|
Home > Scriptures & Stotras > Tamil
thiruvarutpa ahaval & vadivudai mANikka mAlai of Ramalinga AdikaL
திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது (in tamil script, unicode/utf-8 format)
thiruvarutpa ahaval & vadivudai mANikka mAlai
Author: Ramalinga Adigal (aka vaLLaLar) (?)
Etext input: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Etext proof-reading: Elango Sampandam, Chicago, USA
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view. .
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
C - Project Madurai 2002
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
thiruvarutpa / ahaval &
of Ramalinga Adigal
திருவருட்பா அகவல்
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அகவல்
=======================
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசாரருட்பெருஞ்ஜோதி
அருட்சிவ பதியாமருட்பெருஞ்ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ்ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ்ஜோதி
இனமின்றிகபரத்திரண்டின்மேற்பொருளாய்
ஆனலின்றோங்கிய வருட்பெருஞ்ஜோதி .10
உரைமனங் கடந்த வொருபெருவெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி
ஊக்கமு முணர்ச்சியுமொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ்ஜோதி
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ்ஜோதி
ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ்ஜோதி
ஐயமுந்திபு மறுத்தெனதுடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ்ஜோதி 20
ஒன்றென விரண்டென வொன்றிரண்டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ்ஜோதி
ஓதாதுணர்ந்திட வொளியளித்தெனக்கே
ஆதாரமாகிய வருட்பெருஞ்ஜோதி
ஒளவியமாதி யோராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ்ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ்ஜோதி
சுத்தசன் மார்க்க சுகத்தனிவெளியெனும்
அத்தகையச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி 30
சுந்தமெஞ்ஞான சுகோதய வெளியெனு
அத்துவிதச்ச்பை யருட்பெருஞ்ஜோதி
துயெகலாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி
ஞானயோகாந்த நடத்திருவெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
விமல போதந்தமா மெய்ப்பொருள்வெளியெனும்
அமல சிற்சபையி லருட்பெருஞ்ஜோதி
பொய நாதந்தப் பெருநிலைவெளியெனும்
அயசிற்றம்பலத் தருட்பெருஞ்ஜோதி 40
சுத்தவேதாந்தத் துயமேல்வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
சுத்த சித்தாந்த சுகப்பெருவெளியெனும்
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
தகரமெய்ஞ்ஞானத் தனிப்பெருவெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ்ஜோதி
தத்துவாதீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திருவம்பலத் தருட்பெருஞ்ஜோதி
சச்சிதானந்தத் தனிப்பரவெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ்ஜோதி 50
சாகாக் கலைநிலை தழைத்திடுவெளியெனும்
ஆகாயத் தொளி ரருட்பெருஞ்ஜோதி
காரண காயங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
வேதா கமங்களின் விளைவுகட்கெல்லாம்
ஆதாரமாஞ்சபை யருட்பெருஞ்ஜோதி
என்றாதிய சுடர்க் கியனிலையாயது
வன்றாந்திருச்சபை யருட்பெருஞ்ஜோதி 60
சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந்திருச்சபை யருட்பெருஞ்ஜோதி
முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுடராஞ்சபை யருட்பெருஞ்ஜோதி
துயமுங்கடந்த சுகபூரணந்தரும்
அயசிற்றம்பலத் தருட்பெருஞ்ஜோதி
எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
இயற்கையுண்மை யதாயியற்கையின்பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி 70
சாக்கிரா தீதத் தனிவெளியாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
சுட்டுதற் காதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
அபயசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி
சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ்ஜோதி 80
மனாதிகட் காய மதாதீத வெளியாம்
அனாதி சிற்சபையி லருட்பெருஞ்ஜோதி
ஓதிநின்றுணர்ந்துணர்ந்துணர்தற்காதாம்
ஆதிசிற்சபையி லருட்பெருஞ்ஜோதி
வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமுதாஞ் சபை யருட்பெருஞ்ஜோதி
இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
கற்பம் பலபல கழியுனு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ்ஜோதி 90
எனைத்துந் துன்பிலா வியலளித்தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ்ஜோதி
பாணிப்பிலதாய்ப் பரவினோர்க் கருள்பு
ஆணிப் பொனம்பலத் தருட்பெருஞ்ஜோதி
எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்பு
அம்பலத்தாடல்செய் யருட்பெருஞ்ஜோதி
தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ்ஜோதி
எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ்ஜோதி ..100
வாடுதனீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல வருட்பெருஞ்ஜோதி
நாடகத் திருச்செய நவிற்றிடு மொருபே
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ்ஜோதி
கற்பனை முழுவதுங் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
இன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி
இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ்ஜோதி ..110
எம்மையு மென்னைவிட்டிறையும் பியா
தம்மையப் பனுமா மருட்பெருஞ்ஜோதி
பிறிவுற் றறியாப் பெரும்பொருளாயென்
னறிவுக் கறிவா மருட்பெருஞ்ஜோதி
சாதியு மதமுஞ் சமயுமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ்ஜோதி
தநுகர ணாதிக டாங்கடந்தறியுமோர்
அனுபவ மாகிய வருட்பெருஞ்ஜோதி
உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
அநுபவா தீத வருட்பெருஞ்ஜோதி ..120
பொதுவுணர் வுணரும் போதலாற் பித்தே
அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ்ஜோதி
உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ்ஜோதி
என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
தன்னையு வந்த வருட்பெருஞ் ஜோதி
ஓதியோ தாம றவெனக் களித்த
ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி ..130
பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி
மதனுற் றவண்ட வரைப்பினெங் கெங்கும்
அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
எப்பா மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
அப்பா மாகிய வருட்பெருஞ் ஜோதி
வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி ..140
எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோ ர்
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்தர் களெல்லாந் தழைத்திட வகம்புறத்
தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி ..150
பொதினும் பொதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
அதினு மாதா மருட்பெருஞ் ஜோதி
காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
இன்புறு சித்திக ளெல்லாம் புகவென்
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
அறவா ழியாந்தனி யருட்பெருஞ் ஜோதி
நானந் தமில்லா நலம்பெற வெனக்கே
ஆனந் தநல்கிய வருட்பெருஞ் ஜோதி ..160
எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
எங்கெங் கிருந்துயி ரெதெது வேண்டினும்
அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி ..170
சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
உபரச வேதியி னுபயமும் பரமும்
அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
மந்த்ண மிதுவென மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
எம்புயக் கனியென வெண்ணுவா தய
வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி ..180
செடியறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
துன்புறுத் தொருசிவ துய சுகந்தனை
அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழயதென்
றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி
ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி ..190
எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்
கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி
எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
இங்குறத் திந்துள மிளையா வகையெனக்
கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
பாருயப் புகெனப் பணித்தெனக் கருளியென்
ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
தேவியுற் றொளிர்தரு திவுரு வுடனென
தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி ..200
எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
ஆமா ரருளிய வருட்பெருஞ் ஜோதி
சத்திய மாஞ்சிவ சத்தியை யீந்தெனக்
கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
சாவா நிலையிது தந்தன முனக்கே
ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி ..210
சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி ணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
ஆசறத் தொத்த வருட்பெருஞ் ஜோதி
காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
ஆட்டியல் புயு மருட்பெருஞ் ஜோதி
எங்குல மெம்மின மென்பதொண் ணுற்றா
றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி ..220
எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திறள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
எண்டர முடியா திலங்கிய பற்பல
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி
வாழிநீடுழீ வாழியென் றோங்குபே
ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி ..230
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
எச்ச நினக்கிலை யெல்லாம் பெறுகவென்
அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி
நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி ..240
கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
ஞானசித் தியின்வகை நல்வி வனைத்தும்
ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி ..250
சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
ஏகசிற் சித்தியே யியாற வனேகம்
ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
இன்பசித் தியினிய லேக மனேகம்
அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி
எட்டிரண் டென்பன வியாமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி ..260
படிமுடி கடந்தனை பாது பாரென
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இந்தசிற் ஜோதியி நியாரு வாதி
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி ..270
கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
அருளொளி யென்றனி யறிவினில் வித்தே
அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
பரையொளி யென்மனப் பதியினில் வித்தே
அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி ..280
ஆய லகம்புற மகப்புறம் புறப்புறம்
ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
சூய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாயர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
எஞ்சே லகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி ..290
பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
வாய்தற் குத்தெனு மறையா கமங்களால்
ஆய்தற் காய வருட்பெருஞ் ஜோதி
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
யல்லா திலையெனும் மருட்பெருஞ் ஜோதி
நவையிலா வுளத்தி னாடிய நாடிய
வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி ..300
கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி
நன்றறி வறியா நாயினேன் றனையும்
அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி
நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி ..310
ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி
தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
உருவமு மருவமு முபயமு மாகிய
அருணிலை தொத்த வருட்பெருஞ் ஜோதி
இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி ..320
தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்
அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
பொருட்பத மெல்லாம் புந்துமே லோங்கிய
அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி
உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்
அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
சுருள்வி வுடைமனச் சுழலெலா மறுத்தே
அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி ..330
விப்போ டிகாறு வெறுப்புந் தவிர்த்தே
அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
அருட்பேர் தாத்துல கனைத்து மலர்ந்திட
அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி
உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி ..340
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
அனலினு ளனலா யனனடு வனலாய்
அனாற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
அனாறு மனலா யனனிலை யனலாய்
அனாற வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி ..350
புனாறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்
அனையெனப் பெருகு மருட்பெருஞ் ஜோதி
புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள விந்த வருட்பெருஞ் ஜோதி
விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..360
நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..370
மன்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
அண்ணுறப் புந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
அண்ணுறப் புந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..380
மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்
டண்ணுறப் புந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..390
மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்கரு வுயிர்த்தொகை வகைவி பலவா
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பொருள்பல வகைவி வெவ்வே
றண்ணுறப் புந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..400
மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீனிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீனிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீடைப் பூவியல் நிகழுறு திறவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீனிற் சுவைநிலை நிரைத்ததிற் பலவகை
ஆருறப் புந்த வருட்பெருஞ் ஜோதி ..410
நீனிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீடை நான்கிய னிலவுவித் ததிற்பல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீடை யடிநடு நிலையுற வகுத்தன
லார்தரப் புந்த வருட்பெருஞ் ஜோதி
நீடை யொளியியல் நிகழ்பல குணவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..420
நீனிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
ஆர்தரப் புந்த வருட்பெருஞ் ஜோதி
நீடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீடை நிலைபல நிலையுறு செயல்பல
ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீயல் பலபல நிறைத்ததிற் பிறவும்
ஆர்தரப் புந்த வருட்பெருஞ் ஜோதி ..430
தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..440
தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..450
தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
ஆயுறப் புந்த வருட்பெருஞ் ஜோதி ..460
காற்றிடை யசையியல் கலையிய யியல்
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினி றெயல் காட்டுறு பலபல
ஆற்றிலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யீயல் காட்டி யதிற்பல
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி .470
காற்றினி லிடைநடு கடைந்டு வகம்புறம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி ..480
காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யுணாயல் கருதிய லாதிய
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்
தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..490
காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பகுதியின் விவிய லணைவியல்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைக் கருநிலை விநிலை யருநிலை
அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..500
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை யொன்றே வித்ததிற் பற்பல
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை பலவே வித்ததிற் பற்பல
அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை யுயியல் வித்தியல் சித்தியல்
அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..510
வெளியி னனைத்தயும் வித்ததிற் பிறவும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
அகப்பட வ்மைத்த வருட்பெருஞ் ஜோதி ..520
கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தணியக நடுவொடு தலையனைந் தகக்கடை
அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை
அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு வதனா லகப்புற நடுவை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..530
அகப்புற நடுவா லணிபுற நடுவை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
புறநடு வதனாற் புறப்புற நடுவை
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புகலரு மகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..540
அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நெருப்பிடை நீரும் நீடைப் புவியும்
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே யிர்ப்பும்
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..550
புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கலைவெளி யதனைக் கலப்பறு சித்த
அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..560
சுத்தநல் வெளியைத் துசறு பரவெளி
அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..570
குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
துசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
அவ்வயி னமைந்த வருட்பெருஞ் ஜோதி ..580
ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..590
தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நாதமாம் பிரமமும் நாதவண் டங்களும்
ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..600
பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
அண்ணிற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..610
களவில கடல்வகை கங்கில கரையில
அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி
கடல்களு மலைகளு கதிகளு நதிகளும்
அடாற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்யிர்
அடாற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்யிர்
அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..620
ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
அன்றற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நுற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கோடியி லனந்த கோடிபல் கோடி
ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திய லொன்றா விளைவியல் பலவா
அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி ..630
விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தும் பதமும் விளையுப காப்பும்
அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..640
முளையதின் முளையும் முளையினுண் முளையும்
அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஒற்றுமை வேற்றுமை யுமைக ளனைத்தும்
அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பொருணிலை யுறுப்புயல் பொதுவகை முதலிய
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி ..650
உறவினி றவும் உறவினிற் பகையும்
அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகையினிற் பகையும் பகையினி றவும்
அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..660
அருவினுள் ளருவும் மருவதி லருவும்
அருளிய லமைந்த வருட்பெருஞ் ஜோதி
கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உருவதி லருவும் மருவதி ருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..670
பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்
அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்
அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மென்மையின் மன்மையும் மென்மையில் வன்மையும்
அன்மையிற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி
அடியினுள் ளடியும் மடியிடை யடியும்
அடியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்
அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..680
முடியுனுண் முடியும் முடியினின் முடியும்
அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை
அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற
அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..690
பாடை வேர்வையிற் பையிடை முட்டையில்
ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி ..700
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..710
பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணுயல்
அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உனற்கரு முயிருள வுடாள வுலகுள
வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஓவுறா வெழுவகை வுயிர்முத லனைத்தும்
ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..720
பைகளின் முட்டையிற் பானில் வேர்வினில்
ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
முட்டைவாய்ப் பயி முழுவுயிர்த் திரள்களை
அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..730
உடாறு பிணியா யிருடல் கெடாவகை
அடாறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
உயிருறு முடலையு முடாறு முயிரையும்
அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..740
வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயர்
ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
இன்புற சத்தியா லெழின்மழை பொழிவித்
தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்
அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..750
அகப்புற வமுதளித் தைவர்ரா திகளை
அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
தருமக வமுதாற் சத்திசத் தர்களை
அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
ஆறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
விச்சையை யிச்சயை விளைவித் துயிர்களை
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி ..760
கலையறி வளித்துக் களிப்பினி யிரெலாம்
அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை
அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி ..770
எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
சொல்று மசுத்தத் தொல்யிர்க் கவ்வகை
அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..780
எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அண்டத் துசையு மகிலத் துசையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
பிண்டத் துசையும் பேருயிர்த் துசையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
உயிருறு மாயையி னுறுவி வனைத்தும்
அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
உயிருறு மிருவினை யுறுவி வனைத்தும்
அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி ..790
காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
பொங்குற வெகுளிப் புடைப்புக ளெல்லாம்
அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி ..800
நால்வயிற் றுசும் நண்ணுயி ராதியில்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கால்
ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கால்
ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
தத்துவச் சேட்டையுந் தத்துவத் துசும்
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி ..810
சுத்தமா நிலையிற் சூழுறு விவை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
கரைவின் மாமாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையாற் பரவெளி யதனை
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..820
பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திறையாற் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..830
திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளி
அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
அனுக்கிர கம்பு யருட்பெருஞ் ஜோதி
விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி ..840
சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி ..850
சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் மருட்பெருஞ் ஜோதி
படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி
காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி
அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்
அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..860
தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
ஐந்தொழி லாதிசெ யருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி
செத்தவ ரெல்லாஞ் சித்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி ..870
செத்தவ ரெழுகவெனச் செப்பியாங் கெழுப்பிட
அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே
அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது
ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே
ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல
ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே
ஒன்றினு லொன்றுள வொன்றினி லொன்றில
ஒன்றுற வொன்றிய வொன்றெனு மொன்றே ..880
களங்கநீத் துலகங் களிப்புற மெய்நெறி
விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே
மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே
எழுநிலை மிசையே யின்புரு வாகி
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே
நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே
ஏகா தசநிலை யாததி னடுவே
ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே ..890
திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
இரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே
எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே
மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே
தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே ..900
அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
உயாற விளங்கு மொருதனிப் பொருளே
அருவினு ளருவா யருவரு வருவாய்
உருவினுள் விள்ங்கு மொருதனிப் பொருளே
அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்
உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே
பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா
யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே ..910
ஆடுறு சித்திக ளறுபத் துநான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே
கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே
வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே
பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க
உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே ..920
பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே
பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே
பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே
பரங்கொள் சிற்பரமே பரஞ்செய் தற்பரமே
தரங்கொள் பொற்பரமே தனிப்பெரும் பரமே
வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே ..930
சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே
தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே
தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
அம்பரம் பதமே யருட்பரம் பதமே
தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே
நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே ..940
பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தருஞ் சிவமே
அவனோ டவளா யதுவா யலவாய்
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
எம்பொரு ளாகி யெமக்கருள் புயுஞ்
செம்பொரு ளாகிய சிவமே சிவமே
ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு
திருநிலை மேவிய சிவமே சிவமே ..950
மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுற
தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே
கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
செல்வமு மளித்த சிவமே சிவமே
அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே ..960
எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்கிஞ் சிதம்பர சிவமே
பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி சொத்திய சிற்சபைச் சிவமே
கொல்ல நெறியே குருவரு ணெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே ..970
பயிர்ப்புறு கரணப் பாசுகள் பற்பல
உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே
உயிருள்யா மெம்மு ளுயிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
அளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே ..980
அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புயுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே
அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
அருட்பே றதுவே யருபெறற் பெரும்பே
றிருட்பே றருக்குமென் றியம்பிய சிவமே ..990
அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயாகென் றருளிய சிவமே
அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென் றசிவமே .1000
அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென் றசிவமே
அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென் றசிவமே
அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென் றசிவமே
அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென் றசிவமே
அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென் றசிவமே .1010
அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென் றசிவமே
அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென் றசிவமே
அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே
உள்ளகத் தமர்ந்தென துயிற் கலந்தருள்
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே .1020
நிகாலா வின்ப நிலைநடு வைத்தெனைத்
தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே
சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைத்
சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
கைவரப் புந்த கதிசிவ பதியே
துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த
இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே
சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே .1030
கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே
இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடன் கண்ணுறு மருட்சிவ பதியே
பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
உளத்தினுங் கண்ணினு முயினு மெனது
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
பரமுட னபரம் பகர்நிலை யிவையினத்
திரமுற வருளிய திருவருட் குருவே .1040
மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
றிதிநிலை யனைத்துந் தொந்தசற் குருவே
கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
குணமுறத் தொத்துட் குலவுசற் குருவே
பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தொத்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே .1050
சிவரக சியமெலாந் தொவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
அத்தகை தொத்த வருட்சிவ குருவே
அறிபவை யெல்லா மறிவித்தென் னுள்ளே
பிறிவற விளங்கும் பொயசற் குருவே
கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே .1060
செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே .1070
சீருற வருளாந் தேசுற வழியாப்
பேருற வென்னைப் பெற்றநற் றாயே
பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
இன்றமு தளித்த வினியநற் றாயே
பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
வசித்தமு தருள்பு வாய்மைந்ற் றாயே
தளர்ந்தோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த வொருமைநற் றாயே .1080
அருளமு தேமுத லைவகை யமுதமும்
தெருளுற வெனக்கருள் செல்வநற் றாயே
இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
உயாற வெனக்கரு ளுயநற் றாயே
நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே
மற்றுள வமுத வகையெலா மெனக்கே
உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே
கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே .1090
துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
கெய்ப்பிலாந் தவிர்த்த வின்புடைத் தாயே
சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
சத்தியை யளித்த தயவுடைத் தாயே
சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
சித்தியை யளித்த தெய்வநற் றாயே
தன்னிக ல்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமே லேற்றிய வினியநற் றாயே .1100
வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே
எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே
இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புந்
தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே
என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே
தொயா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்
தாயா தணைத்த தயவுடைத் தாயே .1110
சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
கனவினும் பியாக் கருணைநற் றாயே
துக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே
துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
எல்லா நன்மையு மென்றெனக் களித்த
எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே
நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய
தாயிற் பொதுந் தயவுடைத் தந்தையே .1120
அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
புன்னிக ல்லேன் பொருட்டிவ ணடைந்த
தன்னிக ல்லாத் தனிப்பெருந் தந்தையே
அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே
இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
துணயடி சென்னியிற் சூட்டிய தந்தையே
ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே .1130
எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் சொத்தெனச் செப்பிய தந்தையே
தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே
தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே
தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
என்சித் தாக்கிய என்றனித் தந்தையே .1140
தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே
தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே
தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே .1150
சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே
உணர்ந்துணர்ந் துணானு முணராப் பெருநிலை
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
துயவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
பொயவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
இறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே .1160
எவ்வகைத் திறத்தினு மெய்துதற் காதாம்
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே
இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
பற்றயர்ந் தஞ்சிய பாவுகண்ட ணைந்தெனைச்
சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
துறையிது வழியிது துணிவிது நீசெயும்
முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே .1170
எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
கங்கும் பகாமெய்க் காவல்செய் துணையே
வேண்டிய வேண்டுய விருப்பெலா மெனக்கே
யீண்டிருந் தருள்பு யென்னுயிர்த் துணையே
இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே
அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
னுயினுஞ் சிறந்த வொருமையென் னட்பே
அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே .1180
நான்பு வனவெலாந் தான்புந் தெனக்கே
வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே
செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே
குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே .1190
சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமு
கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே
களப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்
கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே
தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே
மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
எனக்குற வாகிய என்னுயி ருறவே
துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பியா
தென்னுற வாகிய வென்னுயி ருறவே .1200
என்றுமோர் நிலையாய் என்றுமோ யலாய்
என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே
அனைத்துல கவைகளு மாங்காங் குணானும்
இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
இதுவெனக் காதா மென்றனிச் சத்தே
ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
ஏகுதற் காதா மென்றனிச் சத்தே
சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே
இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே .1210
துயமுங் கடந்ததோர் பொயவான் பொருளென
உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே
என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே
சத்திகள் பலவாய்த் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே .1220
படிநிலை பலவாய் பதநிலை பலவாய்
இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளங்கிடு மென்றனிச் சித்தே
உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
இயாற விளக்கிடு மென்றனிச் சித்தே
அறிவவை பலவா யறிவன பலவாய்
எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே
நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே .1230
காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே
செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்ச்
எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே
அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்
எண்டற விளக்கு மென்றனிச் சித்தே
எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
எல்லாம் விள்க்கிடு மென்றனிச் சித்தே
ஒன்றதி லொன்றென் றுரைக்கவும் படாதாய்
என்றுமோர் படித்தா மென்றனி யின்பே .1240
இதுவது வென்னா வியாடை யதுவாய்
எதிரற நிறைந்த வென்றனி யின்பே
ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
எறிவற் றோங்கிய வென்றனி யின்பே
விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே
இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்
எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே .1250
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே
எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்
எல்லா வின்புமா மென்றனி யின்பே
கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்
விரும்புறு மிரதமு மிக்கதீம் பாம்
குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி
மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய
உணவெனப் பல்கா ரைக்கினு நிகரா
வணமிறு மின்ப மயமே யதுவாய்க் .1260
கலந்தறி வுருவாய்க் கருதுதற் காதாய்
நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்
உள்ளதா யென்று முள்ளதாஅ யென்னுள்
உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்
எல்லா மினிப்ப வியாறு சுவையளித |