|
காப்பு
|
|
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
2571 | திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர் செவ்வண்ணம் நண்ணுசடையும்
தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும் திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை மகள்வண்ண மருவும்இடமும்
மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும் மாணிக்க வண்ணவடிவும்
இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே இடையறா தெண்ணும்வண்ணம்
எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண் இயம்பல்உன் கருணைவண்ணம்
கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று கடல்வண்ணன் எண்ணும்அமுதே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...1 |
|
2572 | எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்
எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட இருண்டுயிர் மருண்டுமாழ்க
நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின் ஞானஅருள் நாட்டைஅடையும்
நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று நாயினேற் கருள்செய்கண்டாய்
விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு வெளிக்குள்வளர் கின்றசுடரே
வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற விஞ்ஞான மழைசெய்முகிலே
கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில் கருணைநடம் இடுதெய்வமே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...2 |
|
2573 | பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப் புகலுமூ வுலகுநீத்துப்
புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல் போய்அருள்ஒ ளித்துணையினால்
வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர வெளிகண்டு கொண்டுகண்ட
விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய் விளங்குநாள் என்றருளுவாய்
வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை மதிநெறிஉ லாவும்மதியே
மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு மருந்தேபெ ருந்தெய்வமே
காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு கடிமதிற் றில்லைநகர்வாழ்
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...3 |
|
2574 | கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரிநடுவில்
குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள் நீர்கொண்டு வாடல்எனவே
நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான் நெறிகொண்ட குறிதவறியே
போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப் புரைகொண்ட மறவர்குடியாம்
பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில் போந்துநின் றவர்அலைக்கக்
கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள்புரிகுவாய்
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...4 |
|
2575 | படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம் பாம்பாட்டி யாகமாயைப்
பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம் படர்ந்தபிர பஞ்சமாகத்
திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு சிறுவன்யா னாகநின்றேன்
தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு திறத்தன்நீ ஆகல்வேண்டும்
விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல விஞ்ஞான மாம்அகண்ட
வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத விராட்டுருவ வேதார்த்தனே
கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க் டவுளே சடைகொள்அரசே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...5 |
|
2576 | எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துகபி றப்பில்இனிநான்
எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம்எய் தினும்எய்துக
வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு வாழ்வுவந் திடினும்வருக
வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ மதிவரினும் வருகஉயர்வோ
டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல தெதுபோ கினும்போகநின்
இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம் எனக்கடைதல் வேண்டும்அரசே
கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும் கதிமருந் துதவுநிதியே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...6 |
|
2577 | பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது பரமவே தார்த்தம்எனவே
பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என் பாவிமனம் விடயநடையே
எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும்வீண்
எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே
சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது சுழல்கின்ற தென்செய்குவேன்
தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச் சுழல்மனம்அ டக்கவருமோ
கற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே கண்ணுதற் கடவுள்மணியே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...7 |
|
2578 | எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ எழுகடலி னும்பெரியவே
என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா தெந்தைநினை ஏத்தஎன்றால்
வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின் றேன்அடியனேன்
மனம்எனது வசமாக நினதுவசம் நானாக வந்தறிவு தந்தருளுவாய்
ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய உருவின்உரு வேஉருவினாம்
உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின் உறவினுற வேஎம்இறையே
களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள் கண்டஎண் தோள்கடவுளே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...8 |
|
2579 | சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின் தன்னிடத் தேமவல்லி
தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு சாந்தம்எனும் நேயர்உண்டு
புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும் புதல்வன்உண் டிரவுபகலும்
போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த போகபோக் கியமும்உண்டு
வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா மணியும்உண் டஞ்செழுத்தாம்
மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக் கடவுளே கருணைமலையே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...9 |
|
2580 | நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர நாதமிசை ஓங்குமலையே
ஞானமய மானஒரு வானநடு ஆனந்த நடனமிடு கின்றஒளியே
மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ வைத்தவண்வ ளர்த்தபதியே
மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம மதிக்கும்முடி வுற்றசிவமே
ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின் உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண் டற்றநிலையே
கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே கண்கொண்ட நுதல்அண்ணலே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...10 |
திருச்சிற்றம்பலம்
|
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
2581 | அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
அடியனேன் மனத்தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
சிந்தைநைந் துலகிடை மயங்கும்
மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
மதிநதி வளர்சடை மணியே. . ..1 |
|
2582 | மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
வாழ்விக்க வேண்டுவல் போற்றி
அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
கருளமு தருளுக போற்றி
பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
பாடுதல் வேண்டும்நான் போற்றி
தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்
தாங்குக போற்றிநின் பதமே. ...2 |
|
2583 | நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி
நெற்றியங் கண்கொளும் நிறைவே
நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி
நெடியமால் புகழ்தனி நிலையே
நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி
நெடுஞ்சடை முடித்தயா நிதியே. ...3 |
|
2584 | நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
நெறிதரு நிமலமே போற்றி
மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
வாழ்வித்த வள்ளலே போற்றி
விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
வியன்நெறி விளக்கமே போற்றி
பதிபசு பதியே போற்றி நின்பாதம்
பாடஎற் கருளுக போற்றி. ...4 |
|
2585 | போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
புரிதவக் காட்சியே போற்றி
போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
புகல்சிவ போகமே போற்றி
போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
பூரண வெள்ளமே போற்றி
போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
போற்றிநின் சேவடிப் போதே. ...5 |
|
2586 | போதஆ னந்த போகமே என்னைப்
புறம்பிட நினைத்திடேல் போற்றி
சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்
சிறுமைதீர்த் தருளுக போற்றி
பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்
பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி
வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்
வேறெனக் கிலைஅருள் போற்றி. ...6 |
|
2587 | போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
போற்றிநின் பூம்பதம் போற்றி
ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
அமலநின் அடிமலர் போற்றி
ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
இறைவநின் இருங்கழல் போற்றி
சாற்றுமா றரிய பெருமையே போற்றி
தலைவநின் தாட்டுணை போற்றி. ...7 |
|
2588 | துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
துணைவநின் துணையடி போற்றி
புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
புனிதநின் பொன்னடி போற்றி
இணையில்பே ரின்ப அமுதருள் கருணை
இறைவநின் இணையடி போற்றி
கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
கண்ணநின் கழலடி போற்றி. ...8 |
|
2589 | அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி
அயல்எனை விட்டிடேல் போற்றி
கொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி
குணப்பெருங் குன்றமே போற்றி
நெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி
நினைஅலால் பிறிதிலேன் போற்றி
படிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்
பரமநின் அடைக்கலம் நானே. ...9 |
|
2590 | நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
நலந்தரல் வேண்டுவன் போற்றி
ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
வள்ளலே போற்றிநின் அருளே. ...10 |
திருச்சிற்றம்பலம்
|
காப்பு
|
|
பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
2591 | உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம் உதவும்ஆ னந்த சிவையே
உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை உணர்த்துபே ரின்ப நிதியே
இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம் இயலுற உளங்கொள் பரையே
இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை ந்தெனை அளித்த அறிவே
கலகமுறு சகசமல இருளகல வெளியான< ஸ௰ூ ஸந ிநை
கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக் கநஅமுதும் உதவு கடலே
அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...1 |
|
2592 | கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக் கரிசற உணர்ந்து கேட்டுக்
காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து கருநெறி அகன்ற பெரியோர்
பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு புரிபவை எலாம்பு ரிந்துன்
புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும் போதவை எலாம்அ ருளுவாய்
நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய நிறைபவை எலாஞ்செய் நிலையே
நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும் நித்தியா னந்த வடிவே
அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...2 |
|
2593 | இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை இனிவரு கணப்போ திலே
இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம் என்செய்கோம் இடியும் எனில்யாம்
தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத தீக்கணம் இருப்ப தென்றே
சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த திகழ் பரம சிவசத்தியே
எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை< ு ௌு ுந
இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட இருந்த ருள்தருந் தேவியே
அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...3 |
|
2594 | பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண் போகாத நாளும் விடயம்
புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும் புந்திதள ராத நிலையும்
எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை என்றும்மற வாத நெறியும்
இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ் ஏழையேற் கருள்செய் கண்டாய்
கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு கோமளத் தெய்வ மலரே
கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணிவி ளக்கே
ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...4 |
|
2595 | பவமான எழுகடல் கடந்துமேற் கதியான பதிநிலை அணைந்து வாழப்
பகலான சகலமுடன் இரவான கேவலப் பகையுந் தடாத படிஓர்
தவமான கலனில்அருள் மீகாம னால்அலது தமியேன் நடத்த வருமோ
தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச் சரணமே சரணம் அருள்வாய்
உவமான மற்றபர சிவமான சுத்தவெளி உறவான முத்தர் உறவே
உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே
அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...5 |
|
2596 | சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான் சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு சும்மா இருத்தி என்றால்
காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ கண்டிலேன் அம்மம் மஓர்
கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கெ னச்சுழல் கின்றதே
தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில் தாழ்பிறவி தன்னில் அதுதான்
தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத் தமிய னேன்என் செய்குவேன்
ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...6 |
|
2597 | மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய வாதனைஎ னுங்கள் வர்தாம்
வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது வசமாக உளவு கண்டு
மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள மிகநடுக் குற்று நினையே
நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும் நின்செவிக் கேற இலையோ
நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின் நிறைவும்இலை யோஎன் செய்கேன்
ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...7 |
|
2598 | வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என வேத முதல்ஆ கமம்எலாம்
மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும் விவேகர் சொற்கேட் டறிந்தும்
கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பலகால்
கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர் கடுஅளவும் விடுவ தறியேன்
எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி இன்னமதி என்று ணர்கிலேன்
இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத இன்பநிலை கண்டு மகிழ்வேன்
அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...8 |
|
2599 | ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும் உற்றிடில் சிறுது ரும்பும்
உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என உயர்மறைகள் ஓர்அ னந்தம்
தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித் தியானம் இல்லா மல்அவமே
சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால் சேராமை எற்க ருளுவாய்
களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு கருணைதரு கலாப மயிலே
கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட் கலைகி ளரவளர் அன்னமே
அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...9 |
|
2600 | நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ நெறிநின்று னக்கு ரியஓர்
நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு நின்னடிப் பூசை செய்து
வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான வித்தகர்ப தம்பர வும்ஓர்
மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது விரைந்தருள வேண்டும் அமுதே
பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய பெருமையை அணிந்த அமுதே
பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல் பெண்கள்சிரம் மேவும் மணியே
ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...10 |
திருச்சிற்றம்பலம்
|
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
2601 | பரசிவா னந்தபரி பூரண சதானந்த பாவனா தீதமுக்த
பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத பெளதிகா தாரயுக்த
சர்வமங் களசச்சி தானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித
சாஸ்வத புராதர நிராதர அபேதவா சாமகோ சரநிரூபா
துருவகரு ணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வநிமல
சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ சோமசே கரசொரூபா
அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட் டணுவளவும் அறிகிலாத
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...1 |
|
2602 | ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய சுத்தமணியே அரியநல்
துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால் துலங்குமணி யேஉயர்ந்த
ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி தானந்த மானமணியே
சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர் சமரச சுபாவமணியே
நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர் நினைவிலமர் கடவுண்மணியே
நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத நித்யஆ னந்தமணியே
ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக் கன்புதவும் இன்பமணியே
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...2 |
|
2603 | தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின் செய்யுமதி வேணியாட
செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி சிறந்தாட வேகரத்தில்
மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக வானாதி தேவராட
மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட மால்பிரம னாடஉண்மை
ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம் நங்கைசிவ காமியாட
நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட நந்திமறை யோர்களாட
ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர் ஆறுமுக னாடமகிழ்வாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...3 |
|
2604 | பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண் போக்கிநன் னாளைமடவார்
போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின் பொன்னடிக் கானபணியைச்
செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில் செய்வதறி யேன்ஏழையேன்
சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல சிந்தைதனில் எண்ணிடாயோ
மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள வேண்டுமறை யாகமத்தின்
மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த மேதையர்கள் பரவிவாழ்த்தும்
ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர வம்புலியு மாடமுடிமேல்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...4 |
|
2605 | (போதாரு நான்முகப்) புத்தேளி னாற்பெரிய பூமியிடை வந்துநமனாற்
போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர் போதிக்கும் உண்மைமொழியைக்
காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற் கற்றும்அறி வற்றிரண்டு
கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும் கடையனேன் உய்வதெந்நாள்
மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும் வள்ளலே உள்ளமுதலே
மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி யாண்டருள வேண்டும்அணிசீர்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...5 |
|
2606 | பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற் பண்படா ஏழையின்சொற்
பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான பரமார்த்த ஞானநிலையை
கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற் கருணைசெய் தாளாவிடில்
கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட் கடவுளே கருணைசெய்வாய்
தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி தந்தஒரு சுந்தரியையும்
தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய சத்தியையும் வைத்துமகிழ்என்
அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன் றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...6 |
|
2607 | பவமான எழுவகைப் பரப்பான வேலையிற் பசுவான பாவிஇன்னும்
பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப் படராது மறையனைத்தும்
உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை உற்றதனை யொன்றிவாழும்
உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவானநல்
தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி< ா௸ிந ிொூ௸௵
தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த தற்பரர்க ளகநிறைந்தே
அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை அடியனுக் கருள்செய்குவாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...7 |
|
2608 | சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு சாமிசிவ காமியிடமார்
சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான சத்யமொழி தன்னைநம்பி
எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை ஏத்திவினை தனைமாற்றியே
இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன்அந்தோ
சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென் செப்புவாய் வேதனாதி
தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல்புரிய
அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங் கருண்முக விலாசத்துடன்
அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...8 |
|
2609 | நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க நெறிநிற்கும் அன்பர்மனமாம்
நிலமீது வளர்தேவ தாருவே நிலையான நிறைவே (மெய் யருட்சத்தியாம்)(169)
வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்டசுத்த
வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா வேதமே வேதமுடிவே
தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத் துணைமலர்த் தாட்குரியனாய்த்
துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில் தோயஅருள் புரிதிகண்டாய்
ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும் அம்மைசிவ காமியுடனே
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...9 |
|
2610 | மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன் மாக்களாய் ஆன்மாக்களின்
மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும் வள்ளலாய் மாறாமிகத்
திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட தேவாய் அகண்டஞானச்
செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச் செம்மலாய் அணையாகவெம்
பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும் பரமபதி யாய்எங்கள்தம்
பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய் பரமமோ க்ஷாதிக்கமாய்
அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய் ஆர்ந்துமங் களவடிவமாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...10 |
திருச்சிற்றம்பலம்
|
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (170)
|
|
2611 | ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை
அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்
செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை
முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...1 |
|
2612 | அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை
அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்
தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்
சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்
கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்
கண்ணுத லானைஎம் கண்ணக லானை
எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...2 |
|
2613 | மாலயன் தேடியும் காணாம லையை
வந்தனை செய்பவர் கண்டம ருந்தை
ஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை
ஆதியை ஆதியோ டந்தமி லானைக்
காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்
கருணைக்க டலைஎன் கண்ணனை யானை
ஏலம ணிகுழ லாள்இடத் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...3 |
|
2614 | சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்
தூயனை யாவரும் சொல்லரி யானைப்
பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்
பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை
வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...4 |
|
2615 | அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை
அம்பலத் தேநடம் ஆடுகின் றானை
வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை
வானவர் கோனைஎம் வாழ்முத லானைத்
துன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்
சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...5 |
|
2616 | கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக்
கருணாநி தியைக்க றைமிடற் றானை
ஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை
ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
நண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை
நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...6 |
|
2617 | வெள்விடை மேல்வரும் வீறுடை யானை
வேதமு டிவினில் வீற்றிருந் தானைக்
கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்
கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை
உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை
உலகுடை யானைஎன் உற்றது ணையை
எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...7 |
|
2618 | பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப்
பெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்
கண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்
கண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்
பண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப்
பார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை
எண்அம ராதஎ ழிலுடை யானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...8 |
|
2619 | வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை
வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்
களங்கம்இ லாதக ருத்துடை யானைக்
கற்பனை முற்றும்க டந்துநின் றானை
உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை
உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை
இளம்பிறை சூடிய செஞ்சடை யானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...9 |
|
2620 | குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...10 |
திருச்சிற்றம்பலம்
|
கட்டளைக் கலித்துறை
|
|
2621 | கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே. ...1 |
|
2622 | அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே. ...2 |
|
2623 | தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே. ,,,3 |
|
2624 | தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்
பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்
பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே
பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே. ...4
|
|
2625 | எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி
அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்
பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்
கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே. ...5 |
|
2626 | பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்
செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்
எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்
அய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே. ...6 |
|
2627 | உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்
என்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே
நின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே
முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே. ...7 |
|
2628 | முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே. ...8 |
|
2629 | ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே. ...9 |
|
2630 | ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே. . ..10 |
திருச்சிற்றம்பலம்
| |
கொச்சகக் கலிப்பா(171)
|
|
2631 | வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே. ...1 |
|
2632 | கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்
உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்
எள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே. ...2 |
|
2633 | பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே. ...3 |
|
2634 | துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்
பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்
தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்
என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே. ...4 |
|
2635 | வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்
தன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்
புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்
என்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே. ...5 |
|
2636 | தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே. ...6 |
|
2637 | தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்
சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்
கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப
தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே. ...7 |
|
2638 | துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே. ...8 |
|
2639 | கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே. ...9 |
|
2640 | கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே. ...10 |
திருச்சிற்றம்பலம்
|
கொச்சகக் கலிப்பா
|
|
2641 | விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே. ...1 |
|
2642 | கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே
மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ. ...2 |
|
2643 | கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே. ...3 |
|
2644 | கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்
வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய
உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ
எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே. ...4 |
|
2645 | சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி
ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய
கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்
ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே. ...5 |
|
2646 | பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்
நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே. ...6 |
|
2647 | வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே. ...7 |
|
2648 | என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே. ...8 |
|
2649 | குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே. ...9 |
|
2650 | அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே. ...10 |
திருச்சிற்றம்பலம்
|
கலிவிருத்தம்
|
|
2651 | திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்
குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்
பொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்
தரும வெள்விடைச் சாமிநின் நாமமே. ...1 |
|
2652 | பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்
செய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்
அய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற்
குய்ய வேறுபு கல்இலை உண்மையே. ...2 |
|
2653 | கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே. ...3 |
|
2654 | வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்
எஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்
நெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்
தஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே. ...4 |
|
2655 | பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்
குற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்
உற்ற எள்துணை யேனும்உ தவுவாய்
கற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே. ...5 |
|
2656 | மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்
பதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்
கதியின் வைப்பது நின்கடன் வன்கடல்
வதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே. ...6 |
|
2657 | நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே. ...7 |
|
2658 | சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
இந்து சேகர னேஉன்றன் இன்னருள்
தந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே. ...8 |
|
2659 | உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்
பொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ
மின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே
என்னை நாடிஎ னக்கருள் செய்கவே. ...9 |
|
2660 | இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்
பிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும்
மழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்
தழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே. ...10 |
|
2661 | மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்
பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்
நாட வேறும னையிடை நண்ணிநான்
வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே. ...11 |
|
2662 | மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை
என்னப் பாஎனக் கின்னருள் ஈந்துநின்
பொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே
உன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே. ...12 |
திருச்சிற்றம்பலம்
|
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
|
2663 | உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே
இலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே
கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ
திலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே. ...1 |
|
2664 | அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்
இன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ
குன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்
நன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே. ...2 |
|
2665 | நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்
தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்
வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே. ...3 |
|
2666 | பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே. ...4 |
|
2667 | உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே. ...5 |
|
2668 | செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே. ...6 |
|
2669 | எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்
நண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே
கண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப்
பண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே. ...7 |
|
2670 | பரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே
புரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத்
திரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின்
எரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே. ...8 |
|
2671 | என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்
பொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்
புன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்
வன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே. ...9 |
|
2672 | வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற
பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்
ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்
ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே. ...10 |
|
2673 | எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
களியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை
அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்
தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே. ...11 |
|
2674 | சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே. ...12 |
|
2675 | காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்
பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்
தூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே. ...13 |
|
2676 | சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே. . ..14 |
|
2677 | வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட
பனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ
நினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ
அனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே. ...15 |
|
2678 | அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்
கொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
செடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்
பொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே. ...16 |
|
2679 | புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்
நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண
மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே
கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே. ...17 |
|
2680 | கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்
மடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்
தொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்
அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே. ...18 |
|
2681 | அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்
படியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்
விடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்திலையே
கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே. . ..19 |
|
2682 | குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்
நன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்
பொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே
என்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே. ...20 |
|
2683 | என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்
தந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே
இந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்
நின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே. ...21 |
|
2684 | நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்
வன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
தென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
முன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே. ...22 |
திருச்சிற்றம்பலம்
|
கட்டளைக் கலித்துறை
|
|
2685 | செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே. ...1 |
|
2686 | தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே. ...2 |
|
2687 | எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே. ...3 |
|
2688 | மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்
எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே. ...4 |
|
2689 | தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே. ...5 |
|
2690 | ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே. ...6 |
|
2691 | ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே. ...7 |
|
2692 | ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே. ...8 |
|
2693 | ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே. ...9 |
|
2694 | பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே. ...10 |
திருச்சிற்றம்பலம்
|
எண்சீர்க்(172) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
|
2695 | ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே. ...1 |
|
2696 | கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ
கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்
ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்
எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்
சேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்
சிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்
நாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்
நாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும். ...2 |
|
2697 | வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே. ...3 |
|
2698 | என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே. ...4 |
|
2699 | என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற
மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே. ...5 |
|
2700 | உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்
எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே. ...6 |
|
2701 | வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே. ...7 |
|
2702 | இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே. ...8 |
|
2703 | விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்
வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே
ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா
கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்
கருதறியாச் சிறுபருவத்தென்னை ஆண்டு
நிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை
நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே. ...9 |
|
2704 | நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே. ...10 |
திருச்சிற்றம்பலம்
|
கலிநிலைத்துறை
|
|
2705 | மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே. ...1 |
|
2706 | படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே. ...2 |
|
2707 | புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்
அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்
கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை
எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே. ...3 |
|
2708 | செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்
நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்
உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்
வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே. ...4 |
|
2709 | மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே. ...5 |
|
2710 | என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
பொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்
அன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே. ...6 |
|
2711 | ஆண்டாய் எனைஏழ் பிற |