எடுத்தானைத் தடுத்தானை

 

திருநாவுக்கரசர் தேவாரம்

தலம் : திருக்கச்சி ஏகம்பம் பண் : காந்தாரம் நான்காம் திருமுறை திருச்சிற்றம்பலம் அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரிய சுனைமல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே. 4.7.10 திருச்சிற்றம்பலம்

thirunAvukkaracar thEvAram

thalam : thirukkacci Ekambam paN : gAndhAram Fourth thirumuRai thirucciRRambalam aDuththAnai uriththAnai aruccunaRkup pAcupatham koDuththAnaik kulavaraiyE cilaiyAkak kUrambu thoDuththAnaip purameriya cunaimalku kayilAyam eDuththAnaith thaDuththAnai en manaththE vaiththEnE 4.7.10 thirucciRRambalam

Meaning of Thevaram

One Who pealed the assaulting elephant; One Who gave the pAshupata weapon to arjuna; One Who shot the sharp arrow with the glorious mount as the bow burning the three cities; One Who prevented the one (rAvaNa) who lifted the thirukkayilAyam having ponds - Him, I have placed in my mind!

பொருளுரை

போருக்கு வந்த யானையை உரித்தவனும், அருச்சுனற்குப் பாசுபத அத்திரத்தை அளித்தவனும், பெருமைவாய்ந்த மலையை வில்லாகக் கூரிய அம்பு தொடுத்து முப்புரம் எரித்தவனும், சுனைகள் மிக்க திருக்கயிலாய மலையை எடுத்தவனை (இராவணனை), அது செய்ய விடாது தடுத்தவனும் ஆகிய பெருமானை என் மனத்தே வைத்தேனே.

Notes

1. அடுத்தானை - அடுத்த ஆனை - சண்டையிட வந்த யானை; குலவரை - இங்கு மந்தர மலை (ஏழு குலவரைகள் - கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம்)
< PREV <
இறைவனுக்குச் சாத்தும் மலர்கள்
எப்படி இருக்க வேண்டும்?
Table of Contents > NEXT >
காது கேட்பதின் பயன்

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page