|
Home > Scriptures & Stotras > Tamil scriptures and literature > kandha purANam
kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
4. யுத்த காண்டம்
***
13. சூரபன்மன் வதைப் படலம்*
( * ஏழா நாள்முதல் பத்தா நாள்வரை சூரபன்மன் வதை நிகழ்ச்சி ஆகும்.
சூரபன்மன் இறுதியாகச் சண்முகக்கடவுளோடு நான்குநாள் போர்புரிந்து மடிந்தான் என்பதை
“ஸ..ஈரிரு, நாள்வரைத் துன்னலன் தொலையாது அமராற்றியே” எனவரும் இந்நூல்
இப்படலத்தின் 409-ம் செய்யுள் அடிகளால் அறியலாம். மகேந்திரபுரியில் சூரபன்மனாதியோர்
சண்முகப்பெருமானுடன் எதிர்த்துப் போர்புரிந்தது பத்துநாட்கள் ஆகும்.
இதனை “சொல்லும் ஐந்திருவைகலின் அவுணர்தம் தொகையும், அல்லல்
ஆற்றய சூரனும் முடிந்திட அடுதும்” எனவரும் கந்தபுராணம் - மகேந்திரகாண்டம்
- சயந்தன் கனவுகாண் படலம் 11-ம் செய்யுளின் அடிகளால் அறியலாம்.)
கொற்ற வேற்படை பரித்திடும் ஆயிர கோடி
ஒற்றர் தங்களை நோக்கியே சூரனாம் உரவோன்
மற்றென் ஆட்சியாம் அண்டங்கள் எங்கணும் வைகிச்
சுற்று தானையைத் தம்மினோ கடிதெனச் சொன்னான். 1
சொன்ன காலையின் நன்றென வணங்கியே தூதர்
பன்ன ருங்கதி கொண்டனர் விண்டனர் படர்ந்து
பொன்னின் மேதகும் அண்டங்கள் இடைதொறும் புகுந்து
மன்னர் மன்னவன் தன்பணி முறையினை வகுத்தார். 2
வகுத்த காலையில் ஆண்டுறை அவுணமன் னவர்கள்
தொகுத்த நாற்பெருந் தானையங் கடலொடுந் துவன்றி
மிகுத்த அண்டத்தின் புடைதொறும் புடைதொறும் மேனாட்
பகுத்து வைத்திடும் வாயிலின் நெறிகளாற் படர்ந்தார். 3
முந்தை அண்டத்தின் நெறிதனில் முழங்கிருஞ சேனை
வந்து வந்திவட் செறிவன விதியொடு மாறாய்ச்
சுந்த ரங்கெழு மாயன்இவ் வுலகுயிர் துய்ப்ப
உந்தி யின்வழி அங்கவை தோன்றுமா றொப்ப. 4
பூதம் யாவையும் உயிர்களும் புவனமுள் ளனவும்
பேதம் நீங்கிய சுருதியா கமங்களும் பிறவும்
ஆதி காலத்தின் அநாதியாம் எம்பிரான் அளப்பில்
பாத பங்கயத் துதிப்பவும் போன்றன பகரின். 5
இனைய தன்மையால் அண்டத்தின் நெறிதனில் ஏகும்
வனைக ருங்கழல் அவுணர்தம் படையிவண் வரலுங்
கனலி தன்சுடர் மறைந்தன நடுங்கினன் கனலும்
அனிலன் தானுமெய் வியர்த்தனன் நெருக்கமுற் றயர்வான். 6
ஆ£¢த்த ஓசையால் அகிலமுந் துளங்கிய அவுணர்
கார்த்த மெய்யொளி கதுவலால் இருண்டன ககனந்
தூர்த்த பூழியால் ஆழிகள் வறந்தன துணைத்தாள்
பேர்த்து வைத்திடு தன்மையால் அண்டமும் பிளந்த. 7
கூடும் இப்பெருந் தானையை நோக்கிமெய் குலைவுற்
றோடு தற்கிடம் இன்றிநின் றிரங்கினர் உம்பர்
வீடி னானென வாசவன் மருண்டனன் விதியும்
நீடு மாயனும் முடிவதென் னோவென நினைந்தார். 8
பூத லந்தனில் அம்பர நெறிதனில் புடைசூழ்
மாதி ரங்களில் அளக்கரின் வரைகளில் வழியில்
பாத லங்களில் பிறவினில் அவுணர்தம் படைகள்
ஏதும் வௌ¢ளிடை இன்றியே சென்றன ஈண்டி. 9
மலர யன்பதம் மால்பதம் முனிவர்கள் வைகும்
உலகம் வாசவன் தொன்னகர் ஏனையோர் உறையுள்
அலரி யாதியர் செல்கதி பிலங்களில் அனிகம்
பலவும் நின்றன செல்லிடம் பெறாதபான் மையினால். 10
மாறி லாதன தொல்லையண் டங்களின் வந்த
வீறி லாததோர் தூசிகள் படர்ந்திடும் எல்லை
நூறு கோடியோ சனைகளென் றறிஞர்கள் நுவன்றார்
வேறு பின்வருந் தானையின் பெருமையார் விதிப்பார். 11
குறுமை யாமுயிர் வாழ்க்கையர் கொண்டதொல் வளம்போற்
சிறுமை யோவிது விரித்திட அவுணர்கோன் சேனை
அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா
பிறிது மற்றிதற் குவமையும் ஒன்றிலை பேசின். 12
அஞ்சு பட்டிடு பூதங்கள் பல்லுரு வமைந்து
நெஞ்சு பட்டிடும் உயிர்கொடு நேருமேல் நிகரும்
அஞ்சு பட்டிடு பொருப்பெலாஞ் சூறைமுன் மயங்கும்
பஞ்சு பட்டிட நடந்திடு தூசிமுற் படையே. 13
அந்த மின்றியே அகன்புவி கொண்டஅண் டத்தில்
வந்தி டுந்திறற் படைகளின் பெருமையா£¢ வகுப்பார்
முந்து தூசிகள் மகேந்திரப் பெருநகர் மூடி
இந்த வண்டத்தின் இடமெலாம் நிறைந்தன இமைப்பில். 14
ஆன காலையில் ஒற்றர்போய்ச் சூரனை யடைந்து
பானல் மெல்லடி கைதொழு தையநீ படைத்த
சேனை வந்தயல் நின்றன தூசிமுற் சென்று
வானு லாவுபேர் அண்டத்தை நெருக்கின மன்னோ. 15
என்னும் எல்லையில் நன்றென அவுணர்கோன் எழுந்து
தன்ன தாகிய உறையுள் போய்த் தடம்புன லாடித்
துன்னும் ஐவகை உணவுடன் அறுசுவை தொடர்ந்த
அன்னம் உண்டனன் நஞ்சுகொல் மருந்துகொல் அதுவே. 16
நீற ணிந்தனன் நெற்றிமெய்ந் நிரைவிரை களபச்
சேற ணிந்தனன் பூந்தொடை பங்கியிற் செறித்தான்
மாறில் பொற்சுடர்க் கலையுடன் அணிகலன் மாற்றி
வேறு வேறுநன் கினியன புனைந்தனன் விரைவில். 17
ஈசன் மாப்படை ஏனையோர் பெரும்படை யாவும்
மாசில் ஆயிர கோடிதேர் செலுத்தியே அவையுங்
கேச ரித்திறல் யானமுங் கேடில்பொற் றேரும்
பாச னத்திறல் அவுணர்கொண் டேகுவான் பணித்தான். 18
ஆங்க வெல்லையிற் சூரபன் மாவெனும் அவுணன்
பாங்கர் வந்திடு வலவர்தந் தொகையினைப் பாரா
ஓங்கு மோ£¢தடந் தேரினைக் கொணர்திரென் றுரைப்பப்
பூங்க ழற்றுணை வணங்கியே நன்றெனப் போனார். 19
வாட்டு கேசரி எழுதி னாயிரம் வயமாக்
கூடடம் அங்கணோ ரெழுபதி னாயிரங் கூளி
ஈட்ட மாகிய தெழுபதி னாயிரம் ஈர்ப்பப்
பூட்டி நன்குறப் பண்ணினார் ஆங்கொரு பொலன்தேர். 20
மண்ட லத்தினும் ஆன்றபேர் இடத்தது மருங்கில்
தெண்டி ரைக்கட லாமென ஆர்ப்பது செறிந்த
அண்ட மாயிர கோடியுந் தன்னிடத தாற்றிக்
கொண்டு நின்றிடும் வலியது மடங்கலங் கொடித்தேர். 21
முடியும் எல்லையில் எழுதரு மருத்தினும் உந்திக்
கடிது செல்வது சென்றிடு விசையினால் ககுபத்
தடநெ டுங்கிரி அலமரத் தபனருங் குளிர
வடவை யங்கிகள் விளிந்திடப் புரிவதம் மான்தேர். 22
ஏழு நேமியும் இடைப்படு தீபமும் யாவுஞ்
சூழு கின்றபேர் அடுக்கலும் ஒன்றிய தொடர்பின்
கேழில்¢ பன்மணி ஓவியப் பத்திகள் கெழுவும்
ஆழி தாங்கிய அண்டமொத் திலங்கிய தகன்தேர். 23
தொழுத குந்திறல் அவுணர்கோன் வேள்வியில் துஞ்சி
எழுவ தாகிய எல்லையில் தோன்றிய தெதிர்ந்தார்
குழுவி ரிந்திடத் துரப்பது நான்முகக் குரிசில்
அழியும் நாளினும் அழிந்திடா திருப்பதவ் வகல்தேர். 24
கண்ண கன்படை அளப்பில பரித்தது காமர்
விண்ண வர்க்குள வலியெலாங் கொண்டது மேனாள்
அண்ணல் நல்கிய இந்திர ஞாலமும் அனைய
தெண்ணின் மேற்படு மியாணர்பெற் றுடையதவ் விரதம். 25
அனைய தாகிய தேரினை வலவர்கொண் டணைந்து
தினக ரன்தனை வெகுண்டவன் தாதைமுன் செலுத்தத்
துணை மற்றதில் இவர்ந்தனன் இவர்தலுந் தொழுது
புனைதி வாகையென் றவுணர்கள் பூமழை பொழிந்தார். 26
பொழிந்த காலையில் வலவர்கள் அங்கதிற் புக்குக்
கழிந்த சீர்த்தியான் ஆணையால் தேரினைக் கடவத்
தழிந்த ழீமெனப் பல்லியம் இயம்பின சகங்கள்
அழிந்த நாளெழு கடலென அவுணர்கள் ஆர்த்தார். 27
அங்கி யன்னபொற் படியகங் கோடிகம் அடைப்பை
திங்கள் வெண்குடை கவரிகொண் டொழுகினர் சிலதர்
துங்க மிக்கவன் சீர்த்தியும் ஆணையுந் தொடர்ந்து
மங்க லந்திகழ் உருக்கொடு சூழ்ந்திடும் வகைபோல். 28
அண்ணல் மேவரு கோநகர் எல்லையுள் அடைந்த
எண்ணில் மாப்பெருஞ் சிகரியின் வாயில்கள் இகந்தே
கண்ண கன்ஞௌ¢ளல் ஆயிர கோடியுங் கடந்து
வண்ண மாமணிக் கோபுர முதற்கடை வந்தான். 29
வேறு
தானவர் கோமகன் தடம்பொற் றேரொடு
மாநகர் முதற்கடை வாயில் போதலும்
ஆனது நோக்கியே அங்கட் சூழ்தரு
சேனைகள் ஆர்த்தன உடுக்கள் சிந்தவே. 30
ஞெலிததிடு பரவையின் நீல வெவ்விடம்
ஒலித்தெழுந் தாலென உலப்பில் தானைகள்
கலித்தன படர்ந்தன கண்ண கன்புவி
சலித்தது கொடியரைத் தரிக்கொ ணாமையால். 31
நேரியம் பரியதோர் நிசாளஞ் சல்லிகை
பேரியம் பணைவயிர் பிறங்கு தண்ணுமை
தூரியம் காகளந் துடிமு தற்படு
சீரியம் பலவுடன் இயம்பிச் சென்றவே. 32
சேயின குஞ்சிகள் செறிந்த தானவர்
பாயின தானையில் படர்ந்த பூழிகள்
வாயின பரவைமேல் வடவைத் தீவிராய்ப்
போயின நாளெழு புகையைப் போன்றவே. 33
வானினும் மண்ணினும் மாதி ரத்தினுந்
தானிறை கடலினுந் தணப்பின் றாகியே
மேனிறை பூழிகள் மிடைய எங்கணுஞ்
சோனைகொள் பின்பனித் தூவல் போன்றவே. 34
சூரனி கரத்தெழு தூளி அந்நகர்
ஆரகில் ஆவியும் யாரும் ஆடிய
பூரிகொள் சுண்ணமும் பொருந்திப் போவது
காரின மின்னொடு கடலுண் டேகல்போல். 35
திண்டிறற் கரிகளில் தேரில் வெண்கொடி
மண்டுறு பூழிதோய் வானிற் செல்வன
கொண்டலின் இருதுவிற் கொக்கின் மாலைகள்
தண்டுளி யுறைப்புழிப் படருந் தன்மைபோல். 36
படைவகை திசையெலாம் படரப் பாயிருள்
அடைவது சூரறிந் தண்டம் யாவினும்
மிடைதரு கதிர்களை விளிக்க வந்தெனக்
குடைநிரை எங்கணுங் குழுமு கின்றவே. 37
வெம்பரி கரியுமிழ் விலாழி மாமதம்
இம்பரின் நகரெலாம் யாற்றின் ஏகலால்
உம்பர்மற் றல்லதை ஒருவன் தானைகள்
அம்புவி சென்றிடற் கரிய தானதே. 38
இவ்வகை தானைகள் ஈண்டிச் சென்றிடத்
தெவ்வலி அவுணர்கோன் செம்பொற் றேரின்மேல்
மைவரை மேருவின் வருவ தாமெனக்
கவ்வையின் அமர்புரி களரி ஏகினான். 39
பூசலின் எல்லையில் புரவ லன்செலத்
தூசிய தாகியே தொடர்ந்த தானைகள்
ஈசன தருள்மகன் இனிது வைகிய
பாசறை சூழ்ந்தன படியும் வானுமாய். 40
உரற்றிய கணமழை உம்பர் சூழ்ந்தென
விரற்றொடு சூழ்படை ஈட்டம் நோக்கியே
மரற்றுறு பலங்களில வாரி கண்வர
அரற்றினர் வெருவினர் அமரர் யாவரும். 41
அழுங்கினன் புரந்தரன் அகிலம் யாவையும்
விழுங்குறும் இருவரும் விம்மி னாருளம்
புழுங்கினர் வீரர்கள் பூதர் ஏங்கினார்
கொழுங்கனல் இடைப்படு விலங்கின் கொள்கைபோல்.42
ஆவதோர் காலையில் அரியும் நான்முகத்
தேவனும் ஏனைய திசையி னோர்களும்
மூவிரு முகமுடை முதல்வன் தன்னிரு
பூவடி பணிந்திவை புகறல் மேயினார். 43
வேறு
அந்தமி லாத அண்டம் ஆயிரத் தெட்டுத் தன்னில்
வந்திடு தானை யோடு மாபெருஞ் சூர பன்மன்
உந்திய தேரின் மேலான் உறுசமர் புரிவான் போந்தான்
முந்திய தூசி நந்தம் பாசறை மொய்த்த தென்றார். 44
என்னலும் முறுவல் செய்தாங் கிலங்கெழில் தவிசின் வைகும்
பன்னிரு கரத்து வள்ளல் பவனனைக் குறிப்பின் நோக்க
முன்னம துணர்ந்து வல்லே முளவுகோல் கயிறு பற்றிப்
பொன்னவிர் மனவே கப்பேர்ப் புரவிமான் தேர்முன் உய்த்தான். 45
உய்த்திடு கின்ற காலத் தொய்யென எழுந்து காமர்
புத்தலர் நீபத் தாரான் புகர்மழுக் குலிசஞ் சூலஞ்
சத்திவாள் பலகை நேமி தண்டெழுச் சிலைகோல் கைவேல்
கைத்தலங் கொண்டான் என்னின் அவன்தவங் கணிக்கற் பாற்றோ. 46
மாறிலா அருக்கன் நாப்பண் வைகிய பரம னேபோல்
ஆறுமா முகத்து வள்ளல் அலங்குளைப் புரவி மான்தேர்
ஏறினான் வீர வாகு இலக்கரோ டெண்ம ராகும்
பாறுலாங் குருதி வேலார் பாங்கராய்ப் பரசி வந்தார். 47
இராயிர வௌ¢ள மாகும் எண்டொகைப் பூதர் யாரும்
மராமரம் பிறங்கல் ஈட்டம் வரம்பறு படைகள் பற்றி
விராவினர் சூழ்ந்து சென்றார் விரிஞ்சனே முதலோர் யாரும்
பராவொடு புடையின் நின்று பனிமலர் மாரி தூர்த்தார். 48
தூர்த்திடு கின்ற காலைச் சுருதியின் தொகைக்கும் எட்டாத்
தீர்த்தன்மான் றேர்மே லாகித் திண்புவி அண்டந் தன்னில்
பேர்த்திடும் உயிர்கள் மாற்றப் பின்னறு முன்னோன் போல
ஆர்த்திடு தானை வௌ¢ளத் தவுணர்கள் மீது போனான். 49
ஆங்கது காலை தன்னில் ஆறிரு தடந்தோள் ஐயன்
பாங்குறு பூதர் யாரும் பாரொடு திசையும் வானும்
நீங்குத லின்றிச் சூழும் நேரலன் படையை நோக்கி
ஏங்கினர் தொல்லை வன்மை இழந்தனா¢ இனைய சொற்றார். 50
தீயன புரியுஞ் சூரன் செய்திடு தவத்தாற் பெற்ற
ஆயிர விருநான் கண்டத் தவுணரும் போந்தார் அன்றே
ஏயதோ ரண்டம் ஒன்றில் இருந்தனர் இவர்மற் றன்றால்
மாயிருந் திசையும் விண்ணும் வையமுஞ் செறிந்து நின்றார். 51
வரத்தினிற் பெரியர் மாய வன்மையிற் பெரியர் மொய்ம்பின்
உரத்தினிற் பெரியர் வெம்போர் ஊக்கத்திற் பெரியர் எண்ணில்
சிரத்தினிற் பெரியர் சீற்றச் செய்கையிற் பெரியர் தாங்குங்
கரத்தினிற் பெரியர் யாருங் காலனிற் பெரியர் அம்மா. 52
மாகத்தின் வதிந்த வானோர் வன்மையும் வளனும் வவ்விச்
சோகத்தை விளைத்து வெம்போ£¢ தொடங்கியே தொலைவு செய்தோர்
மோகத்தின் வரம்பாய் நின்றோ£¢ முழுதுயிர்க் கடலுள் வேட்கை
மேகத்தின் வலிந்த தீயோர் விரிஞ்சன்ஏற் றிடினும் வெல்வோர். 53
கூற்றெனும் நாமத் தண்ணல் கொண்டிடும் அரசுஞ் செங்கேழ்
நூற்றிதழ்க் கமல மேலான் நுனித்தனன் விதிக்கு மாறு
மாற்றிடுஞ் செய்கை வல்லோர் மாநில முழுதுண் டாலும்
மாற்றரும் பசிநோய் மிக்கோ ரண்டங்கள் அலைக்குங் கையோர். 54
வெங்கனல் சொ£¤யுங் கண்ணார் விரிகடற் புரைபேழ் வாயார்
பங்கமில் வயமேற் கொண்டோ£¢ பவத்தினுக் குறையு ளானோர்
செங்கதிர் மதியந் தோயுஞ் சென்னியர் செயிர்தீர் ஆற்றல்
அங்கத விறையும் பேர அடிபெயர்த் துலவும் வெய்யோர். 55
அங்கிமா முகத்தி னான்போல் அடைந்தனர் பல்லோர் யாளித்
துங்கமா முகத்தி னான்போல் தோன்றினர் பல்லோர் சூழி
வெங்கைமா முகத்தி னான்போல் மேயினர் பல்லோர் மேலாஞ்
சிங்கமா முகத்தி னான்போல் திகழ்ந்தனர் பல்லோர் அன்றே. 56
மதுவொடு ஆடை பன்போல் வந்தனர் பல்லோர் யாருந்
துதியுறு புகழச்சுந் தோப சுந்தரிற் செறிந்தோர் பல்லோர்
அதிர்கழற் சலந்த ரன்போல் ஆர்த்தனர் பல்லோர் ஆற்ற
முதிர்சின மகிடன் போல மொய்த்தனர் பல்லோர் அம்மா. 57
அரன்படை பரித்தோர் பல்லோர் அப்புயத் தவிசின் மேவும்
வரன்படை பரித்தோர் பல்லோர் மழுவொடு தண்டந் தாங்குங்
கரன்படை பரித்தோர் பல்லோர் கால்படை பரித்தோர் பல்லோர்
முரன்படை படுத்த கொண்டல் முதுபடை பரித்தோர் பல்லோ£¢. 58
ஆனதொ ரவுண வௌ¢ளம் அநந்தகோ டியதாம் என்றே
தானுரை செய்வ தல்லாற் சாற்றவோ ரளவும் உண்டோ
வானமும் நிலனும் ஏனை மாதிர வரைப்பும் எங்குஞ்
சேனைக ளாகிச் சூழின் யாமென்கொல் செய்வ தம்மா. 59
ஒரண்டத் தவுணர் போரால் உலைந்தயாம் ஒருங்கே யெல்லாப்
பேரண்டத் தோருந் தாக்கிற் பிழைப்புறு பரிசும் உண்டோ
காரண்ட அளக்கர் சாடிக் கனவரை எறியுங் கால்கள்
ஏரண்டச் சூழல் புக்கால் அவைபின்னும் இரக்க வற்றோ. 60
ஒருவரே எம்மை எல்லாம் உரப்பியே துரப்பர் பின்னை
இருவரே சென்று தாக்கின் யார்இவண் உய்ய வல்லார்
துருவரே யனைய துப்பிற் சூழுறும் அவுணர் யாரும்
பொருவரே என்னில் நேர்போய்ப் பூசலார் தொடங்கற் பாலார். 61
எல்லையில் ஆற்றல் கொண்ட எம்முடைத் தலைவர் யாரும்
அல்லன வீரர் தாமும் அவுணரை எதிர்க்க லாற்றா£¢
கல்லொடு மரத்தால் யாமோ அவர்திறல் கடக்க வல்லேம்
ஒல்லைநம் உயிரும் இன்றே ஒழிந்தன போலும் அன்றே. 62
நாற்படை அவுணர் தாக்கின் நாமெலாம் விளிதும் வீரர்
காற்படு பூளை யேபோற் கதுமென இரிவர் வாகைப்
பாற்படு திறலோன் நிற்கிற் பழிபடும் இனைய ரோடும்
வேற்படை யொருவன் அன்றி வேறியார் எதி£¢க்க வல்லார். 63
நீடுறு திசையும் வானும் நிலனும்வௌ¢ ளிடைய தின்றிப்
பாடுற வளைந்து கொண்டார் பற்றலர் அதனால் யாமும்
ஓடியும் உயய லாகா ஒல்லுமா றவரைத் தாக்கி
வீடுதல் உறுதி யென்றே விளம்பிமேற் சேற லுற்றா£¢. 64
மற்றத காலை தன்னில் மாபெரும் பூத சேனைக்
கொற்றவர் பலரும் ஏனை வீரர்தங் குழுவி னோரும்
வெற்றிகொள் மொய்ம்பன் தானும் மிடைந்துசூழ் படையை நோக்கி
இற்றன கொல்லோ நந்தம் வன்மையென் றெண்ண முற்றார். 65
அண்டர்கள் முதல்வன் தானும் அமரரும் அகில மெங்கு
தண்டுத லின்றிச் சூழுந் தானவர் அனிக மெல்லாங்
கண்டனர் துளங்கி அஞ்சிக் கவன்றனர் அவருட் காரி
வண்டுள அலங்கற் சென்நி வானவற் கினைய சொல்வான். 66
ஆண்டகை முருகன் தன்மேல் ஆயிர விருநா லண்டத்
தீண்டிய தானை யெல்லாம் இறுத்தன இவற்றி னோடு
மூண்டமர் இயற்றி வெல்ல வூழிநாள் முடியும் என்றான்
மாண்டிடு கின்ற தெங்ஙன் அவுணா¢கள் மன்னன் மன்னோ. 67
அடுதிறல் வலிபெற் றுள்ள அவுணராம் பானாட் கங்குல்
விடிவதும் அமரர் தங்கள் வெஞ்சிறை வீடு மாறும்
நெடியதொல் வெறுக்கை தன்னை நீங்கிய நமது துன்பம்
முடிவது மில்லை கொல்லோ மொழிந்தருள் முதல்வ என்றான். 68
இந்திரன் இனைய தன்மை இசைத்தலும் இலங்கை காத்த
ஐந்திரு சென்னி யானை அடுதிறல் கொண்டு நின்ற
செந்திரு மருமத் தண்ணல் தேவரை அளிக்குந் தொல்லோன்
புந்திகொள் கவலை நாடி இனையன புகலா நின்றான். 69
காலமாய்க் காலம் இன்றிக் கருமமாய்க் கரும மின்றிக்
கோலமாய்க் கோலம் இன்றிக் குணங்களாய்க் குணங்கள் இன்றி
ஞாலமாய் ஞாலம் இன்றி அநாதியாய் நங்கட் கெல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண் டுற்றான். 70
குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் மேரு வென்னும்
பொன்றிகழ் வெற்பின் வந்து புவனங்கள் முழுதும் அங்கட்
சென்றுறை உயிர்கள் முற்றுந் தேவருந் தன்பாற் காட்டி
அன்றொரு வடிவங் கொண்ட தயர்த்தியோ அறிந்த நீதான். 71
பொன்னுரு வமைந்த கஞ்சப் புங்கவ னாகி நல்கும்
என்னுரு வாகிக் காக்கும் ஈசன்போல் இறுதி செய்யும்
மின்னுரு வென்ன யார்க்கும் வௌ¤ப்படை போலும் அன்னான்
தன்னுரு மறைக ளாலுஞ் சாற்றுதற் கரிய தன்றே. 72
பாயிருங் கடலிற் சூழ்ந்த பற்றலர் படையை எல்லாம்
ஏயெனும் முன்னம் வீட்டுஞ் சிறுவனென் றெண்ணல் ஐய
ஆயிர கோடி கொண்ட அண்டத்தின் உயிர்கட் கெல்லாம்
நாயகன் அவன்காண் நாஞ்செய் நல்வினைப் பயனால் வந்தான். 73
சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க உன்னின்
மூரலால் அடுவன் கொண்ட முனிவினால் அடுவன் வாய்மைச்
சீரினால் அடுவன் நாட்டச் செய்கையால் அடுவன் என்றால்
நேரிலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார். 74
பாரிடர் சேனை யோடு படர்ந்ததும் இலக்கத் தொன்பான்
வீரர்கள் புடையில் போற்ற மேயதும் படைகள் பற்றிச்
சூரனை அடுவான் வந்த சூழ்ச்சியுந் தூக்கின் மாதோ
வாரண முதலா மேலோற் கனைத்துமோ ராட லேகாண். 75
துய்யதோர் குமர னேபோல் தோன்றிய முதல்வன் சூழ்ந்த
வெய்யதா னவரை யெல்லாம் விரைந்துடன் அறுத்து நீக்கிக்
கையில்வேல் அதனாற் சூரன் ஆற்றலுங் கடக்கும் யாதும்
ஐயுறேல் காண்டி யென்றான் அறிதுயில் அமா¢ந்த பெம்மான். 76
மாலிவை பலவுங் கூறி மகபதி உளத்தைத் தேற்றி
ஓலமொ டவுண வௌ¢ளம் உம்பருஞ் செறிந்த செவ்வேள்
பாலுற நின்று போரின் பரிசினைப் பார்த்து மென்றே
வேலைடை முதல்வன் பாங்கா விண்ணவ ரோடும் போந்தான். 77
வேறு
அன்ன தன்மைகண் டறுமுகன் முறுவல்செய் தடுபோர்
உன்னி யேகலும் வானமும் வையமும் ஒன்றாத்
துன்னு தானவப் பெருங்கடல் ஆர்த்தமர் தொடங்க
முன்ன மேகிய பாரிடர் யாவரும் முரிந்தார். 78
முரிந்த காலையில் பூதரின் முதல்வர்கள் முரட்போர்
புரிந்து சாய்ந்தனர் இலக்கரோ டெண்மரும் பொருதே
இரிந்து நீங்கினர் இன்னதோர் தன்மைகள் எல்லாந்
தெரிந்து திண்டிறல் மொய்ம்பினோன் சிலைகொடு சேர்ந்தான். 79
சோ¢பு தன்சிலை வாங்கியே சரமழை சிதறி
நேர்பு குந்திடும் அவுணர்கள் நெடுந்தலை புயங்கள்
மார்பு வெங்கரங் கழலடி வரைகளாய் வீழ
ஈர்பு நின்றமர் இயற்றினன் சிறுவரை இகலி. 80
மாக மேல்நிமிர் ஆயிர கோடிமா கடலுள்
நாக மொன்றுசென் றலைத்தென நண்ணலர் எதிர்போய்
ஆக வம்புரிந் துலப்புறாத் தன்மைகண் டழுங்கி
ஏக நாயகன் தனதுபால் வந்தனன் இளவல். 81
காலை யங்கதில் அவுணர்தந் தானையோர் கனத்தின்
சாலம் ஓடின பூதரில் தலைவருஞ் சாய்ந்தார்
கோல வெஞ்சிலை வீரரும் முரிந்தனர் குழவிப்
பால னேயிவண் வருமெனச் சூழ்ந்தனர் பலரும். 82
தண்டு நேமியுங் குலிசமுஞ் சூலமுந் தனுக்கள்
உண்டு மிழ்ந்திடு வாளியும் உடம்பிடித் தொகையும்
பிண்டி பாலமுங் கணிச்சியும் பாசமும் பிறவும்
அண்டர் தந்திடு படைகளுஞ் சொரிந்துநின் றார்த்தார். 83
பாரி டங்களின் படையெலாம் நெக்கதும் பாங்கர்
வீர மொய்ம்பனும் இளைஞரும் வருந்திமீண் டதுவுங்
காரி னம்புரை அவுணர்தஞ் செய்கையுங் காணா
மூரல் செய்தனன் எவ்வகைத் தேவா¢க்கு முதல்வன் 84
நாட்டம் மூன்றுடைத் தாதைபோற் சிறிதிறை நகைத்து
நீட்ட மிக்கதோர் சிலையினை நெடுங்கரம் பற்றிக்
கோட்டி நாணொலி கொண்டிட அண்டருங் குலைந்தார்
ஈட்ட மிக்கபல் லுயிர்களுந் துளக்கமெய் தினவே. 85
வேறு
முக்கணன் உதவிய திருமுருகன் முரணுறு வரிசிலை முதிரொலிபோய்த்
தொக்கன செவிதொறும் நுழைதலுமே தொலைவறும் அவுணர்கள் தொகைமுழுதும்
நெக்கன பகிர்வன இரதமெலாம் நிரைபட வருபரி புரள்வனவே
மைக்கரி தரைமிசை விழுவனவான் மதிதொடுநெடுவரை மறிவனபோல். 86
மாசறு மறைகளின் மறையதனை மலைமுனி யுணர்வகை யருள்புரியந்
தேசிக முதலவன் வரிசிலையிற் செறிமுகில் உறைவகை சிதறுவபோல்
ஆசுகம் அளவில கடவினனால் அடங்கெழும் அவுணர்கள் புடைவளையும்
காசினி அகலமும் விரிகடலுங் ககனமும் மிடைவன கணையெனவே. 87
கொடிகளை அடுவன அளவிலவே குடைகளை அடுவன அளவிலவே
படைகளை அடுவன அளவிலவே பரிகளை அடுவன அளவிலவே
கடகரி அடுவன அளவிலவே கனையொலி இரதமொ டவுணர்கள் தம்
முடிகளை அடுவன அளவிலவே முழுதுல குடையவன் விடுசரமே. 88
பரவிய தருவினம் என அவுணப் படைநிரை விழுவன தொடுகடலில்
திரையென விழுவன புரவிஇனந் திருநெடு வரைகளின் விழுவனதேர்
கருமைகொள் மணிமுகில் இனமெனவே கடகரி விழுவன கனவரைசூழ்
இரவியும் மதியமும் விழுவனபோல் எழுவன கவிகையும் விழுவனவே. 89
செல்லுறு தாள்களும் அடுபடைகள் சிந்திய செங்கைகளுந் திறலே
சொல்லிய வாய்களும் விம்மலுறுந் தோள்களும் நோக்குறு துணைவிழியுங்
கல்லென ஆர்த்திடு கந்தரமுங் கவசமும் வீரர்கள் துவசமுடன்
எல்லையி லாதமர் தனிமுதல்வன் எய்திடும் வாளிகள் கொய்திடுமே. 90
வேறு
வட்டணை கொண்டிடு மால்வரையும், எட்டெனும் ஓங்கலும் யானைகளும்
பட்டுரு விக்கணை பாறினவால், ஒட்டலர் எங்ஙனம் உய்குவதே. 91
பொன்னுல கெல்லைபு குந்துலவும் அன்னமு யர்த்திடும் அண்ணல்பதந்
துன்னுறும் அச்சுதர் தொல்லுலகின், மின்னென வேசெலும் வேள்கணையே. 92
மேதினி கீண்டு விரைந்துபுகும், பாதல மூல பரந்துசெலும்
மூதகும் அண்ட முகட்டுருவும், மாதிரம் ஏகுறும் வள்ளல்சரம். 93
மூவிரு செய்ய முகத்தொருவன், ஏவிய செஞ்சரம் எங்குமுறா
மேவலர் தங்களை வீட்டிடும்வே, றேவர்கள் கண்ணும் இறுத்திலவே. 94
ஆனனம் ஆறுள அண்ணல்சரம், தானவர் சென்னிகள் தள்ளுதலும்
வானிடை போயின மாண்கதிர்கள் மேனிம றைப்புறும் வெய்யவர்போல். 95
வாளெழு வேல்பிற வாங்கினர்தந், தோள்களை வாளி துணித்தெறிய
நீளிடை சென்று நிரந்திடுதங், கேளிரை அட்டன கீழ்மையர்போல். 96
மாசகல் வானக மாதிரவாய், காசினி வேலைகளத தின்அகம்
பாசறை சுற்றிய பாடியெலாம், ஆசற அட்டனன் அற்புதனே. 97
அட்டிடு கின்றுழி அம்புயன்மால், ஒட்டுறு வாசவன் உள்மகிழாக்
கெட்டனர் தானவர் கேடில்துயர், விட்டனம் என்று விளம்பினரே. 98
அடைந்தனர் விம்மிதம் ஆங்கவுணர், மிடைந்த நோக்கினர் வேற்படையோன்
தடிந்தது காண்சிலர் தாரணிமேற், கிடந்தது கண்டனர் கேசரரே. 99
அலமரு பாரிடர் அவ்வவர்தந், தலைவர்கள் ஏனையர் தானவர்தம்
மலிபடை சாய்த்து வயம்புனைவிற், புலவனை ஆர்ப்பொடு போற்றினரே. 100
வள்ளல்ச ரம்பட வான்முகடு, கொள்ளுறு தானை குழாந்தொலைய
வௌ¢ளிடை யாயின விண்ணவர்தம், உள்ளக மாற்றவு வப்புறவே. 101
அண்டக டாகம தப்புறமாய்க், கொண்டிடு தானவர் கொள்கையிது
கண்டிறை வன்கழல் காணநெறி, உண்டினி யென்றனர் உள்மகிழ்வார். 102
காற்றென அண்ட கடாகநெறி, தோற்றிய வாயில் தொடர்ந்துபுகா
மேற்றிகழ் தேர்கரி வெம்பரியின், ஏற்றமொ டொல்லென ஏகினரால். 103
அந்நெறி ஏகியிவ் வண்டமெலாந், துன்னினர் வான்புவி சூழ்ந்துவௌ¤
என்னது மில்லென ஈண்டினரால், முன்னுறவந்து முடிந்தவர்போல். 104
சூரன் எனப்படு தொல்லிறைவன், பேரமர் ஆற்றிடு பெற்றியினால்
தேரிடை வந்துறு செய்கைதெரீஇ, ஆர்வமொ டேநெடி தார்த்தனரே. 105
ஆர்த்தனர் தம்முன் அடைந்துளர்தாம், பேர்த்திடு கின்ற பிணக்கிரியாய்
ஈர்த்திடு சோரி இடைப்படுதல், பார்த்தனர் சிந்தை பரிந்தனரே. 106
பரிந்தனர் நம்படை பட்டிடவே, புரிந்திடு வானொடு போர்புரியா
விரைந்து வயங்கொடு மீடுமெனாத், தெரிந்தனர் சிந்தனை தேற்றினரே. 107
தேற்றிடு கின்றுழி தேவரெலாம், போற்றிட வீரர் புடைக்கணுற
ஆற்றல்கொள் பூதர்கள் ஆர்த்திடவே, தோற்றினன் ஈறொடு தோற்றமிலான். 108
சேயுரு வாகிய சீர்முதல்வன் மேயது கண்டு மிகச்சிறியன்
பாய்பரி யானை படைத்துமிலான், ஏயிவ னேநம தெண்ணலனே. 109
ஆண்டகை மைந்தனிவ் வண்டமெலாம், ஈண்டியதானை இமைப்பொழுதின்
மாண்டிட அட்டனன் மற்றிதுதான், ஈண்டிடும் அற்புத நீர்மையதே. 110
அன்னது நின்றிட அங்கவன்மேல், மன்னவர் மன்னவன் வந்துபொரு
முன்னமர் ஆற்றி முடிக்குதும்யாம், என்ன இயம்பினர் யாவருமே. 111
தற்பமொ டின்னன சாற்றியவண், முற்படு தானவர் முக்கணுடைத்
தற்பரன் நல்கிய சண்முகனை, வற்புடன் ஆர்த்து வளைந்தனரால். 112
வளைந்திடு காலையில் வானவர்கள், உளைந்தனர் பூதர்கள் உட்கிமனந்
தளர்ந்தனர் வீரர் சலித்தனரால், விளைந்த பேரமர் மீட்டுமெனா. 113
வேறு
ஐயன்ம ருத்தினை அத்துணை நோக்கிக்
கையணி நெற்றி கடைக்குழை யாகி
வெய்யவர் தானைகள் மேவுழி யெல்லாம்
வையம்வி டுக்குதி வல்லையில் என்றான். 114
அட்டுறு நீப அலங்கல் புனைந்தோன்
கட்டுரை கொண்டு கரந்தொழு காலோன்
ஒட்டுறு நண்ணலர் உற்றுழ காணா
விட்டனன் அம்ம விறற்பரி மான்தோ¢. 115
மண்ணிடை சென்றிடு மாதிர நீந்தும்
விண்ணிடை சூழ்தரும் வேலையின் மீதாங்
கண்ணுறும் எப்படி கைதொழும் வானோர்
எண்ணினும் நாடரி தெந்தைபி ரான்தேர். 116
சேயது காலை திறத்திற மாகி
மூயின தானவர் மொய்ம்புறு தானை
சாய்வுற ஓர்தொடை தன்னில் அநந்தம்
ஆயிர கோடிக ளாக்கணை தொட்டான். 117
பரிந்தன சூழ்ந்தவர் பாணிகள் மொய்ம்பு
சிரந்துணி வுற்றன செம்புன லாழி
சொரிந்த பிணக்கிரி துற்றிய வற்றால்
நெரிந்தது வையம் நௌ¤ந்தது நாகம். 118
பொய்கொலை ஆற்றிய பூரியர் உக்கார்
செய்குவர் நன்மை செறிந்துள ரேனுங்
கைகெழு ஞாளிக ளேகறித் துண்ட
மைகெழு தானவர் மாண்டிடும் யாக்கை. 119
ஒன்னலர் மீதின் உயிர்க்குயி ரானோன்
மின்னென வீசிய வெஞ்சர மாரி
பின்னுற முந்து பெயர்ந்திடு மென்றால்
அன்னவன் தோ¢விரை வா£¢கணிக் கின்றா£¢. 120
பரத்தினு மேதகு பண்ணவன் வா£¢வில்
கரத்தினை யும்விரை வாற்கரந் தூண்டுஞ்
சரத்தினை யுந்தடந் தேரினை யுங்கால்
உரத்தினை யும்புகழ் வார்புடை யுள்ளோர். 121
வெவ்விச யப்படை வீட்டிடும் வாளிச்
செவ்விசை தேர்விசை நாடினர் செவ்வேள்
கைவிசை யோநெடுங் கால்விசை தானோ
வெவ்விசை யோவிசை என்றனர் வானோர். 122
துய்யவன் வாளி துணிந்திட வீரர்
கையொடு வானிடை செல்வ கணிப்பில்
ஐயிரு வட்டம ராப்புடை பற்ற
வெய்யவர் பற்பலர் விண்ணெழல் போலும். 123
காலொரு பாங்கர் கழுத்தொரு பாங்கர்
வாலொரு பாங்கர் மருப்பொ டெருத்தம்
மேலொரு பாங்கர் வியன்கையொர் பாங்காத்
தோலினம் இவ்வகை யேதுணி கின்ற. 124
பல்லணம் அற்றன பன்முழு தற்ற
செல்லுறு தாளடு சென்னியும் அற்ற
ஒல்லொலி அற்ற உரந்துணி வுற்ற
வல்லமா¢ நீந்துறு மாத்தொகை முற்றும். 125
மாழைகொள் வையம் மடிந்திட நேமி
ஆழிகொள் சோரியின் ஆழ்வன மேருச்
சூழுறும் வெய்யவர் தொல்புவி கீண்டே
கீழுறும் எல்லை கெழீஇயின போலும். 126
ஏறிய தேர்களும் யானைகள் யாவுஞ்
சூறைகௌ¢ வாசிக ளுந்துணி வுற்றே
வீறகல் வீரர்மி சைப்பட வீழ்ந்த
மாறவை ஆற்றிடும் வல்வினை யேபோல். 127
ஞாலமும் வானமும் நண்ணலர் ஆவி
மாலொடு வாரி மடங்கல் உலைந்தான்
சாலுமி வற்கிது தாள்வலி யாற்கொல்
கால னெனப்புகல் கட்டுரை பெற்றான். 128
எறிபடை யாவையும் ஏமம தாகச்
செறிபடை யாவையுஞ் சேயவன் ஏவால்
முறிபடு கின்ற முனிந்துவ ணப்புட்
கறிபட மெய்துணி கட்செவி யேபோல். 129
முன்னுறு வார்கள் முரட்படை தூவிப்
பின்னுறு வார்பெய ராதுபு டைக்கண்
துன்னுறு வார்கள் எலாந்துணி வாக
மின்னென எங்கணும் வேள்கணை தூர்த்தான். 130
சூலம தேகொல் கணிச்சிகொல் தொல்லை
மாலெறி நேமிகொல் வச்சிர மேகொல்
காலொடு சென்ற கனற்குழு வேகொல்
வேலது கொல்லென வேள்கணை விட்டான். 131
வேறு
மழைத்திடு மெய்யுடை மாற்றலர்கள், இழைத்திடு மாய இயற்கைகளும்
விழுத்தக வீசும் விற்படையும், பிழைத்தன தாங்கள் பிழைத்திலரால். 132
முக்கணன் மாமகன் மொய்கணைகள், தொக்கவர் யாக்கை துணித்திடலும்
மெய்க்கிடு பல்கலன் மீன்விழல்போல், திக்குல விப்படி சிந்தினவே. 133
அண்ணல் சரங்கள் அறுத்திடலும், எண்ணலர் யாக்கைகள் இற்றவைதாம்
மண்ணை யளந்தயில் மாலெனவே, விண்ணை யளந்து விழுங்கினவே. 134
சூழுறு தானை துணிந்தஉடல், ஏழெனும் நேமியும் எண்டகுபேர்
ஆழியும் விண்ணும் அடைத்திமையோர், வாழுல கங்களை வௌவியவே. 135
காடி யிழந்து கவந்தமதாய், ஆடின வௌ¢ளமும் ஆயிரமா
கோடி யதுண்டு குகன்கணையால், வீடின எல்லை விதிக்குநர்யார். 136
வீழுறு மாற்றலர் மெய்க்குருதி, ஆழக ளாகி அகன்புவியில்
பூழைக ளோடு புகுந்துபிலம், ஏழுள எல்லையும் ஈண்டியதே. 137
வேறு
பாதல எல்லை பரந்திடு சோரி
பூதல மீண்டு புகுந்து பராவி
ஓத நெடுங்கடல் ஓங்கிய வாபோல்
மாதிரம் எங்கும் மறைத்தன அன்றே. 138
மீனுடு வாக விளங்கிய திங்கள்
பானு மலா¢ந்திடு பங்கய மாகச்
சோனைகொள் மாமுகில் தோணிய தாக
வானிமிர் செம்புனல் மாகடல் ஒக்கும். 139
மாசறு கூற்றனும் மற்றுளர் தாமுங்
கேசர ராகிய கிங்கரர் யாரும்
பாசம லைந்திடு பல்பிணி பற்றா
வீசினர் ஆருயிர் மீன்கள் கவர்ந்தார். 140
பாலுறு கின்ற பணிக்கிறை நாப்பண்
மாலரு ளில்துயில் மாட்சிமை யென்ன
நீலுறு திங்கள் நிணங்கெழு செந்நீர்
வேலையின் மீது விளங்கிய தம்மா. 141
மட்டறு செம்புனல் வாரிதி நீந்தி
ஒட்டலர் யாக்கையின் ஓங்கல் அறுத்துத்
தட்டுறு செங்கதிர் சண்முக மேலோன்
விட்டிடு நேமியின் விண்மிசை செல்லும். 142
சிறைப்புற வுக்கருள் செய்திட மெய்யூன்
அறுப்பவன் என்ன அடைந்தனர் விண்ணின்
நெறிப்படு வானவர் நேரலர் யாக்கை
உறப்படு சோரிமெய் உற்றிடு நீரால். 143
ஆனதொ ரெல்லையில் அண்ட நிறைந்த
சேனைகள் வீழ்ந்தன செம்மல் சரத்தால்
ஊனுயிர் பூதமொ ழந்தன முக்கண்
வானவன் மூரலின் மாய்ந்திடு மாபோல். 144
வேறு
அண்டம் ஈங்கிது முற்றொருங் கீண்டிய அவுணர்
தண்ட மாய்தலும் ஏனைய அண்டங்கள் தம்மில்
கொண்ட தானைகள் பின்னரும் வந்திடக் குமரன்
கண்டு மற்றவை தொல்லைத்தனன் செலுத்திடு கணையால். 145
அறுத்து வெம்முமுனத் தானையை யாண்டுசெல் லனிகம்
மறித்தும் வந்துவந் தடைதரும் இவணென மனத்துட்
குறித்து வெங்கணை மாரியால் அண்டகோ ளகையின்
நெறித்த ரும்பெரு வாயிலை யடைததனன் நிமலன். 146
ஆண்டு சென்னெறி மாற்றியே அண்ணல்வெங் கணையால்
மாண்ட தானைகள் சோரியுங் களேவர மலிவும்
நீண்ட பாதலங் கடற்புவி கொண்டுவான் நிமிர்ந்தே
ஈண்டு கின்றது கண்டனன் வரைபக எறிந்தோன். 147
நெற்றி நாட்டத்தின் உலகெலாம் அட்டிடு நிமலன்
பெற்ற மாமகன் பன்னிரு விழிகளும் பிறங்கு
கற்றை வெஞ்சுடர் வடவைபோல் ஆக்கியக் கணத்தில்
உற்று நோக்கினன் நெரிந்தன களேவரத் தோங்கல். 148
வெந்து நுண்டுகள் பட்டன களேவரம் விசும்பின்
உந்து சோ£¤நீர் வறந்தன மூவகை உலகு
முந்து போலவே அமைந்தன முளரியான் முகுந்தன்
இந்தி ராதியர் ஆர்த்தனர் குமரனை ஏத்தி. 149
பாறு லாவரு களேவரத் தமலையும் படிமேல்
வீறு சோணித நீத்தமும் வேவுற விழித்து
நீற தாக்கினான் சூரனை அட்டிலன் நின்றான்
ஆறு மாமுகன் ஆடலை உன்னினன் ஆங்கொல். 150
ஆகும் எல்லையின் ஒல்லையின் அடுகளத் தடைந்த
சேகு நெஞ்சுடைச் சூரன்இத் திறமெலாந் தெரிந்து
மாக நீடுநந் தானையை அலைத்தமாற் றலனை
நாகர் தம்மொடு முடிக்குவன் யானென நவின்றான். 151
மாற்றம் இத்திறம் இசைத்திடும் அவுணர்கோன் மனத்தில்
சீற்ற மூண்டிட அமர்வினை குறித்தனன் திகிரிக்
காற்றின் ஒல்லைவந் தேற்றலும் மருத்துவன் கடவிப்
போற்று தேர்மிசை முருகனுஞ் சென்றெதிர் புகுந்தான். 152
புக்க காலையில் அறுமுகன் தோற்றமும் புடையின்
மிக்க பன்னிரு கரங்களும் வியன்படைக் கலனுந்
தொக்க வீரமும் வன்மையும் நோக்கியே தொல்லைத்
தக்க னேயென அவுணர்கோன் இன்னன சாற்றும். 153
சிறந்த வான்மதி மிலைச்சினோன் அருள்புரி செயலால்
இறந்தி டேனியான் என்றுமிப் பெற்றியாய் இருப்பேன்
மறந்தும் என்னொடு பொருதிலர் தேவரும் மலைந்தே
இறந்து ளார்பலர் உணர்ந்திலை போலுநீ இதுவே. 154
உள்ளம் நொந்துநொந் தென்பணி ஆற்றியே உலைந்து
தள்ளு றுஞ்சுரர் மாழியினைச் சரதமென் றுன்னிப்
பிள்ளை மென்மதி யாலிவண் வந்தனை பெரிதும்
அள்ள லுற்றுழிப் புகுந்திடுங் கயமுனி யதுபோல். 155
உடைப்பெ ரும்படை செறுத்தனை பாலனென் றுன்னை
விடுப்ப தில்லையால் வெரிநது கொடுக்கினும் விரைவில்
படுப்பன் வானவர் தொகையுடன் பாரிடர் தமையுங்
கெடுப்ப னென்றனன் தன்பெருங் கிளையுடன் கெடுவான். 156
வெம்பு ரைத்தொழிற் கொருவனாங் கயவநீ வெறிதே
வம்பு ரைத்தனை யாவதொன் றில்லைநின் மார்பஞ்
செம்பு ரைப்பட யாம்விடு கின்றதோர் திறல்வாய்
அம்பு ரைத்திடு மாறுனக் கென்றனன் அமலன். 157
ஆரும் நேரிலாப் புங்கவன் சேயின தறையச்
சூர னாகியே அவுணர்கோன் துண்ணெனச் செயிர்த்து
மேரு நேர்வதோர் வா¤சிலை யெடுத்துவிண் ணிழியும்
வாரிபோன் றிடு நாணினை ஏற்றியே வளைத்தான். 158
வளைத்த டங்கிரி புரைவதோர் சிலையினை வயத்தால்
வளைத்த செய்கையைக் காண்டலும் பாரிடர் வானோர்
வளைத்த டங்கடல் வந்திடு நஞ்சொடு மலைவான்
வளைத்த தன்மைபோல் அவுணர்தம் முதல்வனை வளைத்தார்.159
சிலையை வீசினர் கொடுமரம் வீசினர் செறிமூ
விலையை வீசினர் படையெலாம் வீசினர் எதிர்ந்தார்
உலைய வீசியே அடல்செயும் மும்மதத் துவாவை
வலையை வீசியே பிணித்திட மதித்துளார் என்ன. 160
கண்டு மற்றதை அவுணர்கோன் வில்லுமிழ் கணையாங்
கொண்டால் நுண்துளி சிதறியே கணங்கள்கூட் டறுத்து
விண்டு லாவர அரக்கினாற் குயின்றதோ£¢ வெற்பைச்
சண்ட வெங்கனல் உடைப்பது போலவே தடிந்தான். 161
வீடி னார்களும் புயங்கரந் துணிந்திட மெலிந்து
வாடி னார்களும் மயங்கிவீழ்ந் தார்களும் வல்லே
ஓடி னார்களும் ஓடவும் வெருவிவேற் றுருவங்
கூடி னார்களும் ஆயினர் பாரிடக் குழாத்தோர். 162
பூதர் சாய்ந்துழி இலக்கரோ டெண்மரும் பொருவில்
வேத நாயகன் தூதனுஞ் சூழ்ந்துடன் மேவிக்
கோதை தூங்கிய கொடுமர மாயின குனித்துச்
சோதி வான்கணை மாரிகள் அவுணன்மேற் சொரிந்தார். 163
சொரிந்த வெங்கணை எங்கணும் வருதலுஞ் சூரன்
தெரிந்து வாளிதொட் டறுக்கலன் நின்றதோர் செல்வி
விரைந்து வந்தவை ஆங்கவன் மெய்ப்பட விளிந்து
பரிந்து போயின செய்ததொன் றில்லைஅப் பகழி. 164
பரப்பின் ஈண்டிய வீரதர்தஞ் சூழச்சியைப் பாரா
உரப்பி ஆவலங் கொட்டியே வெகுளிகொண் டொருதன்
பொருப்பு நேர்சிலை குனித்துவெஞ் சிலீமுகம் பொழிந்து
திருப்பெ ருந்தடந் தேரொடுஞ் சாரிஆகை திரிந்தான். 165
நூறு கோடிவெஞ் சரமொரு தொடையுற நூக்கிச்
சூறை யாமென வட்டணை திரிந்துளான் சூழ்வோர்
மாறு தூண்டிய சரங்களைத் தணித்துமற் றவர்கள்
ஏறு தேருடன் பிடித்திடு சிலைகளை இறுத்தான். 166
வையம் வில்லுடன் இற்றபின் மற்றவர் மலைவு
செய்ய உன்னுமுன் மொய்ம்பினும் உரத்தினுஞ் சிரத்துங்
கையி னுங்கணை ஆயிர மாயிரங் கடுந்தீப்
பெய்யும் மாரிபோற் செறித்தனன் செம்புனல் பெருக. 167
புரந்த னிற்செறி கறையினா£¢ புலம்புகொள் மனத்தார்
உரந்த ளர்ந்துளார் வில்வலி இழந்துளார் ஒருங்கே
இரிந்து நீங்கினர் இலக்கரோ டெண்மரும் இளவல்
திருந்த லன்தடந் தேர்மிசைப் பாய்ந்தனன் சினத்தால். 168
பாய்ந்து திண்டிறல் மொய்ம்பினான் பரமன்முன் னளித்த
நாந்த கந்தனை யுரீஇக்கொடு நண்ணலர்க் கிறைவன்
ஏந்து வில்லினைத் துணித்தனன் துணித்தலும் எரிபோல்
காய்ந்து வெய்யவன் புடைத்தனன் உரத்திலோர் கரத்தால். 169
அங்கை கொண்டுசூர் ஒருபுடை புடைத்தலும் அகலம்
பொங்கு சோணிதம் அலைத்திட வாகையம் புயத்துச்
சிங்கம் வீழ்ந்தயர் வுற்றிடத தூதனைச் செகுத்தல்
இங்கெ னக்கடா தென்றெடுத் தும்பரின் எறிந்தான். 170
எறிந்த காலையில் விண்ணிடைப் படர்ந்திடும் ஏந்தல்
அறிந்து மீண்டுசென் றாறுமா முகன்புடை அடைந்தான்
தறிந்து போகிய சிலையினைத் தரைமிசை யிட்டுச்
சிறந்த தோர்தனு எடுத்தனன் தீயரில் தீயோன். 171
அத்த மேல்கிரி உதயமால் வரைத்துணை யான்று
நித்த லும்பிறர்க் கிடர்செய்து மேருவின் ஈண்டு
கொத்து நீடுபல் குவடுடைத் தாகியே குமரன்
சத்தி யாலட நின்றவெற் பனையதத் தனுவே. 172
வனைக ருங்கழல் அவுணனக் கார்முகம் வளைத்துப்
புனலும் அங்கியும் காலுடன் ஒலிப்பது புரைய
எனைவ ருந்துளக் குறும்வகை நாணொலி யெடுத்தான்
அனைய பெற்றியை அறிந்தனன் அமரரை அளித்தோன். 173
புயலின் மேனியன் புவிநுகர் காலையும் போதகன்
துயிலு மாலையுந் துஞ்சிய தொலையா
தியலு மண்டத்தின் அடிமுடி உருவிநின் றிலங்குங்
கயிலை போல்வதோர் நெடுஞ்சிலை எடுத்தனன் கந்தன். 174
வாரி யாலுல கழிந்திடும் எல்லையின் மருங்கின்
மேரு வாதியாம் வரைகளுங் கிரிகளும் விசும்பில்
காரு மேலுள உலகமும் அமரருங் கயிலைச்
சாரல் சூழதல்போல் விரவியார்ப் புடையததத் தனுவே. 175
நீட்ட மிக்கதோர் அப்பெருஞ் சிலையினை நிமலன்
தோட்டு ணைக்கொடு வாங்கியேழ் வகையினால் தோன்றும்
ஈட்ட மிக்கபல் லுயிர்களும் வான்உரும் ஏற்றின்
கூட்ட மாகிய மார்த்தெனக் குணத்தொலி கொண்டான். 176
குணங்கொள் பேரொலி கோடலும் இரலையூர் கொற்றத்
தணங்கு லாவரு கார்முகங் குழைத்துளை யவதி
இணங்க வாங்கியே பத்துநூ றாயிரத் திரட்டி
கணங்கொள் வெஞ்சரம் உகைத்தனன் கூற்றினுங் கடியோன்.177
வான்ம றைத்தன மாதிரம் மறைத்தன மதிதோய்
மீன்ம றைத்தன கதிர்வெயின் மறைத்தன வேலை
தான்ம றைத்தன வசுமதி மறைத்தன தருவார்
கான்ம றைத்தன வரைகளை மறைத்தன கணைகள். 178
காற்றிற் செல்வன அங்கியிற் படர்வன கடுங்கட்
கூற்றிற் கொல்வன வேலைவெவ் விடத்தினுங் கொடிய
பாற்றுத் தொல்சிறை உள்ளன ப·றலை படைத்த
நாற்றிக் கும்புகழ் அவுணர்கோன் ஆணையின் நடப்ப. 179
பருமி தத்தன மேருவைத் துளைப்பன பாங்கர்
வரைகி ழிப்பன அண்டமும் பொதுப்பன வான்தோய்
உருமி டிக்குலம் பொருவன விடத்தையுண் டுமிழ்வ
கருமை பெற்றன சேயன தீயவன் கணைகள். 180
துண்ட வெண்பிறை வாளெயிற் றவுணர்கோன் துரப்ப
மிண்டு வெங்கணை யெங்கணுஞ் செறிந்திட விண்ணோ£¢
கண்டு கண்ணனை அணுகியே கைகுலைத் தைய
உண்டு கொல்நமக் கொளிப்பதோர் இடமென உரைத்தார். 181
உரைத்து ளார்க்குமால் மாறுரை வழமுன் ஔ¢வேல்
கரத்தி லேந்திய குமரவேள் இன்னது கண்ணால்
தெரித்து வெங்கனல் விடுத்திடும் ஊதைபோற் சிலதன்
சரத்தி னாலவன் தூண்டிய கணையெலாந் தடிந்தான். 182
மடிந்தி டும்படி மாற்றலன் சரங்களை வள்ளல்
தடிந்த தன்மைகண் டமரர்கள் உவகையில் தழைத்தார்
படர்ந்து நீடிய கங்குலின் பாயிருள் புலர
விடிந்த காலையின் எழுங்கதிர் கண்டமே தினிபோல். 183
வேறு
அங்க வெல்லை அவுணர்கோன், எங்கள் நாதன் எதிருற
மங்குல் போல்வ ரம்பிலாச், செங்கண் வாளி சிதறினான். 184
ஆய காலை அறுமுகன், தீயன் உந்து செறிகணை
மாய வாளி மாமழை, ஏயெ னாமுன் ஏவினான். 185
எங்கள் நாதன் ஏவிய, துங்க வாளி சூர்விடும்
புங்க வங்க ளைப்புரத், தங்கி போல றுத்தவே. 186
அறுத்த பின்னும் அறனிலான், மறுத்தும் வாளி மாமழை
கறுத்த கண்டர் காளைமேல், செறுத்து வல்லை சிந்தினான். 187
சிந்து கின்ற செஞ்சரம், வந்து றாமுன் வந்தெனக்
கந்தன் நூறு கணைதொடா, அந்தில் பூழி ஆக்கினான். 188
பூழி செய்து பொள்ளென, ஊழி நாதன் ஒண்சரம்
ஏழு நூற தேவினான், சூழு மாயை தோன்றல்மேல். 189
மாயை மைந்தன் மற்றதை, ஆய வாளி யால்அறுத்
தேவி னானி ராயிரஞ், சேயின் முன்சி லீமுகம். 190
வேறு
விட்டதனை அத்தொகை விறற்பகழி தன்னால்
அட்டுவிரை விற்கடவுள் ஆயிர விரட்டி
கட்டழலை யொத்துள கடுங்கணைகள் தம்மைத்
தொட்டனன் வருத்தமொடு சூர்கிளை துளங்க. 191
முராரியுத வுஞ்சுதனை முந்துதளை இட்டாண்
டொராயிரம் அளித்தபரன் உய்த்தகணை செல்ல
இராயிர நெடும்பகழி ஏவியவை நீக்கி
அராவிறையும் வையமும் அழுங்கலுற ஆர்த்தான். 192
ஆர்த்தவன் விடுங்கணை அனைத்தினையும் முக்கண்
மூர்த்திதரு கான்முளை செலச்செல முடித்தான்
கார்த்தெழு புகைப்படலை கான்றுநிமிர் செந்தீச்
சேர்த்தினவை யாவையும் மிசைந்திடு திறம்போல். 193
ஐயன்விடு வாளிகளை அவ்வசுரன் நீக்கும்
வெய்யன்விடு வாளிகளை வேள்கடி தறுக்கும்
எய்யுநெடு வெம்பகழ இற்றவைகள் சிந்தி
வையமிசை போகியன வானமணித் தென்ன. 194
முற்றிய அமர்த்தலை முனிந்திவர் செலுத்துங்
கொற்றநெடு வாளிகள் குறைந்துழ எழுந்தீப்
பற்றியது பாரிடை பகிர்ந்தவரை முற்றும்
வற்றிய அளக்கரும் வறந்துளது கங்கை. 195
தார்கெழுவு வேற்படை தடக்கையுடை யோனுஞ்
சூரனும் இவாறமர் இயற்றுதொழில் காணா
வீரமட மாதுளம் வியந்திவர் தமக்குள்
ஆரிடை நடத்துமென ஐயமொடு நின்றான். 196
ஆளரிதன் முன்னிளவல் ஆனைவத னத்துக்
காளைமகிழ் பின்னிளவல் கார்முகம் உகைக்கும்
வாளிமழை ஏயலது மற்றவர்கள் தம்மை
நீள்விழியி னால்தெரிகி லார்புடையின் நின்றோர். 197
நீடுசமர் இன்னணம் நிகழ்ச்சியுறும் எல்லை
மேட்மிசை ஊர்பரன் விடுத்தகணை எல்லாம்
ஈடுபட நூறியவன் ஏறிவரு மான்தேர்
ஆடுறு பதாகையை அறுததுவிரைந் தார்த்தான். 198
ஆ£¢த்துவிறல் வால்வளையை அம்பவள வாயில்
தேர்த்தியிசைத் தான்தனது சீர்த்தியிசைத் தென்ன
மூர்த்தமது தாழ்க்கிலன் முனிந்துகணை பின்னுந்
தூர்த்துமுரு கன்தனது தோற்றமறைத் திட்டான். 199
மறைத்தபக ழித்தொகையை வாளிமழை தன்னாற்
குறைத்தவுணன் ஊர்ந்திடு கொடிஞ்சிநெடு மான்தேர்
விறற்கொடி தனைக்கொடிய வெஞ்சரமொ ரேழால்
அறுத்துமுரு கன்பரவை யாழ்கடலின் இட்டான். 200
வேறு
தான வர்க்குத் தலைவன் தனிக்கொடி
மீன வேலையில் அற்றுடன் வீழ்ந்துழிப்
பானு கம்பனெ னப்படு பாரிடர்
சேனை காவலன் தெற்றென நோக்கினான். 201
கண்டு சிந்தை களித்துப் பெருமிதங்
கொண்டு குப்புற் றிசைத்துக் குனித்திடா
அண்டர் போற்றத்தன் ஆயிரம் வாயினும்
ஒண்தி ரட்சங்கம் ஒல்லைவைத் தூதினான். 202
கானு கம்படு கந்துகத் தேருடைப்
பானு கம்பன் பனிமதி ஆயிரம்
மானு கம்பவை வாய்வைத் திசைத்தலுந்
தானு கம்பல தங்கிற்றவ் வோசையே. 203
பாய்பெ ரும்புகழ்ப் பானுகம் பன்வளை
ஆயி ரங்களும் ஆர்த்திட அண்டர்தம்
நாய கன்தன் விறல்கண்டு நாரணன்
தூய சங்கு முழங்கிற்றுத் துண்ணென. 204
போதம் அங்கிற் புங்கவர் யாவருஞ்
சோதி வேற்படைத் தூயவன் ஏறுதேர்
மீது கேதனம் இல்லை வியன்கொடி
ஆதி நீயென் றழலினை ஏவினார். 205
ஏவ லோடும் எரிதழற் பண்ணவன்
வாவு குக்குட மாண்கொடி யாகியே
தேவதேவன் திருநெடுந் தேர்மிசை
மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட. 206
படியி லாதமா¢ பண்ணவன் தேர்மிசைக்
கொடிய தாய்நின்று குக்கு டங்கூயது
கடிய தானவர் கங்குல் புலர்ந்திடும்
விடியல் வைகறை வேலையைக் காட்டல்போல். 207
சங்க மோடு தபனனும் ஆர்த்தலும்
மங்குல் வண்ணத்து மாயவன் ஆர்த்தனன்
பங்க யாசனப் பண்ணவன் ஆர்த்தனன்
திங்கள் ஆர்த்தது செங்கதிர் ஆர்ப்பவே. 208
மறலி ஆர்த்தனன் மாருதங் கட்கெலாம்
இறைவன் ஆர்த்தனன் இந்திரன் ஆர்த்தனன்
அறைக டற்கர சானவன் ஆர்த்தனன்
குறைவில் செல்வக் குபேரனும் ஆர்த்தனன். 209
ஆர்த்த ஓசைபோய் அண்டத்தை முட்டியே
சூர்த்த நோக்குடைச் சூரபன் மன்செவிச்
சீர்த்து ளைக்குட் செறிதலுந் தேவரைப்
பார்த்த னன்கடு உண்டன்ன பான்மையான். 210
மாறி லென்முன் வருவதற் கஞ்சியே
பாறு போன்று பழுவத்து லைந்துளார்
தேறி வந்து தெழித்தனர் என்முனும்
ஆறு மாமுகன் ஆற்றல்கொண் டேகொலாம். 211
நன்று நன்றிது நான்முகன் ஆதியா
நின்ற தேவர் நிலையழித் தொல்லையில்
கொன்று பின்னர்க் குமரனை வெல்வனால்
என்று சீறினன் யாரையும் எண்ணலான். 212
இருக்க மைந்தன் இகலிலண் விண்ணிடைச்
செருக்கு தேவர் திறலினைச் சிந்துவான்
அருக்க னோடிய அந்தரத் துய்க்குதி
தருக்கு தேரினைச் சாரதி நீயென்றான். 213
மற்றிவ் வாறு வலவனை நோக்கியே
சொற்ற காலைத் தொழுதெந்தை நன்றெனாப்
பொற்றை போலும் பொலன்மணித் தேரினை
வெற்றி யாகென விண்மிசைத் தூண்டினான். 214
பாகன் தூண்டிய பாண்டிலந் தேரெழீஇ
மேகங் கீண்டு மிசைப்படு சூறையின்
ஆகங் கீறி அமரர்கள் ஈண்டிய
மாகஞ் சென்றது வானிழிந் தென்னவே. 215
சென்ற தேரொடு சேணிடைப் புக்குளான்
குன்ற மன்ன கொடுஞ்சிலை கோட்டியே
துன்று தேவர் தொகைஇரிந் தோடுற
மன்ற வாளி மழைகளை வீசினான். 216
வீசு கின்றுழி விண்ணவர் மேற்சரம்
நீசன் விட்டிடு நீர்மையை நோக்கியே
ஈசன் மாமகன் ஈண்டுநின் றெண்ணிலா
ஆசு கங்களுய்த் தங்கவை சிந்தினான். 217
வேறு
மற்றவை துணித்தபின் வடிக்கயிறு முட்கோல்
பற்றிய தடக்கையுள பாகுதனை நோக்கிக்
கொற்றஅயில் தூண்டியொரு குன்றைவௌ¤ கண்டோன்
தெற்றெனவிண் மேல்நமது தேர்விடுதி யென்றான். 218
என்னலும் இறைஞ்சிஇர லைப்பரியின் மேலோன்
பொன்னுலகு பாருலகு புக்கெழுவ தென்
மின்னின்மிளிர் தேரதனை விண்மிசைக டாவி
நன்னெறி செலாஅவுணர் நாயகன்முன் உய்த்தான். 219
வையநெடு வானமிசை வல்லைபுகும் எல்லை
ஐயன்இமை யோர்கள் அயர்ந் தோடுவது நோக்கி
நையலிர் புலம்பலிர் நடுங்கலிர்கள் என்றோர்
செய்யகரம் ஏந்திமுரு கன்கருணை செய்தான். 220
கந்தன்மொழி வானவர்க ணத்தவர்கள் கேளா
எந்தையிவண் வந்திடலின் யாமுயிர் படைத்தே
உய்ந்தனம் எனாவிரைவில் ஓடுவது நீங்கிச்
சிந்தைமகிழ் வத்தொடு திகந்தமுற நின்றார். 221
நின்றிடலும் வெவ்வவுணன் நீர்மையது நோக்கிப்
பின்றிடுவ ராம்பிரம னேமுதல தேவர்
ஒன்றொர்சிறு வன்கொலெனை உற்றெதிரு நீரான்
நன்றிதென வேவெகுளி கொண்டுநகை செய்தான். 222
காய்சின மிகுந்தவுணர் காவலன் அநந்தம்
ஆசுகம் விரைந்துபடர் ஆசுகம தென்ன
வீசுதலும் வாளிபல விட்டவை விலக்கி
ஈசனருள் மாமதலை ஏற்றிகல் புரிந்தான். 223
சுறுக்கொள மயிர்ப்பொடி உயிர்ப்புவிடு சூரன்
கறைக்கதிர் அயிற்பொலி கரத்தன்இவர் தம்மில்
செறுத்துடன் வடிக்கணை செலுத்திஅகல் வானம்
மறைப்பது மறுக்குவது மாகிமலை வுற்றார். 224
வேறு
விரைந்திரு வோர்களும் வியன்கணை மாரிகள்
சொரிந்தனர் பேரமர் தொடர்ந்துசெய் போழ்தினில்
எரிந்தது மாதிரம் இரங்கினர் பாருளர்
திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே. 225
கறங்கினம் போல்வன கலஞ்செய் குலாலன
திறங்கொளும் ஆழிகள் திரிந்தன மானுவ
மறங்கெழு சூறைகள் மயங்கின போல்வன
துறுங்கணை மாரிகள் சொரிந்தவர் தேர்களே. 226
பாதல மூழ்குவ பாரிடை சூழ்குவ
மாதிர மோடுவ வாரிதி சேர்குவ
பூதர மேவுவ பூமல ரோன்நகர்
மீதினும் ஏகுவ மீளுவ தேர்களே. 227
எண்டிசை சூழும் இருங்கடல் பாய்வன
விண்டொடு நேமி வியன்கிரி வாவுல
கொண்டலின் ஆரிருள் கொண்டுழி போகுவ
அண்டமுன் ஏகுவ அங்கவர் ஏறுதேர். 228
பெயர்ந்திடு தேருறு பிழம்பவை காணுபு
தியங்கினர் நான்முகர் தெரிந்திலர் சீருரு
மயங்கினர் ஆதவர் மருண்டனர் வானவர்
உயங்கினர் பாருளர் உலைந்தனர் நாகரே. 229
முதிர்ந்திடு போரினர் முழங்கிய தேர்செல
அதிர்ந்தது பாருல கலைந்தன வேலைகள்
பிதிர்ந்தன மால்வரை பிறந்தது வான்முக
டுதிர்ந்தன தாரகை உகுந்தன கார்களே. 230
வேறு
தேரிவை இரண்டு மாகித் திகழுமூ தண்ட மெங்குஞ்
சாரிகை வருத லோடுஞ் சண்முகன் மீது செல்லச்
சூரெனும் அவுணர் கோமான் தொலையுநாள் எழிலி பொங்கி
ஆரழல் மழைகான் றென்ன அடுசர மாரி தூர்த்தான். 231
மழுப்படை அநந்த கோடி வச்சிரந் திகழ்முச் சென்னிக்
கழுப்படை அநந்த கோடி கப்பணம் அநந்த கோடி
கொழுப்படை அநந்த கோடி குலிசம்வேல் அநந்த கோடி
எழுப்படை அநந்த கோடி இடையிடை இடிபோல் உய்த்தான். 232
கூற்றுயிர் முடிக்குந் துப்பிற் கொடும்படை மாரி தன்னை
ஆற்றலின் அவுணர் கோமான் விடுத்துழி அவற்றை யெல்லாங்
காற்றெனப் பகழி தூண்டி முறைமுறை கடிதிற் சிந்தி
மாற்றினன் திரிந்தான் ஐயன் மூதண்ட வரைப்பு முற்றும். 233
இத்திறந் திரிந்த செவ்வேள் இடைதெரிந் தேழொ டேழு
பொத்திரந் தன்னைத் தூண்டிப் புகழுறும் அவுணர் செம்மல்
சித்திரத் தேரும் மாவின் தொகுதியுஞ் சிந்தி நீக்கக்
கைத்தனு வோடுந் தீயோன் கதுமெனப் புவிக்கண் உற்றான். 234
நாணுடை வரிவில் வாங்கி நண்ணலன் நஞ்சு பில்கும்
ஏணுடை வயிர வாளி எண்ணில தூண்டி ஏற்பத்
தாணுவின் மதலை கண்டு தன்பெருஞ் சிலையைக் கோட்டித்
தூணிகொள் கணையின் மாரி தொடுத்தவை துணித்து விட்டான். 235
துணிப்புறும் எல்லை வல்லே சுடர்க்கணை அநந்த கோடி
தணப்பற விடுத்த லோடுஞ் சண்முகன் அவற்றை யெல்லாங்
கணைப்பெரு மழையால் மாற்றிக் காசிபன் தனது செம்மல்
அணிப்படு தோற்மேற் பின்னும் ஆயிரம் பகழி உய்த்தான். 236
றுழியின் முதல்வன் மைந்தன் ஒராயிரங் கணையுஞ் சூரன்
பாழியம் புயத்து மீது படுதலுங் கடிதே இற்றுச்
சூழுறச் சிதறிற் றம்மா தொவிலா வயிரங் கொண்ட
காழ்கிளர் வரைமேல் வீழ்ந்த கன்மழைத் தன்மை யேபோல். 237
அந்தமில் வன்மை சான்ற அவுணன்மற் றதனை நோக்கி
முந்துறு வெகுளி தூண்ட முறுவலும் உயி£¢ப்புந் தோன்ற
எந்தைதன் மொய்ம்பிற் செல்ல இராயிரம் பகழி வாங்கிச்
சிந்தையிற் கடிது தூண்டித் தேவரும் மருள ஆர்த்தான். 238
உட்டௌ¤ வுற்றோர் காணும் ஒப்பிலா முதல்வன் தோள்மேல்
விட்டிடு பகழி முற்றும் வெந்துவெந் துகள தாகிப்
பட்டன திசைகள் முற்றும் பரந்தன பரத்தின் மேலோன்
கட்டழல் அதனால் மாய்ந்த காமவேள் யாக்கை யேபோல். 239
ஆங்கது காலை தன்னில் அறுமுகம் படைத்த ஐயன்
நீங்கரு நெறியால் உய்த்த நெடுஞ்சரம் அனைத்தும் மாற்றிப்
பாங்கமர் வயவர் மீதும் பாரிடப் படைகள் மீதுந்
தீங்கணை அழுத்த லுற்றான் தேவரை இடுக்கண் செய்தான். 240
தன்னிணை தானே யாகி நின்றிடுந் தனிவேல் வீரன்
அன்னதோர் தன்மை கண்டோ ராயிரம் பகழி பூட்டித்
துன்னலன் குனித்த சாபந் துணித்தனன் துணியா முன்னம்
பின்னுமோர் சிலையை ஏந்திப் பெருமுகில் இரிய ஆர்த்தான். 241
இம்பரின் மலைந்த சூரன் இம்மென வருக்கொண் டேகி
அம்பரத் திடையே தோன்ற அன்னது குமரன் காணா
உம்பரிற் சென்று தாக்க ஓரிறை எதிர்ந்து நின்று
நம்பியொ டாடல் செய்வான் நவிலரும் மாயை சூழ்வான். 242
விண்ணிடை நின்ற சூரன் விரைந்துடன் கரந்து சென்று
மண்ணிடை மீட்டுஞ் செல்ல மாநில வரைப்பிற் செவ்வேள்
துண்ணென வந்து வெம்போ£¢ தொடங்கலுந் தோற்ற மாற்றிக்
கண்ணகல் தூய நீத்தக் கனைகடல் நடுவண் ஆனான். 243
ஆயிடை முமுக வேள்சென் றடுசமர் இயற்றும் எல்லை
மாயையின் மறைந்து சூரன் மாதிர முடிவில் தோன்ற
ஏயென ஆண்டுஞ் செவ்வேள் ஏகியே நெடும்போர் ஆற்றக்
காய்கனல் உமிழும் வேலான் கரந்துபா தலத்தின் நின்றான். 244
ஆறிரு தடந்நதாள் வள்ளல் அதுகண்டு பிலத்து ளேகி
மாறமர் இயற்றும் எல்லை வல்லைதன் னுருவ மாற்றி
வீறுள சிமையச் செம்பொன் மேருவின் குவட்டின் நிற்ப
ஏறுடை முதல்வன் மைந்தன் இம்மென அங்கட் சென்றான். 245
மேருவின் சிகரம் நண்ணி வேலுடைத் தடக்கை வீரன்
பேரமர் இயற்றத் தீயோன் பின்னரும் ஆண்டு நீங்கி
நாரணன் உலகில் தோன்ற நம்பியுந் தொடர்ந்து போந்து
சூரெனும் அவுண னோடு தொல்சமர் ஆற்றி நின்றான். 246
ஆற்றிடு கின்ற காலத் தவுணர்கோன் அண்ட கோள
மேற்றிகழ் வாயில் செல்ல விமலனும் அங்கண் ஏகி
ஏற்றெதிர் மலையா அன்னான் ஏறிய இவுளித் தேரைக்
கூற்றுறழ் பகழி தன்னால் அட்டனன் கொற்றங் கொண்டான். 247
கந்துக விசய மான்தேர் இற்றலுங் கடுங்கோன் மன்னன்
இந்திர ஞாலம் என்னும் எறுழ்மணித் தடந்தேர் தன்னைச்
சிந்தனை செய்த லோடுஞ் சேணகிளர் செலவிற் றாகி
வந்திட அதன்மேல் ஏறி வல்லைபோர் புரிதல் உற்றான். 248
மண்டமர் புரியும் எல்லை வள்ளல்தன் பகழி தன்னால்
அண்டம தடைந்த வாயில் அடைத்ததும் அப்பால் உள்ள
தண்டம தெல்லாஞ் செல்லாத் தன்மையுந் தகுவர் கோமான்
கண்டனன் நன்று நன்றென் இறைத்தொழிற் காவ லென்றான். 249
இறைத்தொழில் அவுணர் செம்மல் ஏந்துதன் சிலையை வாங்கித்
திறத்தொடும் அநந்த கோடி செஞ்சரந் தூண்டி அண்ட
நெறிப்படு வாயில் பொத்து நெடுங்கணைக் கதவ முற்றும்
அறுத்துநுண் தூளி ஆக்கி அம்பரஞ சுழல விட்டான். 250
காவலன் அண்ட வாயிற் கணைகளின் கபாடம் நீக்கி
மாவொடு களிறுந் தேரும் வயவரும் வரம்பின் றாகி
ஓவரு நெறியின் அப்பால் உற்றதன் தானை தன்னைக்
கூவினன் வருக என்று குவவுத்தோள் கொட்டி ஆர்த்தான். 251
ஆர்த்திடு கின்ற காலத் தண்டத்தின் அப்பால் நின்ற
தேர்த்தொகை களிற்றின் ஈட்டந் திறல்கெழும் இவுளிப் பந்தி
சூர்த்திடும் அவுண வௌ¢ளந் துண்ணென ஈண்டை ஏகிப்
போர்த்தொழில் முயன்று செவ்வேள் புடையுறத் தெழித்துச் சூழ்ந்த. 252
நீணுதல் விழியின் வந்த நிருமலக் கடவுள் தன்னை
ஏணொடும் அண்டத் தப்பால் இருந்திடு தானை சுற்றச்
சேணுறு நெறிக்கண் நின்ற திசைமுகன் முதலாந் தேவர்
காணுத லோடும் உள்ளங் கலங்கிமற் றினைய சொல்வார். 253
காலமொ டுலகம் உண்ணக் கனன்றெழு கரிய தீயின்
கோலமோ அண்டத் தப்பாற் குரைபுனல் நீத்தந் தானோ
ஆலமோ அசனிக் கொண்மூ ஆயிர கோடி சூழ்ந்த
சாலமோ யாதோ என்று தலைபனித் திரியல் போனார். 254
ஆயின காலை தன்னில் அண்டங்கள் தோறும் நின்ற
மாயிருந் தகுவன் தானை வந்துதன் மருங்கு சுற்றிப்
பாய்புனல் முகில்கான் றென்னப் படைத்தொகை வீசி ஆர்ப்பத்
தீயுரு வான செம்மல் சிறிதுதன் நாட்டம் வைத்தான். 255
அடலையின் நலத்தை வீட்டி அரும்பெறல் ஆக்கஞ் சிந்தி
அடலையின் உணர்வின் றாகும் அவுணர்கோன் தானை முற்றும்
அடலையின் நெடுவேல் அண்ணல் அழலெழ விழத்த லோடும்
அடலையின் உருவாய் அண்டத் தொல்லுரு வழித்த மன்னோ. 256
முற்படும் அனிக மற்றும் முடிதலும் முடித லின்றி
எற்படும் அண்டத் தப்பால் ஈண்டிய பதாகி னிக்குள்
பிற்பட அளப்பில் சேனை பெயர்ந்துமற் றீண்டை துன்னிச்
சிற்பரன் குமரன் தன்பாற் படைமுறை சிதறிச் சூழ்ந்த. 257
பரப்பொடு மிடைந்த தானைப பரவையை நோக்கி ஐயன்
நெருப்புமிழ் தன்மைத் தென்ன நெட்டுயிர்ப் பனில முந்தி
உரப்பினன் சிறிதே அற்றால் உம்பரில் குவிந்த பூளைப்
பொருப்பிடை அழல்புக் கென்னப் பூழியாய் உலகம் போர்த்த. 258
மாட்சியின் உலவு சேனை வடிவெலாம் விடுத்துத் தொல்லை
மாட்சியின் உயிரே தாங்கி மலைதுமென் றுன்னிப் பின்னுஞ்
சூட்சியின் வளைந்த வாபோற் சோதிவேற் குமரன் தன்பாற்
சூட்சியின் மேவிற் றம்மா தூயநுண் துகளின் ஈட்டம். 259
அந்தமில் தானை முற்றும் அத்தன்ஓர் உங்கா ரத்தால்
வெநதுக ளாகப் பின்னும் மேலையண் டத்துள் நின்ற
தந்தியும் பரியுந் தேருந் தானவப் படையும் ஆர்த்து
வந்துவந் தயலிற் சூழ வரம்பிலா முதல்வன் கண்டான். 260
திருத்தமிழ் மதுரை தன்னிற் சிவன்பொருள் நிறுக்கு மாற்றால்
உருத்திர சரும னாகி உற்றிடு நிமலன் வெம்போர்
அருத்திகொள் கணிச்சி சூலம் ஆழிதண் டெழுவ தாகுங்
கரத்தினிற் படைகள் தம்மை நோக்கியே கழற் லுற்றான். 261
வென்றியம் படைகாள் கேண்மோ விரைந்துடன் தழுவி நம்பாற்
சென்றிடும் அனிகந் தன்னைச் சென்னெறி பெறாமல் அப்பால்
நின்றிடு படையை எல்லா£ம் நீவிர்பல் லுருக்கொண் டேகிக்
கொன்றிவண் வருதி ரென்று கூறிமற் றிவற்றைத் தொட்டான். 262
ஆதிநா யகன்விட் டுள்ள படையெலாம் அநந்த கோடி
சோதியார் கதிருந் தீயும் பணிகளும் போலத் தோன்றி
ஏதிலான் அனிக மாகி இம்பருற் றனவி மைப்பின்
பாதியின் முன்னம் அட்டுப் பெருவிறல் படைத்த மன்னோ. 263
தூயதோர் குமரற் சூழ்ந்த படையைமுன் தொலைத்து வீட்டி
ஏயின படையோ ரைந்தும் இம்பரோ ஒழிய நின்ற
ஆயிரத் தோரேழ் அணடத் தகலமுஞ் சென்று சென்றாங்
கோய்வற எழுந்த தானை முழுதுமட் டுலவு கின்ற. 264
ஐவகைப் படைகள் முற்றும் அண்டங்கள் தோறும் நின்ற
வெவ்விய அவுணர்த் தேய்த்து விரைவொடு திரித லோடுந்
தெவ்வியல் அவுணர் மன்னன் செயிர்த்துமற் றிதனை நோக்கி
இவ்வொரு கணத்தின் முன்னம் இவனுதிர் உண்பன் என்றான். 265
சாற்றியித் தன்மை தன்னைத் தானவர்க் கரசன் முன்னங்
கூற்றுயிர் குடித்த நோன்றாட் பண்ணவன் கொடுப்பக் கொண்ட
மாற்றருந் திகிரி தன்னை வாங்கினன் வழிபட் டேத்திகக்
காற்றினுங் கடிது செல்லக் கந்தவேள் மீது விட்டான். 266
விட்டிடு திகிரி யாரும் வெருக்கொள விரைந்து சென்று
கிட்டிய காலைச் செவ்வேள் கிளர்ந்ததோர் பாணி நீட்டி
வட்டணை நேமி தன்னை வருதியால் என்று பற்ற
ஒட்டலன் அதனை நோக்கி உளந்தளர்ந் துயிர்த்து நின்றான். 267
உண்ணிலா மாயை வல்ல ஒருதனித் தேர்மேல் நின்றோன்
எண்ணிலா உருவங் கொண்டே இருங்கணை மாரி தூர்ப்பத்
தெண்ணிலா மௌல அண்ணல் உதவிய செம்மல் நோக்கி
நண்ணலான் ஒருவன் மாய நன்றுநன் றென்று நக்கான். 268
சிறுநகை செய்து மேலாஞ் தேசனப் பகழி பூட்டி
அறுமுகன் அவுணர் செம்மல் ஆற்றிடு மாய முற்றும்
இறைதனில் முடித்தி யென்றே ஏவலும் விரைவின் ஏகி
முறைநெறி பிழைத்தோன் மாயம் முற்றொருங் கடட தன்றே. 269
மாயையின் உருவ நீங்க வலியழந் துள்ளம் மாழ்கித்
தீயவன் ஒருவ னாகிச் சேணுயர் தேரின் நின்றான்
ஆயது தெரிந்து வானோர் அறுமுகத் தவனைப் போற்றிப்
பாய்புனற் கடலின் ஆர்த்துப் பனிமலர் மாரி தூர்த்தார். 270
தூர்த்தலுந் தேருந் தானுந் துண்ணெனக் கரந்து சூரன்
பேர்த்திடு மண்ட கூடப் பித்திகை வாயி லெய்தி
ஆர்த்தறை கூவிப் புக்காங் கப்புறத் தண்டஞ செல்லத்
தீர்த்தனும் அதனை நோக்கித் தீயனைத் தொடர்ந்து போனான். 271
தொடா¢ந்துதன் மனத்திற் செல்லுந் தொல்லைமால் இரதத் தோடுங்
கடந்தபோ¢ ஆடல் மிக்க காசிபன் தனயன் நின்ற
இடந்தலைப் படலும் அன்னான் எந்தையோ டிகற்போ ராற்றி
அடுந்திறல் மாயை நீரால் அப்புறத் தண்டம் போனான். 272
இந்நிலை அவுணர் கோமான் இருநிலத் தண்ட முற்றும்
மின்னெனப் படர்ந்து தோன்றி வெய்யபோர் விளைத்து நின்று
பின்னருங் கரந்து செல்லப் பிரானும்அவ் வண்டந் தோறும்
துன்னலம் தனைவி டாது தொடர்ந்தமர் இயற்றிப் போனான். 273
வேறு
ஆய காலை அயன்முதல் தேவர்கள்
நேய மிக்க குரவரை நீங்கிய
சேயி னோர்களில் தேம்பித் திருமகள்
நாய கன்றனை நோக்கி நவிலுவார். 274
வலங்கை வாளுடை மாயைதன் மாமகன்
பொலன்கொள் அண்டப் புரைதனுட் போயினான்
இலங்கு வேற்படை யெந்தைதன் போரிடை
விலங்கி னானலன் என்றும் விளிகிலான். 275
மாயை ஆற்றவும் வல்லவன் ஈண்டொ£¦இப்
போய தன்மை புணர்ச்சிய தேயலால்
ஆயின் வேறிலை ஆறிரு மொய்ம்புடைத்
தூயன் மற்றது சூழ்ந்திலன் போலுமால். 276
வாடி னானென மாற்றல னைத்தொடர்ந்
தோடி னான்எந்தை ஒல்லையிற் சூரனைக்
கூடி னான்கொல் குறுகல னாகியே
நாடி னான்கொல் அறிகிலம் நாமெலாம். 277
மாக மேல்நிமிர் மற்றையண் டத்தினுஞ்
சேகு லாவிய சிந்தையன் தன்னுடன்
ஏகி னான்ஐயன் என்னினித் தான்விளை
வாகு மோவென்னும் அஞ்சுதும் ஏழையேம். 278
என்ற காலையில் அங்கெழிற் பூவைபோல்
நின்ற மாயவன் நீள்மல ரோன்முதல்
துன்றும வானவர் சூழலை நோக்கியே
ஒன்றும் அன்பொ டுளப்பட ஓதுவான். 279
வேறு
வஞ்ச மேதகும் அவுணர்கோன் ஆற்றலை மதித்தீண்
டஞ்சி அஞ்சியே இரங்கலிர் அறுமுகத் தொருவன்
செஞ்சி லைத்தனி வன்மையும் வீரமுந் தெரிந்து
நெஞ்ச கத்திடை ஐயுறு கின்றது நெறியோ. 280
ஓதி யாகியும் உணர்ந்தவர்க் குணரவும் ஒண்ணா
நீதி யாகியும் நிமலம தாகியே நிகழுஞ்
சோதி யாகியுந் தொழுதிடும் எம்மனோர்க் கெல்லாம்
ஆதி யாகியும் நின்றவன் அறுமுகன் அன்றோ. 281
ஈறி லாதவர் பரமனே குழவியின் இயல்பாய்
ஆறு மாமுகங் கொண்டுவித் தானென்ப தல்லால்
வேறு செப்புதற் கியையுமோ மேலவன் தன்மை
தேறி யுந்தௌ¤ கின்றில உமதுசிந் தையுமே. 282
ஐயம் எய்தலிர் ஆயிர கோடி அண்டத்தும்
வெய்ய னேகினுந் தொடர்ந்துபோய் வெஞ்சமர் இயற்றிச்
செய்ய வேலவன் துரந்துவந் திடுந்தினைத் துணையில்
கையில் நெல்லிபோற் காட்டுவன் நீவிருங் காண்டீர். 283
என்று மாயவன் கழறலும் அயன்முதல் எவரும்
நன்றெ னத்தௌ¤ வுற்றனர் அவ்வழ நண்ணான்
ஒன்றின் ஆயிர கோடியண் டத்தினும் ஓடி
நின்று நின்றமர் ஆடினன் எந்தையை நேர்ந்து. 284
வெந்தி றற்சமர் ஆற்றியே அவுணர்கோன் மீட்டும்
இந்த வண்டத்து மகேந்திர வரைப்பில்வந் திறுத்தான்
முந்து நீழலை விடாதுசெல் வோரென முனிந்து
கந்த னுந்தொடர்ந் தவனொடு போந்தனன் கடிது. 285
வேறு
போந்திடு தன்மை நோக்கிப் புராரிதன் புதல்வன நங்கள்
ஏந்தலைத் தொடர்ந்தான் என்ன இம்பரில் அவுணர் தானை
தீந்தழ லென்னப் பொங்கிச் செங்கையிற் படைகள் வீசி
ஆய்ந்திடும் உணர்வின் மேலாம் ஆதிதன் புடைசூழ்ந் தார்த்தார். 286
நாதனும் அதனை நோக்கி நன்றிவர் முயற்சி யென்னா
ஓதினன் முறுவல் செய்ய ஒன்னலன் தானை தொன்னாள்
மூதெயில் என்ன நீறாய் வெந்துடன் முடிந்த தம்மா
தாதைதன் செய்கை மைந்தன் செய்வது தக்க தன்றோ. 287
ஆனதோர் காலை தன்னில் அறுமுகம் படைத்த அண்ணல்
தூநகை அங்கி செல்லத் துண்ணெனப் பதைத்து வீழ்ந்து
தானவர் அனிகம் வெந்த சாம்பரின் குன்றை நோக்கி
வானவர் மகிழ்ந்து பூத்தூய் வள்ளலை வழுத்தி நின்றார். 288
முருகவிழ் தொடைய லான்றன் முறுவலான் அனிக முற்றும்
விரைவின் நுண் துகளதாகி வீழதலும் அவுணர் வேந்தன்
ஒருவனுந் தமியன் நின்றான் ஒண்டமிழ் முனிவன் உண்ணத்
திரைகட லின்றித் தோன்றுந் தீப்பெருங் கடவுள் ஒத்தான். 289
முன்படை குமரன் அங்கண் முறுவலித் திட்ட வாறும்
தன்படை அழிந்த வாறும் தமியன்றான் நின்ற வாறும்
கொன்படை வீர ரோடு குறட்படை ஆர்க்கு மாறும்
துன்படை அவுணன் கண்டாங் குளத்தொடுஞ் சொல்ல லுற்றான். 290
பின்னறு துணைவர் மைந்தர் பேரியல் அமைச்சர் ஏனோர்
முன்னுற முடிந்தார் இன்று முடிவுறாத் தானை முற்றும்
பன்னிரு கரத்து மைந்தன் படுத்தனன் தமிய னானேன்
என்னிவண் செய்வ தென்னா உயிர்த்தனன் எண்ண மிக்கான். 291
மாயவள் தன்னை மன்னன் மனத்திடை நினைத்த லோடும்
ஆயவள் வந்து தோன்றி அரும்பெறல் ஆற்றல் மைந்த
நீயொரு தமிய னாகி நின்றுளந் தளர்ந்தே என்னைக்
கூயினை முன்னிற் றென்னை தெரிவுறக் கூறு கென்றாள். 292
அறிந்திடு மாயை இவ்வா றறைதலுங் குமரன் போரின்
மறந்தகு துணைவர் மைந்தர் மந்திரி தானை முற்றும்
இறந்திட |