தலமர சிறப்புகள்

வால்மிளகுச் செடிவால்மிளகு Piper Cubeba, Piperaceae. ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்ட ழகார் நன்றும் கானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதுமிடம் வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்த ழகார் நம்மை ஊனம் அறுத்த பிரான் திருவூறலை உள்குதுமே. - திருஞானசம்பந்தர்.

திருஊறல் (தக்கோலம்) திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது வால்மிளகு ஆகும். இஃது மரத்தில் படர்ந்து வளரும் கொடியின வகையைச் சார்ந்தது. இதன் காம்பு காயோடு சேர்ந்து வால்போல் காணப்படுவதால் இஃது வால்மிளகு எனப்படுகின்றது. காரம், மணம், விறுவிறுப்புள்ள மூலிகை மருந்தாக பயன்படுகிறது.

பசி மிகுத்தல், உடல் வெப்பத்தையும், நாடிநடையையும் அதிகரித்தல் முதலிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.


< PREV <
வாகைமரம்
Table of Content > NEXT >
வாழைமரம்