இராவணற்கு அருளிய பெருமான்

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருக்கழுமலம் பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட நெருக்கினார் விரலினால்; நீடியாழ் பாடவே கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வளநகர்ப் பெருக்கு நீரவளொடும் பெருந்தகை இருந்ததே. 3.24.8 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thirukkazumalam paN : kolli Third thirumuRai thirucciRRambalam arakkanAr aruvarai eDuththavan alaRiDa n^erukkinAr viralinAl; n^IDiyAz pADavE karukku vAL aruL ceythAn; kazumala vaLan^agarp perukku n^IravaLoDum perun^thakai irun^thathE. 3.24.8 thirucciRRambalam Meaning: As the demon lifted the exceptional mount, crushed with a finger making him cry out! When (he) sang the yAz at length, blessed him with sharp sword; That Magnanimous along with the Lady of grand characters is at the prosperous town of thirukkazumalam. பொருளுரை: அரக்கன் (இராவணன்) அரியதாகிய (திருக்கையிலை) மலையை எடுக்க, அவன் அலறும் வண்ணம் திருவிரலால் நெருக்கினார்; (பின் அவன்) யாழினைக் கொண்டு நெடிது பாடக் கூர் வாள் அருள் செய்தார்; அப்பெருந்தகையாகிய சிவபெருமான் பெருங்குணங்கள் கொண்ட உமையம்மையாருடன் திருக்கழுமலமாகிய வளமிக்க நகரில் இருக்கின்றார். Notes: 1. கருக்கு - கூர்மை; நீர்மை - குணம்.

< PREV <
குற்றப் பட்டியல் தயாரா?
Table of Contents > NEXT >
நினைவுக்கும் அரிய பெருமான்

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page