ஆரவாரச் சொற்களில் மயங்காதீர்

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

தலம் : திருக்கழுமலம் பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள் தம் ஆருறு சொற் களைந்து அடியிணை அடைந்துய்ம்மின் காருறு பொழில் வளர் கழுமல வளநகர்ப் பேரறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே. 3.24.10 திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram

thalam : thirukkazumalam paN : kolli Third thirumuRai thirucciRRambalam thAruRu thaqTTuDaic camaNar cAkkiyarkaL tham AruRu coR kaLain^thu aDiyiNai aDain^thuymmin kAruRu pozil vaLar kazumala vaLan^agarp pErARaththALoDum perun^thakai irun^thathE. thirucciRRambalam

Meaning of Thevaram

Getting rid of the noisy words of dusty mat clad jains and budhdhists, reach to the Feet parallel and get uplifted! There is the Magnanimous along with the Lady of great charity at the prosperous town of thirukkazumalam where the dense gardens grow!

பொருளுரை

தூசி படிந்த பாயை உடுத்த சமணர் மற்றும் பௌத்தர்களின் ஆரவாரமான சொற்களை நீக்கி திருவடி இணையை அடைந்து உய்யுங்கள்! கரிய சோலைகள் வளர்கின்ற திருக்கழுமலமாகிய வளமிக்க திருநகரில் பெரிய அறத்தைச் செய்யும் உமையம்மையுடன் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்!

Notes

1. பேரறம் - உயிர்களை உய்விக்கும் பொருட்டு சத்தியானது சிவத்தினின்று வெளிப்பட்டுச் செயல்படுவது கருதுக. 2. தார் - தூசி; தட்டுடை - பாயுடை; ஆர் - ஆரவாரம்; கார் - கருமை.
< PREV <
நினைவுக்கும் அரிய பெருமான்
Table of Contents > NEXT >
சம்பந்தர் தமிழ் சொன்னால்
விண்ணை ஆளலாம்

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page