தலமர சிறப்புகள்

கல்லத்தி மரம்கல்லத்தி Ficus tinctoria, Forsterf. Var. parasifica, willd.; Moraceae. குண்டாய் முற்றுந் திரிவார் கூறை மெய்போர்த்து மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல்ல பண்டால் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத் தொண்டா லேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே. - திருஞானசம்பந்தர்.

திருப்பரங்குன்றம் தலத்தின் தலமரம் கல்லத்தி மரம் ஆகும். இது காட்டத்தி என்றும் குறிக்கப்பெறுகிறது. இஃது கல்லால் இனத்தைச் சார்ந்த மரவகையாகும். சுந்தரமூர்த்தி நாயனாரும் திருப்பரங்குன்றத் திருப்பதிகத்தில் “கல்லால் கீழற்கீழ் ஒரு நாட்கண்டது” என்று குறிப்பிடுகின்றார். சிறிய ஆலிலை வடிவில் கரும்பச்சையான இலைகளையும், இலைக்கோணங்களில் மெல்லிய சுணையுடைய காய்களையும் கொண்ட வெண்பச்சையான மரம். இதன் பட்டை, பால், பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.


< PREV <
கருங்காலிமரம்
Table of Content > NEXT >
காட்டாத்திமரம்