தலமர சிறப்புகள்

புளிய மரம்புளி Tamarindus indica. Linn.; Caesalpiniaceae. வினையா யினதீர்த் தருளே புரியும் விகிர்தன் விரிகொன்றை நனையார் முடிமேல் மதியஞ்சூடும் நம்பா நலமல்கு தனையார் கமல மலர்மே லுறைவான் தலையோ டனலேந்தும் எனையா ளுடையா னுமையா ளோடும் ஈங்கோய் மலையாரே. - திருஞானசம்பந்தர்.

திருஈங்கோய்மலை திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது புளியாகும். சிறிய கூட்டிலைகளையும், மஞ்சள் வரியுடைய இளஞ்சிவப்பு நிறமலர்களையும், பழுப்புநிற கடினமான நொறுங்கக் கூடிய புறவோட்டினையுடைய கனிகளையும் உடைய பெரு மரமாகும். இலை, பூ, காய், கனி, பட்டை, விதை ஆகியவை மருத்துவப் பயன்கொண்டு விளங்குகின்றது.

இலை வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; நாடி நடையை மிகுத்து உடல் வெப்பந்தரும்; பூ குளிர்ச்சி தரும்; காய் பித்தம் தணிக்கும்; பழம் குடல் வாயு அகற்றி குளிர்ச்சி தரும்; மலமிளக்கும்; பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; தாது பலந்தரும்; கொட்டை சிறுநீர் பெருக்கும்.


< PREV <
புரசு
Table of Content > NEXT >
புன்னைமரம்