தலமர சிறப்புகள்

நெல்லி மரம்நெல்லி Phyllanthus emblica, Linn.; Euphorbiaceae. பதிதா னிலுகா டுபைங்கொன் றைதொங்கல் மதிதா னதுசூ டியமைந் தனுந்தான் விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும் நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. - திருநாவுக்கரசர்.

திருநெல்லிகா, திருநெல்வாயில், திருப்பழையாறை வடதளி முதலிய திருத்தலங்களில் நெல்லி மரமே தலமரமாக விளங்குகின்றது. மிகவும் சிறிய இலைகளையும், இளம்மஞ்சள் நிறக் காய்களையும் உடைய மரம். காய் - இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை ஒருங்கே பெற்றுள்ளது. தமிழகமெங்கும் காடுகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்கின்றன. நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த நெல்லிக்காய் எல்லா காலங்களிலும் மருந்துக் கடைகளில் கிடைக்கும். இஃது ஓர் கற்ப மருந்து. இலை, பூ, பட்டை, வேர், காய் விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

காய் வெப்பகற்றி, சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, குடல் வாயு அகற்றும். வேர் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். நெல்லி வற்றல் குளிர்ச்சியுண்டாக்கி உடல் தாதுக்களைப் பலப்படுத்தும்.


< PREV <
நாவல்மரம்
Table of Content > NEXT >
பராய்மரம்