|
Home > Temples of India >
pADal peRRa sthalam
தலமர சிறப்புகள்பராய் மரம்
பராய்
Streblus asper, Lour.; Moraceae.
 பராய் மரம்
நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை அறிவரே.
- திருநாவுக்கரசர்.
திருப்பராய்த்துறை திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது பராய் மரமாகும். இது பிராய், பிறாமரம், குட்டிப்பலா என்றெல்லாம்
குறிக்கப்பெறுகிறது. சுரசுரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். புதர்க்காடுகளில் காணப்படும். இலை, பால், பட்டை
முதலியன மருத்துவப் பயனுடையன.
|