kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம்





உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

4. யுத்த காண்டம்

*** 12. சிங்கமுகாசுரன் வதைப் படலம்* ( * ஆறாநாள் சிங்கமுகாசுரன் வதை நிகழ்ந்ததாகும்.) என்னுலும் ஒற்றர் கேளா இறைவனை இறைஞ்சி ஏகி உன்னுறு நினைப்பின் முந்தி உத்தரத் தளக்கர் நண்ணி மன்னகர் புகுந்து ஞௌ¢ளல் கடந்துமந் திரத்துட் புக்குச் சென்னியா யிரங்கொண் டுள்ள சிங்கமா முகவற் கண்டார். 1 களித்தனர் மகிழ்ந்து தூதர் கான்முறை வணங்கி நிற்ப அளித்திடும் அரசின் வைகும் அரிமுகன் வந்த தென்னை கிளத்திடு வீர்கள் என்னக் கேடிலா அவுணர் மேலோன் விளித்தனன் ஐய நின்னை விரைந்தனை வருக வென்றார். 2 வேறு சரத்தினுங் கடியவர் இனைய சாற்றலும் அரித்திறல் முகத்தவன் வினவி ஆயிடை விருத்தமுண் டேலது விளம்பு வீரெனா உரைத்தனன் நன்றென ஒற்றர் கூறுவார். 3 நும்பிஆஆ வரையாடு நுதிகொள் வேலினால் அம்புலி வரைப்பில்வந் தட்ட கந்தவேள் நம்பதி முன்னவன் நகர்வந் தெய்தினான் செம்பது மன்முதல் தேவர் சூழவே. 4 வந்திடும் எல்லைபோய் மலைந்து பைப்பயப் புந்திகொள் அமைச்சருஞ் சிறாரும் பொன்றினார் உய்ந்தனன் இரணியன் உததி ஓடினான் எந்தையங் கிருந்தனன் புதுமை ஈதென்றார். 5 தொழுந்துஆ¨கி கையுடைத் தூதர் இன்னணம் மொழிந்தது வினவலும் முனிவும் மானமும் அழுந்திடு துயரமும் ஆகம் போழ்ந்திட எழுந்தனன் அவுணரோ டேகல் மேயினான். 6 முன்புறு கடையுறா மொய்த்த தூதரை என்பெருஞ் சேனையைக் கொணர்திர் ஈண்டெனத் தென்புலக் கோமகன் ஒற்றிற் செப்பலும் மன்பெருந் தானைகள் வல்லை வந்தவே. 7 தூசிகொள் நாற்படை துவன்றிச் சேர்தலும் ஆசுறும் அரிமுகத் தண்ணல் கண்ணுறீஇப் பாசன மன்னவர் பாங்கர் சுற்றிடத் தேசுடை மணிநெடுந் தேரொன் றேறினான். 8 தாரொலி செய்தன தாள்வ யப்பரி பேரொலி செய்தன பிறங்கு பூட்கைசேர் காரொலி செய்தன கண்டை ஆர்த்தன தேரொலி செய்தன தெழித்த சில்லியே. 9 முரட்டுடி சல்லிகை முரசங் காகளம் உருட்டுறு சுரிமுகம் உடுக்கை துந்துபி திரட்டுறு தண்ணுமை திமிலை யாதிகள் இரட்டிய கேதனம் எங்கும் ஈண்டிற்றே. 10 தழங்குரன் மால்கரி புரவி தானவர் அழுங்குறு தேர்நிரை அனிகம் வானமே வழங்குறு நெறியதா வலிதிற் சென்றன முழங்கில பெயர்கில முகில்கள் அஞ்சியே. 11 ஏயிது தன்மையின் ஈண்டு தானைகள் பாயின சென்றிடப் பா¤தி போலொளிர் ஆயிர மவுலியன் அவுணர் நாயகன் சேயுயர் விசும்பினில் எழுந்து சென்றனன். 12 கன்னலொன் றளவையில் ககனத் தாற்றினால் சென்னிகள் பலவுடைச் சீய மாமுகன் மன்னவன் உறைதரு மகேந்தி ரப்புரந் துன்னினன் வெருவியே சுரர்கள் ஓடவே. 13 அடைத்தலை நீங்கிய அம்பொற் கோநகர்க் கடைத்தலை வந்தனன் கனகத் தேரொரீஇப் படைத்தலை மன்னவர் பரவ உள்புகாக் கிடைத்தலை மேயினன் செழுமு சூரவை. 14 அரசியல் புரிந்திடும் அவையை நண்ணிய முரணுறு சிங்கமா முகத்தன் முன்னவன் திருவடி மலர்களில் சென்னி தீண்டுறப் பரிவொடு வணங்கினன் தொழுத பாணியான். 15 வணங்கிய தம்பியை மலர்க்கை தொட்டெடா இணங்கிய மார்புறுத் திறுகப் புல்லலும் நிணங்கவர் வேலினாய் நினது செம்முகம் உணங்கிய துற்றதென் உரைத்தியால் என்றான். 16 என்னலும் அவுணர்கோன் இளைய வன்றனை முன்னுற இருத்தியே முரணின் மேலையோய் என்னிடை யுற்றன இசைப்பன் கேளெனா அன்னவன் உணர்வகை அறைதல் மேயினான். 17 அன்றுநீ போந்தபின் அயில்கொள் வேலினாற் குன்றினை எறிந்திடு குமரன் என்பவன் தன்றுணைச் சேனையுந் தானும் இந்நகர் சென்றனன் பாசறை சேர்ந்து வைகினான். 18 மற்றவன் சேனைகள் மலைய மைந்தர்கள் இற்றனர் அமைச்சனும் இறந்து போயினான் அற்றன தானையும் ஆட கப்பெயர் உற்றவன் இரிந்தனன் உததி ஓடினான். 19 பொங்குளை அரிமுக புகுதி இன்னதால் சங்கையில் படையொடு சமரின் ஏகியே அஙகவன் வலியினை யடர்த்து மீளுதி இங்குனை விளித்தனன் இதனுக்கா வென்றான். 20 எஞ்சலில் சூரன்மற் றிதனைச் செப்பலும் வெஞ்சின அரிமுக வீரன் தேர்வுறா நெஞ்சினில் ஆகுலம நிகழ முன்னவன் செஞ்சரண் வீழ்ந்துநின் றிதனைச் செப்புவான். 21 மல்லலம் புயமுடை மைந்தர் தங்களைத் தொல்லையில் அமைச்சரைச் சுற்றத் தோர்களை எல்லவர் தம்மையும் இழந்து வைகினாய் புல்லிது புல்லிதுன் புந்தி எண்ணமே. 22 மூலமும் முடிவுமில் லாத மூர்த்தியைப் பாலனென் றெண்ணினை படுவ தோர்ந்திலை ஆலம தானதே ஐய என்மொழி மேலையின் விதியையார் வெல்லும் நீரினார். 23 சென்றிடு புனலினைச் சிறைசெய் தாவதென் இன்றினி ஏகியே எண்ண லாரெனத் துன்றிய குழுவெலாந் துடைத்து நுங்கியே நின்றிடு கின்றனன் நீயுங் காண்டியால். 24 கந்தனாம் ஒருவனைக் கடக்கப் பெற்றிடின் வந்துனைக் காண்பனால் மற்ற தில்லையேல் அந்தம தடைவரால் ஆரும் ஐயநீ புந்தியின் நினைந்தன புரிதியா லென்றான். 25 என்றுகை தொழுதுபின் இறையும் அவ்விடை நின்றிலன் விடைகொடு நிருதன் ஏகியே துன்றிய தானைகள் சூழ மற்றவண் ஒன்றுதன் மந்திரத் துறையுள் எய்தினான். 26 போனக மேருவும் புடையில் சூழ்வரும் ஊனெனும் வரைகளும் உலப்பில சோரிநீர் தேனொடு பால்தயிர் தேற லாதிகள் ஆனபல் கடல்களும் அயிறல் மேயினான். 27 வாசநீர் தேய்ந்திடு நரந்த மான்மதம் பூசினன் பாளித மிசையு னைந்தனன் வீசுபன் மதுமலர் மிலைச்சு கின்றனன் காசினி வரைப்பெலாங் கந்தஞ் சூழ்தர. 28 களைந்தனன் பழையன கவினப் பூண்டனன் வளந்தரு கின்றதோர் யாணர் மாண்கலன் மிளிர்ந்திடு தினகரர் புணரி வீழந்துழி ஔ¤ர்ந்துடன் பலகதிர் உதிக்கு மாறுபோல். 29 படிதவிர் பருப்பதம் பத்து நூற்றினின் முடிதொறும் இளம்பிறை முளைத்த வாறுபோல் நெடுமைகொள் அரிமுகன் நெற்றி தோறும்வெண் பொடிதனை உணிந்தனன் புனித மாயினான். 30 தண்டமும் நேமியுஞ் சங்க ரன்தரக் கொண்டதோர் சூலமுங் குலிச மேமுதல் அண்டர்தம் படைகளும் அன்னை ஈந்திடு திண்டிறற் பாசமுஞ் செங்கை பற்றினான். 31 கைத்தலம் யாவையுங் கதிர்கள் கான்றிட எத்திறப் படைகளும் பின்னர் ஏந்துறாப் பத்துநூ றாயிரம் பரிகள் பூண்டதோர் சித்திர மணிநெடுந் தேரில் ஏறினான். 32 தந்திரத் லைவருந் தனயர் யாவருஞ் சிந்துரத் தொகுதியுந் தேரும் மாக்களும் இந்திரப் பெருவளம் யாவுஞ் சூழ்தர மந்திரத் திருநகர் வயில் எய்தினான். 33 வேறு மேற்படு கேசரி வெம்முக வீரன் மாற்படு கோநகர் வாய்தலின் மேவ நாற்படை யானவும் நண்ணின வெம்போர் ஏற்புடை வௌ¢ளமி லக்கம தன்றே. 34 வானவர் ஏற்றமும் **மண்ணவா¢ வாழவும் தானவர் இன்னலும் நீக்கிய தக்கோர் ஊனமில் செய்கையோர் ஔ¢ளெரி உண்ணுங் கானமெ னப்பொலி காட்சியின் மிக்கோர். 35 ( ** பா-ம் - அன்னவர்) கார்பயில் கின்ற கருத்தினர் காமன் கூர்பயில் கின்ற கொடுங்கணை யுண்ணுந் தார்பயில் தோளர் சமர்த்தொழில் செய்தே மார்பக மன்றி வடுப்புனை யாதோர். 36 எண்ணமில் தொல்லுயிர் யாவும் அலைக்கும் அண்ணலை அன்னவர் ஆரழல் காலுங் கண்ணினர் வார்கழல் கட்டிய தாளார் விண்ணினை யேனும் விழுங்கவும் வல்லோ£¢. 37 நேருதிர் என்றெதிர் நேர்ந்தவ ராகங் கூர்நுதி வேல்கொடு கூறுப டுத்துப் பேருதி ரந்தசை செய்துநி ரம்பா வாரிதி யென்ன வகுத்திடும் வாயார். 38 தண்ட மழுப்படை தட்டை முசுண்டி விண்டுயா¢ கொல்சிலை வேலெழு நாஞ்சில் எண்டகு பல்படை யாவையும் ஏந்தி அண்டமு டைந்த திரும்படி ஆர்த்தார். 39 அந்தர மாமுகி லாமென ஆர்க்குந் தந்திகள் வீழ்த்துறு தானம தோடி உந்திக ளாயுல வைக்கதி கொண்டு முந்திய தூசியின் முன்னுறு கின்ற. 40 வேலைய தன்னவி லாழிய வன்னிக் கோலம தான குரங்கொள் பதத்த கால்விசை கொண்டன கந்துக ராசி மாலுறு பூழியின் வான்புவி செய்வ. 41 சூழ்வரு தேரிடை துன்றுப தாகைக் காழ்வரு கோனுமதி கார்முகி லுந்தி போழ்வன வாடுறு பூந்துகில் அங்கண் ஆழ்வரு பூழைய டைத்தன அன்றே. 42 வரங்கெழு சூர்துணை மாய்ந்திடும் என்றே உரங்கொடு முன்னம் உணர்ந்தன கொலோ துரங்கம ழுங்கின தோல்புலம் புற்ற இரங்கின பல்லியம் ஏங்கின தேர்கள். 43 கட்புலன் நாசிக வின்செவி துன்னப் பட்டன பூழிப தாகையும் அற்றே ஒட்டலர் விண்செல ஒட்டல ரென்னா விட்டனர் தூக்கம் விரைந்தனர் வெய்யோ£¢. 44 தேரினர் ஓர்பலர் திண்டிறல் வாசி ஊருநர் ஓர்பலர் ஓங்கிய வேழம் பேருநா¢ ஓர்பலர் பேரடல் கொண்டு பாரினா¢ ஓர்ப ராற்படை மள்ளர். 45 துங்கமில் சூர்துணை தொல்படை மன்னன் அங்கவன் என்ன அரித்தலை கொண்டான் மங்கல மாயவள் மாமகன் ஆடற் சிங்கன் எனப்படு சீர்ப்பெய ருள்ளான். 46 போர்ப்படை கொண்டு புறப்டர் கின்ற தேர்ப்படை காற்படை சிந்துரம் வாசித் தார்ப்படை கொண்டு தடங்கட லென்ன ஆர்ப்படை நெற்றிய னாகி அகன்றான். 47 நீள்வயிர் பேரி நிசாளம் உடுக்கை தாளம் வழிப்படு தண்ணுமை தக்கை காளம் வலம்புரி கைத்துடி யாதி யாளி முகன்முன் அளப்பில ஆர்ப்ப. 48 ஆகிய தால்அமர் ஐதென யாமும் ஏகுதும் உண்டி எமக்குள தென்னா மாக நெருங்கின வன்கழு கீட்டங் காகம் வருந்திய காளிகள் கூளி. 49 வேறு ஆழியை யொத்துய ரம்பொற் றேர்களில் ஆழியை உண்டெழு புயல்வந் தார்த்தன ஆழிய நிலத்துருண் டழுதி யோவெனா ஆழியை வினவியே அமர்தல் போலுமால். 50 இவ்வகை சேனைகள் யாவும் ஏழ்பெரும் பவ்வமும் ஒருவழி படர்ந்த தேயென அவ்வயிற் போந்திட அமரை முன்னியே தெவ்வடும் அரிமுகன் சேறல் மேயினான். 51 வேறு சேரலா ஆவிகொள் சீயமு கத்தோன் பேரனி கத்தொடு பேர்ந்திடல் காணூஉ வாரிச மேலவன் வாசவன் வானோர் ஆரும்வெ ரீஇயினர் அச்சம் அடைந்தா£¢. 52 செய்ய கரத்தினர் சிந்தை வியர்த்தே மெய்யல சுற்றிட மேற்றுகில் சோர ஐயுறும் எல்லையில் ஆகம் இரைப்ப ஒய்யென யாவரும் ஓடினர் போனார். 53 ஆவதொர் பாசறை ஆலய வைப்பில் தேவர்கள் ஈண்டுறு சிற்சபை தன்னில் மேவரு வேற்படை விண்ணவன் முன்போய்ப் பூவடி தாழ்ந்து புகன்றிடு கின்றார். 54 ஆயிர மான அகன்றலை கொண்டான் ஆயிரம் ஆயிரம் அங்கை படைத்தான் ஆயிர மேற்படும் அண்மும் வென்றான் ஆயிரம் யோசனை யாவுயர் மெய்யான். 55 நெஞ்சில் எவர்க்கும் நினைப்பரி தாகும் வஞ்சமும் மாயையின் வன்மையும் வல்லோன் எஞ்சலில் வன்மையன் இவ்வுல கெல்லாந் துஞ்சினும் ஆருயிர் துஞ்சுத லில்லோன். 56 ஓங்கல் இனங்கள் உவாத்தொகை நாகம் பாங்கம ராமை பரித்திடல் மாற்றி ஈங்குல கங்கள் எவற்றையும் ஓர்நாள் ஆங்கொரு செங்கையில் ஆற்றிய தொல்லோன். 57 பாந்தள் புனைநத பராபர மூர்த்தி ஈந்தது மாற்றலர் எல்லையி லோரைக் காய்ந்துயி ருண்டு கறைப்பெரு நீத்தந் தோய்ந்திடு கின்றதொர் சூலம் எடுத்தான். 58 எண்டிசை மேதினி ஏழ்பில மேனை விண்டல மன்னதன் மேற்படும் எல்லை அண்டம னைத்தும் ஒரங்கையில் வாரி உண்டுமிழ் கின்றதொர் வன்மையும் உள்ளோன். 59 தூக்ªª£ரு பால்வலி தூங்குற ஓர்பால் மேக்குயர் கோலென மேதினிப் பாங்கர் தேக்கெறி வேலைகள் சிந்தி விசும்பில் தாக்குற வேநடை தந்திடு தாளான். 60 தண்ட மிதென்று தருக்கின் எடுத்தே அண்ட கடாகம் அதன்புடை மோத நுண்டுகள் ஆதலும் நொய்திது வென்றே விண்டொடு மேருவை மீளவும் வைத்தோன். 61 மாசறு நேமி வடாது புலத்தின் ஆசுரம் என்னும் அகன்பதி வாழ்வோன் வீசிடின் எவ்வுல கத்தையும் வீக்கும் பாசம் இரண்டு பரித்திடு கையான். 62 துங்கம தாகிய சூர்துணை யானோன் அங்கவ னற்பெரி தாற்றல் படைத்தோன் ரூங்களின் நங்களை நாளும் நலித்தொன் சிங்கமு காசுர னாகிய தீயோன். 63 அந்தமி லாவனி கக்கடல் சூழ வெந்திற லோடு வியன்சமர் ஆற்ற வந்தனன் மற்றவன் மன்னுயிர் மாற்றி எந்தை அளித்தருள் எங்களை யென்றார். 64 அன்னதை ஓர்தலும் ஆறு முகேசன் தன்னயல் நின்றிடு தாவறும் ஓதை மன்னனை நோக்கிநம் வாலிய தேரை முன்னிவண் முய்க்குதி யென்று மொழிந்தான். 65 தீட்டிய வேற்படை செங்கை படைத்தோன் மாட்டுற நின்ற வயம்புனை மொய்ம்பன் கேட்டனன் எந்தை கெழீஇயின முன்போய்த் தாட்டுணை வீழ்ந்திது சாற்றுதல் உற்றான். 66 தந்நிகர் அற்ற சயம்புனை வீரர் முன்னுறு தானைகள் மொய்த்திட யான்போய் ஒன்னலன் ஆவியை உண்டிவண் மீள்வன் என்னை விடுக்குதி எந்தையை யென்றான். 67 ஆண்டகை மூரலொ டம்மொழி கேளா மாண்டிட வந்திடு மாற்றலன் வெம்போர் வேண்டினை நன்று விடுத்தனம் முன்நீ ஈண்டுள தானையொ டேகுதி யென்றான். 68 என்றலும் வீரன் எழுந்துகை கூப்பி வென்றிகொள் சாரதர் மெய்க்கிளை சூழ மன்றம கன்று மணிக்கடை நண்ணி ஒன்றுதன் மாளிகை யூடு புகுந்தான். 69 நேர்முக மான நிசாசரர் தம்மேல் கூர்முக வாளி குணிப்பில கோடி ஓர்முக மாயுல வாதுமிழ் நீரால் கார்முக மாயதொர் கார்முகங் கொண்டான். 70 போதுறழ் அங்குலி புட்டில்செ றித்தான் கோதைய தொன்று கொடுங்கை பிணித்தான் ஏதமில் சாலிகை யாக்கையின் இட்டான் மேதகு தூணி வெரிந்புடை யாத்தான். 71 மிக்குறு தெய்வ வியன்படை முற்றும் தொக்குற வேகொடு தும்பை தரித்துச் செக்கரின் விஞ்சிய செய்யதொர் வையம் புக்கனன் வல்லை புறங்கடை வந்தான். 72 எண்மர் இலக்கர்கள் இச்செயல் காணா வண்மை தருமபடை மாட்சிமை எய்தித் திண்மை யுறுந்தம தேர்களி லேறி அண்மினர் வீரனை ஆர்ப்பொடு சூழ்ந்தார். 73 மேனிக ழாயிர வௌ¢ளம தாகுஞ் சேனை யெழுந்து செறிந்து பிறங்கல் வானுயர் தாரு வயப்படை பற்றித் தானவர் கேசரி தன்புடை வந்த. 74 எறிந்தன பல்லியம் ஈண்டிய தானை செறிந்தன மாண்கொடி செற்றின பூழி அறந்தலை நின்றவன் அன்னது நோக்கிப் பறந்தலை ஒல்லை படர்ந்திட லுற்றான். 75 ஆரும்வி யப்புறும் ஆயிர வௌ¢ளம் பாரிடர் தானை படைக்கிறை யானோர் சாருறு கேளிர்கள் தன்னொடு செல்ல வீரன டைந்தனன் வெஞ்சமர் எல்லை. 76 ஆனதொர் ககலையில் ஆளரி வெய்யோன் சேனையும் வந்து செறிந்தது பூதர் தானையும் அங்கெதிர் சார்ந்தது கங்கை வானதி சேர்தரும் வாரிதி யேபோல். 77 கோடு புலம்பின கொக்கரை ஆர்த்த மோடுகொள் பேரி முழங்கின பீலிக் காடு தழங்கின கண்டை கலித்த ஆடுப தாகைகள் ஆர்த்தன அன்றே. 78 தேரொலி செய்தன திண்டிறல் மாவின் தாரொலி செய்தன தந்தியின் ஈட்டம் பேரொலி செய்த பெருங்கட லோடும் காரொலி செய்திடு காட்சிய தென்ன. 79 வேறு அந்த வேலையின் முருகவேள் தானையோர் அணுகி முந்து வெஞ்சமர் முயன்றனர் அதுகண்டு முனிந்து சுந்த ரந்திகழ் சிங்கமா முகன்படைத் தொல்லோர் தந்தி தேர்பரி யணியொடும் போ£¢செயச் சார்ந்தார். 80 தண்டம் ஓச்சினர் கணிச்சிகள் ஓச்சினர் தடக்கைப் பிண்டி பாலங்கள் வீசினர் தோமரம் பெய்தார் கொண்ட லாமெனத் தனித்னி வார்சிலை குனித்துத் துண்ட வெங்கணை துரந்தனர் தானவத் தொகையோர். 81 விரைகள் வீசிய மலர்த்தரு வீசிய விண்டோர் வரைகள் வீசிய தண்டெழு வீசிய மழுவின் நிரைகள் வீசிய நேமியின் நிரந்தபல் வளனும் திரைகள் வீசிய தாமெனப் பூதர்தஞ் சேனை. 82 வரங்கள் சிந்தினர் வன்மைகள் சிந்தினர் வயத்தாள் கரங்கள் சிந்தினர் புயமலை சிந்தினர் கலன்சேர் உரங்கள் சிந்தினர் மணிமுடி சிந்தினர் உருளுஞ் சிரங்கள் சிந்தினர் அவுணரும் பூதரிற் சிலரும். 83 வருதி நீயெனத் தனித்தனி இகல்செயும் மறவோர் கருதி யேயடுங் களத்தினில் அவருடல் காலும் குருதி யோடியே எங்கணும் பரத்தலில் கொடுந்தேர்ப் பரிதி யோடிய குடதிசை நிகர்த்தது படியே. 84 கொலைசெ றிந்திடும் பூதரும அவுணரும் கொடும்போர் நிலைசெ றிந்திடு களத்திடை நீடுசெந் நீரின் அலைசெ றிந்தவூன் செறிந்தன அடுகளே வரத்து மலைசெ றிந்தன செறிந்தன கழுகுடன் மண்ணை. 85 வேறு வெற்புறழ் தகுவர் சேனை வௌ¢ளமுங் கணத்து ளருந் தற்பமொ டெதிர்ந்திவ் வாறு சமர்புரிந் திட்ட எல்லை வற்புடன் அவுணன் தானை மள்ளர்வந் தடர்ப்ப மாய்ந்து முற்படு கின்ற தூசிப் பூதர்கள் முரிய லுற்றார். 86 செல்லுறழ் பகுவாய் வீரர் சிதைந்துழிப் பூதர் தம்முட் கல்லுறழ் மொய்ம்பிற் சிங்கன் கனன்றொரு தண்ட மேந்திப் பல்லுறு தலைகள் சிந்தப் படிமிசை வீட்டிப் பானாள் அல்லுறு மதிபோல் நேரும் அவுணரை யடாத்துச் சென்றான். 87 அங்கவன் செல்லும் வேலை அவுணரில் ஒருவன் நேமி சங்கொடு தரித்தோன் அன்னான் தசமுக னென்னும் பேரோன் எங்குநீ போதி நில்லென் றெதிருறச் சென்று வாகைச் செங்கைவா£¢ சிலையைக் கோட்டித் திருந்துநாண் ஒலிசெய் திட்டான்.88 வேறு விட்டனன் மழையென விசிகம் ஆங்கவை பட்டிடத் தண்டினாற் படியில் வீட்டியே அட்டுபூந் தாரினான் அடியொன் றாலவன் இட்டதோர் கவசமும் இறுத்து நீக்கவே. 89 கூற்றுறழ் தசமுகன் கொடியன் ஆவியை மாற்றுவன் இவணென வலிதின் ஓர்கதை ஆற்றலின் விடுத்தலும் அரியின் பேரினான் எற்றனன் மார்புதண் டிற்று வீழ்ந்ததே. 90 வீண்டது நோக்கியே வீர வீரனும் ஈண்டிவ னேகொலென் றெண்ணி யாமினிக் காண்டகும் வல்லையேற் காத்தி யீதெனா ஆண்டொரு கணிச்சியை அவுணன் ஓச்சினான். 91 மாலொடு கடவுளர் மறுகத தீயழற் காலொடு போந்திடுங் கடுவின் வெம்மைபோல் மேலுறு கணிச்சியை வீரன் செங்கையின் பாலுறு தண்டினாற் படியில் வீட்டினான். 92 நீக்கினன் கணிச்சியை நெடிய தோர்கதை போக்கினன் தன்னொடு போர்செய் கின்றவன் தாக்கணங் கமர்சிலை தன்னைச் சின்னமே ஆக்கினன் அவுணர்கள் அலக்கண் எய்தினார். 93 சீலமில் தசமுகன் செயிர்த்துக் காய்கனற் கோலம தாகிய குந்தம் ஒன்றினை ஆலம தெனவிட அரியின் பேரினான் மேலுற வருவதை விரைந்து நோக்கினான். 94 பூங்கழல் புனைகழற் பூத நாயகன் ஆங்கது காலைஓர் ஆழி மாப்படை ஓங்கிய பரிதிபோல் உருட்டி னானரோ பாங்குறு சாரதர் பலரும் போற்றவே. 95 விடுத்திடு கின்றதோர் வஅலை யாழிபோய்ப் படுத்தது தசமுகப் பதகன் தண்டமொன் றெடுத்தது வீசலும் இமைப்பில் எய்தியே அடற்புனை கழலினான் ஆகத் துற்றதே. 96 ஆகமேல் அடைதலும் அரியின் பேரினான் சோகமேல் கொண்டுசெஞ் சோரி சேர்தர மாகமேற் செம்புனல் மாரி கான்றி மேகமே யாமென விளங்கி னானரோ. 97 பரந்திழி குருதிநீர் பருப்ப தத்திடைப் பிரிந்திடு நதியெனப் பெருக ஓடியே அருந்திறல் சதமுக னாகத் தோர்கையால் விரைந்தனன் புடைத்தலும் வீழ்ந்து பொன்றினான். 98 ஐந்திரு தலையுடை அவுணன் மாய்தலுந் தந்திர அவுணர்தந் தானை யாவையும் கந்த தோளுடைக் கணங்கள் மேற்செலா முந்துறு பேரமர் முயல்வ தாயினார். 99 அவ்வழி இலக்கரில் அநகன் என்பவன் மைவழி சிந்தையன் மடிதத வாயினன் கைவழி வில்லினன் கடியன் சேனையை எவ்வழி போதிரென் றெதிர்ந்து தாக்கினான். 100 வெலற்கரும் வில்லுமிழ் வெங்கண் வாளியால் அலைக்குந ராகியே அடல்செய் மள்ளர்தந் தலைக்குவை சிந்தியே தரையில் வீட்டியே கலக்கினன் திரைக்கடல் கடைந்த மாலென. 101 ஆடியல் தானையான் அநகன் என்பவன் சாடினன் திரிதலுந் தகுவர் யாவரும் ஓடினர் அன்னதை உருத்து நோக்கினான் பீடுறு துன்முகன் என்னும் பேரினான். 102 வேறு தன்முன் ஓடிய அவுணரை நோக்கிநீர் தளரேல் மின்மி னிக்குலங் கதிரினை வெல்லுமோ வெகுளின் என்முன் நிற்பரோ பூதர்கள் செருத்தொழில் இழந்தார் நின்மின் நின்மினென் றுரைக்கவும் இறையநின் றிலரால். 103 தானை பட்டன நோக்கினன் துன்முகன் தழல்மேல் ஆனெய் பட்டென முனிந்தனன் பூதர்கள் அந்தோ சேனை பட்டதென் றலமரக் குனித்தனன் சிலையைச் சோனை பட்டன வாமென வடிக்ணை சொரிந்தான். 104 சொரிந்த காலையிற் பூதரும் பேரமர் தொடங்கி விரிந்த வெற்பொடு தருக்களும் படைகளும் விடுப்ப எரிந்து போயின சிற்சில இற்றவுஞ் சிலவால் நெரிந்து போயின சிற்சில எதிரெதிர் நெருக்க. 105 ஈறு செய்தில கணைமழை இவரொடும் யானே மாறு கொள்வதுந் தனிமையில் அரிதென வலியோன் ஊறு சேர்தரு மாயையால் ஒவ்வொர்பூ தர்க்கும் நூறு நூறுருக் கொண்டுதாக் குற்றனன் நொடிப்பில். 106 ஆய காலையில் துன்முகன் வடிவமும் அடருந் தீயென னக்கிளா¢ சாரத ரொடுசெருச் செய்யும் ஏய கொற்றமும் நோக்கினன் விம்மினன் வெகுண்டான் மாயை கொல்லென உன்னினன் வாகையங் கதிரோன். 107 மாற்று கின்றதெப் படைக்கல மோவென மதியாத் தேற்று கின்றதோர் போதகப் பெரும்படை செலுத்தக் காற்றின் முன்னுறு பூளையின் உருவெலாங் கரப்பக் கூற்ற மன்னதோர் துன்முகன் ஒருவனாய்க் கொதித்தான். 108 கொதித்த துன்முகன் தன்பெருஞ் சிலையினைக் கோட்டி நுதித்த னிக்கணை ஆயிரம் ஒருதொடை நூக்க மதித்து வீரன்றன் ஒருபெருஞ் சிலையினை வாங்கிக் கதித்த நோன்கணை ஆயிரஞ் சிதறினன் கடிதில். 109 ஆயி ரஞ்சரத் தாலவன் விட்டகோல் அறுத்துத் தீய வன்னிச் சிலையை யேழ் வாளியாற் சிந்தி மேய சாலிகை தன்னையோர் பகழயால் வீட்டிக் காயம் எங்கணும் அழுத்தினன் அளவைதீர் கணைகள். 110 வேறு அழுந்திடு வடிக்கணை யாகம் போழ்தலும் எழுந்திடு குருதிநீர் இரைத்துச் சென்றிடக் கொழுந்தழல் புரைவதோர் கொடிய துன்முகன் விழுந்தனன் மயங்கினன் விளிந்து ளானென. 111 ஊறிய குருதியன் உறுகண் எய்துவான் தேறினன் ஒல்லையிற் செருவில் நேர்துமேல் ஈறினி வந்திடும் இரிந்திட் டுய்வதே ஆறென உன்னினன் அமருக் கஞ்சுவான். 112 சிந்தையின் வழபடல் செய்து மாயையின் மந்திரம் ஒன்றினை மரப்பின் உன்னுறா எந்திரத் தேரினும் எழுந்து துன்முகன் அந்தரத் தாற்றினால் அருவில் போயினான். 113 ஆயின காலையில் அடல்வெம் பூதரில் தீயினை முருக்குறுஞ் சீற்றத் தோர்சிலர் மாயையின் வலியினன் வஞ்சன் வல்லையிற் போயினன் பற்றுதும் போதுவீர் என்றார். 114 ஆங்கது கேட்டிடும் ஆடல் வெய்யவன் ஈங்கிது தவிருதிர் இகலுக் கஞ்சியே நீங்கினன் ஒருவனை நெருக்கி ஆருயிர் வாங்குதல் புகழதோ வலியின் பாலதோ. 115 ஓடினர் தம்மையும் உற்றுத் தாள்மலர் சூடினர் தம்மையும் தொழுத கையராய் வாடினர் தம்மையும் வலியி லோரையுஞ் சாடினர் அல்லரோ நவைக்கட் டங்குவார். 116 வீரரை அல்லரை வெகுள லீரெனப் பேரடல் வெய்யவன் பேச அன்னது காரிய மேயெனக் கருத்தில் உன்னியே சாரதர் தொடர்ந்திடுந் தன்மை நீங்கினார். 117 வேறு அந்நேர் காணா ஆளரி மாமுக அடல்வெய்யோன் இன்னே நந்தந் தானைகள் எல்லாம் இரிவாகும் பின்னே நிற்ற லாவதெ னென்னாப் பெயர்குற்றே முன்னே சென்றான் பூதரை நோக்கி முனிகின்றான். 118 நந்தா ஆற்றற் சிங்கமு கத்தோன் அவன்நம்முன் வந்தான் யாமே மாற்றுதும் அன்னான் வலியென்னாக் கொந்தார் தாருச் சூழலும் வெற்புங் கொண்டேகி முந்தா நின்ற பூதர்கள் வெம்போர் முயல்கின்றார். 119 மட்டார் தொங்கற் சிங்கமு கன்மேல் மதிதோய்வான் எட்டா நின்ற வெற்புள யாவும் எறிகின்றார் விட்டார் தாருச் சூழல் கணிச்சி வீசுற்றார் தொட்டார் சூலந் தண்டெழு நாஞ்சில் சொரிகின்றார். 120 சொரியுங் காலைத் தீயெழ நோக்கிச் சுடர்வேலோன் எரியுங் காலுங் கால வுயிர்ப்ப எதிர்செல்லாக் கரியுந் தீயும் பூழிய தாகுங் ககனத்தே திரியும் மீளும் மப்படை செய்யுஞ் செயலீதால். 121 அன்னோ அன்னோ நம்படை எல்லாம் அடல்வீரன் முன்னோ செல்லா தீய வுயிர்ப்பின் முடிவாமால் பின்னே செய்வ தொன்றிலை யாம்பே ரமர்செய்வ தென்னோ என்னோ யாரினு மேலான இவனென்றா£¢. 122 என்றார் பூதர் சீற்றம் விளைத்தார் யாரும்போய்க் குன்றாய் அங்க ணுற்றன யாவுங் குழுவுற்ற வன்றா ருக்க ளானவும் மாண்கைக் கொடுதொட்டுச் சென்றார் ஆர்த்தார் சீயமு கன்மேற் செலவுய்த்தார். 123 வேறு கைக்கொடு சாரத கணங்கள் ஆர்த்துடன் உய்க்குறு வரையெலாம் ஒருங்கு சென்றிடாத் திக்குள வரைப்பெலாஞ் செறிந்து ஞாயிறு மெய்க்கதிர் வழங்குறும் விசும்பு தூர்த்தவே. 124 கல்லகத் தொகுதிகள் ககனந் தூர்த்துழி எல்லுடைச் செங்கதிர் இரவி மாய்ந்திட ஒல்லெனத் திமிரம்வந் துறலும் நோக்கியே அல்லெனக் குடம்பையுள் அடைவ புள்ளேலாம். 125 வெற்பின நிரத்தலு மறைய வெய்யவன் எற்படு முன்னரே இரவி ஓடினான் அற்புதம் அற்புதம் அடைந்த தம்புயன் கற்பமென் றறிஞருங் கலக்கம் எய்தினார். 126 போற்றலன் தன்மிசைப் பூதர் தூண்டிய மாற்றரும் பதலைகள் மலிந்து வான்படா¢ ஆற்றினை அடைத்தலும் அஞ்சி நின்றனன் காற்றினும் விரைந்துசெல் கதிரியின் பண்ணவன். 127 இன்று றவுணரால் இடரு ழந்தனம் அன்றியும் பூதரீண் டடுககல் வீசினார் நின்றிடின் வருந்துதும் நிகழ்ச்சி தேரலாஞ் சென்றிடல் துணிவெனத் தேவர் ஓடினார். 128 செருவலி வீரர்கள் செலுத்தச் சேண்படா¢ பருவரை யிடையிடை பயின்று சுற்றிய கருமுகில் உண்டநீர் கான்று தம்வயின் உருமிடி எங்கணும் உகுத்து வீழ்ந்தவே. 129 வெதிர்படு சிலம்பினும் வழுக்கி வீழ்ந்திடும் அதிர்குரல் அரியினம்அண்டச் செற்றின எதிருறு தகுவனை இனமென் றுன்னியே முதிர்தரு காதலான் முன்னுற் றாலென. 130 மைம்மலை யிடைவிராய் வதிந்த மோட்டுடைக் கைம்மலை அரற்றியே கவிழ்வ காசிபன் செம்மலை அரியென நோக்கித் தேம்பியே விம்மலை யெய்தியே வீழவ தென்னவே. 131 பொற்றையின் மரங்களிற் பொதிந்த கேசரம் வெற்றிகொள் அரிமுகன் தொடையின் மேவின விற்றவர் தம்மை விட்டேதி லார்தமைப் பற்றொடு கலந்திடு பரத்தை மாதர்போல். 132 எறிந்திடு வரைகள்தந் தம்மில் எற்றிடச் செறிந்திடு தீங்கனல் சென்ற திக்கெலாம் பொறிந்தன புகைந்தன பொரித லுற்றன மறிந்தன உலந்தன மன்னு யிர்த்தொகை. 133 ஆயின பல்லியல் அடையப் பூதர்கள் ஏயின குன்றமுந் தருவும் ஏகியே சீயமா முகமுடைச் செல்வற் சேர்ந்தனன் தூயவன் கயிலைச் சூழ்ந்த கொண்டல்போல். 134 செடித்தலை எயினரில் திகழும் ஆயிரம் முடித்தலை யான்மிசைப் பட்ட மொய்வரை பொடித்தில இற்றில பூழி யாய்த்தில படித்தலம் வீழ்ந்தன நொய்ய பான்மையால். 135 வேறு துன்னற் பட்ட குன்றெவை யுஞ்சூர் துணையானோன் மின்னற் பட்ட மெய்யிடை பட்டே வெற்பின்கட் பன்னற் பட்ட தாமென வீழ்கின் றதுபாரா இன்னற் பட்டார் பூதர்கள் வானோர் ஏங்குற்றார். 136 சீலம் புக்க பா£¤டர் வெம்போர் செயல்கா ணூஉக் கோலம் புக்க தேரிடை நின்றான் குப்புற்று ஞாலம் புக்கான் பூதர்கள் தம்மை நலிதற்கோர் ஆலம் புக்கா லென்ன நடந்தான் அடல்செய்வான். 137 பார்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மைப் பகைவிண்ணோ£¢ ஊர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மை உயர்பானுத் தேர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மைத் திரைசேர்முந் நீர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மை நெடிதோச்சும். 138 பற்றா நிற்குஞ் சிலவரை மூரற் பகுவாயிற் குற்றா நிற்குஞ் சிலவரை வாரிக் குழுவோடுஞ் சுற்றா நிற்குஞ் சிலவரை அண்டச் சுவரின்கண் எற்றா நிற்குஞ் சிலவரை அள்ளி எறிகிற்கும். 139 புண்டரி கன்கட் சிலவரை வீசும் பொருசெங்கைத் தண்டத ரன்கட் சிலவரை வீசுஞ் சதவேள்வி அண்டம தன்கட் சலவரை வீசும் அகிலஞ்சூழ் எண்டிசை யின்கட் சிலவரை வீசும் இகல்பேசும். 140 மாலெரி வைப்பிற் பலர்தமை வீசும் வானத்தில் காலெறி வைப்பிற் பலர்தமை வீசும் கரைதீர்ந்த வேலைகள் முற்றும் பலர்தமை வீசும் வியன்மிக்க ஞாலம் அனைத்தும் பலர்தமை வீசும் நனிதூர்க்கும். 141 சிங்கங் கொண்ட மாமுகன் வீசுஞ் செறிவாலே துங்கங் கொண்ட பார்முதல் விண்ணின் துணையுந்தான் எங்கும் பூத மாயின அம்ம இதுகொண்டோ அங்கங் கெல்லாம் பூதம தென்றார் அறிவுள்ளார். 142 மிதித்துக் கொல்லுஞ் சிற்சிலர் தம்மை மிசையுந்திப் பதத்திற் கொல்லுஞ் சிற்சிலர் தம்மைப் படிவத்தைச் சிதைத்துக் கொல்லுஞ் சிற்சிலர் தம்மைச் செல்லென்ன உதைத்துக் கொல்லுஞ் சிற்சிலா¢ தம்மை உலவுற்றே. 143 விள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி விரல்மேலால் தள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி தாமுற்றக் கிள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி கிளையோடு மள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி அடுகிற்கும். 144 தாக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மைத் தடிகின்ற ஊக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை யுருமொத்த வாக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை மருளுற்ற நோக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை நொடிதன்னில். 145 வாரா நிற்கும் பாரிட ராசியை வாரிப்பின் சேரா நிற்கும் வாய்தொறும் ஈண்டச் சேர்த்திட்டே ஆரா நிற்கும் ஆர்ந்தபி னாக அகல்மோடடைத் தூரா நிற்குந் தூர்த்தபின் ஆடல் தொழில்செய்யும். 146 எழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை எரிகூர்வாய் மழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை வயநாஞ்சில் கொழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை கூர்சூலக் கழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மைக் கடிதோடி. 147 கரத்திற் கொல்லுஞ் சிலவரை நோன்கார் முகமுய்க்குஞ் சரத்திற் கொல்லுஞ் சிலவரை அம்பொற் றண்டத்தின் உரத்திற் கொல்லுஞ் சிலவரை அங்கண் ஒசிக்கின்ற மரத்திற் கொல்லுஞ் சிலவரை மண்மீ தினில்வீட்டும். 148 தேர்மே லானோ விண்ணுல கானோ திசையானோ பார்மே லானோ வார்கட லானோ பதுமத்தோன் ஊர்மே லானோ மேருவி னானோ உயர்பூதர் போர்மே லானோ தீயவன் என்றார் புலவோ£¢கள். 149 அற்றார் தாள்கள் கைகள் இழந்தார் அடுதிண்டோன் இற்றார் சென்னி சிந்தினா¢ துண்ட மிலரானார் பெற்றார் மார்பம் விண்டனர் வீழ்ந்து புரள்கின்றார் செற்றார் தம்மை அட்டிடு பூதத் திறல்வீரர். 150 சொரியா நின்ற சோரியர் ஆற்றத் துயர்மேலார் மரியா நின்றார் எண்ணில ரால்மற் றவர்தம்முட் பிரியா நின்ற சென்னியர் பல்லோர் பெயர்வெய்தித் திரியா நின்றா¢ ஆடுறு கின்ற செயல்கொண்டார். 151 கருவந் தெய்தும் ஆருயிர் முற்றுங் கவிழ்கின்ற பருவந் தன்னில் தீயவன் உண்ணும் படியேபோற் செருவந் துற்ற சீயமு கத்துத் திறல்மேலோன் ஒருவன் தானே நின்றடு கின்றான் உலவாதான். 152 அந்நீ ராகிப் பூதரை வெய்யோன் அடுகாலைச் செந்நீர் நீத்தம் ஆயிடை தோறுஞ் சென்றீண்டித் தொன்னீர் வேலை புக்குவர் நீக்கித் துவராக்கி முந்நீ ரென்னுந் தொன்மையை வேறாய் முடிவித்த. 153 ஆடா நின்றான் இத்திறம் வெய்யோன் அளவில்லா£¢ வீடா நின்றார் கண்டனர் வெம்பூ தர்க்கெல்லாங் கேடா நின்றான் இங்கிவ னென்னாக் கிளையோடும் ஓடா நின்றா£¢ வானவ ரெல்லாம் உலைவுற்றார். 154 துன்னா நின்ற தொன்மரம் வெற்பின் தொகைவீசி முன்னா குற்ற பூதர்கள் யாரும் முடிகாகக் கொன்னார் சிங்க மாமுகன் அட்டே குலவுற்று மின்னார் செம்பொன் மேருவெ னுந்தேர் மிசைபுக்கான். 155 வேறு அவ்வேலை யன்னான் அமர்செய்விளை யாடல் பாரா மைவேலை போல்வான் அழற்கண்ணன் மனங்க னன்று செவ்வே யெதிர்புக் கரிமாமுகற் சீறி வெய்யோய் இவ்வேலை உன்னை முடிப்பன்இகல் முற்றி என்றான். 156 என்றங்குரை செய்திடு பூதனை ஏந்தல் நோக்கி ஒன்றுஞ்சிறி துன்னலை அச்சமும் முற்றி லாதாய் நின்றிங்கிது கூறினை என்னின் நினக்கு நேரார் நன்றுன்வலி என்றுந கைத்தனன் நாகர் அஞ்ச. 157 அன்னான்நகை செய்தது காண்டலும் ஆழி நாப்பட் கொன்னார்தழ லென்னவெ குண்டனன் கூளி வேந்தன் நின்னாடலை நீக்குவன் காணுதி நீயு மென்றோர் மின்னார்கழு முட்படை ஆங்கவன் மீது விட்டான். 158 கூற்றானவன் ஏவவ ரும்படைக் கொள்கை நோக்கி மாற்றானவ னோர்படை யும்வழங் காது நின்றான் தோற்றானென வானவர் ஆர்த்தனர் சூல மார்பின் ஏற்றான்வரை மேற்படு கண்டகத் திற்ற தன்றே. 159 உறுகின்றசூ லப்படை ஊற்றமும் ஓங்கல் மார்பத் திறுகின்றதும் அங்கவன நின்றதும் யாவும் நோக்கிப் பெறுகின் றவரில் இவன்பெற்றது பேற தென்னா மறுகின்ற நெஞ்சன் ஒருதண்டினை வல்லை உய்த்தான். 160 வேறு உய்த்தலும் அனையதண் டுருமுற் றாலென அத்தலை அரிமுகத் தவுணன் சாரதி மெய்த்தலை கோடலும் வெகுண்டு நோக்கியே கைத்தல மிருந்ததோர் கதையை ஏவினான். 161 மாவலி சேர்தரு மடங்கல் மாமுகன் ஏவிய வெங்கதை இமைப்பிற் பூதர்கள் காவலன் அகலமேற் கலந்து தாக்கிற்றால் ஓவென அனையனும் உளம்வ ருந்தவே. 162 செயிரறத் திருத்திய செம்பொற் குன்றின்மேல் வயிரமெய்ப் படையது வந்தற் றாதலும் அயிருறப் புனைகலன் ஆகங் கீண்டிட உயிரினுக் கவ்வழி யுலைவு மிக்கதே. 163 தாக்கிய வேலையில் தழலின் நாட்டத்தான் மூக்கினின் மார்பினின் முழங்கு வாயினிற் தேக்கிய குருதிநீர் சிந்து கின்றது மேக்குயர் கனல்மழை விரித்த தாரைபோல். 164 மறந்தனன் தொல்லுணர் வெனினும் வன்றிறல் துறந்திலன் வெவ்வழல் சொரியுங் கண்ணினான் சிறந்திடும் ஊசலில் திரிந்த தன்னுயிர் இறந்திலன் அவற்கொரு கூற்றம் இன்மையால். 165 ஆரழன் முகத்தவன் அயர்வுற் றவ்வழிச் சோர்வொடு நிற்றலுஞ் சூரன் பின்வரும் வீரம துடையவன் வேறொர் பாகனைத் தேரிடை நிறுவினன் சேறல் மேயினான். 166 வேறு மூண்டமர் இயற்றச் சீய முகத்தவன் வரலும் நோக்கித் தூண்டிய வெகுளி மேலோன் சுமாலியென் றுரைக்குந் தொல்லோன் நீண்டிடு மேரு வென்ன நிவந்ததோர் அடுக்கல் தன்னைக் கீண்டரி முகன்மேற் செல்லக் கிளர்ந்தனன் வீசி ஆர்த்தான். 167 மற்றவன் விடுத்த குன்றை வாளரி முகத்து வீரன் பற்றினன் ஒருதன் கையால் பந்தென மீட்டும் உந்தப் பொற்றட மார்பில் தாக்கப் புலம்பியே சுமாலி என்பான் செற்றமும் தானு மாகச் செயலற்று நிலத்தன் ஆனான். 168 நிலந்தனில் சுமாலி வீ£ நெடுஞ்சினம் திருகி அங்கைத் தலந்தனில் கரையொன் றேந்தித் தண்டிபோய் அவுணன் தோ¤ல் கலந்தவன் உரத்தில் செல்லப் புடைத்தலும் காமந் தன்னில் புலந்தவன் தனக்குக் காட்டும் உணர்வெனப் பொடித்த தன்றே. 169 பொடித்தலும் வயிரத் தண்டம் பூதரின் முதல்வன் பொங்கிக் கொடித்தடந் தேர்மேல் நின்ற கோளரி முகத்தன் தன்மேல் இடித்தெனக் கையால் எற்ற எரியெழ நகைத்துத் தன்னோர் அடித்தலங் கொண்டு தள்ளி அமரர்கள் வெருவ ஆர்த்தான். 170 தாளினால் உந்தி விட்ட தண்டிசேண் எழுந்து மெல்ல மீளுவான் அடுவ னென்னும் வெகுளியான் உயிர்ப்பு வீங்கி யாளிசேர் வதனத் தண்ணல் ஆடக வயிரக் குன்றத் தோளின்மேல் குப்புற் றேதன் னடிகொடு துகைக்கல் உற்றான். 171 ஆடியல் தானை மன்னன் ஆயிரத் திரட்டி தோளும் ஓடினன் துகைத்துத் தாளும் ஓய்ந்தனன் அவற்றை நோக்கி நாடினன் திரியா நின்றான் நாகநீள் குடுமிக் குன்றில் கோடுயர் பொதும்பர் தன்னிற் பாய்ந்திடும் குரங்கு போல்வான். 172 குரங்குளைக் குடுமிச் சூட்டுக் கோளரி முகத்து வெய்யோன் கரங்களிற் பாயும் அங்கட் கலந்திடு படையிற் பாயுஞ் சிரங்களிற் பாயும் மீளச செவிதொறும் பாயும் பூந்தண் மரங்களிற் பாய்ந்து செல்லும் மணிச்சிறை வண்டும் போன்றான். 173 செறிந்திடு கரமுந் தோளுஞ் சென்னியும் பூதன் செல்வ தறிந்திலன் சிறியன் போலும் அரிமுகத் தவுணன் நம்மேல் எறிந்துல வுற்றுச் சூழும் ஈகொலென் றொருதன் கையால் சொறிந்தனன் சிறிது பின்னர்த் தண்டியைத் துடைத்து விட்டான். 174 ஒருதனிக் கரத்தால் தீயோன் உருட்டினன் துடைப்பத் தண்டி பெரிதுநொந் தாற்றல் போகிப் பின்றினன் பெயர்ந்து போனான் தெரிதரு பூதர் அஞ்சித் சிந்திச் செயலொன் றில்லார் அரிதுசெய் தவமே அல்லால் ஆற்றல்பெற் றிடுவ துண்டோ. 175 பூதர்கள் இரிவு நோக்கிப் பொருதிறல் இலக்கத் தெட்டு மேதகு வீரர் யாரும் வெய்யதேர் கடாவிச் சென்று தீதறு சிலைகள் வாங்கிச் சீயமா முகவற் சுற்றித் தாதவிழ் மலர்பெய் தென்னச் சரமழை பொழிதல் உற்றார். 176 பொழிந்திடு பகழி யெல்லாம் புகுந்திடு சுவடின் நாகி அழிந்ததும் இன்றி முன்போல் அவன்புடை வீழ நோக்கி ஒழிந்ததெம் மாற்ற லென்னா உட்கினர் ஒருதன் தேரின் இழிந்தனன் அவுணர் கோமான் இடிபடத தெழித்துச் சென்றான். 177 எடுத்தனன் சிலவர் தேரை எறிந்தனன் ஒன்றொ டொன்றின் அடித்தனன் சிலவர் தேரை அள்ளினன் அங்கை தன்னால் ஒடித்தனன் சிலவர் தேரை உரைத்தனன் சிலவர் தேரைப் பொடித்தனன் சிலவர் தேரைப் புதைத்தனன் சிலவர் தேரை. 178 இத்திற மடங்கல் வீரன் அடுதலும் இலக்கத் தெண்மர் தத்தம துயிரே தாங்கித் தனுவொடு படைகள் மானம் மெய்த்திறல் சிந்திச் சாய்ந்தார் மேவலன் தேர்மேற் புக்கான் அத்தலை நின்ற வீர வாகுமற் றதனைக் கண்டான். 179 ஆளரி அனைய வீரன் அதுகண்டு பூதர் தம்முட் கோளரி முகத்து வெய்யோன் கொன்றதோர் பாதி உண்டால் தாளுடை வில்லி னாருஞ் சமரிடத் தழிந்தார் இந்த நாளினின் முடியும் போலும் நம்பெரும் படையு மென்றான். 180 அடல்பெறு புயத்து வள்ளல் ஆடக வரைபோ லுள்ள கோடுமர மான தொன்றைக் கோட்டினன் சினமேற் கொண்டான் விடமுறு தறுகட் கேது விரைந்தொரு பாங்கா¢ புக்கு நடுவெலாங் கவரத் தோன்று நாகிளங் கதிரே போல. 181 வாங்கிய சிலையிற் பூட்டி வடிக்கணை அநந்த கோடி தூங்கலின் மழைகான் றென்ன உலப்புறான் சொரிந்து நிற்ப ஆங்கெதிர் அடர்த்துப் போர்செய் அவுணர்தந் தலைகள் பாறத் தாங்கிய படைகள் சிந்தித் தரைமிசைத் துணிந்து வீழ்ந்தார். 182 பரித்தொகை முழுதும் பட்ட பாழியந் தோ¢கள் பட்ட ஒருத்தலும் பிடியும் பட்ட உலப்பிலா அவுணர் பட்டார் பெருத்தன பிணத்தின் குன்றம் பிறங்கின பேய்கள் மொய்த்த திரைத்தெழு சோரி நீத்தந் தெண்டிரை மடுத்த தம்மா. 183 தேரெனப் பட்ட வீரர் திறமெனப் பட்ட மாவின் பேரெனப் பட்ட யானைப் பெருக்கெனப் பட்ட தம்முட் பேரிடைப் படாத எல்லாம் பொருதிரைக் குருதி வாரி வீரனுக் குதவி யாக வேலையுள் உய்த்த தன்றே. 184 பேரியின் ஒலியும் தீய அவுணர்கள் பிடித்த வில்லின் நாரியின் ஒலியும் சூழும் நாற்படை ஒலியும் மாண்ட காரியின் ஒலியும் மோட்டுக் கணங்களின் ஒலியுஞ் செந்நீ£¢ வாரியின் ஒலியு மாகி அடுகளம் மலிந்த அன்றே. 185 மலைகளை அறுக்கும் வேலை வாள்களை அறுக்குஞ் செங்கைச் சிலைகளை அறுக்கும் வெய்யோர் திண்டிறல் கொண்ட தோளின் நிலைகளை அறுக்கும் மார்பின் நிரைகளை அறுக்குங் கோடி தலைகளை அறுக்கும் அம்மா இளையவன் சரம தொன்றே. 186 காழுறும் அவுணர் சென்னி கரதல நெடுந்தோள் மார்பகம் வாழிய முருகன் தூதன் வாளிகள் வௌவி ஏகி ஏழுள கடலும் நீங்கி எண்டிசைக் கிரிகள் தாவி ஆழியங் கிரிபோழந் தப்பால் அண்டமும் பிளந்து செல்லும். 187 கரண்டம தான செந்நீர் ஆற்றிடைக் கவிழ்ந்து மூழ்கித் திரண்டவூன் வௌவி மீண்டு சிறகரை உதறு கின்ற முரண்டகு வீரர் சென்னி மூளைபுக் களைந்து வாரிக் குரண்டமீ தென்ன லான கருநிறக் கொடிக ளெல்லாம். 188 இவ்வஆஆ அவுணர் தானை இறந்திட வீர வாகு அவ்வயின் நின்று சென்றாங் கடுதலும் அதனைக் கண்டார் தெவ்வரை முருக்கும் வைவேற் சீயமா முகத்தன் மைந்தர் ஐவரை வெல்லும் ஆற்றல் ஐம்பதிற் றிருவா¢ என்பார். 189 சினத்தனர் இதழைப் பல்லால் தின்றனர் நம்முன் வெம்போர் வினைத்தொழில் இயற்று வானை வெய்தென அடுது மென்னா இனத்தொடு தேர்க டாவி ஏகியே வீரன் தன்மேல் தனித்தனி வார்விற் கோட்டிச் சரமழை சிதற லுற்றார். 190 நூற்றுவர் ஒருங்கு நேர்ந்து நோன்றலைச் சிலைகள் வாங்கி மேற்றிகழ் முகில்கான் றென்ன வீசிய விசிகந் தன்னை ஆற்றல்சேர் வீரன் காணா அயிற்கணை அநந்த கோடி காற்றெனத் துரந்து மாற்றிக் கடவுளர் புகழ ஆர்த்தான். 191 தொலைவுறும் அவுணன் மைந்தா¢ துண்ணெனக் கனன்று பின்னுங் கொலையுடை நெடுங்கூர் வாளி கோடிகோ டிகள்நின் றுய்ப்ப வலியுடை வீர வாகு மற்றவை மாற்றி அன்னோர் சிலையொடு தேர்கள் தம்மைச் செஞ்சரந் தூண்டி வீழ்த்தான். 192 தேரொடு சிலைகள் மாயச் சீயமா முகத்தன் மைந்தர் வீரனை எதிர்ந்து வில்லால் வென்றிடல் அரிது போலுங் கூருடை நுதிவாட் போரிற் கொல்லுதும் இவனை என்னாப் பாரிடை வந்தோர் சூழ்ச்சி வகையினாற் பகர்த லுற்றார். 193 காட்புடைச் சிலையின் விஞ்சை கற்றதே அன்றி எம்போல் வாட்படை பயின்றி லாய்கொல் வல்லையேல் அப்போர் செய்யச் சேட்படை யன்றி எம்முன் சேர்தியால் வீர என்னாத் தோட்புடை கொட்டி ஆர்த்தார் கூற்றனுந் துளக்கம் எய்த. 194 வன்றிறல் அவுணன் மைந்தர் உரையினை வள்ளல் கேளா நன்றிது புகன்றீர் என்னா நகைசெய்து நாதன் தந்த மின்றிகழ் சுடர்வாள் கொண்டு விரைந்துகீழ்த் தலத்திற் பாய்ந்து சென்றனன் அதனை நோக்கித் தேவரும் இடுக்கண் செய்தார். 195 வார்ந்திடு கழற்கால் வீரன் வாள்கொடு வரலும் நோக்கித் தீர்ந்தனன் ஆவி இன்னே செகுக்கலாம் இவனை யென்னாக் கூர்ந்திடு நாந்த கங்கள் தனித்தனி கொண்டு சென்று நேர்ந்தனர் வளைந்து கொண்டார் மதியைச்சூழ் நிசியை ஒப்பார். 196 வளைந்தனர் வீரன் தோளின் மார்பினிற் கரத்தின் மொய்ம்பிற் களந்தனிற் சென்னி தன்னிற் கருதினர் இலக்கம் நாடிக் கிளர்ந்திடு நாந்த கத்தாற் கிட்டினர் எறித லோடும் உளந்தளர் வில்லோன் மேனிக் குற்றில சிறிதும் ஊறு. 197 ஊறிலாத் தன்மை நோக்கி உவனையாம் பற்றி மெல்லக் கோறலே கரும மென்னாக் குழுவொடும் அவனைப் புல்லச் சீறினான் தன்வா ளோச்சிச் சிறிதுமெய் தெரியா வண்ணம் நூறினான் கொல்லோ என்ன நூற்றுவா¢ தமையும் அட்டான். 198 அட்டிடு கின்ற வீரன் அமரர்கள் வழுத்த மீண்டு தட்டுடை நெடுந்தேர் புக்கான் தன்மனக் கினிய மைந்தர் பட்டிடு தன்மை நோக்கிப் பாடுறும் அவுணர் கோமான் மட்டறு துயரின் மூழ்கி மானத்தால் இரக்க முற்றான். 199 கோளுண்ட அரிமான் துப்பில் குமரரை ஒருவன் கொண்ட வாளுண்ட தென்று நெஞ்சம் வசையுண்டு வருந்தல் மன்னோ தாளுண்டு பரித்து நிற்கத் தலைகளுண் டெண்ணி லாத தோளுண்டு கரங்க ளுண்டு சுமக்கலாம் போலு மன்றே. 200 என்னுடை மைந்தர் தம்மை யாவருங் காண ஈண்டென் முன்னுற ஒருவ னோதான் முடித்துயிர் கொண்டு நிற்பான் பின்னினி இதற்கு மேலும் பெற்றிடும் வசையொன் றுண்டோ ஒன்னலர் தங்கட் கெல்லாம் ஒருநகை விளைத்தேன் அன்றோ. 201 பொன்றினர் தம்மை உன்னிப் பொருமியே புன்கண் எய்தி நின்றிடின் ஆவ துண்டோ நேரலர் தொகுதி எல்லாங் கொண்றொரு கணத்தின் முன்னர்க் குழுவொடும் வாரி வாரித் தின்றுதேக் கிட்டால் அன்றித் தீருமோ எனது சீற்றம். 202 மேவல ராகும் இன்னோர் குழுவினை விரைவின் அட்டுத் தாவறு சுடர்வேல் கொண்ட பாலகன் தனையும் வென்று தேவர்கள் எனப்பேர் பெற்றோர் யாரையும் இன்றே செற்று மூவுல கினையும் யானே முடிக்குவன் விரைவின் என்றான். 203 என்னஇத் திறங்கள் பன்னி எரியுமெய் விதிர்ப்பச் சீறித் தன்னுறு தடந்தேர் உய்க்குஞ் சாரதி தன்னை நோக்கிக் கொன்னுனை அயில்வாட் செங்கைக் குமரர்தங் குழுவைக் கொன்றான் முன்றுக் கடவு கென்ன நன்றிது முதல்வ என்றான். 204 பாகுநூல் உணர்ந்து வல்லோன் பரியினை எழுப்பிப் பண்ணி மாகநீ டடந்தேர் தூண்ட அரிமுகன் வருத லோடும் ஏகநா யகனாம் மூர்த்தி ஏவலான் அதனை நோக்கி ஓகையால் தனது மான்தேர் அதனொடும் ஒல்லை நேர்ந்தான். 205 நோ¢ந்திடு கின்ற காலை நிரைபடு விழிக டோறுஞ் சார்ந்தழல் சிதற நோக்கித் தளைபடு தறுகட் சீயம் ஆர்ந்திடு பகைகண் டென்ன ஆற்றவுஞ் சினமீக் கொண்டு சேர்ந்திடு வானை நோக்கிச் சிங்கமா முகத்தன் சொல்வான். 206 ஆதிதந் தருளும் மைந்தன் அறுமுகன் அவன்நீ அல்லை ஏதிலா இலக்க ரென்றே இசைத்திடு வோர்கள் தம்முள் நாதனோ எண்மர் தம்முள் ஒருவனோ நம்மூர் வந்த தூதனோ இனையர் தம்முள் யாரைநீ சொல்லு கென்றான். 207 அல்லுறழ் கண்டன் தந்த அறுமுகற் கடிய னானேன் தொல்லைநும் மூதூர் அட்டுத் தூதனு மாகி மீண்டேன் எல்லையின் நுமரை யெல்லாம் ஈண்டொரு கணத்தின் அட்டு வெல்லுவ தமைந்து நின்றேன் வீரவா கென்போ¢ என்றார். 208 வேறு திண்டிறற் சேவகன் செப்பும் இம்மொழி விண்டிடு செவிதொறும் விடம்பெய் தாலெனக் கொண்டனன் வெகுண்டொரு கூற்றங் கூறினான் உண்டிடும் அசனின் உமிழ்ந்திட் டாலென. 209 உறுபடை உழப்பினை உணர்கு றாததோர் சிறுவரை வெல்வதுந் திருந்து மாநகர் உரைதரும் எளியரை உடன்று கொல்வதும் அறிகுறி ஈதுமோர் ஆண்மைப் பாலதோ. 210 நூற்றியற் குமரரை நொய்திற் கொன்றநின் ஆற்றலைக் கெடுக்குவன் ஆவி வாங்கியே கூற்றுவற் குண்டியாக் கொடுப்பன் மெய்யினைப் பாற்றினுக் குதவுவன் பாலவன் காணவே. 211 உன்னுடை வன்மையும் உனது நாயகன் தன்னுடை வன்மையுந் தானை வன்மையும் பின்னுடை அமரர்கள் பெற்ற வன்மையும் என்னுடை வன்மையால் இறையின் நீக்கவேன். 212 வானவர் சிறையினை மாற்ற உன்னியே தானையொ டேகியென் றன்முன் எய்தின்நீர் ஊனுயிர் வாழ்க்கையும் ஒல்லை தீர்திரால் ஆனதொ ரூதியம் அழகி தாற்றவே. 213 மூண்டதொல் விதியினான் முடிந்த மன்னுயிர் ஈண்டுதம் மியாக்கையுள் மேவும் என்னினும் ஈண்டெனை மாறுகொண் டிகல்செய் கின்றவர் மாண்டிடும் ஆறலால் மற்றும் உய்வரோ. 214 என்பதை அரிமுகன் இயம்ப எம்பிரான் நன்பெருந் தூதுவன் நகைசெய் தங்கையின் மன்பெருஞ் சிலையினை வணக்கி வாளியோர் ஒன்பதொ டொன்பதை உரத்தில் தூண்டினான். 215 விரைந்திடு செலவினால் விசிகம் ஏவலான் உரந்தனிற் படுதலும் ஒசிந்து வீழ்ந்தன இரந்திடு தொழிலவர் இன்மை யாளர்போல் கரந்தவர் இயற்கையைக் கருதி மீள்வபோல். 216 முருகன தேவலால் முன்னம் விட்டிடு பொருகணை அகலமேற் புகாது வீழ்தலும் அரிகெழு முகமுடை அவுணர் நாயகன் கரமிசை இருந்ததோர் கதையொன் றேவினான். 217 ஏவிய தண்டினை ஏந்தல் ஈரிரு தூவயில் வாளியால் துண்டஞ் செய்திடா ஓவரும் பான்மையால் ஒராயிர ரங்கணை தேவரை அலைத்தவன் சிரத்தில் ஓச்சினான். 218 சிரம்படு கின்றதோர் செய்ய வாளிகள் பரம்படு பலதுணி பட்டு வீழ்ந்தன உரம்படும் அவுணர்கள் உறைதற் கொத்தமுப் புரம்படு கின்றதோர் பூழி யாமென. 219 பொன்றிகழ் வடிக்கணை பொடிப்ப இன்னமுன் நின்றமர் புரியுமோ நென்னல் தூதுவன் நன்றென அரிமுகன் நகைத்துத் தன்கையின் மின்றிகழ சூலவேல் திரித்து வீசினான். 220 காசினி எரிகிளர் காட்சித் தாலென ஆசினி தனில்வரு சூலத் தாற்றலுந் தேசுடை நிலைமையுந் திறலும் நோக்கியே வீசினன் எதிருற விசிகம் ஆயிரம். 221 நெட்டிலைச் சூலவேல் நிமலற் கன்பினோன் விட்டிடு பகழியை வீட்டி மேற்செலப் பட்டது நோக்கினன் பரிந்து பின்னருந் தொட்டனன் ஆயிரஞ் சுடர்கொள் வான்கணை. 222 ஏவிய எல்லையில் எதிரும் வாளியைத் தூவுறு கொன்னுனைச் சூலஞ் சிந்தியே மேவலர் பரவுறும் வீர வாகுமேல் தேவரும் மருளுறக் கடிது சென்றதே. 223 இலக்கரும் நங்கினர் எண்மர் ஏங்கியே கலக்கம தடைந்தனர் கணங்கள் யாவரும் இலக்கணுற் றிரங்கினர் அமரர் இப்படை விலக்கரி தேகொலென் றுயிர்த்து விம்மினார். 224 வேறு கோள்கொண்ட பகழிகளின் கொலைகொண்டு நிலைகொண்ட தோள்கொண்டு செல்லவருஞ் சூலத்தின் திறல்நோக்கி நீள்கொண்டல் அன்னதொரு நீலமிடற் றவன்தந்த வாள்கொண்டு குறைத்திட்டான் வலிகொண்ட தகலாதான். 225 சூலம்போய் இற்றிடலுந் துணைவர்களாய் உள்ளோரும் ஞாலஞ்சேர் பூதர்களும் நனிமகிழ்வு விறந்தனரால் ஆலம்போந் தடா¢த்திடலும் அமலனுண்டு தமைக்காத்த காலம்போல் அமரரெலாந் துயரம்போய்க் களிசிறந்தார். 226 அக்காலை வௌ¢ளிமலை அளிக்குநந்தி கணத்திறைவன் மெய்க்கால வடவையினும் வெகுளியுறு பெற்றியனாய் இக்காலை இவனுயிரை யானேஉண் குவனென்னா மைக்காலன் றனைமுடித்த வள்ளல்தனிப் படைகொண்டான். 227 எந்திரித்த இருக்கைதனில் இருத்தியே கருவிகளான் மந்திரத்தின் விதிமுறையின் மனப்படுபூ சனைஇயற்றி அந்தரத்தில் இமையவர்க்கும் அரியயற்கும் வெலற்கரிய சுந்தரத்தோள் அரிமுகனை அடுதியெனத் தொழுதுய்த்தான். 228 உய்ப்பதொரு படையழல்கான் றுலகம்வெருக் கொள்வரலும் எப்படையோ இ·தென்றான் இமையவர்தம் படைவென்றான் துப்படையுஞ் செஞ்சடிலத் தோன்றல்படை எனத்தெரியா அப்படையோ அடுவதென அண்டம்வெடி படநகைத்தான். 229 அற்பட்ட புலனுடைய அரிமுகத்தன் தான்நோற்று முற்பட்ட பகற்கொண்ட முக்கணான் தனதுபடை எற்பட்ட மணிக்கடகத் தொருகரத்தில் இருந்ததனைச் சொற்பட்ட மந்திரத்தால் வழிபட்டுத் தூண்டினனால். 230 தூண்டலுறு பரன்படையுந் தொல்லைவரும் அப்படையும் ஈண்டியெதி ரெதிர்துன்னி இணைகொண்டோர் இருதலைவர் காண்டகைய கேண்மையினாற் கடிதுவந்து கலந்தேபின் மீண்டிடுவ தேபோல விடுத்தவர்பால் மேவினவால். 231 வேறு தன்படை மீடலுஞ் சயங்கொள் மொய்ம்பினான் துன்புடை மனத்தனாய்ச் சூரன் என்பவன் பின்புடை யானொடு பேசப் பின்னொரு முன்புடை யாரிலை என்று முன்னினான். 232 ஆற்றலிற் குறைவிலன் அழிவு றாதமர் பேற்றினிற் குறைவிலன் பிறரை அட்டிடு கூற்றினிற் குறைவிலன் கோடி கூற்றுவர் ஏற்றெதிர் மலையினும் இமைப்பிற் கொல்வனால். 233 அவன்பெரு முயற்சியே ஆற்ற லாம்என்கோ தவங்களின் வன்மையே வன்மை தான்என்கோ சிவன்புரி வரமதே சீரி தால்என்கோ எவன்பெரி தென்றியான் இசைக்க வல்லனே. 234 விடலுறு பகழியான் மெய்யில் ஊறிலான் அடலுறு படையினும் அழிவு பெற்றிலான் கொடியதோர் அரிமுகன் குமரன் செங்கையிற் படைகளின் அன்றியே படுகி லானரோ. 235 தீயவன் ஆவியை சிந்தல் கூடுறா தாயினும் வெஞ்சமா¢ ஆற்றி இங்கிவன் தேயுயர் தேரினைப் படையைச் சேனையை மாய்வுறு விப்பனால் வல்லையா னென்றான். 236 இத்திறம் இளையவன் இயம்பி ஏழிரு பொத்திரம் தூண்டியே பொருவில் கேசரி வத்திர முடையவன் வையம் உந்துவான் சித்திர நெடுந்தலை சிந்தி நீக்கினான். 237 சாரதி தலையது தரையில் வீழுமுன் சூரொடு தோன்றினான் சுளிந்தொர் தண்டினை ஓரிமை ஒடுங்குமுன் உருமின் உய்த்தலும் வார்கழல் இளையவன் மருமம் மாய்ந்ததே. 238 விடலரும் திறலுடை வீர வாகுவின் தடமிகும் உரம்புகு தண்டஞ் சாளரத் திடையிடை கதிர்வரும் எல்லை காணுறும் பொடியென லாகியே புகையில் போயதே. 239 தோட்டுணை வாகையான் சுளிந்து துண்ணென ஓடடுறு நெடுங்கணை உய்த்தொ ராயிரம் மோட்டுடை விறலரி முகத்தன் ஏறிய சேட்டுடை மணிநெடும் தேரை வீட்டினான். 240 தேரழிந் திடுதலும் ஆர்த்துச் சிங்கனை ஆருயிர் கொள்ளுதும் அற்ற மீதெனாப் பாரிடா¢ வரைகளும் படையும் வீசியே சாருற வளைந்தனர் சமரின் முந்தினார். 241 வெய்யவன் அங்கது வெகுண்டு நோக்கியே செய்யதோர் மணிநெடுஞ் சேமத் தேர்புகா ஐயிரு நூறுவில் லதனை ஆயிரம் கையினில் எடுத்தனன் கடிதின் வாங்கினான். 242 கருமணி வரைபுரை காமர் வில்லெலாம் அரவுறழ் குணங்கள்கொண் டவுணன் கையுற திருமுடி பலவுடைக் கிரியிற் செல்லினம் உருகெழு மின்னொடும் உறுவ போன்றவே. 243 பிடித்திடும் விற்களில் பிறங்கு நாணொலி எடுத்தனன் எடுத்தலும் உயிர்கள் யாவையும் துடித்தன அண்டமும் துளக்க முற்றன முடித்தலை பனித்தனன் முளரித் தேவனும். 244 வணக்கிய விற்களின் மடங்கல் மாமுகன் கணக்கில வாகிய கடல்கள் வானெழீஇத் தணக்கில பொழிந்தெனச் சரங்கள் சிந்தலும் பிணக்குவை ஆயினர் பெயர்ந்த பூதர்கள். 245 தாள்களும் கரங்களும் தலையும் சிந்தினர் கோளுறு தசையொடு குருதி சிந்தினர் மூளைகள் சிந்தினர் முடியும் கால்பொரப் பூளைகள் சிந்தின போலப் பூதர்கள். 246 தருப்பயில் பாற்கடல் தனது சீகரம் திரைப்பெருங் கரங்களால் சிந்தல் போன்றதால் அரிப்பெரு முகத்தவன் ஆயி ரங்கையால் துரப்புறு கண்களைத் தூண்டு கின்றதே. 247 மண்டல நிரந்தன வானம் தூர்த்தன எண்டிசை மறைத்தன கிரிகள் ஈண்டுவ தெண்டிரை எங்கணும் செறிவ அப்புறத் தண்டமும் போவன அவுணன் வாளிகள். 248 மருப்புயர் திசைக்கரி மருமம் பாய்வன பருப்பதம் ஏழையும் பகிர்வ மேருவாம் பொருப்பையும் போழ்வன புணரி தோறமர் நெருப்பையும் தணிப்பன நீசன் வாளியே. 249 மாறுபட் டவன்விடும் வாளி மாரியால் ஈறுபட் டிடாததோ ருயிரும் யாக்கைகள் கூறுபட் டிடாததோ ருயிரும் கொம்மென ஊறுபட் டிடாததோ ருயிரும் இல்லையே. 250 எண்படும் அரிமுகன் எடுத்த வில்லுமிழ் புண்படு கணைமழை பொதிந்து போகுறா விண்படு நெறியெலாம் விலக்கி மாற்றியே ஒண்புவி ஆக்கிய துலகம் யாவையும். 251 தாக்குறும் அரிமுகன் சரங்கள் பாரிடர் யாக்கைகள் உருவியே எடுத்து நொய்தெனப் போக்குறு கின்றன புலாவின் சூட்டினைக் கோக்குறு சலாகையின் குழுவு போலவே. 252 மெய்ந்நெறி யுணர்கிலார் வெறுக்கை பெற்றது துன்னிய கிளைக்கொரு துன்ப மாதல்போல் ஒன்னலன் விடுங்கணை உலப்பின் றோடலால் தன்னுறு படைகளைத் தானுங் கொன்றவே. 253 தீந்தொழில் அரிமுகன் செறித்த வாளிகள் வாய்ந்திடுஞ் சேணெறி மாற்றும் பான்மையால் காய்ந்திடுஞ் செங்கதிர்க் கடவுள் மேற்றிசைப் போந்திலன் மீண்டிலன் புலம்பி நின்றுளான். 254 கொம்பொடு பேரியுங் குணிலும் ஏனைய வெம்படை யாவையும் விரவி மேற்செலக் கம்புளும் கரண்டமும் கனைந்து சுற்றிடச் செம்புனல் கரும்புனல் அளக்கர் சென்றதே. 255 இத்திறம் அரிமுகன் இயற்றும் போரினை மெய்த்திறன் மொய்ம்புடை வீரன் காணுறாச் சித்திரத் தவனெதிர் சென்று வாங்கினான் கைத்தலத் திருந்ததன் கடவுள் வில்லினை. 256 வாக்கிய சிலைதனில் வறிது வாணொலி ஆக்கினன் ஆக்கலும் மலைந்த தண்டமும் தீக்கிளர் குஞ்சியர் செருச்செய் தானவர் ஏக்கம தடைந்தனர் இரிந்து போயினார். 257 மாக்களின் இருந்தவர் மதங்கொள் வெங்கரி மேக்குற வைகினோர் தேரின் மேவினோர் தாக்குறு படைகளுஞ் சயமுஞ் சிந்தியே யாக்கைகள் நடுக்குற யாரும் வீழ்ந்தனர். 258 வேறு அவ்வ ழிப்பட நாணொலி உறுத்தியே அடலோன் கைவ ழிப்படு சிலையினில் கணைமழை சிதறித் தெவ்வ ழிப்படு சீயமா முகத்தவன் செலுத்தும் எவ்வ ழிப்படு பகழியும் அறுத்தனன் இமைப்பில். 259 பிரமர் எண்ணிலர் பயந்திடும் உயிர்களைப் பின்னாள் ஒருவ னாகிய கண்ணுதல் தொலைக்குமா றொப்பச் செருவ லாளனாம் இளையவன் பகழிகள் சிதறி அரியின் மாமுகன் விடுகணைத் தொகையெலாம் அறுத்தான்.260 மிக்க நேமியிற் புவனியின் அகலிரு விசும்பில் திக்கின் மேருவின் வரைகளில் தீயவன் பகழி புக்க புக்கதோர் இடங்களில் தன்கணை பூட்டி அக்க ணந்தனில் அவன்விடு வாளிகள் அறுத்தான். 261 புறத்த ராமென மன்னுயிர்க் கின்னலே புரியும் திறத்தன் வாளியை மைந்தனின் றட்டது தேவர் குறித்து நோக்கியே சூர்முதற் கிளையெலாம் குமரன் அறுத்த நாள்வரு மகிழச்சியைக் கிடைத்துநின் றார்த்தார். 262 அகழி யார்கலி நொஞ்சிசூழ் முதுநகர் அடர்த்தோன் திகழி யானைகள் வெருவரும் அரிமுகத் திறலோன் பகழி யாவையும் அட்டதோ அங்கவன் படைத்த புகழி யாவையும் அட்டதன் றோவெனப் புகன்றார். 263 அள்ளல் செற்றிய அளக்கர்சூழ ஆசுரத் தரசன் தள்ளல் உற்றிடு பகழியைத் தனதுகைச் சரத்தால் வள்ளல் அத்துணை அறுத்தனன் அகற்றமற் றதனைக் கள்ள லைத்தார் அரிமுக மேலையோன் கண்டான். 264 வில்லெ டுத்தது நின்பொருட் டாகுமால் விரைவின் மல்லெ டுத்தநின் மொய்ம்பினைக் கரங்களை மார்பைப் பல்லெ டுத்திடு தலையினை நாசியைப பதத்தைச் சொல்லெ டுத்திடு நாவினைச் சரங்ளால் துணிக்கேன். 265 திரண்ட கையுளேன் சிலைத்தொழில் காட்டுறு செருவில் இரணடு கையுடை நீகோலாம் என்முனம் ஏற்பாய் முரண்ட னிச்சிலை தொட்டநின் கையினை முடித்துக் கரண்டம் உண்ணிய புரிகுவன் முந்துநீ காண. 266 எமரி ருக்குறு மகேந்திர நகர்தனில் ஈண்டுஞ் சமர கத்தினில் என்பெருந் தானைகள் தம்மில் குமரர் தங்களிற் சொற்றமாக் கொண்டன முற்றும் உமிழு விக்குவன் உன்னுயிர் தன்னையான் உண்பேன். 267 என்னும் மாற்றங்கள் அரிமுகன் இசைத்தலும் ஏந்தல் பன்னு கின்றதென் பற்பல நினக்குள படையைத் துன்னு தானைகள் யாவையுஞ் செற்றுனைத் துரப்பேன் என்னு டைச்சிலை வன்மையைப் பார்த்தியா லென்றான். 268 சொற்ற மாத்திரத் தவுணனார் அழல்விழி தூண்டக் கொற்ற வெஞ்சிலை பத்துநூ றொருதலை குனித்துப் பொற்றை ஈர்ங்கணை ஆயிரத் தாயிரம் பூட்டி வெற்றி மொய்ம்புடை ஒருவன்மேற் சென்றிட விடுத்தான். 269 சீற்றம் மிக்கநம் இளையவன் சிலையெனக் கொண்ட கூற்றை வாங்கியே பத்துநூ றாயிரங் கொடுங்கோல் ஆற்றல் மிக்கன தூண்டியே மேலவை அறுத்து வீற்றும் ஆயிரம் ஆயிரம் பகழிகள் விட்டான். 270 நம்பி தொட்டிடு கணையினை மகேந்திர நகரோன் தம்பி பத்துநூ றாயிரங் கணைகளாற் சாய்த்து வெம்பி ஆயிர கோவெவ் வாளிகள் விடுப்ப எம்பி ராற்கிளை யோனும்அக் கணையினை எய்தான். 271 குராவ ணிந்திடு குமரனுக கிளையவன் கொடுங்கோல் பராவ லன்விடு பகழியைப் பாரிடைப் படுத்தக் கராச லங்களை யடுமுகன் அதற்குமுன் கணைகள் இராயி ரந்தொடுத் தண்ணறன் சிலையினை இறுத்தான். 272 மாறில் வெஞ்சிலை இற்றுழி இளையதோர் வள்ளல் வேறொர் கார்முகன் வாங்குமுன் அகலத்தில் வெய்யோன் நூறு கோடி புங்கவங்களை அழுத்தலும் நொய்தின் ஆறு கோடியொத் திழிந்தன அகலிருங் குருதி. 273 குருதி யாகத்தின் இழிந்திடத் தன்சிலை குனித்துப் பரிதி ஒண்கதிர் என்னநூ றாயிரம் பகழி கருதி விட்டிடக் கருதலன் அங்கது காணா இருது நாண்முகி லாமென அவைதொடுத் திறுத்தான். 274 அல்லி னோர்மதி எழுந்தென அவுணருள் உதித்த மல்லல் வாலிய அரிமுகன் தொடுகணை மாரி ஒல்லென் வாளியான் மாற்றியா யிரங்கணை உந்திச் சில்லி ஆழிகள் அறுத்தவன் தேரினைச் சிதைத்தான். 275 ஏறு தேரழிந் திடுதலும் அரிமுகன் இமைப்பின் மாறொர் வையமேற் பாய்ந்தனன் வார்சிலை வளைப்ப ஆறு மாமுகற் கிளையவன் கணைகளால் அவுணன் நூறு பத்தெனுஞ் சிலையையும் அறுத்தனன் நொடிப்பில். 276 வில்லி ழந்தனன் மானமும் இழந்தனன் வீரச் சொல்லி ழந்தனன் பெருமிதம் இழந்தனன் தொல்சீர் எல்லி ழந்தனன் பெருமையும் இழந்தனன் இலங்கும் பல்லி ழந்திடு விடவரா ஒத்தனன் பதகன். 277 ஏதி லானொருங் காயிரஞ் சிலைகளும் இழந்து மாது யர்ப்படு நிலைமையை நோக்கியே மறங்கொள் பூதர் ஆர்த்தனர் அமரர்கள் ஆர்த்தனர் புரைதீர் வேதர் ஆர்த்தனர் முகுந்தரும் ஆர்த்தனர் விண்மேல். 278 ஆயி ரஞ்சிலை ஒருதலை துணிந்ததும் அமரர் நாய கன்தனக் கடியவன் விற்றொழல் நலனும் மாய னாதியர் இகழ்ச்சியும் பூதர்தம் வலியுங் காயு நெஞ்சுடை மடங்கல்மா முகத்தவன் கண்டான். 279 தேவர் ஆர்ப்பையும் இந்திரர் ஆர்ப்பையுந் திசையின் காவ லாளர்தம் ஆர்ப்பையும் எமையடக் கருதும் மூவர் ஆர்ப்பையுஞ் சாரதர் ஆர்ப்பையும் முனிவோர் ஏவர் ஆர்ப்பையுந் துன்பினுக் குதவுவன் என்றான். 280 வேறு தீயா ருக்கோ ரெல்லைய தானான் திறல்மேலான் தூயா ருக்கே இன்னல்பு ரிந்தான் தொலைகில்லான் தாயாய் முந்தே தம்மை அளித்தாள் தருகின்ற மாயா பாசந் தன்னையெ டுத்தான் மறமிக்கான். 281 ஒட்டிப் பேபர்செய் மாற்றலர் தம்மை யொருபாலாற் கட்டிக் கொள்ளா ஆருயிர் உண்டு கடிதேகிக் கிட்டித் தொல்லை ஞாயிறு தோன்றுங் கிரியுய்த்து விட்டுப் பேரா தாண்டுறை கென்னா வீசுற்றான். 282 மறியா நிற்குந் தெண்டிரை ஏழும் வந்தொன்றாய்ச் செறியா நிற்குங் கொல்லிது என்னத் திசைசூழ்போய் எறியா நிற்கும் பாசமி ருட்கோ ரிடமாகிப் பொறியா நிற்குந் தீயழல் சிந்திப் புகுந்தன்றே. 283 சேணா டுற்றோர் யாரும் இரிந்தார் செருவாற்றல் பூணா நிற்கும் பூதரும் யாரும் பொருமுற்றார் ஆணா யுற்றோர் யாரினும் மேலோன் அதுதன்னைக் காணா ஈதோர் மாயைகொல் என்றே கருதுற்றான். 284 ஆர்ப்பாய் உற்ற தெண்டிரை கொல்லோ அ·தன்றேல் போர்ப்பான் வந்த பாயிருள் கொல்லோ புயம்வீக்கி ஈர்ப்பான் உற்ற நாணது கொல்லோ யாதேனுந் தீர்ப்பேன் வல்லே என்று நினைந்தான் திறல்வாகு. 285 ஆற்றான் மற்றிவ் வாறுதெ ரிந்தே அதுதீர்ப்பான் மாற்றா கின்ற தொல்படை தன்னை வாங்காமுன் கூற்றாய் நின்றோன் வீசிய பாசங் குழுவோடும் காற்றாய் வந்திங் கியாவரை யுங்கட் டியதன்றே. 286 பல்லோ ராகிப் போர்புரி பூதப் படையோரும் வில்லோ ராகும் எண்மரும் ஏனை விறலோருந் தொல்லோர் கூறும் ஆடல்கொள் மொய்ம்பின் துணையோனும் எல்லோர் தாமும் வீக்குறு பாசத் திடையுற்றார். 287 மேற்றான் எய்தி வீக்கிய பாசம் மிடல்வீரர் மாற்றா நிற்பர் தொல்லுணர் வோடு மலிவாரேல் ஆற்றா ரென்னச் செய்குவன் யானென் றவர்புந்தி தேற்றா வண்ணஞ் செய்துள தம்மா சிறுபோழ்தின். 288 வேறு தொன்னிலை உணர்வு மாழ்கித் தொல்வலி சிந்திச் சோரும் அன்னவர் தொகையை எல்லாம் அந்தர நெறிக்கொண் டேகி மின்னென அளக்கர் வாவி மேருமால வரைபோல் நின்ற பொன்னவிர் உதய மென்னும் பொருப்பிடைப் புகுந்த தன்றே. 289 கதிபடர் கின்ற காலிற் கருத்தினிற் கடிதின் ஏகித் துதியுறு திருவின் கேள்வேன் துயில்புரி கடலில் துஞ்சும் உதயமால் வரையின் எய்தி உயிர்ப்பிலா துறங்கு கின்ற மதவலி வீரர் தம்மை வைத்துடன் இருந்த தன்றே. 290 விழுமிய பூதர் யாரும் வீரரும் விளிந்து வெய்யோன் எழுதரும் உதயம் புக்கா ரென்பது தெரிந்து நோக்கித் குழுவொடு பொருது ளாரைக் கொன்றுயிர் குடித்தேன் வல்லே அழகிதென் னாற்றல் என்றான் அமரரை அலக்கண் கண்டான். 291 ஓடினான் கொல்லோ போர்க்கென் றுற்றதும் இலையோ எங்குந் தேடினேன் காண்கி லேனால் யாண்டையான் சிறுவன் அம்மா சாடினான் சாடி னானென் றுரைப்பது சழக்கோ தம்பி வீடினான் அல்ல னோவென் றண்டங்கள் வெடிக்க ஆர்த்தான். 292 கேசரி முகன்இவ் வாறு கிளத்தினன் ஆர்க்கும் எல்லைத் தூசியின் முந்து போன தூதுவன் ஒருவன் நண்ணி ஆசறு பூத வௌ¢ளம் ஆயிரத் தோடு செவ்வேள் பாசறை இருந்தான் யானும் பார்த்தனன் வந்தேன் என்றான். 293 ஒற்றன துரையைக் கேளா ஔ¢ளெயி றிலங்க நக்குப் புற்றுறை அரவ மென்னப் புதல்வன்எற் பொருவான் அஞ்சி மற்றவண் உறைந்தான் கொல்லோ வல்லையில் யானே ஏகி இற்றையோர் கணத்தில் அன்னான் இருஞ்சமர் முடிப்ப னென்றான். 294 என்றனன் படரும் எல்லை இன்னதோர் நிகழ்ச்சி யாவும் ஒன்றற நோக்கி வானோ£¢ உயங்கினர் ஓட லுற்றார் சென்றனர் அதனை நாடிக் காலெனுந் திறலின் வெய்யோன் குன்றெறி நுதிவேல் அண்ணல் குரைகழல் பணிந்து சொல்¢வான். 295 அத்தகேள் பூத ரோடும் அடுபடைத் தலைவர் ஏகி மெய்த்திறற் பெரும்போ ராற்ற வெகுண்டரி முகத்து வெய்யோன் கைத்தலத் திருந்த சூழ்ச்சிக் கயிற்றினால் நமரை யெல்லாம் எய்த்திட வீக்கி வெய்யோன் உதயத்தில் இட்டா னென்றான். 296 ஆண்டகை வரம்பு சான்ற அறுமுக னவன்சொற் கேளா யாண்டுளான் யாண்டு ளான்அவ் வரிமுகத் தவுணன் என்னத் தூண்டிடு பொறியால் இங்ஙன் வருகுவான் போலு மென்றான். 297 னுன்னலும் நகைத்துச் செவ்வேள் அரியணை இருக்கை நீங்கிப் பன்மணி குயின்ற செம்பொற் பாதுகை சரணஞ் சேர்த்திப் பொன்னவிர் கழல்க ளார்ப்பப் புறங்கடை காறும் போந்து தன்னயல் வந்த காலைத் தருதிநந் தேரை யென்றான். 298 ஆறுமா முகத்து வள்ளல் அருள்பணி தலைக்கொண் டேகி மாறிலா முதல்வன் தந்த வையம் தழைத்து வெங்கால் தாறுசேர் கோலும் நாணுந் தங்கினன் கடாவி உய்ப்ப ஏறினான் அதன்மேல் ஐயன் இமையவர் யாரும் ஆர்த்தார். 299 இந்திரன் கவரி சாய்ப்ப இமையவர்