kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம்





உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

2. அ சு ர கா ண் ட ம்

* * * 37. அ ச மு கி சோ க ப் ப ட ல ம் அறைபடு கழலினான் அவுண மாதர்கை எறிதலுங் குருதிநீர் எழுந்த தன்மையால் திறல்கெழு வெய்யசூர் திருவைச் சுட்டிடுங் குறைபடு ஞெகிழியின் கோலம் போலுமே. 1 திரைந்தெழு குடிஞைபோல் குருதி சென்றிடக் கரந்துமி படுதலுங் கவன்று வீழ்ந்தனள் வருந்தினள் அரற்றினள் மறிமு கத்தினாள் விரிந்திடு கனலுடை வேலை போன்றுளாள். 2 மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள் வெருண்டனள் நிலனுற வியன்கை எற்றினள் உருண்டனள் வெரிநுடன் உரமுந் தேய்வுறப் புரண்டனள் செக்கரிற் புயலிற் றோன்றுவாள். 3 புரந்தரன் தேவியைப் பொம்மெ னப்பிடித் துரந்தரு வாயிலிட் டுண்பன் ஈண்டெனா விரைந்தெழும் சென்றிம் மீளும் வீழ்ந்திடும் இருந்திடும் சாய்ந்திடும் இரங்குஞ் சோருமே. 4 கடித்திடும் இதழினைக் கறைகண் மீச்செலக் குடித்திடும் உமிழ்ந்திடும் குவல யத்திரீஇத் துடித்திடும் பெயர்ந்திடும் துளக்குஞ் சென்னியை இடித்தெனக் கறித்திடும எயிற்றின் மாலையே. 5 திகைத்திடும் நன்றுநஞ் செய்கை ஈதெனா நகைத்திடும் அங்குலி நாசி யில்தொடும் புகைத்தென உயிர்த்திடும் புவியைத் தாள்களால் உகைத்திடும் புகையழல் உமிழும் வாயினால். 6 உம்மென உரப்பிடும் உருமுக் காண்றென விம்மெனச் சினத்திடும் எரிவி ழித்திடுந் தெம்முனைப் படையடுஞ் சேனை வீரனை விம்மிதப் படுமுடல் வியர்க்கும் வௌ¢குமே. 7 அற்றிடு கரத்தினை அறாத கையினால் தெற்றென எடுத்திடும் தெரிந்து நோக்கிடும் ஒற்றிடும் விழிகளில் உகுக்குஞ் சோரிநீர் இற்றெவர் பட்டனர் என்னின் என்னுமே. 8 வீவதே இனியெனும் வினையி னேன்றனக் காவதோ இ·தெனும் ஐய கோவெனும் ஏவரும் புகழ்தரும் எங்கள் அண்ணர்பாற் போவதெவ் வாறெனப் புலம்பு கொள்ளுமே. 9 காசினி தனில்வருங் கணவர் கைதொடக் கூசுவ ரேயெனுங் குறிய பங்ககெனப் பேசுவ ரேயெனும் பிறரும் வானுளோர் ஏசுவ ரேயெனும் என்செய் கேனெனும். 10 தேவர்கள் அனைவருஞ் சிந்தித் தென்கரம் போவது புணர்ந்தனர் பொன்று வேன்இனி ஆவதன் முன்னரே அவரை யட்டுல கேவையும் முடிப்பனென் றெண்ணிச் சீறுமே. 11 பாருயிர் முழுவதும் படுத்தி டோவெனும் ஆரழல் வடவையை அவித்தி டோவெனும் பேருறு மருத்தினைப் பிடித்தி டோவெனும் மேருவை அலைத்தனன் வீட்டு கோவெனும். 12 பீளுறும் எழிலிகள் பிறவும் பற்றியே மீளரி தெனும்வகை மிசைந்தி டோவெனும் நாளினை முழுவதும் நாளு டன்வருங் கோளினை முழுவதுங் கொறித்தி டோவெனும். 13 சீர்த்தகை இழந்தியான் தெருமந் துற்றது பார்த்திக ழுங்கொலஇப் பரிதி வானவன் ஆர்த்திடுந் தேரொடும் அவனைப் பற்றியே ஈர்த்தனன் வருவதற் கெழுந்தி டோவெனும். 14 கண்டதோர் பா¤தியைக் கறித்துச் சூழ்ச்சிசெய் அண்டர்கள் யாரையும் அடிசி லாகவே உண்டெழு கடலையும் உறிஞ்சிக் கைபுறத் தெண்டிரை தனிற்கழீஇத் திரும்பு கோவெனும். 15 செந்நலம் நீடிய தென்னங் காயிடைத் துன்னிய தீம்பயன் சுவைத்திட் டாலெனப் பின்னுறு மதியினைப் பிடித்துக் கவ்விமெய் இன்னமிர் தினை நுகர்ந் தெறிகெ னோவெனும். 16 இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச் செந்துவர்க் காயெனச் சேர வாய்க்கொளா ஐந்தரு இலைகளா அவற்றுள் வெண்மலர் வெந்துக ளாக்கொடு மிசைகெ னோவெனும். 17 தாக்குகோ பணிகளைத் தலைகி ழக்குற நீக்குகோ பிலம்படு நிலயத் தோரையுந் தூக்குகோ புவனியைச் சுழற்றி மேலகீழ் ஆக்குகோ மாலென அருந்து கோவெனும். 18 வேறு ஆரும் அச்சுற இனையன அசமுகி வெய்யாள் சூரன் தங்கைமா லுளத்தினள் இறப்பது துணிவாள் பேரிடும் பையள் தொலைவுறா மானமே பிடித்தாள் வீர வன்மையள் ஆதலின் உரைத்தனள் வெகுண்டாள். 19 வெகுளு மெல்லையில் கண்டனள் துன்முகி வெய்ய தகுவர் தங்குலத் துதித்தனள் ஆயினுந் தகவின புகுதி சால்புணர் புந்தியள் ஆதலிற் பொருக்கென்று இகுளை முந்துற வந்தனள் இனையன இசைத்தாள். 20 வைய மென்செயும் வானக மென்செயும் மற்றைச் செய்ய வானவர் என்செய்வர் வரைகளென் செய்யும் ஐய மால்கடல் பிறவுமென் செய்திடும் அவனால் கையி ழந்திடின் உலகெலாம் முடிப்பது கடனோ. 21 பாரும் வானமுந் திசைகளும் பல்லுயிர்த் தொகையுஞ் சேர வேமுடித் திடுவதை நினைந்தனை செய்யின் ஆரும் நின்றனை என்செய்வர் அவையெலா முடைய சூர னேயுனை முனிந்திடும் அவன்வளந் தொலையும். 22 ஆத லான்மனத் தொன்றுநீ எண்ணலை அவுணர் நாத னாகிய வெய்யசூர் முன்னுற நாம்போய் ஈதெ லாஞ்சொலின் இமையவர் கிளையெலா முடிக்கும் போத லேதுணி வென்றனள் பின்னரும் புகல்வாள். 23 வேறு ஞானமில் சிறுவிதி நடாத்தும் வேள்வியில் வானவர் தங்களின் மடந்தை மார்களில் தானவர் தங்களில் தத்தம் மெய்களில் ஊனமில் லோரையாம் உரைக்க வல்லமோ. 24 நினைவருங் கண்ணுதல் நிமலற் கேயலால் அனையனை அடைதரும் அறிஞர்க் கேயலால் எனைவகை யோர்க்கும்எவ் வுயிர்க்கும் ஏற்பதோர் வினைபடும் இழிதுயர் விட்டு நீங்குமோ. 25 ஆகையின் மங்கைநீ அரற்றல் வௌ¢கியே சோகமுங் கொள்ளலை துயரும் இன்பமும் மோகமும் உயிர்க்கெலாம் முறையிற் கூடுமால் ஏகுதுங் எழுகென இயம்பித் தேற்றினாள். 26 வேறு மொழிந்து துன்முகி தௌ¤த்தலும் நன்றென முன்னா எழுந்து துண்ணென அசமுகி என்பவள் இலதாய்க் கழிந்த துன்பொடு நின்றதோர் சசியினைக் காணூஉ அழிந்த மானவெந் தீச்சுட இனையன அறைவாள். 27 துப்பு றுத்திய அண்டங்கள் யாவினுஞ் சூரன் வைப்பு றுத்திய திகிரியும் ஆணையும் வழங்கும் இப்பு றத்தினில் ஔ¤ப்பினும் இதுவன்றி அண்டத் தப்பு றத்தினில் ஔ¤ப்பினும் பிழைப்புமக் கரிதே. 28 மறைத லுற்றிடும் இந்திரன் தன்னைஇவ் வனத்தின் உறைத லுற்றிடும் உன்றனை ஒழிந்தவா னவரை இறைத னிற்பற்றி ஈர்த்துப்போய் என்னகர் தன்னில் சிறைப டுத்துவன் திண்ணமெங் கோமகன் செயலால். 29 உங்கள் தம்மையான் சிறைபடுத் தேன்எனின் உலகம் எங்கு மாள்கின்ற சூரபன் மாவெனும் இறைவன் தங்கை யன்றியா னெனதுரந் தனிலெழுந் தனவுங் கொங்கை யன்றியான் பேடியே குறிக்கொளென் றகன்றாள். 30 ஆகத் திருவிருத்தம் - 1633 - - - 38. இ ந் தி ர ன் மீ ட் சி ப் ப ட ல ம் அகல நின்றதோர் வீரமா காளனாம் அடலோன் உகவை யோடுறு சசியினை நோக்கிநின் னுளத்தில் தகுவர் தங்களுக் கஞ்சலை அன்னையுன் தலைவன் புகுதும் எல்லையும் அளிப்பன்ஈண் டுறைகென்று போனான். 1 போன காலையிற் புலோமசை அடவியம் புறனோர் மானி னம்பிரிந் தற்றென அவ்வனம் வைகிக் கோன வன்வினை முற்றிய நோற்றனள் குறிப்பால் ஆன பான்மையை நாரத முனிவரன் அறிந்தான். 2 மேலை வௌ¢ளியம் பருப்பதந் தனில்விரைந் தேகிச் சீல விண்ணவர் தம்முடன் சிவனடி பரவக் கால மின்றியே இருந்திடும் இந்திரன் கடைபோய் ஞாலம் வைகிய புலோமசைக் குற்றவா நவின்றான். 3 நவின்ற வாசகங் கேட்டலும் மகபதி நனியுட் கவன்று தேறியே முனிந்துபின் இறையருள் கருதி அவன்றன் மாமுறை தூக்கியே தன்னைநொந் தழுங்கித் துவன்ற தேவரோ டெழுந்தனன் அரன்புகழ் துதித்தே. 4 வந்து நந்தியெம் மடிகளின் அடிமுறை வணங்கி அந்த மில்பகல் வேலைநோக் குற்றனம் அமலன் சிந்தை செய்தெமை யருள்புரிந் திடுகிலன் தீயேம் முந்தி யற்றிய தீவினைப் பகுதியை முன்னி. 5 கைம்மை யாம்பெயர் அணங்கினோர் பெறாவகை கறுத்த செம்மை யா£களத் தெம்பிரான் எமக்கருள் செய்வான் பொய்ம்மை தீர்தவம் இயற்றிட நிலமிசைப் போதும் எம்மை யாங்கருள் புரிந்தனை விடுத்தியென் றியம்ப. 6 நன்று போமென நந்தியெம் பெருந்தகை நவிலத் துன்று வானவர் தம்மொடுங் கழுமலந் துன்னி நின்ற வீரமா காளனைக் கண்டனன் நேர்போய்ச் சென்று புல்லியே முகமன்ஓர் அளப்பில செப்பி. 7 போதி ஐயவென் றனையனை ஐயன்பாற் புகுத்தி மாது நோற்றுழிக் குறுகியே அவள்துயர் மாற்றிக் கேதம் எய்திய அசமுகி சூளுரை கேளா ஏது செய்வதென் றுன்னினன் இமையவர்க் கிறைவன். 8 சுடர்ப்பெ ருங்குலி சத்திறை சூழ்ந்தனன் துணியா அடுத்த மங்கையை யுடன்கொடே விரைந்தவண் அகன்று புடைக்கண் வந்திடுங் கடவுளர் தம்மொடும் புராரி எடுத்த வார்சிலைப் பொற்றையிற் கரந்தனன் இருந்தான். 9 ஆகத் திருவிருத்தம் - 1642 - - - 39. சூ ர ன் அ ர சி ரு க் கை ப் ப ட ல ம் இன்ன பான்மையின் மகபதி இருந்தனன் இப்பால் முன்ன மேகிய அசமுகி வெய்யதுன் முகத்தாள் தன்னொ டேகியே மகேந்திரத் தனிநகர் அடைந்தாள் அன்ன காலையிற் சூரன்வீற் றிருந்தவா றறைவாம். 1 வேறு மீயுயர் கின்ற விண்ணினின் றிழிந்த விழுமிய மேதினி வரைப்பின், ஆயிர கோடி கொண்டவண் டத்தில் ஆடகப் பித்திகை அவற்றுள், தீயன விலக்கி நல்லன எடுத்துத் திசைமுகத் தவர்கள் செய் தென்ன, ஓய்வற விளங்கு தபனியப் பொதுவொன் றொராயிரம் யோசனை யுறுமே. 2 இத்தரை யுளதாந் தொல்லைஅண் டத்தில் இடையிடை எய்தியே இலங்கும், அத்தமால் வரைகள் கைபுனைந் தியற்றி அம்புயா சனர் பலர் கூடி, வைத்தெனச் சூரன் அரசியல் நடாத்தும் மன்றினில் ஆயிர கோடி, பத்தியின் நிறுவும் ஆடகத் தூணம் பரந்ததப் பருமையார் பகர்வார். 3 தொல்லையன் டத்தின் கண்டொறுங் கெழீஇய சுவணமா தரையெலாந் தொகைசெய், தல்லன விலக்கி நல்லன தெரிந்தே அமைத்த போல் அணிபெறு நிலத்தில், ஒல்லுறு புடையில் உம்பரில் அங்கண் உலப்பிலாக் குலகிரிக் குழுவிற், பல்லிருந் துணிசெய் தணிபடுத் தென்னப் பன்னிற ஓவியம் பயிலும். 4 பொன்னுலா அண்டத் தும்பர்க டோறும் பொருந்திய செக்கர்வான் புராரி, தன்னதா ணையினால் ஒருங்குசூழ்ந் தென்னத் தண்மலர் விதானமீத் தயங்கப், பன்னிரு கோடி யாகியெங் கணுஞ்சூழ் பகலவர் சிலவரே யன்றி, அன்னவர் பலரும் பணியிலுற் றென்ன அணி மணிக் கண்ணடி ஔ¤ரும். 5 மண்ணுலா அண்டத் திரவிகள் என்றூழ் வரம்பிலா மதிகளின் உளவாந், தெண்ணிலாக் கற்றை ஐம்பரு நிறத்த செல்லினம் யாவையுஞ் செறிந்தே, அண்ணலார் மேலைக் கம்பலஞ் சூழ்போய் அமர்ந்தென ஆயிடைக் கவரி, எண்ணிலா தனவும் ப·றுகிற் குழுவும் இடைவிராய் மிடைவன எங்கும். 6 பரக்குறும் அண்டந் தொறுந்தொறும் உளவாம் பகலினைப் பரிமுகத் தெரியின், உருக்கியொன் றாக்கித் தவிசென இயற்றி ஔ¤றுதா ரகையவட் குயிற்றித், தருக்குறு கின்ற மதிகளை மடங்கல் தகவுசெய் திருத்திய தென்னத், திருக்கிளர் அவையத் தவுணர்கோன் இருப்பச் சிறந்ததோர் அரியணை திகழும். 7 ஆனதோர் மன்றத் தரியணை மிசையே ஆயிர கோடியண் டத்தின், மேனிமிர் வடவை அங்கியும் விடமு மிசைந்தழி யாநெறி மேவித், தானவர் பரவக் கூற்றெலா மொன்றாய்த் தணப்பில்பேர் அணிகலந் தயங்க, வானிமிர்ந் துற்றா லென்னவெஞ் சூர மன்னவர் மன்னன்வீற் றிருந்தான். 8 மேலைநாள் அமலன் உதவுபல் லண்டம் மேவர நடாத்துதொல் லாணைக, கோலொடு வௌ¤ய சீர்த்திகள் முழுதுங் குறுகியே ஈருருக் கொண்டு, பாலுற வந்து நின்றதே யென்னப் பாங்கரில் அவுணர்கள் தாங்கும், வாலிய துணைசேர் தவளவெண் கவிகை மாமதிக் கடவுளை மலைய. 9 காருறழ் படிவத் துவரிகள் அனைத்துங் கண்ணகன் பாற்கடல் முழுதும், ஈருரு வெய்தி யெழுந்துமே லோங்கி இருந்தென வைகலுஞ் செலுமத், தாரக விறலோன் ப·றலைச் சீயத் தலைமையான் சார்ந்தயல் இருப்ப, ஆரழல் உருவப் பண்ணவ ரேபோல் அமைச்சருங் குமரரும் அமர. 10 எவ்வெலா அண்டத் துறைதரு மருத்தும் இரும்புனற் கிறைவரு மாகிச், செவ்விதின் ஒருங்கித் தத்தமில் உலவாச் சீகரம் படுபனி சிதறி, அவ்வயின் வேண்டும் அளவையிற் பலவாய் அவனடி பணிந் தெழுந் திறம்போல், மைவரை யனைய அவுணா¢கள் இரட்டும் வாலிய கவரிகள் வயங்க. 11 உரைத்திடும் அண்டந் தொறுந்தொறும் உள்ள உம்பரில் இயக்கர் கோன் உலகில், தரைப்பெரு வரைப்பில் பிறவிலுள் ளதனில் தவறிலா அறபுதத் தனவாத், தெரித்தனர் எடுத்துப் பொதிந்தென நறிய திரையன்மெல் லிலைதுவர்ப் பழுக்காய், விரைத்திடு சுண்ணங் கொள் கலம் பரியா வினைமுறை யோர்பலர் விரவ. 12 நின்றதோ ரேனை அருக்கருட் சிலரை நீரமுய்த் துள்ளகோ டிகமேற், பொன்றரை யுழியின் மணிசொரிந் தென்னப் புகட்டுறு தம்பலக் களாசி, மன்றதொல் லறிவர் திருத்தினர் பொருவ மற்றவை அவுணர்க ளேந்தித், துன்றிருந் துவர்க்கா யடைபிற பரிக்குந் தொழுவர்தங் குழுவொடு துவன்ற. 13 ஆழியங் கிரியிற் கதிர்மணி வெயிலும் அன்னது சூழ்ந்தபேர் இருளும், வாழிய அமுதும் உவரியும் அல்லா வாரிதி யும்பல மணியும், ஊழியி னிறுதி அமையமே லெல்லாம் ஒன்றிய தென்னமுன் னிருபால், கேழுறு பின்னர் அவுணர்மாத் தலைவர் கிளையொடு துவன்றினர் கெழும. 14 மின்னவிர் விசும்பின் அகட்டினை அளவி வெண்மதிக் கடவுண்மெய் யணுகிப், பின்னுறும் அமுத நீர்க்கடல் திளைத்துப் பெரும்புறப புணரியிற் படியா, இந்நில மருங்கில் வானகத் துள்ள எழின்மலர்க் காவுதோ றுலாவித், தன்னொலி யின்றி மென்மெல அசைந்து தண்ணென வசந்தன்முற் சார. 15 விண்படு நிறைநீர்ப் புதுமதிக் கடவுள் வியன்பனித் துவலையைத் துற்றுக், கண்படு துறக்கத் தண்டலைப் பொதும்பிற் காமரம் போதிடைக் கவிழ்த்தி, எண்படு பன்னாள் கழித்தபின் கவர்ந்தே எழிலிகள் கரந்துநின் றீண்டைத், தண்பனி உறைப்பிற் கண்ணுறாத் துவலை தணப்பறச் சிதறிடத் தம்மில். 16 தேனனர் ஐம்பால் உருப்பசி அரம்பை திலோத்தமை மேனகை முதலாம், வானவர் மகளிர் இயக்கர்தம் மகளிர் வலிகெழும் அரக்கர் தம் மகளிர், தானவர் மகளிர் விஞ்சையர் மகளிர் சாரணர் சித்தர்தம் மகளிர், ஏனையர் மகளி ரியாவரும் வெவ்வே றியற்படு களிநடம் இயற்ற. 17 ஐந்திறத் துருவங் காலையில் உரைப்பான் அமையமின் றாகியே தேவா, வந்தொரு புடையில் ஒதுங்கினன் இருப்ப மற்றவன் உதவுறுங் குமரர், நந்துறு பெருநீர்க் குடங்கரிற் கன்னல் நாடினர் நாழிகைப் பறையை, முந்துற விரட்டிப் பதந்தொறுஞ் சென்று முறை முறை உரைத்தனர் திரிய. 18 தேர்த்திடும் உழுவைச் சூழலிற் சிலமான் சென்றென அவுணர்தஞ் செறிவில், வேர்த்துடல் பதைப்ப வரும்பல முனிவர் வேறுவே றாசிகள் இசையா, ஆர்த்திடும் ஒலியாற் கேட்டில வாமென் றஞ்சினர் அவருறு புலத்தைப், பார்த்திடுந் தோறும் வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப. 19 திருக்கிளர் பொன்னாட் டிந்திரன் அல்லாத் தேவர்கள் யாவரும் அவுணர், நெருக்கினர் உந்த ஏகிநேர் புகுவோர் நெடுங்கடை காறுமுன் றள்ள, வெருக்கொடு சென்று மீண்டுமற் றாகி வியன்கடை காவலர் புடைப்பத், தருக்குறும் அவையங் காணிய பெறாது தம்முளங் குலைந்தனர் திரிய. 20 வெற்றவெங் கதத்தர் அவுணர்கஞ் சுகிசேர் மெய்யினர் வெறுக் கையஞ் சூரல், பற்றிடு சுரத்தர் செல்லெனுந் தெழிப்பர் பனிப்பிறை எயிற்றர் பல்லிமையோர், பொற்றட மகுடஞ் சிதறிடப் புடைப்போர் புயலுறு சூறையிற் றுரந்துஞ், சுற்றுற நிறுத்தும் இருத்தியும் புகுந்தோர் தொல்பெயர் செப்பிமுன் துதிப்ப. 21 பொன்றிகழ் கமலத் திதழெலாம் விரிந்த போதினிற் பொகுட் டிடை தோறும், மின்றிகழ் நுசுப்பில் திருமக்ள் பலராய் வீற்றுவீ ற்றிருத்தலே போலக், குன்றுறழ் கொங்கை மங்கையர் பல்லோர் கொண்டுதன் னுறையுளிற் சென்று, துன்றிய பலவாந் தீபிகைத் தட்டஞ் சொன்முறை யாசியிற் சுற்ற. 22 தென்னுறு பாலை குறிஞ்சியே மருதஞ செவ்வழி யென்னுநா னிலத்திற், பின்னகம் புறமே அருகியல் மற்றைப் பெருகியல் உறழவெண் ணிரண்டாய், மன்னிய நாதத் திசைகளிற் பிறவில் வரம்பில வாயபாட் டதனுட், கின்னரர் சித்தர் இயக்கர்கந் தருவர் கிளத்துமங் கலத்தன இசைப்ப. 23 மாகநல் வேள்வி ஆற்றிய திறனும் மதிமுடிப் பரனருள் அடைந்தே, ஏகிய திறனுந் தனதனை முதலா யாரையும் நிலையழித் தனவுஞ், சேகுறும் அண்டம் யாவையுங் கண்டு திருவுடன் அரசியற் றியதும், பூகத நிலையத் தவுணர்கள் பல்லோர் புடைதனில் முறைமுறை புகழ. 24 கார்த்திடும் அவுணர் திசையுளா ரேனோர் கைதொழூஉத் தனது நோன் கழற்கால், தூர்த்திடு மலருந் தொல்பெருங் கவியுந் தூநெறி முனிவரர் தொகையுஞ், சார்த்தினர் வரையா மந்திர நெறியால் தலைத்தலை யாசிகள் சாற்றிச், சேர்த்தனர் சிந்துந் துணருமக் கதமுஞ் சீர்த்தகால் வீசினன் திரிய. 25 ஆடியல் முறையை இயற்றினர் தமக்கும் அடைந்துதற் புகழுநர் தமக்கும், பாடியல் முறையில் வல்லுநர் தமக்கும் பரிவுசெய் தலைவர்கள் தமக்கும், பீடுறு மகுடங் கடகநூல் முதலாம் பேரணி மணித் துகில் பிறவும், மாடுறு நிதியும் ஏனவும் நின்று மலர்க்கைநீட் டினதொறும் வழங்க. 26 தேவரும் ஏனை முனிவரும் பிறருஞ் செய்துறாத் தங்கள்பா லன்றி, ஏவர்பா லானும் இறைவனாம் ஒருதான் ஏதம்நோக் குற்றனன் வெகுளின், ஆவிய திழப்பார் போல்வெரீஇப் புகழ்ந்தும் அவனுவப் புற்றிடின் உய்ந்தும், ஓவற நிற்பர் அசனிவீழ் தோறும் உரைக்குமந் திரத்தினோர் என்ன. 27 ஆகத் திருவிருத்தம் - 1669 - - - 40. அ ச மு கி ந க ர் கா ண் ப ட ல ம் இன்னன பலபல எய்தச் சூரனாம் மன்னவன் இருத்தலும் மற்றவ் வெல்லையில் தொன்னகர் அணித்துறத் துன்மு கத்தினாள் தன்னொடும் அசமுகி தான்வந் தெய்தினாள். 1 மோட்டுறு மகேந்திர முதிய மாநகர் கூட்டுறு திருவெலாங் குலைய முன்னவள் மாட்டுறு துணையொடு வந்துற் றாலெனக் கீட்டிசை வாய்தலைக் கிட்டி னாளரோ. 2 கெழுதரும் அசமுகக் கெடல ணங்குதன் பழிதரு கையினைப் பார்த்து நேர்ந்துளார் அழிதரு துன்புகொண் டழலில் சீறினார் இழிதரும் இச்செயல் யார்செய் தாரெனா. 3 மானமில் அசமுகி மகேந்தி ரப்புரந் தானுறு துயர்க்கொரு தாரி காட்டல்போல் ஊனுறு குருதிகை யுகுப்பச் சென்றுழி யானது கண்டனர் அவுணர் யாவரும். 4 வட்டுறு பலகையின் வல்ல நாய்நிரைத் திட்டனர் கவற்றினை இசைத்த சூளடுங் கிட்டினர் இடந்தொறுங் கெழுமி யாடினர் விட்டனர் அத்தொழில் விரைந்துற் றார்சிலர். 5 தெரிதரு கரியபொன் திரித்திட் டாலெனப் புரிதரு மருப்புடைப் புயலின் செச்சையை முரிவரு பேரமர் மூட்டிக் கண்டுளார் பரிவொடு பிரிந்தயல் படர்கின் றார்சிலர். 6 கார்ப்பெயல் அன்னதோர் கடாங்கொள் மால்கரி கூர்ப்புறு மருப்புமெய் குளிப்பச் சோரிநீர் ஆர்ப்பொடு தத்தமில் ஆடல் செய்வது பார்ப்பது விட்டனர் படர்கின் றார்சிலர். 7 துய்யதோர் கிஞ்சுகச் சூட்டு வாரணம் மொய்யொடு தன்னுயிர் முடியும் எல்லையுஞ் செய்யுறு வெஞ்சினச் செருவை நோக்கினார் ஒய்யென நீங்கியே யுறுகின் றார்சிலர். 8 ஊனமில் பலபணி யுடன்று சீறியே பானுவை நுகரவிண் படரு மாறென வானிகள் ஓச்சினர் வானிற் கைவிடா மேனிகள் வியர்ப்புற வெகுண்டுற றார்சிலர். 9 வாம்பரி தேர்கரி மானம் பாண்டில்கள் ஏம்பலோ டூர்ந்திட இயற்றுங் கற்பொரீஇ யாம்பொருள் அல்லதொன் றடைவ தென்னெனச் சோம்புதல் இன்றியே தொடர்கின் றார்சிலர். 10 குறிகெழு வௌ¤லொடு குற்றி நாட்டியும் அறிகுறி தீட்டியும் அவையி லக்கமா எறிகுறு படையினை எய்யுங் கோலினை நெறிதொறும் விட்டவண் நேர்கின் றார்சிலர். 11 நாந்தகம் ஆதியா நவிலுந் தொல்படை ஆய்ந்திடும் விஞ்சைகள் அடிகள் முன்னமாய் ஏய்ந்திடுங் கழகமுற் றியற்று மாறொரீஇப் போந்தனர் ஒருசிலர் பொருமல் மிக்குளார். 12 வாட்படு கனலிகால் வானின் கண்ணவாங் காட்புறு நரம்பியாழ் காமர் வீணைகள் வேட்புறும் ஈர்ங்குழல் மிடறு காலிசை கேட்பது விட்டவண் கிட்டி னார்சிலர். 13 நாடக நூல்முறை நுனித்து நன்றுணர் கோடியர் கழாயினர் கூத்தர் ஏனையோர் ஆடுறு கோட்டிகள் அகலுற் றங்ஙனங் கூடினர் ஒருசிலர் குலையும் மெய்யினார். 14 புலப்படு மங்கலப் பொருள்முற் றுங்கொடு நலப்படு வேள்விகள் நடத்திக் கேளடு பலப்பல வதுவைசெய் பான்மை நீத்தொராய்க் குலைப்புறு கையொடுங் குறுகுற் றார்சிலர். 15 மாலொரு மடந்தைபால் வைதது முன்னுறு சேல்விழி யொருத்திபாற் செல்ல வூடியே மேலுறு சினத்திகல் விளைக்க நன்றிது காலமென் றுன்னியே கழன்றுற் றார்சிலர். 16 தோடுறு வரிவிழித் தோகை மாருடன் மாடம திடைதொறும் வதிந்த பங்கயக் காடுறு பூந்தடங் காமர் தண்டலை ஆடலை வெறுத்தெழீஇ யடைகின் றார்சிலர். 17 சுள்ளினைக் கறித்தனர் துற்று வாகையங் கள்ளினைக் கொட்பொடு களிக்கும் நெஞ்சினார் உள்ளுறுத் தியபுலன் ஊசல் போன்றுளார் தள்ளுறத் தள்ளுறத் தளர்ந்துற் றார்சிலர். 18 அனையபல் வகையினர் அவளைக் கண்டுளார் பனிவரு கண்ணினர் பதைக்கும் நெஞ்சினர் கனலொடு தீர்ப்புகை காலு யிர்ப்பினர் முனிவுறு கின்றனர் மொழிகின் றார்இவை. 19 வேறு அந்தகன் ஒருத்தற் பேரோன் ஆடல்வல் லியத்தோ னாதி வந்திடும் அவுணர் தம்மை மதிக்கிலா வலியோர் தம்மை முந்துறு புரத்தை அட்டு முழுவதும் முடிப்பான் நின்ற செந்தழல் உருவத் தண்ணல் செய்கையோ இனைய தென்பார். 20 மேதியஞ் சென்னி வீரன் வெவ்வலி நிசும்பன் சும்பன் கோதறு குருதிக் கண்ணன் குருதியங் குரத்தன் முந்தே பூதலம் புரந்த சீர்த்திப் பொருவில்தா ரகனே பண்டன் ஆதியர் ஆயுள் கொண்ட ஐயைதன் செயலோ என்பார். 21 சிரபத்தி அளவை யில்£த் திறலரி ஒருநாற் றந்தக் கரபத்தின் அண்ணல் வானோர் யாரையும் கலக்கஞ் செய்ய வரபத்தி புரியா அன்னோர் வணங்கினர் அடைய அந்நாட் சரபத்தின் வடிவங் கொண்டான் தன்செய லாங்கொல் என்பார். 22 வண்டுளர் கமலச் செங்கண் மாயனுந் தூய நீலங் கண்டம தடைத்த தேவுங் கலந்தனர் தழுவிச் சேரப் பண்டவர் புணர்ப்புத் தன்னில் உருத்திரர் பரிசா லுற்ற செண்டுறு கரத்து வள்ளல் செய்கையே போலும் என்பார். 23 பிளிற்றுறு குரலின் நால்வாய்ப் பெருந்துணை எயிற்றுப் புன்கண் வௌ¤ற்றுறு தடக்கை கொண்ட வேழமா முகத்தெம் மேலோன் ஔ¤ற்றுறு கலன்மார் பெய்தி உயிர்குடித் துமிழ்ந்த தந்தக் களிற்றுடை முகத்துப் பிள்ளை செய்கையோ காணும் என்பார். 24 ஈசனை மதிக்கி லாதே யாமுதற் கடவு ளென்று பேசிடு தலைவர்க் கேற்ற பெற்றியால் தண்டம் ஆற்றும் ஆசறு சங்கு கன்னன் அகட்டற் குண்டம் போல்வான் தேசுறு பானு கம்பன் முதலினோர் செயலோ என்பார். 25 நஞ்சுபில் கெயிற்றுப் புத்தேள் நாகணைப் பள்ளி மீது தஞ்ச மொடிருந்த அண்ணல் தன்செய லாமோ என்பார் அஞ்சுவன் இனைய செய்கைக் கனையது நினைவன் றென்பார் நெஞ்சினும் இதனைச் செய்ய நினைக்குமோ மலரோன் என்பார். 26 புரந்தர னென்னும் விண்ணோன் புணர்த்திடு செயலோ என்பார் கரந்தனன் திரிவான் செய்ய வல்லனோ கருத்தன் றென்பார் இருந்திடு கடவு ளோர்கள் இழைத்திடு விதியோ என்பார் நிரந்துநம் பணியின் நிற்போர் நினைப்பரோ இதனை என்பார். 27 கழைத்துணி நறவ மாந்திக் களிப்புறா உணர்ச்சி முற்றும் பிழைத்தவ ராகும் அன்றேல் பித்தர்செய் தனராம் என்பார் இழைத்தநா ளெல்லை சென்றோர் இயற்றியார் யாரோ என்பார் விழுப்பெரு முனிவா¢ சொல்லால் வீழ்ந்ததோ இவர்கை என்பார். 28 அங்கியின் கிளர்ச்சி யேபோல் அவிர்சுடர்க் கூர்வாள் தன்னைத் தங்களி லேந்தி இன்னோர் சான்றசூள் உறவு சாற்றித் துங்கமொ டமரின் ஏற்று முறைமுறை துணித்தார் கொல்லோ இங்கிவர் இருவர் கையும் இற்றன காண்மின் என்பார். 29 ஆரிவள் கரத்தி லொன்றை அடவல்லார் எவர்கண் ணேயோ பேருறு காதல் கொண்டு பெண்மதி மயக்கந் தன்னாற் சீரிய வுறுப்பி லொன்று சின்னமாத் தருவ னென்று கூருடை வாளால் ஈர்ந்து கொடுத்தனள் போலும் என்பார். 30 கேடுறும் இனையள் தன்னைக் கேட்பதென் இனிநாம் என்பார் நாடிநாம் வினாவி னோமேல் நம்மெலாம் முனியும் என்பார் மாடுறப் போவ தென்னை மாநில வரைப்பின் காறும் ஓடியே அறிதும் என்பார் இனையன வரைத்த லோடும். 31 சொல்லியற் சூரன் தங்கை துன்முகி யோடு கைபோய் வல்லையிற் போதல் கேளா மம்மருற் றவுண மாதர் சில்லியற் கூந்தல் தாழத் தெருத்தொறுஞ் செறிந்து கஞ்சம் ஒல்லைமுத் துதிர்ப்ப தென்ன ஒண்கணீர் உகுத்துச் சூழ்ந்தார். 32 அந்நகர் மகளிர் யாரும் ஆடவர் யாருஞ் சூழ்ந்து துன்னினர் இனைய வாற்றால் துயருழந் திரங்கிச் சோரப் பின்னவர் தொகுதி நீங்கிப் பிறங்குகோ நகரம் போந்து மன்னவர் மன்னன் வைகும் மன்றினுக் கணிய ளானான். 33 ஆகத் திருவிருத்தம் - 1702 - - - 41. அ ச மு கி பு ல ம் பு று ப ட ல ம் மறிமுக முடைய தீயாள் மன்றினுக் கணிய ளாகிக் கிறிசெயும் அன்னை தன்னைக் கேளிரை மருகா னோரைத் திறலுடை முனைனை யோரைத் சிந்தையில் உன்னி யாண்டைப் பொறிமகள் இரியல் போகக் கதறியே புலம்ப லுற்றாள். 1 வேறு வெறியாரும் இதழிமுடிப் பண்ணவர்கோன் அருள்புரிந்த மேனாள் வந்தாய், பிறியாது நுமைப்போற்றித் திரிவனென்றாய் அம்மொழியும் பிழைத்தாய் போலும், அறியாயோ கரம்போன தஞ்சலென்றாய் இலைதகுமோ அன்னே யன்னே, சிறியேனான் பெண்பிறந்து பட்டபரி பவமென்று தீரும் ஐயோ. 2 தாதையா னவர்அளித்த மைந்தர்கணே விருப்புறுவர் தாயர்பெற்ற, மாதரார் பால்உவகை செய்திடுவர் ஈதுலக வழக்கம்என்பார், ஆதலால் என்துயரம் அகற்றவந்தாய் இலையந்தோ ஆரு மின்றி, ஏகிலார் போல்தமியேன் கரமிழந்தும் இவ்வுயிர்கொண் டிருப்ப தேயோ. 3 வருவீரெங் கணுமென்றே அஞ்சாது புலோமசையை வலிதே வௌவிப், பெருவீர முடன்வந்ததேன் எனதுகர தலந்துணித்துப் பின்னே சென்று, பொருவீர மாகாளன் அவளையுமீட் டேகினன் அப்பொதும்பர்க் கானில், ஒருவீருஞ் செல்லீரோ நமரங்காள் நீருமவர்க் கொளித்திட் டீரோ. 4 புரங்குறைத்தும் வலிகுறைத்தும் பொங்கியதொன் னிலைகுறைத் தும்புரையு றாத, வரங்குறைத்தும் புகழ்குறைத்தும் மறையொழுக்கந் தனைக்குறைத்தும் மலிசீர் தொல்லை, உரங்குறைத்தும் வானவரை ஏவல்கொண்டோம் என்றிருப்பீர் ஒருவன் போந்தென், கரங்குறைத்த தறியீர்நுந் நாசிகுறைத் தனன்போலுங் காண்மின் காண்மின். 5 மேயினான் பொன்னுலகின் மீன்சுமந்து பழிக்கஞ்சி வெருவிக் காணான், போயினான் போயினான் வலியிலனென் றுரைத்திடுவீர் போலும் அன்னான், ஏயினான் ஒருவனையே அவன்போன்தென் கரந்துணித்தான் இல்லக் கூரைத், தீயினார் கரந்ததிறன் ஆயிற்றே இந்திரன்றன் செயலு மாதோ. 6 எள்ளுற்ற நுண்டுகளில் துணையாகுஞ் சிறுமைத்தே எனினும் யார்க்கும், உள்ளுற்ற பகையுண்டேன் கேடுளதென் றுரைப்பர் அ·துண்மை யாமால், தள்ளுற்றுந் தள்ளுற்றும் ஏவல்புரிந் துழல்குலிசத் தடக்கை அண்ணல், கள்ளுற்று மறைந்திருந்தே எனதுகரந் துணிப்பித்தான் காண்மின் காண்மின். 7 சங்கிருந்த புணரிதனில் நடுவிருந்த வடவையெனுந் தழலின் புத்தேள், உங்கிருந்த குவலயமோ டவைமுழுதுங் காலம்பார்த் தொழிப்ப தேபோல், அங்கிருந்தென் கரந்துணித்த ஒருவோனும் உங்களைமேல் அடுவன் போலும், இங்கிருந்தென் செய்கின்றீர் வானவரைச் சிறயரென இகழ்ந்திட் டீரே. 8 முச்சிரமுண் டிரணியனுக் கிருசிரமுண் டந்தவன்னி முகற்கு மற்றை, வச்சிரவா குவுக்கொருபான் சிரமுண்டே அவைவாளா வளர்த்திட் டாரோ, இச்சிரங்கள் என்செய்யும் ஒருசிரத்தோன் என்கரத்தை இறுத்துப் போனான், அச்சுரருக் கஞ்சுவரே பாதலத்தில் அரக்கரிவர்க் களியர் அம்மா. 9 பிறைசெய்த சீருருவக் குழவியுருக் கொண்டுறுநாட் பெயர்ந்து வானின், முறைசெய்த செங்கதிரோன்ஆதபமெய் தீண்டுதலும் முனிந்து பற்றிச், சிறைசெய்த மருகாவோ மருகாவோ ஒருவனெனைச் செங்கை தீண்டிக், குறைசெய்து போதுவோ வினவுகிலாய் ஈதென்ன கொடுமை தானே. 10 நீண்டாழி சூழுலகை ஓரடியால் அளவைசெய்தோன் நேமி தன்னைப், பூண்டாய்பொன் னாரமென இந்நாளும் ஓர்பழியே பூணா நின்றான், ஈண்டாருங் குறும்பகைஞர் என்ரம்போந் திறமியற்ற இனிது வையம், ஆண்டாய்நந் தாரகனே குறைமதிநீ ரோநின்பேர் ஆற்றல் அம்மா. 11 வையொன்று வச்சிக்கைப் புரந்தரனைத் தந்தியொடும் வான்மீச் செல்ல, ஒய்யென்று கரத்தொன்றால் எறிந்தனைவீழ்ந் தனன்கிடப்ப உதைத்தாய் என்பர், மெய்யென்று வியந்திருந்தேன் பட்டிமையோ அவன் தூதன் வெகுண்டு வந்தென், கையொன்று தடிந்தானே சிங்கமுக வீரவிது காண்கி லாயோ. 12 சூரனாம் பெயர்படைத்த அவுணர்கள்தம் பெருவாழ்வே தொல்லை யண்டஞ், சேரவே புரந்ததனைநின் பரிதிசெங்கோல் குடை யெங்குஞ் செல்லா நிற்கும், ஆரும்வா னவர்அவற்றிற் கச்சுறுவர் பொன்னகரோன் ஆணை போற்றும், வீரமா காளனிடைக் கண்டில னால்வலியர்முனம் மேவு றாவோ. 13 ஒன்னார்தஞ் சூழ்ச்சியினால் ஒருமுனிவன் என்சிறுவர் உயிர்கொண் டுற்றான், இந்நாளில் அ·தன்றி ஒருவனைக்கொண் டெனது கையும் இழப்பித் தாரே, பின்னாள்இவ் வருத்தமுற நன்றரசு புரிந்தனையால் பிழைஈ தன்றோ, மன்னாவோ மன்னாவோ யான்பட்ட இழி வரவை மதிக்கி லாயோ. 14 காவல்புரிந் துலகாளும் அண்ணாவோ அண்ணாவோ கரமற் றேன்காண், ஏவரெனக் குறவாவர் ஊனமுற்றோர் இருப்பதுவும் இழுக்கே அன்றோ, ஆவிதனை விடுவேன்நான் அதற்குமுனம் என்மானம் அடுவதையோ, பாவியொரு பெண்பிறந்த பயனிதுவோ விதிக்கென்பாற் பகைமற் றுண்டோ. 15 ஆகத் திருவிருத்தம் - 1717 - - - 42. சூ ர ன் த ண் ட ஞ் செ ய் ப ட ல ம் என்று பற்பல உரைத்தனள் ஆவலித் திரங்கிப் பின்றொ டர்ந்திடு துன்முகி தன்னொடும் பெயரா மன்றின் மேவரு சூரபன் மாவெனும் வலியோன் பொன்ற டங்கழல் முன்னரே வீழ்ந்துபோய்ப் புரண்டாள். 1 புரண்டு மற்றவள் சகடையிற் பெயர்ந்திடும் போழ்தின் மருண்டு பேரவை யகத்தினோர் அஞ்சினர் மறுக அரண்ட ருங்கழற் சூரபன் மாவெனும் அவுணன் இரண்டு நோக்கினுந் தீயெழ விழித்திவை இசைப்பான். 2 என்னை யோவிவட் புலம்புதி அசமுகத் திளையோய் உன்னை யோர்கிலா தென்னையும் நினைகிலா துன்கை தன்னை யும்மிவள் கரத்தையும் வாளினால் தடிந்து முன்னை யோரென இருந்துளார் யாரென மொழிந்தான். 3 புரந்த ரன்புணர் புலோமசை புவியிலோர் புறத்தில் இருந்து நோற்றலும் உன்றனக் கென்றுசென் றெடுத்தோம் விரைந்து வந்தொரு விண்ணவன் எங்களை வெகுண்டு கரந்து ணித்துமற் றவளைமீட் டேகினன் கண்டாய். 4 என்னு முன்னரே சொரிந்தன விழிகனல் எரிவாய் துன்னு தீம்புகைப் படலிகை உமிழ்ந்தது துண்டம் வன்னி காலுறு காலென உயிர்த்தது மதிபோல் மின்னல் வாளெயி றிதழினை மறைத்தது விரைவில். 5 வெடிக்க லுற்றதெவ் வண்டமென் றையுற விரைவில் இடிக்க லுற்றது தீயவாய் நகைவந்த திதழுந் துடிக்க லுற்றது புருவமேல் நிமிர்ந்தது துள்ளிக் கடிக்க லுற்றன எயிற்றணி கறகற கலிப்ப. 6 புயற்பு றந்தொறு நித்தில முதிர்ந்தவா போல வியர்ப்பு மிக்கன முறைமுறை அன்னது விளிய மயிர்ப்பு றந்தொறும் புலிங்கம்வந் தடைந்தன வல்லே செயிர்ப்பெ னுங்கனல் கிளர்ந்தது சிந்தையின் நின்றும். 7 நீடு வெஞ்சினம் இத்திறம் அவனிடை நிகழ ஓடு கின்றனர் திசையுளார் உலைந்தனர் முனிவர் ஆடு கன்றதோர் தெய்வதக் கணிகையர் அவன்சீர் பாடு கின்றவர் யாவரும் பதைபதைத் திரிந்தார். 8 தாங்க லுற்றிடு திசைக்கரி ஓடிய தரிக்கும் ஓங்கல் மேருவுங் குலைந்தன பணியெலாம் உலைந்த ஏங்கு கின்றனர் வானவர் நடுங்கினர் இரவி தீங்கு நாடியே பொயினன் மீண்டனன் திரிந்தான். 9 பார்ந டுங்கின விண்ணெலாம் நடுங்கின பரவை நீர்ந டுங்கின அயன்பதம் நடுங்கின நெடியோன் ஊர்ந டுங்கின அவுணரும் நடுங்கினர் உலகத்து ஆர்ந டுங்கிலர் அவன்சினஞ் சிறியதோ அன்றே. 10 அண்ண லம்புகழ்ச் சூரபன் மாவென அறையுங் கண்ணில் புன்மனத் தவுணர்கோன் இத்திறங் கனன்று துண்ணெ னச்சினத் தமரர்கள் யாரையுந் தொலைப்பான் எண்ணி யுற்றிடும் இளையரைப் பார்த்திவை இசைப்பான். 11 மீனெ டுத்துநம் மேவலில் திரிந்தவிண் ணவர்கோன் கானி டத்திருந் தொருவனைக் கொண்டிவர் கரங்கள் ஊனெ டுத்திடத் தறித்தனன் என்றிடின் ஒழிந்த மானு டத்தரும் அடுவரே இங்கினி மாதோ. 12 பரம னேயலன் பங்கயத் தவிசினோன் அல்லன் திருவு வாவரு மார்புடைத் தேவனும் அல்லன் இரியும் வாசவன் தானலன் அவன்பணி இயற்றும் ஒருவ னாமிவர் கைதடிந் தாவிகொண் டுறைவான். 13 விண்ம யங்குறு செருவிடைத் தானையால் வீக்கி எண்மை கொண்டுறும் அமரரைக் கொணர்தலும் எனது கண்முன் நின்றிடும் அவுணர்தங் கழிபசி யொழிய உண்மின் நீரெனக் காடுத்திலேன் அறநினைந் துற்றேன். 14 மறைவைத் தேயமர் கின்றதோர் வாசவன் தனையும் நறைவைத் தேயமர் பூங்குழற் சசியையும் நான்முன் சிறைவைத் தேனிலன் சிறியரென் றுன்னினன் தீயின் குறைவைத் தோர்கள்போல் ஆயினேன் இத்திறங் குறியேன். 15 கைப்ப டுத்திய உயிர்ப்பலி கடிதின்உண் ணாது தப்ப விட்டதோர் மால்கரி யொத்தனன் தமியேன் இப்பு விக்கணே இவர்கரங் குறைத்திட்ட தெனது மெய்ப்ப டுத்திய ஊனமே அலதுவே றுண்டோ. 16 பூத ரந்தனைச் சிஆதைடிந் திடுபுரந் தரனை மாத ரார்புகழ் சசிதனை நாடுவான் வழிக்கொள் தூதர் இன்னமுங் கண்டிலர் கொல்அவர் துணிவால் ஏத மின்றிஇப் புடவியிற் குறும்புசெய் திருத்தல். 17 நீரி ருந்தனிர் புதல்வரும் இருந்தனர் நிகரில் தேரி ருந்தது நேமியும் இருந்தது சிறிதென் பேரி ருந்தது யானுமிங் கிருந்தனன் பின்னை யாரி ருந்துமென் இருந்துமா கின்றதென் அந்தோ. 18 வான ளாவுவெண் பஞ்சியின் மால்வரை வறிதே தீநி லாயதோர் அளவையின் முடிந்திடுஞ் செயல்போல் தூநி லாவெயிற் றனையர்கைச் சோரியின் துளியால் போன தேபல அண்டமுங் கொண்டநம் புகழே. 19 இழிவும் இங்கிவர்க் குறுவதே இமையவர் தங்கள் வழியின் நின்றதோர் அரந்தையும் இவ்விடை வருமே பழியும் என்னிடத் தெய்துமே என்றும்இப் பழிதான் ஒழிவ தில்லையே பொறுப்பதே அதனையென் னுயிரே. 20 மல்ல லந்தடந் தேர்கடக் கைம்மலை வயமா எல்லை யில்லவும் அவுணரும் எங்கணும் இருப்பச் சில்லை மென்குழல் அசமுகி படுவதித் திறமோ நல்ல நல்லஎன் னரசியல் முறையென நக்கான். 21 நக்க காலையிற் காலுறும் வார்கழல் நரல மக்கள் தங்களிற் பானுகோ பப்பெயர் வலியோன் செக்கர் அங்கியிற் கிளர்ந்துதன் தந்தைமுன் செவ்வே புக்கு வந்தனை செய்துநின் றினையன புகல்வான். 22 ஐய கேண்மதி நமதுகுற் றேவலால் அழுங்கித் தொய்ய லுள்ளமோ டிந்திரன் கரந்தனன் சுரரும் நொய்யர் இத்தொழில் நினைப்பதுஞ் செய்யலர் நுங்கை கையி ழந்ததென் மாயமோ உணர்கிலேன் கவல்வேன். 23 வந்தி பெற்றிடு கான்முளை எட்டிவான் தவழும் இந்து வைக்கரங் கொண்டனன் என்பதோர் இயல்பே அந்த ரத்தரில் ஒருவனே இனையவர் அங்கை சிந்தி யுற்றனன் என்றுநீ உரைத்திடுந் திறனே. 24 வலியர் ஆகியே பு£¤ந்தனர் எனினுமற் றவர்கள் மெலியர் ஆற்றநீ வெகுளுறுந் தகைமைமே வினரோ ஒலித ருங்கடல் மீன்சுமந் துன்பணி யுழந்தார் அலியர் அல்லதை ஆண்டகை யார்கொலோ அனையோர். 25 நறைம லர்க்கம லத்தனை வெகுளினும் நாரத் துறையுள் வைகிய முகுந்தனை வெகுளினும் உம்பர் எறிபு னற்சடை இறைவனை வெகுளினும் இயல்பே சிறியர் தம்மையும முனிதியோ பெருமையிற் சிறந்தோய். 26 முத்தி றப்படுந் தேவரே அல்லதுன் முனிவிற் கெத்தி றத்தினர் இயைந்துளோர் இளையர்க்கும் இனைத்தே சித்த முற்றிடும் வெகுளியைத் தீருதி இன்னோர் கைத்த லந்தனை இழந்துழிப் பெயருவன் கடிதின். 27 விசைய வாளினால் இங்கிவர் கரந்தனை விட்டும் அசைவில் ஆடவன் றன்னைநின் னுளத்தின்மால் அளித்த சசியை இந்திரக் கள்வனைத் தம்முயிர் தமக்குப் பசையி லாததோர் அமரரைப் பற்றினன் படர்வேன். 28 அங்கண் உற்றிலர் மறைகுவ ரெயெனில் அகிலம் எங்கும் நாடுவன் அனையர்வாழ துறக்கநா டேகிச் செங்க னற்கொள அளிக்குவன் அமரர்தந் திறத்தை மங்கை மாரொடும் பற்றியோர் கன்னலின் வருவேன். 29 ஈதி யால்விடை தமியனுக் கென்றுநின் றிரப்பத் தாதை யாகிய அவுணர்கோன் முனிவினைத் தணிந்து போதி மைந்தநின் படையொடும் ஆங்கெனப் புகல ஆத வன்பகை அழகிதென் றுவகையை அடைந்தான். 30 ஓகை சேர்தரு விண்ணவர் மணிமுடி உரிஞ்சிச் சேகை சேர்தரு தாதைதாள் உச்சியிற் சேர்த்தி வாகை சேர்சிறு தந்யைர் தம்மையும் வணங்கிப் போகை சேர்விடை கொண்டுதன் னிருக்கையிற் போனான். 31 மைந்தன் ஏகலுஞ் சூரபன் மாவெனும் வலியோன் உந்து தீவிழி உழையரிற் சிலவரை நோக்கி அந்த நான்முகன் இங்ஙனம் வருகுவன் அவனை நந்தம் முன்னுறக் கொடுவரு வீரென நவின்றான். 32 எங்கண் உற்றுளான் அயனெனக் கூவினர் ஏகிப் பங்க யத்தனைக் கண்டுநிற் கொணர்கெனப் பணித்தான் நங்கள் கொற்றவன் என்றலும் ஒல்லென நடவா அங்கம் ஐந்துடன் அவுணர்கள் மன்னன்முன் அணைந்தான். 33 அணைந்த பூமகன் வைகலே பக்கநாள் அவற்றாற் புணர்ந்த யோகொடு கரணமே லுள்ளன புகல நுணங்கு சிந்தையால் அகிலமும் படைத்துளாய் நொய்தில் தணந்த கையிவர்க் குதவுதி என்றனன் தலைவன். 34 என்று தானிவை மொழிதலுந் திசைமுகன் இசைந்து வன்றி றற்கரங் கூடுக மற்றிவா¢க் கெனலும் ஒன்றொர் மாத்திரைப் பொழுதின்முன் அவைவளர்ந் துறலும் நன்று நன்றுநின் வல்லபம் என்றுசூர் நவின்றான். 35 அன்ன தற்பின்னர் அசமுகத் தணங்கினை அரசன் தொன்ன கர்க்குளே இருந்திடச் செய்துதுன் முகத்தி தன்னை மைந்தனோ டுய்த்தனன் புலோமசைத் தையல் முன்னி ருந்துழி காட்டியே வருகென மொழிந்து. 36 உழைத்திர் இந்தபல் சிலதரை நோக்கியே உலகில் தழைத்த செங்கதிர்க் கடவுளைத் தாரகா கணத்தை எழுச்சி கொண்டுறு கோளினை யாரையும் இன்னே அழைத்தி ராலெனச் சொற்றனன் அவுணர்கட் கரசன். 37 சேடர் பற்பலர் விடைகொடு சேட்புலஞ் சென்று நேடி அன்னவர் தமையெலாங் கொணர்ந்துமுன் நிறுவ மூடு கொண்டலிற் கரந்தமின் பின்னெழு முறைபோல் கேடு கொண்டதொல் சினவெரி சூரனுட் கிளர்ந்த. 38 வியர்க்கும் நெஞ்சினன் கதிர் முதலோர்தமை விளியா அயர்க்கை இன்றியே வானிடைத் திரியுநீர் அறியா இயற்கை ஒன்றிலை எங்கைதன் செங்கையை எறிந்தோன் செயற்கை காணுதிர் வறிதுநீர் இருந்ததென் சேணில். 39 இளையள் தன்கரங் குறைத்திடும் இமையவன் உயிரைக் களைதல் செய்திலீர் அல்லதேல் அனையனைக் கட்டித் தளைசெய் திவ்விடைக் கொணர்ந்திலீர் அல்லதத் தலையில் விளைவை வந்தெமக் குரைத்திலீர் நன்றுநும் மிகுதி. 40 மறத்தி றத்தினால் எங்கைதன் கையையோர் வலியோன் குறைத்த தற்குநீர் அகத்தரே அல்லது குறிக்கில் புறத்தர் அன்றுநம் மாணையால் இத்தொழில் புரிவீர் முறைத்தி றங்கொலோ நுங்களுக் கிதுவென மொழிந்தான். 41 நீதி இல்லவன் ஈங்கிஆவை உரைத்தலும் நிருப ஏதும் எங்களை வெகுளலை இங்கி இங்கிவள் கரத்தைக் காது வான்றனைக் கண்டிலம் இன்றுசெல் கதியின் மீது சென்றவெம் விழியென உரைத்தனர் விண்ணோர். 42 துண்ட மாகியே இவள்கரந் துணிபட்ட செய்கை கண்டி லார்களாங் கதியிடைச் சென்றவாங் கண்கள் அண்டர் தஞ்செயல் அழகிதென் றனையரை யெல்லாந் தண்டல் இல்லதோர் சிறைபுரி வித்தனன் தலைவன். 43 வேறு தினகரன் முதலினோர் சிறையிற் புக்கபின் வினைஞரிற் சிலா¢தமை விளித்து நீவிர்போய்த் துனைவரு மருத்துவர் தொகையைத் தம்மென முனிவொடு தூண்டினன் முடிவி லாற்றலான். 44 ஒற்றரில் ஒருசிலர் ஒல்லை ஏகியே குற்றமின் மருத்துவர் குழாத்தைக் கூவியே பற்றிமுன் உய்த்தலும் பதைக்கும் நெஞ்சினான் தெற்றென் ஆங்கவர்க் கிதனைச் செப்புவான். 45 வானிடை மண்ணிடை மாதி ரத்திடை மேனிகழ் கடலிடை வியன்பி லத்திடை ஊனிடை யுயிரிடை ஒழிந்து நின்றிடும் ஏனைய பொருளிடை எங்கும் நிற்றிரால். 46 ஏணுறு கின்றஎன் இளையள் கையையோர் சேணினன் வாள்கொடு சேதித் திட்டதைக் காணுதிர் உமக்கெவர் கரக்கற் பாலினோர் நீணகர் குறுகியிந் நிலைமை சொற்றிலீர். 47 தரியலர் சூழ்ச்சியால் தகுவர்க் கிப்பழி வருவது நன்றென மகிழ்ந்து வைகினீர் பெருமிதம் நன்றெனப் பேச மாறுசொல் உரையற நின்றனர் உலவைப் பண்ணவர். 48 வன்றிறல் இன்றியே மனத்தில் அச்சமாய் நின்றிடு கால்களை நீடு கால்களிற் துன்றிய கனைகழற் சூர னென்பவன் ஒன்றொரு சிறைதனில் உய்த்திட் டானரோ. 49 ஈற்றினை இழைத்திட இருக்குங் கால்களைச் சீற்றமொ டவுணர்கோன் சிறையில் வீட்டினான் சாற்றிடின் உலகமேல் தவத்தி னால்வரும் பேற்றினும் உளதுகொல் பெருமைத் தானதே. 50 திரிதத மருத்தரைச் சிறையில் வைத்தபின் குரைகழல் வினைஞரைக் கூவி இற்றையாண் டிருதுநன் மதிமுதல் எல்லை யாளரைத் தருதிரென் றுரைத்தலுந தாழ்ந்து போயினார். 51 ஏவல ராயினோர் ஏகி யெல்லையின் காவலராகிய கடவு ளோர்தமைக் கூவினர் பற்றியே கொடுவந் துய்த்தலுந் தேவர்கள் மாற்றலன் சீறிக் கூறுவான். 52 புல்லிய மகபதி புணர்த்த அச்செயல் ஒல்லுவ தென்றதற் குள்ள மாகிநீர் எல்லிரு மனமகிழ்ந் திருத்திர்¢ என்னொடுஞ் சொல்லிய வந்திலீ ரியாண்டுந் துன்னினீர். 53 நிரந்தரம் நம்பணி நெறியின் நின்றுநீர் இருந்ததிற் பயனெவன் இருக்கலா மையால் வருந்தவ றென்சுரர் மருங்குற் றீரெனா அருந்தளை இட்டனன் அவர்கள் தம்மையும். 54 தூவலி கெழுவிய சூரன் பின்பில ஏவலர் தங்களை விளித்திட் டிப்புவி காவலர் தமையெலாங் கடிது வம்மெனக் கூவுதிர் தம்மெனக் கூறித் தூண்டினான். 55 தூண்டலும் அளவைதீர் தூத ரோடியே ஈண்டிய காவலர் இனத்தை மாநிலந் தேண்டினர் பற்றியே சென்று வென்றிகொள் ஆண்டகை இறைவன தவையின் உய்ப்பவே. 56 ஆக்கையில் வியர்ப்புற அச்சம் நாணுயிர் தாக்குற நனியுளந் தளாக் கைதொழுங் காக்குநா¢ தொகுதியைக் காவல் மன்னவன் நோக்கினன் வெகுண்டிது நுவறல் மேயினான். 57 எளித்துற லின்றிகம் ஏவல் நீங்கியே களித்திடு சசியொடுங் கடவுள் வாசவன் ஔ¤த்தனன் இம்பரின் உம்பர் இல்லைநீர் அளித்தது சாவும் அழகி தாமரோ. 58 குறித்திடு புரைமனக் கொண்ட லூர்பவன் நெறித்திகழ ஆணையின் நின்ற தூதுவன் மறித்திரு முகனுடை மங்கை தன்கரம் அறுத்தவண் இருந்தனன் அதுவுந் தேர்ந்திலீர். 59 மறங்கிளர் தேறல்வாய் மடுத்து வைகலுங் கறங்குறு நிலையராய்க் கலங்கி னீர்கொலோ உறங்கினி ரேகொலோ ஓம்பலீர் கொலோ பிறங்குதொல் வளமையால் பித்துற் றீர்கொலோ. 60 ஓயுமென் பகைஞரோ டுறவுற் றீர்கொலோ வாயவர் தங்களுக் கஞ்சி னீர்கொலோ சேயிழை யாரிடைச் செருக்குற் றீர்கொலோ நீயிர்கள் இருந்ததென் நிலைமை யென்னவே. 61 எண்டரும் எந்தைநீ இசைத்த தன்மையிற் கொண்டிலம் ஒன்றுமக் குவல யந்தனைப் பண்டுதொட் டளிக்குதும் பகைஞர் யாரையுங் கண்டிலங் கரந்துறை கதையுங் கேட்டிலம். 62 தாயெனும் ஏழகத் தலையள் துன்முக ஆயிழை யொடும்வரல் அதுவும் அன்னர்கை போயதுந் தெரிந்திலம் புந்தி கொள்ளுதி மாயமி தாகுமால் மன்ன என்னவே. 63 மிடைதரு வெறுக்கையை மிசைந்து மால்கொளீஇப் புடவியை யிடைதொறும் போற்றல் செய்திலீர் இடையுற என்வயின் இனைய தோர்பழி அடைவது மாயையாம் அழகிதே என்றான். 64 வேறு ஒலிகெழும் உவரிப் புத்தேள் உள்ளுறை வடவைச் செந்தீத் தொலைவுழி எழுவ தேபோல் சூரனுட் சினமீக் கொள்ள மலிகதிர் இருள்புக் கென்ன வாளுரீஇ மருங்கே தானைத் தலைவர் நின்றாரை ஏவித் தனித்தனி தண்டஞ் செய்வான். 65 சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான் சிற்சிலர் துண்டந் தன்னைச் செவிகளைக் களைதல் செய்தான் சிற்சிலர் மருமந் தன்னைச் சிறுபுறத் தொடுகொய் வித்தான் சிற்சிலர் தாளைத் தோளைச் சென்னியைச் சேதிப் பித்தான். 66 எறிதரு கழற்காற் சூரன் இத்திறம் பல்தண் டங்கள் முறையினிற் செய்து சீய முழுமணித் தவிசில் தீர்ந்து விறல்கெழும் இனையர் செல்ல விடைகொடுத் தயனை நோக்கி மறைமுனி போதி யென்ன மற்றவன் இனைய சொற்றான். 67 மன்னவர் மன்ன கேண்மோ வான்கதிர் உடுக்கள் ஏனோர் இந்நில மடந்தை வேலைக் கிறையவர் யாரு மென்றும் உன்னுடைப் பணியில் நிற்பர் உலகிவர் இன்றி யாகா அன்னவர் பிழையுட் கொள்ளேல் அருஞ்சிறை சிடுத்தி என்றான். 68 குறையிரந் தினைய கூறிக் கோகன தத்தோன் வேண்ட நறையிருந் துலவு தாரோன் நன்றென இசைவு கொள்ளா உறையிருந் திலங்கும் வாட்கை ஒற்றரை நோக்கி நந்தஞ் சிறையிருந் தோரைத் தம்மின் என்றலுஞ் சென்றங் குய்த்தார். 69 வன்றளை உற்றோர் தம்மை மன்னவர் மன்னன் பாரா என்றுநம் பணியில் நிற்றிர் இந்திர னொடுசேர் கல்லிர் சென்றிடு நுங்கள் தொன்மை செய்திட வென்ன அன்னோர் நன்றிது புரிதும் என்னா நயமொழி புகன்று போனார். 70 போதலுங் கமலத் தோற்கும் புதல்வர்க்கும் அமைச்சர் யார்க்கும் மேதகு முனிவர் யார்க்கும் வியன்படைத் தலைமை யோர்க்கும் போதலை உதவிச் சூரன் உறையுளிற் புகுந்தான் முன்செல் ஆதவன் பகைஞன் செய்த செயலினை அறைத லுற்றேன். 71 ஆகத் திருவிருத்தம் - 1788 - - - 43. அ ம ர ர் சி றை பு கு ப ட ல ம் எழிலிகள் மொய்த்ததன் இருக்கை போகிய மழவுறு சூர்மகன் மாறி லாதபேர் அழகினை மெய்கொள் அணிந்து தொல்படை விழுமிய கொண்டனன் மிலைச்சித் தும்பையே. 1 இருவகைப் பத்துநூ றிவுளி பூண்டிடும் ஒருதனித் தேர்தனை ஒல்லை ஊர்ந்துராய்த் திருமுதற் கடைதனிற் செல்லும் எல்லையில் விரைவினில் சுற்றின அனிக வௌ¢ளமே. 2 நிரைத்தெழு தானவர் நீத்தம் ஆயிரம் பரித்தொகை அன்னதே பாதி தேர்கரி உரைத்தஅத் தானையோ டொல்லை ஏகினான் திருத்தகும் இரவியைச் சிறையில் வீட்டினான். 3 கிளர்ந்தன தூளிகள் கெழீஇய வீரர்தோள் வளர்ந்தன அவரணி மாலை யிற்படீஇ உளர்ந்தன வண்டினம் உம்பர் தம்மனந் தளர்ந்தன நௌ¤ந்தனன் தரிக்குஞ் சேடனே. 4 பொள்ளென ஆண்டெழு பூமி பாரினுந் தள்ளரும் விசும்பினும் நிரந்த தானவர் எள்ளுறும் அமரர்தம் மிருக்கை நாடியே உள்ளடு பவத்துகள் ஒருங்கு சென்றபோல். 5 வேறு ஏறிய பூழி நாப்பண் ஈண்டிய இவுளி வாயில் வீறுகொள் களிற்றுக் கையின் விலாழியுங் கரிக்க போலத் தூறிய கடமும் ஒன்றாய் ஒழுகுதன் மழைசூழ குன்றின் ஆறுகள் இழிந்து வையத் தடைவது போலு மன்றே. 6 பானிற முதல வாய பல்வகை வண்ணத் துள்ள கானிமிர் துவசக் காடுங் கவிகையின் கானு மொய்த்த சேனமுங் கழுகும் ஏனைச் சிறைகெழு புள்ளும் வெம்போர் ஊனுகர் பொருட்டுத் தாமும் உம்பருற் றிடுவ தேபோல். 7 மண்ணுறு துகளின் மாலை மகேந்திர மூதூர் முற்றுந் துண்ணென மறைத்த லோடுந் துளங்கியே சூரற் கஞ்சி விண்ணிடை மதிபல் கோடி மேவல்போல் வௌ¤யே செய்ய தண்ணிழற் கவிகை ஈட்டந் தலைத்தலை ஈண்டிற் றன்றே. 8 முறையிது நிகழ மைந்தன் முதியமா நகரம் நீங்கி அறைகடல் அகழி தாவி அவனியின் எல்லை யேகிச் சிறைவரு துன்மு கத்துத் தெரிவையை நோக்கி நுங்கை எறிசுடர் வாளால் இற்ற தெவ்விடை இயம்பு கென்றான். 9 என்னலுங் குமர கேண்மோ எங்கரந் துணித்தோர் வீரன் மன்னினன் சசியும் உற்றாள் மதுமலர்ப் பொதும்ப ரொன்றில் அன்னதும் இ·தே என்றோர் அணிவிரல் சுட்டிக் காட்டப் பன்னிரு பெயர்ச்சீ காழி+ப் பழுமரக் காவிற் சேர்ந்தான். 10 ( + பன்னிரு பெயர்ச் சீகாழி - பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகிய சீகாழிப்பதி.) தேசுறும் இரவி தன்னைச் செயிர்த்திடு சிறுவன் தானைத் தூசிமுன் சென்று காவைத் தொலைத்துவௌ¢ ளிடைய தாக்க வாசவன் மனையைக் கூர்வாள் வயவனை நாடிக் காணான் காசினி யாண்டுந் தேர்ந்து காமர்பொன் னுலகிற் போனான். 11 வேறு அந்நிலை அவுணர்கள் அனிகம் யாவையும் முன்னுற ஏகியே மொய்ப்ப ஆங்கவர் மெய்ந்நிறை மணிவெயில் விரிந்து சூழ்தலாற் பொன்னகர் வேறொர்பொன் னகரம் போன்றதே. 12 எழுந்திடு முனிவினர் இமைக்கும் வெவ்வழல் வழிந்திடு கண்ணினர் மடித்த வாயினர் கழிந்திடு திறலினர் ககன வாணர்கள் அழிந்திடும் ஆர்ப்பினர் அவுணர் எய்தினார். 13 மண்டல மேமுதல் வகுத்த வான்கதி கொண்டிடு கந்துகக் குழுவின் மாலைகள் விண்டொடர் செலவினில் விரவு பூழியால் அண்டமும் புவியென வையம் ஆக்கிய. 14 இலகிய பொன்னகர் எல்லை எங்கணும் அலைதரு மதநதி யாக்கி யாயிடை நிலவிய கங்கைமா நீத்தம் யாவுமுன் டுலவுத லுற்றன ஒருத்தல் யானையே. 15 வெங்கரி சொரிமதம் விரும்பும் வண்டினங் கொங்கிவர் தருமலா¢க் கூந்தல் வாசத்தால் அங்குள மாதர்மேல் அணுகி வையக மங்கையர் கொல்லென மால்செய் கின்றவே. 16 அற்றமில் வலியரைச் சிறிய ராயினோர் பற்றிடின் மேல்நெறிப் பால ராவரால் வெற்றிகொள் அவுணர் கோன்வேழத் தின்குழாஞ் சுற்றிய பறவையுந் துறக்கம் புக்கவே. 17 மன்னவன் ஓடினன் மைந்த னேயுளன் முன்னுறு பகையினை முடித்தும் யாமெனா இந்நில வரையெலாம் ஏகிச் சூழ்ந்தபோற் பொன்னகர் வளைந்தன பொலம்பொற் றேர்களே. 18 விடா¢நெறி ஒழுகிய வெய்யர் மேலையோர் இடமுறு மகளிரை எய்திப் பற்றல்போற் கடிகமழ் தருவினைக் கலந்து சுற்றிய கொடியினை ஈர்த்தன கொடியின் கானமே. 19 வேறு செந்தோ டவிழுந் தாரான்இச் செய்கை நிகழச் சேண்புகலும் அந்தோ என்று பதைபதையா அலமந் தேங்கி அறிவழிந்து வந்தான் பானுப் பகைவனெனா மகவான் செம்ம லொடுவானோர் நொந்தோ டினர்போய் உரைத்திடலும் அனையோன் இனைய நுவல்கின்றான். 20 எந்தை யாகுங் குரவன் இலை இமையோர் குழுவிற் பலரில்லை தந்தை எம்மோ யிங்கில்லை தமியேன் நும்மோ டிருந்தேனால் அந்த அசுரன் சென்றமையும் அல்லல் புரியுந் திறம்போலும், முந்தை விதியை அறிவேனோ என்னோ இன்று முடிந்திடுமே. 21 பாடின் றோங்கு திருநீங்கப் பயந்தோர் கரக்கப் பழிவேலை வீடின் றாகத் தமர்பரிய வெஞ்சூர் முதல்வன் பணிபோற்றி ஈடின் றாயும் இப்பகல்கா றிந்த நகரத் திருந்தேனாற் கேடின் றாகும் என்செய்கேன் கிளத்தீர் புரைதீர் உளத்தீரே. 22 தாயும் பயந்த தொல்லோனுந் தமரா குற்ற அமரர்களும் பாயுங் கடல்சூழ் நிலவரைப்பிற் கரந்தார் அதனைப் பல்லவுணர் ஆயும் படியே திரிந்தனரால் அற்றாம் எல்லை அளியேமும் போயெங் குறைவோம் நமையெல்லாம் போற்றும் படிக்கோர் புகலுண்டோ. 23 போவ தில்லை யாண்டும்இனிப் புலம்பு மாறும் இல்லையதின் ஆவ தில்லை வருவதெல்லாம் அடையும் அன்றி அகலுவதோ ஈவ தில்லை யவர்க்கு வெரிந் இறைஞ்சிப் புகழவ திலையெதிர்ந்து சாவ தல்லால் உய்ந்திடுதல் இரண்டே உறுதி தமியேற்கே. 24 அஞ்சேன் மன்னோ அவர்க்கினியான் ஆவி பொருளாக் கொள்ளாதார் நஞ்சே பொருவுந் தீங்குறினும் நடுக்கஞ் செய்யார் இடர்படியார் தஞ்சே வகத்தின் நெறிபிழையார் அ·தே போலத் தானவர்கோன் வெஞ்சே னைகளேற் றெதிர்செல்வேன் வெல்வேன் பலரைக் கொல்வேனே 25 செருவீ ரமுடன் அவர்ப்பொருவான் செல்வன் நீரும் எற்போற்றி வருவீர் வம்மின் வல்லாதீர் வல்லை இன்னே வழிக்கோண்மின் ஒருவீ ரன்றி, எல்லீரும் உள்ளத் தஞ்சி ஒருவிஅழ தருவீவேனும் நன்றிறையுந் தளரேன் துணிந்த தமியேயே. 26 என்று சயந்தன் மொழிந்திடலும் இமையோர் கேளா இடருழவா உன்றன் உள்ளம் ஈதாயின் உமக்கு வேறோர் உணர்வுண்டோ வென்றி அவுணர் பணிபுரிந்து வீடா விழுமந் துய்ப்பதினும் பொன்றி விடுதல் இனிதம்மா எழுதி கடிதே போர்க்கென்றார். 27 வேறு சயந்தனது கேட்டமரர் தங்குழுவை நோக்கித் துயர்ந்தநும சிந்தனை துணிந்ததுகொல் என்னா வியந்துகன கத்தவிசின் மேவுதல்வி டாத்தன் கயந்தனை நினைப்பஅ துணர்ந்தது கருத்தில். 28 கல்கெழு நுதற்சிறிய கண்சுளகு கன்னம் மல்கிய கறைப்பத மருப்பிணை இரட்டை மெல்கிய புழைக்கரம் வௌற்றுடலின் வேழம் பில்கிய மதத்தொடு பெயர்ந்துளதை அன்றே. 29 இந்திர குமாரனை இறைஞ்சி எதிராகி வந்திட அதன்பிடரில் வல்லைதனில் ஏறி உந்தினன் நடாத்திஅயல் உம்பபர்புறம் மொய்ப்பப் புந்திகெழு வேர்வினொடு பொள்ளென அகன்றான். 30 போகிதரு காளைபசும் பொற்புயல் நிறத்தான் ஆகம்வௌ¤ றாகும்அயி ராவதமி சைக்கண் வாகுபெற மேவுவது மன்னுநெடு மால்பாற் சீகரஅளக் கரிடை செவ்விதிருந் தன்ன. 31 பாங்கருறு வானவர்கள் பல்படையும் ஏந்தி வீங்குதுயர் கொண்டகல வேறொரிடை காணார் நீங்கல்வசை என்பது நினைந்துதுணி வாகி ஆங்கவ னொடேகினர்கள் அச்சமில ரேபோல். 32 பெருந்தவள மெய்க்கரி பிளிற்றொலியும் உள்ளத் தரந்தையுறு வானவர்தம் ஆர்ப்பொலியும் ஆற்றப் பரந்தபகு வாய்முரசு பண்ணொலியும் ஒன்றாய் வருந்தவறெ னக்ககனம் வாய்விடுதல் போலும். 33 ஊழவரு கால்அனைய உம்பர்படை செல்லப் பூழிநிமிர்ந் தேகின பொலத்துயர் நிலத்த வாழிகொள் சுவர்க்கமெரி வௌவுநமை என்னாக் கேழிலுயர் மேனிலை கிளர்ந்தெழுதல் போலும். 34 முறையிது நிகழந்திட முரட்களிறு மேலான் வறியமக வான்மதலை மாநகரம் நீங்கி எறிகதிர் அருக்கனை இருஞ்சிறையில் வீட்டுஞ் சிறுவன்அனி கத்தினெதிர் சென்றுபுக லோடும். 35 வற்புறு தயித்தியர் வருஞ்சுரரை நோக்கி முற்பகலின் எல்லையும் முறைப்பணி புரிந்தார் தற்பமுடன் நின்றுசமர் உன்னிவரு வாரோ அற்புதம் இதற்புதம் இதென்றறையல் உற்றார். 36 கிட்டினர்கள் வானவர் கிடைத்ததமர் என்னா முட்டினர் தெழித்தவுணர் முன்பினிரு பாலார் ஒட்டினர் முனிந்தயில்கள் உய்த்தனர்கை வாளால் வெட்டினர் குனித்துவில் வடிக்கணை விடுத்தார். 37 எழுப்படை விடுத்தர் எடுத்தகதை விட்டார் மழுப்படை எறிந்தனர் வயிர்க்குலிசம் உய்த்தார் நிழற்பரவு முத்தலை நெடும்படைகள் தொட்டார் சுழற்றினர் உருட்டினர் சுடர்ப்பரிதி நேமி. 38 மாரியென இப்படை வழங்கியிமை யோருஞ் சீரவுண ராயினருஞ் சேர்ந்துபொரும் எல்லைச் சோரியது தோன்றியது தூயவிரும் பெற்றும் பாரிய உலத்திடை பரந்தெழு கனற்போல். 39 அங்கமெம செங்குருதி ஆற்றின் நிமிர்ந்தோடி எங்கணும் நிரந்தன இமைப்பிலவர் வைகுந் துங்கமிகும் உம்பரிடை சூர்மதலை சீற்ற வெங்கனல் எழுந்துமுன் மிசைந்திடுவ தேபோல். 40 நீடிரு திறத்தரும் நெடும்படைகள் ஏந்தி ஆடல்புரி காலையழிந் தாற்றலில ராகி ஓடினர்கள் வானவர்கள் ஒல்லைதொடர்ந் தேபின் கூடினர்கள் வெவ்வவுணர் குற்றினர்கள் பற்றி. 41 சேண்கொடு முரிந்துபடர் தேவர்குழு வோரை ஏண்கொடு வருந்தகுவர் யாத்தனர் புயங்கள் நாண்கொடு திரும்பினர் நலங்கொள்கலை மானை மாண்கொடு வரித்தொகுதி வவ்விஅகன் றென்ன. 42 இடுக்கணுறு தேவர்தமை ஈர்த்தனர்கொ டேகி மிடற்கதிர் அருக்கனை வெகுண்டவன்முன் உய்ப்பக் கடக்கரிய வன்மையொடு காவல்கொளு மென்றான் தடக்களிறு மேல்வரு சயந்தன்இவை கண்டான். 43 வேறு கண்டான் வெகுண்டான் புகையாரழல் கல்லென் மேகம் உண்டான் எனவே உமிழ்ந்தான் ஒருதன் சிலைக்கைக் கொண்டான் குணத்தின் இரைகாட்டினன் கோட்டி நேர்போய் அண்டார் வெருவக் கணைமாரிகள் ஆர்ப்பொ டுய்த்தான். 44 பொழியும் பொழுதத் தவுணப்படை போந்த வீரர் மொழியும் மனமும் நனிதாழ்த்திட முன்ன ரேகி ஒழியுங் கடைநாள் அரன்வெற்பை உறாது சூழ்போஞ் சுழியுங் கடல்போல் அவனூர்கரி சுற்றி ஆர்த்தார். 45 சயந்தன் மிசையும் பொலங்கிம்புரித் தந்த வௌ¢ளைக் கயந்தன் மிசையுஞ் சிலைவாங்கிக் கணைகள் கோடி பயந்தந் திடத்தூர்த் தனர்சோமனைப் பன்ன கங்கள் வயந்தன் னொடுபோய் முயலோடு மறைக்கு மாபோல். 46 கல்லென் றரற்றுங் கழல்வீரர் கனைந்து சுற்றிச் செல்லென் றுவிட்டகணை யாவையுஞ் சிந்தி வல்லே மல்லொன் றுமொய்ம்பிற் சயந்தன்சர மாரி தூண்டி வில்லும் மனையோர் தனுவும்புவி வீட்டி னானால். 47 வீட்டிக் கணைகள் அவுணப்படை மீது தூர்த்து மோட்டுக் களிற்றின் தொகைதன்னை முகங்கொள் பாய்மா வீட்டத் தினைத்தேர் களைவீரர் இனத்தை யெல்லாம் வாட்டிப் பின்வௌ¢ளம் ஒருநூற்றினை மாய்வு செய்தான். 48 வாலிற் புடைக்கும் புழைக்கைகொடு வாரி எற்றுங் காலிற் படுக்கும் மருப்பாலடுங் கந்த ரம்போல் ஓலிட் டுயிருண் டிடுமாங்கவன் ஊர்ந்த வேழஞ் சீலக் கதிரைச் சிறையிட்டவன் சேனை தன்னை. 49 நூறாய்ப் புகுதா னவர்வௌ¢ளம் நொடிப்பின் மாய வீறாய்ப் படையும் பலபூண்களும் மீன மாக ஆறாய்க் குருதி பெயர்ந்தேயகல் வான நீத்தம் மாறாய்ப் பொருது மிசையோடி வளைந்து கொண்ட. 50 காய்கொல் இபமேற் சயந்தன்அடு காலை தன்னில் பேய்கொல் உனைத்தீண் டினமேல்வரும் பெற்றி யோராய் தீகொல் பறவை புரைவாய்எமர் சேனை தன்னை நீகொல் லடுதி யெனவந்தனன் நீல கேசன். 51 எண்ணத் தவரை அலைக்கின்ற இருண்ட கேசன் தண்ணத் தவரை நிகர்கின்ற சயந்தன் முன்போய் விண்ணத் தவரை முகில்தாங்குறும் வேட மென்ன வண்ணத் தவரைக் குனித்தம்பெனும் மாரி தூர்த்தான். 52 தூர்த்தான் அதுகால் சயந்தன்எதிர் தூண்டி வாளி தீர்த்தான் சரமாரி யையன்றியுஞ் சின்ன மாக்கி ஆர்த்தான் கவசம் அவனிட்டதை அம்பு நூறால் வேர்த்தான் உயிர்த்தான் இருட்குஞ்சியன் மேக மொப்பான். 53 பாசம் பிணித்த அரணம் பரிவெய் தநீல கேசன் விடுத்தோர் பிறையம்பினைக் கேடில் விண்ணோர் ஈசன் சிறுவன் சிலைநாணை இறுத்தி சைத்தான் காசொன் றரவந் துணியப்பகை கௌவு மாபோல். 54 சின்னம் படலும் பெருநாண்சிலை வீழ விட்டுத் தன்னந் தனியாஞ் சயந்தன்சமர் செய்வ தற்கு முன்னம் பயிற்றும் ஒருமாயையை முன்னி யாற்றித் துன்னந் தருபல் லுருவங்கொடு தோன்றி யுற்றான். 55 வேறு ஒன்றேயெனுங் கரிமேல்வரும் ஒருவன்பல வுருவாய்ச் சென்றேதிறம் பலவால்அடச் செறிபேரிருட் குடுமிக் குன்றேபுரை அவுணர்க்கிறை குறிப்பால்இது மாயம் என்றேநினைந் தவைமாற்றிட யாதுஞ்செயல் இல்லான். 56 மலைவுற்றெதிர் நின்றார்த்திட வாயற்றனன் மயங்கித் தொலைவுற்றனன் இருட்குஞ்சியன் சூரன்மகன் அனிகம் மலைவுற்றன விரிகின்றன அலமந்தன வெருவி உலைவுற்றன இறுதிப்பகல் ஒழிவுற்றிடும் உயிர்போல். 57 சோமாசுரன் மாயாபல சுரகேசரி பதுமன் மாமாருத பலிதண்டகன் வாமன்மதி வருணன் தீமாகதன் முதலாகிய சேனைப்பெருந் தலைவர் ஆமாயமி தெனவந்தனர் அவ்விஞ்சையை உணரார். 58 தாங்கற்றிடு மாயப்பெருந் தனிவிஞ்ரைகண் முன்னி ஆங்குற்றிடு பரபாற்பொரு தன்னான்புரி மாயம் நீங்கற்கரு நிலையாதலும் நெஞ்சந் தடுமாறி ஏங்குற்றனர் என்செய்குதும் யாமென்று நினைந்தார். 59 அந்நேருறு காலந்தனில் ஆகின்றதுந் தலைவர் தன்னேவலின் மெலிவுற்றதும் சயந்தன்பெரும் திறலும் கொன்னேதன தனிகக்கடல் குறைகின்றதும் கண்டான் முன்னேயிர வியைஓர்பகற் சிறைவீட்டிய முதல்வன். 60 வேறு அந்த ரந்தனில் இரவியைச் செயிர்த்திடும் அவுணன் இந்தி ரன்மகன் மாயைகொல் இதுவென எண்ணா முந்தை நாட்புகர் உதவிய மூலமா ஞான மந்தி ரந்தனை உளந்தனில் விதிமுறை மதித்தான். 61 மதித்து வெஞ்சுடர்ப் பகையினன் சேறலும் மாயை விதித்த பல்லுருப் போயின தமியனாய் விடலை கதக்க ளிற்றின்மேல் தோன்றினன் ஆயிரங் கதிரோன் உதித்த காலையில் கலையிலாக் குறைமதி யொப்ப. 62 ஆன காலையில் இதுபுகர் விஞ்சையென் றறிந்து மான முஞ்சின முஞ்சுடச் சயந்தன்உள் மறுகித் தான வேழமேல் இருந்துழித் தேரொடுஞ் சார்ந்து பானு கோபனாம் பெயரினான் இனையன பகர்வான். 63 வருதி இந்திரன் மதலைநின் மாயையும் வலியும் கருதி யான்வரு முன்னரே போயின கண்டாய் பரிதி போலவே நின்னையும் இருஞ்சிறைப் படுப்பன் பொருதி வல்லையேல் என்றனன் சூர்தரு புதல்வன். 64 வல்ல ராயினோர் வெல்வதும் மற்ற· தில்லோர் அல்ல ராகியே தோற்பதும் இல்லையால் அரனே தொல்லை யூழ்முறை புணர்ந்திடும் நின்னைநீ துதிக்கச் செல்லு மோவென உரைத்தனன் சயந்தனாந் திறலோன். 65 தேற்ற மோடிவை புகறலும் இரவியைச் செயிர்த்தோன் ஆற்றல் இல்லவர் மொழிதிறம் புகன்றனை அன்றே ஏற்ற வீரரும் இத்திறம் உரைப்பரோ என்னாக் கூற்ற மேயென இருந்ததோர் தன்சிலை குனித்தான். 66 சிலைவ ணக்கிய காலையில் சயந்தனுஞ் சினத்து மலைவ ணக்குதன் புயங்கொடே ஒருசிலை வளைத்தான் அலைவ ணக்கரும் ஞமலியெம் மடிகளை அடைந்தோர் தலைவ ணக்கியே தத்தமில் இருவர்தாழ வதுபோல். 67 பாற்றி ருஞ்சிறைக் கணைபல பரிதியம் பகைஞன் ஊற்ற மோடுவான் புயலெனச் சொரிதலும் ஒருத்தன் மேற்றி கழ்ந்திடு சயந்தனும் அனையன விசிகங் காற்றெ னும்படி தூண்டியே விலக்கினன் கடிதின். 68 அன்ன வன்விடுஞ் சரமெலாஞ் சூர்மகன் அறுத்துத் துன்னு பல்கணை தூண்டினன் அவனவை தொலைத்தான் இன்ன தன்மையின் இருவரும் பொருதனர் இருளும் மின்னு மாகவே முறைமுறை மலைந்திடும் விதிபோல். 69 இனைன வாறமர் புரிவுழி இரவியம் பகைஞன் வினைய நீரினால் சொரிந்திடு பகழியை விலக்கித் துனைய இந்திரன் மதலைஆ யிரங்கணை தூண்டி அனையன் ஏந்திய சிலைப்பெரு நாணினை அறுத்தான். 70 அறுத்த காலையில் ஞாயிறு வெகுண்டுளோன் அழலிற் செறுத்து வேறொரு சிலைவளைஇக் கணைமழை சிதறி மறுத்தும் ஆங்கவன் விடுஞ்சரம் சிந்திமற் றவன்மெய் உறுத்தி னான்என்ப ஒராயிரஞ் சிலீமுகம் உய்த்து. 71 உய்த்த காலையில் சயந்தனும் ஒராயிரங் கணைதூய்ப் பத்தி யோடவன் தேர்கெழு பாய்பரி படுத்து மெத்து பல்சரந் தானைமேல் வீசினன் விளிவோர் வைத்த மாநிதி யாவர்க்கும் வழங்குமா றென்ன. 72 வாய்ந்த தோர்தன திரதமீ றாகமற் றொருதேர் பாய்ந்து வெய்துயிர்த் தழலென வெகுண்டுபற கறித்துச் சேந்த மெல்லிதழ அதுக்கிவா னுருமெனத் தெழியா ஏந்து வார்சிலை குனித்தனன் எறிகதிர்ப் பகைஞன். 73 கூனல் வெஞ்சிலை குனித்துநூ றாயிர கோடி சோனை வெங்கணை தூண்டிவிற் றூண்யைத் துணித்துத் தான வெங்கரி தன்னுடன் முழுவதுஞ் சயந்தன் மேனி முற்றவும் அழுத்தினன் பகலினை வெகுண்டோன். 74 வேறு வெய்ய வற்சிறை இட்டவன் விட்டபோல் சைய மொத்த சயந்தன்மெய்ம் மூழ்கலும் மைய லுற்றனன் மற்றொரு வெஞ்சமர் செய்வ தற்குத் தௌ¤தலின் றாயினான். 75 நீண்ட வாளிக ளான நிறத்திடை ஆண்ட காலை அரிமகன் தந்திமேல் வீண்டு விம்மி உணர்ச்சியும் விட்டனன் மாண்டி லான்அமு தங்கொண்ட வன்மையால். 76 நண்ணு பாசடை நாப்பணி டந்தொறுந் தண்ணென் மாமலர்த் தாமரை பூத்தென விண்ண வர்க்கிறை மாமகன் மெய்யிடைத் துண்ணெ னப்படு சோரி பொலிந்ததே. 77 கற்ற வாசவன் காளைதன் சீற்றம்நாம் முற்ற ஓத முடியுங்கொல் தன்னுணர் வற்ற போதும் அவன்சினக் கண்ணழல் வற்று வித்தமெய் வார்குரு திப்புனல். 78 சயந்தன் அவ்வழி தன்னுணர் வின்றியே அயர்ந்த போதத் தலையவன் ஊர்தியாம் கயந்தன் நக்கிறை கண்டு கலங்கியே துயர்ந்து நின்று சுளித்தெதிர் புக்கதே. 79 காய்ந்த தொன்மைக் கதிரை முனிந்திடும் ஏந்தல் ஊர்தரும் எந்திரத் தேர்மிசைப் பாய்ந்த காலைப் பரித்தொகை பாகுடன் வீய்ந்து போன தெழித்தது வேழமே. 80 பாண்டில் சேர்தரு பண்ணமை செய்யதேர் மாண்ட காலையில் வல்லையிற் கீழுறத் தாண்டி வௌ¢ளையந் தந்தியைச் சீறினான் மூண்டு பானுவை முன்சிறை செய்துளான். 81 மற்ற வன்றன் மணியணி மார்பிடைச் செற்ற மால்கரி சென்றுமுன் தாக்கலும் பொற்றை யின்கட் புழைத்திடுஞ் சூசியின் இற்ற வா