|
Home > Scriptures & Stotras > Tamil scriptures and literature > kandha purANam
kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
4. யுத்த காண்டம்
***
4. இரண்டாநாட் சூரபன்மன்
யுத்தப் படலம்
கங்குல்போந் திடுதலுங் கணபணப பன்னகம்
நுங்குறா தகலவே நோற்றுமால் ஏந்திடுஞ்
சங்கமாய் மதிசெலச் சக்கரப் படையெனத்
துங்கமோ டெழுதல்போல் தோன்றினன் பரிதிய. 1
வேறு
இரவி செல்லுமுன் அவுணர்கோன் துயிலொரீஇ எழுந்து
மரபி னிற்புரி நாட்கடன் முடித்துமன் றெய்தித்
திரும ணிப்பெருந் தவிசிடை இருந்துதன் சிறுவன்
நெருநல் உற்றிடும் வசையினை உளத்திடை நனைந்தான். 2
நினைதல் உற்றுழி உளத்திடைப் பெருஞ்சினம் நீட
இனிய மர்த்தொழிற் கியாரையும் விடுக்கிலன் யானே
அனிக மோடுபோய் மாற்றலர் வன்மையை அழித்துப்
புனைவன் வாகையென் ன்னினான் அழிவிலாப் புகழோன். 3
செங்கண் வாளெயிற் றவுணன்இத் தன்மையைத் தேற்றி
வெங்கண் ஒற்றிரில் அளப்பிலா¢ தங்களை விளியா
அங்கண் மாநிலம் முறைமுறை சூழ்தரும் அளக்கர்
எங்க ணுஞ்செறி தானையைத் தம்மின்கள் என்றான். 4
என்ற லுந்தொழு தாயிர கோடியோர் யாண்டுஞ்
சென்று சென்றுதம் மன்னவன் பணிமுறை செப்பத்
துன்று தேர்கரி பரிமிசைப் படர்ந்தனர் தொன்னாள்
வென்றி கொண்டநூ றாயிர வௌ¢ளத்தின் மிக்கோர். 5
வேறு
சூலமே கணிச்சி தண்டந் தோமரங் குலிசஞ் சாபங்
கோலவாள் பலகை வட்டங் குந்தம்வேல் நாஞ்சில் பிண்டி
பாலமே முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி
பீலிவல் முசல மாதி பெரும்படை கொண்டு சென்றார். 6
எண்டகும் இனைய வாற்றால் இலக்கம்வௌ¢ ளத்தி னோருந்
திண்டிறல் மகேந்தி ரப்பேர்த் திருநகர் சுற்றி யார்ப்ப
விண்டொடு சிகரி யென்னும் மேருவின் உச்சி போகிக்
கண்டனன் அவுணர் மன்னன் கடற்பெருந் தானைச் சூழல். 7
தேக்கினன் கதிருஞ் செல்லாச் செல்லுறழ் தானை ஈட்டம்
நோக்கினன் சிந்தை கொண்ட நோன்மைசார் துயரம் யாவும்
நீக்கினன் வன்மை பெற்றான் நேரலர்ப் பொருது வென்றி
ஆக்கினன் போல நின்றான் அறத்துடன் அருளைக் கொன்றான். 8
அழிந்திடு கின்ற காலத் தளக்கரின் ஆர்த்துச் சூழுங்
கழிந்திடு தானை கண்டோன் கடிதுபோர்க் கேக முன்னிச்
செழுங்கதிர் மதியம் ஆக்குந் திருமணிச் சிகரி நின்றும்
இழிந்தனன் தலைமை நீங்கி இழிதொழில் பயின்ற தீயோன். 9
எடுத்தனன் சிலையும் ஏனைப் படைகளும் இமையோர் தொன்னாட்
கொடுத்திடு படைகள் யாவுங் கொண்டனன் சுரத்திற் கோதை
தொடுத்தனன் வெரிநில் தூணி தூககினன் விரல்கள் தோறும்
அடுத்தபொற் புட்டில் சேர்த்தான் அண்டங்கள் அனைத்தும் வென்றான்.10
குந்தளச் சுழியற் குஞ்சிக் கோலமா மௌல தன்னில்
சுந்தரத் துணர்மென் தும்பை தொடுத்திடு பிணையல் சேர்த்தி
மந்தரப் பொருப்பு மேரு வரையிதென் றையஞ் செய்யும்
இந்திரப் பெருந்தேர் ஒன்றின் ஏறினன் இரவி யேபோல். 11
பண்ணுலாம் புரவிப் பந்தி பருமிதக் களிற்றின் ஈட்டம்
எண்ணிலாப் புரவி மான்தேர் ஏமமாய்ப் பின்னர் ஏக
அண்ணல்வாள் அவுண வீரர் அமைச்சர்கள் அயலிற் செல்ல
விண்ணுலாம் புரிசைக் கோயில் வீதிகள் கடந்து சென்றான். 12
கோயிலின் எல்லை நீங்கிக் கோபுரங் கெழீஇய கொற்ற
வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு நோக்கிக்
காய்கதிர்த் தபனற் கண்ட கலிவியன் உலக மென்ன
ஆயிர நூறு வௌ¢ளத் தவுணரும் புடைசூழ்ந் தார்த்தார். 13
வேறு
அன்ன காலையில் அரிமுகன் சேய்அதி சூரன்
துன்னு தாரகன் சுதன்அசு ரேந்திரத் தொல்லோன்
என்ன நின்றிடும் மைந்தர்கள் இருவரும் ஏகி
மன்னர் மன்னனை அடைதலும் இனையன வகுப்பான். 14
திரைகொள் வேலைபோல் நிறைதரு கோட்டகஞ் சிறிதோர்
கரையி லாவழி யுடைந்திடும் அன்னது கடுப்பப்
பொருதி றற்படை பலவுள என்னினும் போற்றும்
அரச ரில்வழி நின்றிடா தன்னவை அழியும். 15
ஆத லால்இனி நீர்இரு வீர்களும் அமரின்
மேத கும்பெருஞ் சேனைக்கு முதல்வராய் மேவிப்
போதிர் முன்னுற என்றலும் நின்றிடு புதல்வர்
ஈது நன்றென வணங்கியே ஏகினர் இமைப்பில். 16
தந்த மான்தடந் தேர்மிசை ஏறியே சமரில்
கொந்து லாமலர் வாகையை மிலைச்சிய குமரர்
வந்த நாற்பெரும் படையையும் அணிபெற வகுத்து
முந்து தானையந் தலைவராய் ஏகினா¢ முறையால். 17
ஆகும் எல்லையில் அங்கது நோக்குறா அடுபோர்
வாகை கொண்டநூ றாயிர வௌ¢ளத்து மறவோ£¢
ஓகை எய்தியே அமர்புரி பறந்தலை உன்னி
ஏகல் மேயினர் பணிகளுஞ் சேடனும் இரங்க. 18
வேறு
கடந்திகழ் கரிதேர் பாய்மாக் கலந்திடத் தானை வீரர்
படா¢ந்திடு கின்ற காலைப் பருமணி வயிரத் தேர்மல்
அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கரில் வடவை சுற்றவ
விடந்தனி நடந்த தென்ன விண்ணவர் மருளச் சென்றான். 19
தொண்டகந் துடியே பம்பை தூரியம் முருடு கோடு
திண்டிறற் படகம் மொந்தை திமிலையே தடாரி தக்கை
கண்டைஆ குளியே பீலி காகளம் உடுக்கை பேழ்வாய்
கொண்டதோர் பதலை சங்கம் குடமுழா இயம்பிற றம்மா. 20
தட்டுடை நெடுந்தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்பு சேண்போய்
முட்டுறு கொடிகள் ஆர்ப்பும் முரட்பரி ஆர்ப்பும் வீரர்
கட்டுறு கழலின் ஆர்ப்பு ம்கணிப்பில்பல் லியத்தின் ஆர்ப்பும்
எட்டுள திசையும் எல்லா வுலகுமுண் டெழுந்த அன்றே. 21
நீனிற முகில்போல் மேனி அவுணர்கள் நீத்தஞ் செல்லக்
கானிறை பூழி ஈட்டங் ககனமேற் செல்ல முன்னம்
தானுறு கின்ற காலைச் சசியென்த் தயங்கிப் பின்னர்
மீனெனக் கரந்தான் மேலாம் விரிகதிர் படைத்த வெய்யோன். 22
நேசமொ டென்பால் வைகும் நெறியினார் தமக்கு வீடும்
ஆசறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன் என்னை
ஏசுவர் போலுங் கீழென் றிகல்புரிந் திடுவன் என்னாத்
தூசிபார் விடுத்த தேபோல் துறக்கமேற் சென்ற பூழி. 23
கன்னிறை அழித்த மொய்ம்பிற் கார்கெழும் அவுண வௌ¢ளம்
துன்னுற நடப்பச் செல்லுந் தூளியின் படலைச் செய்கை
என்னென உரைப்பன் அம்மா இந்திர னென்போன் வைகும்
பொன்னுல கதனை வல்லே பூவுல காக்கிற் றன்றே. 24
கண்ணகல் தடந்தேர் மீதுங் காய்சினக் களிற்றின் மீதும்
நண்ணிய கொடிகள் வான்போய் நளிர்புனற் கங்கை நக்கி
மண்ணுறச் சிதறி ஆடி அலமரல் மகேந்தி ரத்தின்
அண்ணல்இன் றழிவன் என்றே அழுதிறம் போலும் மாதோ. 25
திங்கள்வெண் குடையும் நீலத் திருநிழற் கவிப்புஞ் செங்கேழ்ப்
பங்கய மலர்ந்த தன்ன பருமணிக் கவிகை முற்றுந்
தொங்கலின் தொகையும் வெய்யோன் தொல்கதிர் வரவு மாற்றி
எங்கணுஞ் செறிவுற் றூழி இருளினை விளக்கிற் றம்மா. 26
வேறு
ஆனவியல் பெய்தஅவு ணப்படைக ளோடும்
வானெறிகொ டேஅவுணன் வையமிசை செல்லத்
தானதுதெ ரிந்தமரர் தம்மிறைவன் ஓடிக்
கானமர்க டம்பன்அடி கைதொழுது சொல்வான். 27
அன்றுபுரி வேள்வியிடை ஆதியருள் செய்த
துன்றுபடை ஈட்டமொடு சூரனெனும் வெய்யோன்
இன்றுபொரு வான்விரைவின் ஏகினன் எதிர்ந்தே
சென்றவனை வென்றெமது சீர்அருளு கென்றான். 28
ஆம்பரிசு கூறஅவ னுக்கருள் புரிந்தே
ஏம்பலுறு கேசரியின் ஏற்றணையின் நீங்கிப்
பாம்பின்வலி செற்றுலவு பாகுதனை நோக்கி
வாம்பரிகொள் நம்மிரதம் வல்லைதரு கென்றான். 29
என்றிடலும் நன்றென எழுந்துலவை அண்ணல்
குன்றனைய தேரது கொணர்ந்துமுனம் உய்ப்ப
வென்றிஅயில் அண்ணல்அதன் மீமிசை புகுந்தான்
மன்றல்மலா¢ சிந்திஅயன் மாலொடு வழுத்த. 30
செழுந்தருண மேதகைய தோன்மிசை வானோர்
தொழுந்தலைவ னாகியமர் தொல்முருகன் ஏறக்
கொழுந்தழல் முடித்தனைய குஞ்சிகெழு பூதர்
எழுந்தனர் தெழித்தனர் இருங்கடலும் அஞ்ச. 31
நாட்டமொரு மூன்றுடைய நாதனருள் மைந்தன்
வாட்டமறு வெவ்வவுணர் மன்னன்வலி தன்னை
வீட்டும்வகை சென்றிடுதல் விண்ணவர் உரைப்பக்
கேட்டனிக பூதர்கள் கிளர்ந்துபடர் கின்றார். 32
பாரிடர்க ளாய்அறுமு கற்பரவு கின்ற
பாரிடர்ந டப்பவெழு பூழிபடர்ந் தின்னோர்
பாரிடர்பு £¤ந்தனர் பரிக்குமெனை யென்னாப்
பாரிடம்விண் ணோடுபகர் தற்கெழுதல் போலும். 33
தக்கையொ டுடுக்கைதுடி சல்லரி தடாரி
தொக்குடைய தண்ணுமை துவைப்பின்மிகு பேரி
மெய்க்குடமு ழாப்படகம் வீணைகுழல் ஆம்பல்
கொக்கரை இயம்பினர்கள் கோடிகண நாதர். 34
நாடுதவ நாரதனும் நல்லுவணர் தாமும்
கேடிலிசை வல்லதொரு கின்னரரு மாகிப்
பாடினர்கு மாரன்அடி பன்முறை பணிந்தே
ஆடினர்கள் விண்ணவரும் ஆசில்முனி வோரும். 35
சண்முகன தேவல்கொடு தாவில்இளை யோனும்
எண்மரும்இ லக்கர்களும் ஈண்டிய கணத்தின்
வண்மைகெழு மன்னவரும் வையமிசை யாகித்
திண்மைபடை ஊக்கமொடு சேனையிடை சென்றார். 36
மொய்ம்மலி படைத்தலைவர் முந்தியுறு தானை
இம்முறையி னாலொழுக ஈசனருள் மைந்தன்
செம்மணிவில் வீசியமர் தேரினிடை ஏகிப்
பொம்மலுறு தானவர்கள் போர்முனை அடைந்தான். 37
அடைந்தபொழு திற்புவியும் அந்தரமு மாகி
மிடைந்துவரு சூரனிகம் வெய்தென வளைந்த
தொடா¢ந்துநுகர் தீவலிதொ லைத்துமென முந்நீர்
படர்ந்துபுடை சுற்றியிடு பான்மையது போல. 38
வேறு
வளைந்திடு காலையில் வயவெம் பூதர்கள்
கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு தானவா¢
தளந்தனை அடர்த்தனர் அவருந் தாக்கினர்
விளைந்தது பெருஞ்சமர் விண்ட தண்டமே. 39
மாச்சினை மரங்களும் வரையுந் தண்டமும்
தீச்சிகைக் கழுமுளும் திகிரி நேமியும்
மீச்செலுங் கவண்கலும் வேலும் நாஞ்சிலும்
ஓச்சினர் பூதர்கள் ஒன்ன லார்கள்மேல். 40
மெய்ப்படும் அவுணர்கள் வெகுண்டு வில்லுமிழ்
அப்பொடு கணிச்சிதண் டாழி நாஞ்சில்வேல்
முப்புகா இலைப்படை முசலம் முற்கரம்
கப்பணஞ் சிதறினர் கணங்கள் தம்மிசை. 41
பற்றுவர் கரிகளைப் பரியி னங்களை
எற்றுவர் பா£¢தனில் எறிவர் மாதிரஞ்
சுற்றுவர் விண்ணிடைக் கிழிப்பர் துண்ணென
முற்றுடல் எருத்தினை முரித்துச் சிந்துவார். 42
இரதமொ ராயிரம் எடுத்துச் செங்கையில்
பொருகளி ராயிரம் புரள மோதுவர்
கரிகள ராயிரங் கரங்கொண் டேற்றியே
பரிபதி னாயிரம் பாரின் வீட்டுவார். 43
பாய்பரி யாயிரப் பத்துப் பாணிகொண்
டாயிர கோடியாம் அவுணர் தங்களைச்
சேயிரு நிலத்திடைச் சிதையச் சிந்துவார்
காய்கனல் சொரிதருங் கடுங்கட் பூதரே. 44
குரங்குளைப் புரவியர் குஞ்ச ரத்தினர்
இரங்குறு தேரினர் நிலத்தின் ஏகினோர்
வரங்கெழும் அவுணர்கள் வளைந்து பூதரைச்
சரங்களில் பிறவினில் தடிதல் மேயினார். 45
மலைதனைச் சிந்துவர் மறங்கொள் பூதர்தாள்
நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர்
கொலைதனைச் சிந்துவர் கொய்வர் மொய்ம்பினைத்
தலைதனைச் சிந்துவர் தறுகட் டானவர். 46
இவ்வகை மாறுகொண் டிகல்செய் கின்றுழித்
தெவ்வடு பூதர்தஞ் சேனை மன்னர்கள்
அவ்விடை ஏன்றுநின் றமர்இ யற்றுழி
வெவ்வசு ரப்படை மிகவும் மாய்ந்ததே. 47
பொன்றிகழ படையொடு புவியும் வானுமாய்
நின்றிடும் அவுணா¢கள் நீடு தொல்பிணக்
குன்றுரு வாகியே குருதி யாற்றிடைச்
சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார். 48
நீடிய வேற்படை நிமலன் காணுற
வீடினம் யாமினி வெய்ய தோற்றமேற்
கூடுவ திலையெனக் குனிக்கு மாறுபோல்
ஆடிய உடற்குறை அனந்த கோடியே. 49
வேறு
மானப் படைசேர் அவுணப் படையும் வயமான் தேர்ப்படையும்
ஏனைப் படையும் முடிவுற் றிடவே இவ்வா றிகல்செய்யுங்
கூனற் சடிலப் பூதப் படையின் கொற்றந் தனைநோக்கித்
தானை தலைவன் அதிசூ ரனெனுந் தனயன் வெகுளுற்றான். 50
தேரா யிரமா யிரமங் கொருபாற் சேமத் தொடுசெல்லக்
காரா யிரமுற் றனதன் படிவங் கதிர்காள் இமைசார
ஈரா யிரமாம் இவுளித் தொகைபூண் டீர்க்குந் தேர்மீதே
ஓரா யிரமாங் கதிர்போல் அழலா உரனோ டுறுகின்றான். 51
வா£¢வில் லதனை விரைவில் குனியா வடிவா ளிகள்போக்கிச்
சோர்வில் லவனும் எதிர்கின் றனரைத் துணிசெய் தனன்நிற்ப
ஓர்வில் லொருவன் தனியே இவண்வந் துறுபோர் புரிகின்றான்
போர்வில் லறிவன் இவனே எனவே புகல்கின் றனர்பூதர். 52
ஓதக் கடல்போல் அலமந் தலமந் துலையா இகல்செய்யும்
பூதர்க் கிறைஉக் கிரனென் றொருவன் புகைதீ யுமிழ்கண்ணான்
மேதக் கசலந் தரனா£¢ உடலம் வீழும் படிகீண்ட
சோதிக் கடவுட் படையுண் டுமிழுந் தொல்லோன் இகல்வல்லோன். 53
எண்டா னவருக் கிறைவன் குமரன் இகல்செய் திடுமாறு
கண்டான் முனியா விரைவில் படர்வான் காலன் திறல்கொள்ளும்
தண்டா னதுகொண் டவனேர் குறுகித் தடமார் பிடையோச்ச
விண்டான் இவனென் றவுணப் படையோர் வெருவா அலமந்தார். 54
மாறா கியஉக் கிரன்ஏ வுதலும் வருதண் டவன்மார்பில்
கூறா கியசா லிகைசிந் திடவே கொதியா வருகின்றான்
பாறா டுகளத் திடையீங் கிவனைப் பலியூட் டுவனென்னா
நூறா யிரம்ஆ சுகமோர் தொடையின் நொய்திற் செலவெய்தான். 55
வெய்தாம் அயில்வா ளிகள்உக் கிரன்மேல் விறல்சோ¢ அதிசூரன்
எய்தான் அதுமற் றவன்மேற் படவே எருவைப் பெருநீத்தம்
எய்தான் முழுதும் பெருகுற் றிடலும் விழுமத் தொடுசெற்றஞ்
செய்தான் ஒருமால் வரைகொண் டவுணன் தேர்மேற் செலவுய்த்தான்.56
அதிர்பொற் கழலான் விடுதிண் கிரியால் அதிசூ ரன்மான்தேர்
பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா மெனவுன்னா
உதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் மிசைநீலக்
கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடல்தீர்ப்பான். 57
வேறு
பாயும் வேலைஅப் பல்மணித் தேரினை
ஏய ஆற்றல்கொண் டீர்த்திடும் வாசிகள்
மாயும் வண்ணம றம்புரி உக்கிரன்
சீய மாமெனச் சென்றுதைத் தானரோ. 58
உதைக்க வெய்யவன் ஒண்பரி பாரிடைப்
பதைத்து வீழ்தலும் பையுளின் மாழ்கியே
சிதைப்பன் இந்தச் சிறியனை என்றுமெய்
புதைப்ப நூறு பொருசரந் தூண்டினான். 59
தூண்டு கின்ற் சுடர்க்கணை யாவையும்
ஈண்டி யேதன் எதிருறும் பெற்றியைக்
காண்ட லுங்கதை கைக்கொடவ் வுக்கிரன்
மீண்டி டும்படி வீசிநின் றார்க்கவே. 60
வேறொர் தேரிடை வெய்தென எய்தியே
ஊறு நீங்கிய உக்கிரற் கண்ணுறீஇ
மாறி தெய்வத மாப்படை தொட்டுனை
ஈறு காண்பன் இறந்தனை நீயெனா. 61
முன்னு பூசை முதலிய யாவையும்
முன்னி யேநின் றொருங்குடன் செய்தபின்
வன்னி மாப்படை வாங்கி வணங்கியே
மின்னு தண்சுடர் மீக்கொள வீசினான். 62
ஆசை தோறும் அழல்சிந்த மாற்றலன்
வீசு வெம்படை வீரத்தை நோக்கியே
ஈசன் மைந்தன் இணைமலர்த் தாள்களை
நேச மோடு நினைந்தனன் போற்றினான். 63
எவ்வெ வர்க்கும் இறையவ னாகியோன்
அவ்வ ழித்தன் அருள்செய உக்கிரன்
செவ்வி திற்செலுந் தீச்சரம் பற்றியே
கவ்வி நுங்கினன் கண்கனல் கான்றிட. 64
நுங்கு வான்றனை நோக்கி அரிமுகன்
துங்க மாமகன் தொல்புனல் மாப்படை
பொங்கு சண்டப் பொருபடை ஏவலும்
அங்க வற்றையும் பற்றி அருந்தினான். 65
காற்றின் வெம்படை ஏவினன் கைதவன்
ஆற்றல் உக்கிரன் அன்னது நுங்கினான்
தேற்று கின்றுழிச் செய்தவம் அன்றியே
ஏற்ற மான இரும்பொருள் யாவதோ. 66
மற்றும் அவ்வதி சூரன் மலரயன்
ஒற்றை வெம்படை ஓச்சலும் உக்கிரன்
பற்றி நுங்கவப் பங்கயன் தாதைபால்
பெற்றி ருந்த பெரும்படை ஏவினான். 67
ஒய்யெ னச்சென் றுருகெழு நாரணன்
பொய்யில் மாப்படை போந்திட ஆங்கதுங்
கையில வாங்கிக் கதுமென வாய்க்கொளா
வெய்ய உக்கிரன் மேயினன் என்பவே. 68
ஆன காலை அரிமுகன் காதலன்
யானி னிச்செய் இயற்கையென் னேயிவன்
தானவ் வீசன்கொல் கண்ணன்கொல் தாமரை
மேனி லாவிய வேதன்கொ லோவென்றான். 69
மூவ ராகிய மூர்த்திகள் அல்லதை
ஏவ ரேமற் றிதுசெயும் பெற்றியார்
ஆவ னாவன் அவர்க்குள் இவனெனாத்
தேவர் மாற்றலன் பின்னருஞ் செப்பினான். 70
சீற்றங் கொண்ட அவுணர் திரைக்கடல்
தோற்றங் கொண்டசவ் சூர்கெழும் உக்கிரன்
ஏற்றங் கண்டுழி என்செய்தும் என்றனர்
கூற்றங் கொண்ட உயிரிற் குலைந்துளார். 71
அண்ணல் வாசவ னாதிய ராகிய
எண்ணில் வானவர் யாவரும் இச்செயல்
கண்ணு றாஇகல் கண்டருள் நான்முகப்
பண்ண வன்முன் பணிந்திது கூறுவார். 72
எங்க ளால்வரும் எண்ணில் பெரும்படை
செங்க ணான்படை தீயநின் மாப்படை
அங்கி யாவும் அணுகஇப் பூதா¢கோன்
நுங்கு மாறென் நுவலுதி என்னவே. 73
இந்தி ராதியர் கேண்மின்கள் ஈங்கிவன்
அந்தி வான்சடை அண்ணல் வரத்தினான்
கந்தன் எந்தை கழலிணை போற்றியே
வந்து ளான்எவ் வலியையும் ஆற்றுவான். 74
எம்மை யாளுடை ஈசன் அருள்பெறுஞ்
செம்மை யானவன் செம்பொற் சிலம்படி
மும்மை யுந்தொழு முத்திபெற் றான்இவன்
எம்மி னும்பெரி யான்என்றும் ஈறிலான். 75
மைக்க ருங்கடல் வண்ணன்முன் ஏவிய
சக்க ரம்நுக ருந்தவத் தோனினும்
மிக்க ஆற்றலன் வெற்றியின் மேலையான்
உக்கி ரன்னென் றுரைத்திடும் பேரினான். 76
பண்டு நாமருள் பல்படை யாவையும்
உண்ட தோவியப் பொல்லையில எல்லையில்
அண்ட முஞ்சிதைத் தாக்குவன் ஈங்கிவன்
கொண்ட தொல்புகழ் கூறத் தொலையுமோ. 77
என்ன நான்முகன் எண்ணி இயம்பலும்
அன்ன கேட்டலும் அண்டர்கள் யாவருந்
துன்னு சென்னி துளக்கிப் பெருந்திறல்
இன்னு மாக இவற்கென் றியம்பினார். 78
வேறு
வான மேலிது நிகழ்ந்துழி மாறிலா அவுணர்
சேனை காவலன் பூதனை நோக்கிநிற் சிதைப்பல்
ஊன மாகிய படையென உன்னலை உமைபால்
ஞான நாயகன் படைதொடு வேனென நவின்றான். 79
மந்தி ரந்தனிற் பூசனை முதலிய வகுத்துச்
சிந்தை மேலுறு வௌ¤யோ டரன்படை செலுத்த
அந்த மில்லதோர் உலகெலாம் முறுவலால் அடர்க்கும்
எந்தை கொண்டதோ ருருவெனத் தோன்றிய திமைப்பில். 80
நஞ்சும் ஆரழல் நாகமும் நடுவன துருவும்
விஞ்சு பூதமுங் கணங்களும் வேறுபல் படையும்
எஞ்ச லில்லதோர் அங்கியும் போற்ற எவ்வுலகும்
அஞ்சி டும்படி நடந்ததால் அரன்படை யதுவே. 81
ஈசன் மாப்படை வருதலும் உக்கிரன் என்னும்
ஆசில் வீரன்றன் அங்கையிற் கதையினை அகற்றிப்
பாச நீக்குமஞ் செழுத்தினை விதிமுறை பன்னி
நேச மோடுகை தொழுதரன் பொன்னடி நினைந்தான். 82
ஆண்டை உக்கிரன் நிற்றலும் அஞ்சலி புரிவான்
மாண்ட தொல்படை இல்லவன் துதிசெயும் வாயான்
ஈண்டி வன்றனை அடுகிலன் யானென எண்ணி
மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம் விரைவில். 83
அண்ண லம்படை துறந்தவர் மேல்விடின் அவர்பால்
நண்ணு றாதுநம் பக்கல்வந் திடுமென நல்க
விண்ணு லாம்புகழ் அவுணர்கோன் பெறுதலின் விடையூ£¢
பண்ண வன்றனை அடைந்ததாங் கவனருள் படையே. 84
ஆன பெற்றிகண் டிங்கிவன் சிவன்கொலென் றயிர்த்துச்
சேனை காவலன் துளங்கினன் பூதர்கள் சிறந்தார்
வானு ளோர்மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம்
ஏனை வீரர்கள் விழிபொழி தாரைகாண் றிரிந்தார். 85
நீங்கு கின்றதோர் தானவர் குழுவினை நீவிர்
ஏங்கு கின்றதை விடுமின்கள் என்றுதேர் இழிந்து
பாங்கர் உற்றதோர் தண்டுகொண் டரிமுகன் பாலன்
வீங்கு தோளிடை எற்றினன் உக்கிரன் வெகுண்டான். 86
எற்று தண்டினை அங்கையால் உக்கிரன் என்போன்
பற்றி வாங்கியே அவன்றன துரம்பதை பதைப்பத்
தெற்றெ னப்புடைத் திடுதலும் நிலனிடைச் சேர்ந்தான்
மற்ற வன்றன துயிர்கொடு போயினன் மறலி. 87
துஞ்சி வீழ்அதி சூரனை நோக்கியே துகடீர்
மஞ்சு போலவே வரும்அசு ரேந்திரன் மனமும்
நஞ்சு மாமெனக் கொதித்தனன் அழலெழு நகையா
விஞ்சு பூதர்தங் குழுவின்மேற் சென்றனன் விரைவின். 88
கடிது சென்றசு ரேந்திரன் இந்திரன் கரத்தின்
நெடிய வில்லினும் ஆயிரத் திரட்டிமேல் நிமிர்ந்த
கொடிய வார்சிலை வாங்கியே குணத்தொலி கொளுவப்
படியும் வானமுங் குலைந்தன உயிரெலாம் பதைப்ப. 89
பூதர் அங்கது நோக்கியே தண்டமும் பொருப்பும்
பாத வங்களுந் தாரகன் தந்திடு பதகன்
மீது சென்றிட விடுத்தலும் அனையன விலக்கிச்
சோதி வெங்கணை இறுதிநாள் முகிலெனச் சொரிந்தான். 90
வடிகொள் வார்ணை விடுத்தலும் பூதர்கள் வலிதின்
விடுபி றங்கலே முதலிய இடையிடை வீட்டி
முடியுங் கைகளும் ஆகமும முகத்தொடு மொய்ம்பும்
அடியுஞ் சோ£¤நீர் கான்றிட அழுந்திய அவர்பால். 91
மற்றும் வெங்கணை உலப்பில தூண்டலும் மண்மேல்
அற்ற கைகளுந் துணிந்திடு தோள்களும் அடியும்
இற்ற கண்டமு மாகிவெம் பூதர்கள் இறப்பக்
கொற்ற வீரா¤ல் கனகன்என் பவன்எதிர் கொண்டான். 92
எதிர தாய்வரு கனகன்மேல் தாரகன் ஈந்த
அதிரும் வார்கழல் அன்னலோ£¢ வடிக்கணை அழுத்த
உதிர வாரியோ டன்னவன் தேர்மிசை உற்றான்
கதிரின் மேல்வரு செய்யகோ ளாமெனக் கடிதின். 93
பாகன் தன்னுயிர் உலந்திட உதைத்துவெம் பனைக்கை
நாகந் தந்திடு மதலைதன் வரிசிலை நாணைக்
காகம் போலவௌ¢ ளெயிற்றினாற் கீறிவெங் கறைசேர்
மேகந் தாரணி மிசைஇழிந் தாலென மீண்டான். 94
இழிந்து மால்வரை ஒன்றுகீண் டசுரரிந் தினாங்
கழிந்த சீர்த்தியான் மீமிசை ஓச்சலுங் கரத்தின்
அழிந்த வில்லினை நீத்துவே றொருசிலை அதனைக்
குழிந்த கண்ணுடைப் பூதர்கள் வெருக்கொளக் குனித்தான். 95
குனித்து நான்கிரு சுடுசரந் தொடுத்தறை கூவித்
தனித்து மேல்வருங் கனகன்ஏ வியகிரி சாய்த்துப்
புனிற்றி ளம்பிறை செக்கர்வான் நுழைந்தெனப் புயங்கள்
பனித்தி டும்படி அழுத்தினன் ஆயிரம் பகழி. 96
பகழி ஆயிரம் படுதலும் ஆடகன் பையுள்
நிகழ நிற்றலும் வேறொரு வலவனை நிறுவிப்
புகழில் தானவன் தேர்கொடு பூதர்மேற் போத
அகழு மால்வரை ஒன்றெறிந் துன்மத்தன் ஆர்த்தான். 97
அவன்எ றிந்திடும் பருப்பதம் விரைவில்வந் தடர்க்கக்
கவன வெம்பரி யாயின உலந்தன காணாப்
பவன வேகத்தின் வேறொரு தேர்மிசைப் பாய்ந்தான்
புவனம் உண்ணிய நின்றதோர் கடவுள போல்வான். 98
முந்து வெங்கணை உலப்பில தூண்டலும் முந்நீர்
செந்து கிர்க்கொடி போர்த்தெனக் குருதிநீர் செறிய
வந்த முற்றிலன் புவிமிசை இருந்தனன் ஆங்கே
மந்தன் என்பவன் தாரகன் புதல்வன்நோ வந்தான். 99
வருத லோடும்ஆங் கவன்மிசை ஐயிரு வாளி
குருதி காலுற வழங்கலும் எரியெனக் கொதியாய்
பரிதி மேவரத் தகுவதோர் பருப்பதம் பறித்துக்
கருதி ஏவினன் அவுணர்கோன் அங்கது கண்டான். 100
சென்று மார்பெதிர் ஏற்றலும் வந்துழித் தெறித்துக்
குன்று மீண்டுமற் றவன்புடை போயது கொடியோன்
ஒன்று போலிய ஆயிரம் பகழிகள் உய்த்தான்
நின்று மந்தன் அங்கயர்ந்தனன் சிங்கனும் நேர்ந்தான். 101
எடுத்து மால்வரை ஒன்றவன் உரத்தின்நேர் எறியத்
தடுத்தொர் வாளியின் அகற்றினன் அமரிடைத் தரியார்
விடுத்த தோர்கதை எறிதலும் அவனது விலக்கித்
தொடுத்து நூறுகோல் அழுத்தினன் சிங்கனும் தொலைந்தான்.102
ஒழிந்த சாரதத் தலைவர்க ளியாவரும் உடன்றே
அழிந்து நின்றனர் தாரகன் குமரன்ஆ சுகங்கள்
பொழிந்து மற்றுள பூதரை முடித்திடும் போதில்
கழிந்த துன்பொடும் இலக்கரில் தண்டகன் கண்டான். 103
தனது கார்முகம் வாங்கியே தண்டகப் பெயரோன்
முனையி ருங்கணை ஆயிரங் கொடியவன முகத்தின்
நனிபு குந்திட விடுத்தலும் நடலையுற் றிரங்கி
மனமவெ குண்டுபின் தன்பெருஞ் சிலையினை வளைத்தான்.104
வளைத்து நாலிரண் டம்பினைத் தண்டக மறவோன்
குளத்தின் மேற்பட விடுத்தலும் எழுந்தன குருதி
இளைத்து நின்றனன் தேர்மிசை அன்னவற் கிளையோன்
கிளத்து சோமுகன் தாரகன் மகன்எதிர் கிடைத்தான். 105
எதிர்பு குந்தவன் அகலமேல் ஐம்பதிற் றிரட்டி
கதிர்தெ றுங்கணை அவுணர்கோன் அழுத்தலுங் கவலா
அதிர்த ருந்தன தொண்சிலை வாங்கியா யிரமாம்
நுதிகொள் வெஞ்சரந் தூண்டினன் சோமுகன் நொடிப்பில். 106
பல்ல வங்களா யிரமும்அத் தாரகன் பாலன்
சில்லி யந்தனித் தேரினை வலவனைச் சிதைப்ப
மெல்ல வேறொரு தேர்மிசைப் பாய்ந்துவேல் ஒன்றை
ஒல்லை இங்கிவன் உயிரினை உண்கென உய்த்தான். 107
உய்த்த வேல்அவன் அகலமேற் படுதலும் முயங்கி
எய்த்து மற்றவன் தேர்மிசை மயங்கினன் இருப்ப
நித்தன் வேர்வுறு சோமுகற் கிளையவன் நெடுமால்
ஒத்த வன்மையன் விசயன்என் பவன்கடி துற்றான். 108
விசயன் ஆங்கொரு கொடுமரம் வாங்கியே வெகுண்டு
நிசித வெங்கணை ஆயிரம் உய்த்துநே ரில்லா
அசுரர் இந்திரன் வலவனைத் தடிந்துமற் றவன்கை
இசையும் வில்லொடு நாரியைத் துணிபட இறுத்தான். 109
முற்று நூலுணர் பாகுயிர் உலத்தலும் முனியா
இற்ற நாணொடு வார்சிலை துணியினை ஏந்திக்
கொற்ற மார்அசு ரேந்திரன் மத்திகை கொண்டு
பொற்றை அன்னதன் தேர்விடு வலவனின் பொலிந்தான். 110
தகுவர் கோன்ஒரு வலவனை நிறுவியோர் தண்டம்
இகலும் வன்மையால் எடுத்தனன் அவன்மிசை எறியப்
புகுது மெல்லையில் கண்டெதிர் விசயனாம் புகழோன்
மிகவும் எல்லையில் சரங்களைத் தூண்டினன் விடுத்தான். 111
தொட்ட தொட்டன கணையெலாந் துகள்படத் தொலைத்து
மட்டு லாந்தொடை விசயன்மார் பகத்திடை வந்து
பட்ட காலையில் அவன்றன திரதமேற் பதைத்து
விட்ட வில்லொடு குருதியுந் தானுமாய் வீழ்ந்தான். 112
விழுந்த காலையில் இலக்கரில் ஏனையோர் வெகுண்டு
பொழிந்த வாளியால் தாரகன் மகனொடு பொருதே
அழிந்தி யாவரும் இரிந்தனர் போதலும் அதுகண்
டுழந்த துன்பொடு வீரமொய்ம் பினன்விரைந் துற்றான். 113
வீர வாகுவேள் இணையடி போற்றியே வெகுண்டோர்
கோர வெஞ்சிலை வாங்கினன் நாணாலி கொளுவி
யாரும் வானவர் வியபபுற அவுணர்கள் அயரத்
தார காசுரன் மதலையை மறைத்தனன் சரத்தால். 114
மறைப்ப மெய்யெலாங் குருதிகொண் டிடலும்வல் லவுணன்
றிற்க டுஞ்சிலை ஒன்றினை வளைத்தவன் மிசையே
பிறைத்த லைக்கணை ஆயிரம் அழுத்தினன் பெரிதும்
உறைத்த செம்புனல் இருவரும் இளங்கதிர் ஒத்தார். 115
தார கத்திற லான்மகன் தூண்டியேழ் சரத்தால்
சூரர் இத்திறல் அண்ணல்கைச் சிலைதனைத் துணிப்ப
வீரன் மற்றொரு கார்முகம் வாங்கியே விடங்கால்
கூர யிற்கணை ஆயிரம் விடுத்தனன் குறியால். 116
ஏகும் வார்கணை தாரகன் மகன்சிலை இறுத்துப்
பாகன் ஆவியுண் டிரதமோ டயங்களைப் படுப்ப
வாகை இன்றியே வேறொரு தேர்மிசை வறியன்
போக லோடுமற் றன்னது கண்டனர் புலவோர். 117
வெருவ ரப்பொருந் தாரகன் மதலையை வீரன்
பொருது வெற்றிகொள் வான்கொலாம் இனியெனப் புகழ்ந்தார்
அரிய அற்புத மோவவன் வென்றிடல் அவுணன்
கா¤த ருஞ்சுதன் சிம்புளின் சுதனிவன் கழறின். 118
மாறொர் தேரிடைப் பாய்ந்தவன் ஒருதனு வளைத்து
நூறு கோல்விடுத் தவன்இர தத்தினை நூறச்
சீறி வானெழீஇ வீரவா குப்பெயர்த் திறலோன்
ஆறு மாமுக முதல்வனைப் பரவிநின் றார்த்தான். 119
உறைக ழித்துவாள் உருவியே உம்பரிற் படர்ந்து
சிறைக ழித்திடும் வரைபுரை அவுணர்கோன் தேர்மேல்
குறைக ழித்திடும் பணிகவர் மதியெனக் குப்புற்
றிறைக ழிக்குமுன் அவன்றனைக் கையிலொன் றெறிந்தான். 120
எறிந்த காலையில் இற்றதோர் கைத்தலம் இறலுங்
குறைந்த கையிடைச் சலசல இழிவன குருதி
செறிந்த நீலவொண் கிரிதனக் கொருபுடை சென்றே
உறைந்த தோர்கரும் பணியழல் மணியுமிழ்ந் தொப்ப. 121
கைய றுத்தலுந் தாரகன் தன்சுதன் கனன்று
மொய்யு டைக்கதை ஒன்றெடுத் தவன்மிசை மோத
ஒய்யெனத் *திறல் மொய்ம்பினன் வானெழுந் தொருதன்
செய்ய பொற்பதத் துதைத்தனன் அங்கவன் சிரத்தில். 122
( * பா-ம் - திரள்.)
காமர் தாளினால் உதைத்துவிண் படர்தலுங் கண்டு
தூம மார்விழி யான்அசு ரேந்திரன் தொடர்ந்தோர்
சேம வாள்கொடு வானெழ மேலையோன் சீறி
ஏம நாந்தகத் தால்அவன் தலையற எறிந்தான். 123
எறிந்த சென்னியு மியாக்கையும் இப்பரின் வீழ்ந்து
மறிந்து மற்றவன் மன்னுயிர் போயது வான்மேற்
செறிந்த விண்ணவர் ஆர்த்தனர் இன்னதோர் செய்கை
அறிந்த தானவக் கடலெலாம் ஓடின அன்றே. 124
மக்க ளாயினர் இருவரும் இறந்தது மலைந்து
பக்க மேயின தானைகள் இரிந்ததும் பாராத்
தொக்க பேரழல் உலகட எழுந்ததோற் றம்போல்
மிக்க சீற்றமேற் கொண்டனன் அண்டங்கள் வென்றான். 125
சீற்ற மேதகு காசிபன் மதலைபோர் செய்யும்
ஆற்ற லார்தமை அடுவனால் விரைந்தென மதித்துக்
காற்றின் முந்துசெல் தேரிடைக் கடிதுவந் தெய்திக்
கூற்றின் வெம்பசி தணிப்பகோர் சிலையினைக் குனித்தான். 126
வாணி போற்றிடு சயமகள் வீரமா மடந்தை
நீணி லைப்பட வேறுசோ பானத்தின் நெறிபோல்
பூண ளாவிய பொன்னவாஞ் சிலைதனிற் புணர்த்த
நாணின் ஓதையைக் காட்டினன் அணிவிரல் நகத்தால். 127
கரங்கொள் வில்லொலி கேட்டலும் பாரிடைக் கணங்கள்
மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையும்
உரங்கள் சிந்தினர் வீரமுஞ் சிந்தினர் உடலுஞ்
சிரங்க ளானவும் பனித்திட ஓடினர் சிதறி. 128
யாண்டு மாகியே இரிந்தனர் அல்லதிந் நிலத்தில்
வீண்டு ளார்சிலர் பதைத்துநின் றார்சிலர் வீழ்ந்து
மாண்டு ளார்சிலர் மயக்கமுற் றார்சிலர் மற்றும்
ஆண்டு பன்னிரண் டொழிந்தில தவுணன்வில் அரவம். 129
வேதன் அஞ்சினன் மால்முடி துளக்கினன் விண்ணோர்
நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன் நடுங்கிக்
கோதில் நல்லறம் அஞ்சின ஐவகை கொண்ட
பூதம் அஞ்சின உயிர்த்தொகை அஞ்சின பொருமி. 130
வஞ்சன் வார்சிலை நாணொலி கேட்டலும் மறத்தால்
விஞ்சு பூதமீ ராயிர வௌ¢ளமும் வெருவி
எஞ்சி யேயவண் நின்றிடா தி£¤ந்துள வென்றால்
அஞ்சு பூதங்கள் அஞ்சுவ தற்புதத் தனவோ. 131
சூரன் விற்பெரு முழக்கினைக் கேட்டலுந் துளங்கிப்
பாரி டத்தொகை அழிதர அன்னது பார்த்துப்
போரி யற்படைத் தலைவர்நூற் றெண்மரும் புகுந்து
மாரி யிற்பொழந் திட்டனர் வரைகளும் மரமும். 132
அன்ன வேலையிற் பத்துநூ றாயிர கோடி
பொன்னின் வெங்கணை அவுணர்கோன் முறைமுறை போக்கித்
தன்னு ழைப்புகும் வரையொடு தருக்களைத் தடிந்து
துன்னு பாரிடத் தலைவர்தம் யாக்கையைத் துளைத்தான். 133
முடிது ளைத்தனன் முகத்தினைத் துளைத்தனன் மொய்ம்பைத்
தொடையல் மார்பினைத் துளைத்தனன் பாணியைத் துளைத்தனன்
கடிது ளைத்தனன் குறங்கினைத் துளைத்தனன் கழல்சேர்
அடிது ளைத்தனன் பாரிடத் தலைவரும் அயர்ந்தார். 134
துளைத்து மெய்யினை வெஞ்சரம் போதலுந் துயர்கொண்
டிளைத்து நின்றனன் அதிபலன் வக்கிரன் என்போன்
களைத்து வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன் கபாலி
உளத்தின் வன்மைய தழிந்தனன் உன்மத்தன் உலைந்தான். 135
நீடு குன்றினை யேந்தியே அச்சுதன் நின்றான்
ஓடு கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன் உளைந்தான்
வாடு கின்றனன் மதிசயன் மேகனும் மருண்டான்
ஆடு றுந்துயர் அறிந்தனன் அண்டவா பரணன். 136
மேக மாலிஉ நடுங்கினன் சுப்பிரன் மெலிந்தான்
காக பாதன்மெய் பதைத்தனன் உதவகன் கவன்றான்
ஆகம வீழ்ந்திடு குருதியுள் அழுந்தினன் அசலன்
மாக வந்தன்நொந் திரங்கினன் அத்திரி மறிந்தான். 137
பத்தி ரன்சிறி திடைந்தனன் உடைந்தனன் பதுமன்
எய்த்த சைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன் இரிந்தான்
மத்தன் வைதுவெய் துயிர்த்தனன் பினாகிமெய் மறந்தான்
சித்தி ராங்கனுங் கனகனுந் துயர்க்கடல் திளைத்தார். 138
நெஞ்ச ழிந்தனர் மாலியும் நீலனும் நெடுங்கண்
பஞ்ச டைந்தனர் கும்பனும் நிகும்பனும் பதைப்புற்
றஞ்சி ஏங்கினர் சண்டியுந் தண்டியும் ஆவி
துஞ்சல் கூடினர் வாமனுஞ் சோமன்என் பவனும். 139
வெங்கண் உக்கிரன் எழுவதற் குரனிலன் வெகுண்டான்
சிங்கன் ஓய்ந்தனன் சுவேதசீ ரிடன்மறந் தீர்ந்தான்
சங்க பாலன்வீழ்ந் துருண்டனன் நந்தியுஞ் சலித்தான்
பிங்க லன்உயிர்க் கின்றிலன் உரோமசன் பெயர்ந்தான். 140
இனைய தன்மையால் இவர்முத லானநூற் றெண்மர்
அனிக வேந்தர்கள் போர்வலி இன்றியே அழியத்
துனைய மற்றது கண்டுநூ றாயிரத் தொகையோர்
கனையும் வார்சிலை வாங்கியே தூர்த்தனர் கணைகள். 141
தூர்த்து மற்றவர் மாறுகொண் டிடுவுழச் சூரன்
வேர்த்து வெங்கணை மாரிதூய் அனையன விலக்கி
ஆர்த்து வெஞ்சரம் ஆயிர கோடிதொட் டங்கண்
மூர்த்தம் ஒன்றினில் அனையவர் சிலைகளை முரித்தான். 142
முரித்து மற்றவர் வார்சிலை யெடுப்பதன் முன்னம்
திரித்தும் ஆயிர கோடிவெங் கணையினைச் செலுத்திப்
பரித்தி றம்பல பூண்டிடுந் தேர்களைப் படுத்தி
உரத்தில் அன்னவர்க் கிலக்கமா யிரங்கணை உய்த்தான். 143
உய்த்த வாளிகள் நெஞ்சுபோழ்ந் திடுதலும் உளைந்தே
எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனையகண் டிரங்கி
வித்த கங்கெழு வீரமார்த் தாண்டனாம் விடலை
கைத்த லங்கெழு சிலையொடு நேர்ந்தனன் கடிதின். 144
வாங்கு வில்லினன் எறிந்தநாண் ஒலியன்வார் கடல்கள்
ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன்மேற் கணையெனும் எழிலி
தூங்கு வித்தலுஞ் சரங்கள்தூய் அன்னவை தொலைத்துத்
தீங்க டுங்கணை ஆயிரம் நுதலிடைச் செறித்தான். 145
செறித்த காலையில் வீரருள் வெய்யவன் செயிர்த்து
மறித்தும் வெஞ்சரந் தூண்டவே ஆயிரம் வாளி
குறித்து வீசியே அவன்விடு கணையொடுங் குனிவில்
அறுத்து ரம்பிளந் தம்புபெய் தூணியும் அட்டான். 146
அட்ட காலையில் வீரமார்த் தாண்டன்உள் ளழுங்கிப்
பட்டு ளானென வீழ்ந்தனன் பரிசது நோக்கி
ஒட்ட லான்வலி அடக்குவன் யானென உருத்து
விட்ட தேரொடும் வந்தனன் அரக்கனாம் விறலோன். 147
வந்த வீரராக் கதனெனும் நாமத்து வலியோன்
கொந்து லாந்தொடை தூங்குதன் கொடுமரங் குனியா
ஐந்து நூற்றிரண் டடுசரந் துரந்திட அதுகால்
உந்தி ஆர்த்தனன் அவுணர்கோன் ஒராயிரங் கணைகள். 148
முட்டு வெங்கணை வீரராக் கதனெனும் மொய்ம்பன்
தொட்ட வாளியை விலக்கிஅங் கவன்சிலை துணிக்க
நெட்டி ருஞ்சுடர் வாளமொன் றேந்திநீள் விசும்பில்
எட்டு மாதிரக் கரிகளும் வெருவஆர்த் தெழுந்தான். 149
விண்ணெ ழுந்தவன் அவுணர்கோன் நின்றிடும் வியன்தேர்க்
கண்ணில் வாவியே ஆங்கவன் கொண்டகார் முகத்தைத்
துண்ணெ னச்சுடர் நாந்தகத் தெறிதலுஞ் சூரன்
வண்ண வார்சிலை முடிந்தில தொடிந்தது மணிவாள். 150
நெடிய வாட்படை இற்றிட விறலுடை நிருதன்
தொடையல் மார்பகத் தெற்றுவான் முயறலுஞ் சூரன்
படையி ழந்திடும் வலியிலற் கொல்வது பழியென்
றடியின் மேற்படுத் தெறிந்தனன் அண்டமேற் செல்ல. 151
அரக்கர் வீரனை அவுணர்கோன் எறிந்திட அலமந்
திரக்கம் எய்தியே வீழந்தனன் புவிமிசை இதுகண்
டுரக்க டுங்கணை மாரிகள் ஒன்னலன் தேரும்
கரக்க வீசிவந் தேற்றனன் மகேந்திரன் கடியோன். 152
சூரன் அங்கது விலக்கியே கணைமழை துரப்ப
வீரன் மற்றது சிந்தினன் பகழிகள் வீசிச்
சாரி வட்டம தாய்வர அவுணனுந் தக்கோன்
தேரை வட்டணை வந்தனன் சிலீமுகஞ் சிதறி. 153
திரியும் வட்டணை முறையினாற் சரமழை சிதறி
வருதி றத்தினால் ஐயம தாவவர் வடிவை
ஒருதி றத்தருந் தௌ¤கிலர் உணர்ந்திட அற்றோ
இருதி றத்தரும் வீரமா மகேந்திரர் என்றால். 154
ஆள ரிக்குடன் வந்தவன் அத்துணை அழன்று
கோள ரிக்குடன் வந்தவன் விடுசரங் குறைத்துத்
தாளின் முப்பது மருமமீ திருபது தடம்பொற்
றோளின் முப்பது கணைவிடுத் தவன்வலி தொலைத்தான். 155
வலிதொ லைந்தவன் வீழ்தலும் மாக்களின் தொகைமேல்
புலிய டைந்தென அவுணர்கோன் உரப்பினன் புகலும்
மெலிவில் ஆற்றலன் வீரதீ ரன்னெனும் வெய்யோன்
சிலைகு னிந்திடப் பகழிவான் நிமிர்ந்திடச் சென்றான். 156
சென்ற வீரதீ ரன்விடு கணையொடு சிலையை
ஒன்றொ ராயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த
குன்ற மன்னதோர் தேரையேழ் கணையினால் குறைப்ப
நன்று நன்றெனாத் தண்டமொன் றெடுத்துமேல் நடந்தான். 157
நடத்த லாகிய எல்லையில் பகழியோர் நான்கு
தொடுத்து மற்றவன் ஏந்திய தண்டினைத் துணித்துத்
தடத்த மார்பினும் மொய்ம்பினும் ஏழிரு சரங்கள்
விடுத்து மண்மிசை வீட்டினன் யாரையும் வென்றான். 158
ஆன காலையில் வீரமா மகேசனாம் அடலோன்
கூனல் வில்லினால் அரிதிவன் தன்வலி கோடல்
மான மார்திறல் மொய்ம்பற்கும் எனமனம் வலியா
ஊனும் ஆவியும் கவர்வதோர் தெய்வவேல் உய்த்தான். 159
வேல்வி டுத்துழிக் கண்டவன் வெஞ்சிலைக் குனித்துக்
கோல்வி டுத்தலும் ஆயிரம் அன்னவை குறைத்துச்
சூல்வி டுத்திடும் எழிலிபால் மின்வரும் தொடர்பின்
மால்வி டுத்திடா அவுணன்மார் புற்றதவ் வைவேல். 160
உற்ற தோரெ·கம் நுண்டுக ளாகிவிண் ணுலவிச்
சுற்று மாதிரஞ் சென்றது சூரன்மேல் வீரன்
மற்றொர் தண்டினை விடுத்திட எடுக்குமுன் வல்லோர்
சொற்ற சாபத்தின் முந்தும்ஏழ் கணையினைத் தொடுத்தான். 161
ஏழெ னப்படும் பகழயும் மகேசனாம் ஏந்தல்
பாழி மொய்ம்பினைப் பாழிய தாகவே படுத்த
வீழல் உற்றதங் கவன்உடல் உணர்ச்சிகள் வீந்த
சூழு கின்றதோர் மன்னுயிர் அடைந்தது துரியம். 162
மகேசன் என்பவன் மயங்கலும் மற்றது நோக்கிக்
ககேசன் மேல்வரும் இராகுவின் அவுணனைக் கனன்று
நகேசன் மங்கையோடிகலிவேங் கடகிரி நண்ணுங்
குகேசன் ஏவல்செய் வீரகே சரியெதிர் கொண்டான். 163
எதிர்பு குந்தவன் வணக்கியே நாணொலி யெறிந்த
துதிகொள் வார்சிலை தன்னையேழ் கணையினால் துணியா
அதிகு ரல்மணித் தேரைநூ றம்பினால் அறுத்து
நுதிநெ டுங்கணை அழுத்தின் ஆயிர நுதலின். 164
ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தஅம் புவியில்
பாய்த ருங்குரு திப்பெரு நதியொடு பாய்ந்து
சேயி ருங்குவ டொன்றினைச் செங்கையால் பறித்து
மாயை தந்திடு மதலைமேல் விடுத்தனன் மன்னோ. 165
எறித்த ருஞ்சுடா¢த் தபனனுஞ் சேடனும் இரங்கப்
பறித்தெ டுத்துமேல் வீசிய பராரையங் குன்றம்
வெறித்த ருந்தொடை அவுணர்கோன் விசிகமொன் றதனால்
அறுத்து மார்பினூ றயிற்கணை அழுத்தினன் அம்மா. 166
கரம்பு குந்திடுங் குனிசிலை உமிழ்ந்திடுங் கணைகள்
உரம்பு குந்திட வீரகே சரிமனம் உளைந்து
பரம்பு குந்திடும் அவுணர்கோன் தேர்மிசைப் பாயா
வரம்பு குந்தகுன் றன்னமார் பத்திடை அடித்தான். 167
வடித்த விற்படை அவுணர்கோன் மருமத்தின் வலிதாய்
அடித்த காலையில் வீரகே சரிதன தங்கை வெடித்த
தாமெனக் கீண்டது விண்டது சோரி
துடித்து யிர்ப்பொடு தேரிடை மறிந்தனன் துயரால். 168
வீர கோளரி பதைத்துமான் தேரிடை வீழச்
சூரன் மற்றிவற் கொல்வது பழியெனச் சூழா
ஓர்கை யால்அவன் தனையெடுத் தச்சுதன் உறங்கும
வாரி திக்கிடை எறிந்தனன் விண்ணவர் மருள. 169
பரந்த பாற்கடல் எறிதலும் வீழ்ந்தவன் பதைப்புற்
றரந்தை எய்தியே எழுந்துவிண் ணெறியின்மீண் டணுகி
முரிந்த தம்மினங் கூடினன் அங்கதன் முன்னம்
புரந்த ரப்பெய்£ வாகையான் ஏற்றெதிர் புகுந்தான். 170
ஏற்றெ திர்ந்திடு வீரமா புரந்தரன் என்பான்
ஆற்றல் வெங்கணை சொரிந்துபோர் செய்வனேல் அவற்றை
மாற்றி வென்றிடும் என்னையும் இவனென மதித்துக்
கூற்று வன்படை தொட்டனன் அவுணனைக் குறுக. 171
குறுகும் அப்படை வரத்தினை நோக்கியே கொடியோன்
முறுவல் செய்தனன் ஆங்கதற் கெதிருற முரணால்
உறுவ தோர்படை தொட்டிலன் இகழ்ந்திட உவன்மேல்
மறலி தன்படை பட்டுமாய்ந் திட்டது வரத்தால். 172
தண்ட கன்படை மாய்தலுஞ் சயங்கெழு மகவான்
முண்ட கன்படை எடுத்தனன் தொடுப்பதன் முன்னம்
கண்ட கன்சிலை வாங்கிநூ றாயிரங் கணையை
விண்ட கன்பெரு மார்பகந் திறந்திட விடுத்தான். 173
நிறந்த ருஞ்சுடர்க் கணைபுகுந் துரத்தினை நெறியாத்
திறந்து போயின வீரமா புரந்தரன் செங்கை
உறைந்த நான்முகப் படையொடுஞ் சோரிநீ£¢ உமிழ்ந்து
மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர்தம் மறலி. 174
தீர ராந்திறல் அவுணர்கள் பூதராஞ் சிதைவார்
சூர ராஞ்சிலை வல்லவர் நமரெலாந் தொலையும்
நீர ராஞ்செருச் செயலிது நன்றென நிகழ்த்தி
வீர ராந்தகன் வந்தனன் அந்தகன் வெருவ. 175
சார்ங்கம் அன்னதோ£¢ வலியதாய் மாமதன் தனுவாம்
ஈர்ங்க ரும்பென அரிபடு சிலைகுனித் தேற்றுக்
கார்ங்க ரும்புய லாமென நாணொலி காட்டிக்
கூ£¢ங்கொ டுங்கணை சிதறிநின் றார்ப்பிசை கொண்டான். 176
ஆ£¢ப்பெ டுத்தலும் அஞ்சினன் கதிரவன் அங்கம்
வேர்ப்பெ டுத்தனர் அமரர்கள் விஞ்சையர் விண்டார்
சீர்ப்பெ டைக்குலம் அலமரக் கின்னரஞ் சிந்திப்
பார்ப்பெ டுத்திரி கின்றன கேசரப் பறவை. 177
ஆன காலையில் வீரரந் தகன்விடும் அம்பின்
சோனை மாரியைக் கணைகளால் விலக்கியே சூரன்
ஊனும் ஆவியுங் கவருமா யிரங்கணை உய்ப்பத்
தானும் ஆயிரம் பகழிதொட் டன்னதைத் தடுத்தான். 178
தடுத்த காலையில் அவுணர்கோன் சினவிமுத் தலைசேர்
வடித்த வச்சிரச் சிலீமுகம் ஆயிரம் வல்லே
எடுத்து விட்டிட வீரரந் தகன்றமக் கெதிரா
விடுத்த பல்லவம் யாவையுஞ் சிந்தியே விரைந்த. 179
விரைந்து போய்விறல் அந்தகன் தேரினை வீட்டிக்
கரந்த னிற்சிலை ஒடித்துவீ ரத்தினைக் கலக்கி
உரந்த னிற்புகுந் துணர்வுண்டு சோரிநீர் உகுத்துப்
புரந்த ரற்குளந் துணுக்குறப் போயது புறத்தில். 180
விறல்ப டைத்திடும் அந்தகன் கணைபட வீழ்¢ந்து
மறல்ப டைத்திட ஆங்கது நோக்கியே மனத்தின்
உறல்ப டைத்திடு செற்றமும் மானமும் உகைப்பத்
திறல்ப டைத்திடு மொய்ம்பினான் அவுணன்மேற் சென்றான். 181
அரிகள் அச்சுறும் வீரவா குப்பெயர் அறிஞன்
இரதம் ஊர்ந்துவந் தேற்றலும் ஆங்கவன் எழில்சோ
உருவ நோக்குறா ஒற்றனாம் இவனென உன்னிப்
பெரிது வெஞ்சினம் எய்தியே அவுணர்கோன் பேசும். 182
எமது வீரமா மகேந்திரஞ் சாடிஎண் ணில்லாத்
தமரை அட்டனை தானைகள் அளப்பில தடிந்தாய்
குமரர் தங்களைக் கொன்றனை நின்னுயிர் கொண்டே
அமரின் ஆற்றலை இன்றொடே முடிக்குவன் அம்மா. 183
பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரின் பன்னி
ஒற்ற னாகியே இன்னும்வந் தாயெனின் உய்தி
மற்ற தேகடன் வார்சிலை பிடித்தனை மாண்டாய்
இற்றை வைகலோ நின்னுயிர்க் கிழைத்தநாள் என்றான். 184
தூதும் ஆகுவன் அமைச்சனும் ஆகுவன் துன்னார்
மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும் வேலோன்
ஓதி டும்பணி யாவையுஞ் செய்குவன் உலகில
ஏதும் வல்லன்யான் வேண்டுபோ£¢ புரிதியால் என்றான். 185
என்று வீரனோ திடுதலும் எரிந்தன நயனம்
தின்ற வாளெயி றிதழினை உரோமங்கள் சிலித்த
துன்று சீற்றமுள் ளெழுந்தது சூரனாம் அவுணன்
குன்ற மன்னவிற் குனித்தனன் நாணொலி கொண்டான். 186
சிலைப னித்திடக் குனித்திடு காலையிற் செம்பொன்
மலைப னித்தன பாரகம் பனித்தன வானதோய்
அலைப னித்தன அண்டமும் பனித்தன அங்கண்
தலைப னித்தனன் அரவினுக் கிறையவன் தானும். 187
வேறு
அம்முறை வேலையில் ஆடல்கொள மொய்ம்பின்
செம்மல்த னாது செழுங்கர முற்ற
மைம்மலி வார்சிலை வன்மையின் வாங்கிக்
கொம்மென நாணொலி கொண்டனன் ஆர்த்தான். 188
ஆர்த்திடு பேரொலி ஆங்கவன் வாங்குஞ்
சீர்த்தனு ஆர்ப்பொடு சென்றிடு காலை
மூர்த்தம தொன்றினின் முச்சக வைப்பும்
பேர்த்தென வேபெயர் குற்றன அன்றே. 189
அங்கது காலையில் ஆயிர கோடி
துங்கநெ டுங்கணை தூர்த்தனன் ஆர்ப்பப்
புங்கவ னுக்கிளை யான்புய லென்ன
வெங்கணை வீசி விலக்கினன் நின்றான். 190
விலக்கிய காலை வெகுண்டிவன் ஆவி
கலக்குவன் என்று கடுஞ்சரம் வெய்யோன்
இலக்கம் விடுத்திட ஏந்தல் தடுத்தான்
கொலைக்கணை ஆயிர கோடி தொடுத்தே. 191
வெற்றிகொள் வான்பினும் வெங்கணை கோடி
செற்றமொ டேசெறி வித்திடு காலை
மற்றவை சிந்தினன் வாளிகள் நூறு
நெற்றியில் விட்டனன் நீள்புய வீரன். 192
அச்சுத னாம்அவு ணன்குளம் எய்தி
மெய்ச்சரம் நூறும் விளிந்துபின் விண்ட
வச்சிர மாகிய மால்வரை ஒன்றின்
உச்சியின உற்றபொன் ஊசிகள் என்ன. 193
நூறயில் வாளி நுதற்கிடை சென்று
மூறில னாகி உறுந்திறல் நோக்கி
ஆறுமு கேசன் அயற்படை அல்லால்
ஈறுசெ யாதிவன் யாக்கையை என்றான். 194
என்றிடும் வீரன் இதற்பினும் வாளி
துன்றுபல் கோடி சொரிந்திட வெய்யோன்
வன்றிறல வெங்கணை யாலவை மாற்றி
ஒன்றுடன் ஏழ்கணை ஒண்புயம் உய்த்தான். 195
அம்பிரு நான்கும் அணைந்துடன் ஆடல்
மொய்ம்பினன் மொய்ம்புற மூழ்கியுள் ளுற்ற
செம்புனல் உண்டு செழும்பிடர் போழ்ந்தே
உம்பர் வெருக்கொள ஓடிய மாதோ. 196
ஓடிய வேலை யுளைந்திடு நெஞ்சன்
ஆடல்கொள் மொய்ம்பினன் அவ்வசு ரேசன்
பாடுறு தேர்விடு பாகர்தம் மெய்யில்
கோடிபல் கோடி கொடுங்கணை விட்டான். 197
அலகில் நெடுங்கணை ஆகம் அழுந்த
வலவர்கள் ஆற்ற வருந்தின ராகிப்
புலவொடு சோரி புறத்தில் விளங்க
இலவம லர்ந்தென யாரும் இருந்தார். 198
அங்கது நோக்கி அழன்றசு ரேசன்
செங்கணை ஐம்பது தீயென ஓச்சி
வெங்கண் விறற்புயன் மேதகு தேரைப்
பொங்குளை மாவொடு பொள்ளென அட்டான். 199
அட்டிடு காலை அடற்புயன் ஆங்கோர்
வட்டணை யாழிகொள் வையம தேறி
நெட்டழல் வாயு நெடும்படை தன்னைத்
தொட்டனன் ஆங்கது சூரன் அறிந்தான். 200
வேறு
வீறாகிய அசுரர்கிறை மிகமூரல் படைத்து
மாறாகவொர் படைதொட்டிலன் வரிவில்லொடு நிற்பர்
சூறாவளி அழல்மாப்படை சூரன்மிசை தாக்கி
ஊறாயின நூறாயிரம் உதிராயின பிதிராய். 201
காற்றின்படை கன்லின்படை கண்டம்பல வாகக்
கூற்றின்படை கதிரின்படை கூடத்தொடுத் திடலுஞ்
சீற்றங்கெழு சூரன்மிசை சென்றேயவை தாமும்
ஏற்றந்தனை இழந்தேகடி திறந்திட்டன அன்றே. 202
அருணன்படை மறலிப்படை அழிவெய்தலும் அம்மை
சரணந்தனில் வருசத்திகள் தருமைந்தரில் தலைவன்
வருணன்படை நிருதிப்படை மகவான்படை மூன்றும்
முரணங்கொடு கொடியோன்உர மொய்ம்பிற்புக விடுத்தான். 203
ஏற்றவை அவுணர்க்கிறை இருதோளுரம் எய்தி
வீயுற்றன அதுகாலையில் வீரங்கெழு மொய்ம்பன்
மாயப்படை அவுணப்படை வல்லேசெல விடுப்பப்
போயப்படை யவன்மெய்யிடை புகுந்தேபொடி யான. 204
விண்ணோர்படை இவையாவையும் விளிவாதலும் வீரன்
நண்ணான்பெரு விறல்கண்டனன் நனிவிம்மித னாகி
மண்ணோடுயிர்த் தொகையாவையும் வகுத்தோன்படை நளினக்
கண்ணோன்படை யொடுகூட்டுபு கடிதிற்செல விடுத்தான். 205
விடுக்குற்றிடும் அயன்மால்படை விரைந்தேசினம் வீங்கி
அடுக்குற்றிடும் உருமுப்புகை அழல்கால்பல படைகள்
மடுக்குற்றிடு புணரித்தொகை வகுத்தெவ்வகை யுலகு
நடுக்குற்றிட அவுணற்கெதிர் நடந்திட்டன மாதோ. 206
ஆண்டேவரும் அயன்மால்படை அவுணன்தட மார்பங்
கீண்டேகுதும் என்றேஅவன் கிளர்தான்அக லத்தின்
மூண்டேசின மொடுதாக்கிய முழுமாமணி வயிரச்
சேண்டோய்கிரி துளைப்பான்முயல் சிறைவண்டின மெனவே. 207
மாயோன்படை உலகந்தரு மறையோன்படை அவுணத்
தீயோனுரந் தனிற்பாய்ந்து திருத்தொல்வலி சிந்தி
மீயோங்கிய அசுரேசரும் விண்ணோர்களும் நோக்கி
ஏயோவென வசையெய்தி இரிந்திட்டன அன்றே. 208
மீளுற்றவை இரியுஞ்செயல் விழிதீயுற நோக்கி
நீளுற்றிடு திறல்மொய்ம்பினன் நிமலன்வர முன்னிக்
கோளுற்றிடு பெரும்விம்மிதங் கொண்டுற்றிட அண்டம்
ஆளுற்றிடும் அவுணர்க்கிறை நகைசெய்திவை அறைவான். 209
முத்தேவரின் முதலாகிய மூவாமுதல் வரத்தால்
எத்தேவர்கள் படையுய்க்கினும் எனைவெல்கில எந்தப்
புத்தேள்படை விடினும்மெதிர் பொரவேஒரு படையும்
உய்த்தேதடை வினைசெய்கிலன் அவற்றின்வலி உணர்வேன். 210
ஊனீத்திடு தவிண்ணவர் உலகம்புகழ் அயன்மால்
தானீத்துள படையென்னிடை சார்கின்றதொர் தன்மை
மாநீத்தமெ லாமுண்டிடு வடவைத்தழல் அதனைத்
தேனீத்தொகை தசையீதெனச் சேருந்திறன் அன்றே. 211
தெரிந்திட்டனை நீயோச்சிய திறல்வெம்படை என்பால்
புரிந்திட்டதொர் வயமொன்றிலை பொள்ளென்றும் மேவி
முரிந்திட்டன மறிந்திட்டன முடிந்திட்ன பொடிந்தே
எரிந்திட்டன கரிந்திட்டன இடைந்திட்டன அல்லால். 212
வில்வன்மைகொள் சரவன்மையும் விண்ணோர்படைக் கலத்தின்
பல்வன்மையும் பிறவாகிய படைவன்மையும் இயல்பாம்
தொல்வன்மையுங் கண்டேயுனைத் தொலைவில்படை ஒன்றால்
கொல்வன்எனக் காலந்தெரி கூற்றாமென நின்றேன். 213
என்னாவசு ரன்செப்பலும் இளையோன்இனி ஒன்றால்
ஒன்னார்களில் தலைவன்வலி உணர்வேனென உன்னாத்
தொன்னாள்எயில் மூன்றட்டருள் தூயோன்படைக் கலத்தை
மன்னாரருள் புரிசிந்தனை வழிபாட்டோடு விடுத்தான். 214
விடுங்காலையின் இறைவன்படை விடம்வெங்கனல் அசனி
கொடுங்காலிருள் கதிர்வெய்யவன் கூற்றம்பல கூளி
தொடுங்கார்முகச் சரமாரிகள் சூலம்புடை சுற்ற
அடுங்காலமி தெனவேநெடி தார்த்துற்றதை யன்றே. 215
உறுகின்றதொர் படைநோக்கினன் உரமுற்றெனக் குடைந்தே
இறுகின்றதொர் படைமற்றல ஈசன்படை ஈதால்
பெறுகின்ற அப்படையாலிது பிழைசெய்குவல் என்னாச்
செறுகின்றதொ ரவுணர்க்கிறை சிவன்றொல்படை எடுத்தான். 216
ஊறேற்றிடு தன்சிந்தையின் உறுபூசனை நிரப்பி
ஆறேற்றிடு சடிலத்தவன் அடல்மாப்படை தொடுப்ப
நீறேற்றிடு மொய்ம்பன்விடு நிமலப்படை எதிர்போய்
மாறேற்றமர் புரிந்திட்டது வையத்தவர் வெருவ. 217
வேறு
காண்டகு நுதல்விழிக் கடவுள் மாப்படை
ஆண்டவை இரண்டும்நின் றாடல் ஆற்றியே
மாண்டிடும் உலகென வானம் போற்றிட
மீண்டன ஒல்லையில் விட்டு ளோர்கள்பால். 218
அன்னது நோக்கியே அசுரர் மேலையோன்
இன்னவை கொல்லுனக் கியன்ற வன்மைகள்
உன்னுயிர் இன்னினி ஒழிப்பன் காண்கெனாத்
தன்னெடுஞ் சிலைவளைஇச் சரங்கள் சிந்தினான். 219
துன்புறு அடிக்கணை சூரன் சிந்தலும்
தன்பெருஞ் சிலையினைத் தானும் வாங்கியே
முன்புற நெடுஞ்சரம் முகிலின் தூவினான்
பொன்புனை அலங்கலம் யுத்து வள்ளலே. 220
அத்தகும் எல்லையில் அவுணர் மன்னவன்
முத்தலை நெடுங்கணை மூவைந் தேவியே
வித்தக மொய்ம்புடை வீர வாகுவின்
கைத்தல வில்லினைக் கண்ட மாக்கினான். 221
சிலையது துணிதலுஞ் சீறி வீரனோர்
இலையுடை வேலினை யெடுத்து வீசலுந்
தொவறு வரம்பெறு சூரன் மார்பெனும்
மலையிடைக் குறுகியே மற்ற திற்றதே. 222
இற்றுழி அவுணர்கள் இறைவன் மாலயன்
மற்றுள கடவுளர் வலியுங் கொள்வதோர்
கற்றையங் கதிர்மணிக் கதையொன் றோர்ச்சினான்
வெற்றிகொண் டுலவிய வீர வாகுமேல். 223
திண்மைகொள ப·றலைச் சேடன் பாங்குளார்
எண்மரொ டொன்றியோர் இயற்கைத் தாகியே
உண்மலி யார்ப்புடன் ஒழுகிச் சென்றென
வண்மணி கறங்கிட மணித்தண் டுற்றதே. 224
வெங்கதை வருதலும் வீர வாகுவோர்
செங்கதை எதிருறச் செலுத்தி நிற்றலும்
அங்கதை நீறுசெய் தவன்றன் மார்பிடைத்
துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே. 225
மேக்குயர் பெருஞ்சின வீர வாகுவின்
மாக்கிளர் அகலமேல் வயிர மாக்கதை
தாக்கலும் விண்டது தாரைச் செம்புணீர்
தேக்கிய நதிகளில் திரைத்துச் சென்றதே. 226
ஆழ்ந்திடு சோரியன் அவுணன் தண்டினால்
போழ்ந்திடு மார்பினன் புகையும் நெஞ்சினன்
தாழந்திடும் விறலினன் தளரும் யாக்கையன்
வீழ்ந்தனன் அமரர்கள் வெருவி யோடவே. 227
ஆற்றலின் றாகியே அண்ணல் வீழ்தலும்
மேற்றிகழ வலவனாம் விசாலி என்பவன்
தேற்றுறு பான்மையைச் சிந்தித் தோர்புடை
காற்றெனத் தேர்கொடு கடிது போயினான். 228
போந்திடு காலையில் புலம்பி வீழந்துளான்
மாய்ந்திடுஞ சரதமாம் என்று மாறிலான்
ஆய்ந்தனன் சிலைனித் தப்பு மாரிதூய்க்
காய்ந்தனன் சென்றனன் கணத்தின் தானைமேல். 229
பொன்றிடா வரத்தினான் பூத சேனைமேற்
சென்றனன் கணைமழை சிதறிக் கோறலும்
நின்றவை இரிந்தன நெடிய தீங்கதிர்
என்றினை அடைந்திடு பனியின் ஈட்டம்போல். 230
தாக்கிகல் வீரருஞ் சயங்கொள் மொய்ம்பனும்
நீக்கமில் இராயிர நீத்தத் தானையும்
ஊக்கிய வலியழிந் துடைந்த தன்மையை
நோக்கினன் பன்னிரு நோக்கங் கொண்டுளான். 231
ஆண்டது வேலையில ஆறு மாமுகன்
பாண்டிலந் தேர்மிசைப் பாகை நோக்குறா
ஏண்டகு சூரன்மேல் இரதம் ஒய்யெனத்
தூண்டுதி என்றனன் சுரர்கள் போற்றவே. 232
வேறு
இணைஅறு முருகன் இவ்வா றிசைத்தலும் இனைய தோரா
உணர்வுறு பவனன் என்னும் ஒருதனிப் பாகன் நகர்
கணமணி செறிந்த பொற்பிற் காமரு கடவுட் டேரைத்
துணையறு சூரன் முன்னர்த் துண்ணெனத் தூண்டி உய்த்தான். 233
ஆயது காலை தன்னில் அவுணர்கோன் அநந்த கோடி
ஞாயிறு திரண்டொன் றாகி ஞாலமேல் இருளை ஓட்டிச்
சேயுயர் விசும்பை நீங்கிச் செருநிலத் துற்ற தென்னத்
தூயதோர் குமரன் போரில் தோன்றிய தோற்றங் கண்டான். 234
முண்டக மலர்ந்த தன்ன மூவிரு முகமுங் கண்ணுங்
குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங் கோல மார்பும்
எண்டரு கரமீ ராறும் இலங்கெழிற் படைகள் யாவுந்
தண்டையுஞ் சிலம்பும் ஆர்க்குஞ் சரணமுந் தெரியக் கண்டான். 235
சூரெனும் அவுணர் கோமான் தொல்லைநாள் நோற்ற வாறும்
பாரிடை முடிவின் றாகிப் பல்லுகம் இருந்த வாறும்
ஆரணம் அறிதல் தேற்றா ஆறுமா முகத்தெம் மையன்
பேரெழில் உருவம் நோக்கிப் பெரும்பயன் கோடற் கேயோ. 236
எஞ்சலில் அவுணர் செம்மல் இங்ஙனம் அமர தாற்றித்
துஞ்சிலென் தொலைவுற் றாலென் தூயவா லறிவின் மிக்கோர்
நெஞ்சினும் அளத்தற் கொண்ணா நிருமலக் குமர மூர்த்தி
செஞ்சுடர் வடிவங் கண்டு தீவினை நீங்கி உய்ந்தான். 237
பூவுல கண்ட மெல்லாம் புரந்திடுஞ சூரன் தன்னைத்
தீவினை யாளன் என்றே செப்புவர் சிறப்பின் மிக்க
மூவிரு முகத்து வள்ளல் முன்னவர்வந் தெய்தப் பெற்றான்
ஆவிவன் தவத்திற் கன்றி அறத்திற்கும் முதல்வன் அன்றோ. 238
இன்னமும் முனிவர் தேவர் யாவரும் இனையன் என்றே
உன்னருந் தலைமைத் தாகும் ஒருதனிக் குமரன் தன்னைத்
தன்னிரு விழியாற் கண்டான் தானவர்க் கிறைவன் என்றால்
அன்னவன் தவத்தின் பேற்றை ஆரறிந் துரைக்கற் பாலார். 239
பொருசமர் விளைப்பான் போலப் பொருக்கெனப் போந்து சூரன்
இருவிழி தன்னிற் காண்பான் எளிதுதன் வடிவங் காட்டி
அருளது புரிந்தான் என்னின் ஆதியங் குமரன் மாயத்
திருவிளை யாடல் யார்க்குந் தெரிகில போலு மன்றே. 240
சிந்தையால் அறிதற் கொண்ணாத் திருவுரு விழியாற் கண்டு
முந்துதான் நின்ற சூரன் முழுதுல கடுவான் நின்றோன்
மைந்தனாம் இவனென் றுன்னி மனத்தினில் வெகுளி தூண்டக்
கந்தவேள் தன்னை நோக்கி இனையன கழறல் உற்றான். 241
வேறு
சேனை யாய்நினைச் சூழந்தவர் செருவலி அழிந்து
போன போனதோர் மாதிரந் தெரிந்தில பூத
மான வீரரும் அழிந்தனர் சிலைத்தொழில் வல்ல
ஏனை யோர்களும் என்னொடு பொருதனர் இறந்தார். 242
இற்ற நின்பெரும் படைக்கெலாந் தலைவனாய் என்பால்
ஒற்று வந்துள வீரனும் பொதுயிர் ஒழிந்தான்
மற்று நீயொரு பாலனோ என்னொடு மலைந்து
கொற்றம் எய்துதி நன்றுநன் றுன்னுளக் குறிப்பு. 243
மேல தாகிய நின்னுடைத் தாதையும் விண்ணும்
ஞால மும்புரிந் துதவிய நான்முகத் திறையும்
மாலும் வெஞ்சமர் புரிதிறங் கருதிலர் மற்றோர்
பாலன் வல்லைகொல் என்னொடு போர்த்தொழில் பயில. 244
முந்தை நாள்வலி இல்லதோர் அடுக்கலும் முன்யான்
தந்த செல்வத்தின் மயங்கிய தாரகா சுரனும்
புந்தி நீங்கிய அவன்படைத் தலைவரும் போல
மைந்த என்னையும் நினைந்தனை போலுநின் மனத்தில். 245
தேக்கு சீரினேன் வரத்தியல் உன்னலை சிதையா
ஆக்கம் உன்னலை பெருமிடல் உன்னலை அடலின்
வீக்கம் உன்னலை படைத்திறம் உன்னலை வெம்போர்
ஊக்கம் உன்னலை சிறுவநீ பெருஞ்சமர்க் குற்றாய். 246
கமல மேலுறை பகவனும் மாயனுங் ககனத்
தமரர் செம்மலும் மாதிரக் கிழவரும் அழுங்கச்
சிமைய மங்கையும் இரங்குற என்னொரு சிலையால்
இமையொ டுங்குமுன் நின்வலி அழிக்குவன் என்றான். 247
வேறு
சூரனென் றுரைபெற் றுள்ள தொல்லையோன் இனைய தன்மை
வீரமுந் திறலுஞ் சீரும் வெகுளியுங் கொண்டு செப்ப
ஆரருள் உருவாய் நின்ற ஆதியங் குமரன் கேளா
மூரலுஞ் சிறிது தோன்ற இத்திறம் மொழிய லுற்றான். 248
வெற்றியும் உடையம் ஆற்றல் மிகுதியும் உடையம் மேன்மை
பற்றியும் உடையம் எண்ணில் படைகளும் உடையம் வீயாப்
பெற்றியும் உடையம் தானைப் பெருங்கடல் உடையம் என்று
மற்றினி அகந்தை கொள்ளேல் மாற்றுதும் வல்லை மன்னோ. 249
வரமிகு சிறப்பி னேமை மழவிளங் குமரன் கொல்லோ
பொருதுவென் றிடுவான் வல்லன் என்றுநின் புந்தி கொண்டாய்
பொ¤துநீ மடவை மாதோ பிரான்தனி நெற்றி நாட்டத்
தொருசிறு பொறியே அன்றோ உலகெலாம் அடுவ தம்மா. 250
அறிவுடை முதியர் என்றும் ஆண்டினை யோர்கள் என்றுஞ்
சிறியவர் பெரியர் என்றும் திருத்தகு வளத்தர் என்றும்
வறியவர் என்றும் வீரர் மதிக்கிலர் யாவ ரேனும்
விறல்வலி படைத்து நேரின் வெஞ்சமர் விளைப்பர் அன்றே. 251
நூற்றுடன் எட்ட தென்ன நுவலுறும் உகத்தின் காறும்
பேற்றுடன் இனிது வைகும் பெரியநின் வலியை இன்னே
தேற்றம துறாத கொள்கைச் சிறியநம் வன்மை தன்னால்
ஊற்றுடைப் பாலிற் புக்க உறையென அடுதும் என்றான். 252
வேறு
என்னு முன்வெகுண் டவுணர்கோன் இருநிலந் தன்னை
முன்ன ளந்தவன் போல் அண்ட முகடுதோய் வுற்ற
கொன்னெ டுஞ்சிலை ஒன்றினைக் கரத்தொடு குனிப்ப
அன்ன பான்மையைக் கண்டனன் ஆதியங் குமரன். 253
மால யன்சுரர் பல்லியம் இயம்பிவாழ்த் தெடுப்ப
ஆல மார்வனத் தெம்பிரான் ஆடிய அந்நாள்
மேலை மூதண்ட முகடுற எடுத்ததோர் வியன்தாட்
கோலம் என்னஓர் நெடுஞ்சிலை யெடுத்தனன் குமரன். 254
அடற்பெ ருந்திறல் சண்டிதன் பெருமிதம் அடக்கிப்
படித்த லந்தனை அருளுவான் ஆடல்செய் பரமன்
எடுத்த சேவடி பகிரண்டம் அட்டிட இயல்பால்
தடுத்த செங்கைபோல் குனித்தனன் அறுமுகன் தனுவை. 255
குனித்த வில்லிடைக் குமரவேள் நாணொலி கொண்டான்
அனைத்தும் அண்டங்கள் உடைந்தபேர் ஓதைபோல் அவுணன்
சினத்து மாறுதன் குணத்திசை எடுத்தனன் செகத்தில்
பனித்த டங்கடல் யாவுமார்த் துடைந்திடும் பரிசின். 256
அள்ளி லைப்படை அவுணர்கோன் அடுசர மழைதூய்
வள்ளல் தன்னையுந் தேரையும் உலகையும் மறைப்பத்
தௌ¢ளி திங்கிவன் விஞ்சையென் றெந்தைசிந் தித்துக்
கொள்ளை வெங்கணை துரந்தவை யாவையுங் குறைத்தான். 257
குறைத்த காலையில் சினவியே பின்னருங் கொடுநஞ்
சுறைத்த பொற்கணை பலதொட வாளிகள் ஓச்சி
அறுத்து மற்றவை குமரவேள் அவுணர்கோன் தன்னை
மறைத்து விண்ணெறி மாற்றினன் பகழிமா மழையால். 258
ஆன பான்மைசேர் பகழியின் படலிகை அவுணன்
சோனை வாளியால் துணித்திடை வீட்டியே சுரர்தஞ்
சேனை காவலற் கண்டனன் வினைத்தனை சிந்தி
ஞான நாயகத் தாணுவைக் காணுநற் றவர்போல். 259
கண்டு தீயவன் பத்துநூ றாயிரங் கணைகள்
அண்ட நாயகன் குமரன்மேல் விடுத்தலும் அவற்றை
எண்ட ருஞ்சர மாரியால் விலக்கியீ ரேழு
புண்ட ருங்கணை உய்த்தனன் ஆங்கவன் புயமேல். 260
கயப்பொ ருப்பினை உரித்தமால் வரைதரு காளை
வயப்பொ ருப்ப்பினை அடுகணை சூரனாம் வலியோன்
புயப்பொ ருப்பினை எய்தியே துளைத்தில புரைதீர்
அயப்பொ ருப்பையுற் றடல்பெறா அழலவன் கதிர்போல். 261
மாயை தன்மகன் வச்சிர யாக்கையின் வலியை
நாய கன்திரு மதலைகண் டழலெழ நகைத்துத்
தீய வன்பினும் விடுவதோர் சரமெலாஞ் சிந்தி
ஆயி ரங்கணை யால்அவன் சிலையினை அறுத்தான். 262
சிலையி னைத்துணித் திடுதலும் அவுணர்கோன் செயிர்த்து
மலையி னைத்தடிந் தவன்மிசை மலரயன் தந்த
இலைய யிற்படை ஒன்றினை எறிதலும் ஈரேழ்
கொலையு டைக்கணை தூண்டியே அன்னதைக் குறைத்தான். 263
ஏறு சேவகத் தவுணர்கோன் அயிற்படை இறலும்
வேறொர் கார்முகம் வாங்கினன் சரமழை வீசி
மாறு மாறவன் தொடுந்தொடுங் கணையெலாம் மாற்றி
ஆறு மாமுகன் புயத்திலேழ் வாளிதொட் டார்த்தான். 264
செங்க திர்ப்பகை தன்னைமுன் உதவினான் செலுத்தும்
வெங்க ணைத்தொகை பரஞ்சுடர் உருவமாம் விமலன்
துங்க மிக்கதோள் புக்குநுண் தூளிய தாகிப்
பொங்க னற்றிரள் பட்டதோர் பூளைபோன் றனவால். 265
மொய்யி ருங்கணை பட்டுநீ றாதலும் முருகன்
வெய்ய சூர்வலி நன்றுநன் றாலென வெகுளா
ஐயி ரண்டுவான் பகழியால் அவன்சிலை அறுத்துச்
செய்ய தேரையும் ஆயிரங் கணையினால் சிதைத்தான். 266
ஆழி பூண்டிடும் இரதமும் அங்கையிற் சிலையும்
பூழி ஆதலும் அரசனுக் கேமமாய்ப் போந்த
ஏழி ரண்டுநூ றாயிரந் தேரையும் இமைப்பின்
ஊழி நாயகன் தன்சர மழையினால் ஒழித்தான். 267
சேம மாகியே நின்றிடு தேரெலாஞ் செவ்வேள்
காமர் வாளியால் சிதைத்தலும் அன்னது கண்டான்
தூம வெங்கனல் தூண்டிய விழியுடைச் சூரன்
ஏம மாகியே கொண்டிடு சூலமொன் றெறிந்தான். 268
நண்ண லன்விடு முத்தலைப் படையைநாற் கணையால்
பண்ண வன்திரு மாமகன் இருதுணி படுத்துத்
துண்ணெ னக்கணை ஏழினால் அவன்குடை துணியா
அண்ண லஞ்சுடர் முடியையோர் கணையினால் அறுத்தான். 269
மணிப டுத்திய மவுலியை அறுத்தபின் வலியோன்
பணிப டுத்தமெய் எங்கணும் பகழிகள் போக்கி
அணிப டுத்தியே புனைதரு மதாணிகள் அனைத்தும்
துணிப டுத்தினன் மறைகளுந் துணிந்திடற் கரியோன். 270
ஆன காலையில் சூரபன் மாவெனும் அரசன்
மான வன்மையில் குறைந்தது நோக்கிமா டுள்¢ள
சேனை காவலர் நாற்படை தன்னொடுஞ் சேர்ந்து
சோனை யாப்படை வழங்கியே குமரனைச் சூழ்ந்தார். 271
ஏழு நேமியும் எறிந்துமே ருவைவளைந் தென்னக்
கேழில் பல்படை வீசியே ஆர்த்துடன் கிளர்ந்து
சூழும் வெய்யவர் தானையைக் கண்டனன் தொன்னாட்
பூழி யாகவே அவுணரூர் அட்டவன் புதல்வன். 272
குருதி வேற்படை கொண்டவன் தன்புடைக் குழுமிப்
பொருதி றற்பெருந் தானையைப் பொள்ளென அடுவான்
கருதி யாங்கொரு கரத்தினில் இருந்திடு கடவுட்
பரிதி யம்படை தொட்டனன் இரவியிற் படர. 273
இலகும் வெய்யவன் நடுவுநாள் யாமத்தின் ஏகி
அலகில் பேரிருள் அட்டென ஆழிபோய் அவுணர்
தலையும் ஆகமுங் கைகளும் அடிகளுந் தடந்தோள்
மலையும் வீசிய படைகளுந் துணித்தது மன்னோ. 274
மேனி லாவிய தேர்களைத் துணித்திடும் வெங்கண்
மான யானைக ளியாவையும் துணித்திடும் வயமாத்
தானை யாவையும் துணித்திடுஞ் சமரினைத் தாங்குஞ்
சேனை காவலர் யாரையும் துணித்திடுந் திகிரி. 275
அரந்து ணித்தவாள் அவுணர்கள் அடுசமர் உன்னின்
உரந்து ணித்திடும் இகழின்நாத் துணித்திடும் உரப்பில்
சிரந்து ணித்திடும் படைதொடு முயற்சிகள் செய்யிற்
கரந்து ணித்திடும் எதிர்ந்திடில் துணித்திடுங் கழல்கள். 276
குடைது ணித்திடும் கவரிகள் துணித்திடும் கொடியின்
தொடைது ணித்திடும் தேர்நிரை பூண்டமான் தொகையின்
இடைது ணித்திடும் அவுணர்தங் கரங்களின் இருந்த
படைது ணித்திடும் துணித்திடும் பல்லியத் தொகையும். 277
கொற்ற மிக்கதோர் கோல்கொடு வலியுடைக் குலாலன்
சுற்றி விட்டிடு திகிரியின் விரைவொடு சுழன்று
பற்ற லார்பெருந் தானையைப் ப·றுணி படுத்தி
ஒற்றை நேமியம் பெரும்படை திரிந்ததால் உலவி. 278
போர ழிந்திடும் அவுணர்தம் உடற்குறை புகையாச்
சோரி வன்னியா அதனிடைத் துணிந்துவீழ் பரியும்
தேரும் யானையும் அவிகளா எம்பிரான் திகிரி
வீர மாமகம் ஒன்றியற் றுவதென விளங்கும். 279
வெஞ்ச மாத்தொழில் புரிதரும் அவுணரை வீட்டி
வஞ்ச கத்தொடு மாயமாம் பேரிருண் மாற்றி
எஞ்ச லுற்றிடுங் குருதியம் பெருநிறம் எய்திச்
செஞ்சு டர்க்கதி ராயதால் அறுமுகன் திகிரி. 280
நச்சு தன்னிடத் தமலையை இருத்திய நம்பன்
இச்சு தன்தனி ஆழிசென் றாடுறும் இயல்பை
அச்சு தன்கரத் தேந்திய நேமிகண் டதனை
மெச்சு தன்மையிற் புகழ்ந்தது விம்மித மேவி. 281
தீர்த்தன் உய்த்திடு நேமியம் பெரும்படை செருவில்
ஆர்த்த தானைநூ றாயிர வௌ¢ளமு மடைய
மூர்த்தம் ஒன்றினில் துணித்தது மூவிரு முகத்தோன்
வார்த்தை யால்அவை முழுவது மாற்றிய வாபோல். 282
ஆடல் உற்றவேற் பண்ணவன் அலர்கதிர்ப் பரிதி
பாடு சுற்றிய அவுணர்கோன் தானையைப் படுத்து
மோடு பெற்றதொல் புகழொடு மீண்டது முளிபுற்
காடு முற்றவுந் தனிபடர்ந் துண்டதோர் கனல்போல். 283
கைம்ம லிந்திடு குடைபல காம்பிடை துணிந்து
மெய்ம்ம லிந்திடு விழுநிணச் சேற்றிடை வீழ்ந்து
பொம்மல் கொண்டுநிற் புறுவன பூவலர் தடத்திற்
செம்மல் கொண்டமர் தாமரைக் காடுபோல் திகழ |