வாக்கே நோக்கிய மங்கை

 

திருநாவுக்கரசர் தேவாரம்

தலம் : பொது பண் : சாதாரி நான்காம் திருமுறை திருவங்கமாலை திருச்சிற்றம்பலம் மூக்கே நீ முரலாய் - முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய். 4.9.4 திருச்சிற்றம்பலம்

thirunAvukkaracar thEvAram

thalam : common paN : cAthAri Fourth thirumuRai thiruvangamAlai thirucciRRambalam mUkkE n^I muralAy - muthukADuRai mukkaNanai vAkkE n^Okkiya maN^gai maNALanai mUkkE n^I muralAy. 4.9.4 thirucciRRambalam

Meaning of Thevaram

Oh nose resonate! The Three-eyed residing in the burial ground, the Bride of the Lady standing by the words, oh nose resonate!

பொருளுரை

மூக்கே நீ ஒத்தொலிப்பாயாக! பிணக்காட்டில் உறைகின்ற மூன்று கண்ணுடையவனும், திருவாக்கின் குறிப்பு நோக்கும் மங்கையின் மணவாளனுமானவனை மூக்கே நீ ஒத்தொலிப்பாயாக!

Notes

1. வாக்கே நோக்கிய மங்கை - சைவ சித்தாந்த நுட்பமாக இறைவனின் ஆணை வழியே திருவருளாகிய சத்தி செயல்படுகிறது. 2. முரலுதல் - ஒலித்தல்; (ஒலி வாய் வழியே முதன்மையாக வருவதாயினும், அது மூக்கின் ஒத்துழைப்புடனே நடைபெறுகிறது. மூக்கை அடைத்தால் வரும் ஒலி முழுமையாக இருக்காது.)
< PREV <
காது கேட்பதின் பயன்
Table of Contents > NEXT >
பிரானை வாயே வாழ்த்து

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page