(30). வஞ்சி விருத்தம் - தொ. வே. 1, ச.மு.க;
கலி விருத்தம் - தொ.வே. 2, ஆ.பா.
|
1098. |
ஒற்றி மேவிய உத்தம னேமணித்
தெற்றி மேவிய தில்லையப் பாவிழி
நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே. | 1 |
1099. | பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க்
காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன்
மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல்
ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே. | 2
|
1100. | ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்
சோதி யேதிருத் தோணிபு ரத்தனே
ஓதி யேதரும் ஒற்றிஅப் பாஇது
நீதி யேஎனை நீமரு வாததே. | 3
|
1101. | வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர்
காதம் ஓடும் கடியனை ஆள்வது
நீத மோஅன்றி நேரும்அ நீதமோ
ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே. | 4
|
1102. | தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக்
கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே
நலத்த னேஒற்றி நாயக னேஇந்த
மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே. | 5
|
1103. | மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றிஅப் பாஉன்தன்
ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே. | 6
|
1104. | உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே. | 7
|
1105. | எந்தை யேதில்லை எம்இறை யேகுகன்
தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன்
முந்தை ஏழ்பவ மூடம யக்கறச்
சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே. | 8
|
1106. | திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத்
திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப்
பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு
வருந்த என்தனை வைத்தத ழகதோ. | 9
|
1107. | வைத்த நின்அருள் வாழிய வாழிய
மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
உய்த்த நல்அருள் ஒற்றிஅப் பாஎனைப்
பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே. | 10
|
1108. | போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே. | 11
|