|
Home > Temples of India >
pADal peRRa sthalam
தலமர சிறப்புகள்சண்பக மரம்
சண்பகம்
Michelia champaka, Linn.; Magnoliaceae.
வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்
செருந்திப்பூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்திநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.
- திருஞானசம்பந்தர்.
திருத்தென்குடித்திட்டை, திருஇன்னம்பர், திருச்சிவபுரம், திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம் முதலிய திருத்தலங்களில் சண்பகம் தல
விருட்சமாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளில் தானே வளருகின்றது. மையப்பகுதி மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும்
நறுமணமுள்ள மஞ்சள் அல்லது வெண்மை நிறமுள்ள மலர்களையும் உடைய நெடிதுயர்ந்து வளரும் என்றுமே பசுமையாகக் காணப்படும் மரமாகும்.
மலருக்காக வீடுகளிலும், கோயில் நந்தவனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப்
பயனுடையதாகும்.
நோய் நீக்கி உடல் தேற்றுதல், முறை நோய் தீர்த்தல், உள்ளுறுப்பு அழற்சியைத் தணித்தல், வீக்கம் குறைத்தல், பசி, மாதவிடாய்
ஆகியவற்றைத் தூண்டுதல் ஆகிய மருத்துவக் குணமுடையது.
|