தலமர சிறப்புகள்

வஞ்சிக் கொடிவஞ்சி Tinospora Cardifolia, Miers.; Menispermaceae. தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் மேவர் மும்மதி லெய்த வில்லியர் காவ லர்கரு வூரு ளானிலை மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. - திருஞானசம்பந்தர்.

திருக்கருவூர்ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இஃது இதய வடிவ பசிய இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற மெல்லிய புறத்தோலையும் உடைய ஏறு கொடி இனமாகும். கொடியின் தரைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும் தன்மை கொண்டது. இதன் இலை, கொடி, வேர் முதலியன மருத்துவக் குணங்கொண்டு விளங்குகின்றது.

உடல் தேற்றி உரமாக்குதல், முறைநோய் நீக்குதல், பசி மிகுத்தல் முதலிய மருத்துவக் குணமுடையது.


< PREV <
மூங்கில்மரம்
Table of Content > NEXT >
வன்னிமரம்