தலமர சிறப்புகள்

முல்லைச் செடிமுல்லை Jasminum auriculatum, Vahl.; Oleaceae. மைய லின்றிமலர் கொய்துவ ணங்கிடச் செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர் கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம் ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமெ. - திருஞானசம்பந்தர்.

திருக்கருகாவூர், திருக்காவிரிப்பூம்பட்டினம், திருக்கருப்பறியலூர், வடதிருமுல்லைவாயில் முதலிய திருக்கோயில்களில் முல்லைக் கொடியும், திருஉசாத்தானம், திருஇலம்பையங்கோட்டூர் ஆகிய திருக்கோயில்களில் மல்லிகையும் (Jasminum Sambac) திருக்கடவூரில் பிஞ்சிலம் (Jasminum grandiflorum) என்ற பெருமல்லிகையும் தலமரங்களாக அமைந்துள்ளன. இவை மணம் மிகுந்த மலர்களைத் தரும் கொடி இனத்தைச் சார்ந்தவை. இவற்றின் மருத்துவக் குணங்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியானது. இலை, பூ, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது.

பால் சுரப்பு அடக்கல், நுண்புழுக் கொல்லுதல், வீக்கங் கரைத்தல், சிறுநீர் பெருக்குதல், மாதவிடாய் தூண்டுதல் ஆகிய மருத்துவக் குணமுடையது.


< PREV <
மாவிலங்கமரம்
Table of Content > NEXT >
மூங்கில்மரம்