|
Home > Scriptures & Stotras > Tamil scriptures and literature > kandha purANam
kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
5. தேவ காண்டம்
***
1. தி ரு ப் ப ர ங் கு ன் று சே ர் ப ட ல ம்
இன்ன பண்பினாற் சிவனடி வழிபடல் இயற்றி
அந்நி லைக்கள நீங்கியே அமரர்கண் முனிவர்
தன்ன தானையந் தலைவர்கள் புடைதழீஇச் சாரப்
பொன்னின் மஞ்ஞையின் எருத்தமேல் கொண்டனன் புனிதன்.1
சீர்தயங்கிய யூரமேல் அமர்தருஞ் செவ்வேள்
சார்த லுற்றிடு மாலயன் மகபதி தம்மை
நேர்த லில்படை வீரரை நோக்கியே நீவிர்
ஊர்தி மேலராய் வம்மின் நம்புடையென உரைத்தான். 2
வேறு
மற்றது காலையில் வண்டு ழாய்முடிக்
கொற்றவன் முதலிய குழுக்கொ டேவரும்
வெற்றிகொள் வீரமும் வேறு தத்தமக்
குற்றிடும் ஊர்திமேல் ஒருங்குற் றீண்டினார். 3
ஞாயிறு கறங்கென நணுகும் பொன்முடிக்
கோயிலின் மருங்கினில் குழீஇக் குழீஇயிரண்
டாயிர வௌ¢ளமாம் அடல்வெம் பூதரும்
ஏயென எழுந்தனர் எழுந்த பூழியே. 4
மிக்குயர் அறிஞரை மேவில் கீழ்மைசெய்
மக்களு மேல்நெறி அடைதல் வாய்மையே
தக்கதொல் பூதர்கள் சரணந் தோய்தலில்
புக்கது பொன்நகர் புவியும் பூழியாய். 5
அழற்றிய பல்கதிர் ஆத பத்திரம்
நிழற்றிய விண்ணளாய் நிமி£¢த்த கேதனங்
குழற்றிய துளைவயிர் கோடு காகளம
மிழற்றிய கேரிகை மிகவும் ஆர்த்தவே. 6
மேக்குயர் வட்டமும் விளங்கு காம்புமாய்
நீக்கமில் கவிகைகள் நிழற்றி மல்குவ
மாக்கிளர் ப·றொடை வானக் கம்பலந்
தூக்கிய திறனெனத் தோன்று கின்றவே. 7
மேற்றலை கடவிய வெய்யன் வெம்மையால்
நோற்றலை எய்திவான் உணங்க நோன்றிரை
ஆற்றலை முயன்றென அனிக வேலையுட்
கோற்றலை அசைவவெண் கொடியின் கானமே. 8
பாங்கமை பதலையே முதல பல்லியம்
ஆங்கொலி வழங்குவ அவுணத் தீயரைத்
தாங்கினை யென்றிறை தண்டஞ் செய்திட
வாங்கிய திரைக்கடல் வாய்விட் டொக்குமால். 9
காந்தளஞ் சென்னியன் கடவு மாமயில்
கூந்தொறுங் கூந்தொறுங் குலைந்து ப·றலைப்
பாந்தளங் கசைதலும் பசலை மூக்கினால்
ஆய்ந்திடு கின்றன அகிலங் குத்தியே. 10
மூக்குடை அலகினால் முகிலைக் கீறியே
ஊக்கொடு பரலென உருமுப் பற்றுமால்
தீக்கிளர் வன்னதோர் செய்ய சூட்டுடைக்
கூக்குரல் வாரணங் கொடிய தாகையால். 11
இந்நிகழ் வுற்றிட எழுந்த தானைகள்
முன்னயல் கடைக்குழை மொய்த்துச் சென்றிடப்
பன்னிரு மொய்ம்புடைப் பகவர் மேலவன்
அந்நக ரத்தினும் அகன்று போயினான். 12
பொரியரை விளவுகால் புனிற்றுத் தீங்கனி
வருபயன் கொண்டுதாம் வறிது வீழ்த்தெனக்
கரியினம் பாரிடக் கணங்கள் ஆர்ப்பினால்
வெருவின உணர்வில மயங்கி வீழ்ந்தவே. 13
சாற்றிடில் தம்வினை தம்மைச் சூழுமால்
ஆற்றலில் பெற்றம தலைக்கும் வல்லியம்
மாற்றருந் துப்புடை வயவர் தானையுள்
ஏற்றுரி முரசினுக் கிடைந்த ழிந்தவே. 14
குஞ்சரம் எறிந்திடுங் கொலைவல் கோளரி
எஞ்சலில் கயமுகா¢ எண்ணில் பூதர்கள்
விஞ்சிய பிளிற்றொலி வினவி மெய்பனித்
தஞ்சின நஞ்செழ அயர்ந்த தேவர்போல். 15
உரங்குறை போழ்தில்யார் ஒடுங்கல் இல்லவர்
வரங்குறை மான்முக வயவர் ஓதையால்
கரங்குறை வின்றிநீள் கடுங்கண் யாளிபோய்க்
குரங்குறை சூழலுட் குலைந்து புக்கவே. 16
வசைபடு பாரிடம் வழுக்க லில்வகை
மிசைபடும் ஊற்றமாய் மேற்கொண் டுற்றன
இசைபடு பாரிடம் இடிக்குங் கொட்பினால்
அசைபடு கின்றன அடுக்க லானவே. 17
உரகமும் மடங்கலும் ஒடுங்கி உட்கியே
வரைகளின் முழைபுக வானத் தார்ப்பன
அரிமுக வீரர்தம் அரவத் தன்மையால்
இரிவன புரள்வன எழிலி யேறெலாம். 18
காட்டக எயினர்தங் கல்லென் சும்மையால்
கூட்டுறை புட்குலங் குலைவுற் றாலெனச்
சூட்டுடை வாரணந் தோகை ஆர்ப்பது
கேட்டுளம் நடுங்கினர் கிலேசங் கொண்டுளார். 19
அரங்கு மதலைமேல் ஆடு நீரரின்
மரங்களை அலைத்திடு கடுவன் மந்திகள்
கரங்குலை வோடுபற் காட்டி வாய்வெரீஇ
இரங்கின சேவலங் கொடியி டிப்பினால். 20
ஆரண முழங்கொலி அமரர் வாழ்த்தொலி
சீரண இயவொலி சேனைப் பேரொலி
காரணம் இல்லவன் கடவு மாமயில்
வாரண வொலிகளான் மறைத லுற்றவே. 21
இடனுறு குறிஞ்சியில் இனைய தன்மையால்
நடவைகொள் பெரும்படை நடுவண் ஏகியே
சுடர்பொழி வேலினான் தூய கூடலின்
குடதிசை யமர்பரங் குன்றை எய்தினான். 22
ஆவதோர் பொழுதினில் அங்கண் முன்னுறை
மூவிரு தவத்தரும் முளா¤ யான்முதல்
கூவரும் எந்தையை இறைஞ்சி இவ்விடை
மேவுதி சிறந்ததிவ் வெற்பென் றோதினார். 23
என்றலும் முருகவேள் யாமும் இவ்வரைச்
சென்றிட நினைந்தனம் அதனைச் செப்பினீர்
நன்றும தெண்ணமும் நமது சிந்தையும்
ஒன்றிய வேயென உவப்பிற் கூறினான். 24
மைம்மலை துழனியும் வடிவும் பெற்றுடைக்
கைம்மலை பொழிதரு கடாங்கொள் சாரலின்
அம்மல யேறினன் அமலை தன்னொரு
செம்மலை யாகிவந் துதித்த சிற்பரன். 25
வற்றருந் திரைக்கடல் வடாது மாதிரப்
பொற்றையை நுகர்ந்தெனப் பூத சேனைகள்
கொற்றவன் வருபரங் குன்றின் சாரலைச்
சுற்றிய மிசையினுந் துவன்றிப் புக்கவே. 26
காலையங் கதுதனிற் கடவுட் கம்மியன்
மாலுறு கிரிதனில் வரம்பில் வீதியுங்
கோலநற் றெய்வதக் குலமுங் கோயிலுஞ்
சோலையும் வாவியுந் துவன்ற நல்கினான். 27
அத்துணை எம்பிரான் அமரர் கம்மியன்
கைத்தொழில் நோக்கியே கருணை செய்துபோய்ச்
சித்திர மறுகிடைச் சேனை வீரரை
வைத்தனன் மந்திர வரைப்பை எய்தினான். 28
ஏயின மஞ்ஞைநின் றிழந்து நான்முகன்
மாயவன் மகபதி வயவர் மற்றையோர்
ஆயினர் புடைவர அவையி னூடுபோய்ச்
சீயமெல் லணைமிசைச் சிறப்பின் வைகினான். 29
பரீஇயயல் வந்திடு பங்க யன்முதல்
மரீஇயினர் தமையெலாம் வயின்வ யின்றொறும்
ஒரீயினன் அமரரை ஒல்லை யேவினான்
பொரீஇயினர் இல்லதோர் புனித மேலையோன். 30
குலக்கி£¤ பொருவிய குறளின் வேந்தரும்
வெலற்கருந் திறலுடை வீர மொய்ம்பனும்
இலக்கரும் எண்மரும் யாரும் எந்தைதன்
மலர்க்கழல் தொழுதனர் மருங்கின் ஈண்டினார். 31
ஏவலின் இயன்றனர் இனையா¢ நின்றிட
மூவிரு பராசர முனிசி றார்களுஞ
சேவலை யுயரிய தேவ நாயகன்
பூவடி அருச்சனை புரிந்து போற்றினார். 32
வழிபடு புதல்வர்கள் வழுத்தி நின்றுழ
உழுவலன் போடுகண் ணோடிச் செஞ்சடைக்
குழவிவெண் பிறையினான் கூறுந் தொல்லருள்
முழுவதும் நினைந்தனன் முற்று ணர்ந்துளான். 33
சலம்புரி யும்பரா சரனெ னும்முனி
குலம்புரி தவமெனுங் குமரர் தேர்வுறப்
புலம்புரி போதகப் பொருண்மை யாவையும்
நலம்புரி குமரவேள் நவின்று வைகினான். 34
பொருவரு மகேந்தர புரத்தை நீங்கியே
தரணியில் வந்தவா சாற்றி னாம்இனிப்
பெருமைகொள் இந்திரன் பெண்ணை எம்பிரான்
திருமணஞ் செய்திடுஞ் செய்கை செப்புவாம். 35
ஆகத் திருவிருத்தம் - 35
- - -
2. தெ ய் வ யா னையம்மை திருமணப் படலம்
காய்ந்திடு தம்பகை கடந்து பொன்னகர்
வேந்தியல் முறையருள் வேற்கை வீரற்குக்
கூந்தலஞ் சிறுபுறக் குஞ்ச ரத்தனை
ஈந்திட மகபதி இதயத் தெண்ணினான். 1
விருத்த மதாகும்இவ் விழைவை இந்திரன்
திருத்தகு மாலயன் தேவர் தேர்வுற
உரைத்தனன் வினவலும் உவகை பெற்றுநின்
கருத்துநன் றாலெனக் கழறல் மேயினார். 2
பன்னிரு மொய்ம்புடைப் பகவன் பாற்படப்
பின்னலஞ் கரிமுழற் பிடியும் மொய்கைவாய்
முன்னுற அருந்தவம் முயன்று வைத்தனன்
இன்னுழி அதன்பயன் எய்திற் றேகொலாம். 3
கயலுறழ் விழியுடைக் கடவுள் யானையை
வியல்வரை எறிந்திடு வேற்கை அண்ணலுக்
கியல்புளி வதுவையால் ஈதற் கிவ்விடை
முயலுதி கடிதென மொழிந்து வைகினான். 4
மற்றது போழ்தினின் மகத்தின் செம்மலோர்
ஒற்றனை நோக்கியே ஒல்லை மேருவாம்
பொற்றையின் மனைவியைப் புதல்வி தன்னுடன்
இற்றையில் விளித்தனை ஏகுநீ என்றான். 5
என்றலுந் தூதுவன் இசைந்து மேருவிற்
சென்றனன் புலோமசைத் தெரிவை முன்புபோய்
நின்றனன் வணங்கினன் நினது சிந்தைபோல்
ஒன்றிய கேளென உரைத்தல் மேயினான். 6
மாண்டனன் வெய்யசூ£ மதலை தன்னொடு
சேண்டொடர் அமரருஞ் சிறையின் நீங்கினார்
ஆண்டலை உயர்த்தவன் அனிகந் தன்னொடு
மீண்டனன் திருப்பரங் குன்ற மேயினான். 7
நின்றிட அனையது நினது நாயகன்
உன்றனை மகளடும் ஒல்லை யிற்பரங்
குன்றிடை இருக்கையிற் கொண்டு செல்கெனா
இன்றெனை விடுத்தனன் ஏகுநீ யென்றான். 8
அம்மொழி வினவலும் அணங்கின் நல்லவள்
விம்மித முற்றனள் விழுமம் நீங்கினாள்
எம்மையும் இல்லதோர் இன்பம் எய்தினாள்
கொம்மென எழுந்தனன் குமரி தன்னொடும். 9
புடையுற வணங்கினர் போற்றி மேருவின்
இடையுறு புலோமரை ஏம மாகியே
அடலயி ராவத் வானை மேற்கொடு
மடமகள் தன்னொடும் வானத் தேகினாள். 10
பொருப்பினுள் மேலதாய்ப் புவியிற் பேர்பெறுந்
திருப்பரங் குன்றிடைச் சென்று தேவர்கோன்
இருப்பதோர் மந்திரத் தெய்தி வைகினாள்
மருப்பிரண் டுடையதோர் வார ணத்துடன். 11
உரையுமவ் வெல்லையின் உயர்ம கேந்திரச்
சிறையினும் அகன்றிடு தெய்வத் தையலார்
இறைவியைப் பெற்றன மியாமுய்க் தோமெனா
முறைமுறை வணங்கினா£¢ முகிழ்த்த கையினார். 12
சேணுறும் எழிலிவாய் திறந்த மின்னுவைக்
காணுறு கின்றதோர் கலாப மஞ்ஞைபோல்
மாணுறு புலோமசை வரலும் மாதரார்
ஏணுறு கின்றனர் ஏமம் பெற்றனர். 13
கண்டனள் மதலையைக் கருணை யால்தழீஇக்
கொண்டனன் மகிழ்ந்தனள் கொங்கை பாலுக
விண்டனள் கவற்சியை வெறுமை யுற்றுளோர்
பண்டுள பெருநிதி படைத்த பான்மைபோல். 14
ஆடுறு பசியினோர் ஆக்கங் கண்டுழி
நீடுறும் உவகையான் நிறை பெற்றென
மாடுறு புலாமசை வடிவங் காண்டலு
கூடினர் தன்மையுங் குரிசில் எய்தினான். 15
வேறு
அப்போது வானோர் குழுவோ டயிராணி கேள்வன்
செப்*போது கொங்கை மகமூஉ மணஞ்செப்பல் முன்னி
ஒப்போதும் நீர்மை யிலதாம் ஒருவன் கழற்கே
கைப்போது தூவிப் பணிந்தேத்திக் கழறல் உற்றான். 16
( * ஓது - உவமவுருபு.)
கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை கட்டல் செய்தாய்
இந்நின்ற தேவர் சிறைமீட்டனை என்ற னக்கு
இன்னின்ற தொல்சீர் புரிந்தாயது முற்றும் நாடிச்
செய்ந்நன்றி யாகச் சிறியேன்செயத் தக்க துண்டோ. 17
முந்தேதமி யேன்பெறு மங்கையிம் மொய்வ ரைக்கண்
வந்தே யமர்வாள் அவள்தன்னை வதுவை செய்து
கந்தே புரைநின் பெருந்தோளிற் கலத்தி யாங்கள்
உய்ந்தே பிறவிப் பயன்பெற்றனம் ஓங்க வென்றான். 18
என்னுந் துணையில் அமரேசனை எந்தை நோக்கி
அந்நங்க் தானும் மிகநோற்றனள் ஆத லால்நீ
முன்னும் படியே மணநாளை முடித்தும் என்னத்
தன்னுங் கடந்த மகிழ்வெய்தித் தருக்கி நின்றான். 19
வடிக்கொண்ட ஔ¢வேற் படைநம்பிதன் வார்க ழற்கால்
முடிக்கொண் டடியேஞ் சிறந்தேங்கள் முதல்வ என்னாக்
கடிக்கொண்டே வாய்தற் புடைவந்து கணிப்பில் காதம்
நொடிக்கொண்ட போழ்திற் படர்தூதரை நோக்கி னானால். 20
முன்னாகி யுள்ள பலதூதர் முகத்தை நோக்க
அன்னார் எவரும் தொழுதேபொன் னடிவ ணங்கி
எந்நாயக னேதமி யேஞ்செய்வ தென்கொ லென்னப்
பொன்னா டுடையான் இ·தொன்று புகல லுற்றான். 21
மூவர்க்குள் மேலோன் கிரிசேர் முசுகுந் தனாதக்
காவற் கடவுள் தலைவர்க்கும் ககன மேவும்
தேவர்க்கும் ஏனைத் திசையோர்க்கும் முனிவ ராயோர்
ஏவர்க்கும் எந்தை மணநாளை எனச்சொல் வீரால். 22
கந்தக் கடவுள் மணத்தன்மை கழறி வல்லே
இந்தப் பொருப்பி னிடையாவரும் ஈண்டும் வண்ணம்
தந்திட் டிடுங்கள் எனவாசவன் சாற்ற லோடும்
அந்தக் கணத்தில் தொழுதொற்றர் அகன்று போனார். 23
வேறு
போனபொழு திற்புலவர் செம்மல் புலன்மிக்க
வானவர்கள் கம்மியனை வல்லையில் விளித்துக்
கானமர் கடம்புபுனை காளைதன் மணத்துக்
கானசெயல் முற்றுற அமைத்தியிவண் என்றான். 24
புலவன துளங்கொடு பொருப்பின் ஒருசாரின்
நிலமிசை வரைப்பகல் நிதிக்கொடு விதித்துக்
குலமணி குயிற்றிநனி கோலம தியற்றி
வலனுயர் சிறப்பினொரு மண்டபம் அமைத்தான். 25
மேலைநில முற்றுற விதானவகை போக்கி
மாலையொடு பல்கவரி வான்றுகில்கள் தூக்கி
ஆலய நனந்தலையில் ஆறுமுகன் வைக
நூலின்முறை நாடியொரு நோன்தவி சமைத்தான். 26
வேதநெறி தந்திடு விசாகன் அயல்வந்த
மாதவன் விரிஞ்சன்முதல் வானவர்கள் யாரும்
ஏதிலரும் வைகஇயல் கின்ற இடைதோறும்
ஆதனம் வரம்பில அமைத்தனன் இமைப்பில். 27
மன்றல்பயில் கின்றவது வைக்களன் மருங்கில்
குன்றுபுரை பல்சிகர கோபுரம் வகுத்தான்
அன்றிமணி மண்டபம் அளப்பில் அமைத்தான்
இன்றியமை யாப்பொதுவும் எண்ணில இழைத்தான். 28
காலம்வரை யாதுகரு துற்ற பொழுதெல்லாம்
சாலவெவர் கண்ணுநனி தம்பயன் வழங்குஞ்
சோலைமலர் வாவிகள் சுனைத்தொகை தொகுத்தான்
ஏலும்வது வைக்குரிய ஏனவும் அளித்தான். 29
அவ்வகை யெலாம்புலவன் அங்ஙனம் வகுப்பச்
செவ்விது தெரிந்துவகை செய்தமரர் செம்மல்
மெய்வதுவை யாற்றும் வழவேண்டு கரணங்கள்
எவ்வெவையும் அங்கணொர் இமைப்பில் வருவித்தான். 30
தேவர்முதல் வன்தனது செய்கை இதுநிற்க
ஏவலர் இசைத்திடலும் இவ்வதுவை காணக்
கோவியல் புரிந்தமுசு குந்தனெனும் நேமிக்
காவலன் வரும்பரிசு கட்டுரைசெய் கிற்பாம். 31
கல்லருவி தூங்கு கயிலைப்பொழி லின்மேனாள்
அல்லுறழ் மிடற்றவனும் அம்பிகையு மாக
னுல்லையின் மகிழ்ச்சியொ டிருப்பமுசு ஈட்டம்
வில்லுவ மரந்தொறும் வியன்சினையில் உற்ற. 32
முற்றுணர் கருத்தின்முனி வோர்கள்என முள்காந்
துற்றிடு முசுக்கலையுள் ஒன்றிருவர் மீது
மற்றொரு வில்வத்திலை வரம்பில பறித்துத்
துற்றிடுவ தென்னநனி தூர்த்துளதை யன்றே. 33
தூர்த்ததொரு காலைதனிற் சுந்தரிபொ ருளாய்ச்
சீர்த்திடலும் ஆங்கவள் செயற்கைதனை அண்ணல்
பார்த்துநமை ஈண்டுவழி பட்டுளது தன்னை
வேர்த்திடுவ தென்னிது விடுத்தியினி என்றான். 34
என்றிடலும் அம்பிகை இகற்சின மிலாளாய்
நன்றருள் புரிந்திடலும் ஞானவடி வானோன்
வன்றிறல் முசுக்கலை மனத்திருள் அகற்றி
ஒன்றியமர் வாலுணர் வொருங்குதவி னானால். 35
மெய்யுணர்வு சேர்தலும் வியன்சினை யின்நின்றும்
ஒய்யென இழிந்துமுசு உட்குவர லெய்தி
ஐயனையும் ஆய்தனையும் ஆர்வமொடு தாழ்ந்து
பொய்யடிய னேன்பிழை பொறுத்திர்என லோடும். 36
பிழையிதென அச்சமொடு பேசல்எமை ஈண்டே
விழுமியதொர் கூவிளையின் மெல்லிலைகள் இட்டு
வழிபடல் புரிந்தனை மனுக்குலம் உதித்து
முழுதுலகை யாளுகென முன்னவன் மொழிந்தான். 37
வேறு
அம்மொழி தேர்தலும் ஆயதொர் கள்வன்
கைம்மிக லுற்ற கலங்கஞர் எய்தி
விம்மி இரங்கி விதிர்ப்பொ டெழுந்தே
எம்மிறை வற்றொழு திவ்விவை செப்பும். 38
நுங்களை வைகலும் நோக்கி உவப்பாய்
இங்குறை கின்ற திகந்து நிலம்போய்
மங்குறு செல்வ வலைப்படு வேனேல்
எங்கள் பிரான்பினை எங்ஙனம் உய்கேன். 39
என்னலும் அன்னதை எம்மிறை கேளா
நின்னுளம் நன்று நிலத்திடை வைகிப்
பின்னிவண் மீள்குதி பேதுறல் எய்தி
முன்னலை யாதும் முசுக்கலை என்றான். 40
பொய்ம்மறை யான புலாலுடல் போற்றி
அம்மையில் வாழ்விடை அற்ற முறாமே
இம்முக னோடுற எற்கருள் என்னா
மெய்ம்முசு வின்கலை வேண்டிய தன்றே. 41
அற்றமில் அவ்வரம் ஐயன் அளிக்கப்
பெற்றருள் கொண்டு பெருங்கயி லாயப்
பொற்றை யகன்று பொருக்கென இம்பர்
மற்றொரு கணத்தினில் வந்தது மன்னோ. 42
ஆரஞர் மூழ்கியும் ஆக்கம் இழந்தும்
வாரிசு சுருங்கியும் வாய்மை நிறுத்தித்
தாரணி யாள்அரிச் சந்திரன் என்போன்
ஓர்மரு மான்என வேயுதித் தன்றே. 43
மாமுக மேமுசு மற்றுள வெல்லாங்
காமரில் ஏர் தரு காட்சிய தாகிக்
கோமுறை சேர்முசு குந்தன் எனாவோர்
நாம இயற்பெயர் நண்ணிய தன்றே. 44
ஆய வழிப்படும் அம்முசு குந்தன்
தூய பொலன்முடி தொன்முறை சூடி
மாயிரு ஞால வளாகம துள்ள
தேய மெலாமொர் செகிற்*கொடு காத்தான். 45
( * செகில் - தோள்மேல்.)
ஓவறு சீர்க்கரு வூரிடை மேவிக்
கோவியல் ஓம்புறு கொள்கை யனாகித்
தேவரை ஏவல்கொள் சீர்கெழு சூரன்
காவலின் ஆணை கடக்கலன் உற்றான். 46
சொற்றிறல் மேதகு சூரெனும் வெய்யோன்
உற்றிடும் வைப்பினில் ஓரிடை தன்னில்
மற்றொர் இளம்பிறை வைகிய வாபோல்
கொற்றவ னாம்முசு குந்தன் இருந்தான். 47
சூரனை எந்தை தொலைத்தது கேளா
ஆரஞர் நீங்கி அருஞ்சிறை பெற்ற
மேருவ தென்ன வியன்மிடல் பெற்றுச்
சீரிறை மாட்சி செலுத்தி அமர்ந்தான். 48
வேறு
அமரும் எல்லையின் அரசன் முன்னரே
இமைய வர்க்கிறை ஏவு தூதர்போய்க்
கமல மன்னபொற் கழல்கள் வாழ்த்தியே
தமது வன்மையாற் சாற்றல் மேயினார். 49
உனது நண்பனான் உறுபு ரந்தரன்
தனது தூதர்யாம் தாவில் சீர்பெறீஇ
நினது சுற்றமும் நீயும் வாழிகேள்
இனிது மங்கலம் இசைப்ப எய்தினேம். 50
அடாத தீமைசெய் தமரர் தஞ்சிறை
விடாத சூரனை வீட்டி வேலவன்
வடாது பூமி£ய் வந்து கூடலின்
குடாது சேர்பரங் குன்றில் வைகினான். 51
கொற்ற வேற்படைக் குமரற் கிந்திரன்
தெற்றெ னத்தருந் தெய்வ யானையை
இற்றை சென்றபின் ஈகின் றானிது
சொற்றி டும்படி தூண்டி னானெமை. 52
மாறி லாதஅவ் வதுவை காணநீ
ஈறில் சேனையோ டெழுந்து தென்றமிழ்க்
கூறு சீர்ப்பரங் குன்றந் தன்னிடைச்
சேறி யாலெனாச் சிலதர் ஓதினார். 53
ஓத அன்னவன் உவகை சிந்தையின்
மீது பொங்குற மெய்ப னித்தெழீஇத்
தூத ரைத்தழீஇச் சோப னம்மிதற்
கேது மல்லையால் ஈவு மாறென்றான். 54
ஈண்டை மாநிதி யாவும் நல்குகோ
காண்ட குங்குடை கவரி நல்குகோ
ஆண்டி ருந்தஎன் அரசு நல்குகோ
வேண்டு கின்றதென் விளம்பு வீர்என்றான். 55
கோதில் சீர்முசு குந்தன் இந்தவா
றோதும் எல்லையில் உவகை யுற்றவன்
ஆத ரத்தின தளவை நோக்கியே
தூத ராயினோர் வியந்து சொல்லுவார். 56
சொல்வி னைப்படுந் தூதர்க் கிவ்வெலாம்
ஒல்வ தன்றிவை உதவிற் றொக்குமால்
வல்வி ரைந்துநீ வாச வன்முனஞ்
செல்வ தேயெனச் செப்பிப் போயினார். 57
போய தூதுவர் புவியின் மன்னவர்
ஆயி னோர்க்கெலாம் ஆறு மாமுகச்
சேய வன்மணஞ் செப்பி மாதிரம்
ஏயி னோர்க்கும்இங் கிதுவி ளம்பினார். 58
அகல்வி சும்பிடை அல்க லும்படர்
பகல வன்முதற் பகவர் யாவர்க்கும்
இகலின் மாதவர் எவர்க்கும் இச்செயல்
விகல மின்றியே விளம்பி யேகினா£¢. 59
வேறு
ஆய காலையின் முசுகுந்தன் அப்பதி தன்னில்
மேயி னார்களுந் தன்பெருஞ் சேனையும் வேற்கை
நாய கன்மணங் காணிய முன்னரே நடப்பான்
பாய்ம தக்கரி மிசைமுர சறைந்திடப் பணித்தான். 60
அந்த நீர்மையை வள்ளுவன் அகன்கரு வூரில்
தந்தி யின்மிசை ஏறியே தனிமுர சறைந்து
முந்து சீர்க் கமலாலயத் தரன்விழா மொழிந்தே
இந்தி ரன்திரிந் திடுதல்போல் திரிந்தனன் இசைத்தான். 61
வேறு
ஆனதோர் பொழுதில் அந்நகரின் மாக்களுஞ்
சேனையின் வௌ¢ளமுந் திசைக ளின்புறம்
போனதோர் பெரும்புறப் புணரிக் கேகுறும்
ஏனைய கடலென எழுத லுற்றவே. 62
எண்டிசை யாறறுவ இபங்கள் ஆதலின்
அண்டமுந் தாங்குவான அயன்ப டைத்தென
விண்டொட நின்றிடும் வேழம் எண்ணில
கொண்டல்கள் சூழபோற் குலவச் சென்றவே. 63
வால்கிளர் கற்றையும் மதர்வை நோக்கமும்
பால்கிளர் செவிகளும் பழிப்பில் சென்னியுங்
கால்கிளர் செலவுமாய்க் கால்கள் சென்றென
மேல்கிளர் புரவியின் வௌ¢ளஞ் சென்றவே. 64
ஐயிரு திசையினும் அணிந்து செல்வன
கொய்யுளை வயப்பரிக் குழாங்கள் பூண்டன
வெய்யவர் உதித்தென விளங்கு காட்சிய
வையமெண் ணில்லன வையம் போந்தவே. 65
வலிபுணர் யாக்கையர் வயங்கொள் வாகையர்
கொலைகெழு பல்படைக் கூட்டுண் வாட்கையா¢
புலியுறழ் மானவப் பொருந ராயினார்
தலைவர்கள் தம்மொடு தழுவிப் போயினார். 66
அடல்வலி மானவர் அங்கை ஏந்திய
படைவகை மின்னுவ பல்லி யங்களும்
இடியொலி காட்டுவ ஈண்டு தானையுட்
கொடிநிரை விசும்புதோய் கொண்டல் ஆயவே. 67
தாளுறு கழலினர் சரம்பெய் தூணியர்
தோளுறு வில்லினர் தொடையற் குஞ்சியர்
வாளுறு தடங்கணார் மருங்கு மன்மத
வேளென ஒருசில வீரர் ஏகினார். 68
கறுத்திடுபல கைவாட் கையர் சாலிகை
பொறுத்திடு மெய்யின ராகிப் போகுவார்
மறுத்தவிர் மதிமுக மாதர் நாட்டவேல்
ஒறுத்திடு நம்மையென் றுன்னி னா£¢கோலோ. 69
அடைந்திடு துன்பெலாம் ஆற்றி யம்புவி
மடந்தைமுன் செய்திடு மாத வத்தினால்
தொடர்ந்திடு பிடியினந் தொலையப் பூமிசை
நடந்தனர் வரம்பிலா நகைமென் கொம்பனார். 70
ஏரகல் மணந்தனக் கெய்தும் ஆசையால்
வாரக முலையுடை மடந்தை மார்பலர்
பாரக மலிதரப் பரவிப் போயினார்
தாரகை விண்ணெறி படருந் தன்மைபோல். 71
இடையிடை கால்களும் யாறுஞ் சேர்தலின்
படிமிசை நடந்திடு பாவை மார்களை
விடலைகள் ஏந்தியே மெல்ல ஏகினார்
கடலினும் பெரியதாங் காம மூழ்குவார். 72
தந்தி களின்மிசைத் தைய லாருடன்
மைந்தர்க ளெகினார் மாநி லந்தனில்
அந்தமில் சீரயி ராணி தன்னொடும்
இந்திரா¢ போவதோர் இயற்கை போலவே. 73
அதிர்குரல் தோ¢களில் அரிவை மாருடன்
கதுமெனப் போயினர் கணிப்பில் காளையர்
மதிமுகத் தாருடன் வரம்பில் வெய்யவர்
முதுவரைச் சிகரமேல் முடுகிச் சென்றென. 74
கூற்றினை வென்றிடுங் கொலைக்க ணார்சிலர்
ஏற்றமில் பிடிமிசை ஏறிப் போந்தனர்
ஆற்றல தின்மையால் அவர்ந டைக்குமுன்
தோற்றன நாணியே சுமத்தல் போன்றவே. 75
காமரு கொங்கையாற் கரிம ருப்பினை
ஏமுற வென்றுளார் யானைக் கோடுகள்
மாமருங் கடைதலும் மருண்டங் கோடினார்
தாமுதற் செய்வினை தம்மைச் சூழ்ந்தென. 76
விரிதரு சேனையில் விண்ணிற் பாய்தரு
பரிகளின் மடந்தையர் பலரங் கேகினார்
கரையறும்அமரர்கள் கடைந்த பாற்கடல்
திரைதனில் வருபல திருவைப் போலவே. 77
மேகம துற்றிடு மின்னின் மீமிசைப்
போகிய சிலையொடும் போந்த தன்மைபோல்
பாகினை யன்னசொற் பாவை மா£¢நர
வாகனம் அவைகளின் மருவி யேகினார். 78
அவிகையில் முழுமதி அளிப்பப் பல்பொறி
குவிகையி லம்புயங் குலவிச் சென்றெனக்
கவிகையி லாதபங் கரப்ப மூடுபொற்
சிவிகையி லேகினார் தெரிவை மார்சிலர். 79
வேறு
பரதனங் கவரும் அல்குற் பரத்தையர் தம்மைப் பாரா
விரதநன் முனிவர் தாமும் வேதியர் பலரும் ஈண்டிச்
சுரதநண் புடைய ராகுங் கணிகையர் தோளால் தாளால்
உரதனந் தன்னால் தாக்க உளைந்துளைந் தொதுங்கிப் போனார். 80
வேண்டிய மாற்றங் கொள்ளாள் வெகுண்டுசென் றிடுவாள் முன்னம்
ஆண்டொரு மதமால் யானை அடர்த்துவந் திடலும் அஞ்சிப்
பூண்டிடு புலவி நீங்கிக் கணவனைப் புல்லிக் கொண்டாள்
தூண்டரு தோளி னானும் இபத்தினைத் தொழுது நின்றான். 81
கூமருங் கலாப மஞ்ஞை இனமெனச் செல்லு மாதர்
மாமருங் கிறுங்கொல் இற்றால் மதன்அர சிறக்கும் என்றே.
காமருங் கவற்சி கொள்ளக் கரத்தினால் அவரைப் புல்லித்
தாமருங் காகப் போனார் தார்முடி இளைய ரானோர். 82
கணவன்தன் பிழையை உன்னிக் கனன்றிடுங் கணவன் தோளை
அணைவுறா நீர்மை உன்னி மகிழ்ந்திடும் இவ்வா றாகிப்
மணவினை தன்னை உன்னி மகிழ்ந்திடும் இவ்வா றாகிப்
புணர்கயிற் றூசல் போலும் புந்திகொண் டொருத்தி போனாள். 83
கையிலார் கைகள் பெற்றும் காலிலார் கால்கள் பெற்றும்
மொய்யிலார் மொய்கள் பெற்றும் மூங்கைகள் மொழியைப் பெற்றும்
மையல்சேர் குருட ரானோர் வாள்விழி பெற்றுஞ் சென்றார்
ஐயன்மேல் உள்ளம் வைத்தார்க் கனையதோ அரிது மாதோ. 84
விடந்தரு வேற்கண் நல்லாள் வௌ¤ப்படு கொங்கை தன்னைப்
படந்தனில் மறைத்த லோடும் பாங்கிலோர் காளை பாராத்
தொடர்ந்தனன் அவள்பின் போனான் துணைமுலைப் படத்திற் சிக்கிக்
கிடந்ததன் மதியை மீட்கக் கிலேசமோ டேகு வான்போல். 85
நெய்தலுங் கமலப் போதும் நீலமும் நெடுநீர்ப் பொய்கை
கொய்தனர் குமர ரானோர் கொடுங்குழை மடந்தை மார்தங்
கைதனிற் கொடுத்துச் செல்வார் கன்னிமீர் இவையோ நுங்கண்
மைதிகழ் விழிக்குத் தோற்ற மலரெனக் காட்டு வார்போல். 86
அரிசன மேனி நல்லாள் அணிதுகில் அசைவின் சீரால்
கரிசனம்* அன்ன கொங்கை காண்டலுந் தளர்ந்தோர் காளை
தெரிசனந் தன்னில் ஈதென் சிந்தையைப் பிணித்த தென்றால்
பரிசனந் தனில்என் னாமோ என்றுயிர் பதைத்து நின்றான். 87
( * கரிசனம் - யானைக்கோடு.)
கற்பக வல்லி அன்னாள் ஒருத்திதன் காதல் மூழ்கி
அற்பகல் ஏவல் செய்வான் ஆங்கவள் செல்லும் போதில்
பொற்புறு படாத்தின் நீங்கிப் பூண்முலை சிறிது தோன்றப்
பற்பகல் நோற்று வேண்டும் பரிசில்பெற் றாரை ஒத்தான். 88
ஒப்பிலா ஒருவேற் காளை ஔ¢ளெயிற் றூறு தாங்கித்
துப்புறு பவளச் செவ்வாய் திறக்கலள் சொல்லும் ஆடாள்
அப்படி ஒருத்தி செல்ல அநங்கவேள் அமுதம் வைத்த
செப்பினிற் குறியுண் டாங்கொல் திறக்கலீர் சிறிது மென்றான். 89
புடைதனில் ஒருத்தல் புல்லப் போவதோர் பிடியின் மேவும்
மடவரல் வெருவ லோடும் மற்றது கண்டோர் வள்ளல்
இடையகல் தேரும் மாவும் யானையும் படையுங் கொண்டீர்
கடகரி ஒன்றற் கஞ்சுங் காரணம் யாதோ என்றான். 90
ஆழியில் அமுதம் பொங்கி அலையெறிந் தொழுகிற் றென்ன
ஏழிசை நரம்பு கொண்ட மகரயாழ் இசையப் பண்ணி
வேழமுந் தேரும் ஊர்ந்து விறலிய ரோடு பாணர்
நீழலும் பருந்து மென்ன நெறிப்பட இசைத்துப் போனார். 91
வெங்கரி நுதலில் அப்பும் வீரசிந் துரம்வில் வீச
மங்கையர் மைந்தர் பூணும் படைகளும் வயங்க மாடே
தொங்கலுங் கவிகைக் காடுந் துவசமும் இருளைச் செய்யக்
கங்குலும் பகலும் மாலைக் காலமும் போலு மாதோ. 92
கொக்கரை படகம் பேரி குடமுழாக் கொம்பு காளந்
தக்கைதண் ணுமைத டாரி சல்லரி நிசாளந் தாளம்
மெய்க்குழல் துடியே பம்பை வேறுபல் லியமுந் தாங்கி
மைக்கடல் வாய்விட் டென்ன வரம்பிலோர் இயம்பிப் போனா£¢. 93
ஆரண முனிவர் தாமும் அமரரும் அகல்வான் செல்வார்
சீரணி முசுகுந் தன்மேல் திருமலர் சிதற லுற்றா£¢
காரண மில்லா வள்ளல் கடிமணந் தாமுங் காண்பான்
தாரணி தன்னிற் செல்லுந் தாரகா கணங்கொ லென்ன. 94
இன்னன சனங்கள் ஈண்டி எங்குமாய் ஏகும் எல்லைத்
தன்னுறு கிளைஞர் தாமுந் தந்திரக் கிழவர் யாரும்
முன்னொடும் பின்னும் பாங்கு மொய்த்துடன் செல்லத் தானோர்
பொன்னெடுந் தேர்மேல் கொண்டு முசுகுந்தன் போத லுற்றான். 95
வேறு
அடவியும் இகந்தனன் அகணி நாட்டுடன்
இடையிடை அடுக்கலும் யாறும் நீங்கினான்
படர்தலும் அவன்வழப் பரிதி நாயகன்
நடுவுறும் உச்சிமேல் நண்ணி னானரோ. 96
அண்ணலம் படைகளும் அளப்பின் மாக்களும்
உண்ணெகிழ் உவகையோ டொல்லை வந்திடத்
தண்ணிழல் வெண்குடைத் தரணி காவலன்
பண்ணவன் மேவுறு பரங்குன் றெய்தினான். 97
முசுமுக முடையவன் முன்னர் வந்துழி
வசுமதி இறைபுரி மன்னர் ஏவரும்
அசைவறு திருவொடும் அனிகந் தன்னொடுந்
திசைதொறுந் திசைதொறுஞ் சென்றங் கெய்தினார். 98
முறைநெறி யாற்றிடும் முசுகுந் தன்முதல்
இறையவர் யாவரும் ஈண்டு தானையுங்
குறைதவிர் சனங்களுங் குன்றஞ் சூழ்ந்துற
நிறுவினர் ஒன்றிய நெஞ்சங் கொண்டுளார். 99
புழையுறு கரங்களாற் போத கஞ்சில
உழைவரு பிடிதனக் கும்பர் தாருவின்
குழைகளை முறித்தன கொடுத்துக் கோட்டினான்
மழைமுகில் கீறியே வாரி நல்குவ. 100
படர்சிறை நீங்கிய பராரை வெற்பெலாம்
அடிகளின் ஒற்றியே அசைந்து போந்தெனக்
கடிகமழ் மும்மதக் கரிகள் ஓர்சில
விடலருந் தளையொடு மெல்லச் சென்றவே. 101
மூடுறு கணமுகில் முழக்க றாததோர்
கோடுயர் குன்றினைக் குறித்து நோக்கியே
ஈடுறு திசைக்கரி முதென் றுன்னியே
ஓடுவ ததன்மிசை ஒன்றொர் யானையே. 102
வேறு
கலையகல் அல்கு லார்பாற் காதலான் முயங்கி வல்லே
உலைவுறு சேக்கைப் போரில் உடைந்திடு குமர ரேபோல்
மலைபொரு பிடிக ளோடு மலைந்துதம் மதநீர் சிந்தி
நிலையழி வெய்தி வௌ¢கி நின்றதோர் நெடுநல் வேழம். 103
உடம்பிடி புரையும் ஒண்கண் மோகினி யொருத்திக் காகத்
திடம்படும் அவுணர் யாருந் திரண்டுடன் சென்ற வாபோல்
மடம்படு பிடியொன் றேக மையல்மேல் கொண்டு மாடே
கடம்படும் ஒருத்தல் வேழங் கணிப்பில படர்ந்த அன்றே. 104
காழுற்ற தந்தம் மின்னக் கபோலத் துமதநீர் வீழ
ஊழிப்பேர் உருமுத் தன்னை உமிழ்ந்தென ஒலிமீக் கொள்ளக்
கேழுற்ற மணிவில் லென்னக் கிளர்நுதல் ஓடை பொங்க
வேழத்தின் நிரைக ளெல்லாம் மேகம்போ லுலாவு கின்ற. 105
இருநெடு விசும்பிற் செல்லும் எழிலியை எயிற்றாற் பாய்ந்து
சொரிதரு புனலை வாரித் துதிக்கையால் வீசு கின்ற
பருமணி யோடை யானை பாய்திரைப் பரவை ஏழுங்
கரதலம் எடுத்துச் சிந்துங் கண்ணுதற் களிறு போலும். 106
கன்றொடு பிடிகள் சூழக் கடாம்படு கைம்மா ஒன்று
நின்றிடு கந்திற் சேர்ந்து நிகளத்தோ டமர்ந்த நீர்மை
குன்றுகள் புடையிற் சுற்றக் குருமணி நீலப் பொற்றை
ஒன்றொரு தமிய தாகி உற்றவா றொத்த தம்மா. 107
எருத்தமேல் இடிக்கும் பாகர் இசைக்குறி கொள்ளா தாகி
மருத்தினும் விசைமேற் கொண்டு வன்கரித் தண்ட நோக்கி
உருத்திடு கொடுஞ்சொல் தாயர் ஒறுக்கவும் ஒருவன் மாட்டே
கருத்துறு கணிகை நெஞ்சிற் போவதோர் கடுங்கண் வேழம். 108
தூவகங் கொண்ட செங்கேழ் அங்குசந் தூண்டு பாகர்
நாவகங் கொண்ட சொல்லான் நவிற்றுமந் திரத்தால் வாக்கால்
பாவகங் கொண்ட பைங்கட் பாரிடம் வழப்பட் டாங்குச்
சேவகங் கொண்ட பொங்கர் சேர்ந்தன சிலகைம் மாக்கள். 109
அந்தமி லாத செல்வத் தவுணருக் கரசன் முன்னம்
வெந்திறற் கால்கள் தம்மை வியன்சிறைப் படுத்தி யென்னக்
கந்திடைப் பிணிக்கப் பட்ட கடுநடைப் புரவி யெல்லாம்
பந்தியில் ஒழுங்கு கொண்டு நின்றன பாங்க ரெங்கும். 110
வீரவேல் தடக்கை வள்ளல் விழவினைக் காண விண்ணோர்
ஊரொடு திசையும் ஏனை உலகமும் ஒருங்குற் றென்னக்
காரினும் ஒலிமேல் கொண்ட கலினவாம் புரவி பூண்ட
தேர்நிரை அநந்த கோடி செறிந்தன திசைகள் எங்கும். 111
விடங்கெழு வேற்க ணாரும் வெலற்கரும் வீரர் தாமுந்
தடங்கெழு தானை வௌ¢ளத் தலைவரும் ஏனை யோரும்
இடங்கெழு துளைத்துன் னூசி இழைதொடுத் திசைக்கப் பட்ட
படங்கெழு மாட கூடத் தாவணம் பரவிப் புக்கார். 112
கன்னெடுந் தாரை கான்ற கார்முகில் வளைப்ப செங்கண்
முன்னவன் நிரையைக் காத்த முதுவரை நிலைய தென்னப்
பன்னிறப் பசுங்காய் சிந்தும் பழுமரக் காமர் காவுட்
பொன்னிவர் புனைமாண் கோயில் புரவலற் கமைந்த தன்றே. 113
முத்தமுந் துகிரும் பொன்னும் முழுமணிக் கலனுஞ் சந்துஞ்
சித்திரப் படமும் மற்றுந் தெற்றிமேல் நிரைத்துச் சீர்சால்
உத்தம வணிகா¢ உற்றார் உயர்ச்சியுங் கற்புந் தூக்கி
அத்தகு பொருளை யார்க்கும் அளித்திடுங் கொடையி னார்போல். 114
மடப்பிடி மான்தேர் நீங்கி வானிடைத் தவறி மின்னின்
கொடித்திரள் செல்லு மாபோல் குவலயம் படர்ந்து பொங்கர்
இடத்தினில் ஒதுங்கி வெற்பின் எதிரெதிர் கூவி மஞ்ஞை
நடித்திடும் ஆடல் நோக்கித் திரிந்தனர் நங்கை மார்கள். 115
கோலொடு வில்லும் வாளுங் குந்தமும் வயங்கப் பாத
சாலமுங் கழலும் ஆர்ப்பத் தபனிய மணித்தார் தாழச்
சோலையின் உலவிச் சாரல் அருவியுஞ் சுனையுங் கண்டு
மால்கரி மலைவும் நோக்கி மடங்கலில் திரிந்தார் மைந்தர். 116
தாரிடைப் படிந்த வண்டு தடமலர்க் குவளை சேர
வாரிடைப் படிந்த கொங்கை மாதரும் மைந்தா¢ தாமும்
ஊரிடைப் படிந்த செங்கேழ் ஆதவன் உருப்பந் தீர
நீரிடைப் படிதல் வேட்டு நெடும்புனல் துறையில் வந்தார். 117
வெண்ணிற முகிலின் உம்பர் விஞ்சையர் வேந்தர் தாமும்
ஒண்ணுதல் அணங்கி னோரும் ஒருங்குடன் திரண்ட தென்னக்
கண்ணகல் தடாகம் புக்க கனங்குழை மகளிர் மைந்தர்
தண்ணுறு புனல்பாய்ந் தாடித் தலைத்தலை திரிதல் உற்றார். 118
கழியுண்ட உவரிக் கானற் கடைசியர் நாட்டம் அஞ்சிப்
பழியுண்டு மறைந்த வாபோல் ஒருசிறை பயிலு நெய்தற்
குழியுண்ட போதை நோக்கிக் குரைபுனல் தடத்துக் கம்மா
விழியுண்டு கொல்லோ என்றே கொழுநரை வினவு கின்றார். 119
பங்கயம் வதனம் என்பார் பாசியைக் கூந்தல் என்பார்
செங்கிடை அதரம் என்பார் புள்ளலி செப்பல் என்பார்
சங்கினைக் களமே என்பார் தடாகமும் ஒருத்தி யல்ல
மங்கையர் பலரே என்பார் திரைகளை மணித்தூ சென்பார். 120
தத்தையை யனைய சொல்லாள் ஒருத்திதன் நீழல் தன்னை
அத்தடந் தன்னில் நோக்கி அளியனை அறியா தீண்டோர்
மைத்தடங் கண்ணினாளை மருவினை என்று கேள்வன்
கைத்தலந் தன்னை விட்டு வெகுண்டனள் கரையிற் போனாள். 121
குளத்திடைப் புனல்வாய்ப் பெய்து கொப்பளித் திடுவான் தன்மேல்
உளத்திடை வெகுளி யெய்தி ஊடினள் ஒருத்தி ஏகி
முளைத்திடு கமலக் கானின் முகமலா வுறுப்பு முற்றும்
ஔ¤த்தனள் நிற்ப நாடிக் காண்கலன் உலைதல் உற்றான். 122
தாம்பெறு கொழுநர் தம்மைத் தத்தமக் குரிய புத்தேள்
ஆம்பரி சுன்னுந் தன்மை ஐயம தில்லை யென்னக்
காம்புறழ் தடந்தோள் நல்லார் கணவர்மேற் கரத்தால் அள்ளிப்
பூம்புனல் வீசு கின்றார் பூசனை புரிகு வார்போல். 123
ஞெண்டொடு வராதலுஞ் சேலும் யாமையும் நிலாவெண் சங்கும்
புண்டரீ கத்த டாகங் குடைந்திடும் பூசல் அஞ்சித்
தெண்டிரை அமுதச் சொல்லார் சிற்சில உறுப்புத் தன்னைக்
கண்டுகண் டிரிவ தென்னத் திரிவன கலக்க மெய்தி. 124
ஏந்திழை மகளிர் தாமும் மைந்தரும் இருநீர் தன்னுட்
பாய்ந்தன ராடும் எல்லைப் பங்கய விலைக டோறுஞ்
சேர்ந்திடு திவலை ஈட்டஞ் சிறந்தவர் சேர்த லாலே
பூந்தடம் பொய்கை யாக்கை பொடித்தன போலும் அன்றே. 125
நோக்கினும் நுழைகு றாத நுண்துகில் மறைத்த அல்குல்
தேக்குதண் பொய்கை யாடுஞ் செவ்வியில் தெரியத் தோன்ற
நீக்கரும் பெருநாண் கொண்டு நின்றிடா தொருத்தி யோடித்
தாக்கணங் கென்னப் போய்த்தன் கொழுநனைத் தழுவி கொண்டாள்.126
உட்டௌ¤ வில்லா நங்கை ஒலிபுனல் தடத்தின் ஆடுங்
கட்டழ குளதோர் காளை கவிரிதழ் வெளுப்பு நோக்கிக்
கிட்டியான் நிற்க உன்றன் கேழ்கிளர் அதரத் தெச்சில்
இட்டனள் யாரிங் கென்னா வெகுளிகொண் டிகலிப் போனான். 127
வேறு
வெளுத்தன சேயிதழ் விழிசி வந்தன
அளித்தொகை எழுந்தன அளகஞ் சோ£¢ந்தன
குளித்திடு மலர்த்தடங் கொடிய னார்க்கெலாங்
களித்திடு கணவருங் கள்ளும் ஒத்ததே. 128
பையர வல்குலார் படியும் பான்மையால்
துய்யதோர் குமிழிகள் செறிந்து தோன்றுவ
வையபூந் தடமெலாம் அவரை நோக்குவான்
மெய்யெலாம் விழிகளாய் விழித்தல் போன்றவே. 129
மன்னரும் மகளிரும் படிந்த வாசநீர்
செந்நிறக் குங்கும நானஞ் சேர்தலான்
மின்னொடு கூடிய முகிலு மெல்லியல்
பொன்னொடு கூடிய மாலும் போலுமால். 130
வேறு
பூசு சாந்தமும் நானமும் பொய்கையில்
வாச நீரெங்கும் மாகி மணங்கமழ்ந்
தாசை யெங்கும் உலாவி அவ்வானவர்
நாசி யூடு மடுத்து நடந்தவே. 131
இன்ன தன்மையில் ஏர்கெழு மைந்தரும்
அன்ன மென்னடை யார்களும் அத்தடந்
தன்னின் ஆடித் தடங்கரை ஏறியே
பொன்னின் மாண்கலை பூணொடு தாங்கினார். 132
வௌ¤று மென்னகை மெல்லியல் மாதரும்
ஔ¤று மேனி உவாக்களும் ஒன்றியே
பிளிறு மையற் பிடியும் பெருமதக்
களிறு மென்னக் கடிபொழில் ஏகினார். 133
ஏகி னார்க்கவ் விரும்பொழில் மீச்செறி
மேக சாலமும் மீன்தொகை ஈண்டிய
மாக நாடும்அவ் வானவர் வந்துசேர்
போக பூமிப் பொதும்பரும் போன்றதே. 134
பளிங்க டுத்திடு பாங்கா¤ன் வேங்கைவீ
விளங்கு சாயையை மெய்யென நோக்கியிக்
குளங்கொள் பூமலர் கொய்துநல் கீரெனாத்
தளர்ந்தொ ருத்தி தலவனை வேண்டினாள். 135
அங்கொ ருத்தியை நோக்கியொ ரண்ணலுன்
கொங்கை யொத்திடாக் கோங்கலர் கொள்கென
வெங்கை தன்முலைக் கொப்பதென் றெண்ணியோ
செங்கை யாற்பறித் தீரென்று சீறினாள். 136
வேறு
மலர்ந்த வாள்முக முங்கையர் நோக்கலும் வறிதாய்ப்
புலர்ந்து நின்றிடு தருக்களும் பொலிவினை யெய்தி
அலர்ந்த வேயெனின் ஆடவர் தங்களை அன்னார்
கலந்த போதுறு மின்பமார் கட்டுரைத் திடுவார். 137
மேற்ற லத்தெழு தாரகை மேதினி வரைப்பில்
தோற்று காட்சியோ இங்கிவை என்னவோர் தோன்றல்
கூற்ற மன்னவேற் கண்ணிநின் கூரெயிற் றிற்குத்
தோற்ற முல்லையின் அரும்புகாண் இவையெனச் சொன்னான். 138
மலையும் மேற்கணாள் ஒருத்திசொல் வினவிமற் றொருத்தி
முலையின் மேல்விழி வைத்தவன் முறிகளும் முகையும்
இலையு மாப்பறித் துதவலும் உமக்குமால் ஈந்தாள்
தலையின் மேலிவை சூட்டுமென் றெறிந்தனள் தரியாள். 139
காதல் மங்கைபால் வைத்தசிந் தையன் கரவீரப்
போது கொய்யலன் இலைகொய்து பொற்கரத் தளிப்ப
ஏதி லாளநிற் சேர்தலின் இங்கிவை நுகா¢ந்து
சாத லேதலை எனச்சினத் தாளரு தையல். 140
வேறு
இங்கு முலைநேர் குரும்பை இவையாய் குயம்போல்
தங்கும் மிளநீர் உவையன்னவள் தன்னை ஈன்றாள்
கொங்கை நிகரும் அடற்பாளைக் குழுவி தென்றோர்
மங்கை நகைப்ப அவைகாட்டியொர் வள்ளல் நின்றான். 141
ஒவாத தெங்கின் இளம்பாளையின் ஒன்று தன்னைத்
தாவா ஒருவன் கொடுவந்தொரு தையல் முன்போய்ப்
பாவாய் தமியேன் உயிரேநின் பணைமு லைக்காங்
கோவாத முத்தத் தொடையிங்கிது கொள்க வென்றான். 142
மின்னார் தமக்கோ ரரசேவெறி வேங்கை வீயும்
புன்னாக வீயுங் கொணர்ந்தேன் புனைகிற்றி என்ன
மன்னா வுனக்குப் பலருண்டுகொல் மாதர் என்னாத்
தன்னாவி அன்னான் தனைச்சீறியொர் தையல் போனாள். 143
பொன்பெற்ற மார்பன் ஒருவன்சில போது கொய்து
கொன்பெற்ற வேண்கண் மடவார்கைக் கொடுத்த லோடும்
பின்பெற்ற நங்கை வெகுண்டாள் பழுதென்று பேசி
முன்பெற் றவளும் அவைசிந்தி முனிந்து போனாள். 144
அப்பூர் விழியாள் ஒருமூவகைத் தாய பூவும்
மைப்பூங் குழலிற் புனைந்தாளதொர் வள்ளல் நோக்கி
மெய்ப்பூவை யன்னாய் மருங்குல்முடி வெய்த மென்கார்
முப்பூ விளைந்த படியென்கொல் மொழிக வென்றான். 145
இத்தன்மை மைந்தர் பலரும்மிகல் வேற்க ணாரும்
மெய்த்தண் மலர்க்கா வுலவாவிளை யாடி மீண்டு
தத்தம் படமா ளிகைபுக்கனர் தானும் ஆங்கே
அத்தம் மயவெற் படைந்தான்கதிர் ஆயி ரத்தோன். 146
வேறு
ஏலக் காவின் மாக்கள் புகுந்தே இனிதாடும்
கோலச் செவ்வி நோக்கின னாங்கொல் குடபாலின்
மாலைச் செக்கர் வானம தாகும் மலிதண்பூஞ்
சோலைக் குள்ளே தானும் அடைந்தான் சுடர்வெய்யோன். 147
முந்தைச் செக்க ராகிய புத்தேள் மொய்ம்பிற்சூழ்
தந்திப் போர்வை போலிருள் ஈட்டஞ் சார்வெய்த
அந்தத் தேவன் மீமிசை அண்டத் தவர்வீசும்
கந்தத் தண்போ தொப்பன தாரா கணமெல்லாம். 148
படையா நேமிப் பண்ணவ னார்பாற் கடலுக்கோர்
தடையா யுற்றார் என்றிமை யோர்தண் தயிர்வேலை
கடையா நிற்ப வேதிரள் வெண்ணெய் கடிதேவந்
தடையா நிற்றல் போல உதித்திட் டதுதிங்கள். 149
காணப் பட்டான் விண்மதி என்னக் காமத்தில்
பூணப் பட்ட மாமதி தோன்றப் புலர்வெய்தி
யாணர்க் கிண்ணத் துள்நிறை தேறல் இனிதட்டிப்
பாணிக் கொண்டே மேவுதல் உற்றார் பலமாதர். 150
வேறு
தூயதன் றாகிய புனலெலாம் நல்கியே சூழ்ந்த தெங்கின்
காயின்வந் திடுபயன் கொள்ளுவார் போற்சில காளை மார்கள்
ஆயதண் தேறலை அரிவைமார் நுகருவான் அருளி யன்னார்
வாயின்வந் தூறு மெல்லமிர் தினைக்கொள் வதற்குள்ளம் வைத்தார். 151
தௌ¢ளுபேர் அமிர்தநேர் சொல்லினார் தேறல்பெய் கின்ற வௌ¢ளி
வள்ளமா னவையெலாம் பொலிவன வானகத் திடையு தித்த
வௌ¢ளிதா கியமதி ஒன்றினை நோக்கிஒண் புவியி னூடே
கொள்ளையாய் மதிபல மாறுமா றாய்எழுங் கொள்கை போலும். 152
அளியினுக் குணவதாந் தேறல்வாய்க் கொண்டதோர் அரிவை யாற்றக்
களிமயக் கெயதுவாள் இந்துவை நோக்கியிக் கடிய தேறல்
துளியினைக் கோடியேல் உனதுமா சுள்ளதுந் தொலையும் இன்னும்
ஔ¤யினைப் பெறுதிநின் ஊனமுந் தவிர்தியென் றுரைசெய் கின்றாள்.153
கருதியான் உண்டிடு நறவினைக் கண்டுகா மித்து நாளுந்
திரிதியால் மதியமே நாணமுற் றாய்கொலோ செப்பு கில்லாய்
பரிதியார் தம்மின் வீறெய்துவாய் அன்னதைப் பகிர்வன் இங்ஙன்
வருதியால் என்றனள் தேறலால் தௌ¤விலா மையல் பெற்றாள். 154
என்னொடே தோன்றினாய் யானெனும் தன்மையா யாதும் வேண்டாய்
பின்னரு முன்னுமாய் வைகலுந் திரிகுவாய் பிரிகி லாதாய்
இன்னறா உண்கெனா உதவினுங் கொள்கிலாய் என்றொ ருத்தி
தன்னதாம் நீழலோ டூடினாள் வாடினாள் தளர்தல் உற்றாள். 155
அங்கைவள் ளந்தனில் மதுவையுண் டயருவாள் அன்ன தற்குள்
செங்கயல் விழியையும் வாலிதழ்ப் பொலிவையுந் தெரிய நோக்கி
இங்கெனைக் கூடியே கணவர்போ யினர்கொலாம் என்றோ ருத்தி
பொங்குசீற் றத்தளாய் ஓடினாள் நாடினாள் புலர்தல் உற்றாள். 156
வேறு
திருந்திழை மார்சிலர் செவ்வித் தேறலை
அருந்தினர் வெறுத்தனர் அமுதந் தன்னையும்
பொருந்திடு கணவரைப் புணரும் ஆசையால்
வருந்தினர் தழலென மதியை உன்னுவார். 157
வாடுகின் றார்சிலர் மகிழ்நர் வந்திட
ஊடுகின் றார்சிலர் உவக்கின் றார்சிலர்
பாடுகின் றார்சிலர் பணிகின் றார்சிலர்
ஆடுகின் றார்சிலர் நறவம் ஆர்ந்துளார். 158
அந்தரப் புள்ளடும் அளிகள் தம்மொடும்
வந்தடுத் தவரொடும் மடந்தை மார்சிலர்
சுந்தரத் தேறலைத் துய்த்து வாமமாந்
தந்திரக் கிளைஞர்போல் தம்மில் ஈண்டினார். 159
விள்ளுறு நாணினர் வீழுந் தூசினர்
உள்ளுறு களிப்பினர் உரைம மயங்கினர்
தள்ளுறு தம்முணர் வின்றிச் சாம்பினார்
கள்ளினும் உளதுகொல் கருத்த ழிப்பதே. 160
இத்திற மதுவினை இனிதின் மாந்தினோ£
மத்தரின் மயங்கினர் மனந்தெ ளிந்துழத்
தத்தம திறைவருந் தாமுங் கூடியே
அத்தலை முயங்கினர் ஆர்வ மிக்குளார். 161
ஏயுறு பரிசனம் இனைய தன்மையான்
மேயின இங்கிது விளம்பி னாம்இனி
ஆயிடை வந்திடும் அரசர் செய்கையும்
நாயகன் வதுவையும் நவிலு வாமரோ. 162
கொன்னுனை வேல்முசு குந்த னாதியாம்
மன்னவர் யாவரும் வையம் நீங்கியே
தன்னிகர் இலாததோர் தலைவன் மேவிய
பொன்னிவா¢ குடுமியம் பொருப்பில் ஏறினார். 163
ஏறினர் வெற்பின் மேலெவருந் தெய்வத
நூறெரி கம்மியன் நுனித்துச் செய்திடு
மாறகல் திருநகர் வளங்கண் டிந்திரன்
சாறயர் வதுவையஞ் சாலை நண்ணினார். 164
அம்முசு குந்தனை யாதி யாகிய
வெம்முடி மன்னரும் இமைய வர்க்கிறை
செம்மலர் அடிகளைச் சென்னி சேர்த்தினார்
கைம்முறை தொழுதனர் களிப்பின் மேலுளார். 165
கயமலர் குவளையில் கண்கள் மிக்குளான்
அயலுறும் அரசருக் கருளி ஆங்கவர்
செயல்முறை வினவியே சிறப்பி னாகிய
நயமொழி பலவுடன் நவின்று மேவினான். 166
மேதகு கதியராய் விசும்பிற் சென்றிடும்
மாதவன் மதிமுதல் அமரர் யாவரும்
மாதிர இறைவரும் மாத வத்தரும்
பாதல வாணரும் பரங்குன் றெய்தினார். 167
விண்டொடர் பிறங்கலின் மிசையி வர்ந்துபோய்
அண்டரும் பிறருமாய் அமரர் கோன்தனைக்
கண்டனர் தொழுதனர் களிப்பின் மாதவர்
எண்டகும் ஆசிகள் இயம்பி எய்தினார். 168
விறல்வரை மாதரும் விண்ணின் மாதருஞ்
செறிபுனல் மாதருந் திசையின் மாதரும்
உறுதவ மாதரும் உரக மாதரும்
மறுவகல் புலோமசை வயின்வந் தீண்டினார். 169
சூரர மங்கையர் தொல்லை விண்ணவர்
பேரர சியற்றிய பிரான்றன் காதலி
சீரடி வந்தனை செய்து தெய்வத
வாரண மென்பவள் மருங்கில் எய்தினார். 170
தெய்வத யானைகேள் தீய சூருயிர்
வவ்விய வேலினான் மனைவி யாதியால்
எவ்வுல கிற்குநீ இறைவி யாமென
அவ்வவர் அடிபணிந் தன்பொ டேத்தினார். 171
கயற்புரை நோக்குடைக் கடவுள் யானைபால்
இயற்படு திருநலன் இருக்கப் பின்னருஞ்
செயற்படு கோலமுஞ் சிறிது செய்திட
மயற்பட உன்னினர் மடநல் லாரெலாம். 172
பொன்னகம் அதனிடைப் புராரி சேயினைத்
தன்னக மிசைகொடு தவத்தை ஆற்றினாள்
பின்னக மயிர்முடிப் பிணையற் சூழலை
மென்ன விரல்களால் மெல்ல நீக்கினார். 173
காசறை விரவிய கடிமென் கூந்தலில்
பூசினர் நாவிநெய் புதிய சாந்தமும்
மாசறு பளிதமும் மற்று நீவியே
நேசமொ டொண்பனி நீர்கொண் டாட்டினார். 174
சேர்ந்ததோர் வெம்பணி சீற்றத் தாற்கரும்
பாந்தளை வாய்க்கொடு பற்று மாறெனப்
பூந்துகில் கிழிகொடு புனல்வ றந்திடக்
கூந்தலை ஒற்றினர் குழைமென் கொம்பனார். 175
மாந்தளி ரேயென வனப்பும் மென்மையுங்
காந்தியும் எய்தியே கடவுட் டன்மையால்
தோய்ந்திட லின்றியுந் துப்பின் வண்ணமாம்
பூந்துகில் ஒன்றினைப் புனைந்து டீஇயினார். 176
ஈரறு கதிர்களும் இம்பர் சேர்தலின்
ஆரிருள் யாவையும் அஞ்சி அவ்வைதன்
வாரொலி கூந்தலின் மறைபுக் காலெனக்
காரகில் நறும்புகை கமழ வூட்டினார். 177
பொலம்புரி உத்தியும் பொருத மஞ்ஞையும்
வலம்புரி மகரமும் மரபில் வானவா¢
குலம்புரி தவம்புரை கொம்பின் கூழையின்
நலம்புரி மங்கலம் நவின்று சாத்தினார். 178
விரியிணர்க் கோங்கமும் வெட்சி யுஞ்செரீஇ
மருமலர்1 இதழிடை வைத்து வாசமார்
தெரியலு¢தொடையலுஞ் செறியச் சூட்டியே
சுரிகுழல் முடித்தனர் சுழியத் தன்மையால். 179
(பா-ம் 1 இடையிடை)
ஒருமுயல் முழுமதி யுள்புக் காலென
இருவிழி புருவமாமம் இனைய வற்றொடு
கருநிறங் கண்டிடக் காமர் சாந்தினால்
திருநுதல் அதனிடைத் திலகந் தீட்டினார். 180
ஊட்டிய நறும்புகை ஓதி நின்றொழீஇத்
தீட்டிய திருநுதல் திலகந் சேர்தரப்
பூட்டினர் சுட்டியைப் புயங்கம் ஒன்றுநா
நீட்டிநஞ் சுமிழ்தரு நிலைமை ஈதென. 181
கோல்வளை யந்நலார் குழையில் வல்லியஞ்
சூல்வளை மிடற்றினில் தொடையல் முத்தணி
கால்வளை கஞ்சநேர் கரத்துந் தோளினும்
வால்வளை தொடியிவை வயங்கச் சேர்த்தினார். 182
கொட்டினர் கலவைகள் கொங்கை யின்மிசை
மட்டிமிர் பிணையலும் மணியின் கோவையும்
அட்டினர் படாமும்ஒன் றதன்கட் சேர்த்தினார்
இட்டிடை யிடைதனக் கிரக்கம் வைக்கிலார். 183
மாடக யாழ்புரை மழலைப் பெண்பிளை
ஆடக விரைமலர் அனைய தாள்களில்
பாடகம் பரிபுரம் பாத சாலங்கள்
சூடக முன்கையார் தொழுது சூழ்வித்தார். 184
தெய்வத மடந்தையர் திருவின் செல்விபால்
இவ்வகை ஒப்பனை இயற்றி ஏத்தலும்
மைவிரி குவளைநேர் வடிவக் கண்ணினான்
அவ்விடை செய்திடும் அமைதி கூறுவாம். 185
வேறு
மேலை வானவர்க் கிறையவன் விரிஞ்சனை நோக்கி
சாலை யாகிய தெவ்வெலாத் தேவருஞ் சார்ந்தார்
மாலை தாழ்முடி எம்பெரு முதல்வற்கு மணஞ்செய்
காலை நாடியே இ·தெனக் கழறுதி யென்றான். 186
அப்பு ரந்தரன் மொழிதனை அம்புயன் வினவிச்
செப்பு கின்றதென் அறுமுகப் பரன்மணஞ் செய்தற்
கெப்பெ ரும்பக லாயினும் இனியதே எனினும்
ஒப்ப கன்றிடு முகூர்த்தம்இவ் வெல்லைஎன் றுரைத்தான். 187
ஈவ தேமுறை யாயுளாய் இப்பகல் சிறந்த
தாவ தேயெனின் யான்பெறும் அணங்கைஈண் டளிப்பான்
தேவ தேவனாம் அறுமுகச் செம்மலைக் கொணரப்
போவ தேகடன் எமக்கெனப் புரந்தரன் புகன்றான். 188
அனைய காலையில் அச்சுதக் கடவுளும் அயனும்
இனிது போதும்என் றிந்திரன் தன்னொடும் எழுந்து
முனிவர் யாவருந் தேவருஞ் சூழ்ந்துமுன் படரப்
புனித நாயகன் ஆலயம் நோக்கியே போனார். 189
போந்து மற்றவர் பொலன்மணிக் கோயிலுட் புக்குச்
சேந்தன் மாமலர் அடிகளை முடிகளிற் சேர்த்திக்
காந்தள் மெல்விரல் மடந்தைபாற் கடிமணம் புரிய
ஏந்தல் நீயவண் வந்திட வேண்டுமென் றிசைத்தார். 190
இன்ன வாசகம் வினவலும் இராறுதோ ளுடையோன்
அன்ன தாகவென் றருள்செய்து மடங்கலே றாற்றும்
பொன்னின் மாமணி அணையினும் பொருக்கென எழுந்தான்
துன்னு வீரரும் பாரிட முதல்வருந் துதிப்ப. 191
எழுந்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவல்மேல் ஏறிச்
செழுந்த னிக்கம லத்தய னாதியாந் தேவர்
விழுந்து முன்பணிந் தேத்தியே விரைமலர் மாரி
பொழிந்து பாங்கராய் வந்திட வீதிவாய்ப் போந்தான். 192
கொற்ற வெண்குடை எடுத்தனர் குளிர்பனிக் கவரிக்
கற்றை வீசினர் ஆலவட் டங்கள்கா லசைத்தார்
ஒற்றை வாட்படை ஏந்தினர் உடுபதிக் கடவுள்
மற்றை ஆதவன் மருத்துவன் சலபதி மறலி. 193
ஆழி மாலயன் உவணமும் அன்னமும் அழியா
ஊழி நாயகன் ஊர்தியின் ஒலிகொலென் றுட்கக்
கேழி லாமலர்க் கிஞ்சுகச் சூட்டொடுங் கிளர்ந்து
கோழி நீள்கொடி ஆர்த்ததெவ் வண்டமுங் குலுங்க. 194
வேதர் ஆர்த்தனர் வேதமும் ஆர்த்தன விண்ணோர்
மாதர் ஆர்த்தனர் மாதவர் ஆர்த்தனர் வயவெம்
பூதர் ஆர்த்தனர் பூதமைந் தார்த்தன புடவி
நாதர் ஆர்த்தனர் நாதமிக் கார்த்தன நகமே. 195
திண்டி பேரிகை தண்ணுமை சல்லரி திமிலை
பண்டி யிற்பெயர் குடமுழாக் காகளம் படகந்
தொண்ட கந்துடி துந்துபி வலம்புரித் தொகுதி
அண்டம் விண்டிட இயம்பினர் பூதரில் அநேகர். 196
அஞ்சி லோதியின் மேனகை உருப்பசி அரம்பை
கிஞ்சு கச்செவ்வாய்த் திலோத்தமை முதலினோர் கெழுமி
மஞ்ச மீதினும் மானத்தும் நின்றுவாள் விழிகள்
நஞ்சு மிழ்ந்திட அமுதெனப் பாடியே நடித்தார். 197
யாணர் வண்டினஞ் சுரும்புடன் அலமரும் யாழும்
வீணை யுங்கரம் பற்றியே விஞ்சையர் முதலோர்
சேண ரம்பையர் களிநடத் தோடுசீர் தூக்கும்
பாணி யும்மிசை வுற்றிட இசைத்தனர் பாடல். 198
பொருவில் வீரரும் பூதரும் புரந்தரன் முதலாஞ்
சுரரும் மாதவர் யாவரும் பிறருமாய்த் துன்னி
ஒருவர் மெய்யினை ஒருவர்மெய் நெருக்கவுற் றிடலால்
தெருவும் முற்றமும் இடம்பெறா வாயின சிறிதும். 199
வேறு
இன்ன தன்மைகள் இயல எல்லைதீர்
பொன்னின் வீதிவாய்ப் போந்து புங்கவர்
மன்னன் ஆற்றிய மணத்தின் சாலையின்
முன்னவர் வந்தனன் முடிவில் முன்னையோன். 200
ஆவ தாகிய அண்ணல் தன்மிசைத்
தாவில் கும்பமேல் தருப்பை தோய்த்தநீர்
தூவி ஆசிகள் சொற்று மாதவர்
ஏவ ருந்திரண் டெதிர்கொண் டேத்தினார். 201
செங்கை தன்னிடைத் தேவர் மாதவர்
நங்கை மாரெலாம் நாலி ரண்டெனும்
மங்க லங்களும் மரபின் ஏந்தியே
எங்கள் நாயகற் கெதிர்ந்து போற்றினார். 202
பஞ்சி தூயநெய் பளித நாவியாய்
விஞ்சு தீஞ்சுடர் மிளிர்பொற் றட்டைகள்
அஞ்சில் ஓதியர் அங்கை ஏந்தியே
செஞ்செவ் வேள்முனஞ் சிறப்பித் தாரரோ. 203
காலை யங்கதிற் காலை யங்கதிர்
மேலை விண்முகில் விட்ட கன்றெனக்
கோலஞ் செய்யநங் குமர நாயகன்
நீல மஞ்ஞைமேல் நின்று நீங்கினான். 204
ஏய மஞ்ஞைநின் றிழிந்து வேள்விசெய்
கோயில் முன்கடைக் குமரன் சேர்தலும்
ஆய போழ்தினில் அரம்பை மாரொடுந்
தூய தோர்சசி தொழுதங் கெய்தினாள். 205
எதிர்பு குந்திடும் இந்தி ராணிதன்
புதிய தோர்பசுப் பொழிந்த தீயபால்
நிதியின் கொள்கலம் நிரப்பி வந்துவேள்
பதயு கங்களிற் பரிவொ டாட்டினாள். 206
ஆட்டித் தீம்பயன் அலருங் கண்ணியுஞ்
சூட்டி மெல்லடி தொழுது பல்சுடர்
கூட்டி வைத்ததோர் கொள்க லந்தனைக்
காட்டி மும்முறை கடவுட் சுற்றினாள். 207
இனைய தன்மைகள் இயற்றி இந்திரன்
மனைவி வௌ¢கியே மடமின் னாரொடுந்
தனது மந்திரந் தன்னிற் போதலும்
அனகன் கண்டதற் கருள்செய் தேகினான். 208
கோல மாமணி குயிற்றிப் பொன்னரி
மாலை நாற்றியே வனப்புச் செய்திடுஞ்
சாலை புக்கனன் தனக்கு வேறொரு
மூல மில்லதோர் முதலின் வந்துளான். 209
வேறு
பக்க மாய்அரி பங்கயன் ஆதியோர்
தொக்கு வந்திடத் தொன்மணி மண்டபம்
புக்கு நம்பி புரந்தரன் உய்த்திடு
மிக்க பீடத்தில் வீற்றிருந் தானரோ. 210
வீற்றி ருந்தபின் வேதனும் மாயனுந்
தேற்ற மிக்க முனிவருந் தேவரும்
ஆற்றல் வீரரும் அண்ணல்தன் ஏவலால்
கூற்ற ஏற்ற இடந்தொறும் வைகினார். 211
அந்த வெல்லை அவனியில் வாழ்முசு
குந்த னேமுதற் கொற்றவர் யாவரும்
வந்து வந்து வணங்கி வழுத்திடக்
கந்தன் எந்தை கருணைசெய் தானரோ. 212
ஆன காலை அரியயன நாடொணா
ஞான நாயகன் நங்கையுந் தானுமோர்
மான மேல்கொண்டு மாயிருஞ் சாரதர்
சேனை சூழ்தரச் சேணிடைத் தோன்றினான். 213
அம்மை யுந்தன தத்தனும் வந்து
செம்மல் கண்டு சிறப்புடை ஓகையாய்
விம்மி தங்கொண்டு மேதகும் அன்பினால்
இம்மெ னக்கடி தேயெழுந் தானரோ. 214
கண்ண னாதிக் கடவுளர் யாவரும்
எண்ணி லாமுனி வோர்களும் எம்பிரான்
நண்ணி னான்இங்கு நாமுய்ந் தனமெனாத்
துண்ணெ னாவெழுந் தார்கை தொழுதுளார். 215
அனைய காலையில் ஆதியம் பண்ணவன்
இனிது மானத் திழிந்து கணத்துடன்
புனித நீடு பொலன்மணிச் சாலையுள்
வனிதை யாளடும் வந்துபுக் கானரோ. 216
வேறு
அதுகண் டுநடந் தறுமா முகவன்
எதிர்கொண் டுவிரைந் திருவோர் பதமும்
முதிரன் பொடுதன் முடிசூ டினனால்
கதிருங் கமலங் களுமே வியபோல். 217
வந்தஞ் சலிசெய் துவணங்கியதோர்
கந்தன் தனையங் கவர்கை கொடெடாத்
தந்தம் முரனூடு தழீஇ முறையே
முந்தன் பொடுயிர்த் தனர்முச் சியையே. 218
முதுவா னவரும் முனிவோர் எவரும்
மதுசூ தனனும் மலர்மேல் அயனுஞ்
சதவேள் வியனுஞ் சகமீன் றவர்தம்
பதமீ மிசைவந் துபணிந் தனரால். 219
தாழ்வுற் றிடுவோர் உமைசங் கரனைச்
சூழ்வுற் றுவலஞ் செய்துசூழ் வினையூ
டாழ்வுற் றிடுபுன் மையகன் றடியேம்
வாழ்வுற் றனமென் றுவழுத் தினரால். 220
உன்னற் கரிதா கியுயிர்க் குயிராய்
மன்னுற் றவனை மலைமங் கையுடன்
பொன்னிற் புனையும் புதுமன் றல்மனை
தன்னிற் குமரன் கொடுசார்ந் தனனால். 221
வேறு
ஆகியதொர் போழ்துதனில் ஆணைமுறை தன்னால்
மாகநெறி வந்தொரு மணித்தவிசு நண்ணத்
தோகையுடை மஞ்ஞையுறழ் தோற்றமுடை மாதோ£¢
பாகமுற வாயிடை பராபரன் இருந்தான். 222
மங்கையுமை யுஞ்சிவனும் வள்ளறனை நோக்கி
இங்குவரு கென்றுபின் எடுத்தினிது புல்லித்
தங்கள்வயின் வைத்துநணி தண்ணளி புரிந்தார்
அங்கது தெரிந்துதொழு தம்புயன் இசைப்பான். 223
முன்னமொரு வைகல்தனில்மூவிரு முகத்தோன்
தன்னைஅசு ரப்படை தடிந்திட விடுத்தாய்
அன்னபரி சேயவுண ராயுளரை வீட்டி
நென்னல்இமை யோர்சிறையும் நீக்கிஅருள் செய்தான். 224
நன்றியித னைக்கருதி நாங்கள்புரி கைம்மா
றொன்றுமிலை என்னினும் உளத்தெழும் விருப்பால்
வென்றியசு ரேசர்கிளை வீட்டுகும ரேசற்
கின்றுமக வான்மகளை ஈந்திட நினைந்தான். 225
அற்றமில் இரக்கமுடன் ஆருயிர்கள் முற்றும்
நிற்றலும் அளித்தருளும் நேரிழையும் நீயும்
மற்றிதுப கற்பொழுதில் வந்தனிர்கள் என்றால்
சிற்றடிய ரேங்கள்செயல் சீருளதை யன்றோ. 226
என்றினைய நான்முகன் இசைத்திடலும் ஈசன்
நன்றென மகிழ்ச்சிகொடு நாமுமிது காண்பான்
மன்றல்மலர் கூந்தல்மலை மங்கையுடன் இங்ஙன்
சென்றனம் இதற்குரிய செய்கவினி யென்றான். 227
நாதனிவை கூறுதலும் நன்குமகிழ் வெய்தி
மாதவனும் நான்முகனும் வாசவனை நோக்கி
வேதமுறை யால்முருகன் வேட்டருள உன்றன்
கோதைதனை அன்பொடு கொணர்ந்திடுதி யென்றார். 228
அந்தவமை யந்தனில் அதற்கிசைவு கொண்டே
பைந்தொடிநல் லார்களமர் பாங்கர்தனில் ஏகி
நந்தமைய ளித்தருளும் நங்கைவரு கென்னா
இந்திரன்வி ளித்திடலும் ஏந்திழையெ ழுந்தாள். 229
கல்லுயர் பொருப்பினிடை காமரடி செல்ல
அல்லனகொல் என்றுமணி நூபுரம் அரற்ற
மெல்லிடை வருந்துமென மேகலை இரங்க
எல்லவரும் உள்மகிழ எம்மனை நடந்தாள். 230
பஞ்சிதனின் மெல்லடி பனிப்பவரை யின்பால்
குஞ்சரி நடந்தசெயல் கூறுபுது மைத்தோ
செஞ்சுடர்வை வேலுடைய செம்மலடி தீயேன்
நெஞ்சக அடுக்கலினும் நின்றுலவும் என்றால். 231
தந்திமுன் வளர்ப்பவரு தையல்மிக நொய்ய
செந்தளிர் ஒதுங்கமிளிர் சீறடி ஒதுங்கி
இந்திரையும் நாமகளும் ஏனையரும் ஏத்தப்
புந்திகளி கூ£¢தரு புரந்தரன்முன் வந்தாள். 232
வேறு
இன்ன வேல்லையில் இந்திரன் தெய்வதக்
கன்னி தன்னைக் கடிமணச் சாலையின்
முன்னர் உய்ப்ப முனிவருந் தேவரும்
அன்னை வாழியென் றேயடி போற்றினார். 233
கணங்கொள் பேரவை கைதொழு ஆண்டுறும்
அணங்கு தன்னுடன் ஆதியந் தேவனை
வணங்கி வேலுடை வள்ளலை நோக்கியே
கணங்கு சேர்முலை துண்ணென வௌ¢கினாள். 234
மங்கை தாழ்தலும் வாலிதின் நோக்கியே
அங்கண் நாதன் அருள்செய அண்ணலைக்
கொங்கை யாற்குழை வித்தவள் கோல்வளைச்
செங்கை யோச்சிச் சிறுபுறம் நீவினாள். 235
திருத்த குந்திறற் சேவையுஞ் சேண்மிசை
அருத்தி பெற்ற அணங்கையும் முற்படும்
பெருத்த பொன்மணிப் பீடிகை மீமிசை
இருத்தி வைத்தனள் யாவையும் ஈன்றுளாள். 236
வேறு
அதிர்கழல் ஈசனொ டம்மை இருந்தாங்
கெதிரெதிர் விம்பம் இலங்கி வாபோல்
வதுவை யணிந்திடு மைந்தனும் மாதுங்
கதிர்மணி தோய்கன கத்தவி சுற்றார். 237
தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்
வெவ்வரி ஏற்றணை மேவுதல் காணா
வெவ்வெவ ருந்தொழு தேத்தினர் ஈன்ற
அவ்வையும் அத்தனும் ஆரருள் செய்தார். 238
அண்டர் தமக்கிறை யாங்கவர் கோலங்
கண்டு புகழ்ந்து கரந்தொழு துச்சி
கொண்டு மிளிர்ந்து குளிர்ந்திடு தேறல்
உண்ட சுரும்பினும் உள்மகிழ் வுற்றான். 239
நெஞ்ச மகிழ்ந்த நெடுந்தகை சொல்லால்
மஞ்சன மாமலர் மற்றுள முற்றும்
எஞ்சலி லாவகை ஏந்தி அவைக்கண்
அஞ்சமும் அஞ்ச வருஞ்சசி வந்தாள். 340
அன்னதொர் காலையில் அநத்ர நாதன்
பன்னிரு மொய்ம்பு படைத்திடு புத்தேள்
முன்னர் இருந்து முறைப்பட அன்னான்
பொன்னடி பூசை புரிந்திட லுற்றான். 341
சொல்லரு நாணொடு தோகை மடந்தை
நல்லதொர் கன்னல் நறும்புனல் உய்ப்ப
எல்லவ ரும்புகழ் இந்திரன் ஐயன்
மெல்லடி பற்றி விளக்கினன் அம்மா. 342
செம்மல் பதங்கள் செம்புனல் ஆட்டிக்
கைம்மலி யுங்கள பந்தனை யூட்டி
அம்மலர் சூட்டி அகிற்புகை காட்டி
நெய்ம்மலி பூஞ்சுடர் நீட்டினன் அன்றே. 343
இவ்வகை பூசை இயற்று தலோடும்
அவ்வயி ராணி அயிற்படை யோன்றாள்
செவ்விதின் ஆட்டிய தீர்த்திகை தன்னைக்
கைவகை யேந்தியொர் காப்பிடை உய்த்தாள். 344
அன்னுழி இந்திரன் ஆறுமு கேசன்
தன்னொரு கையிடை தந்தியை நல்கி
நின்னடி யேன்இவண் நேர்ந்தனன் என்னாக்
கன்னல் உமிழ்ந்த கடிப்புனல் உய்த்தான். 345
மருத்துவன் மாமறை மந்திர நீரால்
ஒருத்தி பொருட்டினில் ஒண்புனல் உய்ப்பக்
கரத்திடை ஏற்றன னால்கழல் சேர்ந்தார்க்
கருத்திகொள் முத்தியும் ஆக்கமும் ஈவோன். 346
செங்கம லத்திறை சிந்தையின் ஆற்றி
அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட
மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து
நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான். 347
மாவொடு வாழை வருக்கைகொள் பைங்காய்
தீவிய கன்னல் செறிந்திடு செந்தேன்
ஆவருள் பாலிவை அண்டர்கள் செம்மல்
மூவிரு மாமுக னைநுகர் வித்தான். 348
வார்த்தொகை சூழ்தரு மத்தளி தக்கை
பேர்த்த வலம்புரி பேரி கலித்த
ஆர்த்தனர் வீரர் அருங்கண நாதர்
தீர்த்தனை வந்தனை செய்து களித்தார். 349
தண்டுள வண்ணல் சரோருக மேலோன்
எண்டிசை பாலகர் இந்திரன் என்போன்
அண்டர்கள் ஏனையர் ஆங்கவர் கோலங்
கண்டு சிறந்தது கட்புல மென்றார். 350
ஆயது போழ்தினில் அம்புய முற்றோன்
காயெரி தந்து கலப்பைகள் கூவித்
தூயம ணம்புரி தொன்முறை வேள்வி
நாயக னைக்கொடு நன்றுசெய் வித்தான். 351
உலகருள் காரணன் ஒண்ணுத லோடும்
வலமுறை யாக வயங்கனல் சூழ்ந்து
சிலையிடை யன்னவள் சீறடி தந்தான்
மலரயன் உச்சியின் மேலடி வைத்தான். 352
மாலினி காளிகள் மாமல ராட்டி
பாலின் நிறத்தி பராயினர் சூழச்
சாலினி மங்கலை தன்னொடு கண்டான்
வேலினின் மாவினை வீழ எறிந்தோன். 353
இவ்வகை மன்றல் இயற்றிய பின்னைத்
தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்
அவ்வை யொடத்தனை அன்பொடு சூழ்ந்து
வெவ்விதின் மும்முறை சேவடி தாழ்ந்தான். 354
வேறு
அடித்த லத்தில்வீழ் மக்களை இருவரும் ஆர்வத்
தெடுத்த ணைத்தருள் செய்துதம் பாங்கல் இருத்தி
முடித்த லத்தினில் உயிர்த்துமக் கெம்முறு முதன்மை
கொடுத்தும் என்றனர் உவகையால் மிக்ககொள் கையினார். 355
மலைம டந்தையும் இறைவனும் மைந்தற்கு மகட்குந்
தலைமை செய்தருள் புரிதலுஞ் சாலையுள் இருந்த
அலர வன்முதல் அமரரும் முனிவரும் அணங்கின்
குலம டங்கலும் அவரடி முடிமிசைக் கொண்டார். 356
அறுமு கன்றனை அணங்கினை அவையுளோர் எவரும்
முறையில் வந்தனை செய்தலும் முழுதருள் புரிந்து
கறையி ளங்கிய கண்டனுங் கவுரியுங் கடிதின்
மறைத லுற்றனர் பரிசனந் தன்னொடு மன்னோ. 357
மறைந்த காலையில் விம்மித ராய்மணச் சாலை
உறைந்த தேவரும் முனிவரும் உயிர்களுக் குயிராய்
நிறைந்த மேலையோர் நிலைமையை நினைந்துதம் வாயால்
அறைந்து கைதொழு தவர்பெயர் எடுத்தெடுத் தார்த்தார். 258
வரைப டைத்தவர் மறைந்துழி வானவர் பலரும்
நிரைப டைத்துள முனிவருங் கவன்றது நீத்தார்
திரைப டைத்துள ஆழ்கடற் பட்டுளோர் சிறந்த
கரைப டைத்தென அணங்கொடு குமரனைக் கண்டு. 359
உமையும் ஈசனும் இருந்திடு பீடிகை உம்பர்க்
குமர நாயகன் தெய்வதக் களிற்றொடுங் கூடி
அமர அன்னது காண்டலும் மகிழ்சிறந் தன்னார்
கமல மெல்லடி தொழுதனர் வழுத்தினர் களிப்பால். 360
இனைய காலையில் அரியணைப் பீடநின் றிழியா
அனைவ ருந்தொழு துடன்வர ஆறுமா முகத்துப்
புனித நாயகன் மங்கல இசையொடும் போந்து
தனது கோயிலுட் புக்கனன் இறைவியுந் தானும். 361
வேலை யன்னதில் குமரவேள் வேள்விநா யகற்கு
மால யன்முதல் அமரர்க்கும் மற்றுளார் தமக்கும்
ஏல வேவிடை தந்துதன் பரிசனம் எவையும்
ஆல யந்தனிற் கடைமுறை போற்றுமா றளித்தான். 362
இன்ன தன்மைய தாகவே எம்மையீன் றெடுத்த
அன்னை தன்னுடன் அறுமுகன் உறையுளின் அடைந்து
பொன்னின் மஞ்சமேற் படுத்துமெல் லமளியிற்* புவனம்
மன்று யிர்த்தொகை யுய்ந்திட முயங்கிவை கினனால். 363
( * “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்னும் பழமொழி
இங்கு உன்னற்பாலது.)
சேணு தித்திடு தெய்வதக் களிற்றினைச் செவ்வேள்
நாணி னிற்கட்டி நகரிடைத் தந்துநற் கலன்கள்
பூணு தற்றுறும் அங்குசங் கைக்கொடு புயமாந்
தூணு றப்பிணித் தணைத்தனன் அருளெனுந் தொடரால். 364
மருந்து போல்மொழிக் குமரியுங் குமரனும் மணந்தாங்
கிருந்த வெல்லையில் விரிஞ்சனும் மாலும் ஏனையரும்
விரைந்து தத்தமக் கியன்றதொல் லிருக்கையின் மேவப்
புரந்த ரன்பரி சனரொடுந் தன்மனை புக்கான். 365
முகிலு யர்த்தவன் முசுகுந்த னேமுதல் உள்ள
அகில மன்னர்க்குந் தேனுவின் பலபயன் அருத்தித்
துகிலும் ஆரமும் அணிகளும் இருநிதித் தொகையும்
விகல மின்றியே கொடுத்தனன் யாரையும் விடுத்தான். 366
எல்லை யன்னதின் முசுகுந்த னாதியாம் இறைவர்
கல்ல கந்தனில் இழிந்துதஞ் சேனையின் கடலை
ஒல்லை கூடியே வேறுபல் புலந்தொறும் ஒருவித்
தொல்லை யூர்புகுந் திருந்தனர் வீடுறுந் தொடர்பால். 367
மன்னர் யாவரும் விடைகொடு போதலும் மகவான்
தன்ன தாகிய கடிமனைக் கிழத்தியுந் தானும்
இன்னல் தீர்தரு போகம தாற்றினன் இருந்தான்
அன்ன பான்மையிற் சில்பகல் அகன்றன அன்றே. 368
ஆகத் திருவிருத்தம் - 303
- - -
3. வி ண் கு டி யே ற் று ப ட ல ம்
ஆன சிற்சில வைகல்சென் றிடுதலும் அணங்குந்
தானும் உற்றிடும் உறையுளை ஒருபகல் தணந்து
வான வா¢க்கிறை வினைக்குறை நிரப்புதல் வலித்துக்
கோன கர்ப்பெரும் புதவினில் வந்தனன் குமரன். 1
உவாவின் மாதுடன் உவாவினுக் கிளையவன் உவாவில்
திவாக ரன்மதி யாமென வருதலும் தெரிந்து
தவாத அன்புடை வயவருஞ் சாரதர் எவரும்
அவாவொ டன்னவர் அடிமுறை வணங்கிநின் றார்த்தார். 2
அனிகம் ஆர்த்திடல் செவிப்புலம் படா¢தலும் அடல்வேல்
புனித நாயகன் போந்தனன் போந்தனன் என்று
வனச மேலவன் மாலவன் மகபதி வானோர்
முனிவர் யாவரும் எழுந்தனர் விரைசெலல் முன்னி. 3
வேறு
எழுதரு கின்றவர் யாரும் ஓரிமைப்
பொழுதுறும் அளவையிற் போந்து மன்னுயிர்
முழுதருள் புரிதரு முதல்வன் சேவடி
தொழுதனர் இறைஞ்சினர் சூழ்ந்து போற்றலும். 4
கொந |