|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
நிலையான பற்றுக்கோடு எது?
திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருக்கழுமலம்
பண் : கொல்லி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மற்றொரு பற்றிலை நெஞ்சமே! மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழையவளொடும்
பெற்று எனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே. 3.24.6
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirukkazumalam
paN : kolli
Third thirumuRai
thirucciRRambalam
maRRoru paRRilai n^enycamE! maRai pala
kaRRa n^al vEdhiyar kazumala vaLan^garc
ciRRiDaip pEralgul thirun^thizai avaLoDum
peRRu enai ALuDaip perun^thakai irun^thathE. 3.24.6
thirucciRRambalam
Meaning:
Oh mind! There is no other hold!
There is the Magnanimous, Who yielded
and governs me, along with the Lady of slender waist
- wide forelap - well adorned, at the
prosperous town of thirukkazumalam of
virtuous vedins who have learnt multiple vedas!
பொருளுரை:
நெஞ்சமே! பற்றக்கூடிய நிலை வேறு எதுவும் இல்லை!
மறைகள் பலவற்றையும் கற்ற நல்ல வேதியர்கள் வாழ்கின்ற
திருக்கழுமலமாகிய வளமிக்க நகரில்
சிறிய இடையும், பெரிய அல்குலும், அழகிய அணிகலன்களும்
உடைய உமையம்மையுடன், என்னைப் பெற்று ஆட்கொண்ட
பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்!
Notes:
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|