தலமரச் சிறப்புகள்

வாழை மரம் (Banana or Plantain Tree)வாழை Musa paradisiacal, Linn.; Musaceae. வீரளக் குரலும் விளிசங் கொளியும் வுழவின் னொலியோவா மூளைத் தலைகொண் டடியா ரேத்தப் பொடியா மதிளெய்தார் ஈளைப் படுகில் இலையார் தெங்கிற் குலையார் வாழையின் பாளைக் கமுகின் பழம்வீழ் சோலைப் பழன நகராரே. - திருஞானசம்பந்தர்.

திருப்பழனம், திருத்தேவூர், திருமருகல், திருத்தருமபுரம், திருக்குடவாயில், திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம் முதலிய தலங்களில் தலமரமாக வாழை விளங்குகின்றது. இது மிகப்பெரிய இலைகளையும், குலையாக வளரும் காய்களையும், உண்ணக்கூடிய இனிய கனிகளையும் உடைய மரமாகும். இதில் பேயன், மொந்தன், பூவன், இரத்தாளி போன்ற பல இனங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் இலை, காய், கனிகளுக்காக பயிரிடப்படுகின்றன. திருப்பைஞ்ஞீலியில் ஞீலி எனும் ஒரு வகைக் கல்வாழையும், திருமருகலில் மலைவாழை இனத்தைச் சேர்ந்த வாழையும் தலமரங்களாக உள்ளன. ஞீலி வாழைக்கனி இறைவனுக்கு பூசனை செய்து நீரில் விடப்படுவது மரபு; யாரும் உண்பதில்லை.

வாழையின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை, தண்டு, சாறு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பூ, பிஞ்சு, காய் ஆகியவை குருதி, சீழ்க்கசிவை அடக்கும்; சாறு குருதி போக்கடக்கும். தண்டு சிறுநீர் பெருக்கி பித்தத்தைச் சமப்படுத்தும்; பழம் மலச் சிக்கல் அறுத்து உள்ளழலாற்றி உடலுரமாக்கும்.

Musa acuminata, Colla <=> Banana Plant


Canopy


Banana tree Canopy
Name Banana Plant
Plant Type Herb
Family Musaceae
Genus Musa
Species acuminata
Authority Colla
Type Deciduous
Common Family Banana
Native India
Size Small


Reference


Wiki wikipedia
Links flowersofindia
Description Banana is a tropical tree-like herb, with large leaves of which the overlapping bases form the so-called false trunk. Fully grown, the stem reaches a height of 10 - to 30 feet. From the center of the crown spring the flowers. Only female flowers develop into a banana fruit that vary in length from about 4 - 12 inches. The average weight of a bunch is about 25 lbs. Each banana plant bears fruit only once. The propagation is through shoots from the rhizomes, since most of the seeds species are sterile. In India, almost every part of the banana plant is used, either for food, or for wrapping food. The unripe fruit of banana, rich in starch, is commonly dried and fried as chips in south India. The banana stem is also eaten after cooking. The ripe fruit is commonly eaten.
Where Everywhere


Bark


Banana tree bark
Color Green


Flowers


Flower of Banana tree
Color scarlet


Fruits


Fruit
Color unknown


Leaves


Leaf of Banana tree
Type Oblong
Size Large


Picture Carousel (6)< PREV <
வால்மிளகு
Table of Content > NEXT >
வில்வமரம்