ஏன் தளர்கின்றாய்? இதோ உளது இன்ப வாழ்வு!

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருக்கழுமலம் பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் அடைவிலோம் என்று நீ அயர்வொழி நெஞ்சமே விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும் கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப் பெடைநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே. 3.24.5 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thirukkazumalam paN : kolli Third thirumuRai thirucciRRambalam aDaivilOm enRu n^I ayarvozi n^enycamE viDaiyamar koDiyinAn viNNavar thozuthezum kaDaiyuyar mADamAr kazumala vaLan^agarp peDain^aDai avaLoDum perun^thakai irun^thathE. 3.24.5 thirucciRRambalam Meaning: Oh my mind! Don't cripple thinking, "We have no refuge!" There is the Magnanimous, Who has the bull flag, residing along with the Lady of feminine walk, at the prosperous town of thirukkazumalam, having pinnacles to the end (of the street), worshipped by celestials! பொருளுரை: நெஞ்சமே! நம்மை அடைக்கலம் ஏற்பவர் யாருமில்லை எனத் தளர்ந்துவிடாதே! எருதினைக் கொடியாகக் கொண்ட பெருந்தகை, பெண்மை நிறைந்த நடையுடைய உமையாளோடு, விண்ணவரால் தொழப்படுவதும், (வீதிகளின்) கடைசி வரை மாடங்கள் உடையதுமாகிய திருக்கழுமலமாகிய வளமுடைய நகரில் வீற்றிருக்கிறார்! Notes: 1. விடை - எருது; பெடை - பெண்மை.

< PREV <
அயர்வு நீங்கு நெஞ்சமே
Table of Contents > NEXT >
நிலையான பற்றுக்கோடு எது?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page