| 1502 |
பொற்பங் கயப்பூம் பொகுட்டணையிற் புலவ னிறைவ னருளாலோர்
கற்பந் தனிற்பல் லுயிருலகங் கண்டு பரம னார்தலங்கள்
சிற்பந் திகழப் பலசமைத்துத் தீர்த்தம் பலவு மினிதுறீஇ
அற்ப வுணர்வா லிறுமாப்புண் டமர்ந்தா னந்த வமையத்தில். | 1 |
| 1503 |
பின்னற் சடிலத் தெம்பெருமான் பேரூர் வரைப்பு மந்நகரின்
மின்னற் கனக மணிகொழிக்கும் விரைநீர்க் காஞ்சித் தடநதியும்
நின்னிற் படைக்கப் பட்டனவோ நினையா யென்று நெடுவிசும்பின்
மன்னிப் பொலிந்தங் கொருவாக்கு வயங்க வதனைக் கேட்டெழுந்தான். | 2 |
| 1504 |
நினைத்தார்க் கினிக்கும் பேரூரி னீடும் பெருமை வினாயறிவான்
தனைத்தா ழமரர் முனிவருடன் சார விமைய மால்வரைப்பால்
நனைத்தா துகுக்கும் பொழிற்கயிலை நண்ணித் துதிகள் பலநவின்று
வினைத்தா ளறுக்கும் பெருமானை விரையார் பாதம் பணிந்திரந்தான். | 3 |
| 1505 |
ஆதி புரியு மந்நகரி னறல்வார்ந் தொழுகுந் தடநதியும்
ஏத மனுக்கும் பொருள்பலவு மென்னா லியன்ற வல்லவென
ஓது நெடுவான் மொழிகேளா வுண்மை யுணர்ந்திங் கதன்பெருமை
வேத முதல்வா நின்பாங்கர் வேட்டேன் கேட்க வெனத்தாழ்ந்தான் | 4 |
| 1506 |
ஊற்றும் விழிநீர் மணிமார்பத் தொழுக வென்பு நெகவன்பு
தோற்றும் பணிமென் மொழிகுழறத் தொழுது குடந்தம் பட்டெதிரே
போற்று மலரோன் வழிபாட்டின் பொலிவு நோக்கிப் புரமூன்று
நீற்றுந் தவள நீற்றழகர் நிகழ்பே ரருளா லருள்செய்வார். | 5 |
| 1507 |
வண்டு முரலத் தேன்றுளிக்கும் வனசப் பொகுட்டு நான்முகத்தோய்
பண்டு பூர்வ பரார்த்தத்துப் படைக்கு மாற்றல் பெறுபாக்குத்
தொண்டு புரிந்தெம் மடிப்பூசை சூழ்ந்தா யந்நா ளாதிநகர்
அண்டர் வியப்ப நாந்தாமே யாக்கி நடனம் புரிந்தேமால். | 6 |
| 1508 |
அன்று தொடங்கிப் பலவுயிரு மருளிற் கலப்பச் சதாகாலம்
நின்று நடனம் புரிகின்றா நெடிய வெள்ளி வரையாயுந்
துன்று வளத்தி னாங்கெழுந்தாந் தூய நமது முடிக்கங்கை
என்று மொழுகுங் காஞ்சிநதி யென்னத் தழங்கித் தவழுமால். | 6 |
| 1509 |
வரியா ரளிமென் மலருழக்கும் வயல்கள் புரக்குங் காஞ்சிநதி
பிரியா திருக்க வெனநம்மைப் பெரிது மிரந்து கொளும்வரத்தால்
விரிநீள் சினைப்பிப் பிலவனமே விளங்கும் பேரத்தாணியென
வரிவாட் டடங்க ணுமையோடு மகிலந் தொழவீற் றிருக்கின்றாம். | 8 |
| 1510 |
அறவா ணர்கள்போற் றிடும்பேரூ ரழியா வெமக்கோ ரிடமாகி
உறவா மதனா லெமைப்போல வுலவா ததனுக் கொருசான்றங்
கிறவாப் பனையொன் றுளதன்றி யின்னு மநேக விம்மிதங்கள்
சிறவா நின்ற வதற்கொப்புச் செப்பி னெமக்கு மொப்புளதாம். | 9 |
| 1511 |
இறவா மையைவேட் டவரெல்லா மெறிநீர்க் காஞ்சி மருங்குடுத்த
பிறவா நெறியென் றுலகேத்தும் பேரூ ரெல்லை யினிதடுத்து
மறவா தெம்மை வழிபட்டு மரியா வுடலின் வசிக்கின்றார்
பிறவா மையைப்பெற் றவர்தாமும் பேசி னலகி லடங்காரால். | 10 |
| 1512 |
வேறு
விச்சுவா மித்திர னென்னு மெய்த்தவன்
பொச்சமி றவம்பல புரிந்தி யாவர்க்குங்
கைச்செழுங் கனியெனக் கதிகி டைக்குமா
றெச்சமில் வரம்பல விரந்தங் கேற்றபின். | 11 |
| 1513 |
உத்தம வசிட்டனோ டுடன்று விச்சுவா
மித்திரன் வேதிய முனிவ னாகுமா
றத்தலத் தருந்தவ மாற்று நாளையில்
வைத்தனன் றிரிசங்கை வானத் தின்புற. | 12 |
| 1514 |
ஆதலா லத்தலத் தருந்த வஞ்செயின்
மேதகு பயனெலாம் விரைவி னெய்துறும்
போதினாய் திரிசங்கு புலவர் நாடுறுங்
காதையுங் கேளெனக் கரைதன் மேயினார். | 13 |
| 1515 |
வேறு
கொங்காதரிக்கு மாலைநெடுங் குடைக்கீ ழயோத்தி நகரிருந்து
செங்கோல் செலுத்து நாளந்தத் திரிசங் கென்னும் பெருவேந்தன்
நுங்கா விசும்பிற் கதியடைத னுதலு மனத்தா னரசொரீஇ
மங்கா விழைவிற் குருவான வசிட்ட முனிவன் மருங்கடுத்தான். | 14 |
| 1516 |
குளிர்மென் கமல மலர்மருட்டுங் குரவன் பாத முறவணங்கி
அளிமிக் களைந்த மென்மொழியா லறைவான் பெரிய மாதவத்தோய்
இளிவந் திடுமண் ணரசிருக்கை யெனக்கு வெறுத்த தாதலினால்
ஒளிவந் திடும்விண் ணவர்வாழ்வி னுறுத்தென் றிரந்து பலதுதித்தான். | 15 |
| 1517 |
எடுத்த வுடலோ டிருந்துறக்க மெய்த விழைந்து தன்பாங்கர்
அடுத்த திரிசங் கெனுமரைய னார்வ நோக்கி வசிட்டமுனி
விடுத்து மொழிவா னதற்கேற்ற பருவம் விளைந்த திலைநினக்குத்
தொடுத்த கரும மினிச்சிலநா டொலையி னறிது மெனமறுத்தான். | 16 |
| 1518 |
அடங்காக் காதன் மனந்துரப்ப வனைய வசிட்டன் மைந்தர்தமை
மடங்கா முறையின் வழிபட்டு வரவு கூற மற்றவருந்
தொடங்காக் கரும மிதுவென்று துணிந்து தந்தை போன்மறுத்தார்
தடங்கா சினியாள் திரிசங்கு தளர்ந்தன் னவர்மு னிதுகிளந்தான். | 17 |
| 1519 |
எந்தங் குடியி லடுக்கின்றா ரெவர்க்கு மருளுங் குரவனென
நுந்தை சரணஞ் சரணடைந்தே னோக்கம் வழங்கா தொழித்திட்டான்
அந்த ணாளிர் நுமையடுத்தேற் கவன்போல் வாளா தொழித்திட்டீர்
புந்தி விழைந்த வொருகுருவைப் புகல்கொண் டடைவல் கதியென்றான். | 18 |
| 1520 |
பண்டு தொடங்கி வருங்குருவாற் பயனொன் றிலையென் றவமதித்துத்
தொண்டு வேறு குருவின்பாற் றொக்க விழைந்தா யாதலினான்
மிண்டு நீச னாதியென விளைத்தார் சாபமதுவேற்றுக்
கொண்டு விசுவா மித்திரனைக் குறுகி விளைந்த பரிசுரைத்தான். | 19 |
| 1521 |
அச்ச மகறி நீவேட்ட வரிய கதிதந் தனநாமென்
றெச்ச மறுங்கண் ணருள்வழங்கி யெச்ச மாங்கொன் றினிதியற்றி
வெச்சென் றமர ருளந்துளங்க விண்ணா ளரசன் சபையேற
நச்சு மணிவேற் றிரிசங்கை விடுத்தா னவையி லருந்தவத்தோன். | 20 |
| 1522 |
அசும்புங் கிரண மணிமோலி யமரர் பெருமான் சபைநாப்பண்
விசும்பி னெழுந்து திரிசங்கு மேவி யிருந்தா னிருத்தலொடுந்
தசும்பு நிகர்த்த முலைச்சசிதன் றலைவன் வெகுண்டு நீசனிவன்
பசும்பொன் னுலகில் வருவதே யென்று பாரி னுகமறித்தான். | 21 |
| 1523 |
வேறு
மறிந்து வீழ்பவன் மாதவத் தலைவனை நோக்கி
அறிந்த விச்சுவா மித்திர வோலமிங் கடியேன்
செறிந்த விண்ணவர் தள்ளலிற் றிகைத்துவீழ் கின்றேன்
இறந்து றாவகை காத்திநீ யோலமென் றிசைத்தான். | 22 |
| 1524 |
அஞ்ச னீயிது பற்றியந் தரத்திரு வென்று
விஞ்சு மாதவ விச்சுவா மித்திர னறுநெய்
எஞ்சு றாதுதூஞ் சுருக்கினை யெடுத்தெதிர் விடுத்தான்
தஞ்ச முற்றவ னதுதழீத் தங்கின னிடைவான். | 23 |
| 1525 |
அடைக்க லம்புகுந் தவற்கியா னருங்கதி கொடுப்ப
விடைக்க விண்ணவர் செய்வரே யெனநனி வெகுண்டு
புடைக்க ணேசில வுடுக்களைப் பெயர்த்துறு புவனம்
படைக்க லுற்றனன் பண்ணவ ரனைவரும் பணிந்தார். | 24 |
| 1526 |
அந்த ரத்தவ னிருந்தவா றிருந்தரும் போகம்
எந்த வைகலுந் துய்த்திடத் துறக்கமாங் கியற்றித்
தந்த னன்பிரா மணமுனி யெனுந்தனிச் சிறப்பு
மைந்து கொண்டவம் மாதவன் பெற்றனன் மாதோ. | 25 |
| 1527 |
இன்ன வாறெலாந் தவப்பய னினிதுமுற் றுதலின்
அன்ன வைப்பினைத் தவசித்தி புரவென வறைவர்
மன்னு மென்மலர் வாழ்க்கையோய் மற்றுமந் நகர்க்குப்
பன்னு பல்வகை நாமமும் பகருதுங் கேட்டி. | 26 |
| 1528 |
வேறு
அச்சுதன் முதலோர் காணா தமர்பர வெளிய தாய்நாஞ்
சச்சிதா னந்த மான தாண்டவ மியற்றா நிற்ப
நிச்சலு மேல்பா லோங்கி நிற்றலாற் புலவ ரெல்லாம்
மெச்சுமந் நகர மேலைச் சிதம்பர மாய தன்றே. | 27 |
| 1529 |
எண்ணில்பல் வரைக்கும் வேந்தா மிமவரை யாதி போலா
வண்ணநம் வடிவாம் வெள்ளி மலையகத் திருத்த லானுந்
திண்ணிய பாத கங்கள் சீத்துவீ டளித்த லானும்
நண்ணுமந் நகர்க்குத் தேர்ந்தோர் நாட்டுவர் பேரூர் நாமம். | 28 |
| 1530 |
உத்தம நகரமீதென் றும்பர்கண் முதலா னோர்கள்
பத்தியிற் பணித லானும் பத்தியில் லாரு மங்கு
வைத்ததங் கரும முற்ற வைகினு மவர்க்கும் பத்தி
மெத்துத லானும் பத்தி புரியென விளக்கஞ் சாலும். | 29 |
| 1531 |
வந்தனர் பணிகின் றார்க்கு வரம்பிலா னந்த மாங்கே
தந்திட லானு மோங்கற் றையலோ டெமக்குச் சால
வந்தில்வாழ்ந் திருக்கை தன்னி லானந்தம் விளைத லானும்
புந்தமிக் கருளு மந்தப் புரம்பரம் புரமென் றாமால். | 30 |
| 1532 |
மருவிய பாவ நீக்கி மனம்வெளிப் படுத்த லானுந்
துருவரு மேலா முத்திச் சுகமெனும் வெளிசார்ந் தோர்க்குத்
தருதலி னானும் விண்ணோர் தகுதியின் வசித்த லானுங்
கருதிய தருள்பேரூரைக் ககனமா புரியென் பாரால். | 316 |
| 1533 |
எதனைமற் றெவர்கள் வேட்டங் கெய்தினு மதனை யன்னோர்
மதவுறப் பெறுத லானும் வளவிய வாசை யாதி
கதுமெனக் களைத லானுங் கண்ணுநர்க் கின்ப வெள்ளம்
புதுவதி னியலும் போத புரமெனப் படுமப் பேரூர். | 32 |
| 1534 |
பெருகிய செல்வ மன்னிப் பேதுசெ யழுக்கா றாதி
திருகிய குற்ற நீக்கிச் செறிந்திடு மனைக டோறும்
மருவிய சிருங்கா ரத்தின் வண்குண நடித்த லாலே
பொருவினாட் டியபு ரப்பேர் பூண்டது பேரூர் வைப்பு. | 33 |
| 1535 |
எவ்வகைத் திருவும் வேட்டோர்க் கியைக்குங்கா ரணத்தி னானும்
எவ்வகைத் திருவி னோடு மிருநிதி கூட லானும்
அவ்விய மனுக்கு மாதி தாண்டவ மாட லானும்
அவ்வியற் பேரூ ராதி புரியென வகிலத் தோங்கும். | 34 |
| 1536 |
விண்ணவர் வியக்குஞ் செம்பொன் மேருமால் வரைபோந் தாங்கு
வண்ணநம் முருவ முற்றும் வன்மீக வுருவாய் மூடி
நண்ணலா லனைய பேரூர் வன்மீக நகர மென்றுந்
திண்ணிய செம்பொன் மேரு நகரென்றுந் திகழ்வ தாகும். | 35 |
| 1537 |
துலங்கிய போக மெல்லாந் துவன்றிவிண் ணமுதின்மேலாம்
இலங்கிரு நிதியி னீடி யுலோபரை யெய்த லின்றி
நலங்கிளர் மேருப் போன்ற நன்மையி னானு மவ்வூர்
புலங்கெழு செம்பொன் மேரு புரியெனு மப்பேர் பூணும். | 36 |
| 1538 |
கலித்தவஞ் ஞானம் பெற்றோர் கலாவுத லின்மையானும்
ஒலித்தவிஞ் ஞானம் பெற்றோ ருறவுகொண் டேத்த லானும்
நலித்தஞர் யாகஞ் செய்வோர் ஞானிக ளாத லானுந்
தலத்துயர் பேரூர் ஞான புரமெனத் தக்க தாகும். | 37 |
| 1539 |
வேரொடு வினையைக் கீழ்ந்திட் டின்பங்கள் விளையா நிற்குஞ்
சீரொடு மெனதியா னென்னுஞ் செருக்கிலார்க் கிருக்கை யாகிப்
பேரொடு நிற்ற லாலே பிரமமா நகர மாகும்
பாரொடு வான நாளும் பணிதவ சித்தி வைப்பு. | 38 |
| 1540 |
ஒன்னல ராவி மாய்க்கு முயர்மனு மறையோர் தம்மால்
துன்னுபா தகமாந் தெவ்வைத் தொலைத்திடப் பட்டோர் நாளும்
மன்னினர் போற்று மாற்றான் வளர்குட சிதம்ப ரந்தான்
கொன்னவில் பெருமை சாலக் கொளுங்குருக் கேத்தி ரப்பேர். | 39 |
| 1541 |
மண்டிய மூலங் கன்ம மாயையென் றுரைக்கப் பட்ட
விண்டிடற் கரிய பாசம் விலகிநற் பசுக்க ளாங்குக்
கண்டரு பதியா நம்மைக் கண்டுகொண் டிருக்கு மாற்றாற்
பண்டெனப் படுமப் பேரூர் பசுபதி புரமென் றாகும். | 40 |
| 1542 |
மல்குமா மகிமைப் பேற்றான் மாபுர மென்றுந் தேசு
பில்கிர சதவெற் பான பெற்றியே நடித்த லானு
மல்கிர சதமன் றாடற் கமைந்திட லானு மாய்ந்தோர்
பல்கிர சதமன் றென்றும் பசுபதி புரத்தைச் சொல்வார். | 41 |
| 1543 |
ஒற்கமுற் றிரிய வேட்டோர்க் கோங்குபூ தான மென்னும்
அற்கிய செல்வ நல்க லாற்குந்த கான மென்று
நற்சபை யிறைஞ்சி னோர்க்கு ஞானமங் குறுத்து மாற்றாற்
சிற்சபை யென்று மேலைச் சிதம்பரம் பெயர்பூண் டன்றே. | 42 |
| 1544 |
தொடிபொலி தடக்கை வேற்கட் டுணைமுலைக் கவுரிக் காங்குக்
கடிவினை நிகழ்ந்த வாற்றாற் கலியாண புரம தாகும்
நெடுகிய போதிக் கான நிரந்தரித் தலினாற் போதி
வடுவறு கான மாகு மாபுர மென்னும் வைப்பு. | 43 |
| 1545 |
தேனுமெய்த் தவங்க ளாற்றிச் சிருட்டிபெற் றேகு மாற்றால்
தேனுநற் புரமென் றாகுந் திகழ்பிற வாநெ றிக்கண்
மானுடர் தமையு முய்க்கும் வாய்மையாற் குந்த கானந்
தானது படைத்த தாகுந் தகும்பிற வாநெ றிப்பேர். | 44 |
| 1546 |
இன்னுமத் தலத்துக் கெய்து மிரும்பெயர் பல்ல வுள்ள
அன்னமேக் குயர்த்தோய் காணென் றறைந்தன ரமலநாதர்
தன்னிக ரில்லா வின்பந் தலைசிறந் தலரின் மேலான்
பொன்னடித் தலத்திற் றாழ்ந்து புறவிடை கொண்டு போந்தான். | 45 |
| 1547 |
எறிதிரைக் காஞ்சி யாடி யெழுந்துசூழ் போதிக் கானத்
தறிவக லறிவ தான வாதிலிங் கத்தைப் போற்றி
மறிவிழி மருட்டும் வாட்கண் மரகத மயிலைத் தாழ்ந்து
வெறிகமழ் வெள்ளி மன்றும் விலங்கலுந் தரிசித் தானால். | 46 |
| 1548 |
சிலபகல் கழிய வாங்குச் சிவணிவாழ்ந் தினிது போற்றி
இலகிய பேரூர் வைப்பி னிடந்தொறும் விளங்கா நின்ற
பலதளி களினு முக்கட் பனவனைப் பரசிப் போற்றி
நிலவுதன் னுலகம் புக்கு நெடிதுவாழ்ந் திருந்தா னன்றே. | 47 |
| 1549 |
தலவிசே டத்தை முக்கட் டம்பிரான் கருணை கூர்ந்து
மலரவன் றெரியக் கூறு மரபினைத் தெரித்துப் போக்கிக்
கலதிசெ யங்கி ரப்பேர் கைக்கொளு மொருவ னெய்து
நலனுறு முனிவர் தேர நவிற்றுவன் சூத னென்போன். | 48 |
தலவிசேடப்படலம் முற்றிற்று
| 1550 |
பங்க யப்பெரும் பண்ணை மடைதொறுஞ்
சங்கி னங்க டவழ்ந்துயிர் நித்திலங்
கங்கு லும்பக லென்னக் கதிர்பொழி
வங்க மென்றொரு தேயம் வயங்குமால். | 1 |
| 1551 |
வங்க தேய வரைப்பி னொருசிறைப்
பொங்கு கானிடைப் புல்லிய வாழ்க்கையன்
வெங்கண் வேடன் வெருவரு காட்சியன்
அங்கி ரன்னென் றறைதரு நாமத்தான் | 2 |
| 1552 |
தக்க காதன் மனைவியர் தாம்பலர்
மக்கள் பற்பலர் மன்னு முரிமையின்
ஒக்க லாரும் பலருடங் கண்முறத்
தொக்க செல்வந் துவன்றுற வைகினான். | 3 |
| 1553 |
அடைய லார்க்கரி யேறுற ழன்னவன்
படைகளேந்திப் பலர்தனைச் சூழ்தர
நடைவ யிற்செலு மாந்தர்க ணன்பொருள்
அடைய வெளவிக்கொண் டங்ஙனம் வாழுநாள். | 4 |
| 1554 |
கூர்த்த செல்வங் கொழித்திடு மாமக
தீர்த்த மாடவு மன்றல்கள் செய்யவும்
ஓர்த்த சுற்றமொ டொள்ளிய வந்தணர்
போர்த்த வோகையி னாற்றிடைப் போதுவார். | 5 |
| 1555 |
சுடர்ம ணிக்கல னுந்தொகு மாடையும்
படர்ப றிக்குல மும்பகட் டேற்றின்மேல்
இடுபொ ருட்பல மூடையு மீண்டுற
வடவி புக்குமு டுக்க ரடுத்தனர். | 6 |
| 1556 |
செவ்வி யீதெனத் தேர்ந்தடுத் தங்கிரன்
இவ்வெ லாங்கவர் தற்கிது வாமென
வெளவி யம்புரிந் தியாரையு மாய்த்தெலாம்
வெளவி யேகித்தன் வாழ்பதி நண்ணினான். | 7 |
| 1557 |
மக்க ளொக்க லறிந்து மலிபொருள்
தக்க தன்று நமக்குத் தகினுமிம்
மிக்க செல்வங் கவர்ந்து விடாதெலா
மொக்க வாவி யொழித்தன னாதலான். | 8 |
| 1558 |
வேந்தர் தேர்ந்து விழுக்குலத் தோடெமைச்
சீந்தி மாய்ப்ப ரெனத்தெருண் டொய்யெனக்
காந்து கண்ணின ராகிக் கழற்றினார்
சாந்த மில்லாத் தறுகணி னான்றனை. | 9 |
| 1559 |
ஈது செய்குவ ரேயென வங்கிரன்
போது வைகிய பொங்கிருள் யாமத்துக்
காதி யாருயிர் காற்றினன் மக்களை
மூது சுற்றத் தவரொடு முற்றவே. | 10 |
| 1560 |
வாழ்ந்த வைப்பினை விட்டு வனந்தொரறுஞ்
சார்ந்து தன்றொழி றண்டா தியற்றுவான்
போந்து தென்கயி லைப்புற நண்ணினான்
ஆர்ந்த வண்மைகண் டாங்கசைந் தானரோ. | 11 |
| 1561 |
இயம தூதர்க ளெண்ணில ரோருருப்
பயிறல் கொண்டு படர்ந்தன தோற்றத்தான்
உயர்வி லங்குமொண் புட்களு நிச்சமும்
வயிறடங்க வதைத்துண லாயினன். | 12 |
| 1562 |
மிருக மற்ற விகங்கமு மற்றன
துருவி யாறலைத் துத்துயர் செய்வதோர்ந்
தொருவ ரும்பட ராமை யொழிதலின்
மருவு நீணெறி மாய்ந்தன மாடெலாம். | 13 |
| 1563 |
ஆய காலையொ ரந்தண னவ்வுழித்
தாயமாகிய தாரமோ டண்ணினான்
மேய வேதிய னாவியை வீட்டினான்
தீயன் பார்ப்பனி யைத்தெவ்வி யேகினான். 4 | 14 |
| 1564 |
தனதி ருக்கையைச் சார்ந்துயர் பார்ப்பனி
இனிது தன்வழி யேவ லியற்றுற
நனியொ றுத்தச் சுறுத்தின்ப நண்ணினான்
அனைய வங்கிர னாங்கொரு நாள்வயின். | 15 |
| 1565 |
வேட்டை யாட விழைந்து தனுவொடு
காட்டி னேகிக் கதழ்ந்து திரிதலான்
வாட்டு தாகமும் வன்பசி யீட்டமுங்
கோட்டி கொள்ளக் குழைந்துள மீட்டனன். | 16 |
| 1566 |
இருக்கை நாடிக்கொண் டேகுகின் றானிடை
வருக்கை மென்கனி மந்தி வகிர்ந்துணாத்
தருக்கு நீள்பொழி லூடு தவழ்ந்துசெல்
உருக்கொள் காஞ்சி யொளிநதி கண்டான். | 17 |
| 1567 |
வேறு
உய்ந்து ளேனென வோகை துள்ளுற
முந்து கண்டவம் முழங்கு காஞ்சிபுக
கந்தி னீர்மடுத் தயர்வு யிர்த்தலர்
சிந்து வார்கரை செல்ல வேறினான். | 18 |
| 1568 |
அங்கண் வைகுமோ ரராவெ ழுந்தவன்
செங்க ழற்பதஞ் சினந்தெ றிந்தது
தங்கு கார்முகந் தன்னின் மாட்டினான்
நுங்கிற் றவ்வரா நூறு பட்டரோ. | 19 |
| 1569 |
பரிந்து பாப்புயிர் பாறு முன்னரே
விரைந்த வேகத்தின் விடந்த லைக்கொள
வரிந்த திண்சிலை வாகு வேட்டுவன்
கரிந்து மெய்யுயிர் கைய கன்றதே. | 20 |
| 1570 |
இறந்த வேடனை யியம தூதர்கள்
விறந்து முற்றினார் வெருவத் தாக்கினார்
மறிந்து நெஞ்சுக வலிதிற் கட்டினார்
நிறைந்த செல்லல்செய் நெறிகொண் டேகினார். | 21 |
| 1571 |
தெரிந்து மற்றது சிவக ணங்கள்போய்
எரிந்த குஞ்சியி னியம தூதரை
முரிந்து வீழவு முடங்க ளாகவும்
இரிந்து போகவு மெருக்கி மீட்டன. | 22 |
| 1572 |
மீட்ட வங்கிரன் விண்ணின் மாதரார்
நாட்ட மெய்க்கவி னல்வி ருந்துண
வேட்டை தீர்ந்தெழில் விமான மேறிப்போய்ச்
சேட்டி ருங்கயி லாயஞ் சேர்ந்தனன். | 23 |
| 1573 |
இரிந்த தூதுவ ரெரிசெய் குஞ்சிமண்
விரிந்த சென்னியின் வெய்து முன்னுறீஇ
வரிந்த திண்கழல் மன்னன் சேவடி
புரிந்து போற்றினார் புகறன் மேயினார். | 24 |
| 1574 |
வேறு
வாழி வாழிநின் னரசியல் வாழிநின் செங்கோல்
ஊழி யூழியும் வாழிய வுருட்டுநின் றிகிரி
ஆழி வையகத் தங்கிர னென்றொரு பதகன்
பாழி யாக்கையைப் பாற்றியா ருயிர்கொடு மீண்டாம். | 25 |
| 1575 |
விலங்கி வண்சிவ கணமெமை வீற்றுவீற் றதுக்கி
உலங்கொ டோளினான் றனைக்கொடு கயிலையுற் றதனாற்
கலங்கி மாய்ந்தவ ரொழிதரக் கால்விரைந் திரிந்தே
மலங்கன் மார்பினாய் நின்சபை யடுத்தன மென்றார். | 26 |
| 1576 |
கைப்ப வஞ்செவி காலர்க ளுரைத்தமை கேளா
வெப்பி னுள்ளகம் விரவுற வேந்தனீ தெண்ணும்
எப்பெ ருந்தவ மிழைத்தவ ராயினு மிறுங்கால்
நப்பு ணர்ந்தலா தேகுறார் நாட்டுமேற் கதியில் | 27 |
| 1577 |
தீய பாதகஞ் செய்தவன் றனைச்சிவ கணங்கள்
காய வாணரு நாடருங் கயிலையில் விடுதற்
கேயு மேயிஃ தென்னெனச் சித்திர குத்தன்
ஆய வான்கணக் கறிஞனை வியவரி னழைத்தான் | 28 |
| 1578 |
வந்து வந்தனை புரிந்தெதிர் வைகியக் கணக்கன்
வெந்தி றற்பெரு மானெனை விளித்ததென் னென்ன
வந்த வங்கிர னாற்றுபுண் ணியமுள தாயிற்
புந்தி யாலுணர்ந் துரையெனப் புலவுவேற் றருமன் | 29 |
| 1579 |
உருத்த நான்முத லுலந்தநாள் காறும்பா தகமே
விருத்தி யாவிளைத் திட்டதே யன்றிநல் வினையைக்
கருத்தி னானுமெண் ணிலனெனக் கணக்கனோர்ந் துரைப்பக்
குருத்து மீமிசைக் கொழுந்தெழுங் கோபங்கொண் டியமன். | 30 |
| 1580 |
இந்த மாணின்மை யியன்றபின் னிவ்வர சாட்சி
தந்த நாயகன் றாள்வயிற் சார்த்தலே யன்றி
முந்தை நாளென முறைசெயற் பாலதன் றென்னா
மைந்து நீடிய வன்கடாக் கடாய்வழிக் கொண்டான். | 31 |
| 1581 |
ஆயி ரத்தொரு நூற்றினை யடுத்தபன் னிரண்டென்
றாய வெண்ணினை நாற்றிய வரும்பெரு நோயும்
பாய பல்பரி சனமும்பின் றொடர்தரப் படர்ந்தோன்
தூய வெள்ளியங் கிரியினை மேயினன் றுனைந்து | 32 |
| 1582 |
அங்க ணெம்பிரான் றிருமுன்ன ரடல்விடை மருங்கே
அங்கி ரப்பெய ரானிறு மாப்பொடு மமர்ந்தோன்
அங்கை கூப்பிலன் மதித்திலன் சிரித்தன னோக்கி
அங்கி நீள்விழி காலநா யகன்புடை யடுத்தான். | 33 |
| 1583 |
எட்டு றுப்பினு மைந்துறுப் பினுமெதிர் வணங்கித்
தட்ட மிட்டன னடித்தனன் சதுமறைப் பொருளே
கட்டு செஞ்சடைக் கடவுளே யிறைவனே யென்று
முட்டி லாதுபல் துதிகளை முழக்கியீ தறைவான். | 34 |
| 1584 |
அளவில் பாதக மாற்றிய வங்கிரச் சிதடன்
வளநி லாவுநின் சந்நிதி வரத்தரு மானாற்
களைக ணேயெனக் கருளதி காரமென் னாகும்
எளிய னேற்குவேண் டாவினி யென்றிது புரிந்தான். | 35 |
| 1585 |
மிறைசெ யங்கிரன் விளைத்தபா தகப்பெருங் கணக்கு
முறைசெய் தண்டமு முதிர்புகழ் வளர்க்குஞ்செங் கோலும்
இறைவ கண்டுகொ ளென்றுசே வடிதனக் கடுப்ப
நிறையு மன்பொடு மிட்டனன் வணங்கின னின்றான் | 36 |
| 1586 |
நறுவி ரைச்செழுங் கடுக்கைநாண் மதிமுடிச் சடையோன்
முறுவ லித்தெறுழ் மறலிதன் முகத்தினை நோக்கித்
தெறுவ லிச்சிறு காலகே டிறம்பிய முறைமை
நிறுவல் செய்திலர் கணத்தவ ரெனவுண்மை நிகழ்த்தும். | 37 |
| 1587 |
பாத கம்புரி வாரெலாம் பதைபதைத் தஞ்சும்
பாத கம்பல கோடிகள் பயிற்றினா னேனு
மாத வம்புரி விரதரு மனதழுக் கறுப்ப
மாத வம்பெரி தியற்றிய வாய்மைய னனையான். | 38 |
| 1588 |
அன்ன மாதவம் யாதென வயிர்த்தகத் தழுங்கல்
பன்னு கின்றனங் கேள்பகட் டூர்தியங் கடவுள்
மின்னு நம்முரு வாகிய வெள்ளியங் கிரியைத்
துன்னி வைகினன் சுடர்வரை நோக்கின னிச்சம். | 39 |
| 1589 |
இறுதி வந்துழி யெறிதிரைக் காஞ்சியம் புனல்வாய்
முறுகு காதலின் மடுத்தனன் மூரியங் கரைநின்
றறுதி யாக்கைவீழ்ந் துருண்டதி னழுந்திய திகலன்
மறுவி னீற்றுமேட் டவன்றலை வாங்கியிட் டனவே. | 40 |
| 1590 |
இன்ன மாதவந் தனக்கெதிர் மாதவ முளதோ
அன்ன தாதலிற் பாதக னவனென நினையன்
மன்னி நாம்பயில் கயிலையின் மற்றவன் வருமே
துன்னு பாதகத் தொடர்புடை யானெனிற் சூழ்தி. | 41 |
| 1591 |
உறுதி யின்னுமொன் றுரைத்திடக் கேட்டிபே ரூரின்
இறுதி யுற்றவர் வசித்தவ ருடலினை யெடுத்தோர்
மறுவில் வெள்ளிமால் வரையினைக் கண்டவர் காஞ்சி
முறையிற் றோய்ந்தவர் குண்டநீ றணிந்தவர் முதலோர். | 42 |
| 1592 |
தணிப்பில் பாதகம் பற்பல சமைத்தன ரேனும்
இணர்க்க னற்கொழுந் தட்டபஞ் செனவவை யிறப்ப
மணப்ப சும்பொழில் வாங்குமிம் மால்வரை யடுப்பர்
பணைத்த பாவரென் றவர்தமைப் பற்றநீ முயலல். | 43 |
| 1593 |
ஆதி யம்புரி யெல்லையி னன்றியா ரேனுந்
தீது செய்திடி னவர்தமைச் சிக்கயாப் புறுத்துக்
கோத னுங்குமா முறைபுரி கொண்டதி காரம்
போதி யென்றனன் புரம்பொடித் தருளிய புனிதன். | 44 |
| 1594 |
மடந்தை பாகனீ தருலலு மறலிநெஞ் சுருகி
மடந்த வாதவென் பிழைபொறுத் தருளென வணங்கி
இடந்து மாலறி யாப்பதத் தன்பிடை விடாமற்
படர்ந்து தன்பதி பயின்றதி காரஞ்செய் திருந்தான். | 456 |
| 1595 |
துறந்து மேதைய ராயினுந் தோகையர் துணைத்தோள்
மறந்தி டாதவ ராயினும் வழியிலா வழியின்
இறந்த தீமைய ராயினு மிருங்கதி வேட்பின்
உறந்த போதியங் காடலா லுறுத்துவ துளதோ. | 46 |
| 1596 |
வென்ற வைம்பொறி விரதமா தவத்தினீ ரறத்தைக்
கொன்ற வங்கிரன் கதியினைக் குறுகிய துரைத்தாங்
கன்ற லம்பிய கைத்துணைக் கவுரிதன் றவத்தை
நன்றி யம்புது மறிகென நவிற்றுவன் சூதன். | 47 |
அங்கிரன் கதிபெறுபடலம் முற்றிற்று| 1597 |
வண்டு முரலு மலர்க்கடவுள் வரத்தி னுயிர்த்த சிறுவிதிதான்
பண்டு பரனை வழிபட்டுப் பயின்மூ வுலகுந் தாட்படுத்துக்
கொண்டு மகிழு மந்நாளிற் குறைவி றவத்தா னுமையாண்மற்
றண்டர் வியப்பச் சதிதேவி யென்ன வவற்கு மகளானாள். | 1
| | 1598 |
வளரு மகளுக் காறிரட்டி வருட மடுத்த பருவத்தின்
அளவி றவத்துச் சிறுவிதிநஞ் சயின்று மிடற்றிற் கணியாக்கித்
தளரு மமரர் மடமாதர் தங்கண் மிடற்றுக் கணிநிறுவு
மிளிர்பொற் சடைல வேதியர்க்கு விதியிற் புனல்வார்த் தளித்திட்டான். | 2 |
| 1599 |
தள்ளார் சிறப்பின் மகமொன்று சமைக்க முயன்று பின்னொருநாள்
நள்ளார் புரங்க ளொருநொடியி னகையிற் பொடித்த மருகனுக்குங்
கள்ளார்ந் தொழுகு மலர்க்கூந்தற் கயற்கண் மகட்கு மறிவிப்ப
விள்ளா விருப்பின் கயிலாய விலங்க லடுத்தங் கெதிர்போந்தான். | 3 |
| 1600 |
வற்றற் றலைமா லிகைப்பெருமான் வாளா திருந்தா னதுநோக்கி
எற்றுக் கிவண்வந் தனஞ்சூலி யிடுகாட் டாடி யெரியேந்தி
கற்றைச் சடிலி கங்காளி கபாலி யிவன்சீ ரறியாமே
உற்று மகளைக் கொடுத்தாமென் றுளைந்து வெகுட்சி யொடுமீண்டான். | 4 |
| 1601 |
விடமுண் டிரந்துண் டெருதேறி வியாள மதளென் பறலணிந்து
துடுமிக் குரப்பி யுழைபரசு சுடரு மருப்பா திகள் சுமக்கும்
அடலை யுருவத் தாற்களித்த வன்றே மகளை யிழந்தாமென்
றுடலை மனத்தி லிருவரையும் வெறுத்தா னுறவு பகையோரான். | 5 |
| 1602 |
மகத்தி னளிக்கு மவிப்பாகம் வடிகொள் சூலப் படையானுக்
ககற்றி யேனை யோர்க்கெல்லா மளிப்ப லவன்பா கமுமும்மைச்
சகத்தை யளிக்கு மரிக்களிப்ப லென்று தடுத்தும் பிடிவிடான்
மிகத்தன் மருங்கு விண்னவர்கண் மிடைய வேள்வி தொடங்கினான். | 6 |
| 1603 |
வேறு
கரும்புரு வரித்ததோட் கரிய கூந்தலாள்
இரும்புகழ்த் தாதையங் கியற்றும் வேள்வியை
விரும்பினள் காணவெள் விடையி னானெதிர்
அரும்பிய வன்பினா லடிவ ணங்கினாள். | 7 |
| 1604 |
யாதுநின் விழைவென விறைவி னாதலும்
மாதவண் மொழிகுவாள் வானின் மங்கையர்
பூதல மடந்தையர் குழுமிப் பொற்புறுங்
காதலன் வேள்வியான் காண்க வென்றனள். | 8 |
| 1605 |
நினக்கவன் றாதையே யானு நீள்குழால்
எனக்கவன் பகைத்தன னின்ன தாதலால்
தமெக்கெனக் குரியநீ தானுந் தெவ்வென
மனக்கொளு மெனமறுத் தமலன் கூறினான். | 9 |
| 1606 |
தக்கனார் பெருந்தவந் தவிரும் பாணியுந்
தொக்கபல் வரைக்கெலாந் தோன்றல் செய்தவ
மிக்குறு பாணியும் விளைந்த நீர்மையான்
மைக்குழல் விழைவினை மாற்று கின்றிலள். | 10 |
| 1607 |
அவாவுநின் னுள்ளக மமைந்த தில்லெனின்
உவாநெடுங் கரத்தினை யொறுத்துத் தள்ளிய
கவானுடைக் காரிகை கதழ்ந்து செல்கெனத்
தவாததொல் லுருவினான் சாற்றி விட்டனன். | 11 |
| 1608 |
உடம்படல் போன்றிறை மறுத்த தோர்ந்துமவ்
வுடம்பிடித் தடங்கணா ளுகைக்குங் காதலால்
உடம்புமென் கொடியென வொசிய மீட்டுந்தாழ்ந்
துடங்குதன் பரிசன முறவங் கேகினாள். | 12 |
| 1609 |
வந்தனள் சதியென வழங்கு தூதுவர்
முந்துபுக் குரைப்பமுன் முகத்துச் சென்றனள்
தந்தைவம் மென்றிலன் றன்னைத் தேர்ந்தவன்
சுந்தர மனைவியுஞ் சொல்லொன் றாடிலள். | 13 |
| 1610 |
மக்களும் பேசிலர் மருங்கு துன்றிய
ஒக்கலு முவந்தில ரொரும ருங்குபோய்
இக்களத் தின்னுமென் விளையு மன்னது
மிக்கறி வாமென விருத்தன் மேயினாள். | 14 |
| 1611 |
உருத்திரச் செம்மலுக் குதவும் பாகமற்
றருத்தியின் மாயனுக் களித்திட் டானவன்
மருத்திகழ் பூங்குழல் வனச மென்முகைத்
திருத்திகழ் முலையவ ணோக்கிச் சிந்திப்பாள். | 15 |
| 1612 |
வள்ளலா ரருளினை மறுத்துப் போந்தனந்
தெள்ளிய வுணர்விலஞ் சிதம்புத் தக்கனும்
எள்ளின னிறையையு மிவன்ம கண்மையைத்
தள்ளுதன் முறையெனத் தழலின் மூழ்கினாள். | 16 |
| 1613 |
துவன்றிய முனிவருஞ் சுரரும் யாவரும்
கவன்றனர் துடித்தனர் கலுழ்ந்து தக்கனாம்
இவன்றனக் கிப்பழி யெய்திற் றம்மவோ
பவன்றனை யெள்ளிய பான்மைத் தாலென்றார். | 17 |
| 1614 |
அழுங்கிய சோடைகொண் டடுத்து ளார்விடம்
விழுங்கிய தெனமதி வேறு பட்டனர்
ஒழுங்கிலாத் தக்கனும் வெற்று டம்பனாய்
எழுங்கனன் மகத்தொழி லியற்றி நின்றனன். | 18 |
| 1615 |
வேள்வியந் தீயிடை மேவி னார்க்கெலாம்
வாழ்வினை யளிப்பவண் மாய்ந்த வண்ணமோர்ந்
தாழ்வினை விடமிடற் றடக்கி கோபியாத்
தாழ்வினைச் சடையொன்று தரையி னெற்றினான். | 19 |
| 1616 |
எற்றிய சடையினின் றெரிபொன் வேணியும்
நெற்றியின் விழியுநீ டலையின் கோவைகண்
முற்றிய வுரமுமொய் படைகை யேந்திய
வெற்றியும் விளங்குற வீரன் தோன்றினான். | 20 |
| 1617 |
வணங்கின னிறைவனை மலர்க்கை வாய்புதைத்
திணங்கலர்க் கிரும்படை யெடுப்ப நேர்கலா
துணங்குறத் திருவுளத் துன்னுஞ் சேவக
வணங்கரும் பணியெனக் கருள்க வென்றனன். | 21 |
| 1618 |
மாறுகொண் டொருமகம் வளர்க்குந் தக்கனைக்
கூறுசெய் தவ்வுழிக் குழுமி னார்க்கெலாம்
வீறுசெய் தண்டங்கள் விளைத்திட் டம்மகம்
நீறுசெய் தமர்கென நிமல னேவினான். | 22 |
| 1619 |
வேறு
நிழன்றவொரு வெண்கவிகை நீடுமர சாட்சி
கழன்றுவளர் தக்கனுயிர் கையகல வீரன்
தழன்றுபல சாரதர் கடற்புறம் வளாவ
வழன்றின்மகள் பின்றொடர வைதவ ணடுத்தான். | 23 |
| 1620 |
சிற்சில கணங்கடிசை தோரும்வழி காப்பப்
பற்பல கணங்களொடு பாழிமக மாற்றும்
பொற்புறு களம்புனித வீரனுற லோடு
மற்பவுணர் வாளரனை வோருமஞர் கூர்ந்தார். | 24 |
| 1621 |
தக்கன்முடி யெச்சன்முடி யீர்ந்துதழ லிட்டான்
தொக்கவழ லங்கையொடு நாத்திர டுணித்தான்
புக்கபகன் வாள்விழி புயந்துபக லோன்பல்
ஒக்கவுக வெற்றியொரு வீரன்மதி தேய்த்தான். | 25 |
| 1622 |
நாசியொடு மதர்க ணகிற்றுணை யிழந்தார்
பேசும்வகை யென்னைபெறு வானவர் திறத்தத்
தேசினுடல் பற்பலர் சிதைந்துயி ரிறந்தார்
கூசியுயிர் கொண்டுபலர் கொம்மென விரிந்தார் | 26 |
| 1623 |
வேள்விவளர் சாலையழன் மேவவினி தூட்டித்
தாள்வினையி னேர்ந்துசம ராடுமுவ ணத்தோன்
வாள்விடு கனற்பரிதி மாயவலி காற்றி
மீள்வினை பரிந்தருளி னானிகரில் வீரன். | 27 |
| 1624 |
அன்றுவரு வீரனரி யேறென விறுப்பத்
தொன்றுவரு மாயன்முத லாஞ்சுரர்க ளெல்லா
மன்றவழு வைத்தொகுதி மானுவர்க ளென்றால்
வென்றிவிடை யான்வலியின் மேன்மையறி வாரார். | 28 |
| 1625 |
வேறு
வன்னியின் முழுகித் தக்கன் மகளெனு முறைமை நீத்த
கன்னிகல் வரைகட் கெல்லாங் காவலன் மகளாய் வைகி
மின்னவிர் சடில மோலி வேதியன் வதுவை யாற்றத்
தன்னுலத் தினிது முன்னித் தவம்பல புரியா நின்றாள். | 29 |
| 1626 |
ஆரண முறையிட் டின்னு மளவிடற் கரிய முக்கட்
பூரண ரருளால் வீணைப் புனிதமா முனிவன் போந்து
போரணி மதவே லுண்கட் புணர்முலை யுமையாள் செய்ய
தாரணி பாதந் தாழ்ந்தித் தவஞ்செய லெற்றுக் கென்றான். | 30 |
| 1627 |
வாயினான் மனத்தா னீண்ட வடிவினா லெட்ட வொண்ணாத்
தாயிலாத் தாயன் னானைச் சார்வது குறித்த தென்று
வேயினாற் புரிந்தா லன்ன வீங்குதோ ளிறைவி விள்ள
வாயினீ தமலை கேளென் றறைகுவன் வீணைச் செல்வன். | 31 |
| 1628 |
எவ்வயின் வதிந்து நீமற் றிருந்தவம் புரிந்தா யேனும்
அவ்வயி னிறைவன் மன்ற லாற்றினா னின்னைச் சேருஞ்
செவ்விநீட் டிக்கு மாற்றாற் சிறுவரை வதுவை முற்ற
ஒவ்வரும் பேரூர் வைப்பி னுஞற்றுதல் கரும மென்றான். | 32 |
| 1629 |
அங்ஙன மாக வென்னா வருந்தவ முனியைப் போக்கி
உங்ஙனந் தவங்க ளாற்று முமைமட மாது மேனைக்
கிங்ஙனந் தீர்ந்து பேரூர்க் கெய்துவ றவத்துக் கென்றாள்
எங்ஙன நின்னைப் போக்கி யிருத்துமென் றன்னை நைந்தாள். | 33 |
| 1630 |
அருகுறு பாங்கி மார்க ளன்னையை வணங்கி நந்த
மருமலர்க் கூந்த லாட்கு மாடகத் திவவு நல்யாழ்ப்
பொருவறு முனிவன் வந்து புகன்றனன் பேரூர் வைப்பிற்
கருதிய முக்கட் பெம்மான் கடியயர்ந் திடுவ னென்னா. | 34 |
| 1631 |
ஆதலால் வதுவைக் கேகு மதுதனை விலக்க வொண்ணா
போதுக வென்ப தன்றே பொருத்தமென் றுரைப்ப வன்னை
காதலின் மகளை வல்லே கைகளா லணைத்து மோந்து
நீதியிற் கணவ னார்க்கு நிகழ்ந்தது நிகழ்த்தி னாளே. | 35 |
| 1632 |
அருந்தவப் பேறு வாய்ந்த வாரணங் கென்னை யற்றேல்
வருந்துத லில்லை யென்னா மனத்திடை மகிழ்ச்சி கூர்ந்து
திருந்திய விமைய வெற்பன் றேவியங் குவப்பக் கூறி
முருந்திள முறுவற் செவ்வாய் மொய்குழன் மகளை நோக்கி. | 36 |
| 1633 |
தேவரும் பரசு மேலைச் சிதம்பர நகரம் புக்கான்
மூவரு மிறைஞ்சு முக்கண் மூர்த்தியார் விரைந்து மன்றல்
ஆவது செய்யு மாயி னவ்வயி னின்னே யன்னாய்
போவது கரும மாகு மெனப்புகன் றுரைத்துப் பின்னர். | 37 |
| 1634 |
அணிகல னமைத்த பேழை யவிரிழைத் துகில்பெய் பேழை
தணிபெறு பனிநீர்ச் செப்பு தண்ணிய சாந்துச் செப்பு
மணமலி விரையின் செப்பு மான்மதச் செப்பு மற்றும்
இணர்மலர்க் குழலி னாளுக் கெண்ணில கொடுத்துப் பின்னர். | 38 |
| 1635 |
பாங்கியர் தங்கட் கெல்லாம் பலவகைச் சிறப்பு நல்கி
ஓங்கிய படைஞர்க் கூவி யொண்டொடி முன்கை மாது
தீங்கறு பேரூர்க் கின்று செல்லுவா ளுடங்கு போந்திட்
டீங்குவந் துறுக வென்றா னெழுந்தன ரவர்க டாழ்ந்து. | 39 |
| 1636 |
புரசைவெங் களிறுந் தேரும் புரவியுந் தானை யோடு
விரசின கடைமுன் னால மிடைந்துதுந் துபிக ளார்ப்பப்
பரசுநர் பாங்கர்ப் போதப் பலசனம் விலக்கி முன்னே
கரிசில்கஞ் சுகியோர் செல்லக் கண்டவர் வியந்து நிற்ப. | 40 |
| 1637 |
குறளொடு சிந்து முன்னே குறுகுறு நடந்து செல்ல
மறமலி வாள்கை யேந்தி யாணுடை மானத் தாங்குந்
திறனுறு பேடி மார்க ளண்மையிற் றிரண்டு சூழ
நறைமலை கூந்தற் செவ்வாய் நாடக மகளி ராட. | 41 |
| 1638 |
கவரிகண் மருங்கு துள்ளக் கவிகைமே னிழற்றிச் சீர்ப்ப
அவிர்மணி வடங்கள் சுற்றி னமைத்தசாந் தாற்றி பம்பத்
தவிரருங் காதல் பூண்ட தந்தைதாய் விடைபெற் றம்பொற்
சிவிகையி னிவர்ந்து சென்றா டெள்ளியோர் மனத்துச் சென்றாள். | 42 |
| 1639 |
நரன்றுவே யுக்க முத்து நாகத்தின் மருப்பின் முத்தும்
வரன்றுவெள் ளருவிதூங்கு மருங்கெலாம் வேட ரீண்டி
முரன்றுதே னெழுந்துமொய்க்கு முதிரிறா லழித்து முக்கட்
பரன்றனிக் குமரற் போற்றும் பலவரை கடந்து சென்றாள். | 43 |
| 1640 |
பரம்பரன் றன்னை யெண்ணார் படர்பெருங் கும்பி போல
நிரம்பிய விடும்பை நல்கு நெறிவயி னியங்கு வோரை
அரம்புசெய் யெயினச் சாதியமர்ந்தபன் முரம்பு சூழ்ந்த
சுரம்பல கடந்து சென்றா டுவந்துவங் கடந்து சென்றாள். | 44 |
| 1641 |
நிரைமணி யோதை யாயர் நிகழ்த்துவேய்ங் குழலி னோசை
நுரைதயிர் கடையுஞ் சும்மை நுடங்குமென் கொடியின் முல்லை
விரைமலர் வண்டி னார்வம் வேறுவே றிசைப்பக் கேளாப்
பரையெனும் பசும்பொற் பாவை பலவனங் கடந்து சென்றாள். | 45 |
| 1642 |
முண்டக முறுக்கு விட்டு முகமல்ர்ந் திருப்பச் செந்தேன்
கொண்டுபைந் தாது பில்குங் குவளைகண் விழித்துக் காண
விண்டுபைந் தேறல் காலும் விரைக்கயி ரவம்வாய் விள்ளக்
கண்டுகண் டினிது சென்றாள் கழனிகள் பலவு மாதோ. | 46 |
| 1643 |
தாந்திரை கொணர்ந்து வீசுந் தரளமுந் துவரு முழ்கப்
பூந்துணர்த் தாது போர்க்கும் புன்னையங் கான மெல்லாந்
தேந்துளி துளித்து வாசஞ் செறித்துமென் மலர்கண் முன்னர்
ஏந்துதண் கடல்சூழ் வைப்பி னிடம்பல கடந்து சென்றாள். | 47 |
| 1644 |
வேறு
பண்டு பரமன் முடிதேடிப் பரிந்த தெண்க ணோதிமமற்
றண்டர் பெருமான் மனைவியிவ ளடியு முடியு மறிந்துநலங்
கொண்டு மகிழ்வா மெனவெங்குங் குழுமுற் றெனநீர் நிலைதோறும்
மண்டு சிறக ரோதிமங்கண் மகிழ்கூர் கொங்கு நாடடுத்தாள். | 48 |
| 1645 |
அரும்பு விரிந்த மலர்த்தேனு மாலை படுத்துக் களமர்தெறுங்
கரும்பு சொரிந்த நறுஞ்சாறுங் கலந்து கால்க ளெனவொழுகிச்
சுரும்ப ருழக்கு மலர்ப்பண்ணைத் தொகுபைஞ் சாலி தனையோம்பப்
பெரும்பை திரநித் தலும்போற்றும் பேரூ ரெல்லை நண்ணினாள் | 49 |
| 1646 |
வேறு
திருநக ரெல்லை தாழ்ந்து செழும்புனற் காஞ்சி தோய்ந்து
மருமலி மன்றம் போற்ரி வளரிர சதவெற் பேத்தி
அருவுரு வென்ன நின்ற வாதிலிங் கத்திற் பூசை
பெருகிய வன்பி னாற்றிப் பெருந்தவ மியற்றா நின்றாள். | 50 |
| 1647 |
உடங்குசென் றிறுத்த சேனை யொள்ளிய கழற்கால்வீரர்
அடங்கரு மகிழ்ச்சி பொங்க வாதிலிங் கத்தைப் போற்றித்
தொடங்கிய தவத்தி னாளைத் தொழுதருள் விடைபெற் றேகித்
தடங்கைவே ழங்கள் சூழத் தண்பனி வரையின் வாழ்ந்தார். | 51 |
| 1648 |
காலங்க டோறுங் காஞ்சிக் கடிபுன றோய்ந்து வேத
சீலங்கொண் டிமைய மாது செய்திடுந் தவத்தின் பேறு
ஞாலங்கண் டுய்யச் செய்வா னதிமதி பொதியும் வேணி
ஆலங்கொண் மிடற்றி னானோ ரந்தணக் கிழவ னானான். | 52 |
| 1649 |
வேறு
திங்களுமிழ் வெண்சுதை நிமிர்ந்தொளிர்வ தென்னத்
தங்குதலை வெண்ணரை தயங்கமதி யேபோல்
அங்கண்வளர் வெண்சிகை முடிந்ததமை வெய்தப்
பொங்குபொடி யென்னவுடல் போர்த்தநரை சீர்ப்ப | 53 |
| 1650 |
மடங்கலுரி மாறியது போன்றுமணி மார்பில்
நுடங்குபுரி நூல்குலவ நோன்மைவளர் தோண்மேற்
படங்கழுவு றாதது பகட்டுரிமெய் வேறாய்
அடங்கியது போன்மென வமைந்துசரி கிற்ப. | 54 |
| 1651 |
துவ்வமிழ்த மன்னதுவர் வாய்மொழி மடந்தை
இவ்வுருவி னேகலுறின் யாதுமிசை யாளென்
றவ்வரையி னார்த்ததுகி லைதிடைவி லக்குஞ்
செவ்வியி னெகிழ்ந்துதிகழ் வுற்றது சழங்க. | 55 |
| 1652 |
திரைந்துதசை மெய்முழுதுஞ் சென்னிகை குலைப்ப
விரைந்துவளி நாசியின் விராவவிமை நால
நிரைந்தெழ நரம்புநெடு கித்தசைக டூங்க
வரைந்தறியொ ணாதமொழி வாயிடை வழங்க. | 56 |
| 1653 |
அண்மையி னடுத்தவரை நோக்கவும கங்கைத்
திண்மைகொடு நான்றவிமை செவ்விதி னுயர்த்த
வண்மையுரை கேட்டிலது போன்றுவளர் காதின்
ஒண்மைமக ரக்குழை யொளிர்ந்துகதிர் வீச. | 57 |
| 1654 |
நேடிநெடி யோனெடி துலந்துமறி யாத
பீடுவளர் சேவடிகள் பேணுமவ னில்லாஞ்
சேடுவளர் பாரினுறல் செவ்வியல தென்றாப்
பாடுமறை யின்கழல்கள் பாதமலர் சூட. | 58 |
| 1655 |
நாளுமினி தாக்குபுகழ் நன்றிசெய வோங்கித்
தாளொடு வளைந்தனைய தண்குடை நிழற்ற
மீளியர் வெருக்கொள்வடி சூலமொரு கோலாக்
கோளிகுக ரங்கொடு குறித்தியவை சென்றான். | 59 |
| 1656 |
வில்லென வளைந்தவுட லாதரவு வீக்கும்
வல்லநெடு நாணென வயங்குதடி யின்பாற்
புல்லவெதிர் நின்றுவிடு பூசுரனை நோக்கி
நல்லவடி யாரென நயந்துமை பணிந்தாள். | 60 |
| 1657 |
வேறு
பணிந்த பார்ப்பதி
அணங்குக் கண்ணலார்
மணங்கொண் மங்கலம்
இணங்கு கென்றனர். | 61 |
| 1658 |
ஏந்தல் யாண்டையை
போந்த புந்தியென்
ஈந்து வப்பல்யான்
கூர்ந்து கூறென்றாள். | 62 |
| 1659 |
வேறு
மாசை யன்னநன் மாமை யாயென
தாசை வீசுகே னென்றி யாதலாற்
றேச மோடுமென் செய்தி யாவையும்
பேசு கேனெனப் பேசும் பூசுரன். | 63 |
| 1660 |
வெள்ளி மால்வரை மேவும் வாழ்க்கையேம்
எள்ளு றாதவெம் மில்லின் வாழ்க்கையாள்
உள்ள மேயலா லுருவு மொன்றெனக்
கொள்ளு மன்பினாள் குறைவில் செல்வத்தாள் | 64 |
| 1661 |
என்ன வாறுநா மியைந்து நின்றனம்
அன்ன வாறெலா மமையு மாற்றலாள்
கன்னி வாகனங் காமுற் றூரினுந்
தன்னை யன்றிநாந் தமிய மாகலம். | 65 |
| 1662 |
இரந்து செல்வதெம் மியற்கை யாயினும்
பரந்து வந்திடும் பண்பி னார்க்கெலாஞ்
சுரந்த காதலிற் றுறுத்துப் பல்பொருள்
புரந்து நிற்குமப் பொலிவி னீங்கிலள். | 66 |
| 1663 |
பகைய டுத்திடிற் பாரித் தெங்கர
மிகைசெய் தூணியின் விசிகம் பற்றுமுன்
நகைம ணிக்கொடி யன்ன நாயகி
தகைகொ டன்கரந் தனுவெ டுக்குமே. | 67 |
| 1664 |
இயவை நீந்துத லெய்து மாயிடிற்
பயிறல் கொண்டொரு பாலு டங்குறுஞ்
செயலிற் றீர்ந்துபின் செல்லு வாளலண்
முயறல் கொண்டுதான் முந்த வுஞ்செயாள். | 68 |
| 1665 |
அருளிச் செய்யினு மறிந்து ளோருமெம்
மருளில் கண்சுடும் வன்க ணென்பர்கள்
வெருவக் காயினு மவள்வி யன்கணைப்
பொருவில் சீதளப் பூங்க ணென்பரால். | 69 |
| 1666 |
சுணங்கு பூத்தவிர் தொய்யின் மென்முலை
இணங்கி வைகலு மின்ப நல்கினும்
அணங்கு மற்றவ ளார்வ மென்சொல்கேம்
அணங்கு மெய்ப்பசப் பகல்வ தில்லையே. | 70 |
| 1667 |
கொழுந னையலாற் றெய்வங் கொள்கலா
விழுமங் கற்பனை வீற்று மாதர்க்குத்
தொழும வட்கெனைத் தெய்வஞ் சொல்லுதல்
எழுபி றப்பினு மியற்கைத் தென்பவே. | 71 |
| 1668 |
மன்னு மக்களை வாய்ப்ப நல்கியுங்
கன்னி யென்னுமக் கவின்ப டைத்துளாள்
துன்னு வையக முழுதுந் தாடொழு
தன்னை யென்றுசொல் லருளி னெல்லையாள். | 72 |
| 1669 |
தாயுந் தந்தையுஞ் சகோத ரங்களும்
ஆய சுற்றமு மமைந்தி லேநமக்
கேயு நன்மனை யாளின் யாவையும்
மேய வாழ்க்கையே வீங்கு தோளினாய். | 73 |
| 1670 |
வேறு
பலவி ளம்புவ தென்னையெம் பலகுண மெல்லாங்
கலவு மன்னவ ளில்லையே லிலையவள் கழியச்
சுலவி யெங்கணுந் தலைவரு மோகத்தால் வேறாய்
மலிந ரைதிரை மூப்பெமை மருவிய தணங்கே. | 74 |
| 1671 |
கல்ல ரத்தமெய் யூட்டிய காழக முடுத்து
வில்ல டுத்தபல் வார்சடை விளங்குற முடித்து
நல்ல டுத்தமெய்த் தவம்பல நாள்கழி வெய்த
வில்ல டுத்தவம் மாதுற வியற்றின மதனால் | 76 |
| 1672 |
அனைய மாதுகொ லவளெழிற் சாயைகொ லென்ன
நினைய நின்றிடு நின்வயி னடுத்தன மினிமேல்
இனைவ தொன்றிலை யின்பமே யெமக்கடுப் பனவாம்
புனைமொ ழித்திற மன்றிது பூங்குழற் கோதாய். | 76 |
| 1673 |
பெண்மை பெற்றவர் தமக்கெலாம் பெருமகிழ் வளிக்குந்
திண்மை பெற்றதோட் கணவர்தங் கலவியிற் றிளைத்தல்
ஒண்மை மற்றஃ தொழிதர வனத்திடை யுணங்கி
வண்மை சிந்துற வருந்துவ தோவியன் மடவாய். | 77 |
| 1674 |
வாச நெய்த்தலை யுரைத்துவண் சீப்பினா னீவிப்
பூசு தண்கடிக் காசறை பொழிந்தல ரணிந்து
தேசி ருட்குழன் மகிழ்நற்குப் பாயல்செய் யாமை
ஊச லஞ்செவி யாய்சடை யுறுத்துத லழகோ. | 78 |
| 1675 |
குவவு வாணுதல் குங்குமத் திலகமேற் பொறித்துக்
கவவு மாமணி யிலம்பகங் கவினக்கால யாத்திட்
டவவு நாயக னங்கைநீ வுதல்படுத் தாதே
உவவு மாமதி முகத்தினா யடலையூட் டுவதோ. | 79 |
| 1676 |
அரிப ரந்தவாட் டடங்கணஞ் சனத்தக வெழுதி
உரிப ரந்தநா யகனுரு வுவப்புறக் காணா
தெரிப ரந்தவென் றூழெதி ரேறவார் புருவ
முரிப ரந்துற விடுத்துநீ முயறலுந் தகுமோ. | 80 |
| 1677 |
நறுவி ரைத்தகா லேகமு நனைமது கரங்கள்
பெறும லர்ச்செழுந் தொங்கலும் பேணிய காந்தன்
முறுகு மெய்க்கடி மோந்துமோந் தின்புற லன்றி
வறுமை நாசியி னிறுவத லாகுமோ மடந்தாய். | 81 |
| 1678 |
திருந்து வாசனை செறித்தபா கடைநனி தின்று
முருந்து வென்றொளிர் முறுவலாய் செழுந்துவர்ச் செவ்வாய்
விருந்துண் டன்பனார் வியப்பமிக் கமிழ்தரு ளாதே
வருந்த மந்திரங் கணித்துணங் குதல்வழக் காமே. | 82 |
| 1679 |
மகர வாய்க்குழை யணிந்தருண் மவுணர்வாய் மொழியுந்
தகர வார்குழ லவருழை யார்வந்து சாற்றும்
புகரி லாதமென் றீஞ்சொலும் புகாமைவீழ் செவிகள்
பகரு நீள்வனத் துழனியுங் கேட்பது பண்போ. | 83 |
| 1680 |
துன்பெ லாந்தபத் துணைவனார் கலவியின் சுவையும்
அன்பி னாலவர் புரியுமா தரவுமுள் ளகங்கொண்
டின்ப மார்ந்தெழின் முகமல ராதிருந் தியான
வன்பி னல்கிய வுலத்தொடுங் குவிவதோ வனிதாய். | 84 |
| 1681 |
பூக மொத்தொளிர் மிடறுமங் கலியநாண் புணர்ந்து
போக மொத்தெழப் புட்குரல் பயிற்றுபு காம
தாக மிக்கறத் தலைவனார்க் கமுதளி யாதே
வேக முற்றழல் வறல்செய மெலிவதோ தோகாய். | 85 |
| 1682 |
அங்க தங்களு மவிர்மணிக் குருகும்பொற் றொடியுங்
கங்க ணங்களுங் கதிர்பொழி யாழியுஞ் செறித்து
மங்க லந்திகழ் கேள்வனா ருடல்வளைத் தணைத்துத்
தங்கு கிற்றிலா திருப்பதோ தடங்கரந் தையால். | 86 |
| 1683 |
களப மங்கையிற் கொட்டியுங் கமழ்நறுந் தாது
வளர வட்டியும் வரித்துமா மணிவட மணிந்தும்
இளகி நண்பனா ரிறுகுறத் தழுவியின் புறாமே
விளர்தி றந்தகு மோமுலை மென்கொடிப் பாவாய். | 87 |
| 1684 |
மணிவி ரிச்சிகை பருமம்வண் கலாபமே கலையு
மணிசெய் காஞ்சியும் பட்டுமிட் டழகுசெய் யாமே
பணிவி ரித்தபை பாற்றிய நிதம்பம்வெண் டூசிற்
பிணிப டுத்தமை பிழையலா தழகுகொல் பேதாய். | 88 |
| 1685 |
சிலம்பு கிண்கிணி பரியக மலத்தகந் திருத்தி
அலம்ப வன்பனார் கலவியி னாடிமென் மலர்த்தாள்
புலம்பு வந்துழிப் புலந்தவர் சென்னியிற் பொறியா
திலம்ப டத்தவிர் விப்பதோ விளிமொழிப் பாவாய். | 89 |
| 1686 |
சொன்ன பல்வகை யுறுப்புடைத் தொழிலெலாந் துலங்கப்
பின்ன ரன்பரோ டாடுது மெனப்பெரி திருப்பிற்
கன்னி யித்தகு மிளமையுங் கழிதரா திருக்கும்
என்ன வெப்பெரு நூல்களு மியம்பிய திலையே. | 90 |
| 1687 |
வாய்ந்த நுண்ணறி வுடையரே யாயினும் வளர்நூல்
ஆய்ந்த கல்விய ராயினு மறிவிலார் மடவார்
தேய்ந்த மெல்லிடை யாய்திகழ் கவினலம் வாடச்
சாய்ந்து வேறுறத் தவம்விளைக் கின்றனை யதனால். | 91 |
| 1688 |
வனப்பி ழக்கினு மிழக்குக வவாவினை யுரைத்தால்
தனைக்கொ டுப்பலென் றாய்மட வாய்நினைத் தழுவ
நினைத்த டுத்தன னீயஃது இசைந்திலை யாயின்
மனத்து வாய்மையி னிழந்தனை மாதவம் விளைத்தென். | 92 |
| 1689 |
உருக ணத்துநின் கண்ணரு ளுதவுறா தொழியின்
மறுக ணத்தினிவ் வடிவெமக் குதவுறா மாயுந்
தெறுகொ லைப்பழி தேமொழி சிவணுநிற் சிவணிற்
பெறுத வபபய னளித்திடுந் தேவரார் பேசாய். | 93 |
| 1690 |
வேற்று நீடுரு வெடுத்துறும் விண்ணவர் பெருமான்
சாற்றும் வாய்மொழி கேட்டருட் டையல்பூ சுரனிப்
போற்று மாக்கைய னாகியும் புணர்ந்தகா மத்தான்
ஆற்றி லானென வசித்தெதி ரறைகுவ ளானாள். | 94 |
| 1691 |
வேறு
நரைத்துமெய் நடுக்குற நண்ணும் வேதியா
உரைத்தமை நன்றுநன் ரொருத்தி கானகம்
புரைத்தகன் னிகையெனப் புந்தி கோடிகொல்
தரைத்தலைத் தவத்தையார் தாழ்த்து நீர்மையார். | 95 |
| 1692 |
இளமையு மிறக்குங்கொ லெடுத்த மாதவந்
தளர்வற முற்றுமேற் சார்ந்த மாணிக்கன்
றளவுசெ யெண்ணிரண் டாண்டெஞ் ஞான்றுமே
வளர்தர வளித்தவன் வரத்தைத் தேர்கிலாய். | 96 |
| 1693 |
ஆக்கையும் வாக்குமென் னகமும் வார்நுதல்
நோக்கினார் தமக்கென நுதலி வைத்தனன்
தீக்கெதி ரவர்மணஞ் செய்வ தில்லையேற்
போக்குவல் பொழுதெலாந் தவங்கள் போற்றியே. | 97 |
| 1694 |
எடுத்தவிப் பவத்திடை யெம்பி ரான்மண
மடுத்தில தாயினு மந்த ணாளகேள்
தொடுத்தவித் தவத்தின்மேற் றோற்றத் தாயினும்
விடுத்திட லருங்கடி மேவத் தக்கதே. | 98 |
| 1695 |
சிலபக லாயினுந் தவஞ்செய் யாதுறு
பலபகற் சிறியவர் பால ராவதிற்
பலபக லாயினும் பரிந்து நோன்பினாற்
சிலபகன் மேலவர்ச் சேர்ச்சி செம்மற்றே. | 99 |
| 1696 |
இளமையி னழகினி னெதிரில் செல்வத்து
வளமையின் மிக்கவா னவரு நஞ்சமார்
களனடி கருதுமென் காமர் வீழ்கலார்
விளரறி வினையெனை வீழ்தி வேதியா. | 100 |
| 1697 |
ஈசனார் காதலி யென்றும் வேதியா
ஆசையை வெறுத்திலை யதிக பாதகம்
பேசிய நூல்வழி சிறிதும்பேணிலை
மாசுசெ யுடலென மடமு மூத்தனை. | 101 |
| 1698 |
காதன்மிக் கடுத்துழிக் கற்ற கல்வியின்
ஆதரு பயனுமங் கடுப்ப தில்லென
மூதறி வுடையவர் மொழிந்த சொற்பயன்
வேதிய நின்னிடை விளங்கக் கண்டனன். | 102 |
| 1699 |
இத்தினத் தெந்தநா ழிகையின் மாயுமோ
அத்தகு நின்னுயி ரார்வ வேலையின்
மொத்துண விடுப்பதோ முதல்வன் றாளிணை
பொத்துற விடுப்பது போக்கிப் பூசுரா. | 103 |
| 1700 |
ஆடிய கூத்தர்பா லமைத்த காதலர்
பீடிய றவத்தினைப் பேதித் தல்லதை
நாடிய தீயர்பா னாட்டும் வாய்மையுங்
கோடிய தீமையே குறிக்கின் விப்பிரா. | 104 |
| 1701 |
பிறர்மனை யார்தவம் பேணி னாருழை
முறுகிய காதலின் மோகித் தார்தமை
இறுதிசெய் திடிற்பய னென்னை நின்னுயிர்
அறுதியுற் றாலதி னாவ தென்கொலாம். | 105 |
| 1702 |
பாங்கியர் திருப்பள்ளித் தாம மாதியில்
நீங்கினர் வருகுவர் நிற்றி யேலிவண்
தாங்கருந் தண்டங்கள் சமைப்பர் பைப்பய
வாங்குநின் னிருக்கையை யடுப்பச் செல்கென்றான். | 106 |
| 1703 |
பிணிமலர்க் கருங்குழற் பெரிய பூண்முலைப்
பணிமொழிப் பார்ப்பதி பகர்தல் கேட்டொளிர்
மணிநிற வண்ணனும் வணங்கும் விப்பிரன்
துணிவொடு மவளெதிர் சொல்லல் சொல்லினான். | 107 |
| 1704 |
வேறு
மழலையந் தீஞ்சொ னங்காய் வட்வினை நோக்கி யந்தோ
கிழவனென் றெம்மை யெண்ணிக் கீழ்மைசெய் தெள்ளி நின்றாய்
பழகிய காமந் துய்ப்பப் படர்ந்துநீ யிசைந்தா யாகில்
அழகிய காளை யாவ லஃதுநீ பின்பு காண்டி. | 108 |
| 1705 |
நிற்றொழு மேவன் மாதர் நீங்கினார் வந்து சால
முற்றின ரடர்க்கத் தக்க மூப்பினை யுடையே மாகில்
பற்றிய மனமே கொண்டு படர்குவ மல்லேங் கண்டாய்
செற்றிய மலர்மென் கூந்தற் றேமொழிப் பாவை நல்லாய். | 109 |
| 1706 |
தேவர்கள் குழாம னைத்துந் திரளினுஞ் சீற்றத் துப்பிற்
காவலர் குழுக்கண் முற்றுங் கஞலினுங் கண்ணின் றெம்மைப்
போவது புரிய வல்லார் பூவைநின் வதுவைக் கோல
மாவது புரிந்திங் கல்லா லகல்கில மடியொன் றானும். | 110 |
| 1707 |
தகவறு பயிக்கம் புக்குத் தளர்ந்தழுந் தொழிலை யந்தோ
புகலுருத் திரப்பேர் பெற்றுப் புகழ்வெவ்வே றுருவு தாங்கிப்
பகுபெரு வாய பூதம் பலபரி சனமாக் கொண்டு
நகுதலை யிறகு கங்கை நகைமதி கபால மங்கி. | 111 |
| 1708 |
பன்னக மென்பு கோடு பரசத ளோடு தாங்கிப்
பொன்னுருச் சாம்பல் பூசிப் பொருவிடை யூர்ந்து நஞ்சுண்
டுன்னருங் கனலி னாடு முழைமழுக் கரக்கங் காளி
என்னினு மழக னேயோ வென்னவற் காசை கொண்டாய். | 112 |
| 1709 |
என்றுவேற் றுருவாய் வந்த விறையவ ரிழித்துக் கூறுந்
துன்றிய பொருள்கட் கெல்லாந் துகளில்கா ரணங்கள் காட்ட
நன்றுற வலித்தா ளென்ப நகுகதிர் முத்த மூரன்
மன்றலங் கூந்தல் வேய்த்தோள் வளரிளங் கொங்கை மாது. 3 | 113 |
| 1710 |
வேறு
நரைத்த வெண்டலை வேதிய நல்லவர் போல
விரைத்த வெண்பொடி சாதன மணிந்தனை விமலர்க்
குரைத்தி மாசுரை யப்பொரு ளுற்றகா ரணங்கள்
தெரித்துங் கேளெனச் செப்புவாள் சினமொழி வாயாள். | 114 |
| 1711 |
கரும மாற்றுநர்க் கதன்பயன் கலந்துநின் றளிக்கும்
பொருவில் காரணன் போற்றுறுங் கருமமே பயனை
அருளு மாலெனு முனிவரை யாளுதற் பொருட்டு
மருவு தாருக வனத்திடைப் பயிக்கம்புக் கனனால். | 115 |
| 1712 |
பகர்ந்த தன்றியே வயிரவன் கூற்றினும் பயிக்கம்
புகுந்து ளானது தன்னையும் பூசுர கேண்மோ
முகுந்த னான்முக னிருவரு முன்னொரு நாளில்
திகழ்ந்த மேருவி னொருமருங் கிருந்தனர் சிறப்ப. | 116 |
| 1713 |
ஆய காலையி னமர்ரு முனிவரு மடுத்து
மாயை காரண மாகிய வையகந் தனக்குத்
தூய னாகிய தனிமுத லியார் சொல்லு வீரென்
றேயு மாறெலா மிறைஞ்சினர் தொழுதெதிர் நின்றார். | 117 |
| 1714 |
செருக்கு மீக்கொளுந் திசைமுகன் பிரமம்யா னென்றான்
தருக்கி மாயவன் யானலா லிலையெனத் தடுத்தான்
ஒருக்கு றாமனத் தின்னணங் கலாய்த்துழி யுலக
முருக்கு நாயகன் முன்னெழுந் தருளினா னன்றே. | 118 |
| 1715 |
இரியல் போயின னாரண னிருந்தய னிகழ்ந்தான்
திரியு மூவெயில் சிந்திய சேவகன் வெகுண்டான்
உரிய காரியங் குதித்திகழ் வுரைத்திடு மைந்தாம்
பெரிய நீண்முடி நகத்தினாற் கொய்துகை பிடித்தான். | 119 |
| 1716 |
முனிவர் வானவர் தருக்கெலா முடித்தருள் கொடுப்ப
நனியு லாயுதி ரப்பலி நனந்தலைக் கபாலத்
தினிது வாங்கின னிவைபலிக் குழந்தவா கபாலம்
பனவ வேற்றதும் பகர்ந்திடப் பட்டதா லீங்கே. | 120 |
| 1717 |
உருவெ னப்படும் பாவநீள் கடலினின் றுயிரைத்
திரமெனப்படு மருட்கரை சேர்த்தலின் மறையோய்
பரனெ னப்படு வாற்குருத் திரப்பெயர் பயிலும்
அரனெ னப்படு மவன்வடி வத்தரும் பெறுவார். | 121 |
| 1718 |
மருத்து நண்பின னழுதனன் மற்றவற் கதனால்
உருத்தி ரப்பெய ருற்றதவ் வொலியழற் கல்லால்
திருத்து மப்பெயர் பிறருழைச் செல்வதொன் றன்று
கருத்த ழிந்தவ னழுததுங் கட்டுரைத் திடுவாம். | 122 |
| 1710 |
தேவர் தெவ்வவு ணரைத்தெறச் செல்லுழி யொருநாட்
பாவ கன்புடைப் பொருளெலாம் பதித்துப்பின் மீண்டு
மேவி நல்கென விசைந்திலான் வெய்தவ ரலைப்ப
வாவ மற்றவ னழுதன னருமறைக் கிழவோய். | 123 |
| 1720 |
வேறு வேறுரு வெடுத்தன னென்றிவிப் பிரகேள்
கூறு மாருயிர்க் கறிவினைக் கொளுத்துவா னவற்றின்
ஏறு பாகபே தங்களுக் கியையவெவ் வேறு
நீறு பூசிய நிருமலன் றிருவுரு வெடுத்தான். | 124 |
| 1721 |
விளங்கு தாருக வனத்திடைப் பலிக்கென மேவித்
துளங்கு நூலிடை மாதரார் தொன்னிறை யழிப்பக்
களங்கு லாவிய கண்டரைக் காதுது மெனத்தீ
துளங்கு லாவிய முனிவர ரொலிதழல் வலர்த்து. | 125 |
| 1722 |
வேங்கை மான்மழு வியாளம்வெண் டலைதுடி செந்தீ
தாங்கு நீள்வலி முயலகன் றமைவிடு மந்நாள்
ஓங்கு பாரிடத் திரளையு முகைத்தன ரவற்றை
நீங்கு றாதபல் பரிசன மாக்கின னிமலன். | 126 |
| 1723 |
உடுத்த தோறலை மன்மழு வுரகந்தீ யிவையும்
எடுத்து வேதிய கூறிடப் பட்டன வீங்கு
நடித்து மான்முத லோர்க்கரு ணனிவழங் கிறைவன்
முடித்து ளானிற கென்றனை யதுமொழிந் திடக்கேள். | 127 |
| 1724 |
அண்டம் யாவையு மகட்டிடத் தொடங்கிய வாற்றன்
மண்டு மோர்பகா சுரனுயிர் மாட்டிவா ரிறகு
கொண்டு வேணியிற் செருகினன் குறையறு வலியோர்
கண்டு தீயன கருதுறா தடங்குதற் பொருட்டே. | 128 |
| 1725 |
எருக்கு வேய்ந்தவ னிரும்புன லேற்றது கேளாய்
ஒருக்கு மாமனப் பகீரதற் குதவிய ஞான்று
தருக்கி னானில மழிதரச் சார்வது நோக்கி
மருக்கொள் வேணியி னொருமயிர் நுதியிடை மடுத்தான். | 129 |
| 1726 |
தாரை மாதர்மூ வொன்பதின் மரையுந்தந் திவர்பால்
வார நீவலை யென்றமை மறுத்துரோ கிணிபாற்
சார நோக்கியத் தக்கனா ரிடும்பெருஞ் சாபந்
தீர வேத்தலிற் றிங்களை முடித்தனன் செம்மல். | 130 |
| 1727 |
ஊழி வந்துழி யும்பரை நுதற்கணி னெரித்துப்
பாழி யென்புவெண் டலைபொடி பராபரன் றனது
வாழி நித்தியத் தியல்புமற் றவரநித் தியமுங்
கேழில் வையகந் தெரிந்துய்யக் கிளர்ந்துரு வணிந்தான். | 131 |
| 1728 |
அரியை வேதனை யொருமுறை யழற்றியென் பாதி
உரிய மேனியி னணிந்திடு மொருமுறை கரத்தின்
மரிய சூலத்தி னொருமுறை மடுத்துழி யவர்தங்
கரிய வார்சிகை மருமத்துக் காமர்நூ லாக்கும். | 132 |
| 1729 |
மாய னாதியர் தமையெரி வாயிடை மடுத்த
தூய தீவனத் தானந்த மீக்கொளத் தொண்டின்
மேய சாரதர் சூழ்தர விளிந்தவர்க் குறுதி
ஏயு மாறினி தாடின னிறையிலா விறையோன். | 133 |
| 1730 |
என்பு வெண்டலை மாலைநீ றணிந்தது மிருவர்
வன்பு மல்குட லணிந்தகங் காளியா மரபுந்
துன்ப மிக்குயிர்த் தொகைக்கறச் சுடலையா டியது
மன்பி லந்தண வறிந்தனை யேமற்று மறிமோ. | 134 |
| 1731 |
இரணி யாக்கனை யிறுத்திடு மாயனாம் வராக
முரணி னீளுல கலைத்தலின் மோலிவா னவர்கள்
அரண நீயென வடர்த்தொரு கோட்டினை வாங்கிச்
சரண மேத்துற விடுத்துரத் தணிந்தனன் றலைவன். | 135 |
| 1732 |
வேத னார்வரம் பெறுகயா சுரன்விய னுலக
மோதி வாரணா சியுந்தப முன்னியங் கெதிர்ந்த
நாத னார்தமை விழுங்கின னாதர்கீண் டதனைச்
சோதி மேனியிற் போர்வையாக் கினர்சுரர் போற்ற. | 136 |
| 1733 |
மண்டு போரிர ணியனுயிர் குடித்தமான் மடங்கல்
அண்டர் யாரையு மலைத்தலி னதனுயிர் குடித்துத்
துண்டமாகிய சிரஞ்சிரத் தணிந்துரி சுடுநஞ்
சுண்ட நாயக னாக்கின னுத்தரா சங்கம். | 137 |
| 1734 |
காரி கூற்றினுங் கண்ணுத லுலகெலா மளந்த
வேரி தூங்குபைந் துளவனார் வெரினெலும் பெடுத்துச்
சோரி தூங்குகைத் தண்டமாச் சுடர்தர வணிந்து
வாரி நீளுரி யாக்கினன் மணியுருக் கவயம். | 138 |
| 1735 |
கடலின் வானமிழ் தெடுத்தநாட் கச்சப வுருவாய்
உடலு மாயனை யுலகெலாம் வியப்புற வொறுத்துப்
படலை யோட்டினைப் பராபரன் பைத்தவா ளரவத்
தொடலை மார்பிடை யணிந்தனன் சுடர்ந்தபூ ணாக. | 139 |
| 1736 |
உலகம் யாவையு மொடுங்குழி யிறப்பினுக் கஞ்சி
அலகி லாவறக் கடவுளா னேறென வடுப்பச்
சுலவு சோமுகா சுரனுயிர் தொலைத்தமீன் றருக்க
விலகு வாள்விழி சூன்றவ னேறியூர்ந் தனனால். | 140 |
| 1737 |
அடங்க லார்புர மழித்தஞான் றாழித்தேர் முரிய
மடங்கு றாவிறன் மாயனு மேறென வணங்கத்
தொடங்கு பூசையி னொருமலர் சோர்தர விழிகொண்
டிடங்கொணேமிமுன் னளித்தவ னிவர்ந்தனன் மறையோய். | 141 |
| 1738 |
தரங்க வார்கட லமிழ்துணச் சார்ந்துமுன் கடைந்த
வரங்கொ டேவர்கள் விடமெழ வல்விரைந் தோடி
இரங்கு நாதவென் றிரத்தலு மினிதுகண் ணோடிப்
புரங்கொல் சேவகன் பொருக்கென வதனைவாய் மடுத்தான். | 142 |
| 1739 |
வேறு
நின்றுபல் லுயிர்க்கு மின்ப நிகழ்த்துதற் கிறைவன் கொண்ட
துன்றுபல் பொருள்க டம்மாற் சுந்தர னலனோ வென்ன
நன்றுமை யுரைத்த லோடு நரைதிரை மூப்பு மாறி
வென்றிவெள்விடையி னின்றார் விரிபொரு ளனைத்து நின்றார். | 143 |
| 1740 |
அச்சமும் வியப்புந் தோன்ற வசலமீன் றெடுத்த நங்கை
நச்சிய வுளத்தி னோடு நான்மலர்ப் பாதம் போற்றிக்
கச்சிள முலையிற் கண்கள் கதுவுறச் சென்னி கோட்டிப்
பச்சிளங் கொடியி னொல்கிப் பண்பொடு மெதிரே நின்றாள். | 144 |
| 1741 |
வானவர் மலர்பூ மாரி பொழிந்தனர் வணங்கி நின்ற
தேனலர் கோதை யாளைச் சேவுகைத் தருகு சென்று
கானமர் கூந்த னல்லாய் கலங்கலை யென்று கையால்
ஏனவெண் கொம்பு பூண்டா ரெழீஇயுட றைவந் திட்டார். | 145 |
| 1742 |
முருகுயிர் கமலம் வென்ற முழுமதி முகத்தி னாடன்
ஒருகரங் கரத்தாற் பற்றி யுவளக மருங்கு போதந்
திருவியங் கவளை வைய மிணையடி யிறைஞ்ச நின்றார்
பொருவறு போதி நீழற் பூரணப் பொருளா யுள்ளார். | 146 |
| 1743 |
வரையினுக் கரைய னீன்ற மாதுமை தவங்க ளாற்றி
விரையநா யகனைப் பெற்ற விழுத்தகு காதை சொற்றாம்
புரையிலீ ரனையாண் மன்றல் புகலுதுங் கேண்மி னென்னத்
தரைவளம் பெருகச் சூத மாதவன் சாற்ற லுற்றான். | 147 |
கெளரி தவம்புரி படலம் முற்றிற்று.
| 1744 |
சுணங்கு பூத்த துணைமுலைப் பார்ப்பதி
அணங்குக் கார்வ மளித்தருள் வள்ளலார்
கணங்கொண் டாருங் களிப்பொடுங் காணிய
மணஞ்செய் காதல்வைத் தார்திரு வுள்ளமே | 1 |
| 1745 |
ஆர ணங்க ளளந்தறி யாதவர்
ஏர ணிந்த விசைமணி யாழெழூஉ
நார தப்பெயர் மாதவ னண்ணுமா
சீர ணிந்த திருவுளஞ் செய்தனர். | 2 |
| 1746 |
கட்டு வார்சடை யுங்கமழ் பூதியும்
இட்ட வக்க வடமு மிலங்குறச்
சட்ட நாரத மாமுனி சார்ந்தெதிர்
முட்டி லாவழி பாடுமு டித்தனன். | 3 |
| 1747 |
நகுமு கத்தின ராயரு ணாதனார்
மகதி வீணையி னாய்மண நந்தமக்
ககில லோகத்தி னாருமிங் கண்முரப்
பகர்தி போதி யெனப்பணித் தாரரோ | 4 |
| 1748 |
தொழுத்தை யேனுய்ந் துளேனெனத் தொன்முனி
வழுத்தி யேகினன் மற்றெம் வதுவைக்கு
முழுத்த நாமே முழுக்கவின் செய்துமென்
றழுத்தி னார்திரு வுள்ளத்தி னண்ணலார். | 5 |
| 1749 |
புதுவ தாக நகர்கவின் பூப்பவும்
வதுவை மண்டப மாதி வயங்கவும்
விதுவ ணிந்தவர் வீழ்ந்தனர் வீழ்தலும்
எதிரி லாதவை யெண்ணியாங் கெய்தின. | 6 |
| 1750 |
வேறு
உருத்திரர் பலரு முவகையின் வதிய வுயர்சிவ லோகமுஞ் சமழ்ப்பத்
திருத்தக விளங்கிற் ரொருபுற மொருபாற் றிருமறு மார்பனு மயனுங்
கருத்தமர்ந் திருப்ப வைகுந்த வுலகுங் காமரு சத்திய வுலகும்
வருத்துவ திதுவென் றுள்ளுடைந் தழிய வயங்கிய தாதிமா நகரம். | 7 |
| 1751 |
இந்திர னங்கி யியமனே நிருதி யீர்ம்புனற் கடவுள்காற் றிறைவன்
நந்திய நிதிக்கோ னலங்கொளீஇ சான னென்றிவர் நண்ணினர் வதியச்
சுந்தர விருக்கை கிழக்கினைத் தொடங்கிச் சொல்லிய வடகிழக் கீறா
அந்தரத் தவர்க ளிருக்கைக ணாண வமைந்ததா லாதிமா நகரம். | 8 |
| 1752 |
ஏனைய வுலகின் விண்ணவ ராதி யெனையவரு மிருந்தனர் மகிழ
ஏனைய வுலக மனைத்துமுட் கோட்டத் தினையவெவ் வேறிருக் கைகளாய்ப்
பானலொண் குவளை பங்கய மாம்பல் பலமலர் பொய்கையுட் டழுவித்
தேனகு மலர்ப்பூஞ் சோலையும் பிறவுஞ் செறிந்ததா லாதிமா நகரம். | 9 |
| 1753 |
நனையவிழ் தருவோ ரைந்துமற் றிரண்டு நிதிகளு நளிர்ச்சிந்தா மணியும்
புனைபுகழ்க் காம தேனுவும் வரங்கள் புக்குநின் றேற்பவே றாக
அனைவரும் வியப்ப வைந்தரு வாதி யொரோவொரு பொருளள விலவாய்
மனைதொறும் வதிந்து வேட்டவேட் டாங்கு வழங்குவ தாதிமா நகரம். | 10 |
| 1754 |
அன்றெழு கங்கை யனைத்துமீப் போர்ப்ப வகல்கென விலக்குவ போன்று
நின்றெழு கொடிக ணுடங்கின நுடங்கு நெடிங்கொடிக் காற்றில தாகி
ஒன்றுமக் கங்கை வீற்றுவீற் றாகி யொர்மண விழைவினின் றாங்குத்
துன்றிய தரளக் கோவைக டூக்குந் தோரண நிரைதுவன் றினவால். | 11 |
| 1755 |
புழுதிமிக் கவிய விரைப்பனி நீரும் புழுகுஞ்செங் குங்குமச் சேறும்
விழுதுசெய் கலவைச் சாந்தொமோ ராங்கு வெற்றிட மறவெங்கு மெத்திப்
பழுதறு செம்பொற் சுண்ணமு மலரிற் பம்பிய நறும்பசுந் தாது
முழுதுமுள் ளீரந் துவரமே லட்டி மூதெழில் வாய்ந்தன வீதி. | 12 |
| 1756 |
கழிவலம் படைத்த வெமக்குமே லாகக் கடந்தபொன் னுலகுவாழ்ந் திருக்கை
அழகிய தாமென் றெழுந்துவிண் முழுது மடாதமைந் திருப்பவீ திகளின்
விழிகளை மறைத்து நின்றன போல விரைநடைக் காவண மோங்கி
ஒழுகின நிரைநீர்க் கும்பமும் புகையு மொளியுமற் றனைத்துமுட் டழுவி. | 13 |
| 1757 |
தமனியப்பொடியு நறுவிரைத் தாதுஞ் சாந்தமு நிறைபுனற் றசும்பும்
நிமிர்பொரிக் கலனும் பாலிகைத் திரளு நீளொளி விளக்கமும் புகையும்
உமிழ்சுவைக் கனியும் பாகடை பிறவு மோங்குகா வணத்துள்வே திகையின்
அமர்வன நெடுமால் வயிற்றடக் கியஞான் றகிலமு மடங்கின போன்றே. | 14 |
| 1758 |
உலகெலாந் தன்னை யன்றிவே றிலையென் றுறழ்தரக் காட்டுமா மாயை
நிலையினுட் புகுந்து பார்க்குநர்க் காங்கு நெடும்பயன் கிடைக்குமா போல
அலர்பொழிற் பரப்புட் புகுநருக் கெல்லா மளவிலா வரும்பெரும் போக
மலர்தரு தடமும் புளினமே டையுஞ்செய் வரைகளும் பிறவுமல் கினவே. | 15 |
| 1759 |
இழுக்குவ புழுகுஞ் சந்தனச் சேறு மெரிமணிச் சிவிறியின் வாங்கி
ஒழுக்கிய பனிநீர் விரவுகுங் குமமு மூட்டின ருகுத்தவஞ் சனமுங்
குழுக்கொடு பதங்க ளிடறுவ மணிச்செய் கோவைகள் சிதர்ந்தவுங் கலனுஞ்
செழுக்கடி மலரின் றொங்கலு மல்லாற் சேதக முலமுமாங் கிலையே. | 16 |
| 1760 |
மணிகளுந் துகிலும் வசமென் றொடையும் வாழையுங் கமுகும்வார் கொடியும்
அணிநிலை நெடுந்தேர் நிரைநிரை யாக வகன்மனை வாயில்க தோறுந்
துணிகதி ரெறிப்ப நின்றன விண்ணுந் தொழுதெழ வாவயின் வதியும்
பிணிமலர்க் கூந்தன் மாதரா ரல்குற் பெற்றிகற் றிடவடுத் தனபோல். | 17 |
| 1761 |
சந்தனச் செச்சை யெறிவன பனிநீர் தடங்கையிர் றூவுவ மேலாற்
கொந்தொளிச் சுண்ணம் வீசுவ மணியின் கோவைசுற் றழுத்துசாந் தாற்றி
பந்தியி னேந்தி யசைப்பன கவரி பாங்குற விரட்டுவ கவிகை
அந்தில்வந் தனைவோர் தமக்குறக் கவிப்ப வனைத்தும்பா வைகளிடந் தோறும். | 18 |
| 1762 |
குணிலெடுத் தொருவ ரெறிதரா தியல்பிற் குளிறுவ முரசங்க ளெங்கும்
பிணிநரம் புலரா திசையெழீஇ யின்பம் பெருக்குநல் யாழின மெங்கும்
அணிகயி றசையா தவிர்மணிப் பாவை யாடல்செ யரங்குக ளெங்குந்
துணியுமைம் பொறியும் புலனுக ராது சுவையெழக் களிப்பன வெங்கும். | 19 |
| 1763 |
குழைகளும் பூணும் பருமமுந் துகிலுங் கோதையுந் தொடிகளு மற்றை
இழைகளு மணிய வெடுத்திகு ளையர்பா லெய்திய மாதரார்க் காங்குப்
பழையன வணிமெய்க் கரந்திடப் புதிய படரொளி யணிகண்மெய் யினவாய்த்
தழையழ கெறிப்ப நோக்கினர் மகிழ்ந்து தமதணி யெறிவதெவ் விடனும். | 20 |
| 1764 |
பயிக்கமுற் றுழல்வோர் வறுமையிற் கவல்வோர் பருவரற் பிணியினுற் றழிவோர்
வயக்கமி லுருவோர் மகவிளம் பருவ மன்னினர் மூப்பின ரெல்லாந்
தயக்கமுற் றமைந்த தருணராய் வெறுக்கை தழைத்தவ ராய்ப்பிணி யிலராய்
நயக்குமுத் தியினர் போலவோ ரியல்பு நண்ணின ரிடந்தொறு மாதோ. | 21 |
| 1765 |
வேறு
இன்னன வெழினக ரீண்டு மாக்கவின்
முன்னவன் போலிவை மொழிக்க டங்குறா
மன்னிய வதுவைசெய் மண்ட பத்தெழில்
தன்னமிங் கெடுத்தியாஞ் சாற்றற் பாலதே. | 22 |
| 1766 |
பரவுமுக் குணமும்பான் மையினின் றாலென
மரகத மடித்தலம் வயங்கச் சேயொளி
அரதன மிடையுற வவற்றின் மேக்குவச்
சிரமொளிர் குறடுபஃ றிசையும் வென்றாதே. | 23 |
| 1767 |
பாயதண் பாற்கடற் பரப்பி னின்றிடு
மாயவ ரெண்ணில ரென்ன வச்சிரத்
தூயவண் டலமெலா நீலத் தூணங்கண்
மீயுயர் விசும்பினூ டெழுந்து நின்றவே. | 24 |
| 1768 |
தேவர்க ளொடுமகத் தீட்டுஞ் சீர்த்தியை
ஆவதென் றாழியான் கவர்ந்து சென்னிமேன்
மேவவைத் ததுபொரூஉம் விளங்கு தூண்டலைப்
பாவிய பளிக்குப்போ திகையின் வண்ணமே. | 25 |
| 1769 |
கீர்த்தியைக் கவர்ந்தரி கெழும நிற்றலும்
ஆர்த்தபல் லமரரு மமர்ப்பச் சூழ்ந்தென
வார்த்தபித் திகைதொறும் வயங்கு சித்திரம்
பார்த்தக ணிமைப்புறாப் பண்பிற் றோன்றுமே. | 26 |
| 1770 |
நந்தமை நாடொறு மிருக்கை யாக்குவ
தெந்திவன் சிரமிதித் திருத்து நாமெனச்
சந்திரன் மான்முடித் தவிர்ந்த் தும்பொரூஉங்
கொந்தொளிப் பளிக்குப்போ திகையின் கொள்கையே. | 27 |
| 1771 |
புவனமுண் டவன்றலை மிதித்த புன்மையின்
அவிர்மதிச் சிரமிதித் தலரி நின்றெனத்
தவளவொண் போதிகைத் தலையி னொன்றுறப்
பவளவா னுத்திரம் பயின்ற பல்லவும். 8 | 28 |
| 1772 |
செக்கர்வா னிறங்கெடத் திகழுங் கேதுவில்
உக்கசீ தளமதி யுண்ண வோருழித்
தொக்குவாய் வைத்தவத் தோற்ற மும்பொரூஉந்
தக்கசெம் மணியினுத் திரத்த யக்கமே. | 29 |
| 1773 |
வெய்யவ னிளங்கதிர் வெயிற்பி ழம்புலாய்
ஐயென விசும்பெலா மலங்கிற் றாமென
மையற வொளிர்வயி டூரி யத்தினாம்
பையவிர் பலகிமீப் பரவி நின்றவே. | 30 |
| 1774 |
உள்ளெழின் மேக்கிருந் துடல்வ ளைத்துறீஇத்
தள்ளரு மதுகையிற் காணுந் தன்மையிற்
கொள்ளவொண் கொடுங்கைகோ மேத கத்தின்மே
னள்ளின புட்பரா கத்தி னாசியே. | 31 |
| 1775 |
வாளுமிழ் மண்டபக் குறட்டின் மாடெலாங்
கோளறு கொழும்பொனிற் குயின்ற வார்படி
மூளுற வொன்றன்மே லொன்று முற்றியங்
கியாளிக ணித்திலத் தருகி யைந்தவே. | 32 |
| 1776 |
பச்சைமால் காஞ்சியிற் பவள வானிற
மெச்சுநற் றவத்தினான் மேவி நின்றெனப்
பொச்சமீ னீனிறம் பொலிந்த தூணெலாஞ்
செச்சையின் வாருறை சேர்க்கப் பட்டன. | 33 |
| 1777 |
விண்ணெழுஞ் சூரியன் வெயில்க ரப்பமிக்
கொண்ணிற முகில்பல வுராய்ப்ப ரந்தென
வண்ணம்வெவ் வேறுவாய்ந் தொளிர்வி தானங்கள்
கண்ணொளி கவர்வதோர் காட்சி மிக்கவே. 4 | 34 |
| 1778 |
பொன்மழை நவமணி மழைதண் பூமழை
பன்னுமப் புயல்பஃ றாரை கான்றென
மின்னவ மணித்தொடை விளங்கு பொற்றொடை
என்னவும் விதானக்கீ ழலங்கி நான்றவே. | 35 |
| 1779 |
ஊற்றுபஃ றாரைநின் றொளிர வீழ்ந்துமண்
தோற்றியெங் கணுமவை துவன்றி னாலென
மாற்றரும் பலநிறம் வயங்கு கம்பலம்
வேற்றிட மிலையென விரிந்த தெங்கணும். | 36 |
| 1780 |
உமையுருக் கவின்கவர்ந் தோட முன்னியாங்
கமையம்பார்ப் பனவென வறிந்தங் கார்த்தெனக்
கமுகுதண் கரும்புநீல் கதலி பாங்கெலாம்
இமையவர் வியப்புற யாக்கப் பட்டன. | 37 |
| 1781 |
பூரணி யல்குலொப் பாகப் புற்றினூ
டாருவ காலென வராவி னங்களை
நேரற வீக்கிய நீர்மை யாமெனத்
தோரண மணிநிரை சுற்று மார்த்தன. | 38 |
| 1782 |
பல்கனிக் கோவையும் பசும்பொற் றார்களும்
புல்கொளி மணிகளும் பூவின் றொங்கலும்
நல்கெழி லாடியும் பிறவு நான்றன
வல்கெழிற் கொடுங்கையி னவனி தைவர. | 39 |
| 1783 |
சிவபுர வரைப்புமித் திவளு மண்டபக்
குவமைகொ லோவென வுற்றங் கின்மையின்
தவவெழு மகிழ்வினாற் றலைது ளக்கியாங்
கவிர்மணிக் கொடிபல நிவந்தங் காடுவ. | 40 |
| 1784 |
மரகத வல்லியின் வயங்கு மாணுருப்
பரவொளி பெறத்தவம் பயிறல் போன்றன
அரதன விளக்கமு மான நெய்பொழி
விரைகமழ் விளக்கமும் விராயுண் ணின்றன. | 41 |
| 1785 |
தம்பிரா னிருந்தரு டவிசு நள்ளுற
உம்பரார் விழையநன் றோங்கத் திங்களிற்
பம்புதா ரகையெனப் பாங்க ரெங்கணும்
எம்பிரா னருளினர்க் கிருக்கை வாய்ந்தவே. | 42 |
| 1786 |
வயங்குபொற் குண்டமு மணிச்செய் வேதியுந்
தயங்கொளிக் கரகமொண் டசும்பு பாலிகை
அயங்கொளி யகலுமற் றனைத்து மாவயிற்
பயங்கொள ஞெமிர்ந்தன பதம்வைப் பின்றியே. | 43 |
| 1787 |
கவரிகண் ணடிகுடை கால்செய் வட்டமும்
அவிர்கலப் பேழையு மமுதம் பல்வகை
தவமலி செப்புஞ்சாந் தமைத்த தட்டமும்
இவர்தரப் பாவைக ளிடந்தொ றேந்தின. | 44 |
| 1788 |
வண்ணவொண் மணியொடு தகர்த்த மாசையஞ்
சுண்னமு நறுவிரைத் துகளும் வண்டுணக்
கண்ணகு மலரும்வெண் கடுகுஞ் சாலியுந்
தண்ணிய வறுகுமுட் டதைந்த வென்பவே. | 45 |
| 1789 |
மண்டப மருங்கெலா மலர்ப்பொற் காவணம்
அண்டரும் வியத்தக வமைந்த மற்றயற்
புண்டரி கத்தடம் பொலிந்த வாங்கயற்
கொண்டன குளிர்பொழில் கோல மல்கவே. | 46 |
| 1790 |
இறையவ னாக்கிய வெழில்கொண் மண்டப
நிறைவினை யாவரே நிகழ்த்து வாரினி
உறைபயில் வீணைகை யுறுவ ரன்புகுந்
தறையமற் றவரவ ரடுத்த தோதுவாம். | 47 |
| 1791 |
வேறு
ஏகியநா ரதமுனிவ னெம்பிரான் போதிவனத் திமைய மீன்ற
பாகியல்சொன் மரகதவல் லியைமணப்பத் திருவுள்ளம் பற்றி னாராற்
போகுகவங் கெவருமெனப் புகன்றுபுகன் றனன்மீண்டான் புகலக் கேட்டோர்
தேகமுறு பயன்படைத்தா மெனமகிழ்ச்சி தலைசிறப்பச் சேற லுற்றார். | 48 |
| 1792 |
பிரமனொரு சிரமரிந்த வயிரவர்பே ணியதக்கன் யாகத் தையர்
வரனழித்த வயவீர னரகரபுத் திரன்வளர்கூர் மாண்டர் கால
எரியடுத்த வுருத்திரருனு மாடகே சனுமெண்மர் மூவரென்னும்
உரன்மிகுத்த வுருத்திரரு முவப்பில்கணம் புடைசூழ வுவந்து சென்றார். | 49 |
| 1793 |
மருக்கிளர்தண் டுளவணிந்த மணிமார்பன் மலரவன்மா திரத்தோ ரெண்மர்
அருக்கருருத் திரர்வசுக்கண் மருத்துவரென் றறைதருமுப் பத்து மூவர்
உருக்கிளர்விஞ் சையர்கருடர் கந்தருவ ருரகர்முத லும்பர் யாருந்
தருக்கறுமா றாயிரத்தெண் மருமனைவி மாருடங்கு சாரச் சென்றார். | 50 |
| 1794 |
பரிசனமும் வரிசைகளு முடன்கொண்டு வரைபலவும் பாங்கர்ச் சூழ
உரியமனை மாதெனுமே னையுந்தானும் வரையரைய னுவந்து புக்கான்
திரைதவழேழ் கடல்கங்கை யாதிமணித் தீர்த்தமெலாந் திரண்டு சேர்ந்த
வரைசெய்பல காலங்கண் மாதிரமெண் கயம்பிறவு மருவிப் போந்த | 51 |
| 1795 |
கடகரியும் வயப்பரியுங் கதிர்மணிக்கூ விரக்கொடிஞ்சிக் காமர் தேரு
மிடல்படைத்த தானைகளும் பரிசனமும் புடைநெருங்க வேந்தர் போந்தார்
அடல்படைத்த நெடுஞ்சூலத் தடிகளைப்போந் தவர்யாரு மண்மித் தாழ்ந்தார்
நடலையறுத் திடுங்கருணை நறைமிதப்ப வாய்மடுத்து நலமே தக்கார். | 52 |
| 1796 |
வேறு
உருத்திரர்முன் னாகவுறு மானுடர்பின் னாகத்
தருக்கொடுகு ழீஇயினர்க டம்முளுயர் வுற்றுத்
திருக்குலவி னார்களிரு சேவடிகள் சேப்ப
உருக்கிளர்மு டித்தலைக டீட்டினரு வந்தார். | 53 |
| 1797 |
வண்டொடு நறைத்தமலர் மாலைக டொடுப்பார்
பண்டிகழ வீசர்புகழ் பாடினர் களிப்பார்
கண்டுளி துளிப்பவுள நெக்கருள் கலப்பார்
புண்டர நுதற்குலவு தொண்டரிவ ரோர்சார். | 54 |
| 1798 |
ஐவகை நறும்புகைக ளாலய நிறைத்துச்
செய்வகைய தொண்டுக டிருத்தக வியற்றிக்
கைவகையி னஞ்சலிமுன் காட்டிமுடி கோட்டிப்
பொய்வகை கடிந்துவரு புண்ணியர்க ளோர்சார். | 55 |
| 1799 |
எந்தையடி யார்களினி தேபுகுக வீங்கு
மைந்தரொடு மங்கையர்கண் மற்றுமுற வாமோ
நுந்திரு வடித்துணைய லாலென நொடித்துச்
சிந்தைமகி ழப்பணிகள் செய்குநர்க ளோர்சார். | 56 |
| 1800 |
ஏதலற வன்பினிரு போதுமிசை மல்க
வேதநனி யோதியழல் வேட்டெளிதி னாங்குப்
போதுமிமை யார்க்கவிகள் பொற்பவினி தூட்டிக்
காதர மிரித்திடு கருத்தினர்க ளோர்சார் | 57 |
| 1801 |
கன்னிமணி பொன்னறுவை கம்பலம் விழுப்பூண்
நன்னர்நில மோடிரத நாகநடை வாமான்
துன்னுசுரை யான்களிவை தோயமொடு நல்கி
முன்னவ னடிக்கணுள முற்றுநர்க ளோர்சார். | 58 |
| 1802 |
பூவிணர் நறும்பொழில் புகுந்துவள நோக்கி
ஆவண மனைத்தினு மமன்றபொரு ணோக்கிக்
காவண நிரந்தகடி வீதிபல நோக்கித்
தூவண வுளத்துவகை துள்ளுநர்க ளோர்சார். | 59 |
| 1803 |
வாவிகளி னோடைகளின் வார்நதியி னொண்மை
மேவுமத லைக்குலம் விடுத்தெதிர் கடாவிப்
பூவினொடு சாந்துபொலந் தார்முதல வீசி
ஆவியனை யாரொடு மமர்க்குநர்க ளோர்சார். | 60 |
| 1804 |
புறநக ரடுத்துமலர் போதுபல கொய்து
பறவைக ளெழுப்புமிசை பண்பொடு நுகர்ந்து
நறவினை வடித்தன நரப்பிசை யெழுப்பி
உறவினொடு மாடுமொளிர் மங்கையர்க ளோர்சார். | 61 |
| 1805 |
மும்மையுல கத்தவரு முந்தையறி யாத
செம்மைய புலன்கள்செறி யைம்பொறியி னார்ந்து
விம்மிதம் விளக்குமொரு வேறுலகி தென்னத்
தம்மையறி யாதன மகிழ்ச்சிக டழைத்தார். | 62 |
| 1806 |
வேறுமுள தோவிதனின் வீட்டினை யடைந்து
பேறுபெறு மின்பநல மென்றுபெரி தோர்ந்தோர்
கூறவரை வின்புதுமை கும்பிடவ ணைந்தோர்க்
கூறுசுவை யின்பெருமை யாவருரை செய்வார். | 63 |
| 1807 |
வரம்பினுற லின்றிவள ரின்பமலி வெய்த
வரம்புபடு தீவினை யனுக்கியனை வோரும்
பரம்பொருளை நோற்றவொரு பார்ப்பதியை மாண
நிரம்பவணி யக்கருதி நேர்தொழுது நின்றார். | 64 |
| 1808 |
நின்றமை யறிந்தவரி னீடணி யெமக்கிங்
கொன்றுவன வல்லவென வும்பர்தொழு பெம்மான்
தன்றுனைவி யோடுமெழில் சார்தர நினைந்தான்
மன்றலழ கெய்தியன மன்னிருவர் மாட்டும். | 65 |
| 1809 |
ஆரணனு நாரணனு மாய்ந்துமறி யாத
பூரணர்தம் மாதொடணி பொற்பளவி னில்லாச்
சீரணிவ தேனுமவர் சேவடிகள் போற்றித்
தாரணியி னேன்றவகை சாற்றுதல்செய் வாமால். | 66 |
| 1810 |
வேறு
மரகத வல்லி தன்னை வதுவைசெய் கோல நோக்கிப்
பரவுளப் பொறாமை பொங்கப் பாய்புனற் கங்கை மாது
விரசின ருளைய மண்மேன் மேவலுஞ் செய்யு மென்னாப்
புரவுற மறைத்தா லென்னப் பொலிந்தது மகுடஞ் சென்னி | 67 |
| 1811 |
வெண்மதி யணிந்து காத்த வித்தகன் கருணை நோக்கி
மண்மதித் திறைஞ்ச வேனைக் கோள்களும் வழிபா டாற்றி
ஒண்மையி னுருவம் வெவ்வே றுற்றிவர்ந் துடங்கு வைகும்
வண்மையே நிகர்க்கு மொன்பான் மணிகளு மிமைக்கு மோலி. | 68 |
| 1812 |
வழங்குபல் கோளு நாளு மாய்தொறு முலகி னுய்ப்ப
ஒழுங்கிய கோளு நாளு மொரோவொன்றற் கனந்த மாகச்
செழுங்கதி ரெறிப்பச் சேமஞ் செறித்துவைத் ததும்போன் றன்றே
தழங்கிசை மெளலி மாட்டுத் தயங்குபன் மணியி னீட்டம். | 69 |
| 1813 |
சேணுறக் கதிர்கால் வீசுஞ் செம்பொனின் மோலி சென்னி
மாணுறக் கவிப்ப தோர்ந்து வதுவைநற் கோலங் காண்பான்
வேணியின் மிளிர்ந்த திங்கள் வெய்தெனப் பெயர்ந்த தென்ன
நீணுதல் செய்த நெற்றி யொளிர்ந்தது நீற்றுக் கோலம். | 70 |
| 1814 |
பாற்கடற் பரப்பிற் செங்கேழ்ப் பரிதிவந் தெழுந்த தென்ன
நூற்கடற் புலவர் போற்று நுண்பொடி திமிர்ந்த நெற்றி
ஏற்குமொள் ளெரியி னோக்க மிடைமறைத் திட்ட தேபோன்
மேற்கிளர் கிரணப் பட்டம் விளங்கிய திருள்கால் சீத்து. | 71 |
| 1815 |
மாரனைப் பொடித்த தீங்கு மறைவதே கரும மென்ன
வாரமுன் மறைக்கப்பட்ட வழல்விழி யடங்கா தாங்கு
நேருறப் பாங்கர்த் தோன்றி நிறைகுளி ருமிழ்வ தொக்குஞ்
சீரிய பட்டப் பாங்கர்த் திருத்திய திலக மாட்சி | 72 |
| 1816 |
முரிதிரைக் கங்கை மாது முடிகொடு மறைப்பப் பொங்கி
உரிமையி னொழியேன் யானென் றொண்களம் வளைத்தா லொப்பத்
தரளவண் டெரியல் பம்புந் தடம்புயங் குழைக டோய்ந்த
உரவுமக் கங்கை வெள்ளத் துழக்குமொண் மகரம் போன்றே. | 73 |
| 1817 |
தொள்ளையோர் குணமே யென்ன வடக்கியுந் தோற்றா நிற்கும்
தள்ளரு மதுகை சான்ற் தழல்விடந் தம்பி ரானார்க்
குள்ளுறப் படரா வண்ண முறுநடை யியக்கிற் றேபோல்
வள்ளொளி கஞற்றுங் கட்டு வடங்களஞ் சூழ்ந்த தன்றே. | 74 |
| 1818 |
மனையவ ளென்னுஞ் செங்கண் மால்கிடந் துறங்கும் பள்ளி
இனைபசி மாணிக் கீத லாதியி னெழுந்த கீர்த்தி
அனையென வீன்ற திண்டோ ளகடுறத் தழுவி யாங்குப்
புனைநலம் வேரின் றாகப் பொலிந்தன மணிக்கே யூரம். | 75 |
| 1819 |
சிலைசிலையாகக் கோலித் தெவ்வரை முருக்குந் தேசு
நிலைபெற வீன்ற தாயை நீக்கறக் காட்டல் போன்று
மலிகதிர்ப் பதும ராக வலயமுன் கைக்கை ணின்ற
அலரிசெங் கமலஞ் சேர்ந்த வமைதியு நிகர்த்த மாதோ. | 76 |
| 1820 |
பெருவிலைச் சிறிய வாழி பெருகொளி விரல்கண் மாட்டு
மருவின முன்பு மாய்ந்த மாயவ ராழி யென்கோ
பொருவிலன் புஞற்றி மேலே புரப்பதற் கடுப்போர் வேண்ட
அருளிய வைத்த வென்கோ யாதென வறைவ தம்மா. | 77 |
| 1821 |
களத்திடை யுருத்து நின்ற காளகூ டத்தின் வேகம்
உளத்திடைத் தழற்றா வண்ண முறுகுளி ருறுத்த தேய்ப்ப
வளச்செழுஞ் சாந்து கொட்டி மான்மதம் பனிநீர் வாக்கித்
திளைத்தெழு மணப்பூந் தாது செறித்துரம் விளங்கிற் றன்றே. | 78 |
| 1822 |
காதலின் மரும மூட்டுங் கமழ்நறுங் கலவைச்சேறு
சீதளம் வறலா வண்ணஞ் செறியமேற் பொதிவித் தாங்குப்
போதுசெய் தொடையல் பூண்கள் பொழிகதிர் மணியின் கோதை
மாதர்கண் மணியின் கோவை மாசையந் தாரும் வார்ந்த. | 79 |
| 1823 |
பிரணவப் பொருள்யான் சேர்ந்த பிஞ்ஞக னெவரு மல்லர்
கரியென தகத்துள் ளீடும் பிரணவங் காண்மி னென்ன
விரிபொழி லனைத்துந் தேற மெய்ம்மையின் விளக்குந் தெய்வத்
தெரியலங் கொன்றை சாலத் திகழ்ந்ததவ் வணியின் மேலால். | 80 |
| 1824 |
ஊர்தொறு மிரப்ப வுள்ளே யுருத்தெழு பசிவெந் தீயும்
வார்தரு குழன்மென் சாயன் மரகத வல்லி மன்றல்
ஆர்தரு விழைவிற் காண வையென வெளிக்கொண் டாங்குச்
சீர்தரு பதும ராக வுதரபந் தனஞ்சீர்த் தன்றே. | 81 |
| 1825 |
எட்டுத்தோல் பிணித்த வாடை யெரிவிழி யுழுவை தந்த
கட்டுத்தோ லாடை மற்றுங் காணிகைக் கொண்ட வல்குற்
பட்டுச்சூழ்ந் தரவே யென்னப் பன்மணி யிமைக்கும் பொன்ஞாண்
இட்டுச்சூழ் கதிர்ப்பொன் னாடை யிறுக்கப்பட் டிலங்கிற் றாலோ. | 82 |
| 1826 |
வலப்புறக் கணைக்கான் மீது வரிகழல் வில்லுக் கால
நலத்தகு விழிமேல் கொண்டு நாரணன் றனக்குத் தோற்றாப்
புலத்தரு செய்ய பாதம் பொன்னரிச் சிலம்பு தாங்கிக்
குலத்தரு மடியார் கண்கள் குழுமுவண் டெரியல் சூழ்ந்த. | 83 |
| 1827 |
பிப்பில வனத்துள் வைகும் பிஞ்ஞகன் வதுவைக் கோலஞ்
செப்பினன் சிறிது செம்பொற் சிலம்புயிர் தெய்வக் கற்பின்
மைப்படி கரிய வாட்கண் மரகத வல்லி கொண்ட
ஒப்பனை சிறிது சொல்வே னுஞற்றுமுன் வினையை வெல்வேன். | 84 |
| 1828 |
வேறு
கருமுகில் விளர்ப்ப வென்றுமோ ரியல்பாய்க் காசறை யாவியு மளைந்து
மருமலர்க் குவளைத் தூவிதழ் மடுத்து வலம்புரி தெய்வவுத் தியும்வைத்
துருகெழு பகுவாய் மகரம்வா ணுதலிற் றாழ்தர வுறுத்துற முடித்த
பெருகெழின் முச்சி மணிவட நான்று பிணையல்செய் முல்லைசூழ்ந் ததுவே. | 85 |
| 1829 |
கற்பினுக் குரிய முல்லையந் தெரியல் கமழ்தரக் காட்டுத லானுஞ்
சிற்பமிக் குடைய வலம்புரி யோடு திருவுருத் திகழ்ந்திட லானும்
பொற்புமிக் குடைய பூங்குழ னெடுமால் புல்லிய புறவமே போலும்
விற்பயில் பகுவாய் மகரமவ் வுருவாம் விண்டுவே போலுமால் விளங்கி. | 86 |
| 1830 |
மதுகர மெறிந்து தாதளைந் துழக்கி மதுநுகர்ந் தின்னிசை முரலும்
புதுமலர்த் தளவத் தொங்கல்சூழ்ந் திருண்ட பூங்குழன் முச்சியின் றோற்றம்
பதுமம்வென் றலர்ந்த திருமுகத் திங்கள் பரந்ததன் கற்றைவெண் கதிராற்
கதுமெனப் பிடித்துக் கழுமயாத் திருக்குங் காரிருட் பிழம்புபோன் றதுவே. | 87 |
| 1831 |
ஒழுகொளிக் கிரண வெண்ணிறப் பாச மோச்சியே தன்னெதிர் கரவா
தெழுமிகற் கருமென் கூந்தல்வல் லிருளை யிறுகுறப் பிணித்தலி னெழுந்த
முழுதுல கிறைஞ்சித் தொழும்பிர தாப மொய்யொளி யிரவியை வதன
விழுமிய திங்க ளணிந்தது போல விளக்கம்வாய்ந் ததுநுதற் றிலகம். | 88 |
| 1832 |
அடுக்கிதழ்க் கமலஞ் சூதமே யசோக மயினுதி முல்லைதண் ணீலம்
எடுக்குமைங் கணையுங் கழைநெடுந் தனிவி லெரிமணித் தொடிக்கையின் வாங்கி
விடுக்குமத் தொழிற்கங் கியைதர மகர மிளிர்கொடி யுயர்த்தது போல
ஒடுக்கிவல் லிருளை வெயிலுமிழ் மகர வொண்குழை யொளிர்ந்தன செவியில். 89 | 89 |
| 1833 |
புருவம்வார் சிலையென் றெண்ணினர் தமக்குப் பொருகணை யெனமிகக் கூர்த்தும்
அருள்பொழி வதன மலர்ந்தவம் புயமென் றகத்துற நினைந்தவர் தமக்குக்
கருநிறச் சுரும்ப ரெனநனி களித்துங் கலைமதி முகமென நினைவோர்க்
குருவளர் சகோர மெனத்தவ நீண்டு மொளிர்விழி திகழ்ந்ததஞ் சனமே. 90 | 90 |
| 1834 |
வெண்ணிறம் படைத்த புன்மையெண் மலரை வீழ்த்துநன் மணமுயி ராத
வெண்மையின் குமிழை யிழித்துவண் டணுகா விழிவுடைச் சண்பகங் கழித்த
ஒண்ணிறங் கமழு முயிர்ப்பிரு விழிவண் டொடும்பயி னாசிசேர் தரளந்
திண்ணிய முறுவன் மணியடி யிறைஞ்சச் செவ்விபார்த் திருத்தல்போன் றதுவே. | 91 |
| 1835 |
சங்கமென் றுரைப்போர்க் கதற்றகு சான்று தரளமா லிகைபுடை வளைத்தும்
பைங்கமு கென்போர்க் கதற்றகு சான்று பரிமளப் புதுநறுங் கலவை
பொங்கிளங் கொங்கைத் துணைச்செழும் பாக்குப் பொருவிற னடித்தலந் தெரித்தும்
ஓங்கிய மிடற்றின் மணிவடம் பொன்ஞா ணுறுவிரை பலததைந் தனவே. | 92 |
| 1836 |
கரும்பெனத் திரண்டு நுதல்விழிப் பெருமான் கருத்தினுங் காமமிக் கூறக்
கரும்பனை விளைக்கும் பெருந்திற னோக்கிக் கலைமதிக் கவிகையங் கடவுட்
கரும்படுத் திறைஞ்ச விருஞ்சமர் பயிற்றக் காதலிற் ரழுவிய தேய்ப்பக்
கரும்பினி தெழுது தோளினங் கதமுங் கதிர்மணி வடங்களும் பொலிந்த. | 93 |
| 1837 |
அரிபரந் தகன்ற விழிமலர் நீல மவிரொளி முறுவலந் தளவம்
பெரியதண் வடிவின் முலைச்செழுங் கமல மாதிகள் பிறைமுடிச் சடிலத்
துரியவற் கேவ நிறுத்தவார் கழைவி லொத்தகைத் துணையினத் தனுவின்
வரிகுண மொருகாற் சூழ்ந்துவைத் தனைய வளைதொட ரனைத்துஞ் சீர்த்தனவே. | 94 |
| 1838 |
பொன்னரி மாலை நவமணித் தொடலை பொழிமது நறுமலர்த் தெரியன்
மின்னுவிட் டெரிக்கு மிலைமுகப் பைம்பூண் வீற்றுவீற் றொழுகின வவைதாம்
நன்னறுங் களப நகிற்றுணைச் செப்பி னலத்தக வெடுத்துமேல் விரித்தால்
என்னமிக் கழகு விரிந்தொளி யசும்பி யெம்பிரான் மனமும்வாங் கினவே. | 95 |
| 1839 |
கடிதடக் கடலின் வாங்குசை வலந்தண் கயறுகிர் தரளமும் பிறவும்
தொடலைமென் குழல்கண் ணிதழ்நகை பிறவுந் தோற்றவண் ணாந்தெழு கொங்கைத்
தடவரை மருங்கு வாங்கிய மடங்க றனைப்பொரு மிடுகிடை யிறுகப்
படரொளி கஞற்றும் பல்வகைக் காசின் சில்வடம் பான்மையிற் சூழ்ந்த. | 96 |
| 1840 |
மருபன் மணிக்கும் பிறப்பிட மாந்தன் வண்மையைப் பருமத்தின் விளக்கும்
பெருகெழி லல்குல் வாரிதி யெழுந்த பேதுசெய் நஞ்சமே விழிய
வெருவர வஃதூர் நெறிமயி ரொழுக்கா வீங்குமத் தொழுகிய தோளா
உருவளர் கூர்ம மெனப்படும் புறந்தா ளொளிர்ந்தன நூபுரம் பிறவும். | 97 |
| 1841 |
வேறு
திருமக டனக்குநற் றிருவ ளித்திடும்
ஒருமகள் வனப்பினை யுரைக்க லாகுமே
இருமுது குரவர்தம் மெழிலு நோக்குபு
மருவின வுலகெலா மல்கு மின்பமே. | 98 |
| 1842 |
ஈங்கிவ ரழகினுக் கிவர்க ணோக்குறுந்
தாங்கிய வாடியிற் சாயை யன்றியே
யாங்கணு முவமைவே றில்லை யென்றுவிண்
ஓங்கிய வமரர்க ளுவந்து தாழ்ந்தனர். | 99 |
| 1843 |
எழுந்தன மதுரமங் கலங்க ளெங்கணும்
எழுந்தன துவசங்க ளியம்பிற் றின்னியங்
கொழுந்தெழு கதிர்மணிக் குடைக வித்தன
செழுந்திருக் கவுரிக டிரண்டு துள்ளின. | 200 |
| 1844 |
அவிர்மணி யழுத்திய வால வட்டமுந்
தவளி யெழுப்புசாந் தாற்றி யீட்டமுங்
கவர்நிழற் றொங்கலுங் கதிர்த்த நித்திலத்
திவர்புதுப் பந்தரு மெழுந்தி யங்கின. | 102 |
| 1845 |
அரம்பையர் நிரைநிரை யடுத்தங் காடினர்
வரம்பெறு கின்னரர் மகிழ்ந்து பாடினர்
நரம்பிசை யெழுப்பினர் நார தாதியர்
பரம்பின பனிவிசும் பமரர் பூமழை. | 102 |
| 1846 |
மாயவன் பாதுகை வணங்கி யிட்டனன்
தூயவன் திருவடி தொடக்கிப் பாங்கரின்
வேயன தோளினாண் மேவ மென்மலர்ப்
பாயின வாடைமேற் படர்தன் மேயினான். | 103 |
| 1847 |
விற்பொரு நுதலியர் மேனை தன்னொடுங்
கற்புய ருமைபுடை களித்துச் சென்றனர்
அற்பொடு மிமவரை யரைய னாதியோர்
தற்பர னுழையராத் ததைந்து சென்றனர். | 104 |
| 1848 |
தூயதன் னருள்கொடு தொல்லை நான்முகன்
பாயபல் பாலிகை பிறவு முன்னரே
ஆயுநன் முறையுளி யமைத்த மண்டபந்
தாயினு மினியவன் சாரச் சென்றனன். | 105 |
| 1849 |
அரத்தக வடியின ரட்ட மங்கலங்
கரத்தினி தேந்தினர் கண்டு வாழ்த்தினார்
புரத்தெரி யூட்டிய புனித னோக்குபு
வரத்தினை யளித்துமண் டபத்து ளெய்தினான். | 106 |
| 1850 |
பானலங் கருவிழிப் பாவை தன்னொடுங்
வானம ராதனம் வயங்க வைகுபு
தேனகு தொங்கலந் தேவர் யாவரு
மானமர் தவிசுற வருளிச் செய்தனன். 7 | 107 |
| 1851 |
மங்கலத் துழனியு மதுர கீதமும்
பங்கய வதனியர் பணிசெ யூக்கமுந்
தங்கிய வமரக டதையு மண்டபத்
தெங்கணூ மாயின வின்ப மல்கவே. | 108 |
| 1852 |
வேறு
அடுக்கலுக் கிறைவ னண்மி யவிரிழை சுமக்க லாற்றா
நடுக்குமெல் லிடையின் மேனை வணங்கின ணறும்பால் வாக்க
மடுக்குமெய் யன்பிற் செம்மன் மலரடி விளக்கி நீர்பெய்
திடுக்கணெவ் வுலகு நீங்க வீந்தனன் புதல்வி தன்னை. | 109 |
| 1853 |
விண்ணவர் மலர்கள் சிந்த விடையவ னங்கை யேற்றுத்
தண்ணிய மலர்மே லண்ண றழன்முறை வளர்ப்பத் தாலி
புண்ணிய மலர்ந்தா லன்ன பூங்கொடி மிடற்றிற் சேர்த்து
மண்ணவருய்யச் செய்யு மரபெலா மியற்றி னானே. | 110 |
| 1854 |
இளமதி முடித்த வேணி யெம்பிரான் றோழ னான
அளகையர் பெருமா னோடு மடுக்கலுக் கிறைவ னோகை
உளனுறச் சாந்த மாலை பாகடை பிறவு முற்ற
வளமையோ டியைய யார்க்கும் வழங்கினன் றழங்க மன்றம். | 111 |
| 1855 |
அளித்திடும் பரிசி லானு மணிந்தமெய்க் கோலத் தானுங்
களித்ததம் மனையின் மாதர் கண்ணுற்று நிற்ற லானுந்
தெளித்தெழு மன்றல் காணத் திரண்டவர் தாமு மந்நாள்
தளித்தெழு மின்ப மன்றல் சார்ந்தவ ரொத்து ளாரால். | 112 |
| 1856 |
கடியயர் வரைப்பி னின்றுங் கண்ணுதல் வெளிக்கொண் டும்பர்
முடியொடு முடிக டாக்க மூரிமால் விடையி னேறிப்
பிடிநடை யுமைதன் னோடும் பேரெழி னகர்சூழ் போந்து
கொடிபல நுடங்குஞ் செம்பொற் கோயில்புக் கணையி னுற்றான். | 113 |
| 1857 |
திருமண வாளக் கோலஞ் சென்றுசென் றிறைஞ்சப் பெற்றோர்க்
கருள்வளம் பழுப்பவ்ட்ட வரமெலா மளித்துப் போக்கிப்
பெருகிய மகிழ்ச்சி துள்ளப் பெய்வளை யோடு மங்கண்
மருவுமெவ் வுயிரும் வாழ வாழ்க்கைமேல் கொண்டி ருந்தான். | 114 |
| 1858 |
விதுவணி சடில மோலி வித்தகன் வெற்பின் மாதைப்
புதுவதி னியன்று சீர்த்த பொலங்கல மணிந்தெல் லோருங்
கதுவினர் போற்ற வாற்றுங் கடித்திறங் கேட்டோ ரீண்டை
வதுவைமிக் கயர்ந்து முத்தி மன்றலு மயர்வ ரீற்றின். | 115 |
| 1859 |
உரககங் கணங்கை பூண்ட வொருவரங் கினிது வேட்ட
மரகத வல்லி மன்றல் வழுத்தின முனிவிர் வைவேல்
விரகினன் றெய்வ யானை யென்னுமென் கொடியை வேட்ட
பரகதி யருளு மன்றல் கேட்கெனப் பகருஞ் சூதன். | 116 |
கெளரி திருமணப்படலம் முற்றிற்று.