அயர்வு நீங்கு நெஞ்சமே

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருக்கழுமலம் பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் அயர்வுளோம் என்று நீ அசைவொழி நெஞ்சமே நியர்வளை முன் கையாள் நேரிழையவளொடும் கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப் பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே. 3.24.4 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thirukkazumalam paN : kolli Third thirumuRai thirucciRRambalam ayarvuLOm enRu n^I acaivozi n^enycamE n^iyarvaLai munkaiyAL n^Erizai avaLoDum kayal vayal kuthikoLum kazumala vaLan^agarp peyar pala thuthi ceyap perun^thakai irun^thathE. 3.24.4 thirucciRRambalam Meaning: Oh my mind, do not suffer saying, "we are exhausted!" Our Magnanimous along with the well adorned Lady of bright bangles in forehand, is at the prosperous town of thirukkazumalam where kayal fishes jump in the fields, to be hailed with many names! பொருளுரை: நெஞ்சமே! நீ, "நாம் அயர்ந்து போனோம்!" என்று தளர்ந்துவிடாதே! ஒளி மிக்க வளையல்களை அணிந்த கைகளை உடைய, அணிகலன்களை அணிந்த உமையோடு, கயல் மீன்கள் வயலிலே குதிக்கின்ற வளமான நகரமாம் திருக்கழுமலத்தில் தன் பெயர்கள் பலவும் கூறி (நாம்) துதிக்கப் பெருந்தகையாம் சிவபெருமான் வீற்றிருக்கின்றார்! Notes: 1. திருமறைக்காட்டிலிருந்து திருஞானசம்பந்தர் மதுரை மாநகரில் சமணரை வென்று சைவநீதி தழைக்கச் செய்து வீற்றிருந்தார். அவர் தம் தந்தையாராம் சிவபாத இருதயர், பலகாலமாயதால் பிள்ளையாரைக் காண மதுரை வந்தார். வந்த தந்தையாரிடம் தம் உயிர்க்குத் தாயும் தந்தையுமாகிய தோணிபுரத்து இறைவன் இருந்த சிறப்பை பேசி இத்திருப்பதிகம் ஓதினார். 2. "மண்ணில் நல்ல வண்ணம்" என்று துவங்கும் இத்திருப்பதிகம் எல்லா நலன்களையும் பெற்று வாழ ஓத வேண்டிய திருப்பதிகமாகும். முழுப்பதிகம்: http://www.shaivam.org/siddhanta/pal.htm 3. அயர்வுளோம் என்று நீ அசைவொழி நெஞ்சமே ஒ. சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே - சம்பந்தர் நடலையில்லோம் - அப்பர். 4. அசைதல் - தளர்தல்; நியர் - நிகர் என்பதன் திரிபு.

< PREV <
சிவலோக வாழ்வு பெற
Table of Contents > NEXT >
ஏன் தளர்கின்றாய்? இதோ
உளது இன்ப வாழ்வு!

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page