தலமர சிறப்புகள்

தருப்பைப் புல்தருப்பை Imperata Cylindrica, Var. Kinigii; Dur.; Gramineae. உள்ளா றாததோர் புண்டரி கத்திரள் தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக் கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை நள்ளா றாஎன நம்வினை நாசமே. - திருஞானசம்பந்தர்.

திருநள்ளாறு தலத்தின் தலமரமாக விளங்குவது தருப்பைப் புல் ஆகும். இஃது நீர்வளமிக்க இடங்களான வாய்க்கால் வரப்புகள், ஆற்றங்கரை ஓரங்களில் அடர்ந்து உயர்ந்து வளரும் ஒரு வகை புல்லினமாகும். பூசை முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்துவதால் அருச்சனைப் புல் என்றும் குறிக்கப்படுகிறது. செடி முழுமையும் மருத்துவக் குணமுடையது.


< PREV <
சிறுபூளை
Table of Content > NEXT >
தாழைமரம்