தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர்
இயற்றிய கலைசைக்கோவை.

kalacaikkOvai of cuppiramaNiya munivar
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements for Etext preparation and proof-reading:
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the assistance of following personsin the preparation of the etext:
key in: S. Karthikeyan, M.K. Saravanan, Vijayalakshmi Periapoilan, Subra Mayilvahanan
proof-read: S. Anbumani, V. Bavaharan, V. Devarajan, S. Karthikeyan, M.K. Saravanan
and Vijayalakshmi Periapoilan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கலைசைக்கோவை

கடவுள் துணை

பதிப்பாசிரியர்
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள்
பதிப்பு
மகாமகோபாத்தியா டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம்
பெசன்ட் நகர், சென்னை - 90
1995

காப்பு.

    செங்கழுநீர்விநாயகர்.

    உருக்கோவை யங்கொள் கலைசைத் தியாகரை யோர்ந்துரைக்கும்
    திருக்கோவை யான்முழு துந்துறை செய்யத் திகழ்தருமால்
    மருக்கோவை வாயுமை மைந்தன் கலைசையுள் வாரிசனைந்
    தருக்கோவை யாழியன் சூழ்செங் கழுநீர்த் தனிக்கயமே.

நூல்.

    1. கைக்கிளை.


    காட்சி
    1.
    திருத்தங்கு பங்கயஞ் செங்கழு நீர்குமிழ் சீதளங்கூர்
    மருத்தங்கு கோங்குசெங் காந்தள்கொண் டற்புத மல்கியொல்கி
    நிருத்தங் குனிக்குங் கலைசைத் தியாகர் நிறையருள்போல்
    உருத்தங்கு தெய்வக்கொடி யொன்றுதோன்றி யொளிர்கின்றதே.

    ஐயம்.
    2.
    பொன்னுல கோகம லாலய மோபொறி வாளரவம்
    மன்னுல கோவிந்த மண்ணுல கோவிசை வல்லவர்வாழ்
    மின்னுல கோதென் கலைசைத் தியாக விமலர்வெற்பில்
    என்னுல கோரு மயல்கூர நின்ற விவரிடமே.

    துணிவு.
    3.
    சூடக்கண் டாயடிப் பத்மங்கள் பூவினிற் சூடியபூ
    வாடக்கண் டாய்வண்டு கூடக்கண் டாயிரு வாட்கணிமை
    ஆடக்கண் டாய்மன மேயிந்தக் கொம்ப ரணங்கல்லடீங்
    கோடக்கண் டாளுங் கலைசைத் தியாக ருயர்வரைக்கே.

    குறிப்பறிதல்.
    4.
    மறுப்புகு தாத கலைசைத் தியாக மணிவிருப்பும்
    வெறுப்புமில் லார்க்கருள் வார்வெற்பி லிந்தமின் மெய்யிலெல்லா
    வுறுப்பு மொருதன்மை யாக விருதன்மை யுற்றுவிழிக்
    கறுப்பும் வெளுப்பும்வன் னஞ்சோ டமுதத்தைக் காட்டிடுமே.

    2. இயற்கைப்புணர்ச்சி.


    இரந்து பின்னிற்றற்கெண்ணல்.
    நலசத் தியர்தென் கலைசா புரியுறை நாதரெல்லாம்
    வலசத் தியாகர் கலசத் தியாகரை மானநெஞ்சே
    சலசத்தி யன்னவர் பின்னின் றிரந்திடிற் றாங்குதனக்
    கலசத் தியாக மிவருந் தருவர் களிப்புறவே.

    இரந்து பின்னிலைநிற்றல்.
    6.
    நீங்கற் கரிய பரிவுட னேநின்ற நேரிழையீர்
    ஈங்கற் புதக்கச் சிளநீரை நீரின் றெமக்களித்துத்
    தாங்கற் கரிய விரகா னலத்தைத் தணித்திடுமே.

    முன்னிலையாக்கல்.
    7.
    தொழுதா யிரந்திரு நாமங்க ளோதிடுந் தொண்டரைச்சேர்
    பழுதாறு நீக்குங் கலைசைத் தியாகர் பருப்பதத்திப்
    பொழுதாயத் தோடலர் குற்றாட லின்றிப் புரிகுழலீர்
    எழுதாத சித்திரம் போனிற்ற லென்னை யியம்புமினே.

    வண்டோச்சி மருங்கணைதல்.
    8.
    செம்பார் களிம்பெனச் சிற்றுயிர் தோறுஞ் செறிந்தமல
    வெம்பாசந் தீர்க்குங் கலைசைத் தியாகர்தம் வெற்பிலிம்மான்
    வம்பாருங் கொம்ப ரிடையரை நீவிர் வருத்தஞ்செய்தே
    ஐம்பால் குடியா விருந்தீ ரறனன் றளியருக்கே.

    இதுவுமது.
    9.
    நீடுபொன் மாடக் கலைசைத் தியாகர் நெடுங்கிரிமேல்
    வாடுலங் காநின்ற கண்மட மாதொரு மாத்திரையில்
    நாடுமற் றல்கிடச் செய்தாறு கால்வள நன்றுபெற்றும்
    ஊடுறு மாக்கள் குடியாவிக் கூழை யுவந்தனரே. [5]

    மெய்தொட்டுப் பயிறல்.
    10.
    விடையாள ரெங்கள் கலைசைத் தியாகரை மேவுமருள்
    நடையார் பெறுநற் றவப்பயன் போல நறுநுதலாள்
    இடையாமந் நூல்கொண் டிசைத்தோதி யத்தமெய் யெய்தப்பெற்றுக்
    கிடையாப் பதங்களு நேரேகைக் கொள்ளக் கிடைத்ததுவே. [6]

    பொய் பாராட்டல்.
    11.
    பலரைப் புணர்ந்த விருட்பாவை நீத்தருள் பார்ப்பதிகா
    தலரைக் கலைசைத் தியாகேச ரைத்தணந் தாரிற்றெய்வ
    மலரைப் பழித்த வடியீர்நுங் கண்ணுக்கொவ் வாமையன்றோ
    அலரைப் பொருந்தி வெறிகொண்டு வண்டிங் கலைகின்றதே. [7]

    இடம்பெற்றுத்தழால்.
    12.
    சேகாந் தருக்கள் புறஞ்சூழ் கலைசைத் தியாகர் வெற்பில்
    நீகாந்தங் கண்ட விரும்பென்ன வீர்த்தென்னை நிற்கையினால்
    ஏகாந்தமான விடமிஃ தன்றிமற் றில்லைநல்லாய்
    யோகாந்தமான சுகமாரு தற்கிடை யூறில்லையே. [8]

    வழிபாடு மறுத்தல்.
    13.
    தளவேந்தர் வாழுங் கலைசைத் தியாகர் தரணியிற்குந்
    தளவேரி யந்தொடை தாழவென் னாணமுன் றன்னிடத்தே
    தளவேய்ந் தனனிறை கற்புற் றவர்க்கொரு தாழ்வுளதோ
    தளவே யொதுங்கத் தனியிடந் தாதமி யேன்றனக்கே. [9]

    இடையூறு கிளத்தல்.
    14.
    நடங்காட்டு மெங்கள் சிதம்பர வீசர் நளினமலர்த்
    தடங்காட்டுந் தொட்டிக் கலையனை யீரமிர் தத்தைமுத்து
    வடங்காட் டியதன மந்தரங் காட்டிமை தீட்டுகண்கள்
    விடங்காட்டு மத்தியென் றோமறைத் தீரிரு மென்கைகொண்டே. [10]

    இதுவுமது.
    15.
    செண்டாடு மால்விடை யூருங் கலைசைத் தியாகர்வெற்பில்
    கண்டாடு மின்சொற் கனியித ழீர்கடங் காட்டிநிரை
    வண்டாடுங் கையிற்கண் வையம் படைத்திட்ட வல்லபத்தால்
    கொண்டாடு மும்மை விதியென்று கூறிக் குவலயமே. [11]

    நீடுநினைந்திரங்கல்.
    16.
    வாது வராலொடு செய்பதத் தீரகழ் வாய்நின்றும்பல்
    வாதுவ ரீர்க்குங் கலைசைத் தியாகர் வரையினிலோ
    வாது வருத்து மலரம்பி னானையும் வாட்டங்கண்டு
    வாதுவர் வாயமிர் தந்துவ்வென் றென்று வழங்குவதே. [12]

    மறுத்தெதிர்கோடல்.
    17.
    வீணைக் கரத்தர் கலைசைத் தியாகர் விதித்தவருள்
    ஆணைக் கடங்குமல் லாதுநம் மன்பர்தம் மாசையென்னும்
    கோணைக் களிறு மதமிகுந் தாலச்சங் கொள்ளையிட்டென்
    நாணைக் கவளங்கொள் ளாமல் விடாதினி நன்னெஞ்சமே. [13]

    வறிதுநகைதோற்றல்.
    18.
    தொகைக்கிடந் தந்தவென் சஞ்சிதக் குன்றறத் தூளிசெய்து
    வகைக்கிடந் தந்த கலைசைத் தியாகரை வாழ்த்தலின்றிப்
    பகைக்கிடந் தந்தவ ரிற்றென்ன நாணறல் பார்த்தென்செய்வாய்
    நகைகிடந் தந்த தினியார்க்கு நல்கு நகைக்கிடமே. [14]

    முறுவற்குறிப்புணர்தல்.
    19.
    சிற்பத்திற் செய்தபொன் மாடக் கலைசைத் தியாகர்வெற்பில்
    கற்பத்தின் மேவிய காரிகை யார்மெச்சுங் காரிகையார்
    நற்பத்தி யாரங்கொள் பாலிகை சேர்தொண்டை நாட்டணிவாய்
    உற்பத்தி யான நிலாவுள்ள மேநம்மை யுய்விக்குமே. 15

    முயங்குதலுறுத்தல்
    20.
    செறியும் பசும்பொழில் சூழ்தென் கலைசையிற் செங்கைமழு
    மறியுஞ் சுமந்த சிதம்பர வீசர் வரைமின்மெய்யாம்
    முறியுந் தனங்களுந் தானே தான்முறை யென்றளிக்கக்
    குறியுங் குணங்களு நான்கண்டு தோய்தரக் கூடியதே. 16

    புணர்ச்சியின் மகிழ்தல்.
    21.
    சீரின் பரப்புடை யார்வாழ் கலைசைத் தியாகர்வெற்பில்
    பாரின்பஞ் சிற்றின்ப மென்பா ரவரவர் பக்குவத்தால்
    ஓரின்ப விம்ப விவளித ழூறலை யுற்றருந்தப்
    பேரின்ப மாகப்பெற் றேனினி யேதொரு பேரின்பமே. 17

    புகழ்தல்.
    22.
    தேவாதி தேவர் கலைசைத் தியாகர் சிலம்பின்மின்னார்
    மாவார் படலையங் கூந்தற் குடைந்து மருவுகொன்றை
    தாவாத கொம்பெனுங் கையா லடியுறை தன்றலையில்
    பூவாய செம்பொன் சொரிந்துகண் மாரிபொழிகின்றதே 18

    ஏற்புறவணிதல்.
    23.
    சிங்கம் பிடிக்கக் கலையுஞ்செங் காந்தளிற் றெய்வவண்டும்
    தங்கமென் சூதுக்கு வம்பையுங் காருக்குத் தாரையுஞ்சேர்த்
    தங்கங் களுக்கணி யங்கங் கணிந்தன னங்கனையாய்
    பங்கங்க டீர்க்குங் கலைசைத் தியாகர் பணியென்னவே. 19

    3. வன்புறை.


    அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல்.
    24.
    திரணம் பெறாவிந்தச் சிற்றடி யேற்குச் சிலம்பணிபொற்
    சரணங்க ணல்குங் கலைசைத் தியாகர் சயிலத்திலா
    பரணக் கொடியிடை நாணியஞ் சேலுன் பருவத்தந்தக்
    கரணங்க ளொப்பவ ரொப்பனை யேயென்றன் கைப்பணியே. 1

    பெருநயப்புரைத்தல்.
    25.
    சுத்தங் கொடுக்குங் கலைசைத் தியாகர் சுடைக்கிரிமேல்
    சத்தங் கொடுக்குந் தடத்தில்வண் டேகொங்கு தங்கலங்கற்
    கொத்தங் கொடுக்குங் குழலாள் வதனக் குமுதமென
    முத்தங் கொடுக்குங் குமுதமுண் டோசொலு முன்னர்வந்தே. [2]

    தெய்வத்திறம் பேசல்.

    26.
    அன்னையொப் பான கலைசைத் தியாக ரருளுந்தியீன்
    மின்னைமின் னாழிகொண் மேகத்தி னாகத்தின் விட்டதுபோல்
    உன்னையு மென்னையு மொன்றாகக் கூட்டிய வூழிருக்க
    என்னைகொ னீதளர்ந் தேங்கிமை யாப்ப திளங்கொடியே. [3]

    பிரியேனென்றல்.

    27.
    காதார் குழையர் கலைசைத் தியாகர் கயிலைவெற்பில்
    போதாருங் காவைப் பிரிந்தஞ் சிறைத்தும்பி போதலுண்டோ
    ஆதார நீநிறை யாதேய மாகி யமைந்தனனால்
    நீதா னிரங்கலை நான்பிரி யேனென்று நேரிழையே. [4]

    பிரிந்துவருகென்றல்.

    28.
    அருக்கத்தி பூண்ட கலைசைத் தியாகர்த மன்பருள்ளத்
    துருக்கத்தி னுக்குட னேவரல் போலகன் றுங்ஙனம்போய்
    மருக்கத்தி கைக்குழ லாயிங்கு நின்று வகையுடன்கொய்
    குருக்கத்தி மென்றளிர் வாடுமுன் னான்வந்து கூடுவனே. [5]

    இடமணித்தென்றல்.
    29.
    கம்மூர்கண் காட்டல் கலசத் தியாகர் கலைசையன்னீர்
    எம்மூர்ச் சிகர நிரைக்கோ புரங்க ளிடைப்பதித்த
    அம்மூருஞ் செக்கர் நிறமாணிக் கத்தி னடரொளிபாய்ந்
    தும்மூர்வரைப்புறம்பொற்கொண்டல்போலென்றுமூர்தருமே. [6]

    இதுவுமது.
    30.
    தகட்டிதழ்க் கொன்றைக் கலசத் தியாகர் தடங்கலைசை
    முகட்டெழின் மாளிகை யெம்மூர் மலர்ப்பட்ட மொய்த்துலவும்
    பகட்டின நாளுமும் மூர்வரைச் சாரற் பசுந்தினைமேய்ந்
    தகட்டினைச் சாய்த்து வருமா லயர்வுற லாரணங்கே. [7]

    4. தெளிவு.


    31.
    காமனைக் காய்ந்த கலைசைத் தியாகரைக் கைதொழுமீ
    காமனில் லாத கலம்போலென் னுள்ளங் கலங்கிமயங்
    காமானன் னீதியிற் றேற்றிவைத் திங்கெனைக் கற்பமுறும்
    காமனை யொப்பவ ரெங்ககன் றாலுமென் கண்ணவரே.

    5. பிரிவுழிமகிழ்ச்சி.


    செல்லுங்கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்
    32.
    சூடகக் காந்தண்மைக் கூந்தலங் கேந்தமின் சூழ்ந்தவிரும்
    பாடகக் கால்கண்கண் முன்பின் பெயர்தரப் பையநெஞ்சே
    நாடகத் தேவர் கலைசைத் தியாகர்த நாகத்தின்மேல்
    ஆடகப் பூங்கொம்பர் போற்செல்லு மானம தாருயிரே. [1]

    பாகனொடுசொல்லல்.
    33.
    வைப்பார் வையிற்சகி மார்வரல் பார்த்தருள் வள்ளுவர்சொல்
    முப்பாலும் பார்ப்பவர் போனான்கு பாலும் முறையுறப்பார்த்
    தப்பார் சடையர் கலைசைத் தியாக ரருளினுக்கே
    ஒப்பாக வொல்குதல் காண்வல வாவென் னுயிர்க்குயிரே. [2]

    6. பிரிவுழிக் கலங்கல்.


    ஆயவெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோ வென்றல்
    34.
    காயவெள் ளங்கொள் கலசத் தியாகர் கலைசையன்னார்
    ஆயவெள் ளந்தொழ வார்திரு வோலக்க வாக்கங்கண்டால்
    மாயவெள் ளத்தது மோகினி யோவிவ் வடிவெடுத்தென்
    நேயவெள் ளங்கொண் மனம்போல வந்திங்கு நேர்பட்டதே. [1]

    வாயில்பெற்று உய்தல்.
    35.
    நீராடும் வேணிக் கலைசைத் தியாகர்முன் னேர்ந்தவில்வேள்
    போராட னீக்கவொர் தூதுபெற் றாமுய்ந்து போதிநெஞ்சே
    தாராடு குந்தளத் தார்விழி வண்டு தனக்கினிய
    ஓரா யிழைமுகச் செந்தா மரையுற் றுலாவருமே. [2]

    பண்புபாராட்டல்
    36.
    சிவையொரு பாகர் கலைசைத் தியாகர் சிலம்பிலிம்மான்
    சுவைதரு கொங்கை யிளநீர்க ளாமெனிற் சொல்லிளநீர்க்
    குவைகச் சிடாதிடை நூலெனி லையங் கொடாதுமற்றை
    அவையவங் கட்கிணை யென்னசொன் னாலு மவையவமே. (3)

    பயந்தோர்ப்பழிச்சல்
    37.
    இக்கோ விருந்த புரத்துத் தியாகர்தம் மின்னருள்போல்
    அக்கோலங் காட்டி யளித்தவென் னாவியை யன்றுதந்த
    தக்கோ ரிருவரும் வாழிய ரோதருத் தாழவட
    திக்கோனெண் ணத்தழைந் திக்கோ வுளமட்டுஞ் சித்திபெற்றே. (4)

    கண்படை பெறாது கங்குல்நோதல்
    38.
    நாதஞ்செய் பாதர் கலைசைத் தியாகரை நண்ணினர்போல்
    பேதஞ்செ யாதவ ளென்னைக் கலந்து பிரிந்துழிவேள்
    போதஞ்செய் வானுற வுள்ளேறும் வெப்பம் புறங்கொடுப்பச்
    சீதஞ்செய் யாதென் பனிநீர்பெய் யாமந் திரம்பெற்றுமே. (5)

    7. இடந்தலைப்பாடு


    தந்த தெய்வந் தருமெனச் சேறல்
    39.
    ஒன்றுந் தராதவ ரென்றுந் தராரிவ் வுலகிலெல்லாம்
    என்றுந் தருபவ ரின்றுந் தருவர்நெஞ் சேயிமையோர்
    துன்றுங் கலைசைத் தியாகேசர் வெற்பிளஞ் சோலையின்வாய்ச்
    சென்றுமின் றுந்தரு முன்னவ ளைத்தந்த தெய்வமதே. (1)

    முந்துறக் காண்டல்
    40.
    தண்ணுரு வாயுமிவ் வாயத்தி னீங்குஞ் சதுரரிற்றீர்ந்
    தெண்ணுரு வான கலைசைச் சிதம்பர வீசரிடக்
    கண்ணுரு வாமுக முத்தாட வந்திந்தக் காவின்மலர்ப்
    பெண்ணுரு வாய்நின்ற தாற்பண்டு நான்செய் பெருந்தவமே. (2)

    முயங்கல்
    41.
    நிதிவாய்த்த செல்வக் கலைசைத் தியாகர் நெறியினிற்கும்
    விதிவாய்த் திலர்குறை வென்னச்சின் னாள்கலை வீறுகுன்று
    மதிவா யமுதுண் புலவோர்க் கிவண்முக மாமதியிற்
    பதிவா யமிர்தம் பருகுமென் போலின்று பாக்கியமே. (3)

    புகழ்தல்
    42.
    சேணுற்ற மாடங்கள் சூழ்தென் கலைசைத் தியாகர்வெற்பில்
    ஏணுற்ற கற்புடை யாடன் புருவத் தெழிற்குடைந்து
    மாணுற்ற வேணுத்தன் கண்ணம் பொழுக வணக்கஞ்செய்து
    நாணுற்று நின்றிடு மால்பிடிப் பார்கையி னாடொறுமே. (4)

    ஆயத்துய்த்தல்
    43.
    கல்லார வாவிக் கலைசைத் தியாகர் கனகிரிமேல்
    எல்லா மணிகளுக் குஞ்சிறப் பாய்விலை யிட்டறியா
    வில்லார் கதிர்விடு மாணிக்கம் போல விளங்கியுன்றன்
    நல்லாயத் தோடிடை யில்லாத வொண்ணுத னண்ணுகவே. (5)

    8. பாங்கற்கூட்டம்


    தலைவன் பாங்கனைச் சார்தல்.
    44.
    இந்துறை மாடக் கலைசைத் தியாகரை யேத்தலர்போல்
    நைந்துநைந் தேங்கனெஞ் சேநந்த நண்பனை நண்ணிவருத்
    தந்துடை யாயென்றித் தன்மைசொன் னாற்சுத்த தத்துவங்கள்
    ஐந்து முபகரித் தாற்போலு மானந்த மாக்குவனே. (1)

    பாங்கன் தலைவனை உற்றது வினாதல்
    45.
    வளைத்தனை யோபல மாமுனி மாற்றலர் மாய்ந்திடப்போர்
    விளைத்தனை யோவன்றிக் கொத்துறு முத்தமிழ் வேலையின்வாய்த்
    திளைத்தனை யோதென் கலைசைத் தியாகர் சிலம்பன்னதோள்
    இளைத்தனை யோவிதென் னேயறை வாயென் னிறையவனே. (2)

    தலைவன் உற்றதுரைத்தல்
    46.
    நெருங்கலை வாரிநஞ் சுண்ட தியாகர் நெடுங்கலைசை
    தருங்கலை வாரி நிரம்பிய வென்மதி தண்ணறுங்கா
    வருங்கலை வாரி னகிலமின் னார்முகில் வாயொளிப்ப
    ஒருங்கலை வாரித யத்தினுற் றேனண்ப வோர்ந்துகொள்ளே. (3)

    கற்றறி பாங்கன் கழறல்
    47.
    சீதக் கமலத் தடஞ்சூழ் கலைசைத் தியாகரருள்
    வேதக் கடலி னெறியறி வேந்தற்கும் வேந்தவொரு
    மாதக் கவலையுற் றேனென்று தேம்பிமெய் வாடன்மிக
    நோதக்க தாலிது வோதிட்ப மானநின் ணுண்ணறிவே. (4)

    கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்
    48.
    காரங் கிரீவர் கலசத் தியாகர் கலைசையன்னார்
    ஆரங்கொள் வாயி னமிர்தமு ழூரு வரம்பையும்பொற்
    றோங்க மோங்கு சுவர்க்கமுங் காணிற் சிலதவிந்த
    வீரங்கள் பேசிய வாயைநன் னீரின் விளக்குவையே.

    49.
    விலைக்கே யெனைககொள் கலைசைத் தியாகர்வில் வெற்பொருநூல்
    வலைக்கே மதுகைப் புலிதுவக் குண்டென்ன மாதொருத்தி
    தலைக்கேறு தொங்கலிற் கட்டுண்டு நெஞ்சந் தளர்ந்தனைநன்
    னிலைக்கே ழுலகினு மொப்பின்றி நின்ற நெடுந்தகையே. (6)

    கிழவோன் வேட்கைதாங்கற்கருமை சாற்றல்
    50.
    திடத்தாய் சிலத கலைசைத் தியாகர் செழுஞ்சிலம்பின்
    இடத்தா ரணங்கென் னறிவாம் பயமுற்று மேந்துதனக்
    குடத்தான் முகந்துண்ண வற்றிய நானந்தக் கொம்பர்கடி
    தடத்தாடி னாலன்றி யாறாதென் காமத் தழலிதுவே. (7)

    பாங்கன் தன்மனத்தழுங்கல்
    51.
    மைந்தோதி வில்லர் கலைசைத் தியாகர் வளர்சடைமேல்
    இந்தோவில் லோநுத றந்தோமின் னோவிடை யென்னுயிர்க்குப்
    பந்தோவெற் ‍போதன நந்தோ மிடறென்று பன்னிப்பன்னி
    அந்தோ புலம்புறு மாலண்ணன் மொய்ம்பெங் கடங்கியதே. (8)

    பாங்கன் தலைவனோடழுங்கல்
    52.
    ஆளா வெனைக்கொள் கலைசைத் தியாகரை யாதரியார்
    தோளாச் சுரைபுரை காதிற் புகாதசொற் போலவென்சொல்
    கேளா தொழித்தது மென்றீ வினைப்பய ன்கேழின்மன்னா
    தாளார மேருத் தளர்ந்தா லெவரிங்குத் தாங்குவரே. (9)

    பாங்கன் எவ்விடத் தெவ்வியற்றென்றல்.
    53.
    நாலாறு நல்குங் கலைசைத் தியாகர்நன் னாட்டொழுகும்
    பாலாறு வந்திழி நந்திவெற் போகொல்லிப் பண்பயின்று
    காலாறு சுற்றுங் கமலவைப் போவிடங் காவிலுன்பால்
    மாலாறு வைத்தவட் கென்வண்ண மன்ன வழங்கெனக்கே. 10

    தலைவன் அஃது இவ்விடத் திவ்வியற்றென்றல்.
    54.
    சரமே விழிகுஞ் சரமே தடமுலை தண்சதபத்
    திரமே முகஞ்சித் திரமே திருவுரு சேர்ந்தவர்க்கு
    வரமே யளிக்குங் கலசத் தியாகர்வண் கோவிருந்த
    புரமே யிடமுன்னை நாளென்னை வாழ்வித்த பொற்றொடிக்கே.11

    இறைவனைத் தேற்றல்.
    55.
    சற்றிடம் யான்சென் றனையாளைக் கண்டுனைச் சார்தருவேன்
    நற்றிடங் கொண்டிங்கு நிற்றிமன் னாமுன்னை நாட்பாவை
    உற்றிடஞ் சென்று கலைசைத் தியாக ருரைத்தருளிச்
    சொற்றிடங்கொண்டுவரல்பார்த்து நின்றவன்றொண்டரொத்தே. 12

    குறிவழிச் சேறல்.
    56.
    ஆடுங் கொலோசுனை பாடுங் கொலோவிசை யம்மனைபந்
    தாடுங் கொலோமலர் சூடுங் கொலோவகி லாண்டமுய்ய
    ஆடுங் கருணைக் கலைசைத் தியாக ரசலத்தர்கொண்
    டாடுஞ் சயசிங்கம் வாடும் படி‍செய் தகன்மயிலே. 13

    இறைவியைக் காண்டல்.
    57.
    பிடியே நடைகைப் பிடியே யிடைகுழற் பின்னலரா
    மடியே வடமும் மடியே யதிலுண்டு மைக்கணஞ்சேல்
    அடியேனை யாளுங் கலைசைத் தியாகர்வெற் பண்ணல்சொன்ன
    படியே தெரிசித்த லாலிவ ளேயந்தப் பைங்கொடியே. 14

    இகழ்ந்ததற் கிரங்கல்
    58.
    ஈட்டற மோங்கிட வேந்துநம் வேந்த ரெறிதிரைநீர்க்
    கோட்டகஞ் சூழ்ந்த கலைசைத் தியாகர் குலவுதொண்டை
    நாட்டணி யன்னவர் நாட்டவை நாட்டத்தை நாட்டப்பட்டால்
    வாட்ட முறாரல்லர் முன்பெள் ளியதென் மதியின்மையே. 15

    தலைவனை வியத்தல்.
    59.
    சேற்றம் புயத்தடஞ் சூழுங் கலைசைத் தியாகர்வெற்பில்
    தோற்றந் தருமென் முலையாள் விழியெனுஞ் சூருடைவெங்
    கூற்றங் குதித்தெதிர் பாயவஞ் சாதுபல் கூற்றுக்களால்
    மாற்றந்த மந்திர மெவ்வாறு பெற்றனன் மன்னவனே. 16

    தலைவியை வியத்தல்.
    60.
    பணியா பரணர் கலைசைத் தியாகர் பனிவரைமேல்
    அணியார் சுடரிரு வேலேந் தியநம் மரசிருகண்
    மணியாடு பாவையின் மேன்மைய ரேயிவர் வாய்ந்ததிருத்
    தணியா ரருளென்ன வேதணிப் பாரண்ண றாபத்தையே. 17

    தலைவன்றனக்குத் தலைவி நிலை கூறல்.
    61.
    திண்டே ருலாவு மறுகார் கலைசைத் தியாகர்வெற்பில்
    தண்டே னலங்கலந் ‍தோளாய் கலைக்கடற் சாரமுற்றும்
    உண்டே வருமொர் முகில்பார்த் தொருவல்லி ‍யொல்கிநிற்கக்
    கண்டேன்பண் டேர்தரு வண்டேறி வாழுமக் காவகத்தே. 18

    தலைவன் சேறல்.
    62.
    வலித்தென்னை யாளுங் கலைசைத் தியாகர் வரைப்புறத்தே
    சலித்தலின் றென்மனத் தாமரை யேந்திய தாண்மலர்மேற்
    கலித்திடு கிண்கிணிக் கொத்துஞ் சிலம்புங் கலின்கலினென்
    றொலித்திடத்தான்றனிபாடுங்கொலோவென்னுயிர்த்துணையே. 19

    தலைவன் தலைவியைக்காண்டல்.
    63.
    எங்களை கண்டென் கலைசைச் சிதம்பர வீசர்வெற்பில்
    திங்களின் வாயெழு வெண்கதி ராலென்றன் சித்தவிடா
    யுங்கடுங் காமப் பிணியுந் தணித்‍தென் னுயிர்தனியே
    மங்கள மின்கொடி போனின்ற வாவிந்த வார்பொழிற்கே 20

    கலவியின் மகிழ்தல்.
    64.
    பத்திக் கிரங்குங் கலைசைத் தியாகர் பனிவரைமேல்
    எத்திக்குஞ் சூழ்தரு கூர்ங்கணல் லாரிவ ரீர்ங்கனிவாய்த்
    தித்திக்குமட்டுத்தெவிட்டா துண்டேனுக்குச்சேரிற்கைப்பாய்த்
    தத்திக் குமட்டு மருந்தாஞ் சுரருண்ணுந் தண்ணமுதே. 21

    புகழ்தல்.
    65.
    எம்பாவை யேற்குங் கலைசைத் தியாக ரெடுத்து முன்னாள்
    தம்பா லிருந்த கலசத்தை வேதன் றனக்குணர்ந்துன்
    அம்பார மென்முலைக் கொப்பின்மை யாமென் றளித்து விட்டால்
    கொம்பான நுண்ணிடை யாயினி நேரென்ன கூறுவதே. 22

    தவைவியைப் பாங்கியொடுவருகெனப் பகர்தல்.
    66.
    தேங்கிய நீரொலி யோங்குங் கலைசைத் தியாகர்கையில்
    தாங்கிய மானு முமையவ ளேந்து தனிக்கிளியும்
    நீங்கியிங் கென்னெதிர் வந்தா லெனச்சென்று நீவருங்கால்
    பாங்கிதன் னோடிங் கினிவர வேண்டும் பனிமொழியே. 23

    தலைவியைப் பாங்கிற் கூட்டல்.
    67.
    சிற்பர னாரெஞ் சிதம்பர வீசர் திருக்க‍லைசைப்
    பற்பல போதுகள் சேர்ந்துழித் தெய்வப் பரிமளஞ்சேர்
    கற்பகப் போதொன்று சார்ந்தது போலக் கனங்குழையாய்
    வெற்பக நீசென்று நின்னெழி லாயத்தை மேவுகவே. 24

    இதுவுமது.
    68.
    காராருங் கண்டர் கலசத் தியாகர் கலைசைவெற்பில்
    ஓராவி தன்னுட் பலபூ மலர்ந்திட் டுறநடுவண்
    சீரார்செந் தாமரை யொன்றலர்ந் தென்னத் தெரியிழைநீ
    மாராய நின்மங்கை மாராயந் தன்னை மருவுகவே. 25

    9. பாங்கிமதியுடன்பாடு.


    ஐயமுற்றோர்தல்.
    69.
    வளையாத சூலர் கலைசைத் தியாகர் வரையின்மலர்
    களையாய்ந் தெடுத்துத் தொடை தொடுத்தோவண்டல் கார்க்குழலி
    குளையாயத் தோடயர்ந் தோசிவ கங்கை குடைந்துமிக
    விளையாடி யோவறி யேனிவண் மேனி மெலிந்ததுவே. 1

    ஐயந் தீர்தல்.
    70.
    உண்டோர் புதுமண முண்டோ ரழகுண் டொழுக்கமிப்போ
    துண்டோ தனங்கைத் தலுண்டோர் தொழிற்கரவுண்டொருவல்
    உண்டோ ரிடநிற்ற லாதலி னாலிவ ளுற்றறிந்த
    துண்டோர் மணந்தென் கலைசைத் தியாக ருயர்வெற்பிலே. 2

    பிறைதொழுகென்றல்.
    71.
    சிலைக்கேயொப் பாமெண் புயத்தார் கலசத் தியாகர்முடித்
    தலைக்கேறி யம்மை சிவகாமி நெற்றியிற் சாய்ந்துதொட்டிக்
    கலைக்கேச வன்மெய்ப் புகழ்போல் விளங்குங் கதிர்ப்பிறையை
    அலைக்கேதஞ் செய்குழ லாய்தொழ வேதகு மங்கைகொண்டே 3

    இதுவுமது.
    72.
    ஆனேறு மையர் கலைசைத் தியாக ரளித்ததந்திக்
    கூனேறும் வெள்ளை யொருகொம்பின் வெண்பிறைக் கோலங்கண்டால்
    தேனேறு பாணிக் கமலங்கள் கூம்பிடுஞ் செய்கையைப்போல்
    தானே குவியுமிப் பாணிக் கமலமுந் தண்கொடிக்கே. 4

    சுனைநயப்புரைத்தல்.
    73.
    அருளுங் கலைசைத் தியாகேசர் தம்மை யடுத்தவர்கண்
    இருளினை வாங்கித் தமதருட் சோதியை யீந்தெனவுன்
    பெருவிழிக் கார்கவர்ந் துன்வாயில் வெண்மை பெறத்தந்ததோ
    மருவிமின் னேயங்கு நீமகிழ்ந் தாடு மலர்ச்சுனையே. 5

    சுனைவியந்துரைத்தல்.
    74.
    நெய்யிலைச் சூலர் கலைசைத் தியாகர் நெடுங்கிரிமேல்
    மெய்யினில் வேர்வு நவமா விளமுலை மீதெழுதும்
    தொய்யிலுந் தான்பெற லாமெனின் யானுந் துடியிடையாய்
    தையிலு மாசி தனிலுஞ்சென் றாடுவன் தண்சுனையே. 6

    தகையணங்குறுத்தல்.
    75.
    முருக்கலர் வெண்மை கருவிளம் போது முழுச்சிவப்பா
    இருக்குமல் லான்மற் றுனக்கு மவட்கு மெழிலொன்றுசீர்
    பெருக்குங் கலைசைத் தியாகேசர் வெற்புறை பேரணங்கே
    மருக்குயத் தாளை வரக்கண்டு நீசெல்க வாழிடமே. 7

    நடுங்கநாட்டம்.
    76.
    பாவந் துமிக்குங் கலைசைத் தியாகர் பருப்பதத்து
    வாவந் துலவையிற் குத்திற்றன் னோவம் மருங்கொதுங்கித்
    தீவந் துடனணைந் தாற்போ லயிலைத் திரித்ததன்வெங்
    கோவந் துகள்பட வென்றா ரொருவரெங் கோமளமே. 8

    பெட்டவாயில்பெற் றிரவுவலியுறுத்தல்.
    77.
    கார்மாதை யாதரித் தென்று மவளுப காரத்தினால்
    பார்மாதைத்தோண்மிசைத்தாங்கிமன்வாழும்பரிசினைப்போல்
    சீர்மாதர் மல்குங் கலைசைத் தியாகர் சிலம்பினம
    தேர்மாதி னாவியை யாஞ்சென் றிரந்திட்ட மெய்துவமே 9

    ஊர் வினாதல்.
    78.
    தூக்கமுற் றாரிற் புதியேன் சுழன்றிந்தச் சூழலுற்றேன்
    ஆக்கந் திரண்டதும் பாக்கமெங் கேசொலு மாயிழையீர்
    போக்கங் கொருவுங் கலைசைத் தியாகர் பொருப்பிலென
    தேக்கந் தவிர்ந்திரு நோக்கந் தெரிந்தங்க ணேகுதற்கே.

    பெயர் வினாதல்.
    79.
    ஆராமஞ் சூழ்ந்த கலைசைத் தியாக ரசலத்துங்கள்
    ஊராத ரத்தொ டுரைக்கவொண் ணாவகை யொன்றுளதேல்
    கூராரும் வேற்கட் கொடியிடை யீரன்பு கூர்ந்தனிர்நும்
    பேராகி லுஞ்சொல்லு வீர்சோத்தி ரானந்தம் பெற்றிடவே. 11

    வேழம் வினாதல்.
    80.
    சேலோடு வண்டணை வாவிக் கலைசைத் தியாகர்வெற்பிற்
    பாலோடு தேனித ழூறுசெவ் வாய்நற் பணிமொழியீர்
    மாலோடு மும்மதங் காலோட நான்சிலை வாங்கியெய்த
    கோலோடு மஞ்சியிங் கேவந்த தோவொரு குஞ்சரமே. 12

    வேங்கை வினாதல்.
    81.
    தீங்கையெல் லாந்தவிர்த் தாளூங் கலைசைத் தியாகர்வெற்பில்
    கோங்கைவென் றோங்குங் குவிமுலை யீரெரி கூர்ந்தபடை
    தாங்கையிற் கொண்டுபன் மாவீட்டும் போதித் தடம்புனத்தார்
    வேங்கையின் பால்வந்த தோவொரு வேங்கைதன் வீறழிந்தே [13]

    கலை வினாதல்.
    82.
    உடுக்குங் கலைகளன் றோதுங் கலையுமன் றும்பரிம்பர்
    அடுக்குங் கலைசைத் தியாகேசர் வெற்பினி லாங்கொர்புள்வாய்
    மடுக்குங் கலையிந்து போன்முகத் தீர்கண் மணிவலைக்குள்
    படுக்குங் கலையொன்று வந்ததுண் டோவிப் பசும்புனத்தே. [14]

    வன்றி வினாதல்.
    83.
    அருவன்றி யேயு முருவன்றி யாண்பெண் ணலியுமல்லா
    ஒருவன் றியாகப் பெருமான் கலைசையை யொப்புடையீர்
    பெருவன் றிறலுடை யென்னம் படவுடல் பின்னம்படக்
    கருவன்றி யொன்றிங்கு வந்ததுண் டோசொலுங் கற்புடனே. [15]

    இடை வினாதல்
    84.
    மிடியைத் துரத்துங் கலைசைத் தியாகர் வியன்கிரிமேல்
    பிடியைக் கடந்த நடையுடை யீர்நற் பெரியதன
    முடியைத் தரித்துநற் பூபாரங் கொண்டு முறைநிறுத்தும்
    கொடியைக் கரந்துவைத் தீரென்ன காரணங் கூறுமினே. [16]

    வழி வினாதல்.
    85.
    எவ்வழி யுஞ்சுழன் றேங்கிக் கிடந்த வெமக்குமலத்
    தெவ்வழி வித்தருள் செய்தார் கலைசைத் தியாகர்வெற்பில்
    மைவழி கூந்தன் மயிலனை யீரந்தி வந்திடுமுன்
    செவ்வழி யொன்றுரை யீரினி யான்மெலச் செல்வதற்கே. [17]

    மொழியாமை வினாதல்.
    86.
    காவாமற் காக்குங் கலசத் தியாகர் கலைசையன்னீர்
    ஆவா வுழையுழை மேயச் சுகஞ்சுக மாரவிங்கே
    ஓவா வினாவுடை யேற்கு வயாவைத் தொருகுமுதப்
    பூவாய் திறந்துரை யாடா வகையென் புகன்மின்களே. [18]

    யாரேயிவர் மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல்.
    87.
    சிங்கியங் கண்டர் கலைசைத் தியாகர் சிலம்பகநீர்
    தங்கிய வூரெது நும்பெய ரேதென்பர் தைத்தவண்டோ
    டுங்கிபம்போந்த துண் டோவென்பர் வாய்திறந் தொன்றுரையா
    இங்கித மென்னென்ப ராலிவ ராரெண்ணம் யாதிவர்க்கே. [19]

    எண்ணம் தெளிதல்.
    88.
    காற்றயி னாகர் கலசத் தியாகர் கலைசைமணல்
    ஊற்றம் பெனமிகும் வேட்கைகொண்டேயிவரொன்றன்பினொன்
    றேற்றம தாக வினாய்நிற்ப ராலிவை யெண்ணிடுங்கால்
    தேற்றம தாகு மிவள்பொருட் டேயென்றென் சிந்தனைக்கே. 20

    இருவருமுள்வழி ஒருமையிற் போதல்.
    89.
    நம்மலந் தீர்க்குங் கலைசைச் சிதம்பர நாதர்வெற்பில்
    செம்மல ரோன்பெற்ற சித்தியும் புத்தியும் சேர்ந்திருந்தாங்
    கம்மது வார்பொழி லம்மட வார்மணந் தாரவர்க்கண்
    டெம்மனத் திட்டமெல் லாஞ்சொல்ல வேநல்லவேல்வையிதே. 21

    கையுறையேந்திநின் றவ்வகை வினாதல்.
    90.
    அரையொன்று நாகர் கலைசைத் தியாக ரறையருவி
    நிரையொன்று குன்றத்தி லென்கைச்சிலீமுக நேர்ந்துதைப்பப்
    புரையொன்று தண்பனிக் காலத்திற் றாமரை போன்றுறுதா
    மரையொன்று வந்ததுண் டோமட வீருங்கள் வார்புனத்தே. 22

    பாங்கி எதிர்மொழி கொடுத்தல்.
    91.
    செஞ்சர ணன்பர்க் களிப்பார் கலைசைத் தியாகர்மகிழ்
    பஞ்சரம் பொன்சொரி தண்டக நாட பனிப்புறத்தைக்
    குஞ்சரத் தோடொரு குஞ்சர மஞ்சிக் குருதிபொங்க
    மஞ்சர வஞ்செய் புனத்தெங் கனாவிலும் வந்திலதே. 23

    பாங்கி இறைவனை நகுதல்.
    92.
    தேய்ந்தநுண் சிற்றிடை யாய்தென் கலைசைத் தியாகர்வெற்பில்
    பாய்ந்தசிங் கேறன்னர் மாம்பத் திரமெனும் பத்திரத்தால்
    காய்ந்தவ ராகமன் றோர்திண்ண னாரெய்த கைக்ககத்தான்
    மாய்ந்தவ ராகத்தின் மேலாஞ் சதிரின் மறைந்ததுவே. 24

    பாங்கி மதியினில் அவரவர் மனக்கருத்துணர்தல்.
    93.
    ஏட்டையை நீக்குங் கலைசைத் தியாகர்வெற் பேந்துதினைக்
    காட்டைப் புரக்குங் கருத்தே யிவட்கின்றிக் காவலர்மா
    வேட்டைக்கு வேட்ட வருமல்லர் கூட்ட விருப்பமனப்
    பூட்டைத் திறந்தினி தாக்காட்டு மாலிவர் பூங்கண்களே. 25

    10. பாங்கியிற் கூட்டம்


    தலைவன் உட்கோள் சாற்றல்.
    94.
    செங்கே ழிதழிக் கலைசைத் தியாகர் சிலம்பிலுமக்
    கிங்கேய் கவண்வைத் தெறிவான்சிந் தாமணி யென்பதுவும்
    சங்கேந்தி மார்பின் மணியுங் கொணர்ந்து தரவும்வல்லேன்
    பங்கே ருகமனை யீரென்னை யாளும் பணிவிடைக்கே. (1)

    பாங்கி குலமுறை கிளத்தல்.
    95.
    நாரங்கொள் வேணிக் கலைசைத் தியாகர்நன் னாட்டிறைவா
    ஆரங்கள் வேட்டவர் நற்சுகந் தாதி யணிவரல்லாற்
    பீரந் தருமலர் வேண்டு வரோநின் பெரும்பிணையல்
    பாரம் பரியமன் றாற்சூட்ட லென்குறப் பைங்கொடிக்கே. (2)

    தலைவன் தலைவிதன்னை உயர்த்தல்.
    96.
    மருப்பொதி சோலைக் கலைசைத் தியாகர் வரைமடவீர்
    விருப்பொ டருண கிரிநாத ரன்று விதம்விதமாப்
    பொருப்புறை வேலவர் வள்ளியொ டாடிறும் பூதுரைத்த
    திருப்புகழ் கேட்டறி யீரோ விஃதென்னை செப்பியதே. (3)

    பாங்கி அறியாள்போன்று வினாதல்.
    97.
    ஆடிய பாதர் கலைசைக் தியாகர்வெற் பாடருவி
    ஓடிய பைஞ்சுனைச் செங்கழு நீர்பறித் தொண்குறிஞ்சி
    பாடியங் காவிற் பயிலுமின் னார்களெம் பார்த்திபனே
    கோடியின் மேலுளர் யாருன துள்ளங் குழைத்தவரே. (4)

    இறையோன் இறைவிதன்மை இயம்பல்.
    98.
    மகமேரு வில்லர் கலசத் தியாகர் வளர்கலைசைச்
    சுகமே மொழிகிஞ் சுகமே யிதழா சுகம்விழிபன்
    னகமே மருங்கு னகமே தனதட நன்றிகொன்றார்
    அகமே குழன்முண் டகமேபொற் பாதமென் னாருயிர்க்கே. 5

    பாங்கி தலைவியருமை சாற்றல்.
    99.
    வெள்ளாறு சூடுஞ் சிதம்பர வீசர் வியன்கலைசை
    வள்ளா லெமது நகராச னீன்ற வரமயிலைத்
    தெள்ளார் கலியினிற் றிங்களின் பின்வரு சீரணங்கை
    எள்ளா வெளியளென் றெண்ணுதி போலு மிதயத்திலே. 6

    தலைவன் தலைவி இன்றியமையாமை இயம்பல்.
    100.
    அரக்கவி ராம்பலஞ் செவ்வா யணங்கணி யார்கலைசை
    புரக்கவல் லாரெஞ் சிதம்பர வீசர்மெய்ப் போகமென்னும்
    சரக்கறை யாயின தையலை நீதமி யேற்களிக்க
    இரக்கமுன் பால்வரு மேனிற்கு மாலுயி ரென்றனுக்கே. 7

    பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல்.
    101.
    அண்டர்கொண் டாடுங் கலைசைத் தியாக ரருணைவெற்பா
    வண்டலர் போதகந் தானேசென் றாடும் வகையதுபோல்
    கொண்டலங்கோதைக்குநீயேசென்றுள்ளக்குறையையெல்லாம்
    கண்டறை மோவெம்ம னோரின்ன கூறல் கடவதன்றே. 8

    பாங்கியைத் தலைவன் பழித்தல்.
    102.
    தோட்டார்குழலிக் கென்சோர்வையெல்லாஞ் சொல்லித்தோயுமின்பம்
    கூட்டா யெனவுன்னை யானிரந் தேனேதிர் கூறித்தொண்டை
    நாட்டார் கலைசைத் தியாகேசர் பாதத்தை நாடிப்பற்ற
    மாட்டார் நிலையையொத் தாயிது வோவுன் மதிநுட்பமே. 9

    பாங்கி பேதைமை ஊட்டல்.
    103.
    இதைத்குறு வேலிக ணாட்டவெண் கோட்டுக் கிருங்கரியை
    வதைக்குந்தன் கேளிர் மறம்போல வஞ்சியும் வன்சமனை
    உதைக்குஞ் சரணர் கலைசைத் தியாகரை யுன்னலர்போல்
    பதைக்கும் பிறரனுக் கந்தெரி யாத பரிசினளே. 10

    காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்.
    104.
    ஆலைக் கழனிக் கலைசைத் தியாக ரணிவரைமேல்
    சோலைக் கிடைவந்து சோர்ந்து நின்றேற்குச் சுவைமொழியாம்
    பாலைப் பவளவள் ளத்தூ டளித்துப் பசிதணித்த
    மாலைக் குழலியை நீயறி யாளெனன் மாலுரையே. 11

    பாங்கி முன்னுறுபுணர்ச்சி முறையுறக் கூறல்.
    105.
    தேனேறுய் யானக் கலைசைத் தியாகர் சிவகங்கைநீர்
    தானேசென் றாடினன் பின்பாட வோர்துணை தான்கொள்வனோ
    மீனேயு நோக்கி யுனக்கன்ன ளாயிடின் மேலும்வெற்பா
    ஊனே யுயிரென்ன வொன்றாகி யொன்றுக வுங்களிலே. 12

    தலைவன் தன்னிலை சாற்றல்.
    106.
    தென்னார் கலைசைத் தியாகேச ருக்குத் திருவசந்த
    நன்னாளிற் சீதள வுற்சவஞ் செய்பவர் நல்லன்புபோல்
    இந்நா ளெமக்கன்பு வைத்துப சாந்த மெதுசெய்யினும்
    என்னா மின்னாகந் தழுவச்செய் யாவிடி னேந்திழையே. 13

    பாங்கி உலகியல் உரைத்தல்.
    107.
    கட்டா ரழகியைக் காமுறி னீயுண்மை காட்டிருபத்
    தெட்டா கமஞ்சொல் கலைசைத் தியாக ரிமயப்பெண்ணைத்
    தொட்டானந் தத்திரு நாணணிந் தாங்கிந்தத் தொல்லுலகில்
    பட்டாங்கி லுள்ள படியே வரைந்துகொள் பார்த்திபனே. 14

    தலைமகன் மறுத்தல்.
    108.
    திருந்தார் புரந்தழற் கிட்டார் கலைசைத் தியாகர்வெற்பில்
    பெருந்தாகங் கொண்டுழல் வானைக் குளந்தொட்டுப்பின்புதுநீர்
    அருந்தாங் கெனச்சொன்ன வாதர வாகு மணங்கனையாய்
    வருந்தாதம் மாதை மணம்புரிந் தாடென்ற வாய்மொழியே. 15

    பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்.
    109.
    பாங்காடும் வேட்டைக் கெமர்வரு வாரவர் பார்க்கின்வெகு
    தீங்காய் விளையு நிசிவந்த தியாங்களுஞ் செல்குவமால்
    பூங்காவி லேறுங் கலைசைத் தியாகர் பொருப்பிலினி
    ஏங்காம லிப்புனம் விட்டைய நீயு மெழுந்தருளே. 16

    தலைவன் கையுறை புகழ்தல்.
    110.
    தன்கையிற் கங்கொள் கலைசைக் கலசவு தாரன்வெற்பில்
    மின்கையிற் கொண்டு தரிக்கத் தகுமொரு வேடன்கண்ட
    தென்கயி லாயம் வடகயி லாயத்துஞ் சீர்த்திகொண்ட
    தென்கயிற் பூந்தழைக் கொப்பாந் தழையில்லை யெங்கணுமே. 17

    பாங்கி கையுறை மறுத்தல்.
    111.
    வானாடர் சூழுங் கலைசைத் தியாகர் வளரும்வெற்பா
    கானார்நின் கைத்தழை மானாள்பொற் றேரல்குற் காணிலெமர்
    ஆனா தயிர்ப்பரிக் குன்றத்த தன்றிதென் றையுறவு
    நானா விதங்கொள்வ ராலிது வாங்குத னன்மையன்றே. 18

    ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல்.
    112.
    முருகுஞ் சுரும்புஞ் செறிகுழ லாள்பத மூன்றுமன்பு
    பெருகுநம் பாலென் றிருந்தநெஞ் சேநடம் பேரன்பர்கண்
    டுருகும் படிசெய் கலைசைத் தியாகரை யுன்னலர்போல்
    கருகும் படிநம்மி னிம்மாந் தழைசெய் கருமமென்னே. 19

    பாங்கி ஆற்றுவித்தகற்றல்.
    113.
    தெருள்வான் கலைசைத் தியாகேச ரன்பரிற் செப்பியம்மான்
    அருள்வாங் குவனுந்தி யெல்லா யிரங்கரத் தாலடைந்த
    இருள்வாங்கி யாங்கெழும் போதிங்கு வாவந் திரவலருன்
    பொருள்வாங்கு தன்மையின் வாங்கிக் கொள்வேனின் கைப்பூந்தழையே. 20

    மடலே பொருளென மதித்தல்.
    114.
    அடலேற தேறுங் கலைசைத் தியாக ரருட்பணிக்காம்
    உடலே றுயிரென்ன வென்னுயிர்க் கோருயி ராவிருந்தார்
    கடலேய் விழிதந்த காமக் களிமயக் கத்தைநெஞ்சே
    மடலே யமிர்தசஞ் சீவினி யாக்கொண்டு மாற்றுவமே. 21

    பாங்கிக்கு உலகின்மேல்வைத்து உரைத்தல்.
    115.
    வேய்வார்மென் றோளியர் காதற் கடலிடை வீழ்ந்துமிகச்
    சாய்வார் கிழிபிடித் தூர்வார் மடல்பின் றடங்குவடு
    பாய்வா ரிமாசல ராசன் குமாரி பணைமுலைகள்
    தோய்வார் கலைசைத் தியாகேசர் வெற்பிலஞ் சொற்கிளியே 22

    ‍அதனைத் தன்மேல்வைத்துச் சாற்றல்.
    116.
    காசியின் மேன்மைக் கலைசைத் தியாகர்மெய்க் காட்சியைப்போல்
    பூசிவெண் ணீறெருக் கம்பூ வணிந்தென்பு பூண்டுநல்லாய்
    பாசிழை யார்வடி வார்படங் காட்டிப் பனைமடலாம்
    வாசியை நாளையுன் னூர்வயி னூர்ந்து வருகுவனே. 23

    பாங்கி தலைமகளவயவத்தருமை சாற்றல்.
    117.
    மத்தம் புனையுங் கலைசைத் தியாகர் வரைக்கரசே
    நத்தஞ்சு கந்தரத் தாள்கருங் கூந்த னறையெழுதி
    முத்தம் பதிந்த முறுவற்செவ் வாயின் மொழிவரைந்திச்
    சித்தம் பரநடுத் தீட்டுவ ரோவந்தத் தேவருமே. 24

    தலைமகன் தன்னைத்தானே புகழ்தல்.
    118.
    நெறித்தமெல் லோதிநல் லீரென்றன் வல்லவ நீர்மைசற்றும்
    குறித்தறி யீர்திருத் தொட்டிக் கலையிற் குளிர்ந்தநிலா
    எறித்தமின் வேணிச் சிதம்பர வீசர்தம் மின்னருளால்
    பொறித்தபொற் பாவையு ளாவியுங் கூடப் புகுவிப்பனே. (25)

    அலர்முலைப் பாங்கி அருளியல் கிளத்தல்.
    119.
    அன்றிலம் பிள்ளையுந் தூக்கணம் புள்ளினத் தஞ்சினையும்
    ஒன்றிய வெண்குரு கின்முட்டை கூட்டொடு மோங்கும்வெற்பா
    மன்றினின் றாடுங் கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போற்
    கொன்றிப் பனைமடல் கொள்ளார் குணப்பெருங்குன் றத்தரே. (26)

    பாங்கி கொண்டுநிலை கூறல்.
    120.
    எல்லாந் தெரிக்குமென் சொல்லா லினியந்த விந்திரையின்
    நல்லார்புல்லாரெனினாண்பெண்ண தாய்மண்ணினண்ணிநிற்கும்
    புல்லார்நல் லாரெனக் கொண்டுன் குறைமுடி பூங்கலைசை
    அல்லார் மிடற்றர் சிதம்பர வீசர்வெற் பாதிபனே. (27)

    தலைவி இளமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல்.
    121.
    கற்றில கண்கள் களவுகண் மென்முலை காண்பதற்குச்
    சற்றில வாம்பலி னாம்பற் பிறந்தில தண்கலைசை
    நற்றியா கேசர்நன் னாட குறுமுளை நாட்டுகொம்பர்
    பற்றிடு மோவென்கொல் பேதைக் கிரந்து பகர்கின்றதே. (28)

    தலைவன் தலைவி வருத்தியவண்ண முரைத்தல்.
    122.
    களியானைத் தோலர் கலசத் தியாகர் கழலிறைஞ்சும்
    அளியார்க் களிக்குங் கலைசையன் னாய்சிறி யானொருசிற்
    றுளியாற் சிலையின் வலிகுறைத் தாங்கன் றுனதுயிராம்
    கிளியார் மொழிவிழி வேலாலென் னுள்ளங் கிழித்தனளே. (29)

    பாங்கி செவ்வியருமை செப்பல்.
    123.
    வாரா ளொருவிளை யாட்டினுக் கெங்கும் வளர்த்தகிள்ளை
    பாராள் கலைசைத் தியாகர்வெற் பாமதன் பார்த்துருகும்
    ஏராள்பொன்னூசலி லேறாளென் னோநினைந் தெங்களையும்
    சேரா ளவளுக் கடியேனெவ் வாறு தெரிவிப்பதே. (30)

    தலைவன் செவ்வியெளிமை செப்பல்.
    124.
    கொப்பிடு மஞ்செவிப் பஞ்சடி யாயருள் கூர்ந்தெனையும்
    கைப்பிடித் தாளுங் கலைசைத் தியாகர் கயிலைவெற்பில்
    மைப்பிடி போனடை மானுக்கு நான்வந்த வாறுசற்றே
    செப்பிடிற் சேர்த்துத்தன் செப்பிடு சாந்தமுன் செப்பிடுமே. (31)

    பாங்கி என்னை மறைத்தபின் எளிதென நகுதல்.
    125.
    நன்னறும் போது நெடுநாரு மோர்வயி னண்ணிடினும்
    இன்னணி கூரப் பிணைப்பாரில் லாம லிணைந்தொன்றுமோ
    பின்னக மோலிக் கலைசைத் தியாகர் பெரியவெற்பா
    நின்னகத் தெண்ணமற் றென்னையல் லாம னிறைவுறுமே. 32

    ‍அந்நகை பொறாது அவன் புலம்பல்.
    126.
    நிழலார் மழுவர் கலைசைத் தியாகர் நெடுங்கிரிமேல்
    குழலார் மொழிமட வாடந்த காமக் கொடுங்கனல்கூர்ந்
    தழலாயுள் வேசறும் வேலையி னீயெனை யாற்றலின்றித்
    தழலா கியநகை நெய்தனைப் பெய்தனை தாழ்குழலே. 33

    பாங்கி தலைவனைத் தேற்றல்.
    127.
    பன்னூறங் கையகத் தெய்தினும் வாய்மைப் பயன்றருமோர்
    நன்னூல் வழிச்செல்வர் போற்பலர் பாங்கியர் ஞாங்கருற்றும்
    என்னூ தியச்சொல் வழியெம் பிராட்டி யிசைந்து றுமால்
    பொன்னூர் கலைசைத் தியாகர்வெற் பாவுறல் புன்கணையே. 34

    பாங்கி கையுறை யேற்றல்.
    128.
    அக்கணப் பன்னெம் மாபோ னொருவன்முன் னாதரித்த
    தெக்கண மாகயி லாயத்திற் றோன்றுஞ் சிறப்பதனால்
    முக்கண ரெங்கள் கலைசைத் தியாகரை மோகிப்பர்போல்
    இக்கண மேற்பன்மன் னாநின்கை மாந்தழை யேந்திழைக்கே. 35

    கிழவோன்ஆற்றல்.
    129.
    மந்திர ரூபர் கலைசைத் தியாகர வளரருள்போல்
    தந்திர மோங்கிய பாங்கிதன் வாண்முகத் தண்மதிபார்த்
    திந்திரன் வாழ்வுந் துரும்பாக வெண்ணியின் றென்னிதயம்
    சந்திர னைக்கண் டுவந்த சகோரந் தனையொத்ததே. 36

    இறைவன்றனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு
    அவன்குறையுணர்த்தல்.
    130.
    கல்லாரக் கண்ணி கலசத் தியாகர் கலைசைவெற்பில்
    வல்லா ரொருவர் வருவர்வந் தாலொன்றும் வாய்திறந்து
    சொல்லாரென் கண்ணெதிர் நிற்பாரப் பாற்புனச் சூழல்விட்டுச்
    செல்லார் தழைகளெல் லாந்தரு வாரென் செயத்தக்கதே. 37

    இறைவி அறியாள்போன்று குறியாள் கூறல்.
    131.
    நாகந் திசைகொள் கலைசைத் தியாகரென் னாதர்நந்தி
    நாகந் தனின்முனி வோர்வாழ் குகைக்கு நயந்துமத
    நாகங்கை யான்மயிற் றோகை யலகிட்டு நன்னுதலாய்
    நாகந் தருசெம் மணிவிளக் கேற்றிடு நாடொறுமே. 38

    132.
    மைந்தானை யூருங் கலைசைத் தியாகர் வரையினிற்கூர்
    அந்தானை யொண்கண்ணி யுன்மேல் விருப்பின னாகிமதம்
    சிந்தானை யொன்றிங்கு வந்ததுண் டோவெனத் தேடியன்று
    வந்தானை யின்றுகண் டேன்புனத் தூடென் மறைப்பதுவே. 39

    பாங்கியைத்(?) தலைவி மறைத்தல்.
    133.
    மன்றாட வல்ல கலைசைத் தியாகர் வரைமங்கைதீங்
    கொன்றாத தொண்டைநன் னாட்டிற் றழைகைக்கொண் டுங்கொதுங்கி
    நின்றார் தமைநம் புனத்தய லேகண்டு நீமதித்தல்
    நன்றா விருந்த துனக்குமுன் சொற்கு நடுவின்மையே. 40

    பாங்கி என்னை மறைப்பது என்னெனத்தழால்.
    134.
    அளிக்குங்கண் ணாளர் கலைசைத் தியாகருக் கன்பரைப்போல்
    தெளிக்குமென் சொன்னயம் பார்த்துமுன் கண்ணருட் சீதவெள்ளம்
    குளிக்குந் தவமுடை யேன்றனக் குண்மைக் குறிப்புணர்த்தா
    தொளிக்குங் கருத்தென்னை யென்னுயி ராகிய வொண்ணுதலே. 41

    பாங்கி கையுறை புகழ்தல்.
    135.
    மலையத் தகுவன யாரென்ன கூறினு மாதர்நல்லாய்
    மலையத் தகுவன வல்லநம் மன்பர்க்கு வாய்த்தனவ
    மலையத்தர் நித்தர் கலைசைத் தியாகர் மகிழ்ந்ததமிழ்
    மலையத் தகும்பிட்டுத் தொட்டிந்த வார மருத்தழையே. 42

    தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்.
    136.
    நடிக்குந் தயாளர் கலைசைத் தியாகர்பொன் னாகத்தந்தார்
    முடிக்குமைம் பாலி யிறாற்றிரள் கீண்டு முருகையுரல்
    அடிக்குஞ் சரம்பிடிக் கூட்டுதல் பார்த்தன் றசுரருயிர்
    குடிக்குமஞ் சேயனை யானெனைப் பார்த்துக் குழைந்திடுமே. 43

    மறுத்தற் கருமை மாட்டல்.
    137.
    தீயாடு செங்கைத் தலத்தார் கலைசைத் தியாகர்வெற்பர்
    ஓயாமற் றந்த தழைக்கோ ரளவில்லை யூங்கவர்க்கென்
    வாயாரச் சொன்னபொய்க் குந்தொகை யின்றிந்த மட்டுமினிப்
    பேயாடல் பார்க்கினும் பாரே னவரிடர் பெண்ணமுதே. 44

    தலைவன்குறிப்புவேறாக நெறிப்படக்கூறல்.
    138.
    செப்பனை வோர்களுங் காணக் கலைசைத் தியாகவெங்கள்.(?)
    அப்பனை வேண்டி யருக்கென்பு நீறணிந் தண்ணலவன்
    ஒப்பனை வல்லி யுதியன் பகைவந் துதித்திடவே
    இப்பனைகொள்ளுங்கொ‍லோவென்னவோ பின்னுமெண்ணுவதே. 45

    தோழி தலைவியை முனிதல்.
    139.
    கைப்பாகும் பேரலர் வாராது காத்துன் கருத்தின்வழி
    தப்பாம னிற்பவர்க் கெம்பெரு மாட்டி தயாநிறைத்து
    முப்பாழு நீக்குங் கலைசைத் தியாகரை முன்னலர்போல்
    இப்பாவி சொன்னசொற் றீங்கும் பொறுத்தொழி யென்றனையே. 46

    தலைவி பாங்கியை முனிதல்.
    140.
    சுற்றம் பரிசனத் தன்புடை நீதுள வோன்மறையைப்
    பெற்றம் பரிகொள் கலைசைத் தியாகர் பிறங்கலன்பர்
    அற்றம் பரிவொடு சொற்றாய் சொனதறி யாமையென்றென்
    குற்றம் பரிகரி யென்றா யெல்லாமென் குறையென்பதே. 47

    தலைவி கையுறையேற்றல்.
    141.
    ஊரு வரத்தழை கொண்டணி யாவிடி னூடிமடல்
    ஊருவர் மன்னர் தழையுடுத் தாலல ரோதியிந்த
    ஊருவர்ப் பாமென் கலைசைத் தியாகர்வில் ‍லோதிநல்லாய்
    ஊருவர் நீரலர் தீங்கரும் பாங்கை யுறைநமக்கே. 48

    இறைவி கையுறை ஏற்றமை பாங்கி இறைவற் குணர்த்தல்.
    142.
    அலைமேல் வருமங்கை யான்போ யளித்தலு மங்கைக்கொண்டு
    தலைமேற் கொண்டேபின் கலைசைத் தியாகர் தமனியமா
    மலைமேற்செங்கோடலுங்கொண்டலுங் கண்டென வண்டழையை
    முலைமே லணைத்துக் கொண் டாடிய மோக மொழிவரிதே. 49

    பாங்கி தலைமகற்குக் குறியிடங் கூறல்.
    143.
    கருப்பாலை யார்க்குங் கலைசைத் தியாகர் கயிலைவெற்பா
    திருப்பாற் கடலிடை மால்கண் வளருஞ் சிறப்பதுபோல்
    உருப்பாய் பளிக்கறை மேனீலக் கற்சுனை யொன்றுளதால்
    விருப்பார யாங்கள் பகல்விளை யாடும் வியலிடமே. 50

    பாங்கி குறியிடத்திறைவியைக்கொண்டு சேறல்.
    144.
    காவியப் பாக்கொள் கலைசைத் தியாகர் கனகமன்றுள்
    ஓவியப் பாவையொப் பாய்சுனை மூழ்கி யுழைகிடந்த
    ஆவியப் பானல்கொய் தம்மாந் தளிர்பறித் தங்ஙனமோர்
    மாவியப் பார்தரு செம்மலை நோக்குவம் வாவிரைந்தே. 51

    பாங்கி தலைவியைக்குறியிடத்துய்த்து நீங்கல்.
    145.
    திகிரிநின் றோட்குடைந் தேயுகு முத்தமுன் சீறடிக்கே
    திகிரியம் பாறை யுறுத்துமிங் கேநிற்க சென்றுமுன்னான்
    திகிரியந் தேரல்கு லாய்தென் கலைசைத் தியாகர்நந்தித்
    திகிரியஞ் சாரல் வழிசீத் தொதுக்கித் திரும்புவனே. 52

    இ‍றைவி இறையோனிடத் தெதிர்ப்படுதல்.
    146.
    நந்தாத செல்வக் கலைசைத் தியாகரை நாடிமுன்னான்
    சிந்தா குலமறப் பூசித்த புண்ணியந் தேம்பொழில்வாய்க்
    கந்தாவ தின்றி வறியேன் றவித்திடு காலத்தென்வாய்
    ஐந்தாலுங் கொள்ள‍வொர் தெள்ளமிர் தப்பிழம் பாய்நின்றதே. 53

    புணர்ச்சியின் மகிழ்தல்
    147.
    மாலா தரிக்குங் கலைசைத் தியாகர் வரத்தின்வரும்
    பாலா றுடனொரு தேனாறு வந்தொன்று பட்டிடினும்
    வேலா வலயத்தின் மேலாம் விருப்புடை யேற்களித்த
    ஆலால மன்னகண் ணாளிதழ்த் தேனையொப் பாவதின்றே. 54

    புகழ்தல்.
    148.
    தண்டக நாடர் கலைசைத் தியாகர் சராசனமாக்
    கொண்டபொன் மேருவிற் றாரகை சூழ்ந்தெனக் கூர்ந்திலகும்
    வண்டர ளத் தொடை சேர்முலை யீருங்கள் வாயினின்சொற்
    கண்டதன் பின்னல்ல வோகண்டு நாளுங் கரைகின்றதே. 55

    தலைமகன் தலைமகளை ஆயத்துவிடுத்தல்.
    149.
    அரணங்கள் சூழ்தென் கலைசைத் தியாகர்தம் மன்பருக்கே
    சரணபத் மங்களைத் தந்தாளு மீசர் தடங்கிரிமேல்
    பிரணவ மந்திரங் கட்குமுன் னாநிற்கும் பேறதுபோல்
    திரணவ ரத்னமன் னாயுன தாயஞ் சிவணுகவே. 56

    பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறைகாட்டல்.
    150.
    தோகாயுன் மூரற்கு நேரற்ற வாரந் துடைத்தகற்றிப்
    பாகாயசொல்லிநின்மெய்க்குமங்கைக்கும்வெம்பார்வைக்குநேர்
    ஆகாவ சோகரிந் தம்புய நீலங்கொய் தியான்கொணர்ந்தேன்
    நீகாண் கலைசைத் தியாகேசர் நீண்முது குன்றினின்றே. 57

    பாங்கி தலைவியைப் பாங்கிற் கூட்டல்.
    151.
    பாலாம் பகத்தர் கலைசைத் தியாகர் பனிவரைமேல்
    பாலார் மொழிபல் பரிமளப் போது பறித்துனதைம்
    பாலாரச் சூட்டுபு சித்திரித் தேனினிப் பண்புடனிப்
    பாலாசி னீங்கிச்செல் வாம்நம தாயம் பயிலிடமே. 58

    பாங்கி தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படைசாற்றல்.
    152.
    இத்திரு வின்பொருட் டேதே துழைத்தன னெங்கள்வெற்பா
    அத்திறன் யாவு மறிவா யுபகரித் தாருயிர்க்கு
    மத்திநின் றேற்றுங் கலைசைத் தியாகர் மகிழுமருட்
    சத்தியைப் போனடு நின்றளித் தேனையுந் தாங்குகவே. 59

    பாங்கி தலைமகனை உலகியன் மேம்பட விருந்து விலக்கல்.
    153.
    வள்ளித்தண் கந்த மதுவும் வலைப்பட்ட மான்றசையும்
    தெள்ளித் திரட்டிய செந்தினை மாவையுந் தித்திக்கநீர்
    அள்ளிப் புசித்தெம் பழங்குடிற் றங்கி யணைந்தவிராத்
    தள்ளிப்பின் னேகுங் கலைசைத் தியாகர் தனிநகர்க்கே, 60

    விருந்திறை விரும்பல்.
    154.
    நனைப்போ தணியு நறுங்குழ லீர்தம்மை நாடிநெஞ்சில்
    நினைப்போர்க் கருளுங் கலைசைத் தியாகர் நெடுங்கிரிமேல்
    தினைப்போ னகமு மறியூ னுணவுந் தெரிந்தளித்தால்
    வினைப்போக மன்றந்த மெய்ப்போக மாகும் விருந்தினர்க்கே. 61

    11. பகற்குறி.


    கிழவோன்பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுது
    155.
    வெள்ளைவண் டூர்செய்க் கலைசைத் தியாகரை மேவலர்போல்
    வள்ளையை மோதுங்கண் ணாயன்பர் சேய்மையர் வாரியிலேழ்
    கிள்ளையந் தேரினன் வீழ்ந்தொளித் தான்மதி கீண்டெனக்கே
    கொள்ளைவெம் மாலை யெழுப்பவிம் மாலை குறுகியதே. 1

    பாங்கி புலம்பல்.
    156.
    சடைநெடு மோலிக் கலைசைத் தியாகர் சயிலத்தென்னை
    உடையவள் சோரவிம் மாலையம் போதிங் குறவருவித்
    திடையற வின்றிர வித்தேர் விரைந்திழுத் தேகுதலால்
    கடையி லரிசி வடவையின் வேவக் கடவதுவே. 2

    தலைவன் நீடத் தலைவி வருந்தல்.
    157.
    தென்மாலை யுண்ணும் பணியார் கலைசைத் தியாகர்வெற்பில்
    பன்மாலை கொண்டுநற் பண்ணைமின் னார்வந்தெம் பாலுறுமுன்
    என்மாலை வேலொடும் வந்தில ரென்னல மேய்ந்துண்டுநென்
    னன்மாலை தேர்க்கொரு காலோ னுடன்சென்ற நல்லவரே. 3

    தலைவியைப் பாங்கி கழறல்
    158.
    திருவாளர் வாழுங் கலைசைத் தியாகர்நற் றேசத்தையை
    மருவார் குழலி யிரண்டா முருபின் மதித்திடனீ
    அருவான கோவெங்கும் போய்வரு மாறில்லை யம்புவிமேல்
    உருவான கோவெங்கும் போய்வரு மாலொவ் வொருதொழிற்கே. 4

    தலைவி முன்னிலைப்புறமொழி மொழிதல்.
    159.
    பொன்னொன் றிலாத வறியரைப் போலுறும் புன்மையல்லால்
    மன்னொன்று மாறு மறக்கிலென் னாநல்ல மார்க்கமதா
    முன்னொன்று கூறிக் கலைசைத் தியாகரை முன்னலர்போல்
    பின்னொன் றுரைத்திடுந் தன்மையர்க் கேதென்று பேசுவதே. 5

    தலைவி பாங்கியொடு புலம்பல்.
    160.
    தோயும் ‍பொழுது முலைத்தடந் தோய்தலில் லாவிடத்தும்
    ஏயும் குளிர்பனி நீருஞ்செந் தீயு மெனச்சுகமும்
    காயும் பரிவையும் காட்டுவர் செம்‍பொற் கனங்குழையாய்
    ஆயுங் கலைகொள் கலைசைத் தியாக ரசலத்தரே. 6

    தலைவியைப் பாங்கி அச்சுறுத்தல்.
    161.
    ஏறும் புகழ்வண் கலைசைத் தியாகர்வெற் பேந்தலின்பால்
    ஏறு மனத்தொ டினைதலென் னீபுள் ளினங்களின்வாய்
    ஏறுந் தினைக்குரல் கண்டாலிக் காவ லினிப்புதிதாய்
    ஏறு நமக்குப் புனங்காவன் மாறுமில் லேறுவமே. 7

    நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்.
    162.
    திருமங்கை பாகர் கலைசைத் தியாகர் சிலம்பின்மலர்
    ஒருமங்கை கேள்வன் மருமங்கைக் கொண்ட வுபாயமுநூல்
    வருமங்கைகொண்கன்செந்நாவுறைவஞ்சமும்வாய்ப்பக் கண்டேன்
    கருமங்கை கூடச்சென் றார்கள்ளங் கண்டல்லல் கண்டபின்னே. 8

    தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றல்.
    163.
    கருநட்ட கண்டர் கலைசைத் தியாகர் கடையுகநாள்
    திருநட்ட மாடுபொற் பாதங்கொள் வேதச் சிலம்பொலிபோல்
    செருநட்ட வேன்மன்னர் தேர்மணி யோசை செவிப்புலனால்
    மருநட்ட பூங்குழல் கேட்டரு ளுன்கண் மழைநிற்கவே. 9

    தோழி சிறைப்புறமாகச் செழிப்பறிவுறுத்தல்.
    164.
    ஆண்டகை யாரெங் கலைசைத் தியாக ரருளினல்லாய்
    ஈண்டுகை யாற்றழை கொய்யார்நம் மன்ன ரினிக்கலைமான்
    மீண்டுகை யாளுந் தினைக்கு நமக்கும் விடைதந்துதீத்
    தீண்டுகை யார்பின் கொடிகட்டி வாழ்வரித் தேம்புனத்தே. 10

    தோழி முன்னிலைப்புறமொழி மொழிந்து
    இற்செறிப்புணர்த்தல்.
    165.
    இளங்காளை யூருங் கலைசைத் தியாகர்வெற் பேறுசிகா
    வளங்காள் சுகங்காண் மறக்கப் பெறீரெம்மை மன்மதன்கா
    களங்காள மையன்ன சொற்குழ லாளைக் கலந்தவிறல்
    விளங்காளி மொய்ம்புடை வேலா னயர்ந்து விடுக்கினுமே. 11

    பாங்கி தலைமகன் முன்னின்று இற்செறிப்புணர்த்தல்.
    166.
    பனையை யிடங்கொள் கலைசைத் தியாகர் பரமரென்றீ
    வினையையெல் லாமரிந் தாங்குநற் போது விளக்கணிகள்
    தினையையெல் லாமரிந் தாரெமர் யாங்கள்செவ் வேலண்ணலெ
    மனையையின் றேகுவம் வண்புனங் காவற் றொழிலொழிந்தே. 12

    பாங்கி தலைவன்முன்னின்று இற்செறிப்புணர்த்தி
    ஓம்படை சாற்றல்.
    167.
    இரும்புலி போற்றுங் கலசத் தியாக ரெழிற்கலைசைப்
    பெரும்புகழ் நாட பசும்பயிர் தானிவள் பேசிடுநான்
    விரும்புமோர் வேலி யருண்மாரி யென்று மிகப்பொழியும்
    கரும்புய னீயத னாற்பாது காக்குங் கடனுனக்கே. 13

    தலைமகன் தஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல்.
    168.
    தனியா னுகக்குங் கலைசைத் தியாகர் தடத்தினெஞ்சே
    தொனியார் சகுந்தங்க ளோட்டிச்செவ் வேனலஞ் சூழல்வைகிக்
    கனியா ரிதழ்மதுத் தந்திது காறுங் கலந்திருந்த
    இனியார் பிரியி னினியாரைக் காண்பம்வந் திப்புனத்தே. 14

    12. பகற்குறியிடையீடு.


    இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்.
    169.
    சங்கதிர் வாவிக் கலைசைத் தியாகர் தழற்கண்வந்த
    அங்கதிர் காமத்தன் கைவேற்கண் ணாள்கண் ணடிக்கடிகூர்
    வெங்கதிர் வேல வருமாயும் வீயும் விழுந்ததினைச்
    செங்கதிர் கொள்ளு மெமர்சேர்ந் துழுவர் செழும்புனமே. 1

    இறைவியைப் பாங்கி குறிவரல்விலக்கல்.
    170.
    செருமா மதக்களி றார்க்குங் கலைசைத் தியாகர் வெற்பில்
    ஒருமா மடந்தையின் றேதோ வறிகில னொப்பிலன்னை
    பொருமா விழிசிவந் துள்ளங் கொதித்துப் புகையுயிர்த்தாள்
    மருமா தவிப்பந்த ராடமுன் போலிங்கு வாரற்கவே. 2

    இறைமகள் ஆடிடம் நோக்கி அழிதல்.
    171.
    எடுத்தசிற் றில்லுங் கலைசைத் தியாக ரிரசதக்குன்
    றுடுத்தவொண் சாரலு மாணிக்கத் தண்சுனை யும்புனமும்
    கொடுத்திடு மானந்தத் தேன்வழி யாறுங் குலாவியுலாய்
    அடுத்துப் பழகிப் பிரிபவர் போலில்லை யன்னியரே. 3

    பாங்கி ஆடிடம் விடுத்துக்கொண்டு அகறல்.
    172.
    பெண்பா லுகந்த கலைசைத் தியாகர் பிறங்கலுள்ளார்
    எண்பால வெம்மைய ராணைகொண் டேகுது மித்தலைசேர்
    தண்பா லயில்கொண் டொருவர்வந் தாற்றள ராதவண்ணம்
    பண்பாற் பசுங்கிள்ளை காளெங்க ணீர்மை பகர்மின்களே. 4

    பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்றிரங்கல்.
    173.
    காவினைச் சூழ்ந்த களிமயில் காளென்ன காரணமால்
    ஏவினைக் கொண்ட கலைசைத் தியாக ரிணைமலர்த்தாள்
    பூவினைக் கொய்துமெய் யன்பொடு பூசிக்கும் புண்ணியர்தம்
    தீவினை யற்றது போலற்ற வாவித் தினைப்புனமே. 5

    தலைமகன் வறுங்களம் நாடி மறுகல்.
    174.
    நறுங்களம் போருக மிப்பர ணாக நயந்துநல்லம்
    பெறுங்கள நாதன் கலைசைத் தியாகப் பிரானருள்போல்
    உறுங்களந் தீர்த்தெம்மை யுய்வித்த மாவின் றொளித்துநிற்க
    வறுங்களங் கண்டகண் காளெங்ங னாமினி வாழ்குவதே. 6

    தலைமகன் தலைமகள் வாழும் ஊர்நோக்கி மதிமயங்கல்.
    175.
    நதிபொதி வேணிக் கலைசைத் தியாகர்நன் னாடனையாள்
    பதியிது நோக்கியென் னாருயிர் சோர்தல் பசும்பொழில்வாய்
    அதிமது ரக்கனி யுண்பானொ ரேழை யணுகற்கஞ்சி
    மதிமயங் காநின்று வாயூறி யேங்கும் வகையொக்குமே. 7

    13. இரவுக்குறி.


    இறையோன் இருட்குறி வேண்டல்.
    176.
    சுராதிபர் போற்றுங் கலைசைத் தியாகர்த் தொழாவுயிரை
    விராவிய வல்லிருள் போற்கொண்டன் மூட மிடைந்தவிருள்
    சராசர முற்றும் விழுங்கிய தால்வழி தான்றடவி
    இராவிருந் தெய்தினன் யான்மட வீருங்க ளிம்மனைக்கே. 1

    பாங்கி நெறியினது அருமை கூறல்.
    177.
    சங்குலம் போடைக் கலைசைத் தியாகர் தரணியிற்கார்
    மங்குலங் கெங்கு மடங்கல்கக் காநிற்கு மாமடங்கல்
    வெங்குல வேழங் களைப்பிளந் துண்ணு மிகுந்தவிருள்
    கங்குலஞ் சாதன்ப யார்வரு வாரெங் கடிநகர்க்கே. 2

    தலைவன் நெறியினது எளிமை கூறல்.
    178.
    கல்லால ரெங்கள் கலசத் தியாகர் கலைசையன்னாள்
    கொல்லாமற் கொல்லு மிடைக்கே சரிக்கிடை கோளரிகள்
    நில்லா வெதிர்குழற் காருக் குடையிரு ணீங்குமல்லில்
    அல்லா தரவென் கழலொலிக் கஞ்சிடு மஞ்சலனே. 3

    பாங்கி அவன் நாட்டணியியல் வினாதல்.
    179.
    வெண்டலை மாலைக் கலைசைத் தியாகர் வியன்சிலம்பா
    வண்டலை போதுமற் றியாதுடை யாது மலைகலனும்
    கொண்டலங் காரஞ்செய் சாந்தமும் யாவை குமுகுமெனும்
    தண்டலை யாதுங்க டொண்டைநன் னாட்டுறை தையலர்க்கே. 4

    தலைவன் அவள் நாட்டணியியல் வினாதல்.
    180.
    குழையிட்ட காதர் கலைசைத் தியாகர் குலவரைமேல்
    கழையிட்ட தோளிமற் றென்னாட் டணியியல் கட்டுரைத்தென்
    மழையிட்ட நின்மலை நாட்டிள மாதர் வனைகலன்பூத்
    தழையிட்ட சாந்தநின் றாடிட மீதெனச் சாற்றுகவே. 5

    தலைமகற்குப் பாங்கி தன்நாட்டணியியல் சாற்றல்.
    181.
    ஏந்தண்ணல் வேல கலைசைத் தியாக ரிமாசலமேல்
    மாந்தண் ணடையு முடையாக் குருவிந்த மாலிகையும்
    காந்தண் மலர்களுஞ் சந்தனப் பூச்சுங் கலந்தணிந்தெம்
    பூந்தண் ணடைமட வாரா டிடங்கணிப் பூம்பொழிலே. 6

    பாங்கி தலைமகட்குத் தலைமகன் குறையறிவுறுத்தல்.
    182.
    ஒருகால காலர் கலைசைத் தியாக ருயர்வரைமேல்
    அருகால மேகம் பொரிபோ லுடுச்சிந்த வார்த்தெழுந்தீ
    ரிருகா லறுகின நால்வாயி னாம்ப விரையருந்தும்
    வருகா ரிரவின் வரல்வேண் டினர்நம் மனைக்கன்பரே. 7

    நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தல்.
    183.
    பண்ணவர் போற்றுங் கலைசைத் தியாகர் பரிசுணர்ந்தோர்
    பெண்ணறி வென்பது பேதைமைத் தென்று பிரித்துரைத்தல்
    திண்ணநெஞ் சேசித் திரகாயம் பாயுஞ் செறியிரவில்
    கண்ணன்ன காதலர் தாம்வர லொப்பினள் காரிகையே. 8

    தலைமகள் நேர்ந்து பாங்கியொடு உரைத்தல்.
    184.
    மெல்லிய லாய்தென் கலைசைத் தியாகர்தம் வெற்பிலங்கோர்
    வல்லியங் கண்டு நடுங்கிடும் போதெதிர் வந்தெனைப்பாற்
    புல்லியப் புல்லைத்தங் கைப்படைக் கூட்டிப் புரந்தவர்தாம்
    எல்லி யவாவின சேற்சொல்லு மாறென்னை யின்னுமொன்றே. 9

    தலைமகள் நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தல்
    185.
    சிலைவளை யாழியன் போற்றுங் கலைசைத் தியாகர்வெற்பா
    மலைவளை யாநின்ற வுன்னெஞ் சுவப்ப வணங்கியங்கை
    இலைவளை யாளை யிரந்திரந் தேயிர வீர்ந்தொடைசேர்
    தலைவளை யாவருள் செய்யப்‍பெற் றேன்றவந் தானென்னவே. 10

    பாங்கி தலைமகனைக் குறியிடத்துநிறுத்தித்
    தாய்துயில் அறிதல்.
    186.
    நஞ்சாருங் கண்டர் கலைசைத் தியாகர்நன் னாடனையாய்
    மஞ்சார் புனத்தினின் றாடா நமக்கு மகிழ்ச்சிதந்த
    அஞ்சாயன் மென்மயி லாயங்க டேக்கி னகன்குடம்பைத்
    துஞ்சாத வண்ணங்கைக் குன்றொன் றுரிஞ்சிச் சுலாய்வருமே. 11

    பாங்கி தலைமகட்குத் தலைமகன் வரவறிவுறுத்தல்.
    187.
    குயிலே யனையசொற் கோமள மேவெண் குரைகடன்மேற்
    றுயிலேறு கொண்ட கலைசைத் தியாகர் சுடர்க்கிரிமேல்
    மயிலேறு கந்தர்வந் தாலெனக் கங்குனம் மாமனைக்கே
    அயிலேந்து நம்மன்பர் வந்தார்தந் தார்பொம்ம லம்மலரே. 12

    பாங்கி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசேறல்.
    188.
    விரலாழி வின்மணித் தீபங் கொடுநம்மை மேவியன்பர்
    வரலா லெதிர்கொளப் போதுகம் வரமங்கை மாளிகைகள்
    நிரலார் கலைசைத் தியாகேசர் வெற்பினி னீலமஞ்ஞை
    முரலாறு காலிசைத் தாலாட்டக் கண்டுயின் மொய்பொழிற்கே. 13

    பாங்கி தலைமகளைக் குறியிடத்து உய்த்து நீங்கல்.
    189.
    தெள்ளம் பணிசெஞ் சடையார் கலைசைத் தியாகர்வெற்பில்
    வள்ளம் பெறுமுலை யாயுன்கண் வாயின் வளங்கவர்ந்து
    விள்ளம் புயமென்று மாம்பலென் றும்பெயர் வேறுகொண்ட
    கள்ளஞ் செறிமல ரெல்லாங்கொய் தேவந்து காட்டுவனே. 14

    தலைமகன் தலைமகளைக் குறியிடத்து எதிர்ப்படுதல்.
    190.
    இலக்கண மாடக் கலைசைத் தியாகர்மற் றிவ்விரவை
    வலக்கண் விழித்துப் பகலாக்கச் சற்று மதித்தனரோ
    சலக்கணின் கோயிற் கதவந் திறந்ததெத் தந்திரமென்
    அலக்கண் டவிரமுன் வந்துநிற் கின்றவின் பாகரமே. 15

    தலைமகள் ஆற்றினதருமை நினைந்திரங்கல்.
    191.
    இடங்க ரநேகஞ் செறியாறு நீந்தி யியங்கரிய
    இடங்கர வாமிரு கங்கட்கஞ் சாதன்ப ‍வெண்கணர்க்கோர்
    இடங்கரன் றீந்த கலைசைத் தியாக ரிறும்பிலென்னில்
    இடங்கர வேலொடு வந்ததெவ் வாறிவ் விரவிடையே. 16

    தலைமகன் தலைவியைத் தேற்றல்.
    192.
    மட்டிட்ட கோதை கலைசைத் தியாகர் வரையகத்துன்
    திட்டிக் குடைந்த சமனண்பு கொள்ளவென் றிண்ணியவேல்
    ஒட்டிக் கிடந்த வுரிமையி னால்விலங் குள்ளவெல்லாம்
    எட்டிக் காக்கவென் வேலொளி மேய்ந்த திருளினையே. 17

    புணர்ச்சியின் மகிழ்தல்.
    193.
    எல்லாரும் போற்றும் கலைசைத் தியாகரை யெய்துமன்பர்
    எல்லாஞ்சிவமென் றுகண்டுண்ணல் போலுண்ணவிங்கி வண்மெய்
    எல்லா மமிழ்திற் சமைத் துநல் காரண னென்னுடலம்
    எல்லாஞ்செந் நாவுடை வாயாக வென்கொ லியற்றிலனே. 18

    புகழ்தல்.
    194.
    அடியார்க் கருளுஞ் சிதம்பர வீச ரணிதிருவெண்
    பொடியா ரிருக்குந் திருக்கோ விருந்த புரவரைமேல்
    வெடியார் மலர்க்குழ லாய்வனத் திற்றவ மேவிடினும்
    கொடியா ருனதிடைக் கொப்பாவ தில்லைக் குணம்படைத்தே. 19

    தலைமகனைத் தலைமகள் குறிவரல் விலக்கல்.
    195.
    கதிரார் கணிச்சிக் கலைசைத் தியாகர் கனவரைச்சூர்
    அதிராத் திரிதரு மல்லாம லன்ப வடல்வயமா
    வெதிராத் திரியும் வெதிர்வேர்க் கவலை விசும்பிலிருள்
    வதிராத் திரியில் வினையேன் பொருட்டினி வாரற்கவே. 20

    தலைமகன் தலைமகளை இல்வயின் விடுத்தல்.
    196.
    வெம்போகி பூண்ட கலைசைத் தியாகர் வியன்வரைப்பூங்
    கொம்போ திடுகிடை யீர்கைத் தளிரிற் குளவிகுற்றா
    தும்போ தகஞ்செல்லு மொண்பளிங் கிற்றலத் தூடுபயத்
    தம்போ ருகமுறல் போற்பஞ்சி யூட்டு மடிகள்வைத்தே. 21

    பாங்கி தலைமகளை யெய்திக் கையுறை காட்டல்.
    197.
    செவ்வாய் தனக்குநின் றிங்கள் முகத்திற்குந் தெவ்வெனலாம்
    இவ்வாம்பல் பங்கயங் கொய்துவந் தேனஞ்ச லெவ்விருளும்
    ஒவ்வாத கார்க்குழற் கேற்குங்கண் டாய்தைய லுட்புகுந்தென்
    வெவ்வாசு தீர்க்குங் கலைசைத் தியாகர் வெளிக்குன்றிலே. 22

    198.
    கயந்தந்த தெவ்வலர் கங்குற் களைந்தனங் காண்பயந்து
    பயந்தந்த வள்கண் விழித்தின் றதட்டிப் பயந்தருமுன்
    இயந்தந்த வோசைக் கலைசைத் சிதம்பர வீசர்வெற்பில்
    நயந்தந்த செல்விநின் பூங்கோயிற் கொல்லை நடந்தருளே. 23

    பாங்கி தலைமகனைப் பின்சென்று வரவு விலக்கல்.
    199.
    அறவாணர் வாழுங் கலைசைத் தியாகர்வெற் பாரமகில்
    மறவா ளெமர்குறைத் தாரழற் கூட்ட வரும்புகையோ
    டுறவா ரிருளி லொருநீ தனிவர லூங்கிரவில்
    திறவாக் கதவ மொருநூ றணங்கின் றிருமனைக்கே. 24

    தலைமகன் மயங்கல்.
    200.
    அப்பேறு சென்னிக் கலைசைத் தியாக ரசலமின்னே
    செப்பேறு கொங்கையு நானும் புணர்ந்தின்பத் தேனருந்தும்
    இப்பேறு கண்டு மதுரக் கனியுணு மேல்வையிலோர்
    கைப்பேறு காஞ்சிரங் காயிட்ட தென்னக் கழறினையே. 25

    தோழி தலைமகள் துயர்கிளந்து விடுத்தல்.
    201.
    ஓங்குங் கலைசைத் தியாகேசர்க் கன்பில ருள்ளிருள்போல்
    வீங்குங் கனையிரு ணீசெல் வதற்கு விதிர்விதிர்த்தே
    ஏங்கு மிவளுய்ய நின்னூர்புக் குன்னெழின் மாளிகைமுன்
    தூங்கு மணியொலி கேட்பிக்க வேண்டுந் துணைமன்னனே. 26

    திருமகட் புணர்ந்தவன் சேறல்.
    202.
    சரியாங் கறிந்தெம் பதிக்கே குதலெளி தஞ்செழுத்துச்
    சரியார்க் கரியர் கலைசைத் தியாகர் தடவரைக்கே
    சரியானை மத்தகம் பற்றிடுங் கங்குலிற் றையலங்கைச்
    சரியார்ந்த செம்மணி மின்னேவெய் யோற்குச் சரிநிற்குமே. 27

    14. இரவுக்குறி யிடையீடு.


    இறைவிக்கு இகுளை இறைவரவுணர்த்தல்.
    203.
    செய்யா மொழியர் கலைசைத் தியாகர் சிலம்பில்வளைக்
    கையா யிஃதென்ன காரண மோநறுங் கான்மலர்க்கை
    தையா ரணியத் தயனின்ற புன்னைத் தருவிலன்னம்
    மையா மினிமுற்றுங் கண்டுயி லாதல மந்தனவே. 1

    தான்குறிமருண்டமை தலைவிஅவட்குரைத்ததல்.
    204.
    நானோர் குறியினை நங்கோன் குறியென்று நாடிச்சென்று
    கானோவ நின்றுறு புள்‍ளொலி கேட்டுக் கலைசையிலெம்
    மானோர் சிதம்பர மாதே வனைவணங் காரின்வினை
    தானோ விதுவென்று நொந்துவந் தேன்பின்னைத் தாழ்குழலே. 2

    பாங்கி தலைமகன் தீங்கெடுத்தியம்பல்.
    205.
    வேயோ வெனும்பசுந் தோளாய் கலைசையுண் மேவிமனத்
    தூயோர் பரசுஞ் சிதம்பர வீசர் றொழாதவர்போல்
    நீயோகை யின்றி நெடுமூச் செறிய நிகழ்த் துமந்தத்
    தீயோர் துணிந்துனக் கையுற வாங்குறி செய்தனரே. 3

    தலைமகன் புலந்துபோதல்.
    206.
    விழுத்தவஞ் செய்சத பத்திரத் தாள்வெளி மேவுமென்றே
    முழுத்தமந் தன்னிற் கலைசைத் தியாகர் முளரியந்தாள்
    வழுத் தல்செய் யாதவர் தீவினை போல வளைத்தெனைநீ
    இழுத்தலைத்தாய்நெஞ்சமேயென்சொல்வேனிந்த வேழைமைக்கே. 4

    புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண்டிரங்கல்.
    207.
    கங்காள வேடர் கலைசைத் தியாகர் கழித்தமுண்ட
    கங்கா ளலம்புசங் கங்காள் கடற்கரைக் கானற்புன்னா
    கங்காளெங் காவலர் யான்வந்து போனபின் காதலுருக்
    கங்காண வந்தன ரோவுண்மை சொன்மின்கள் கங்குலிலே. 5

    இதுவுமது.
    208.
    திருவார் கலைசைத் தியாகேச ரைத்தரி சித்தவர்போற்
    குருவா லரும்பு நகைமுத்தங் காட்டிப்பொன் கூர்பவள
    உருவாய் மலர்ந்துகொங் கையேந்திப் பாசடை யோதியணி
    தருவாலைப் புன்னைநல் லாய்மகிழ்ந் தாயுன் றலைவர்க்கண்டே. 6

    தலைமகள் பாங்கியொடுரைத்தல்.
    209.
    நிறப்பது மானன நேரிழை யாயென் னெடுங்கொடிய
    பிறப்பவை மாற்றுங் கலைசைத் தியாகரைப் பேணினர்போற்
    சிறப்பவர் தண்டுறைச் சேர்ப்பரங் கேகுறி செய்வதற்கு
    மறப்பர் கொ‍லோமழை தான்பெய்யுங் கால மறக்கினுமே. 7

    தலைமகள் அவலம் பாங்கி தணித்தல்.
    210.
    குன்றேவிற் கொண்ட கலைசைத் தியாகரைக் கூறலர்போல்
    இன்றே னிரங்குத லேந்திழை யாயன்ப ரேழ்பரித்தேர்ப்
    பொன்றேசிழந்துபொய்த்தாலும்பொய் யாரென்றும் பூண்டதள
    வொன்றே றியகவி மாலை யரசுகண் டோர்ந்து கொள்ளே. 8

    இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றல்.
    211.
    செழுந்தேஞ்சிகழிகைத்திண்புயத்தீரெம்மைச்செல்லல் வெந்தீக்
    கொழுந்தேற வைத்தனிர் பின்புவந் தாற்றலிர் கும்பியினீ
    அழுந்தேலென் றாளுங் கலைசைத் தியாக ரடுக்கலும்மூர்க்
    கெழுந்தே வரத்துணிந் தேம்பாலி யாறொன் றிருந்தியதே. 9

    இறைவிமேல் இறைவன் குறிபிழைப் பேற்றல்.
    212.
    குறப்பேதை யர்க்குக் குலதெய்வ மாய்வந்த கோமளமான்
    மறப்பேறு சித்த முடையவ ளாயினு மாதவிழாச்
    சிறப்பேறு தொட்டிக் கலைவாழ் சிதம்பர தேவன்வெற்பிற்
    பிறப்பே ழினுமற வேனுங்கண் மங்கையைப் பெண்கொடியே. 10

    தலைமகள் குறிமருண்டமை தோழி தலைமகற்குரைத்தல்.
    213.
    கொய்யு மலர்ச்சுனை மாங்கனி வீழ்தொறுங் கொற்றவநீ
    செய்யுங் குறியென் றடிக்கடி பார்த்துத் திகைத்தழுங்கி
    மையுண்ட கண்டர் கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போல்
    நையும் படியெழுத் தோவென்று மீண்டன ணன்னுதலே. 11

    அவன்மொழிக்கொடுமை சென்று அவளவட்கியம்பல்.
    214.
    வெங்கோ ளரிதிரி யாமத்தி யாம்வந்து வீயெழுப்பாப்
    பைங்கோழி கூவள வுங்கறங் கச்செய்து பார்த்துநின்றே
    செங்கோ கனகத் திருவே கலைசைத் தியாகர்வெற்பர்
    எங்கோ விருந்த புரநோக்கிச் சென்றன மென்றனரே. 12

    என்பிழைப்பன்றென்று இறைவி நோதல்.
    215.
    நீளுஞ் சுனைக்கய லாண்மிசைப் பாய்தொறு நேடியங்கென்
    தாளுந் தளர்ந்திடச் செல்லா திறுத்தனன் றையன்மெய்யர்
    நாளும் பழிச்சுங் கலைசைத் தியாகர்நன் னாடர்கொன்னே
    மீளும் படிசெய் தனரென்ப ரே‍லென் விதியென்பதே. 13

    தாய் துஞ்சாமை.
    216.
    சித்தாங் கலைசைத் தியாகர் நொடித்தலைச் செய்யுமந்நாட்
    கொத்தார் தமோமயம் போலுமிக் கங்குற் குளிர்ந்ததடத்
    தெத்தா மரையு முறங்கநம் மன்னை யிரண்டுநய
    னத்தா மரைமுகி ழாவென்ன காரண நன்னுதலே. 14

    நாய் துஞ்சாமை.
    217.
    இணங்குமன் றேயிந்தப் பெண்ணென் பிறப்பன்ப ரிங்குறமால்
    வணங்குங் கலைசைச் சிதம்பர வீசரை வாழ்த்தலின்றிப்
    பிணங்கும் புறமதத் தார்குரைத் தாங்கிப் பிறங்கிருள்வாய்ச்
    சுணங்குக் கணங்கள் குரைத்தன்னை துஞ்சினுந் துஞ்சலவே. 15

    ஊர் துஞ்சாமை.
    218.
    விண்ணேறு சோலைக் கலைசைத் தியாகர் வியன்சிலம்பின்
    கண்ணேயிக் கங்குலென் கண்ணே யனையவர்க் காண்பதெங்கே
    பெண்ணே குணக்கிற் புகர்தோன் றளவும் பெருங்குறிஞ்சிப்
    பண்ணே யெடுத்துப் பகர்ந்துறங் காரிப் பதியவரே. 16

    காவலர் கடுகுதல்.
    219.
    நாவலர் போற்றுங் கலைசைச் சிதம்பர நாதர்வெற்பில்
    மாவல ரோட்டுநம் மன்பர்பொற் றேரொலி மாற்றுவித்தென்
    கோவல ரோடவிவ் வெல்லியி லல்லியங் கோதைநல்லாய்
    காவலர் கைப்பறை யோசையம் ‍பேறுமென் காதகத்தே. 17

    நிலவுவெளிப்படுதல்.
    220.
    கொவ்வைகொள்வாய்ச்சிகலைசைத்தியாகர்குளிர்கண்ணதாய்க்
    கவ்வைக டீர்க்கு நிலவீரெண் வெள்ளைக் கலைகளினால்
    இவ்வைய முற்று மடங்கிடப் போர்த்தலி னெம்மன்னரே
    றவ்வைய முங்கொண்டு கோடையெவ் வாறிங்கடுத்திடுமே. 18

    கூகை குழறல்.
    221.
    கோட்டா லமர்ந்த கலைசைத் தியாகநங் கூத்தனைவெண்
    கோட்டாற் செயுங்குழை யானைத் தொழாத கொடியவர்சொற்
    கோட்டாலை போல்வல்லி நாம்பெரும் பேமுறக் கூரிருள்வாய்க்
    கோட்டான் மராமர மேலேறிக் கொண்டு குழறிடுமே. 19

    கோழி குரற்காட்டுதல்.
    222.
    ஆழிப் புரிசைக் கலைசைத் தியாக ரடுக்கன்மின்னே
    சூழிக் களிற்றண்ணன் மார்பணி மாணிக்கச் சோதிகண்டே
    ஊழிப் பொழுது புலர்ந்ததென் றோநள் ளுறுமிரவிற்
    கோழிக் குலங்கண்மன் கூவா வெழுப்புங் குறிச்சியையே. 20

    இதுவுமது.
    223.
    செவ்வேலை யைந்துசெய் தாளுங் கலைசைத் தியாகர்வெற்பர்
    கைவ்வேலை யந்த வருணோ தயமெனக் கண்டுமருண்
    டிவ்வேலை யாவ விடியலென் றோவிவ் விடையிருளில்
    அவ்வேலை யார்த்தெனக் கூக்குரல் காட்டிடு மாண்டலையே. 21

    15. வரைதல் வேட்கை.

    தலைமகளைப் பாங்கி பருவரல் வினாதல்.
    224.
    அம்மனை யானவர் தம்முனி வுண்டுகொ லக்கலைசை
    அம்மனை யாக்கொள் சிதம்பர வீச ரருளன்னநீ
    அம்மனை யாடிலை யூசல் கயிறற்ற தோவறியேன்
    அம்மனை யாநிற்றியென்னோசொல் லாயுன் னகங்கொண்டதே 1

    தலைமகள் அருமறை செவிலியறிந்தமை கூறல்.
    225.
    அருத்தியி னீங்கிக் கலைசைத் தியாக ரசலத்தெமை
    வருத்திய வன்ப ருருவெளித் தோன்ற வரவுவினாய்
    உருத்திகழ் தாரிடு மால்பார்த் திதிலொன் றுளதெனநம்
    கருத்தின் முளைத்த வொருபுத வின்றனை கண்டனளே. 2

    தலைமகள் தலைமகன்வருந்தொழிற்கு அருமைசாற்றல்.
    226.
    உலைவுற்ற காலன்னை ஞாளியிவ் வூர்கண் ணுறங்கினுமூர்த்
    தலையுற்ற காவலர் காய்வார் மதிதனைத் தந்ததொப்பாம்
    மலையுற்ற கூகையும் வாரணக் கூட்டமும் வாயடையா
    கலைசைத் தியாகர் வரையன்பர் காட்சியென் கட்கரிதே. 3.

    தலைவி தலைமகனூர்க்குச் செல ஒருப்படுதல்.
    227.
    ஒருப்பா டுடனென் னலனுண்ட தேர்மன்ன ரூரகம்போய்
    விருப்பா லவருட னெய்துவ மோதெய்வ வேதமெனும்
    திருப்பா துகையிட்ட தாளார் கலைசைத் தியாகர்வெற்பிற்
    சுருப்பா குலமல்கு பூங்குழன் மாங்குயிற் றூமொழியே. 4.

    பாங்கி தலைவனைப் பழித்தல்.
    228.
    செய்யகத் தேகன்னற் சாறூர் கலைசைத் தியாகர்வெற்பர்
    மெய்யகத் தேயுற்ற வின்னுயிர் போனம்மை மேவியொன்றாய்ப்
    பொய்யகத் தேவைத்துப் பின்னாண் மறந்தனர் பொன்னனையாய்
    வையகத் தேயில்லை யாலவர் போலொரு வன்கணரே. 5.

    தலைமகள் இயற்பட மொழிதல்.
    229.
    சிந்திக்கு நேரும் விழிமொழிப் பாங்கி திகைத்துளங்க
    சிந்திக்குருகென்கைவிட்டோடற்கேங்கல்வெண்டிங்களென்றூழ்
    சிந்திக்கு நந்தினுந் தென்பூங் கலைசைத் தியாகர்வெற்பன்
    சிந்திக்கு மோவொரு தீமைநம் பாற்செயல் சித்தத்திலே. 6.

    தலைமகள் கனவுநலிவுஉரைத்தல்.
    230.
    இலவா ரிதழி சிதம்பர வீச ரெழிற்கலைசைப்
    புலவா ரயிலன்ப ரென்கன வூடு புகுந்துதழீஇப்
    பலவா றினிதின் விளையாடப் பெற்றும் பயன்கொணலம்
    கலவா திழந்தணை தைவந் தனனிரு கண்விழித்தே. 7.

    கவினழிபு உரைத்தல்.
    231.
    சேணேறு பொன்னெயில் சூழுங் கலைசைத் தியாகர்வெற்பில்
    தூணேர் புயத்தன்பர் சேர்ந்தா லகன்றவர் தூரஞ்சென்றால்
    ஊணேது மற்றவர் போல்விரைந் தொன்றி யொளிவளையாய்
    வீணே பசலை விருந்தாக வுண்ணுமென் மெய்யழகே. 8

    232.
    கொழிவான நீற்றர் கலைசைத் தியாகரைக் கூறலர்போற்
    பழிவாய்ந்த வென்கட் பசலையின் கொள்ளையைப் பார்த்துநல்ல
    வழிவாய்ந்த வன்பர் திருச்செவிக் கேற வகுத்தெடுத்து
    மொழிவா ரொருவருண் டேனாமு முய்குவ மொய்குழலே. 9

    துன்புறு பாங்கி சொல்லெனச் சொல்லல்.
    233.
    இவருக் கணியுங் கலைசைத் தியாகர்க் கினியவெற்பர்
    தவருக்கு நேர்நுத லாய்பிரி வாரிற் றணந்தெனுள்ளத்
    தெவருக்குந் தோன்றா தொளித்தென் னிடர்களெல் லாமறிவார்
    அவருக் கினிப்புதி தாயென்னை யானொன் றறிவிப்பதே. 10

    அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி.
    234.
    மங்கல மோங்குங் கலைசைத் தியாகர் மணிவரைமேற்
    கொங்கலர் கூந்தற் கொடியே மதன்விடுங் கோலெனுங்கூர்
    தங்கல ருக்குந் தடமுலை மாதர் தடையறவாய்
    பொங்கல ரான தழற்குமென் கட்புனல் பொங்கிடுமே. 11

    ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி.
    235.
    திருந்தா ரியந்தமிழ் தேருங் கலைசைத் தியாகர்வெற்பர்
    அருந்தா ரியங்குநின் றிங்குவந் தேகு மமயத் தல்லில்
    முருந்தா ரியனகை பாதமுட் டைத்தின்னன் முற்றியதேல்
    மருந்தா ரியம்புவ ரென்றோபின் னேயென்மனஞ்செல்வதே. 12

    காமமிக்க கழிபடர்கிளவி.
    236.
    அன்னின்ற கண்டர் கலைசைத் தியாகருக் கன்பிலர்போல்
    முன்னின் றகன்றவர் தாம்வரு நாண்மொழி யாவிடினும்
    மன்னின்றதண்பெண்ணைகாள்புன்னைகாளென்னை மையல்கொண்டே
    என்னின் றழுதியென் னீருங்கள் கேண்மை யினிதினிதே. 13

    தன்னுட் கையாறெய்திடு கிளவி.
    237.
    சொல்லரிக் காடுங் கலைசைத் தியாகர் துறைக்கடல்வாய்ப்
    புல்லரி தாங்கன்னித் தாழையி னீழற் புணர்ந்தகன்ற
    நல்லரிங் கேவரக் காணா விடிற்றழ னாப்பணிட்ட
    வல்லரி யாவதல் லாதுய்தி யேது மடநெஞ்சமே. 14

    தலைமகள் நெறிவிலக்குவித்தல்.
    238.
    விழியேறு நெற்றிக் கலைசைத் தியாகர்பொன் வெற்பிற்செப்பும்
    பழியேற வேறச் சுமப்பவ ராரெங்கும் பாயிருள்வாய்க்
    குழியேறு மேடு தடவி வராநின்ற கொற்றவர்க்குன்
    மொழியேற வேண்டு மினிநீர் வரலென்று முற்றிழையே. 15

    தலைமகன் குறிவிலக்குவித்தல்.
    239.
    மன்னுந் தமிழ்த்தென் கலைசைத் தியாகர் மலைமடந்தாய்
    மின்னுங் குருமணிச் சாரற் புனத்தில் விளைந்ததினை
    இன்னும் புதல்வியை யெம்மனை காக்கவங் கேவினளென்
    றுன்னுங் கருத்தருக் கெல்லி வராவகை யொன்றுரையே. 16

    வெறி விலக்குவித்தல்.
    240.
    செறியார பார முலையாய் கலைசைத் தியாகர்வெற்பர்
    பிறியா மயலினை முன்னா ளெனக்கருள் பெற்றிசற்றும்
    அறியாமை யின்வரைச் சூர்கோட்பட் டாளென் றனைமுயலா
    வெறியா டலையது தீர்ப்பான் வெறியற வேண்டினளே. 17

    பிறர் விலக்குவித்தல்.
    241.
    ஆதி நடேசர் கலைசைத் தியாக ரசலத்தெண்ணில்
    தூதினி தாவரக் கண்டன மன்றியுஞ் சோலையின்பால்
    ஏதிலர் மாநிதிப் பேழையொ டெய்தின ரென்னவின்றென்
    காதினு ளராழற் கோல்பாய்ந்த தொத்தது காரிகையே. 18

    குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்.
    242.
    இரவோர்க் குதவுங் கலைசைத் தியாக ரிருங்குன்றத்தோர்
    கரவோ திடாமலுங் கற்பழி யாமலுங் காதலித்த
    உரவோன் வரைவெதிர் கொள்ளும் படியின் றுரிமையினம்
    குரவோர்க் கறிவிப்ப தெவ்வா றுரைத்தி கொடியிடையே. 19

    16. வரைவுகடாதல்.


    வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்.
    243.
    இச்சிக்கு மன்ன கலைசைத் தியாகரை யேத்தலர்போல்
    இச்சிறு மைக்கிட மாயினை யென்னெனு மெம்மனைக்குப்
    பச்சிள நொச்சியிற் பந்தரிட் டோமந்தப் பந்தர்முற்றும்
    பச்சிமக் காலெடுத் தோடிற்றென் றாள்வல்லி பார்த்துக்கொள்ளே. 1

    அலரறிவுறுத்தல்.
    244.

    நளிசேர் மதிச்செஞ் சடையார் சிதம்பர நாதர்வைகும்
    நளிசேர் வயற்றண் கலைசைவெற் பாவெங்க ணாயகிக்கன்
    றளிசே ரலர்தொடுத் தைம்பாற் கணிந்தவுன் னாரருளால்
    அளிசேர் கிலாவலர் வாயாற் றொடுப்ப ரனைவருமே. 2

    தாயறிவுறுத்தல்.
    245.
    மதத்தானை யீருரி யங்கியங் கத்தர் மயங்குபர
    மதத்தார்க் கரியர் கலைசைத் தியாகர் வயக்கியதா
    மதத்தா மிருள்போற் குழலிக்கு நீயிட்ட வாசனைமான்
    மதத்தாற் களவையெல் லாமறிந் தாளன்னை மன்னவனே. 3

    வெறியச்சுறுத்தல்.
    246.
    களக்கந் தரரெங் கலைசைத் தியாகர்செங் கண்ணொளிபோல்
    விளக்கஞ்செய் வேலன்ப நீதணி யாமையின் வேற்றுருக்கண்
    டிளக்கங்கொண் டுள்ளத்தெம் மன்னையும் யாயுமென் னேந்திழைபாற்
    றுளக்கஞ்செய் நோய்தணிப் பான்வெறி யாட றொடங்கினரே. 4

    பிறர்வரைவுணர்த்தல்.
    247.
    நான்மே லுனக்கென்ன சொல்வலின் றேயன்ப நற்றுணிவு
    தான்மேல்கொண் டாட்கொள் கலைசைத் தியாகர் சரணமலர்த்
    தேன்மேவு தொண்டர் மனவண்டு போலெந் திருவை நசைஇ
    மேன்மேற் கருதுகின் றாரய லாரொற்று விட்டுவிட்டே. 5

    வரைவெதிர்வுணர்த்தல்.
    248.
    வண்டாடுஞ் சோலைக் கலைசைத் தியாகர் வரையன்பநீ
    பண்டா ரணந்தெரிந் தாரொடெம் மூர்வரிற் பாய்ந்தெமர்கள்
    கொண்டாடி யுன்றன் மொழிவழி யேநிற்பர் கோலமதி
    கண்டாற் குமுத மலரா தொழியுங் கயமில்லையே. 6

    வரையுநாள் உணர்த்தல்.
    249.
    வேர்கோடி கொண்ட பவக்கா டழித்தென்னை மீட்டருளும்
    கார்கோணஞ் சுண்ட கலசத் தியாகர் கலைசை வெற்பா
    பார்கோணை யங்கணி யேந்துபொன் மாலை பரிமளிக்கும்
    ஊர்கோ ணடுவ ணுழைகொண்ட திங்க ளுழை கொண்டதே. 7

    தலைமகளறிவு தலைமகற்கு அறிவுறுத்தல்.
    250.
    என்னான் வியப்பல் கலைசைச் சிதம்பர வீசர்வெற்பா
    உன்னா னிகழ்ந்த வுறுபழி நாணி யொருங்கனையும்
    பின்னாய மும்பயில் சீறூரு மன்றிப் பிறங்கறிவால்
    வன்னாண் முலையவ ளென்னையுங் கூட மறைத்தனளே. 8

    குறிபெயர்த்திடுதல்.
    251.
    கற்றவர் வாழுங் கலைசைத் தியாகர் கனகிரிமேல்
    மற்றவம் பார்க்கும் வனமுலை யாரிந்த வண்பொ ழில்வாய்
    உற்றவர் பக்கங் களவலர் தூற்ற லொழிவிலையால்
    கொற்றவ நீயினி வேறோர் குறியிடங் கொண்டருளே. 9

    பகல் வருவானை இரவு வருகென்றல்.
    252.
    எற்பக லாளி கலைசைச் சிதம்பர வீசனந்தி
    வெற்ப கலாப மயிலனை யாள்வெம் முலைத்தடத்தில்
    வற்பக லாநெஞ்ச வஞ்சத் தவரெந்த வைப்புமுளார்
    நற்பக லாட வரேல்வரு வாயிங்கு நள்ளிரவே. 10

    இரவு வருவானைப் பகல்வருகென்றல்.
    253.
    ஏத்துமெய் யன்புடை யார்கண் களிப்ப வெழுந்தருளிக்
    கூத்துகந் தாடுங் கலைசைத் தியாகர் குவட்டிலிருள்
    சீத்து வரும்பொன் னெனச்செம் மணிக டிகழ்புனம்போய்க்
    காத்து மினியுன் பொருட்டாங்கு நீயருள் காவலனே. 11

    பகலினும் இரவினும் பயின்றுவருகென்றல்.
    254.
    வெல்லும் படைமதன் வெங்கணை யாற்படு மின்கலக்கம்
    சொல்லுந் தரமல்ல வேயிவட் காகவென் சோரமனக்
    கல்லுங் குழைத்த கலைசைத் தியாகர் கயிலைவெற்பா
    எல்லுங் கனையிரு ளல்லுங் குறிக்க ணெழுந்தருளே. 10

    பகலினும் இரவினும் அகலிவணென்றல்.
    255.
    தேங்காவுங் கைதை கலசத் தியாகர் திருக்கலைசைப்
    பாங்காற் கடற்சங்க முத்திட்டுப் பச்சென்று கொங்கைமுகை
    தாங்காநெய் தற்பெண்ண தாயுமை போனிற்குந் தண்டுறைவா
    தீங்கா வலருற லால்வர னீயிரு செவ்வியுமே. 13

    உரவோன்நாடும் ஊருங் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறல்.
    256.
    தென்றிருத் தொட்டிக் கலைவாழ் கலசத் தியாகரைப்போற்
    றுன்றிரு நாட்டிற்கு மூர்க்குங் குலத்திற்கு மோங்குமர
    பன்றிவெண் குன்றன்ன கீர்த்திக்கும் வாய்மைக்கு மாய்ந்திடுங்கால்
    வென்றிகொள் வேலன்ப வேலாது நின்னடை வேற்றுமையே. 14

    ஆறுபார்த்துற்ற அச்சங் கூறல்.
    257.
    சீறா டரவந் தரிக்குங் கலைசைத் தியாகர் வெற்பில்
    ஏறாத சானுவி லேறி யிழிந்தெல்லி யெங்கடவப்
    பேறான நீவருங் கால்வரைத் தேவொன்று பின்றொடர்ந்து
    வேறா நிகழ்த்திய தேல்வல்ல ளோவுய்ய மென்கொடியே. 15

    ஆற்றாத்தன்மை ஆற்றக் கூறல்.
    258.
    கருந்தும்பி மும்மதங் கார்போற் சொரியக் கருந்தும்பிசூழ்ந்
    தருந்தும் பொருப்ப கலைசைத் தியாகருக் கன்பிலர்போல்
    வருந்துங் கலங்கிக் கனன்மூச் செறிய மலரணைவிட்
    டிருந்துங் கிடந்து மெழுந்துஞ் சுழன்றழு மிட்டிடையே. 16

    காவல் மிகவுரைத்தல்.
    259.
    குயின்றாலு வாயுற வாரும் பரவைக் குரவைநஞ்சம்
    அயின்றா லுகந்த கலைசைத் தியாகர்வெற் பாரரவம்
    பயின்றாலுங் கானிலெங் கோமான் வரல்கைப் பறைபடுப்போர்
    துயின்றாலு மன்னை யொருகணப் போதுந் துயின்றிலளே. 17

    காமமிகவுரைத்தல்.
    260.
    வெண்ணந்தின் முத்தும் புனையரும் பாமுத்தும் வேறறியாத்
    தண்ணந் துறைவ கலைசைத் தியாகரைச் சார்கிலர்போல்
    வண்ணங் கருக மெலிவாள்வெங் காம வடவையந்தீ
    அண்ணனின் பேரருள் வெள்ளங்கொள் ளாம லடங்கரிதே. 18

    கனவு நலிபுரைத்தல்.
    261.
    குனித்தருள் கூத்துங் கலைசைத் தியாகர் கொடையுமெண்ணா
    தனித்தத்தை நித்தமென் றெண்ணிக் கைவிட்டயராதரைப் போல்
    தனித்தங்கு நீ வந்து கையாற் றழுவத் தருங்கனவை
    இனித்தவள் சாக்கிர மென்றே விழித்தழு தேங்கினளே. 19

    கவின் அழிபுரைத்தல்.
    262.
    எனைப்பாது காக்குங் கலைசைச் சிதம்பர வீசர்வெற்பா
    உனைப்பான லுள்ளு மனப்போதி லும்வைத் துருகுமவள்
    தனைப்பார்த் தருளுந் தகவொன்றி லாமையிற் றையல்வணம்
    சினைப்பாட லத்தின் பழம்பூவ தாகிச் சிதைகின்றதே. 20

    17. ஒருவழித் தணத்தல்.


    தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றல்.
    263.
    கதிக்கன்பர் தேடுங் கலசத் தியாகர் கவின்கலைசைப்
    பதிக்கின்று போகிச் சிவகங்கை யாடிப் பலன்பெற்றென்றூழ்
    உதிக்குமுன் னான்வரு கேன்வருங் காறு முவளைநல்லாய்
    ததிக்குண்மத் தென்னச் சுழலாம லுன்கடன் றாங்குவதே. 1

    பாங்கி விலக்கல்.
    264.
    சீர்க்குன் றனைய புயத்தீர் கலைசைத் தியாகர்வெற்பில்
    வார்க்கும்ப மென்முலை யல்குற் சுனையன்றி மற்றுமும
    தூர்க்குணின் றாடுந் தடமுள தேனன் றுமதுதடந்
    தேர்க்குமுன் னின்று தடுக்ககி லேஞ்செல்லுஞ் செல்லுமின்றே. 2

    தலைவன் நீங்கல் வேண்டல்.
    265.
    படித்திரு வாவிக் கலைசைத் தியாகர் பணியதுபோல்
    முடித்திடு மோர்குறை யுண்டதற் கின்றொரு முன்வினையெற்
    பிடித்திழுக் கின்றது சென்றஃ தாற்றுபு பின்னரிங்கே
    அடித்திரும் பாமுனம் யான்வரு வேன்றைய லையுறலே. 3

    பாங்கி விடுத்தல்.
    266.
    அருளோடு வாழுங் கலைசைத் தியாகருக் கன்புசெய்வார்
    மருளோடு கூடலில் லாமனம் போற்செலின் மன்னவரே
    இருளோடு கூடிய கண்போ லிருக்கு மிவள்பொருட்டால்
    தெருளோடு பானுவி னாளைவந் தேயருள் செய்யுமினே. 4

    பாங்கி தலைவிக்கு அவன்செலவுணர்த்தல்.
    267.
    ஒருகா ரணமுண்டு நாளொன்றின் மீள்வலென் றுண்மையொலி
    பெருகா ரணமெனச் சொற்றகன் றார்கட் பிணையலைம்பாற்
    செருகா ரணங்கு கலைசைத் தியாகர் திருமிடற்றைப்
    பொருகா ரணவும் பொழிற்கோ விருந்த புரந்தனக்கே. 5

    தலைவி நெஞ்சொடு புலத்தல்.
    268.
    மான்றாவு மத்தர் கலைசைத் தியாகர் வரையிலெம்மை
    ஏன்றா தரவி னிளமுலைப் போக மினிதருந்தித்
    தேன்றா னெனக் கென்று நீநான்வண் டென்றவர் தேடவின்று
    தோன்றா ‍தொளித்தனர் நெஞ்சேநன் றாலவர் சொல்லுண்மையே. 6

    சென்றோன் நீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி.

    269.
    புற்றா டரவர் கலைசைத் தியாகர் புரியருள்போல்
    வற்றாத பாலித் துறைவர்க் கியான்கங்குல் வாயுறக்கம்
    அற்றா குலமுறல் கூறா யிடையி லமளிவந்து
    சுற்றாத பூவணை மேற்றுணை யோடுந் துயிலன்னமே. 7

    தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல்.
    270.
    கார்வாழுங் கண்டர் கலசத் தியாகர் கலைசையன்பர்
    தேர்வாய் மணியொலி கேட்பமிப் போது சிறிதுமஞ்சேல்
    போர்வாண்மைக் கண்ணி யவர்தார்ப் பரிமளம் போலுமவர்
    ஊர்வாவி யுற்பல வாசமிங் கேவந் துலாவியதே. 8

    பாங்கி தலைமகட்குத் தலைமகன் வந்தமை உணர்த்தல்.
    271.
    தேறற் கடிமலர்க் கோதாய் கலைசைத் தியாகர்வெற்பில்
    ஏறப் படுமெய்ப் பசலையு நின்கண் ணிழிபுனலும்
    மாறச் செறியிருண் மாரன் கணைபட்டு வந்தபுண்ணும்
    ஆறப்பொற் றேர்மிசை யேறிவந் தாரங் ககன்றவரே. 9

    வந்தோன்றன்னொடு பாங்கி நொந்து வினாதல்.
    272.
    செழுமைநந் தாத கலைசைத் தியாகர் சிறப்பன்பர்போல்
    எழுமையும் பூண்ட தொடர்புடை யீரெங்கட் கென்றிருந்தேம்
    முழுமையு மெம்மை மறந்தனிர் போலுமிம் மொய்குழலாள்
    அழுமை நயனமங் கையாற் றுடைத்தங் ககன்றபின்னே. 10

    தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல்.
    273.
    மைப்படி யாரயிற் கண்ணீர் கலைசையுள் வந்து துதி
    செப்படி யார்க்கருள் செய்யுஞ் சிதம்பர தேவருண்ட
    வெப்படி யாவந்த பேராலம் போலும் விளையலர்கொண்
    டெப்படி யாற்றி யிருவீரு மிங்ங னிருந்தனிரே. 11

    பாங்கி இறைவியை ஆற்றுவித்ததிருந்த அருமை
    தலைமகற்குச் சொல்லல்.
    274.
    இடராவ தொன்றணு காதிவ ளைப்புரந் தியானிருந்தேன்
    நடராச ரெங்கள் கலைசைத் தியாகர்நன் னாட்டுமுன்னீர்ச்
    சுடரார் மணி‍செந் திருவெனத் தோன்றுந் துறைவமையல்
    அடராம லாற்றுவி யென்றன் றுரைத்த வருணினைந்தே. 12

    18. வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்.


    என்பொருட்பிரிவுணர்த்து ஏந்திழைக்கென்றல்.
    275.
    வேலாடு கண்ணி கலைசைத் தியாகர்வெற் பிற்சுரம்போய்
    நீலாம் பகத்தி முலைவி‍லைக் கேற்கு நிதிகவர்ந்து
    கோலா கலமுட னந்திக்குன் றுள்ளன கொண்டுவரும்
    பாலாறு போல்வரு வேனிது காதிற் பதிவிப்பையே. 1

    பாங்கி நின்பொருட்பிரிவுரை நீ அவட்கென்றல்.
    276.
    பாற்கங்கை சூடுங் கலைசைத் தியாகர் பருப்பதத்தின்
    மேற்கண்ணி மார்ப நலந்தீ திரண்டுநின் மேலனவாம்
    தீற்கங்கொ ளிவ்வெண்ண மெம்பெரு மாட்டி திருவுளத்துக்
    கேற்கும் படிவல்லை யேற்சொல்லி நீபின் னெழுந்தருளே. 2

    நீடேனென்றவன் நீங்கல்.

    277.
    மந்தியம் போதி வருகையிற் றேர்பண்ணி வன்சுரம்போய்ப்
    பந்தியம் போதக மேனிதி கொண்டு பயின்மன்றற்கா
    நந்தியம் போடைக் கலைசைத் தியாகர்நன் னாடனையாய்
    அந்தியம் போது வருவேனும் மூர்மகிழ்ந் தாலிக்கவே. 3

    பாங்கி தலைமகட்குத் தலைமகன் செலவுணர்த்தல்.
    278.
    இல்லத் தமரரு மேவுன் முலைவிலைக் ‍கெண்ணரிதாம்
    நல்லத்த மீந்து மணம்பெறு வான்பொன் னகைப்பொகுட்டு
    வில்லத்தங் கொண்ட கலைசைத் தியாகர்மெய் மார்க்கம்வரார்
    செல்லத்த மின்றுசென் றார்நம தன்பர் திருந்திழையே. 4

    தலைமகள் இரங்கல்.
    279.
    திருந்தன மென்னடை யாய்தென் கலைசைத் தியாகர்வெற்பிற்
    பெருந்தன மென்னிடைப் பெற்றுமென் னோவன்பர் பேசுகிலா
    திருந்தனம் வேறொன்று தேடச் கரங்கடந் திட்டினிநான்
    அருந்தனம் ‍வேம்பென லாம்படி போம்படி யானதுவே. 5

    பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்.
    280.
    வரம்போ தருமன்ப ருன்பொருட் டானிதி வாரிவரச்
    சுரம்போ யினர்தென் கலைசைத் தியாகர் சுடர்வரைப்பூ
    நிரம்போதி மங்கையிவ் வூரவர் தூற்றலர் நீக்கமின்றிச்
    சரம்போலத் தைக்கையி னீபுலம் பாநிற்குந் தன்மைநன்றே. 6

    தலைவி கொடுஞ்சொற் சொல்லல்.
    281.
    நீணாகம் பூண்ட கலைசைத் தியாகரை நீங்கிநின்றே
    வாணாள் கழிக்கும்வன் னெஞ்சரின் வெஞ்சுர மன்னரன்னோ
    வீணாள் படச்சென்ற வவ்வா றறிந்துமென் வேட்கைகண்டும்
    காணா தவரி னெனைத்தெளிப் பார்க்கென் கழறுவதே. 7

    வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்.
    282.
    தென்சாம கண்டர் கலைசைத் தியாகர் சிலம்பிடத்துன்
    மென்சாயல் காட்டி மயில்விலக் காநிற்கும் வேட்கையுற
    வன்சா ரலினின் விழிபோல் லிழித்தந்த மான்மடக்கும்
    பின்சா ணளவுஞ்செல் லாரன்பர் பேதுறல் பெண்கொடியே. 8

    பருவங்கண்டு பெருமகள் புலம்பல்.
    283.
    தாரேற வண்டினங் கொன்றையெல் லாமென் றடமுலைமேற்
    பீரேறப் பீரிற்கண் ணீரேற வாடும் பிணிமுகங்கட்
    கேரேறத் தொட்டிக் கலைவாழ் சிதம்பர வீசர்வெற்பிற்
    காரேறக் கண்டுநம் மன்பர்பொற் றேர்வரக் கண்டிலமே. 9

    இகுளை வம்பென்றல்.
    284.
    வாடிய பைந்தினைக் காமுரு கோனை வணங்கிநமர்
    கூடியங்கார்த்திடக்கொண்மூச்சொரிந்தனகொண்டல்வண்ணன்
    தேடிய பாதர் கலைசைத் தியாகர் சிலம்பினிற்கண்
    டாடிய மஞ்ஞை யிதுகா ரெனவஞ்சி யஞ்சலையே. 10

    இறைமகள் மறுத்தல்.
    285.
    வம்பார் தனத்தி கலைசைத் தியாகர்முன் மாலயனெவ்
    வம்பா றிடவழற் குன்றாய்நின் றென்ன மலைமுழுதும்
    வம்பார்செங் காந்தளுங் கோபமுந் தோன்றி வயங்குதலால்
    வம்பாகு மோவுன்சொல் வம்பாவ தன்றியிம் மைக்கொண்டலே. 11

    அவர்தூதாகி வந்தடைந்தது இப்பொழுதெனத்
    துணைவி சாற்றல்.
    286.
    வண்டூதைம் பாலி கலைசைத் தியாகர் வரையிடைத்து
    வண்டூதைக் கொல்குங் கொடிபோற் றெருமரல் மன்னர்வெற்றி
    வண்டூதத் தேர்மிசை யின்னேபொன் னேந்தி வருவரென்று
    வண்டூ துரைப்பமுன் னேவந்த தாலிந்த மைம்முகிலே. 12

    தலைமகள் ஆற்றல்.
    287.
    ஒருவா விருதலைப் புட்போ னமக்குயி ரொன்றெனமுன்
    திருவாய் மலர்ந்தருள் செய்தநங் காதலர் செம்பொருட்கா
    வெருவாது கான்சென் றுழிமறந் தெம்மை விடுவர்கொலோ
    வருவாரிக் காரிற் கலைசைத் தியாகர் வரையகத்தே. 13

    அவன் அவட் புலம்பல்.
    288.
    அள்ளற் பழனக் கலைசைத் தியாகருக் கன்பிலர்போல்
    எள்ளத் தனையு மிரக்க மிலாரென் றெனையுநொந்த
    உள்ளத்தி னோடழுங் கண்ணீர்வெள் ளெத்தி னுழிதருங்கால்
    மெள்ளப் பிடித்தெடுப் பாருமுண் டோவந்த மின்னினையே. 14

    மீண்டுவருகின்ற காலத்துத் தலைமகன்
    பாகனொடு சொல்லல்.
    289.
    மாடையி னாற்று முடித்தேர் வலவ மடந்தைசங்கோ
    டாடை யுகாமுன் கலைசைத் தியாக ரளித்தருளும்
    ஓடைகொள் செங்கழு நீர்க்குஞ் சரத்தை யுனதுளத்திற்
    கோடைவெங்காலெனக்கோடையின்கால்செலக் கொள்ளுதியே. 15

    தலைமகன் மேகந்தன்னொடு சொல்லல்.
    290.
    தன்னே ரிலாத கலைசைத் தியாகர் தடங்கிரிமேல்
    முன்னேகி னாலும்மை மொய்குழ லால்வென்று முற்றிழையாள்
    இன்னேயும் மின்னையுந் தன்னிடையால் வெல்லுமென் மணித்தேர்ப்
    பின்னே வரின்முகில் காள்பெறு வீர்நற் பெருமிதமே. 16

    பாங்கி வலம்புரிகேட்டு அவன்வரவறிவுறுத்தல்.
    291.
    இந்தனஞ் சேரெரி போன்றவெப் பாறத்தண் ணேரியதாய்ச்
    சந்தனம் பூசு தனத்தினல் லாய்தடந் தேரிலன்பர்
    கந்தனை யீன்ற கலசத் தியாகர் கலைசையின்கண்
    வந்தனர் வந்தன ரென்றினி தார்க்கும் வலம்புரியே. 17

    வலம்புரி கிழத்தி வாழ்த்தல்.
    292.
    சங்கத்தி லோர்கண்ணர் பெண்ணொரு பாகத்தர் தண்ணருளாற்
    சங்கத் தமிழ்நிறை கூடல் வணிகர்தந் தையலர்க்குச்
    சங்கத்த மிட்ட கலைசைத் தியாகர் சரதகங்கைச்
    சங்கத்தின் வாழியென் சஞ்சலந் தீர்த்த தனிச்சங்கமே. 18

    இதுவுமது.
    293.
    போதாந்தர் போற்றுநன் மங்கல நாணென்றும் பூண்டவெங்கள்
    மாதா வளர்சிவ காமிகண் டத்தணி வாய்ந்துநறும்
    தாதாடுங் கொன்றைக் கலைசைத் தியாகர் தமக்கினிய
    வேதா சலத்தின் புகழ்போல் விளங்குக வெண்சங்கமே. 19

    தலைமகன் வந்துழிப் பாங்கி தம்மை நினைத்தமை வினாதல்.
    294.
    புனைந்துமந் தாகினி பொற்சடை மீது பொருபுலித்தோல்
    வனைந்துநின் றாடுங் கலைசைத் தியாகர் வரையன்பரே
    நினைந்து மறிதிர்கொல்லோவிரு போதுங்கண் ணீர்மழையால்
    நனைந்து கிடக்கு முடையாளை நீர்சென்ற நாட்டகத்தே. 20

    தலைமகன் நினைத்தமை செப்பல்.
    295.
    எனையும்வந் தாண்ட கலைசைத் தியாகரை யேத்தியிரு
    வினையுங் கழித்தவர் தொண்டைநன் னாடன்ன மின்னினையும்
    உனையுமெப் போதுகண் டேன்கண்ட நாண்முத லோரிடத்தும்
    நினையும் பரிசில்லை யான்மற வாமை நிலைத்தபின்னே. 21

    தலைமகளை ஆற்றுவித்திருந்த அருமை கூறல்.
    296.
    சிவங்காட் டியதென் கலைசைத் தியாகர் சிலம்பவுன்றன்
    தவங்காட் டியவுரு வைப்படந் தீட்டித் தயங்கநவ
    நவங்காட்டித் தேர்சென்ற நல்வழி காட்டிநின் னன்றியனு
    பவங்காட்டி யாற்றுவித் தேனெங்கள் பாவையைப் பாலிருந்தே. 22.

    19. வரைவு மலிவு.


    காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உரைத்தல்.
    297.
    நின்வண்ண மேலுறு பொன்வண்ண மாறமின் னேயெனையும்
    தன்வண்ண மாக்குங் கலைசைத் தியாகர் தடத்துநம்மில்
    முன்வண்ண மேருநின் றாலென்ன வுன்றன் முலைவிலைக்காப்
    பொன்வண்ணத்தேரன்பர்வைத்தார்கொடுவந்து பொற்குவையே. 1

    காதலி நற்றாய் உள்ளமகிழ்ச்சி உள்ளல்.
    298.
    மன்றலம் புன்னை மருப்பங்கை யாற்கண்டல் வண்முகையாம்
    மன்றநற் கொங்கை யளவுந் துறைவன் மருவியசோ
    மன்றலைக் கிட்ட கலைசைத் தியாகர் வரைவருமேல்
    மன்றற் றிருவணி கண்டியாயு நம்மின் மகிழ்வுறுமே. 2

    பாங்கி தமர் வரைவெதிர்ந்தமை தலைமகட்கு உணர்த்தல்
    299.
    அதிர்ந்திடு மாழிக் கருங்கழி நாற்ற மடம்பினின்றும்
    உதிர்ந்திடும் பூமண மாற்றுந் துறைவர்க் குயர்ந்தபத்தி
    முதிர்ந்தவர் போற்றுங் கலைசைத் தியாகர் முதுகுன்றுளோர்
    எதிர்ந்தன ரோகை முரசறைந் தார்மகிழ்ந் தேந்திழையே. 3

    300.
    சிறையுந்து நீர்த்தண் கலைசைத் தியாகரைச் சேரலர்போல்
    மறையுந் தொழில்களு மாங்கவற் றால்வந்த வாட்டமு நம்
    குறையுமின் றோடநெஞ் சேநம தன்பர்கைக் கொண்டுவகை
    நிறையு மணமுர சார்க்கின்ற தானந் நெடுநகர்க்கே. 4

    தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.
    301.
    இன்னா வொழிக்குங் கலைசைத் தியாகர்வெற் பெய்தியந்நாள்
    இன்னார்கொண் டுன்கண்ணி கையாரத் தையலுக் கிட்டபலன்
    இன்னாகங்கொண்டசெவ்வேள்வள்ளி போலவிங் கெய்தலினால்
    இந்நா ளறிந்தன மாலென்றும் வாழி யிறைவனே. 5

    தலைவி மணம்பொருட்டாக அணங்கைப்பரா நிலை
    பாங்கி தலைவருக்கு உணர்த்தல்.
    302.
    அணங்கமர் மாடக் கலைசைத் தியாகருக் கன்பிலர்போல்
    அணங்கர வல்குனல் லாளுன் பொருட்டண்ட கூடமட்டும்
    அணங்கன கச்சிக ரப்பொருப் பின்புறத் தாலயத்துள்
    அணங்கர விந்தத்தா ளேத்துதல் பார்த்தரு ளாண்டகையே. 6

    அணங்கைப் பராநிலை கண்ட தலைமகன் மகிழ்தல்.
    303.
    இப்பே ரறிவிவட் கெவ்வண்ண மெய்திய தென்பொருட்டா
    முப்பே ருலகும் புகழ்கூர் கலைசையின் முத்தலங்கற்
    செப்பே ரிளமுலை பாகன் சிதம்பர தேவன்வெற்பில்
    துப்பே ரிதழி மலர்தூஉயித் தெய்வந் தொழுவதற்கே. 7

    20. அறத்தொடு நிற்றல்.


    கையறுதோழி கண்ணீர் துடைத்தல்.
    304. வெண்ணீ றணியுங் கலைசைத் தியாகரை மேவலர்போற்
    கண்ணீர் மழைபொழி தற்கொரு காரணங் கண்டிலமால்
    பண்ணீர் மொழிமயி லேவிளை யாடும்பொற் பாவைதன்னைத்
    தெண்ணீர்த் திரைகொண்டு போயின தோவென்னை செப்புகவே. 1

    தலைவி கலுழ்தற்காரணங் கூறல்.
    305.
    கனக்கறைக் கண்டர் கலசத் தியாகர் கலைசையன்னாய்
    வனக்கணிக் கீழ்வந் தெனைப்புணர்ந் தேகிய மன்னவரை
    எனக்குமுன் காட்டிய கண்மலர் காண்பதற் கின்றவரைத்
    தனக்கெனைக் காட்டிடென் றேயழுங் காரணந் தானிதுவே. 2

    தலைவன் தெய்வங்காட்டித் தெளிப்பத் தெளிந்தமைகூறல்.
    306.
    நலம்பர வுந்தென் கலைசைத் தியாகர்நன் னாட்டுவரிக்
    கலம்பர வுந்துறைத் தெய்வத்தின் முன்னின்று கையெடுத்துப்
    புலம்பரன் பாகத் தெளித்தவை யாவும் பொறியிலியேன்
    சலம்பர வாவண்ண மெய்யாக நம்பினன் சாலவுமே. 3

    தலைவி தலைமகன் இகந்தமை இயம்பல்.
    307.
    மறைமொழி வாயர் கலைசைத் தியாகர்வண் பாலிநதித்
    துறைமொழி யேநற் கரிநமக் கென்றன்பர் சொல்லியொரு
    குறைமொழி யாமல் விடுத்திகந் தார்நற் குணப்பெரியோர்
    நிறைமொழி குன்றிற்குன் றாததுண் டோமண்ணினேரிழையே. 4

    பாங்கி இயற்பழித்துரைத்தல்.
    308.
    நற்றேவர் சூழுங் கலைசைத் தியாகர் நயந்ததெண்ணீர்
    உற்றே றியநந்தி யோடையின் வாய்நின்று மொண்டுறைவர்
    பற்றேக யானக லேனென் றுரைத்தும் பரிந்தழநீ
    எற்றே துறந்தன ரேயவர் போலில்லை யேதிலரே. 5

    தலைமகள் இயற்பட மொழிதல்.
    309.
    காயிலைச் சூலர் கலசத் தியாகர் கலைசையன்னம்
    சேயிதழ்த் தாமரை மேல்வீற் றிருந்து சிறையளிகள்
    வாயினிற் பாட மகிழ்தொண்டை நாட்டன்பர் வன்கொடியர்
    ஆயினு மாக வவரே யெனைப்புரந் தாள்பவரே. 6

    தெய்வம் பொறைகொளச் செல்குவ மென்றல்.
    310.
    இதம்புரி மெய்யன்பர் சொற்பிற ழாத்தன்மை யின்மையினால்
    சிதம்பர வீசர் கலசா புரியரைச் சேரலர்போற்
    கதம்புரி யேறெய்வ மேயென்று சென்று கனபலிதூஉய்ப்
    பதம்பர வக்கட வேமிரு வேமும் பணிமொழியே. 7

    தலைவி இல்வயிற் செறித்தமை சொல்லல்.
    311.
    அனம்போ னடைச்சி கலைசைத் தியாகருக் கன்புசெயார்
    தனம்போ லிருத்திமற் றைம்பொறி வாயிற் சரித்தல்செயார்
    மனம்போற் றடுத்தென்னை வைத்தன ளாலன்னை வாரமிலாக்
    கனம்போற் கருங்குழ லாரலர் தூற்றுதல் கண்டுகொண்டே. 8

    செவிலி கனையிருள் அவன்வரக் கண்டமை கூறல்.
    312.
    தங்காப்பு மாசுணத் தால்வனை கின்ற சதுரரென்றும்
    மங்காப் புகழ்கூர் கலைசைத் தியாகர் வரையணங்கே
    பைங்காப் புடைநின் றொருவன்பின் னூழையின் பால்வரக்கண்
    டங்காப் புடன்காப் படைத்தே னெனமோ யறைந்தனளே. 9

    செவிலி தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல்.
    313.
    தெளிவார்க் கருளுங் கலைசைத் தியாகரைச் சேர்கிலர்போல்
    ஒளிவாள் விழிபிறி தாய்முத் துறைக்க வுறைபுனற்கு
    மிளிவார் முலைபசும் பொன்பூத் துடம்பும் விளிர்த்ததனால்
    அளிவா ழளகத்தி னாட்குற்ற தீதென் றறிகிலனே. 10

    பாங்கி வெறிவிலக்கல்.
    314.
    இவருடை யாருயி ருண்ணிய வோபலி யேற்றுமுன்சேர்ந்
    தவருடை யார்வத் தழுந்திவ ணோயட வோமுருகே
    கவருடை நெஞ்சத்தெம் மில்லத்துள் வந்த கருத்தெவனோ
    துவருடை யாளர் கலைசைத் தியாகர் சுடர்வரைக்கே. 11

    செவிலி தோழியை வினாதல்.
    315.
    பொன்னுற்ற மார்பன் பணிகோ விருந்த புரத்திலென்றும்
    மன்னுற் றருளுஞ் சிதம்பர வீசர் வரையின்மின்னே
    துன்னுற்ற மாதர்முன் சூர்தடிந் தானைச் சுடர்மரக்காற்
    பின்னுற்ற நாளனை யென்னையிவ் வாறுகொல் பேசியதே. 12

    தோழி பூத்தருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்.
    316.
    வாமம் பெறுநின் மகட்கொரு பூவண்ண வண்டுகொண்ட
    நாமங்கொள்போதொன்றுன்கண்ணிற்கொள்வாயென்றொர் நம்பிவந்து
    சேமந் தழைதரத் தந்தான் கலைசைத் தியாகர்வெற்பிற்
    காமஞ் சரிகொய்து யாம்விளை யாடிய காலையிலே. 13

    புனறருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்.
    317.
    குருமணி யன்னநின் கன்னியைம் பாற்குக் கொழித்திடுந்தன்
    கருமண லொப்புறல் கண்டிவ ளாடிடுங் காற்கந்தள்ளத்
    திருமணிப் பாலியிற் பாய்ந்தெடுத் தானொரு செம்மலுமைக்
    கொருமண வாளர் கலைசைத் தியாகரை யுள்கிவந்தே. 14

    இதுவுமது.
    318.
    தன்னிடைத்தோன்றிய சைவலக் கொத்தையுன்றையலைம்பால்
    வென்னிடச் செய்ததென் றாடிடுங் காலம் விரைந்திழுக்கப்
    பொன்னுடை யானிற் சுனைவீழ்ந் தெடுத்துப் புரந்தனனோர்
    கன்னெடுந் தோளன் கலைசைத் தியாகர் கனவரைக்கே. 15

    களிறுதருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்.
    319.
    தொடையார் குழலி நடைக்கிடை தன்பிடி சோர்தல்கண்டவ்
    விடையானை யொன்று கனன்றிவண் முன்வரு மேல்வையென்னை
    உடையார் கலைசைத் தியாகர்முன்னாக முரித்தெனவேற்
    படையாலவ் வானையைக் கீண்டளித் தானொரு பார்த்திபனே. 16

    தலைமகள்வேற்றுமை கண்டு நற்றாய் செவிலியை வினாதல்.
    320.
    வண்டமிழ் கூருங் கலைசைத் தியாகர் மலைவனிதாய்
    பெண்டன்மை யம்ம முழுதிழந் தாளென் பெருமகண்முன்
    கண்டகண் ணுக்கின்று வேற்றுருக் காட்டிக் கடக்கரிதான்
    உண்டவெள் ளிற்கனி போலான காரண மோர்ந்துரையே. 17

    செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடுநிற்றல்.
    321.
    மருவில்வஞ் சூடுங் கலைசைத் தியாகர் வரைப்புனத்திற்
    பொருவிறற்போதகம்வந்ததுண்டோவென்றுபோந்துவினாய்த்
    தருவு மதிலணை வல்லியும் போலநின் றையன்முலை
    ஒருவிதி கூட்ட முயங்கின ராலன் றொருசெல்வரே. 18

    21. உடன்போக்கு


    பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல்.
    322.
    கள்ளார்க் குவதர் சிதம்பர வீசர் கலைசைவெற்பா
    வள்ளார்கண் ணாளுட னின்பதிக்கேசென்று வாழ்ந்தருள்வான்
    உள்ளா ரிருநிதி யுங்கொடு வந்திங் குதவினுநீ
    கொள்ளார் முலைவிலை யாகவெம் மையர் குறையறவே. 1

    தலைவன் உடன்போக்கு மறுத்தல்.
    323.
    சுடர்ப்பாலை வன்னி கமர்வழி போய்வையந் தூக்கிநிற்கும்
    விடப்பாந்த ளுச்சி வெதுப்புங் கடத்தில் விமலையைத்தம்
    இடப்பாகம் வைத்த கலைசைத் தியாகரை யெண்ணலர்போல்
    நடப்பா ரெவர்துணிந் திப்பூங் கொடியுட னன்னுதலே. 2

    பாங்கி தலைமகனை உடன்படுத்தல்.
    324.
    சங்கையி லாவெம் பரலார் முரம்புந் தழற்சுரமும்
    செங்கைகொல் வேல சிதம்பர வீசர் திருக்கலைசை
    மங்கைய ராடுந் திருநந்தி யோடையு மல்குசிவ
    கங்கையுந் தானல்ல வோநின்னொ டேகினெங் காரிகைக்கே. 3

    தலைவன் போக்கு உடன்படுதல்.
    325.
    கோதைத் தவிர்க்குங் கலைசைத் தியாகரைக் கூறலர்போம்
    பாதைக் கடுந்தழல் பார்த்துமென் சீறடி பாங்கனிச்சப்
    போதைப் பகையென்று கூசுதல் கண்டும் பொலந்தொடியென்
    பேதைத் தனிநெஞ் சிவளுடன் கான்செலப் பெட்புற்றதே. 4

    பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல்.
    326.
    தூண்டற் கரிய சுடரனை யாய்பஞ்சிற் றூக்குபதம்
    நீண்டக் கினியெரி கான நடந்து நிரைவளையாள்
    பாண்டப் பலம்பு கலைசைத் தியாகர் பவனிவிழாக்
    காண்டற் குடன்வரு மோவென் றவாவினர் காவலரே. 5

    தலைவி நாணழிபிரங்கல்.
    327.
    தண்ணார் பதங்க மரியயன் றேடியுந் தாமறிய
    ஒண்ணாச் சிதம்பர வீசன் கலைசை யுறாரெனவென்
    கண்ணா ருயிரென வுற்றநன் னாணங் கழன்றிடலாற்
    பெண்ணாச் சமைத்த வினையேபொல் லாத பெருவினையே. 6

    கற்பு மேம்பாடு பாங்கி கூறல்.
    328.
    காணினுங் கேட்கினு மானந்த மாகுங் கலைசையயி
    ராணிதன் கேள்வர் சிதம்பர வீச ரருளனையாய்
    பேணிய வாவியிற் பெற்றிடுந் தாயிற் பெரிதெனச்சொல்
    நாணினு நற்பொருள் கற்பாவ தேயென்று நங்கையர்க்கே. 7

    தலைவி ஒருப்பட் டெழுதல்.
    329.
    பூத வனீகர் சிதம்பர வீசரைப் போற்றிலர்போல்
    மாதர் விரோதத்திற் றாயர் குரோதத்தில் வாட்டமுற்ற
    யாதனை தீரக் கலைசைக்கெ னன்பரொ டேகுவல்யான்
    ஆதலி னின்னமிவ் வூரம்ப றூற்றி யழுங்குகவே. 8

    பாங்கி சுரத்தியல் உரைத்துழித் தலைமகள் சொல்லல்.
    330.
    சசியார் புரிசைக் கலைசைத் தியாகரைச் சார்கிலர்போல்
    ஒசியாநிற் குஞ்சிற் றிடையாயென் கூறினை யூரவர்வாய்க்
    கசியாச்சொற் றீயிற் கனற்றப்பட் டேற்குக் கடுமை பொங்கும்
    சுசியார் வனமும் வனமாஞ் சிவசிவ துன்னிடினே. 9

    பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்தல்.
    331.
    ஆனந்தக் கூத்தர் கலைசைத் தியாக ரருமறைபோல்
    ஈனந்தங் காமெய்ய னீயென் றிவளை யினிதளித்தேன்
    மானந்தங் குன்னரு ளும்பிறி தாயின் மழைசுருங்கித்
    தானந் தவமற் றிரண்டுமொன் றாமித் தரையிடத்தே. 10

    பாங்கி வைகிருள் விடுத்தல்.
    332.
    மைவாரு மல்லிற் கலைசைத் தியாகர் வரையணங்கே
    இவ்வாண்டகைபின்னர்நீசெல்லுமார்க்கம்வந் தெய்துவல்யான்
    அவ்வாத வூரர்முன் றேரர்வெவ் வாயை யடக்கியபோல்
    ஒவ்வா வலருரைப் பார்பல வாயு மொடுக்குவித்தே. 11

    தலைவியைத் தலைவன் சுரத்துய்த்தல்.
    333.
    மண்ணிற் சிறந்த கலைசைத் தியாகர் வளர்சடைநீர்த்
    தண்ணிற் சிறந்தவெண் பாலாற்று முத்தமுஞ் சாற்றுமவர்
    கண்ணிற் கருணைக் கடல்போற் குளிரிளங் காவுங்கண்டு
    பெண்ணிற் சிறந்தவண் மெல்லமெல் லப்பதம் பேர்த்துவையே 12

    தலைமகன் தலைமகள் அசைவறிந் திருத்தல்.
    334.
    முச்சோதி யங்கட் கலைசைத் தியாகரை முன்னலர்போல்
    அச்சோவுன் செம்பொ னடித்தா மரையி லரம்பொருகற்
    றச்சோ திமநடைத் தையலெய்ப் பாயினை சாந்தமுற
    இச்சோ லையினிழற் கீழிருப் பாஞ்சற் றிளைப்பறவே. 13

    தலைமகன் தலைமகளை உவந்து அலர்சூட்டி
    உண்மகிழ்ந் துரைத்தல்.
    335.
    பாதபத் மங்க ளிவட்கியான் வருடவும் பாலையின்கீழ்ச்
    சீதள மாலை திருமுடி சூட்டவுந் தென்கலைசை
    நாதனெங் கோனைச் சிதம்பர வீசனை நாடியந்நாள்
    மாதவங் கோடிசெய் தன்றோவிப் பேறின்று வாய்த்ததுவே. 14

    கண்டோர் அயிர்த்தல்.
    336.
    நரந்தஞ்ச மாக்கொள் கலைசைத் தியாகர்நன் னாட்டுறையும்
    மரந்தர் கொலோவிச் சுரத்திவர் யார்குற வள்ளியென்னின்
    பூந்தண் குழலிவள் கையிற்கல் லாரமென் போதில்லையாற்
    சேந்தனென் றாலிவன் செம்மார்பில் வெட்சித் தெரியலின்றே. 15

    கண்டோர் காதலின் விலக்கல்.
    337.
    வில்வேளு மந்த விரதியும் போல்வரு வீர்கலைசை
    நல்வேத கீதர் சிதம்பர வீசரை நண்ணலர்போல்
    கல்வேம்வெங் கானத் தினிச்செல் லொணாது கதிர்மறைந்த
    தில்வே றிலையினி யல்வேளை யெம்மி லிருந்துண்ணுமே. 16

    கண்டோர் தம்பதி ‍அணிமை சாற்றல்.
    338.
    இம்மாது நீயுமின் றிம்மா திரங்கடந் தேகினெங்கும்
    செம்மாணிக் கச்சுடர் மாடமுங் கூடமுஞ் சேர்கிடங்கும்
    அம்மா மதில்களுஞ் சூழ்ந்தெதிர் தோன்று மமரர்க்கெல்லாம்
    பெம்மான் சிதம்பர வீசன் கலைசைப் பெருநகரே. 17

    தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக் குணர்த்தல்.
    339.
    முதுகா ரணனு மெழுதரி யாயிரு மூன்றுடன்முப்
    பதுகா தமுநடந் தேவந் தணைந்தனம் பாற்கரனா
    ரதுகா யழல்வெம்மை யுட்புகு தாம லடர்பொழில்சூழ்
    இதுகாண் சிதம்பர வீசன் கலைசை யெழினகரே. 18

    22. கற்பொடு புணர்ந்த கவ்வை.


    செவிலி பாங்‍கியை வினாதல்.
    340.
    பொன்னங் கொடியொன்று தானடந் தேவரல் போல்வருமென்
    அன்னந் தனியெங்ங னுற்றது பொற்றொடி யாய்நடஞ்செய்
    மன்னம் பலவர் கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போல்
    தன்னந் தனிநின்று நீயென்கொல் வாடித் தளர்கின்றதே. 1

    பாங்கி செவிலிக் குணர்த்தல்.
    341.
    கடுத்தார் மனநம் மினத்தாரன் னேபின்னுங் காதன்மணம்
    தடுத்தா ரதனிற் கலைசைத் தியாகர் தமதருளால்
    வடுத்தான் படாமற் சுரத்தெரி யாற்றி மலரொருநாள்
    கொடுத்தா னொருவன்பின் னேநடந் தாளுன் குலக்கொழுந்தே. 2

    பாங்கியின் உணர்ந்த செவிலி தேற்றுவோர்க்கு
    எதிரழிந்து மொழிதல்.
    342.
    ஓராட்டி பாகர் கலைசைத் தியாக ருயர்வரைமேல்
    நீராட்டி யென்முலை யூரமு தூட்டியெந் நேரமுநான்
    சீராட்டி யேந்தி வளர்த்ததற் கோவெனைத் தேவ்விற் கண்டென்
    ஏராட்டி விட்டகன் றாளாறு மோவெனக் கித்துயரே. 3

    செவிலி தன் ‍அறிவின்மைதன்னை நொந்துரைத்தல்.
    343.
    பிரிவைக் கருதிக் கலைசைத் தியாகர் பெருவரைமேற்
    பரிவைப் பெருக்கியன் னேயென் றழைத்துப் பழகுமிந்த
    அரிவைக்குப் பாலையல் லாற்குடி யாதென் றறைந்துமெள்ளத்
    தெரிவித் தகன்றன ளாற்பேதை யேதுந் தெரிந்திலனே. 4

    செவிலி ‍தெய்வம் வாழ்த்தல்.
    344.
    முடி‍கொண்டு நின்னடி போற்றுவ லென்செல்லன் முற்றுமறக்
    கடிகொண்ட காளைபின் சென்றாளை மீட்டின்று காட்டுதியால்
    படிகொண்ட கீர்த்திக் கலைசைத் தியாகர் பணிவரைமேற்
    குடிகொண் டிருந்தென்று மெங்களைக் காக்குங் குலதெய்வமே. 5

    செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல்.
    345.
    ஒருகயந் தள்ளி யொருகயம் வீழ்ந்தெடுத் தோனிருக்க
    அருகய லார்க்குக் கொடுப்பான் றனைநினைந் தார்களென்றே
    திருகய நெஞ்சத்தர் காணாக் கலைசைத் தியாகர்வெற்பிற்
    பொருகயற் கண்ணவ ளன்னே விடலைபின் போயினளே. 6

    நற்றாய் பாங்கிதன்னொடு புலம்பல்
    346.
    நோக்கிநல் லாள்கருத் தீதென்றுன் னோடு நுவன்றவந்த
    வாக்கினை யெங்கட் குணர்த்தா தனத்தை வனத்தவமே
    போக்கினை யேதென் கலைசைத் தியாகர் பொருப்பிலெங்கள்
    மூக்கினைச் சுட்டு விரல்சேர வைத்தழ முற்றிழையே. 7

    நற்றாய் பாங்கியர்தம்மொடு புலம்பல்
    347.
    கரத்திற் கபாலர் கலசத் தியாகர் கலைசையென்மான்
    வரத்தின்மிக்கானொருவள்ளல்கைத்தார்பெற்று வாய்மைகுன்றா
    துரத்திற் சிறந்தொரு தெய்வந் தொழாத வுறுதிபெற்றாற்
    சுரத்திற் றுணிந்துட னேகவும் வேண்டுங்கொ றோகையரே. 8

    நற்றாய் அயலார்தம்மொடு புலம்பல்
    348.
    அகத்தார்க் கரியர் கலைசைத் தியாக ரளித்தருள்சண்
    முகத்தான் றிருமுன் வரங்கிடந் தியான்பெற்ற மொய்குழலாள்
    சுகத்தாறு காட்டவல் லானொரு வன்பின் சுரத்திலிவ்வூர்
    நகத்தா னகன்றன ணட்டாற்றுச் சா‍யென நானையவே 9

    நற்றாய் தலைமகள்பயிலிடந்தம்மொடு புலம்பல்
    349.
    திருந்தேற் கருளுஞ் சிதம்பர வீசர் திருக்க‍லைசைப்
    பெருந்தேவு யன்னவென் பெண்விளை யாடும் பெருஞ்செயலாய்
    குருந்தே குருக்கத்தி மண்டப மேயுங் குளிர்ந்தநிழல்
    இருந்தே பிரிந்தவ ணாங்காண வென்றுவந் தெய்துவளே 10

    நிமித்தம் போற்றல்
    350.
    அரைவா யரவர் கலைசைத் தியாக ரமர்ந்தவெள்ளி
    வரைவாய் மரையி னிணப்பலி யென்று மகிழ்ந்திடுவேன்
    இரைவாய் நிறைய வெடுத்துண்ண லாமின்றெ னேழைவரக்
    கரைவா யிருகட் கொருமணி யைங்குணக் கார்க்கொடியே 11

    நற்றாய் சுரந்தணிவித்தல்
    351.
    நாரமில் லாவெஞ் சுரநாடு பாலிநன் னாடெனலாய்
    வாரங் கலைசைத் தியாகேச வுன்றன் வலக்கண்ணினாற்
    கோரஞ்செய் யாமற் குளிர்விக்க வேண்டுங் குடங்கொண்முலைப்
    பாரம்பொறாதிடை தள்ளாடச் செல்லுமென் பைந்தொடிக்கே. 12

    நற்றாய் தன்மகள் மென்மைத்தன்மைக்கு இரங்கல்.
    352.
    அஞ்சத்த னப்பர் கலைசைத் தியாக ரரணடுவான்
    அஞ்சத்த மாமறை சொன்னசெவ் வாயெழு மந்நகைபோல்
    அஞ்சத் தழல்செ யடவிவெங் கற்றிரட் காற்றினவோ
    அஞ்சத் திறகும் பொறாதவென் பேதை யடிமலரே 13

    நற்றாய் தன்மகள் இளமைத்தன்மைக்கு உளமெலிந்திரங்கல்.
    353.
    பாவா யுறுகுழல் போற்கரந் தேகும் படிபுலவோர்
    பாவாய் கலைசைத் தியாகர்நன் னாட்டிற் பயின்றதெங்கென்
    பாவா யழேலென்று முத்தன்ன மூட்டியுன் பாதமண்ணிற்
    பாவாய் நடந்து வராயென்று கொஞ்சுமென் பைங்கிளியே. 14

    நற்றாய் தன்மகள் அச்சத்தன்மைக்கு அச்சமுற் றிரங்கல்.
    354.
    நீர்த்தண் சுனைத்த வளைதத்தி னஞ்சுமென் னேரிழையாள்
    தீர்த்தன் கலைசைத் தியாகேசன் வெற்பினிற் செல்லிடிபோல்
    ஆர்த்தஞ் சனமத மாயா முறித்துண்ண லச்சுரத்திற்
    பார்த்ததிர் வுற்று வெரூஉமென்றெ னெஞ்சம் பதைக்கின்றதே 15

    ஆயமும் தாயும் அழுங்கக் கண்டோர் காதலின் இரங்கல்.
    355.
    புரகர ரெங்கள் கலைசைத் தியாகர் பொருப்பிடையாம்
    பரிதவிக் கத்துறந் தாளென்று பாங்கியர் பஞ்சினைவார்
    விரகறி தன்மக ளின்சொற் பயிற்றிய மென்கிளிதான்
    அரகர வென்னநற் றாயழல் சேர்மெழு காயிடுமே. 16

    செவிலி ஆற்றாத்தாயைத் தேற்றல்.
    356.
    மஞ்சிவர் மன்றமுஞ் செய்குன்ற முஞ்செறி வண்கலைசை
    நஞ்சினை மாந்துங் கலசத் தியாகர் நடஞ்செய்பதத்
    தஞ்சிலம் போசை படர்தரு மெல்லை யளவுஞ்சென்றுன்
    வஞ்சியைத் தேடிக் கொணர்வேன் வருந்தல் வருந்தலன்னே. 17

    ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல்.
    357.
    வான்மூன்று நூலர் கலைசைத் தியாகர் வரையிலெங்கள்
    மான்மூன்று சத்தி யுடையா னொருவன்பின் வன்மரங்கள்
    நான்மூன்று ராசியுந் தோயுங் கடத்தி னடந்தனளோ
    கோன்மூன்று கொண்டு குறும்பொரு மூன்றுங் குமைத்தவரே. 18

    மிக்கோர் ஏதுக்காட்டல்.
    358.
    வேயுங் கரும்பும் புரைநெடுந் தோளி வினைப்பயனாற்
    காயுங் கனியும் பருவத் தருந்துநர் கைப்படுமால்
    தீயு மறியுங்கைக் கொண்டார் கலைசைத் தியாகர்வெற்பில்
    ஆயும் பொழுதுமின் னாருமந் நீர்மைய ரன்பினர்க்கே. 19

    செவிலி எயிற்றியொடு புலம்பல்.
    359.
    துகளேத நீக்குங் கலைசைத் தியாகர் சுடர்க்கிரிமேல்
    உகளேறு போலு மடலோர் விடலைபின் னூறுமினி
    யகளேயும் பூமின்புற் பற்கோத்த தாலி யணியுமெயின்
    மகளேயிப் பாலைவந் தப்பால் நடந்த வழியுரையே. 20

    செவிலி குரவொடு புலம்பல்.
    360.
    கூசாம லேதிலன் பின்னேக லென்றொன்று கூறலின்றிப்
    பேசாத பாவையைப் பெற்றன மென்ற பெருங்குறையால்
    வேசாறி யோவெங்கள் பாவையை நீவிலக் காமல்விட்டாய்
    தேசார் கலைசைத் தியாகேசர் வெற்பிற் செழுங்குரவே. 21

    செவிலி சுவடுகண் டிரங்கல்.
    361.
    பிஞ்சு நிலாவணி செஞ்சடை யாரென் பிழைமலங்கள்
    அஞ்சுங் கழித்த கலைசைத் தியாக ரசலத்தினான்
    கொஞ்சுங் கிளியனை யாளடி யுங்குவை கூர்வடமேற்
    றுஞ்சு மவனனை யானடி யேயிச் சுவடுகளே. 22

    செவிலி கலந்துடன்வருவோரைக் கண்டு கேட்டல்.
    362.
    கம்மேக வண்ணனுஞ் செய்யாளும் போல்வந்து காட்சிதந்தீர்
    இம்மே தகநும்முன் போயின ரோநல் லெழிற்கலைசைச்
    செம்மேனி பூசும்வெண் ணீற்றான் சிதம்பர தேவன்வெற்பில்
    அம்மே னகையனை யாளு மொருசிலை யாளியுமே. 23

    கலந்துடன்வருவோர் புலம்பல் தேற்றல்.
    363.
    கண்டகங் கொண்டென் னெதிர்வந்த மேகமுங் காதலென்மான்
    கண்டதொர் மின்னுங் கணிக்கிலன் னேயொண் கரியமணி
    கண்டன் சிதம்பர வீச னுதற்கட் கனறருகான்
    கண்டகண் டண்ணுற வேகல சாபுரி காண்பர்களே. 24

    செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல்.

    364.
    தெரிதமி ழார்ந்த கலைசைத் தியாகரைச் சேர்கிலர்போல்
    எரிதரு கான்றிரிந் தெய்த்தவென் கால்கலந் தேகுநரைத்
    துரிதம தாக்கண்டு கண்டுகண் புற்கென்ற சூரியர்க்கும்
    அரிதரி தாலினிக் காணநம் மாதை யருஞ்சுரத்தே. 25

    23. மீட்சி.


    தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தல்
    365.
    தத்துவக் கூட்ட முழுவதுஞ் சோதித்துத் தாகமுடன்
    சித்துரு வான கலைசைத் தியாகரைத் தேடுநர்போற்
    பத்துடை யாளையன் னேயெங்கு நாடியிப் பாவிவந்தேன்
    ஒத்துடன் கொண்டுசென் றானொரு வள்ளறன் னூர்மனைக்கே. 1

    தலைவன் தம்மூர்சார்ந்தமை சாற்றல்.
    366.
    எழுங்காதல் கூரமுன் னாளுன்னை நான்கண்ட திம்மலைவண்
    டுழுங்கான் மலர்நந்தி யோடைத் துறையிதுன் னூசலிட்ட
    செழுங்கா விவைதென் கலைசைத் தியாகரைச் சேர்கிலர்போல்
    அழுங்கா தெழுந்தரு ளாரணங் கேநம் மணிநகர்க்கே. 2

    தலைவி முன்செல்வோர்தம்மொடு தான்வரல்
    பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல்.
    367.
    ஊரார்சொற் றீமைக்குந் தாயர் பொறாமைக்கு முங்கொ துங்கி
    வாராநின் றாளொரு வள்ளல்பின் னென் றுநன் மாமறையீர்
    ஏரார் கலைசைத் தியாகேசர் வேதண்டத் தெண்டிசையும்
    பாராநின் றேங்குமென் பாங்கியர்க் கோதுந்தப் பாதுசென்றே. 3

    முன்சென்றோர் பாங்கியர்க்கு உணர்த்தல்.
    368.
    குருவாய்வந் தன்பர்க்கு முப்பொருள் காட்டிக் குறைவிலின்பம்
    தருவார் கலைசைத் தியாகர்நன் னாட்டொரு தையலங்கோர்
    திருவாளன் பின்வரக் கண்டன நீரின்று சேயிழையீர்
    பெருவாழ்விற் கண்டு வகைதொகை யின்றிப் பெறுவிர்களே. 4

    பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தல்.
    369.
    மல்லோங் கெயில்சூழ் கலைசைத் தியாகர் வரையிடத்தஞ்
    சில்லோதி நின்மக ளேந்தல்பின் னேபிரி தீங்கினென்னை
    கொல்லோ விளையுமென் றேங்கிய நாமனு கூலமுற
    நல்லோர் வருமென்று சொற்றிடக் கேட்டன நம்பதிக்கே. 5

    நற்றாய் கேட்டுத் தலைமகனுளங்கோள்
    வேலனை வினாதல்.
    370.
    நற்றயல் பாகர் கலைசைத் தியாகரை நாடியெல்லாம்
    கற்றறி வேல கடுஞ்சுரம் போய்வருங் காதலவன்
    உற்றவென் பொன்னையென் னில்லங் கொணருங்கொ லூழிற்றன்னைப்
    பெற்றநற் றாய்தன் மனையுய்க்கு மோசொல் பிழையின்றியே. 11

    24. தன்மனை வரைதல்.


    மணிமொழி நற்றாய் மணனயர் வேட்கையிற்
    செவிலியை வினாதல்
    371.
    தீவண மேனிச் சிதம்பர வீசர் திருக்கலைசைப்
    பூவண மாதைநம் மாமனைக் கேவந்து பூஞ்சிலம்பர்
    காவண மிட்டுக் கலியாணாஞ் செய்தற்கென் கண்ணனையாய்
    ஆவணஞ் சென்றினிக் கூறினென் னாங்கவ ரன்னையர்க்கே. 1

    செவிலிக்கு இகுளை வரைந்தமை உணர்த்தல்
    372.
    எம்மின்ன றீர்க்குஞ் சிதம்பர வீச ரெழிற்கலைசை
    நம்மினத் தார்க்குநற் றாய்க்குமன் னேயென்னை நாஞ்சொல்லுவோம்
    அம்மின் னிடைமட வாளைநன் னாளி லதுலரவர்
    தம்மின் மணம்புணர்ந் தாரென்று தூதர்கள் சாற்றினரே. 2

    வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல்.
    373.
    உற்றார்கள் வந்துநின் றாற்ற மணநல முங்கணெய்தப்
    பெற்றா யிழைதென் கலைசைத் தியாகர் பிறங்கலன்னே
    நற்றாயைக் காணிய விம்மனைக் கேயந்த நாதன்பின்னே
    பற்றாய் வருவளென் றொற்றர்முன் வந்து பகர்ந்தனரே. 3

    தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை
    நுமர்க்கியம்பு சென்றென்றல்.
    374.
    கங்கைச் சடையர் கலைசைத் தியாகர் கமலமலர்ச்
    செங்கைத் தழல்புரை தீமுன்ன ரெல்லாச் சிறப்புமுற
    மங்கைக் கியான்மங் கலநாண் புனைந்தது வார்குழலாய்
    சங்கைப் படாதுன் றமரான யாவர்க்குஞ் சாற்றுகவே. 4

    தானது முன்னே சாற்றினன் என்றல்.
    375.
    பாண்டரங் கஞ்செய் கலைசைத் தியாகர் பழமலைமேல்
    ஆண்டகை யாயெம் மணங்கைக் கொணர்ந்துன் னணிமனைவாய்க்
    காண்டகு முன்பெருங் கேண்முன்னர் நீமங் கலத்திருநாண்
    பூண்டதன் றேயறிந் தன்னைக் கியம்பினன் பூரிக்கவே. 5

    25. உடன்போக்கிடையீடு.


    நீங்குங் கிழத்தி பாங்கியர்தமக்குத் தன்
    செலவுணர்த்திவிடுத்தல்.
    376.
    உத்தமர் போற்றுங் கலைசைத் தியாக ருயர்வரைமேல்
    நத்தம ரத்தனை யொத்தவிக் காளைபின் னான்வனத்தில்
    வித்தக மாக நடக்கின்ற வாறு விரைந்தந்தணீர்
    சித்த மருண்டழு மென்னாய முன்சென்று செப்புமினே. 1

    தலைமகள் தன் செலவு ஈன்றாட்கு உணர்த்திவிடுத்தல்.
    377.
    பாரேழுந் தந்த கலைசைத் தியாகர் பதம்பணிந்தே
    ஓரேழ் பிறப்பு மொழிதவத் தீரும்மை யான்றொழுவேன்
    போரே றனைய வனைகழ லானொடு பொங்கழற்கான்
    தேரேறிச் செல்வதெந் தாய்க்கங்ங னேசென்று செப்புமினே. 2

    நற்றாய்க்கு அந்தணர் மொழிதல்.
    378.
    மயலேறு சிந்தை மலைகிழ வோயிள மானனையாள்
    இயலே றரைய னொருவன்பின் னேகடத் தேகினள்காண்
    புயலேறு மாடக் கலைசைத் தியாகப் புனிதனருட்
    செயலேயல் லாற்பின்னை வேறில்லை யென்றிரு தேற்றமுற்றே. 3

    நற்றாய் அறத்தொடுநிற்றலிற் றமர் பின் சேறலைத்
    தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல்.
    379.
    மாயம் புகுந்த மனத்தர்க் கரியர் மலமகன்றோர்
    நேயம் புகுந்த கலைசைத் தியாகர் நெடும்பொருப்பா
    சாயஞ் சிலையொடு நாணொலி யேற்றொடுத் தாயுடனே
    வாயம்பு பெய்முகில் பொற்றேர் மலையை வளைக்கின்றதே. 4

    தலைவியைத் தலைவன் விடுத்தல்.
    380.
    தெழியா வருபடைக் கானவ ரேலவர் தீங்குயிர்வேல்
    விழியாய் நடுக்கப் படுபழி யொன்றினில் வீட்டிடுவேன்
    ஒழியா துறுநும ரேற்கொலைக் கஞ்சுவ லோர்ந்துசெல்க
    அழியாத சீர்த்திக் கலைசைத் தியாக ரணிவரைக்கே. 5

    தமருடன் செல்பவள் அவன் புறநோக்கிக்
    கவன்று அரற்றல்.
    381.
    விரவிய பேமற வெற்புறங் காத்தலின் விண்ணுமண்ணும்
    பரவிய தாளர் கலைசைத் தியாகர் பழமறையாம்
    புரவியின் வாழிய வெம்மையர் தோன்றப் புறங்கொடுத்த
    திரவிய மாமலை போற்புய வீரன்பொற் றேர்ப்பரியே. 6

    26. வரைதல்.

    அந்தணரையுஞ் சான்றோரையும் முன்னிட்டு
    வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல்.
    382.
    சகநாத ரெங்கள் கலைசைத் தியாகர்தந் தண்டகநாட்
    டகநா யகனென யார்மணம் வேட்டவ ராய்ந்திடினான்
    முகனா ரெனமறை யோராசி கூறலின் மொய்ம்பினிவன்
    குகனா விவடெய்வ யானையு மாக்கண்டு கொண்டனமே. 1

    27. இல்வாழ்க்கை.


    தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்.
    383.
    நன்னுதற் பாவையுன்வல்லவ நீர்மையை நானென்சொல்வேன்
    மின்னுதற் கண்ணர் கலைசைத் தியாகர் வியன்கிரிமேல்
    என்னுழைப் பால்வந்த தென்னையந் நாண்முத லின்றளவும்
    உன்னுழைப் பாலல்ல வோபெற் றுளோமிந்த வூதியமே. 1

    தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.
    384.
    மூவா மருந்தென்ன முன்சொன்ன வஞ்சின முற்றுவித்தே
    ஓவா வலருட னென்கட் புனலு மொழித்தனையால்
    காவார் கலைசைத் தியாகேச ருஞ்சிவ காமியும்போல்
    நீவாழி யெம்பெரு மானிவ ளோடென்று நீணிலத்தே. 2

    வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை பாங்கி தலைவியை
    வினாதல்.
    385.
    அந்தமி ழின்சுவை போன்மொழி யாய்மன்ற லாற்றுபரி
    யந்தமெவ் வாறெவ்வ மாற்றி யிருந்தனை யன்றுவந்த
    அந்தகற் காய்ந்த கலைசைத் தியாகருக் கன்பிலர்தாங்
    கந்தமில் பாவப் பொறையின்மின் னார்சொல் லலர்சுமந்தே. 3

    தலைவி வருந்தாதிருந்ததற்குக் காரணம் கூறல்.
    386.
    அற்புதக் கூத்தர் கலைசைத் தியாகர்மெய் யஞ்செழுத்தாம்
    சொற்புனை யாலன்பர் துன்பக் கடலைத் தொலைப்பதுபோல்
    நற்பிணை யற்குழ லாய்துயர் வெள்ளநம் மன்பர்தந்த
    கற்புணை யாலுநின் ‍சொற்புணை யாலுங் கடந்தனனே. 4

    பாங்கி தலைவனை வரையுநாளளவும் நிலைபெற
    ஆற்றியநிலைமை வினாதல்.
    387.
    படைகொண்ட கையர் கலைசைத் தியாகரைப் பற்றினர்போற்
    றொடைகொண்டகோதையை நீயின்றைவாயினுந்துய்த்திடலாற்
    புடைகொண்டு பண்டு பிரியுந் தொறுமப் பொழுதிடையில்
    விடைகொண்டதோநின்றதோ விவண்மேல்வைத்தவேட்கையதே. 5

    பாங்கி மணமனைச்சென்ற செவிலிக்கு இருவரன்பும் உணர்த்தல்.
    388.
    ஏக னநேகன் சிதம்பர வீசன் கலைசையினம்
    மோகன வல்லி முலைமுகை காட்டி முகமலர்ந்து
    பாகம் பதிந்திதழ்த் தேன்றர லாலன்னை பார்த்திபன்றான்
    ஆகங் குளிரவண் டாயுண் டுவக்கு மனுதினமே. 6

    பாங்கி இல்வாழ்க்கை நன்றென்று செவிலிக்குரைத்தல்.
    389.
    காளிதன் கேள்வர் கலைசைத் தியாகர் கருணைமலர்த்
    தாளித மாத்தொழு வார்க்கன மூட்டித்தற் காத்துநின்வேய்த்
    தோளிதற் கொண்டவற் பேணி யவரைச் சுவைதருபாற்
    பாளித நாளு மிசைவித்துப் பூரிக்கும் பான்மையளே. 7

    மணமனைச்சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியல்
    நற்றாய்க்கு உணர்த்தல்.
    390.
    சிவமுத லாந்தென் கலைசைத் தியாகர் சிலம்பினின்மான்
    அவமுந் திரியு முறாமனை வாழ்க்கைக்கற் பாற்கிரக
    நவமுநன் றாகவென் றானன்மை யேதரு நந்தியபா
    தவமுந் தழைகவென் றாற்றளிர் தோன்றித் தழைத்திடுமே. 8

    செவிலி நற்றாய்க்கு நன்மனைவாழ்க்கைத் தன்மை யுரைத்தல்.
    391.
    அல்லாருங் கண்டர் கலைசைத் தியாக ரசலத்திலுன்
    இல்லாரும் வாழ்வினி னல்லாண் மனைச்செல்வ மெண்மடங்கால்
    நல்லாய் நினக்கன்ப னீயானொப் பாதுமந் நாதனம்மான்
    எல்லாளில் வேலை வருவார்க் கடுவ திடுவதுமே. 9

    செவிலி நற்றாய்க்கு இருவர்காதலையும் அறிவித்தல்.
    392.
    பின்னுஞ் சடையர் கலைசைத் தியாகர் பிறங்கலன்னாய்
    பொன்னும் பணியு மிருள்வெளி சொற்பொருள் போற்பிறர்கள்
    உன்னு மபேத முதன்மூன்று மன்றிநம் முத்தமியும்
    மன்னும் பிரிவின்றி யேயொன்ற தாயுற்று வாழ்குவரே. 10

    28. பரத்தையிற்பிரிவு.


    காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது இதாமல்
    விறைவிக் கென்றல்.
    393.
    தண்ணாறு சூடுங் கலசத் தியாகர் தடங்கலைசை
    உண்ணால் வகையுறுப் போடும் பவனிநல் லூரன்வரப்
    பண்ணா லவிநயஞ் செய்மாதர் கொங்கை யிபங்களிற்றன்
    கண்ணான பாகுற லாலாகு மாதயர் காரணமே. 1

    தனித்துழி இறைவி துனித்து அழுதிரங்கல்.
    394.
    பந்தத்தை நீக்குங் கலைசைத் தியாகரைப் பற்றிலர்போற்
    சந்தத் தடவரை மார்போன் பிரியத் தனித்திரங்கிக்
    கந்தற் றழுதங்கந் தங்கம தாகவிக் கங்குலென்போல்
    இந்தத் துயருறு வாருமுண் டோசில ரேழையரே. 2

    ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல்.
    395.
    நவசத்தி கட்கு முரியோன் சிதம்பர நாதனருட்
    சிவசத் தமலன் கலைசைநல் லூரன் றினமுமன்பாம்
    கவசத்தை யிட்டுனைக் காக்கவு நீவன் கலக்கஞ்செய்வி
    திவசப்பட் டேங்குநர் போற்றேம்பு மாறென் றிருநுதலே. 3

    இறைவன் புறத்தொழுக்கு இறைமகள் உணர்த்தல்.
    396.
    அஞ்சா னனங்கொள் கலைசைத் தியாகருக் கன்புசெய்யார்
    நஞ்சா லெனவிங்கு நானைய மார்ப நயந்தளித்தான்
    செஞ்சாலி சாய்தர மேதிப் பகட்டினஞ் சென்றயலே
    பைஞ்சா யருந்தும் வயலூரன் சேரிப் பரத்தையர்க்கே. 4

    தலைவியைப் பாங்கி கழறல்.
    397.
    ஓங்கார ரூபர் கலைசைத் தியாக ருயர்வரைதன்
    பாங்காருங்கார் வறுங்கான்போய்ப்பொழிந்து பின்பாங்குறினும்
    தோங்காணு மாறுள தோவணங் கேநந் துணைவரிந்நாள்
    ஆங்காடு நீரிஃதென்றனின் கற்புக் கழகல்லவே. 5

    தலைவி செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி
    அவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறல்.
    398.
    நலத்தினி னாட்டுங் கலசத் தியாகர் நறுங்கலைசைத்
    தலத்தினின் மேவுந் தளிரியு லீரறந் தாங்கியதொல்
    குலத்திருக் காவினிற் றோன்றிய தோர்கொடி கூறுமிவ்வூர்ப்
    புலத்தினி லெங்கு மலரேறப் பெற்ற புது மையென்னே. 6

    பரத்தையர் கண்டு பழித்தல்.
    399.
    ஆரிய ரெங்கள் கலசத் தியாக ரருட்கலைசை
    ஊரியற் செவ்வ லரிமாலை நீலங்க ளூடலர
    நேரிய வண்டின் குழாஞ்சுமந் தேமுன் னிலவுதல்போற்
    சேரியின் வாய்வந்து நின்றா ரிறைமனைச் சேடியரே. 7

    பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின்
    தலைமகன் வரவுகண்டு உவந்து வாயில்கள் மொழிதல்.
    400.
    காவும்பர் பம்புங் கலைசைத் தியாகர் கருணையைப்போல்
    மேவும் பிராட்டி விடுமேவன் மாதரை வித்தமிக்க
    வாவும் பரத்தையர் சேரியிற் கண்டு மணிகொழித்துத்
    தாவுந் திரைப்புன லூரன்வந் தான்பெருந் தன்மையிதே. 8

    தலைமகன்வரவு பாங்கி தலைவிக்கு உணர்த்தல்.
    401.
    பணமா சுணத்தர் கலைசைத் தியாகர்க்கன் பற்றவர்போல்
    மணமாலை மார்பர் புறத்தா றுறினும் வழாமலொரு
    கணமாத் திரையினிற் றேர்மீது வந்துன் கடையினின்றார்
    குணமா வதுகொடி யேகுறை தீர்ந்தெதிர் கொள்வதுவே. 9

    தலைவனைத் தலைவி எதிர்கொண்டு பணிதல்.
    402.
    ஆடல்வை வேலன்பர் சேர்ந்திடி னின்ப மலபிறவா
    வாடலிங் கியானுற நீங்கின் வயாவும் வரம்பிலவாம்
    கோடலங் கையாய் கலைசைத் தியாகரைக் கூடலர்போல்
    ஊடலெவ் வாறெனக் கெய்தும் பசலை யொளிக்கையிலே. 10

    புணர்ச்சியின் மகிழ்தல்.
    403.
    அந்நாட் கலைசைத் தியகே சருமற் றரியயனும்
    மின்னார் பலர்தமைக் கொண்டின்ப மெய்தினர் மேவொருத்தி
    தன்னாற் சுகமமை யாமலன் றோவித் தனிக்கொம்பர்வாய்
    இன்னா ரமுதமுண் டானந்த மேலிட் டிருந்தனனே. 11

    வெள்ளணி அணிந்து விடுத்தல்.
    404.
    தோயுந்தண் பாலி நுரையா மெனும்வெள்ளைத் தூசுபுனைந்
    தாயுங்கற் பாரமுத் தாரமுஞ் சூடி யநங்கனறக்
    காயுங் கனற்கட் சிதம்பர வீசர் கலைசையின்கட்
    சேயுத யஞ்சொல வூரனுக் கோடினர் சேடியரே. 12

    வெள்ளணி அணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில் வேண்டல்.
    405.
    மலவிகன் மாற்றுங் கலைசைத் தியாகரை வாழ்த்துமென்பாற்
    சிலவித னங்களைப் பாராட்டி யின்று சிறக்கணிக்கும்
    புலவியை நீவணங் கித்தணி சென்றுநின் போதனையால்
    நிலவிய நற்குண நற்செய்கை மிக்க நிரைவளைக்கே. 13

    தலைவி நெய்யாடியது இகுளை சாற்றல்.
    406.
    கடல்வண்ண னேத்துங் கலைசைத் தியாகர் கருணையினால்
    அடலயில் வேற்கண்ணி பாலற் பயந்துநெய் யாடினளால்
    திடமுற வாங்கவண் மெய்யாற வேண்டுஞ் செறிதுனியும்
    மிடலுடை யாவென்றி வீரா தணியவும் வேண்டுமின்றே. 14

    தலைவன் தன்மனத்து உவகைகூர்தல்.
    407.
    செங்கையி லாடுங் கலைசைத் தியாகர்பொற் சேவடியை
    அங்கையி னாற்றொழு நானின்று காண்ப னமுதிறைக்கும்
    கொங்கையு மேந்து குழவியு நெய்யிட்ட கோலமும்பூ
    நங்கைத னீர்மையும் பச்சுடம் பான நலத்தையுமே. 15

    தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றல்.
    408.
    உலகாள மைந்தன் பிறந்தன னென்னுமு னொல்லைவந்துன்
    இலகா டகமனை வாயினின் றாருன் னிடத்தைவிட்டு
    விலகாநின் றாலுங் கலைசைத் தியாகர்தம் வெற்பினல்லோர்
    நலகால் விருப்ப மொழிவர் கொலோவெங்க ணாயகியே. 16

    தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தல்.
    409.
    கலைப்பா வலர்சூழ் கலைசைத் தியாகரைக் காண்டகுநீர்
    விலைப்பா வையர்மனைக் கேபோ மவரிட்ட மென்களபம்
    முலைப்பாலும் மார்பிடைப் பாயிற் கரையு முழுவதுமென்
    தலைப்பா லனையுஞ் சவலைய தாக்குத றக்கதன்றே. 17

    தலைவி பாணனை மறுத்தல்.
    410.
    பொன்மேடை மாடக் கலைசைத் தியாகர் புரக்குநன்னாட்
    டன்மேவு கூந்தலெங் கைமயி லாடவவ் வண்ணன்முன்னே
    இன்மேக ராகக் குறிஞ்சியைப் பாடங்ங னிங்ஙனநீ
    வன்மேதி தின்னிநில் லேல்போக போக மறுமனைக்கே. 18

    வாயில்மறுக்கப்பட்ட பாணன் கூறல்.
    411.
    செம்மேனி யப்பர் கலைசைத் தியாகரைச் சிந்தைசெயார்
    தம்மேல் வினைவண்டு சூழ்ந்தெனக் கைக்கொண்டு தானெறிய
    எம்மேல் விழுந்தகல் லிம்மேட தாயிற் றினிக்கல்லெடேல்
    அம்மே யுனைவந் தனைபுரி வேன்சிவப் பாறுகவே. 19

    விறலில் வாயில் மறுத்தல்.
    412.
    மறலியைக் காய்ந்த கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போல்
    அறலிழி யக்கண் சுருட்டிக் கிடந்தியா னயர்வுறுங்கால்
    விறலியிங் கெய்திச் சுருட்டி யெடுக்கும் விதியளதோ
    திறலிறைக் கானமின் னார்செவிக் கேசென்று தென்னிசையே.

    கூத்தர்வாயில் மறுத்தல்.
    413.
    சிதம்பர்க் கரியர் கலைசைத் தியாகர் திருநடங்கண்
    டிதம்பெற் றிலாரி னிருப்பேற்குன் கூத்தினி தாகுங்கொலோ
    நிதம்பத்தை விற்றுய்யும் பூவையர் பூரிக்க நீயங்குற்றுன்
    மதம்பெற்ற வாட்டினைக் காட்டுக கூத்த மகிழ்நர்முன்னே. 21

    பாங்கிவாயில் மறுத்தல்.
    414.
    மதலையைச் சூடுங் கலசத் தியாகர் வருமுதலில்
    மதலையை யேந்தி கலைசைக் கணிகையர் மார்பிடையின்
    மதலையைக் கைக்கொண் டுவப்புறு வாரென் வயிற்றுதித்த
    மதலையைக் காணவின் றெய்தின்மின் னேயவர் வாஞ்சைநன்றே. 22

    விருந்தொடு வந்துழிப் பொறித்தல் கண்டு தலைமகன் மகிழ்தல்.
    415.
    இண்டைச் சடையர் கலைசைத் தியாகர்க் கினியதிருத்
    தொண்டைத்தொன்னாடனையாடுனிதீர்ந்திவடொண்டைச் செவ்வாய்க்
    கண்டைப்பொருமின்சொற்கேட்டிளமூரலுங் கண்கள்கொண்டென்
    பண்டைத் தவநல் விருந்துரு வாய்வரப் பார்த்தனமே. 23

    தலைவன் சீறேலென்றவள் சீறடி தொழுதல்.
    416.
    ஒறுத்தார்க் கொருபொழு தின்பம் பொறுமை யுடையவர்நீர்
    நிறுத்தா ருரைப்பர் கலைசைத் தியாகர்க்கு நேசம்வையார்
    செறுத்தா லெனக்கதஞ் செய்யேல் பிழைபல செய்திடினும்
    பொறுத்தா ரருள்செயுன் சிற்றடி பற்றினன் பொற்றொடியே. 24

    ஈது எங்கையர் காணின் நன்றன்றென்றல்.
    417.
    தங்கச் சிலையர் கலைசைத் தியாகர்தழைந்துசந்த
    தங்கச்சி மேயவர் நாடுடை யீர்செழுந் தண்ணறுஞ்சந்
    தங்கச் சிடுந்தனந் தோயவென் றாடலை தாங்குதலென்
    தங்கச்சி மைக்கெண்டை கண்டா லுமக்குச் சழக்குறுமே. 25

    அங்கவர் யாரையும் அறியேனென்றல்.
    418.
    வடிவாள் விழிவடி வேதுனி தீர வருட்டியுன்சீ
    றடிவாரி சம்பிடித் துந்தணி யாவிதெ னன்பர்வினை
    கடிவார் கலைசைத் தியாகேசர் தோய்சிவ கங்கையிலே
    படிவார் படிய நினைப்பர்கொல் புல்வாய்ப் பனிப்புனலே. 26

    காமக்கிழத்தி வாயில் வேண்டல்.
    426.
    திருப்பங் கயத்தடஞ் சூழுங் கலைசைத் தியாகர்வெற்பர்
    விருப்பங் கயலிடத் தேசென்று மீள்கினு மேதகுநீ
    உருப்பங் கயமை யுடையோரிற் செய்த லுனக்கழகே
    பொருப்பங் கயமருப் பேர்முலைச் செல்வி பொறுத்தருளே. 34

    பாங்கி வாயில்நேர்வித்தல்.
    427.
    ஆமேவு பாலனை யாரணி மாத ரவர்க்கருந்தும்
    பூமேவு மன்னமன் னார்கழற் காளையர் பூங்குழையாய்
    நீமேலெங் கும்பசப் பூரநின் றேங்குமிந் நீர்மையென்னே
    நாமேவி யேத்துங் கலைசைத் தியாகர்நன் னாட்டகத்தே. 35

    மகனும் ஆற்றாமையும் வாயிலாகத் தலைமகன்
    வந்துழித் தலைமகள் எதிர்கோடல்.
    428.
    நெறியாய்ந்த மேலவர் வேட்கைக் கடும்பரி நெஞ்சுறினும்
    சிறியா ரிடத்திற் செலுத்துவ ரோசிவ காமியிடம்
    பிறியாமல் வாழுங் கலைசைத் தியாகர் பெருவரங்கொள்
    பொறியாள ரான புனலூரர் காமம் புகல்வதன்றே. 36

    தலைமகன் நீங்கியபின் வந்த பாங்கியொடு தன் மகனைப் புகழ்தல்.
    429.
    கலனாகங் கைக்கொள் கலசத் தியாகர் கலைசையன்னாய்
    கலநாரங் கான்றவென் கண்ணைத் துடைத்தன்பர் காமுறமங்
    கலநாளு மோங்கிடத் தந்தானென் மைந்தனிற் காந்தைக்குநன்
    கலனா வதுநன்மக் கட்பே றெனும்பயன் கண்டனமே. 37

    தலைவி தலைமகனைப் புகழ்தல்.
    430.
    ஒருகேடில் கொம்பர் கலசத் தியாக ருறைகலைசைக்
    கொருகே சரியன்ன வன்பர்நம் பாலன் றுயிரின்வைத்த
    ஒருகேண்மை யின்று மொருவாமற் கூடி யுவப்புறலால்
    ஒருகே ளிருமில்லை கண்டாய்கொண் டானி னுலகிடத்தே. 38

    பாங்கி தலைவியைப் புகழ்தல்.
    431. பாலிநன் னாடர் கலைசைத் தியாகர் பதம்பணியார்
    போலிவர் செய்பிழை யெல்லா மறந்து புரிவுடனே
    வாலிதின் மிக்கு மகிழ்ந்தெம் பிராட்டி வணங்குதலாற்
    சாலியும் போற்றுந் தவமுடை யாளென்று சாற்றுவனே. 39

    29. கல்வியிற் பிரிவு.


    கல்வியிற்பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
    432.
    பானற்கண் ணாய்தென் கலைசைத் தியாகர் பரிந்தளிக்கும்
    ஞானக்கண் போலுநற் கல்விகண் டாயித்தை நாடிக்கல்லார்
    ஈனக் கணிகையர் நெஞ்சவஞ் சத்தி னிருள்புதைப்ப
    ஊனக்கண் கொண்டிங் குழிதரு வார்பய னொன்றிலரே. 1

    பாங்கி விலக்கல்.
    433.
    ஒருதா துவைமுன் பலதாது வாக்கி யுயிரளித்தே
    விருதாளுஞ் சண்பையர் மன்போ லிவளுயிர் மீட்கும்வித்தை
    கருதார்க் கரிய கலசத் தியாகர் கலைசைமன்னா
    இருதாறும் வைகியுங் கற்பா யெனிற்செல்க விப்பொழுதே. 2

    தலைவன் பாங்கியை உடன்படுத்தல்.
    434.
    இடையற்ற கல்வியிற் பாய்மன மோர்நிலை யெய்துதற்கே
    தடையற்ற கல்வி யொருதலை யாப்பெறத் தக்கதுமால்
    நடையற் றவர்வாழ் கலைசைத் தியாகர்நன் னாடனையாய்
    கடையற்ற கல்வியென் றேயேவ லாம்வினை கட்டுரையே. 3

    பாங்கி உடன்படுதல்.
    435.
    வல்வினை தீர்க்கு மருந்தாய்த் தெரிந்திட வல்லவர்க்குத்
    தொல்விதி யேய்ப்ப வெழுமைப் பிறப்புந் தொடர்ந்து தவும்
    கல்வியென் றாலஃ தியாவருங் கற்குங் கடனுளதே
    நல்விதி போற்றுங் கலைசைத் தியாகர்நன் னாட்டகத்தே. 4

    தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்.
    436.
    வயவா ணயனி கலசத் தியாகர் மகிழ்ந்தருள்பங்
    கயவாவி சூழுங் கலைசையர் போற்கல்வி கற்றிலர்தாம்
    பயவாக் களரனை யாரென்று கூறியுன் பான்மிகுந்த
    தயவா ரிதியைவைத் தார்படர்ந் தாரத் தழற்சுரமே. 5

    கார்ப்பருவம் கண்டு தலைவி வருந்தல்.
    437.
    மடலவிழ் கோதை கலைசைத் தியாகர்முன் மார்க்கண்டர்க்கா
    மிடலடு கூற்றுவ னார்த்துவந் தென்னவிவ் வேலையுண்ணாப்
    படலமை மேகமென் னாருயிர் சோரப் பரந்துங்கல்விக்
    கடலருந் தச்சென்ற மேகநம் பால்வரக் காண்கிலமே. 6

    தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.
    438.
    அத்தி நிசாசரர் தாமே கடைய வமிர் தமண்மேல்
    அத்தி பெயர்க்கவந் தார்த்தா லெனக்கா ரதிர்ந்து றலால்
    அத்திவெண் டாமர் கலைசைத் தியாகர்வெற் பண்ணல்பொற்றேர்
    அத்திரம் போற்கண்ணி யின்றே வருநம் மணிநகர்க்கே. 7

    30. காவற்பிரிவு.


    தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
    439.
    தொல்லற மோங்குங் கலைசைத் தியாகர் சுருதிவழி
    நல்லறங் காக்கவுந் தீதற நீக்கவு நானிலக்குச்
    செல்லறங் காமலுஞ் செல்லு தலைச்செய்வ தேகடனாம்
    அல்லற னேர்குழ லாய்நாடு காவ லரசருக்கே. 1

    தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்.
    440.
    அக்கா தரமொழித் தெல்லா வுயிர்க்கு மருள்கலைசைத்
    திக்காடை கொண்ட சிதம்பர வீசர் திருவருளால்
    இக்கா சினிமுற்றுங் காப்பான் றிருவுளத் தெண்ணினரால்
    மைக்காவி போல்வண்ணக் கண்ணெம் பிராட்டிநம் மன்னவரே.

    தலைவி கூதிர்ப்பருவம் கண்டு வருந்தல்.
    441.
    தீவல வேலன்ன கண்ணாய் கலைசைத் தியாகரருள்
    ஏவல்கொண் டேகொண்ட லெங்குஞ் சொரிந்துபி னெஞ்சிநின்ற
    தூவல்கொண் டேவட கால்சுற்று நாளிவை தோன்றலகொல்
    நாவலந் தீவெனு மிப்படிக் காவ னயந்தவர்க்கே. 3

    தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.
    442.
    ஆவினஞ் சேற்குங் கலைசைத் தியாகருக் கன்பிலர்போற்
    பூவினங் காய்வருந் தேனம் புரவலர் பூங்கழற்கால்
    மேவினர் கையுறை யும்பகைத் தார்தம் விருதுங்கொண்டே
    மாவினன் வையத்தில் வந்தெனத் தேர்மிசை வந்தனரே. 4

    31. தூதிற் பிரிவு.


    தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
    443.
    கூடாத வெம்பகை கூர்ந்திரு வேந்தர் கொடுஞ்சமரின்
    வீடாமற் சென்று விலக்குபு மீண்டு வருந்துணையும்
    சேடார் கலைசைத் தியாகேசர் தண்டக தேசமன்னாய்
    சூடா மணியனை யாடுளங் காவகை சொல்லுகவே. 1

    தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்.
    444.
    அத்தலை யோரிரு கோக்கண் மிகைகொண் டமரிழைக்கும்
    இத்தலை சேருங்கன் மாற்றுதல் வேண்டியங் கேகலுற்றார்
    பைத்தலைத் துத்திப் பணிமணி யல்குற் பணிமொழியாய்
    நத்தலை வாவிக் கலைசைத் தியாகர்நன் னாட்டன்பரே. 2

    தலைவி முன்பனிப்பருவம் கண்டு வருந்தல்.
    445.
    திருவேள்வி யந்தணர் செய்யுங் கலைசைத் தியாகர்நன்னாட்
    டிருவேற் றரசர் பகைமாற்றச் சென்றவ ரெண்ணிலர்கொல்
    உருவேற தாய்மங்கு றெற்கோட யாரு முடன்மறைக்க
    மருவேறு பற்பங்கள் பற்பங்க ளாக வரும்பனியே. 3

    தலைமகளைத் தோழி ஆற்றுவித்தல்.
    446.
    விரையுந்து கூந்தனல் லாயஞ்சல் வந்தனர் மேதினிதான்
    கரையும் படிமொழி முன்பனி நாட்கன மாமறைகள்
    இரையுங் கலைசைத் தியாகேச ருக்கன் பிலார்வினையே
    புரையும் பகைமன்னர் போர்தணிப் பானன்று போந்தவரே. 4

    32. துணைவயிற் பிரிவு.


    தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
    447.
    செருத்துணையாய் மன்னர்தெம்முனைச்சென்றியான் றிரும்பளவும்
    கருத்துணை யான கலைச்சைத் தியாகர் கதமிலருள்
    உருத்துணையாயன்பர்க்கின்பு செய்தாலென்ன வொண்ணுதலாய்
    திருத்துணை யான தெரிவைக் கறிவித்துத் தேற்றுகவே. 1

    தோழி மறுத்தல்.
    448.
    இரவல ரம்பிறைக் கும்மதன் ஞாட்புக் கிடைதருகொம்
    பரவல நீங்கத் துணையா யிருக்கிற் பலனல்லவோ
    அரவலங் காரர் கலைசைத் தியாகரை யாதரியாப்
    புரவலர் போர்த்துணை யாப்புறம் போகப் புகன்றவரே. 2

    தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்.
    449.
    கட்டாரி யாதி படைதிரித் தேமன்னர் காளையமேற்
    சுட்டா நடந்தனர் தோகையன் னாய்நமர் சூழ்ந்துசிறார்
    வட்டாடும் வீதிக் கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போல்
    ஒட்டா ரிடுநொச்சி யாதுகொ லாயங் குறுகின்றதே. 3

    தலைவி பின்பனிப் பருவம் கண்டு வருந்தல்.
    450.
    தெள்ளும் வெண் ணீற்றர் சிதம்பர நாயகர் தென்கலைசைப்
    புள்ளுஞ் சிறகிற் பெடையொடுக் கிப்பிள்ளை போற்றித்துயில்
    கொள்ளும் பனிதூங் கிரவிலித் துன்பங் கொளக்கருவில்
    தள்ளும் வினைசுமந் தேனைப்பெற் றாளன்னை தான்சுமந்தே. 4

    தலைவியை தோழி ஆற்றுவித்தல்.
    451.
    கும்பங் கொடுத்த கலைசைத் தியாகர் குளக்கணுஞ்சீ
    தம்பம் பிடவசை யுங்குளிர் வாடை தணந்தவர்க்குக்
    கம்பஞ்செய் பின்பனி நாளின்வந் தார்நண்பர் கவ்வையற
    அம்பந் தணைவிர லாய்துணை யாய்முன் னகன்றவரே. 5

    33. பொருள்வயிற் பிரிவு.


    தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
    452.
    ஆசையுண் டேல்வெம் படையுள தாகிடு மப்படையால்
    ஆசையெல் லாம்பெற் றரசாட்சி யைப்பெற லாகுமன்றே
    ஆசையி னானல் லறங்கள்செய் தின்பமுற் றாற்றிடலாம்
    ஆசை யறுக்குங் கலைசைத் தியாக ரருட்பணியே. 1

    பாங்கி மறுத்தல்.
    453.
    சினக்கோல மால்விடை யூர்திச் சிதம்பர தேவர்நந்த
    வனக்கோ விருந்த புரநாட் டதிப மணமகலாத்
    தனக்கோ கனக முழுவது மீபவ டரனிருக்க
    எனக்கோ வரையும்விட் டப்பா லிருப்பதற் கிச்சிப்பதே. 2

    தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்.
    454.
    தேசிக வாழ்வு சிறுபிறை வாணுதற் செல்வியன்பர்
    தேசிக மில்லெனி னில்லென்று பக்குவஞ் சேருயிர்க்குத்
    தேசிக ராய்வந் தருளுங் கலைசைத் தியாகர்வளர்
    தேசிக முங்கொண்ட தண்டக நாட்டகஞ் சென்றனரே. 3

    தலைவி இளவேனிற்பருவம் கண்டு வருந்தல்.
    455.
    மைக்குற்ற நீக்குங் கலைசைத் தியாகர் மணிநடங்கண்
    டெக்குற்ற முந்தவிர்ந் துய்பவர் போலுய்வ தெப்படி நாம்
    சொக்குற்ற பூண்முலை மாதே துணர்கொண்டு சூழநின்ற
    கொக்குச்சிக் கேறி யிருணிறப் பூங்குயில் கூவினவே. 4

    தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.
    456.
    தாரோதி மங்கை கலைசைத் தியாகர் தமிழ்வரைக்காற்
    றேரோன் வசந்தத் திருநா ளிதுசிறந் தோர்வம்மினென்
    றேரோங் கவன்சின்ன மார்ப்பது கேட்டிங்ங னிம்மெனுமுன்
    பேரோகை மிக்குவந் தார்பொருட் கேகிய பெற்றியரே. 5

    456. கால் தேரோன் - மன்மதன்; கால் - காற்று. அவன் சின்னம் - குயில்.
    திருவாவடுதுறைக் கோவை, 455-ஆம் செய்யுளைப் பார்க்க.


    தலைமகன் வந்து தலைமகளைக் கலந்துழி
    முகிலொடு மகிழ்ந்து கூறல்.

    457.
    மருவணி மாலையைம் பாலிசெம் பாலிகை மட்டருந்திப்
    பருவரல் வீட முயங்கினம் யாம்பர மன்கலைசை
    ஒருவன் சிதம்பர வீசனெல் லாவுயிர்க் குஞ்சுரக்கும்
    திருவருள் போற்சொரி திங்கண்மும் மாரி செழுங்கொண்டலே 6

    457. ஐம்பாலி. கூந்தலையுடையவளது; ஐம்பால் - கூந்தல்;
    "வண்டூதைம் பாலி" (286) என்றார் முன்னும். பாலிகை - கீழுதடு.
    மட்டு - தேன். பருவரல் வீட - துன்பம் கெட.
    கொண்டலே சொரி.

    கலைசைக் கோவை முற்றிற்று.


This file was last updated on 16 September 2006.
Feel free to send your comments and corrections to the webmaster.

Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page