லிங்கம் எதைக் குறிக்கிறது?

 

திருநாவுக்கரசர் தேவாரம்

தலம் : பொது திருக்குறுந்தொகை ஐந்தாம் திருமுறை இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம் செங்கணானும் பிரமனும் தம்முளே எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர் இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. 5.95.11 திருச்சிற்றம்பலம்

thirunAvukkaracar thEvAram

thalam : pothu thirukkuRunthokai Fifth thirumuRai iliNgapurANath thirukkuRunthokai thirucciRRambalam ceN^kaNAnum biramanum thammuLE eN^gum thEDith thirin^dhavar kANgilar iN^guRREn enRu iliN^gaththE thOnRinAn poN^gu cenycaDaip puNNiya mUrththiyE. 5.95.11 thirucciRRambalam

Meaning of Thevaram

Red eyed (viShNu) and brahma amongst them, searched everywhere and roamed unable to see; The Lord of Virtuous form with brimming twined red hair appeared in the linga, "I am here!"

பொருளுரை

செங்கண் திருமாலும், பிரமனுமாகிய இருவரும் எங்கும் தேடித் திரிந்தும் (சிவபெருமானைக்) காண்கிலர்; பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியான பெருமான் "இங்குள்ளேன்!" என்று சிவலிங்கத்தில் தோன்றினான்.

Notes

1. இப்பதிகம் முழுமையும் சிவலிங்கம் தோன்றிய வரலாறு குறித்தமையால் இது இலிங்க புராணத் திருக்குறுந்தொகை எனப்பட்டது. 2. பரசிவமாக - வடிவு வண்ணமெலாம் கடந்து நிற்கும் - பரம்பொருளைக் காண இயலாதாக உயிர்கள் துன்புற்றபொழுது இறைவன் கருணையின் காரணமாக நாம் வழிபட இலிங்கமாக - அப்பரசிவத்தைக் குறிக்கும் ஒரு குறியாகத் - தோன்றினான். இதுவே சிவலிங்கத் திருமேனியாகும். இதனை சதாசிவ மூர்த்தம் என்பர். இதன் பின் இறைவன் திருக்கருணையால் உருவங்கள் பல கொண்டவை மாகேச்சுர வடிவங்கள் எனப்படும். இவை பற்றிக் காண http://www.shaivam.org/siddhanta/maahesh.html
< PREV <
மனிதனுக்கும் விலங்குக்கும்
என்ன வேறுபாடு?
Table of Contents > NEXT >
எந்தத் தீர்த்தத்தில் குளித்தால்
முத்தி கிட்டும்?

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page