதும் எந்தைதன் ஆணையா லென்றார். 7 (பா-ம் **நல்கிட.) அறிந்திடு முனிவரன் அதனைக் கேட்டலுஞ் செறிந்திடு கரத்தொடு செங்கை தாக்குற எறிந்தனன் நகைத்தனன் இதுகொல் ஈசனால் பெறும்பரி சேயெனப் பின்னுங் கூறினான். 8 (1. மறைக்கொடி - வேதவல்லி. 3. மறைகளின் திறம் - வேதங்களை ஓதும் தன்மைகள். 4. பல்லுயிரும் தரும் பரிசு - பலவுயிர்களையும் படைக்கும் தன்மை.) ஈசனை யேநினைந் திறைஞ்சி யேத்தியே பேசரும் அருந்தவம் பிடித்து மூவகைப் பாசம தகல்நெறி படரச் சிந்தியீர் ஆசுறு படைப்பினுக் கார்வஞ் செய்திரோ. 9 சிறப்புள அருந்தவஞ் செய்து நீர்இனி உறப்படு கதிமுறை உரைப்பக் கேட்டிரால் பிறப்புள திடருள தன்றிப் பின்னரும் இறப்புள ததுநுமக் கினிய தாகுமோ. 10 இன்றுநீர் வெ·கிய தியற்று நான்முகன் தன்றலை ஐந்தினில் ஒன்று சங்கரன் பொன்றிகழ் கரங்கொளப் புகுந்த தீமையும் நின்றதோர் பழியையும் நினைக்கி லீர்கொலோ. 11 என்னல திறையவா¢ இல்லை யார்க்கும்யான் முன்னவன் என்றுநான் முகத்தன் மாலொடு பன்னெடு நாளமர் பயின்று சோதிகண் டன்னம தானதும் அறிந்தி லீர்கொலோ. 12 நேயமெண் ணுற்றென நிறைந்த கண்ணுதல் நாயகன் விதித்திட நம்மில் யாவையும் ஆயவென் றகந்தையுற் றமர்வன் அன்னவன் மாயமென் றுரைத்திடுந் தளையின் வன்மையால். 13 பற்றொடு முழுதுயிர் படைக்கும் பான்மையால் பெற்றிடு பயனெவன் பெருமை யல்லது நற்றவ முனிவிர்காள் நன்கி தென்றொரு பொற்றளை தம்பதம் பூட்ட லாகுமோ. 14 எத்துணை எத்துணை இன்பம் வேண்டுநர்க் கத்துணை அலக்கண்வந் தடையும் ஆங்கது மெய்த்திறம் நீவிரும் விதியின் நிற்றிரேல் கைத்துறு துயரெனுங் கடலில் சா£¢திரால். 15 அன்றியும் ஈசனை அயர்த்தி யாமிறை என்றுளம் உன்னுதிர் இசைவில் தீவினை மன்றவு மாற்றுதிர் மயக்கங் கொள்ளுதிர் ஒன்றிய பேருணா¢ வொருவிப் போதிரால். 16 வீட்டிடும் இச்செயல் வீடு சேர்தர மோட்டுறு நிலைகொடு முயன்று கூடுதிர் ஈட்டுறு நன்னெறிக் கியைவ தொன்றினைக் காட்டியே இனைத்தெனக் கழற லாகுமோ. 17 (9. மூவகைப் பாசம் - ஆணவம் முதலியவை. 10 உறப்படு - அடையத்தக்க. 11. வெ·கியது - பெற விரும்பியது. 13. நேயமெண்ணுற்றென நிறைந்த - எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்த(நேயம்-நெய், எண்-எள்), தளை - பாசம். 14. பொற்றளை - பொன்விலங்கு. 15. கைத்துறு - வெறுக்கத்தக்க.) அற்றமில் தவம்புரிந் தரிய வீட்டினைப் பெற்றவர் அளப்பிலர் பெறுவ தாகியே உற்றவர் அளப்பிலர் உலகில் சிற்சில மற்றவர் தமதியல் வகுப்பக் கேண்மினோ. 18 சுற்றம தரனடித் தொண்டர் அல்லது மற்றிலர் அவனடி மலர்க ளேயலால் பற்றிலர் சாலவும் இனிய பண்பினா¢ குற்றம தகன்றதோர் கொள்கை மேயினார். 19 நேசமுற் றடைபவர் நினைப்பின் நீக்கரும் ஆசறுத் தருள்பொழி அறிவின் மேலையோர் ஈசனைக் குறுகியெஞ் ஞான்றும் வாழபவர் பேசுதற் கரியதோர் பெருமை எய்தினார். 20 ஆதலின அவரென அவாஇன் றுற்றிடு மேதகு நெறியுறீஇ வீடு சேருதிர் ஏதமில் வெறுக்கைபெற் றெண்ணந் தீர்ந்திடுந் தாதைதன் பணியினைத் தவிர்திர் என்னவே. 21 அந்தமில் வீடுபே றடையும் ஊழுடை மைந்தர் கள்ஓர்புடை வந்து தேர்வுறாத் தந்தைசொல் லினுமது தக்க தேயெனப் புந்திகொண் டடிகளை வணங்கிப் போற்றினார். 22 வேறு போற்று மைந்த ரைப்பெரும் புறந்தழீஇ அரன்புகழ் சாற்றி வீடு வெ·குறுந் தவத்தினோர்கள் நிலையினைத் தேற்றி மந்தி ரங்களுஞ் செயற்கையும் புணர்த்தியே மாற்றினன் தொல்லுணர்வு தன்னை மற்றொருண்மை உதவினான். 23 வேறொ ருண்மை உதவல்செய்து விதியின்நாடி வேதநூல் கூறு கின்ற முறைபுரிந்து குமரர்யாரும் இன்னணம் ஈறின் மாத வங்கள்ஆற்றி எல்லைதீர்ந்த முத்தியில் சேறி ரென்று முனிவன்ஒல்லை சேணெழுந்து போயினான். 24 போகு நார தற்புகழ்ந்து பொன்னடித் தலத்தின்மேல் ஓகை யோடு தாழ்ந்துமுன் உணர்த்துபான்மை உன்னியே மோக மாதி யானதீமை முழுதுமாற்றி மோனிகள் ஆகி மைந்தர் எவரும் அங்கண்ஆற்றினார் அருந்தவம். 25 (21. வெறுக்கை - செல்வம். 22. ஊர்உடை - ஊழ்வினையினையுடைய, அடிகளை - நாரதன் அடிகளை. 23. புறந்தழீஇ - மார்பொடு தழுவி, ஒரு உண்மை - ஒப்பற்ற முத்திநிலையின் உண்மையினை. 24. வேறொருண்¢மை - ஞானநிலை.) அருந்த வங்கள் பலவும்ஆற்றி அவர்கள்வீடு சேர்தலும் இருந்த வம்பு ரிந்த தக்கன் இளைஞர்பெற்றி இன்னமுந் தெரிந்த தில்லைஎன்று சிந்தை செய்துபோத வுணர்வினால் பொருந்த நோக்க லுற்ற வட்பு குந்த பான்மை கண்டனன். 26 மானதத்த டத்தி னூடு மாற்றருந்த வத்தராய் மோனமுற்ற சிறுவர் பாலின் முன்னிவந்து நாரதன் ஞானமுற்று மோதி யென்சொல் நவையதென்று மாற்றியே மேனிலைக்கண் உய்த்து மீண்டு விண்படர்ந்து போயினான். 27 மிக்க மைந்தர் அவன் உரைத்த விதியினின்று வீடுபே றொக்க லோடுமே யினார்கள் ஒருவரின்றி எற்கினி மக்க ளின்றெனத் தெரீஇ வருத்தமுற்றி ருந்திடுந் தக்கன் மற்றும் ஆயிரந் தவச்சிறாரை உதவினான். 28 பெற்ற மைந்தரைத் தழீஇப் பிறங்குகாமர் மீச்செல அற்றமில் சிறப்பின் வேதம் அறிவுறுத்தி ஆதியாம் நெற்றியங் கணானை உன்னி நீவிர்யாவும் நல்குவான் நற்ற வஞ்செய் தணைதிர் மாதத்துடத் தில்என்னவே. 29 கேட்ட மைந்தர் தாதைதாள் கெழீஇயதங்கள் சென்னியில் சூட்டி ஏவல் போற்றிஅன்ன தூமலர்த் தடத்திடை ஈட்ட மோடு சென்றிருந் திருந்தவம் புரிந்தனர் காட்டி லுள்ள கயமுனிக் கணங்கள்அங் கணுற்றென. 30 வேறு ஆன காலையில் அனைய மைந்தர்கள் றுன மின்றிநோற் றொழுக முன்னரே போன நாரதன் புணர்ப்பொன் றோர்ந்திடா மான தத்தட மருங்கில் எய்தினான். 31 எய்தி யாவர்நீர் யாரும் மாதவஞ் செய்திர் எப்பொருள் சேர்தல் வெ·கினீர் நொய்தில் அன்னது நுவல வேண்டுமால் கைத வம்பெறாக் கருத்தி னீரென. 32 தந்தை யாகியோன் தக்கன் ஆங்கவற் கந்தி வண்ணனார் அருளும் பேற்றினால் வந்த மைந்தரேம் யாங்கண் மற்றவன் இந்த வான்தடத் தெம்மை ஏவினான். 33 தேவ தேவனைச் சிந்தை யிற்கொடே ஆவி யோடுடல் அலச நோற்றிரீஇ ஓவில் பல்லுயிர் உதவல் பெற்றிட ஏவி னானெமை என்று சொற்றனர். 34 (26. போதவுணர்வு - ஞானவுணர்ச்சி. 27. மோனம் - மௌனநிலை. 28. மற்றும் - பின்னறும். 30. கயமுனிக்கணங்கள் - யானைக்கன்றுகள். 32. நொய்தில் - விரைவில், கைதவம் - வஞ்சனை. 33. அந்திவண்ணனார் - சிவன்.) சொற்ற காலையில் துகளில் தூயவன் நற்ற வஞ்செய்வீர் தாதன் தாளையே பற்ற தாவுளீர் பயனென் றுன்னலீர் குற்றம் யாவரே குறுக லார்களே. 35 நோற்றி யாவையும் நோக்கிச் செய்வினைப் பேற்றை எய்துவீர் பிறப்பு மாய்வது மாற்று வீரலீர் மயக்கந் தீர்திரோ ஏற்றம் என்கொல்நீர் றீரினும். 36 மேய மாசுதோய் விழைவின் மெய்யினர் தூய தோ£¢தடந் துறையை எய்தியுஞ் சேய சேதகந் திளைத்தல் போலுமால் நீயிர் கொண்டதோர் நிலைமை தானுமே. 37 தலைய தாகிய தவந்த னக்குநீர் விலைய தாப்பெறும் விதியின் செய்கையும் நிலைய தாகுமோ நீடு நாளடே உலக மீதுசீர் உறுவ தன்றியே. 38 போவதும் வருவதும் பொருமலும் நன்குமின் றாவதோர் கதியதே ஆருயிர்க் குறுதியாம் நீவிரக் கதியினை நினைகிலீர் இறுதியும் ஓவரும் பிறவியும் உம்மைவிட் டகலுமோ. 39 சிறுவர்தம் முள்ளமுஞ் சேயிழை மகளிர்தம் அறிவுமா லெய்தினோர் சிந்தையும் ஆனவால் உறுவதோர் பனுவலும் உற்றிடும் பெற்றியே பெறுவதாம் அன்றியே பின்னரொன் றாகுமோ. 40 ஆதலால் உங்களுக் கருள்செயுந் தன்மையான் தாதையா கின்றதோர் தக்கனே எனின்அவன் பேதையாம் ஈசனால் பெருவளம் பெற்றவன் பாததா மரையினில் பரிவுறா நெறிமையால். 41 ஆங்கவன் மையலோன் ஆதலால் அவனருள் நீங்களும் அனையரே நெறிதருந் தேசிகன் தீங்கெலாம் நீக்கியே சிவகதிப் பாற்பட ஓங்குபேர் அருளடும் உணர்த்துவான் அல்லனோ. 42 (36. ஈகின்றீர் - படைக்கப் போகின்றீர். 37. சேதகந்திளைத்தல் - சேற்றினைப் பூசிக்கொள்ளுதல். 39. பொருமலும் - துன்புறுதலும், நன்கும் - இன்படைதலும். 41. பரிவுஉறா - அன்பு பொருந்தாத. 42. ஆங்கவன் - அத்தக்கன், நெறி - ஞானமார்க்கம், அல்லனோ - அல்லவா.) முந்துமா யிரவரும் முன்பரிப் பொய்கைவாய்த் தந்தைதன் பணியின்மூ தாதைபோல் நல்கவே வந்துளார் நோற்றுழி மயலறத் தேற்றியே அந்தமா நெறிநிறீஇ அரியவீ டருளினாம். 43 என்னலும் நாரதன் எழில்மலர்த் தாளிணை சென்னிமேற் சேர்த்தியே சிறியரேம் உய்யவே உன்னியீண் டேகிநீர் உணர்த்துமெய்ந் நெறியினை இன்னதென் றுணர்கிலேம் எமக்கருள் புரிதிரால். 44 என்பவர்க் கருள்புரிந் தெண்ணிலார் வத்தொடு நன்பொருட் காட்சியை நானுமக் குதவியே வன்புலத் தாறுபோய் மதிமருண் டின்பமுந் துன்புமுற் றுழல்பவந் தொலைவுசெய் திடுவனால். 45 ஆதியார் தாளிணை அருளடே வழிபடும் நீதியாம் நீரினார் நிலைமையாய் நின்றிடும் பாதநான் கவர்பெறும் பதமுநான் கதனுளே ஓதியார் பெறுவதோர் உயர்பெருங் கதியதே. 46 முத்தியென் றிடுவதே மொழிவதோர் நாமமாம் அத்திறங் கடவுளர்க் காயினுந் தெரிவதோ நித்தன்அன் புறுவதோர் நெறியராய் இருவினை ஒத்தபண் போர்களால் உணரலாம் அல்லதே. 47 அந்நிலைக் கண்ணுளார் ஆதியார் தாளடைந் தின்னலுக் கிடையதாம் இப்பெரும் பிறவியுட் பின்னருற் றிடுகிலர் பேசுதற் கரியதோர் நன்னலத் தொடுகெழீஇ நாளுமின் புறுவரே. 48 ஆதலால் நீவிரும் அந்நெறிப் பாலுறீஇ மேதைசால் யோகினால் வீடுசே ருதிரெனா ஆதியாம் இறைவனூல் அறையுமுண் மைகளெலாம் நாதனார் அருளினால் நாரத னுரைசெய்தான். 49 அன்றுநா ரதமுனி அவரெலாம் அவ்வழி நின்றிடும் படிநிறீஇ நெறிகொள்வா னுலகமேல் சென்றனன் பின்னரச் சிறுவரா யிரவரும் ஒன்றுசிந் தனையினால் உயர்தவத் தொழுகினார். 50 உயர்தவக் கிழமையில் ஒழுகியே யுற்றுளோர் மயல்தொலைத் தருள்சிவன் மன்னுபே ரருளினால் வியனெறிப் பாலதாம் வீடுபே றெய்தினார் அயன்மகற் கினிமைகூர் ஆயிரங் குமரரும். 51 (43. மூதாதைபோல் - பிரமனான பாட்டனைப்போல். 46. பாதம் நான்கு - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன; பதம் நான்கு - சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்; ஓதியார் - ஞானமுடையவர். 47. கடவுளர் - தேவர்.) உங்ஙனம் நாரதன் ஓதிய துணர்வுறா இங்ஙனம் வீடுபே றெய்தலுஞ் சிறுவர்கள் எங்ஙனம் போயினார் இன்னும்வந் திலரெனா அங்ஙனஞ் சிறுவிதி அயருவான் ஆயினான். 52 வேறு போதத் துணர்வால் அவர்க்கண்ணுறும் போழ்து தன்னின் மேதக்க மைந்தர் தமைநாரதன் மேவி மேலாம் ஓதித் திறமுள்ளன கூற உணர்ந்து நோற்றுத் தீதற்று வீடு புகுதன்மை தெரிந்த தன்றே. 53 தெரிகின்ற வேலைக் கிளர்கின்றது சீற்றம் உள்ளம் பரிகின்ற தாவி பதைக்கின்றது பையுள் மாலை விரிகின்ற தம்மா வியர்க்கின்றது மேனி விண்ணின் றிரிகின் றதுகோள் இரங்குற்றது ஞால மெல்லாம். 54 தன்பா லகர்தஞ் செயல்கண்டு தளர்ந்து சோரும் வன்பா லினனா கியதக்கன் வரத்தை வேண்டும் என்பாலர் என்பால் இலதாக்கினன் எண்ண மிக்கு நன்பா லுலகத்து ழல்வானினி நாளு மென்றான். 55 மேனா ரதன்செய் புணர்ப்புன்னி வெகுண்டு தக்கன் நோனாது சாபம் நுவன்றே நனிநோற்க மைந்தர் ஆனாரை நல்கேன் மகப்பெற்ற தமையு மென்னா மானார் தமையே புரியத்தன் மனம்வ லித்தான். 56 வேறு இருபதின் மேலும் மூவர் ஏந்திழை மாரை நல்கிப் பெருமை கொள்தக்கன் தன்மன் பிருகுவே மரீசி யென்போன் கருணை கொள்பு லத்தியன் அங்கிராப் புலகன் வசிட்டன் திரிவில் அத்திரி தீவேள்வி சீர்ப்பி தராவுக் கீந்தான். 57 துய்யதோர் சுபுத்தி புத்தி சுரசையே திருதி துட்டை செய்யநற் கிரியை கீர்த்தி சிரத்தையோ டிலச்சை மேதா மைவிழிக் கத்தி சாந்தை வபுவைமுன் தருமன் வேட்டுப் பொய்தவிர் இருபா னேழு புதல்வரை அளித்தான் மன்னோ. 58 கேதமில் பிருகு என்பான் கியாதியைக் கொண்டு புல்லி ஏதமில் விதாதாத் தாதா என்றிரு சிறாரை ஈன்று சீதள வனசங் கொண்ட செந்திரு வையுமுன் தந்து மாதவன் தனக்கு நல்கி மாதவத் திருந்¢தான் மாதோ. 59 (54. பையுள்மாலை - துன்பவரிசை, கோள் - நவக்கிரகம், இரிதல் - விலகி ஓடுதல். 56. மானார்தமை - பெண்மக்களை. 57. தன்மன் - தருமன், தீ - அக்கினிதேவன், வேள்வி - பலி; இ·து இங்குக் கிரது என்பவரை குறிக்கும் போலும். 59. செந்திரு - இலக்குமி, மாதவன் - திருமால், மாதவம் - சிறந்த தவம்.) தாரணி புகழ்ம ரீசி சம்பூதி தன்னை வேட்டாங் கீரிரு பிணாக்கள் ஈந்தான் இவர்வழிப் பிறந்தார் பல்லோர் போரியல் புலத்தை வென்ற புலத்திய முனிவன் என்பான் நாரிசன் னதியை வேட்டு நன்மகார் பலரைத் தந்தான். 60 அங்கிரா மிருதி என்னும் ஆயிழை தனைம ணந்து பங்கமில் அங்கி தீரன் பரதனாம் மகாரைப் பெற்று மங்கையர் நால்வர் தம்மை மகிழ்ந்துடன் அளித்தான் அன்னார் தங்குடிப் பிறந்த மேலைத் தவத்தரும் அளப்பி லோரால். 61 பெருமைகொள் புலகன் என்போன் பிருதியைக் கொண்டு தத்தாத் திரிதனைப் பயந்தான் அன்னோன் சீர்வழிக் கும்பன் போந்தான் ஒருமைசேர் வசிட்டன் என்போன் ஊற்சையை மணஞ்செய் தாங்கோர் தெரிவையை நல்கி மைந்தர் எழுவரைச் சிறப்பில் தந்தான். 62 அத்திரி என்னு மேலோன் அனசூயை தன்னை வேட்டுச் சத்தி நேத்திரனே திங்கள் சனிசங்க தானன் என்னும் புத்திரர் தம்மைத் தந்தான் பொங்குதீச் சுவாவை வேட்டு மெய்த்திறல் படைத்த மைந்தர் மூவரை விரைவொ டீந்தான். 63 கவிபுகழ் கிரது வானோன் கமைதனை மணத்திற் கூடி உவகையின் மூன்று பாலர் உதவினன் பிதரா என்போன் கவதையென் றிசைக்க நின்ற துடியிடை தன்னை வேட்டுத் தவலருஞ் சிறப்பின் மேனை தரணிமங் கையரைத் தந்தான். 64 அந்தநன் மேனை தன்னை ஆர்வமோ டிமவான் கொண்டான் முந்துறு தரணி தன்னை முறையினால் மேரு வேட்டு மந்தர கிரியை நல்க மற்றது நோற்று முக்கண் எந்தைதன் னிடத்தெஞ் ஞான்றும் இருந்திடப் பெற்ற தன்றே. 65 விண்ணுயர் மேருப் பின்னர் வேலையென் பவனை நல்கித் தண்ணுறு கடற்கு நல்கச் சரவணி என்ன ஆங்கோர் பெண்ணினை அனையன் பெற்றுப் பெரும்புகழப் பிராசி னப்பேர் அண்ணலுக் குதவ அன்னான் ஈயிரு மகாரைத் தந்தான். 66 (64. கவி - கவிந்த, தரணி - பூமி. 65. இமவான் - மலையரசன், மேரு - மேருமலை.) ஆகத் திருவிருத்தம் - 128 - - - 4. ச ந் தி ர சா ப ப் ப ட ல ம் இன்னபல் கிளைகள் மல்க இருந்திடுந் தக்கன் பின்னர்த் துன்னிய நாண்மீ னத்துள் தொகைபெறும் இருபா னேழு கன்னியர் தம்மை நல்கிக் கடிமண விதியி னீரால் தன்னிகர் இல்லாப் பொற்பின் தண்மதிக் கடவுட் கீந்தான். 1 ஈந்தபின் மதியை நோக்கி யார்க்குமோர் பெற்றித் தாக வாய்ந்திடும் ஆர்வம் உய்த்து மருவுதி சிலர்பால் அன்பில் தோய்ந்தொரு சிலரை எள்ளிச் சுளிகிற்பாய் அல்லை என்னா ஆய்ந்திவை புகன்று தேற்றி அனையரோ டேகச் செய்தான். 2 ஏகிய கடவுட் டிங்கள் இலங்கெழில் மானத் தேறி மாகநீள் நெறியிற் போந்து மடந்தையர் அவரை யெல்லாம் ஓகையால் மேவ வுன்னி ஓர்பகற் கொருவர் பாலாய்ப் போகமார் இன்ப மாற்றி வைகலும் புணர்ச்சி செய்தான். 3 இன்னணம் புணர்ச்சி போற்றி ஏகிய திங்கட் புத்தேள் பன்னியர் அனையர் தம்மில் பழுதிலா ஆரல் தானும் பின்னவன் தானும் ஆற்றப் பேரெழி லுடைய ராக அன்னவர் திறத்து மேலாம் ஆர்வமோ டணுக லுற்றான். 4 ஏனையர் தம்பால் சேரான் இருதுவின் வேலை பூத்த தேனிமிர் சொல்லார் மாட்டுச் சேருறாக் கணவ ரேபோல் வானிடை மதியப் புத்தேள் மறுத்தனன் திரியும் வேலை ஆனதோர் பான்மை நோக்கி அவரெலாம் முனிந்து போனார். 5 போந்தனர் தக்கன் தன்பால் பொருமியே பொலம்பூட் கொங்கை ஏந்திழை மாதர் தங்கள் கேள்வன தியற்கை கூறக் காந்திய உளத்த னாகிக் கனன்றவன் கலைகள் எல்லாம் தேய்ந்தில வாக என்று தீமொழிச் சாபஞ் செய்தான். 6 செப்பருந் திருவில் வைகுஞ் சிறுவிதி என்பான் சொற்ற இப்பெருஞ் சாபந் தன்னால் என்றுமெஞ் சாத திங்கள் ஓப்பருங் கலைகள் வைகற் கோரொரு கலையாய் அ·காப் பொய்ப்பெருஞ் செல்வம் பெற்றோன் புகழெனக் குறைந்த அன்றே. 7 மூன்றுறழ் ஐந்து வைகல் முடிந்துழி மதியம் என்போன் ஆன்றதண் கலையின் மூவைந் தழிதலும் அவனே யென்னச் சான்றுரை செய்தல் போல்ஓர் தண்கலை இருத்த லோடும் மான்றனன் மெலிந்து வௌ¢கி வானவர் கோனை உற்றான். 8 தக்கனென் பவன்சா பத்தால் தணகலை அனைத்தும் போகி இக்கலை யொன்று நின்ற தீதும்இன் றிறக்கும் என்னில் மிக்கஎன் னியல்புங் குன்றும் வியன்பெயர் தொலையும் யாண்டும் புக்கதொல் புகழும் போகும் புகல்வசை யாகும் அன்றே. 9 ஈங்கினிச் செய்வ தென்னோ உணர்கிலேன் எற்கோர் புந்தி தீங்கற வுரைத்தி யென்னச் செப்பினன் இரங்கி ஏங்கித் தாங்கரும் பையுள் வேலை சார்தலுந் தழுவி எற்கோர் பாங்கனை அஞ்சல் என்னா இவைசில பகர்தல் உற்றான். 10 (1. நாண்மீன் - நட்சத்திரம், கடிமணம் - விவாகம், தண்மதிக்கடவுள் - சந்திரன். 2. சுளித்தல் - கோபித்தல். 4. ஆரல் - கார்த்திகை, பின்னவள் - இங்கு உரோகணி. 5. பூத்த இருதுவின் வேலை - மாதவிருது அடைந்த காலத்தில், தேனிமிர் சொல்லார் - பெண்கள். 7. வைகல் - நாள், அ·கா - குறைந்து. 8. அவனே - அச்சந்திரனே, மான்றனன் - மயங்கி. 10. பையுள் வேலை - துன்பக்கடல், பாங்கனை - தோழனே.) எந்தைவாழ கயிலை தன்னில் இபமுகன் முதிரை யாவுந் தந்தபே ரகடும் அங்கைச் சகுலியும் நோக்கி நக்காய் அந்தநாள் அனையான் சீறி ஆரும்நிற் காணா ராகி நிந்தைசெய் தகல வேநீ நீசரின் திகழ்தி என்றான். 11 என்றவச் சாபந் தன்னா லியாவரும் இறப்ப எள்ளி அன்றுதொட் டுனைநோக் காராய் அகலநீ வௌ¢கி விண்மேல் சென்றிலை ஒடுங்கல் நாடித் திசைமுகன் முதலோர் வௌ¢ளிக் குன்றிடை ஏகி முன்னோன் குரைகழல் பணிந்து சொல்வார். 12 காண்டகு நினது மேன்மை கருதிடான் இகழ்ந்து மாசு பூண்டனன் அதனால் திங்கள் பொருமலுற் றொடுங்கும் அன்னான் வேண்டுமிவ் வுலகிற் கெந்தை விதித்திடு சாபத் தன்மை ஆண்டொரு வைகல் போற்ற அருள்புரிந் தளித்தி என்றார். 13 ஙூயங்கரன் அதனைக் கேளா அவ்வகை அருள வெய்யோன் திங்களின் முதலாம் பாலிற் செல்லுறு நாலாம் வைகல் மங்குல்சூ ழுலகம் நோக்கா மரபினால் வதிந்தாய் மற்றப் புங்கவற் கந்நாள் மிக்க பூசனை புரிய மேலோர். 14 இதுபழி ஒன்று நிற்க இன்றுநீ தக்கன் தன்னால் புதியதோர் குறையும் பெற்றாய் பொலிவொடு திருவுந் தீர்ந்தாய் மதியினை மதிய தற்றாய் மற்றினி வல்லை சென்று விதியொடு பகர்தி சேயை வேண்டியீ தகற்று மென்றான். 15 வச்சிரம் எடுத்த செம்மல் மற்றிவை புகலும் எல்லை இச்செயல் இனிது வல்லே ஏகுவல் அவ்வா ரென்னா அச்சென வெழுந்து திங்கள் அவன்பணி தலைக்கொண் டேகி முச்சகந் தன்னின் மேலாம் முளரியான் உலகம் புக்கான். 16 தாமரை என்னுந் தண்பூந் தவிசிடைத் திகழ்ந்த அண்ணல் மாமல ரடியின் வீழா மாதுலன் வெகுண்டு சொற்ற தீமொழி யுணர்த்தி உன்றன் சேயினைத் தெருட்டித் தீயேன் தோமுறு கவலை மாற்றித் துடைத்திஇச் சாப மென்றான். 17 அன்னது மொழிந்த திங்கட் கம்புயன் மொழிவான் ஈண்டுத் தன்னுள நெறிப்பால் அன்றிச் சார்கிலன் தக்கன் என்பான் என்னுரை இறையுங் கொள்ளான் யான்அவன் மாட்டுஞ் செல்லேன் முன்னுளன் அல்லன் யார்க்கும் முதல்வனே யாகி நின்றான். 18 (11. இபமுகன் - விநாயகக் கடவுள், முதிரை - சுடலை, அகடு - வயிறு, சகுலி - மோதகம், நக்காய் - சிரித்தாய். 12. இறப்ப - மிகவும், முன்னோன் - விநாயகக்கடவுள். 13. ஆண்டொரு வைகல் - வருடத்திற்கு ஒரு நாள். 14. வெய்யோன்ஸ.நாலாம் வைகல் - ஆவணி மாத சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி நாள். 15. விதி - பிரமதேவன், சேய் - இங்குத் தக்கன். 16. வச்சிரம் எடுத்த செம்மல் - இந்திரன், அச்சென - விரைவாக. 17. மாதுலன் - மாமனான தக்கன். 18. இறையும் - சிறிதும்.) சொல்லுவ பிறஎன் வேறு தொல்லைநாள் யானே கூற அல்லுறழ் கண்டத் தெந்தை அரும்பெருந் தன்மை யாவும் ஒல்லையின் உணர்ந்து பன்னாள் உழந்ததோர் தவத்தால் இந்த எல்லையில் திருவின் வைகி இறையும்அங் கவனை எண்ணான். 19 வேறு செக்கரிற் படர்சடைத் தீயின் தோற்றமாம் முக்கணா யகன்எதிர் மொழிந்து வேண்டலாம் எக்குறை யாயினும் எவரும் ஈண்டையில் தக்கன்முன் ஓருரை சாற்ற லாகுமோ. 20 அண்ணலந் திருவிடை அழுந்தி யாரையும் எண்ணலன் செந்நெறி இயற்ற வோர்கிலன் கண்ணிலன் மதியிலன் களிப்பி னோர்மகன் மண்ணிடை விரைவொடும் வழிக்கொண் டாலென. 21 களியுறு பெற்றியன் கறுவு சிந்தையன் அளியறு முகத்தினன் அருளில் வாய்மையன் தௌ¤தரு முணர்விலன் சிதைந்து மேலிவன் விளிவுறு பொருட்டின்இம் மேன்மை பெற்றுளான். 22 ஈண்டிவன் விளிதலும் இன்றி எம்மனோர் பூண்டநன் னிலைகளும் போக்கல் சிந்தியான் நீண்டசெஞ் சடைமுடி நிமலன் அன்னவன் வேண்டிய வரமெலாம் விரைவில் நல்கினான். 23 அன்னது நிற்கயாம் அவனை வேண்டுவம் என்னினும் முனிவுறா இகழும் எம்மையும் நின்னுறு சாபமும் நீக்க லான்இனிப் பின்னொரு நெறியுள பேசக் கேண்மியா. 24 செய்யனைக் கண்ணுதற் சிவனை எம்மனோர்க் கையனை அடிகளை அமலனாகிய மெய்யனை அடைந்து நின்மேனி மாசினை ஒய்யென அகற்றிலை உணர்வி லாய்கொலோ. 25 ஈதவன் முன்புசென் றிசைக்க நீக்குநின் பேதுற அனையது பேசல் வேண்டுமோ மேதகும் இருவினால் விளங்கி டாதவை ஆதவன் காட்டுதற் கையஞ் செய்வரோ. 26 சிறாரென நமையெலாஞ் சிறப்பின் நல்கிய இறால்புரை சடைமுடி எந்தைக் கன்பராய் உறாதவர் தம்மையும் உற்ற பான்மையர் பெறாததோர் பொருளையும் பேச வல்லமோ. 27 21. களிப்பினோர்மகன் - கட்குடியன். 24. கேண்மியா - கேள்; மியா; அசை. 25. ஆதவன் - சூரியன். 27. இறால்புரை - தேன்கூடுபோல் அடர்ந்த.) தெருளடு தன்னடி சேருந் தொண்டினோர் பருவரல் ஒழித்திடும் பான்மைக் கல்லவோ விரிசுடர் கெழுவியே வௌ¢ளி ஓங்கலின் அருளுரு வெய்தியே அமலன் மேயதே. 28 இடுக்கணங் கொருவர்மாட் டெய்தின் எந்தைதன் அடித்துணை அரணமென் றடைவ ரேயெனில் துடைத்தவர் வினைகளுந் தொலைக்கும் இப்பொருள் பிடித்திலை ஆற்றவும் பேதை நீரைநீ. 29 அந்தியஞ் சடைமுடி அண்ணல் தன்னடி சிந்தைசெய் தடைந்திடு சிறுவன் மேல்வரு வெந்திறல் நடுவனை விலக்கி அன்றுமுன் வந்தருள் புரிந்தது மறத்தி போலுமால். 30 விஞ்சிய திரைகெழு வேலை தன்வயின் நஞ்சமன் றெழுதலும் நடுங்கி நாம்அவன் தஞ்சென அடியிணை சாரத் தான்மிசைத் தஞ்சலென் ருறிய தயர்க்க லாகுமோ. 31 வார்த்தன உமையவள் மலர்க்கைத் தோன்றியே ஆர்த்தெழு கங்கையிவ் வகிலம் எங்கணும் போர்த்திட வெருவியாம் போற்றச் சென்னியில் சேர்த்தியன் றளித்ததுந் தேற்றி லாய்கொலோ. 32 அளப்பருங் குணத்தின்எம் மண்ணல் அன்பரால் கொளப்படும் பேரருள் கூற்றின் பாலதோ கிளத்திட அரியதேல் கேடில் பல்பகல் உளப்பட உன்னினும் உலவிற் றாகுமோ. 33 ஆதலின் ஈண்டுநின் றாதி நாயகன் காதலின் மேயவக் கயிலை யுற்றவன் பாதமிங் கரணெனப் பற்றி வல்லைநின் *பேதுறுல் ஒழிமதி பெருந்தண் மாமதி. 34 (பா-ம் * போதுற.) என்றலும் அயன்பதத் திறைஞ்சி எம்பிரான் நன்றிவை புகன்றனை ஞான மூர்த்திபால் சென்றடை வேனெனச் செப்பி வௌ¢ளியங் குன்றினை அணைந்து பொற்கோயில் மேயினான். 35 தன்னுறு பருவரல் சாற்றக் காவலோன் மன்னருள் நிலையொடு மரபின் உய்த்திடப் பொன்னவிர் செஞ்சடைப் புனித நாயகன் முன்னுற வணங்கினன் முடிவில் அன்பினால். 36 (28. பருவரல் - துன்பம், வௌ¢ளி ஓங்கல் - கயிலைமலை. 29 அரசணம் - அடைக்கலம். 30. சிறுவன் - மார்க்கண்டன், நடுவன் - நமன். 32. வார் - கச்சு. 34. அரண் - அடைக்கலம், வல்லை - விரைவில், ஒழிமதி, மதி : அசை.) மேற்றிகழ உபநிட வேத வாய்மையால் போற்றலும வந்ததென் புகல்தி யாலெனச் சாற்றினன் உயிர்தொறுந் தங்கித் தொல்வினை தேற்றுபு வினைமுறை செலுத்துந் தொன்மையோன். 37 நங்களை அலைத்திடு நண்ண லன்தனை இங்கிவண் அடுதும்என் றிருட்கள் சூழ்ந்தென மங்குலின் நிறங்கொடு வடிவம் வேறாந் திங்கள்நின் றெம்பிராற் கினைய செப்புவான். 38 வன்றிறல் தக்கன்முன் வழங்கு தீச்சொலால் துன்றிருங் கலையெலாந் தொலைந்து போந்திட ஒன்றிவண் இருந்ததால் உதுவுந் தேய்ந்திடும் இன்றினி வினையினே னியாது செய்வதே. 39 எஞ்சிய இக்கலை இருக்கத் தேய்தரு விஞ்சிய கலையெலா மேவ நல்குதி தஞ்சநின் னலதிலை என்னத் தண்மதி அஞ்சலை என்றனன் அருளின் ஆழியான். 40 தீர்ந்தன அன்றியே திங்கள் தன்னிடை ஆர்ந்திடு கலையினை அங்கை யாற்கொளா வார்ந்திடு சடைமிசை வயங்கச் சேர்த்தினான் சார்ந்தில தவ்வழித் தக்கன் சாபமே. 41 மேக்குயர் தலைவராம் விண்ணு ளோர்கள்பால் தாக்குறு வினையையுஞ் சாபம் யாவையும் நீக்கிய தலைவன்இந் நிலவின் சாபத்தைப் போக்கினன் என்பது புகழின் பாலதோ. 42 நெற்றியங் கண்ணுடை நிமலத் தெம்பிரான் உற்றவர்க் கருள்புரி கின்ற உண்மையைத் தெற்றென உணர்த்தல்போல் திங்க ளின்கலை கற்றையஞ் சடைமிசைக் கவின்று பூத்ததே. 43 வேறு எந்தை அவ்வழி மதியினை நோக்கிநீ யாதுஞ் சிந்தை செய்திடேல் எம்முடிச் சேர்த்திய சிறப்பால் அந்த மில்லையிக் கலையிவண் இருந்திடும் அதனால் வந்து தோன்றுநின் கலையெலாம் நாடொறும் மரபோல். 44 நின்ன தொல்கலை ஐந்துமுப் பகலிடை நிரம்பிப் பின்னர் அவ்வழி தேய்ந்துவந் தோர்கலை பிரியா தின்ன பான்மையே நிகழுமெக் காலமு மென்றான் முன்னை ஆவிதோ றிருந்தெலாம் இயற்றிய முதல்வன். 45 (37. புகல்தியால், ஆல் : அசை. 38. மங்குல் - கருமை. 39. வினையினேன் - பாவியாகிய நான். 40. அருளின் ஆழியான் - கருணைக்கடலான சிவபெருமான். 43. கவின்று - அழகுடன். 44. அந்தம் இல்லை - அழிவுஇல்லை.) முதல்வன் இவ்வஆஆ யருள்புரிந் திடுதலும் முளரிப் பதயு கங்களில் வணங்கினன் விடைகொடு படரா மதிய வானவன் தன்னுல கடைந்துதொன் மரபில் கதிகொள் செய்வினை புரிந்தனன் வளர்ந்தன கலையே. 46 ஒன்று வைகலுக் கோ£¢கலை யாய்நிறைந் தோங்கி நின்ற தொன்னிலை நிரம்பியே பின்னுற நெறியே சென்று தேய்ந்துவந் தொருகலை சிதைவுறா தாகி என்றும் ஆவதும் அழிவதும் போன்றனன் இரவோன். 47 செங்க ணான்முதல் அனைவரும் அம்மதித் திறத்தை அங்கண் நாடியே தக்கனால் இவன்கலை அனைத்தும் மங்கு மாறுமேல் வளர்வதும் இயற்கையா வகுத்தான் எங்கள் நாயகன் செய்கை யார்அறிந்தனர் என்றான். 48 செக்கர் வானமேற் கிளர்ந்தெழு திங்களின் செயலை ஒக்க நாடிய சிந்தையாந் தூதினால் உணர்ந்து தக்க னென்பவன் கனன்றியான் உரைத்தசா பத்தை நக்க னேகொலாந் தடுக்கவல் லானென நகைத்தான். 49 எந்தை தன்றந்தை யாவரும் மருமகனுக் கியான்முன் தந்த வாய்மையை விலக்கிலர் விலக்கஎன் றன்முன் வந்தும் வேண்டிலர் அச்சமுற் றிருந்தனர் மற்றத் தந்தை தாயிலா ஒருவனாம் என்னுரை தடுப்பான். 50 நன்று நன்றியாம் பரம்பொருள் நான்முகன் முதலாந் துன்று தொல்லுயிர் யாவையும் அழித்தும்ஐந் தொழிலும் நின்று நாம்புரி கின்றனம் எங்கணும் நீங்காம் என்று தன்மனத் தகந்தையுற் றான்கொலோ ஈசன். 51 அன்ன தன்றியே இன்னமொன் றுண்டுபா ரகத்தில் தன்னை யேநிகர் தக்கனும் நோற்றிடு தவத்தான் என்ன இத்திரு வுதவினம் என்பதை நினைந்தோ என்ன தாணையை இகழ்ந்தனன் இத்திறம் இழைத்தான். 52 செய்ய தோர்பரம் பொருளியா மென்பது தௌ¤ந்தும் வைய மீதில்இத் திருவெலாம் பெற்றுநம் மலர்த்தாள் கையி னால்தொழான் என்றுகொல் முன்னியான் கழறும் வெய்ய வாய்மையை விலக்கினன் சிவனென வெகுண்டான். 53 தகவும் ஈரமும் நீங்கிய புரைநெறித் தக்கன் புகலும் வாய்மையைத் தேர்ந்துழிப் புலகன்என் றுரைப்போன் நிகரில் கண்ணுதற் கடவுளை எள்ளலை நின்னை இகழ்வர் யாவரும் எஞ்சும்உன் வெறுக்கையும் என்றான். 54 (45. ஐந்து முப்பகல் - பதினைந்து நாட்கள். 49. நக்கன் - சிவபெருமான். 52. பாரகம் - பூமி. 54. ஈரம் - இரக்கம், புலகன் - ஒரு முனிவன்; இவர் தக்கன் மருமக்களில் ஒருவர்.) என்ற வன்முக நோக்கியே தவத்தினால் என்கண் நின்ற இத்திரு நீங்குமோ நெடியமால் முதலோர் என்றும் என்பணி மறுத்திலர் எள்ளுவ துண்டோ நன்று நன்றுநின் னுணர்வெனச் சிறுவிதி நக்கான். 55 முறுவ லித்திடு தக்கனைக் கண்ணுறீஇ முனிவன் பிறரி ழிப்புரை கூடுறா தென்னினும் பெருஞ்சீர் குறைவு பெற்றிடா தென்னினும் நினக்கருள் கொடுத்த இறைவ னைப்பழித் திடுவது தகுவதோ என்றான். 56 புலகன் என்றிடு முனிவரன் இனையன புகலி விலகு தீநெறி யாற்றிய சிறுவிதி வினவி அலகி லாததன் னாற்றலும் பெருந்திரு அனைத்தும் உலகில் நீங்குவான் பெருமிதங் கொண்டிவை உரைப்பான். 57 நோற்று முன்னியான் பெற்ற இத்திரு நுகர்ந்திடுமுன் மாற்று வான்அலன் செய்வினை முறையலால் வலிதின் ஏற்ற மாகஒன் றிழைக்கலன் ஆதலால் என்பால் ஆற்ற லால்அரன் செய்கின்ற தென்னென அறைந்தான். 58 அறைத லோடுமப் புலகனென் றுரைப்பவன் அனைத்தே உறுதி யாயினும் ஈசனை இகழந்தவர் உய்யார் மறையெ லாமவை சொற்றது மற்றவன் தன்னை இறையும் எள்ளலை மனங்கொடு பராவுதி இனிநீ. 59 தன்ன டைந்தவர் ஆகுல மாற்றியே தகவால் என்ன தோர்பொருள் வெ·கினும் ஈகின்ற தியற்கை அன்ன வற்கது மதிதெரிந் தடைதலும் அவன்பால் நின்னின் உற்றசா பத்தினை நீக்கினன் நெறியால். 60 கற்றை வான்கலை நிறைந்தபின் முன்னநீ கனன்று சொற்ற வாய்மையும் நிறுவினன் நாடொறுஞ் சுருங்கச் செற்றம் என்இனித் திங்கள்நின் மருமகன்அச் சிவனாம் பெற்றம் ஊர்தியும் அம்முறை யாவனால் பின்னாள். 61 என்ன இத்திறம் மொழிதலுஞ் சினமகன் றிமையோர் அன்னம் ஊர்தியோ னியாவரும் புகழ்தர அனையான் பன்னெ டும்பகல் அரசின்வீற் றிருந்தனன் பரையாங் கன்னி மற்றவன் மகண்மையாய்வருதல் கட்டுரைப்பாம். 62 (57. விலகு தீ நெறி - நல்லாரிடைப் பொருந்தாது அகன்ற தீயமார்க்கம். 59. பராவுதி - துதிப்பாயாக. 60. ஆகுலம் - துன்பம், வெ·கல் - விரும்பல். 61. வான் - உயர்வு, பெற்றம் - வௌ¢விடை, அம்முறை - மருமகன்முறை. 62. பரையாங்கன்னி - பராசத்தி.) ஆகத் திருவிருத்தம் - 190 - - - 5. உ மை க யி லை நீ ங் கு ப ட ல ம் கமல மூர்த்தியுங் கண்ணுனுங் காண்கிலா அமல மேனியை அன்பினர் காணுற நிமல மாகிய நீள்கயி லாயமேல் விமல நாயகன் வீற்றிருந் தானரோ. 1 வீற்றி ருந்தவன் மெல்லடி கைதொழூஉப் போற்றி யுன்றன் பொருவரு மெய்மையைச் சாற்று வாயெனச் சங்கரி வேண்டலும் ஆற்ற அன்புசெய் தாங்கருள் செய்குவான். 2 வேறு உருவொடு குணஞ்செயல் ஒன்றும் இன்றியே நிருமல மாய்ச்சிவன் நிறைந்து நின்றதும் பரவிய வுயிர்த்தொகைப் பந்தம் நீக்குவான் ஒருதனிச் சத்தியால் உன்னல் உற்றதும். 3 ஐந்தியற் சத்திகள் ஆயி னோர்தமைத் தந்ததும் அருவுருத் தாங்கி அவ்வழிச் சிந்தனை அருச்சனை செய்தி யாவரும் உய்ந்திடச் சதாசிவ வுருவைந் துற்றதும். 4 இருபதின் மேலும்ஐந் தீசன் கேவல உருவம தாகியே உறைந்த பெற்றியும் விரவிய குடிலையின் விளைவு செய்துபின் அருள்புரி மூர்த்திக ளாய பேதமும். 5 முந்திய மாயைகள் மூல மாகவே அந்தமில் தத்துவம் ஆறொ டாறுமுன் வந்திட அளித்தது மரபின் ஐந்தொழில் சிந்தைகொள் கருணையான் நடாத்துஞ் செய்கையும். 6 விதித்திடு மூவகை வியனு யிர்த்தொகை கதித்திடு தத்துவக் கணங்கள் அங்குவார் உதித்திடு முறைமையின் ஒடுங்கச் செய்துதான் மதித்தொரு தன்மையாய் மன்னி நிற்பதும். 7 (1. கமல மூர்த்தி - பிரமதேவன், அமலம் - பரிசுத்தம். 2. சங்கரி - அம்பிகை, ஆற்ற - மிகுந்த. 3. பரவிய - விரிந்துகிடக்கும், தனிச்சத்தி - ஏகசத்தி; பராசத்தி. 4. ஐந்தியல் சத்திகள் - பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி என ஐவகை சத்திகள்; சதாசிவ உரு ஐந்து - ஐந்து திருமுகங்களைக் கொண்ட சதாசிவமூர்த்தி. 5. இருபதின் மேலும் ஐந்து ஈசன் - சகல வடிவுகொண்ட இருபத்தைந்து மகேசுவர வடிவங்கள், குடிலை - ஒருசத்தி. 6. தத்துவம் ஆறொடு ஆறு - முப்பத்தாறு தத்துவம். 7. மூவகை வியன் உயிர்த்தொகை - விஞ்ஞானகலர், பிரளயா கலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்கள்.) ஆனதன் னியற்கைகள் அனைத்துங் கண்ணுதல் வானவன் ஆகம மறையின் வாய்மையான் மேனிகழ் தொகைவகை விரிய தாகவே தானருள் புரிந்தனன் தலைவி கேட்கவே. 8 சுந்தரி இவ்வகை உணர்ந்து தோமிலா எந்தைநிற் குருவிலை என்றி பின்னுற ஐந்தொடு பலவுரு அடைந்த தென்னெனக் கந்தனை அருளுவான் கழறல் மேயினான். 9 உருவிலை நமக்கென ஒன்று நம்வயின் அருளுரு அவையெலாம் என்ன அன்னதோர் பொருளென உன்னியே புவனம் ஈன்றவள் பெருமகிழ் வெய்தியப் பெற்றி கூறினாள். 10 அந்நிலை வடிவெலாம அருளின் ஆதலால் உன்னருள் யானென உரைப்ப துண்மையே என்னுரு வாம்அவை என்று பாங்கமர் கன்னிகை வியந்தனள் கழறும் வேலையே. 11 கயந்தன தீருரி கவின்று பொற்புறப் புயந்தனில் அணிந்தருள் புனிதன் நங்கைநீ நயந்தரு நின்புகழ நாடி நம்முனம் வியந்தனை உனையென விளம்பி மேலுமே. 12 இருளுறும் உயிர்தொறும் இருந்து மற்றவை தெருளுற இயற்றுதும் அதனைத் தீர்துமேல் மருளுறு சடமதாய் மாயும் ஏனைய பொருளுறு நிலைமையைப் புகல வேண்டுமோ. 13 உன்னிடை தனினும்யாம் உறுத லில்வழி நின்னுயிர் உணர்வுறா நினக்குக் காட்டுதும் அன்னது காண்கெனா அயனை யாதிய மன்னுயிர் இயற்றிடும் வண்ணம் நீங்கினான். 14 தேவர்கள் நாயகன் செயலி லாமையால் ஆவிகள் யாவையுஞ் சடம தாகியே ஓவிய மேயென உணர்வின் றுற்றன பூவுல கேமுதற் புவனம் யாவினும். 15 ஆட்டுவித் திடுபவன் அதுசெ யாவழிக் கூட்டுடைப் பாவைகள் குலைந்து வீழ்ந்தென நாட்டிய பரனருள் நடாத்தல் இன்மையால் ஈட்டுபல் லுயிர்த்தொகை எனைத்து மாய்ந்தவே. 16 (9. ஐந்து - பஞ்ச சாதாக்கிய வடிவு, 11. அந்நிலை வடிவு ஏலாம் - அச்சதா சிவாதி வடிவமனைத்தும். 12. இருள் - மலவிருள், சடம் - உடல். 15. ஆவிகள் - உயிர்கள். 16. நந்துதல் - கெடுதல்.) இந்தவா றுயிர்த்தொகை யாவும் ஒல்லையில் நந்தியே சடமதாய் நணிய வெல்லையில் சிந்தைசெய் தினையது தெருமந் தஞ்சியே சுந்தரி அரனடி தொழுது சொல்லுவான். 17 அறிகிலன் எந்தைநீ அனைத்து மாகியே செறிவது முழுதுயிர்த் திறன்இ யற்றியே உறுவதை என்பொருட் டொருவி நின்றனை இறுதியின் அவையெலாம் இருளின் மூழ்கவே. 18 ஓரிறை யாகுமீ துனக்கு யிர்க்கெலாம் பேருகம் அளப்பில பெயரும் என்பிழை சீரிய வுளங்கொளல் தேற்றம் பெற்றெழீஇ ஆருயிர் மல்குமா றருளு வாயெனா. 19 பன்முறை பரவினள் பணிந்து நிற்றலும் அன்மலி கூந்தலுக் கருளி யாவிகள் தொன்மையில் வினைப்பயன் துய்ப்ப நல்குவான் நின்மலன் நினைந்தனன் கருணை நீர்மையால். 20 திருத்தகு தனதருள் சேர்ந்த பல்வகை உருத்திரா¢ தமக்குமுன் னுணர்வு செய்துழி நிருத்தனை அவ்வழி நினைவுற் றிச்செயல் கருத்திடை யாதெனக் கருதி நாடினார். 21 நாடிய எல்லையில் நான்மு கத்தன்மால் தேடிய அண்ணல்தன் செய்கை யீதெனக் கூடிய ஓதியாற் குறித்து முன்னுற வீடிய உயிர்த்தொகை எழுப்ப வெ·கியே. 22 கண்ணுதல் எந்தைதன் கழல்கள் அர்ச்சனை பண்ணுதல் உன்னியப் பகவன் தொல்சுடர் விண்ணிடை இன்மையின் வேலை காண்கிலா மண்ணிடை அருச்சுன வட்டத் தெய்தினார். 23 எங்க ணும் கனையிருள் இறப்ப வீசலிற் கங்குலே போன்றதிக் காலை கண்ணுதற் புங்கவற் கேற்றிடு பூசை செய்துமென் றங்கவர் யாவரும் ஆய்தல் மேயினார். 24 முண்டக மலா¢கெழு முக்கண் மேலையோன் கொண்டதோர் ஐம்பெருங் கோலத் தேவரும் எண்டகு மூவகை இயல்பு ளாங்கவர் மண்டல விதியினால் வடிவ தாக்கியே. 25 (19. ஓர் இறை - ஒரு இமைப்பொழுது. 20. அன்மலி, அன் : சாரியை. 21. திருத்தகு - அழகிய, பல்வகை உருத்திரர் - பதினோருருத்திரர்கள். 23. அருச்சுன வட்டம் - திருவிடைமருதூர், அருச்சுனம் - மருதமரம். 25. ஐம்பெருங்கோலம் - பஞ்ச மூர்த்திகள்.) எண்ணிரு திறத்தவாய் இயன்ற நற்பொருள் உண்ணிகழ் அளியொடும் உய்த்து வேதனுங் கண்ணுனும் வழிபடு கங்குற் பூசையை பண்ணுதல் முயன்றனர் பரிவின் மேலையோர். 26 ஆறிரு நாலுடன் அஞ்செ ழுத்தையுங் கூறினர் எண்ணினர் கோதில் கண்டிகை நீரொடு புனைந்திறை நிலைமை யுட்கொளா வேறுள முறையெலாம் விதியிற் செய்துபின். 27 வான்குலாம் வில்லுவம் மருமென் பாசடை தேன்குலா மரையிதழ் செய்ய சாதிவீ கான்குலாம் வலம்புரி கடவுள் தொல்பெயர் நான்கியா மத்தினும் நவின்று சாத்தியே. 28 ஏயவான் பயறுபால் எள்நல் ஓதனந் தூயநல் லுணவிவை தொகுத்துக் கண்ணுதல் நாயகன் முன்னுற நான்கியா மத்தும் நேயமொ டம்முறை நிவேதித் தேத்தியே. 29 பின்னரும் இயற்றிடு பெற்றி யாவையுந் தொன்னிலை விதிகளில் தோமு றாவகை உன்னினர் புரிந்துழி யுவந்து ருத்திரர் முன்னுற வந்தனன் முக்கண் மூர்த்தியே. 30 அவ்விடை மருதினில் ஐந்தும் ஆறுமாம் மெய்வகை உருத்திரர் வேண்டி யாங்கருள் செய்வதொர் கண்ணுதல் தேவன் தொன்மைபோல் எவ்வகை உயிரையும் இயற்ற வுன்னலும். 31 எழுந்தனர் மாலயன் இந்தி ராதியர் எழுந்தனர் எழுந்தனர் யாரும் வானவர் எழுந்தனர் முனிவரர் ஏனை யோர்களும் எழுந்தன உயிர்த்தொகை இருளும் நீங்கிற்றால். 32 அல்லிடை உறங்கினர் அறிவு சேர்ந்துழி மெல்லென அயர்ந்தகண் விழித்தெ ழுந்தபோல் எல்லையில் உயிர்த்தொகை யாவும் அவ்வழி ஒல்லையில் எழுந்தன உலகில் எங்கணும். 33 (26. எண் இரு - பதினாறு. 27. ஆறு இரு நாலுடன் அஞ்செழுத்து - சோடசகலா பிரசாத மந்திரம்; இது பிரணவ பீசங்களுடன் கூடி பதினாறு மாத்திரைகளுடன் ஒலிக்கும் சூக்கும பஞ்சாக்கரம் என்பர், கண்டிகை - உருத்திராட்சம், வேறுளமுறை என்றது பூதசுத்தி, அந்தரியாகம் முதலியவற்றை. 28. வீ - பூ; இங்கு மல்லிகை, வலம்பு£¤ - நந்தியாவட்டம். 29. ஓதனம் - சோறு. 31. மருதினில் - திருவிடைமருதூரில், ஐந்தும் ஆறுமாம் உருத்திரர் - ஏகாதச ருத்திரர். 33. அல் - இரவு.) ஓங்கலுங் கரிகளும் உலப்பில் நாகமுந் தாங்கின தரணிபா தலத்திற் கூர்மமாம் ஆங்கது போற்றிய தண்டந் தன்னிடைத் தீங்கதிர் மதியுடுப் பிறவுஞ் சென்றவே. 34 அன்னதொர் திறமெலாம் அமலன் ஆணையால் தொன்னிலை அமைந்தவத் தொடர்பு நோக்கியே இந்நெறி யாவையும் ஈசன் செய்கையே பின்னிலை என்றனர் பிரம னாதியோர். 35 வேறு மற்றிவை நிகழும் வேலை மன்னுயிர்க் குணர்ச்சி நல்கி உற்றனன் எந்தை என்றே உருத்திரர் உணர்ந்து தம்முன் பற்றலர் எயில் மூன் றட்ட பண்ணவன் வரநேர் சென்று பொற்றிரு வடியில் வீழ்ந்து போற்றலும் அமலன் சொல்வான். 36 ஈண்டெமை அருச்சித் திட்ட இயல்பினால் உயிர்கட் கெல்லாம் மாண்டதொல் லுணர்ச்சி நல்கி எழுப்பினம் மற்று நீவிர் வேண்டின யாவுங் கேண்மின் விரைந்தென அமலன் தன்கண் பூண்டதொ ரன்பு மிக்கோர் இனையன புகலல் உற்றார். 37 நிற்றலும் அல்லில் எம்போல் நின்னடி எனைய ரேனும் பற்றுடன் அருச்சித் தோர்க்குப் பழிதவிர் மாசுத் திங்கள் உற்றிரு கதிரு மொன்றும் ஒண்பகல் முதனாட் கங்குல் பெற்றிடு சிறப்பு நல்க வேண்டுமால் பெரும என்றார். 38 நீவிர் பூசை தன்னை நெடிதுநாம் மகிழ்ந்த வாற்றல் ஆவிகள் அனைத்தும் உய்ந்த அருவினை அகன்று நும்போல் பூவினில் என்றும் பூசை புரிந்தவர்க் கெல்லாம் முத்தி மேவர அளித்தும் என்றே வியனருள் புரிந்து போந்தான். 39 எம்பெருந் தலைவன் ஏக வுருத்திரர் யாரும் ஈண்டித் தம்பதங் குறுகி முன்போற் சார்ந்தனர் அனைய காலை அம்புய னாதி வானோர் அனைவருங் கயிலை புக்கு நம்பனை வணக்கஞ் செய்து தொழுதிவை நவிலல் உற்றா£¢. 40 மன்னுயிர்க் குயிராய் உற்ற வள்ளல்கேள் யாங்கள் எல்லாம் உன்னருள் உறாத நீரால் உணர்வொரீஇச் சடம தாகிப் பன்னெடுங் காலம் வாளா கிடந்தனம் பவமூழ் குற்றேம் அன்னது தனக்குத் தீர்வொன் றருளென அண்ணல் சொல்வான். 41 மங்கியே உணர்வு சிந்தி மறைமுறை பு£¤யா நீரால் உங்கள்பால் வருவ வெல்லாம் உமையிடத் தாகு மன்றே இங்குநீர் இன்று பற்றி இயற்றுநுங் கடன்கள் என்னப் பங்கயா சனனுந் தேவர் யாவரும் பணிந்து போனார். 42 வேறு வாலி தாமயன் முதலினோர் வணங்கினர் ஏக ஏல வார்குழல் உமையவள் பிரான்கழல் இறைஞ்சி மேலை நாளுயிர்த் தொகையினுக் கெய்திய வினையென் பால்வ ரும்பரி சென்கொலோ பணித்தருள் என்ன. 43 முன்பு நீயுனை வியந்தனை அத்துணை முனிந்து நின்பொ ருட்டினால் உயிர்கள்தம் முணர்ச்சியை நீக்கிப் பின்பு ணர்த்தினம் ஆதலின் அன்னவை பெற்ற மன்பெ ரும்பவம் யாவையும் நின்னிடை வருமால். 44 முறைய தாகுமால் பின்னுமொன் றுண்டுயிர் முற்றும் பெறுவ தாமுனக் கல்லது பெரும்பவம் அவற்றால் பொறைபு ரிந்திடற் கௌ¤யவோ போற்றுநீ யென்றான் சிறுவி திக்கருள் பரிசினை முடிவுறச் செய்வான். 45 நாதன் அவ்வுரை இயம்பலும் உளம்நடு நடுங்கிப் பேதை யேன்செயும் பிழைதணித் தென்வயிற் பெருகும் ஏத மாற்றவோர் பரிசினை உணர்த்துதி என்னாப் பாத பங்கயந் தொழுதலும் இனையன பகர்வான். 46 ஆல மேபுரை நிறத்ததாய் அமிழ்தினுஞ் சுவைத்தாய் ஞால மார்தர வொழுகிய காளிந்தி நதிபோய் மூல மெய்யெழுத் தன்னதோ£¢ முதுவலம் புரியின் கோல மாகிநோற் றிருத்தியால் உலகருள் குறிப்பால். 47 அந்ந திக்குள்நீ பற்பகல் இருந்துழி அயன்சேய் என்ன நின்றிடு தக்கனென பவன்அவண் எய்தி உன்னை நேர்ந்துசென் றெடுத்தலுங் குழவியின் உருவாய் மன்னி யாங்கவன் பன்னிபாற் சிறுமியாய் வளர்தி. 48 ஐந்தி யாண்டெனும் அளவைநிற் ககன்றுழி அதற்பின் புந்தி ஆர்வமோ டெமைநினைந் தருந்தவம் புரிதி வந்தி யாமது காணுறா மணஞ்செய்து மறையால் இந்த மால்வரை யிடைஉனைத் தருதுமென் றிசைத்தான். 49 இசைத்த வாசகம் உணர்தலும் இறையுரத் தழுந்தத் தசைத்த பூண்முலை உமையவள் அன்னவன் சரணின் மிசைத்தன் வார்குழல் தைவர வணங்கியே விடைபெற் றசைத்த சிந்தையள் நீங்கினள் உலகுநோற் றதனால். 50 (43. வாலிதாம் - வெண்ணிறமான. ஏலம் - மயிர்ச்சாந்து. 45. பரிசினை - வரத்தினை. 47. ஆலமேபுரை - விடம்போலும் (கரிய). காளிந்தி நதி - யமுனா நதி. மூலமெய் எழுத்து - பிரணவம். வலம்புரி - வலம்புரி சங்கு. 48. பன்னி - மனைவி; இங்கு வேதவல்லி. 49. தருதும் - அழைத்து வருகின்றோம்.) ஆதி தேவனை ஒருவியே புடவியில் அணுகி ஓத வேலையை மாறுகொள் காளிந்தி யுழிப்போய் வேத மூலநேர் வால்வளை உருக்கொடு விளங்கி ஏத மில்லதோர் பதுமபீ டத்தின்மேல் இருந்தாள். 51 தௌ¤த ருஞசிவ மந்திரஞ் சிந்தனை செய்தே அளவில் பற்பல் அன்னைநோற் றிருந்தனள் அவட்கண் டுளம மகிழ்ந்தெடுத் தேகுவான் ஓங்குகா ளிந்தி நளிகொள் சிந்துவில் தக்கன்உற் றனஇனி நவில்வாம். 52 (51. புடவி - உலகம். ஓதம் - அலை. வேதமூலம் நேர் - பிரணவத்தை ஒத்த. வால்வளை - வௌ¢ளிய சங்கு. 52. நளி - குளிர்ச்சி. சிந்து - ஆறு; இங்கு யமுனா நதி.) ஆகத் திருவிருத்தம் - 242 - - - 6. கா ளி ந் தி ப் ப ட ல ம் நீளுந் தகைசேர் நிலமா மகள்தன் கோளுந் தியபூங் குழல்வார்ந் தெனலாய் நாளுந் தியவீ நணுகிக் கரிதாங் காளிந் தியெனும் கடிமா நதியே. 1 முத்துங் கதிரும் முழுமா மணியுந் தொத்துந் தியசெந் துகிரும் மகிலும் நத்தும் பிறவுந் நனிநல் குவபோல் ஒத்துந் துவதவ் வொலிநீர் நதியே. 2 எண்மேல் நிமிரும் மிருநீ£ பெருகி விண்மேல் உலவா விரிகின் றதொரீஇ மண்மேல் ஒலியா மலிகார் தழுவிக் கொண்மூ வரவொத் துளதக் குடிஞை. 3 மீனார் விழிமங் கையர்விண் ணுறைவோர் வானார் செலவின் வருநீள் இடையில் கானா மெனவுங் கடலா மெனவுந் தானா குவதத் தடமா நதியே. 4 பாரின் புடையே படரந் நதியை நேரும் படியோர் நெடுநீ ருளதோ காருந் தௌ¤யாக் கடலீ தெனவே யாரும் பெருமைத் த·தா யிடவே. 5 (1. நாள் உந்திய வீ - பகற்காலத்தில் மலர்ந்த நீலம் முதலிய பூக்கள். 2. துகிர் - பவளம். நந்து - சங்கு. 3. எண் - அளவற்றதாய். கொண்மூ - மேகம். முடிஞை - காளிந்த நதி.) துப்பா யினதாய்த் துவரத் தகைசேர் அப்பா யுவரற் றழிவில் பொருளின் வைப்பா யருளால் வருமவ் வொலியற் கொப்பா குவதோ உவரா ழியதே. 6 பாலோங் கியவிற் பணிலம் படர்வாள் நீலோங் கியஅம் பொடுநே மியெலாம் மேலோங் கியதன் மையின்மெய்த் துயில்கூர் மாலோன் றனையொத் ததுமற் றதுவே. 7 மீன்பட் டமையால் விரியுந் தொழுதிக் கான்பட் டிடவுங் கழுநீ ருறலால் தேன்பட