தலமர சிறப்புகள்

கோரை புல்கோரை Cyperus rotundus, Linn.; Cyperaceae. மண்புகார் வான்புகுவார் மனைமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டென் தலைவன்தாள் சார்ந்தாரே. - திருஞானசம்பந்தர்.

திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகிறது. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான இலையையுடைய சிறுபுல்லினம். முட்டை வடிவான நறுமணமுடைய சிறுகிழங்குகளைப் பெற்றிருக்கும். இக்கிழங்குகள் முத்தக்காசு எனக் குறிக்கப்பெறுகின்றன. இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை.


< PREV <
கோங்குமரம்
Table of Content > NEXT >
சண்பகம்