தலமர சிறப்புகள்

தில்லை மரம்தில்லை Excoecaria agallocha, Linn.; Euphorbiaceae. கோணா கணையானுங் குளிர்தா மரையானுங் காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான் சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பல மேத்த மாணா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே. - திருஞானசம்பந்தர்.

திருத்தில்லையின் தலமரமாக விளங்குவது தில்லை மரமாகும். தில்லை மரங்கள் நிறைந்ததாலேயே தில்லைவனம் என்ற பெயர் பெற்று (ஊரின் பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம். தற்போது கோயிலின் பெயராலேயே ஊர் பெயர் விளங்குகின்றது.) தில்லையானது. இது கூர்நுனிப்பற்களுள்ள இலைகளை உடைய பசுமையான மரம். இம்மரத்தின் பால் உடலில் பட்டால் உடல் புண்ணாகும். தமிழகக் கடற்கறையோரக் காடுகளில் இது தானே வளர்கின்றது. இலை, விதை, பால் முதலியன மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.


< PREV <
தாழைமரம்
Table of Content > NEXT >
துளசி