தலமர சிறப்புகள்

கடுக்காய் மரம்கடுக்காய் Terminalia Chebula. Retz.; Combretaceae. அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வந்த கணபுல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றுங் குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே. - திருநாவுக்கரசர்.

திருக்குறுக்கைவீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கடுக்காய் மரமாகும். இஃது தமிழக காடுகளில் தானே வளரும் மர வகையைச் சார்ந்தது. சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த மருந்துப் பொருள்களில் இதுவும் ஒன்று.


< PREV <
கடம்பமரம்
Table of Content > NEXT >
கருங்காலிமரம்