தலமர சிறப்புகள்

சதுரக்கள்ளி (செடியினம்)சதுரக்கள்ளி Euphorbia antiquorum, Linn.; Euphorbiaceae. கொள்ளி வாயின கூரெயிற் றேனம் கிழிக்கவே தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே. - சுந்தரர்.

திருப்புனவாயில் என்னுந் திருத்தலத்தில் தலமரமாக விளங்கும் நான்கனுள் சதுரக்கள்ளியும் ஒன்றாகும். வேலிக்காக வளர்க்கப்படும் செடியினம். முப்பட்டையான தண்டுகளை அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும். மருத்துவக் குணத்தில் சிறந்த நாற்பட்டையான தண்டுடைய இனமும் அரிதாகக் காணப்படுகிறது. இதன் சாறு பால் வடிவானது. உடலில் பட்டால் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது. இதன் தண்டு, பால், வேர் முதலியன மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது. இஃது நச்சு மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


< PREV <
சண்பகம்
Table of Content > NEXT >
சந்தனம்