தலமர சிறப்புகள்

விளா மரம்விளா Feronia elephantum, Corr.; Rutaceae. கலையானே கலைமலி செம்பொற் கயிலாய மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில் நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே. - திருஞானசம்பந்தர்.

திருகாறாயில் திருக்கோயிலின் தலமரங்களில் ஒன்றாக விளங்குவது விளா மரம் ஆகும். இது மணமுள்ள சிறகுக் கூட்டிலைகளையும் ஓடுள்ள நறுமணமிக்க சதைக் கனிகளையும் உடைய முள்ளுள்ள உறுதியான பெரிய மரமாகும். இஃது கருவிளம் என்றும் வழங்கப்படுகின்றது. இதன் இலை, காய், பழம், பழஓடு, பட்டை, பிசின் முதலியவை மருத்துவப் பயன்பாடு கொண்டவை. தமிழகமெங்கும் கனிகளுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது.


< PREV <
விழுதி
Table of Content > NEXT >
வெள்வேல்மரம்