|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
சிவலோக வாழ்வு பெற
திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : பொது
பண் : காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை
பஞ்சாக்கரத் திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பராவரே. 3.22.11
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : pothu
paN : gAndhAra panycamam
Third thirumuRai
panycAkkarath thiruppathikam
thirucciRRambalam
n^aRRamiz nyAna camban^than n^AnmaRai
kaRRavan kAziyar mannan unniya
aRRmil mAlai iRain^thum anycezuththu
uRRana vallavar umbar AvarE. 3.22.11
thirucciRRambalam
Meaning:
Those, who are adept in these faultless garland of ten songs
having the Holy Five Syllables held in mind by the king of
people of cIrkAzi - the nyAnacambandhan of good thamiz,
one who has learnt the four vedas,
will become the citizens of the Supreme!
பொருளுரை:
நான்மறைகளும் கற்றவனும், சீர்காழி வாழ்வோர் மன்னனுமாகிய
நல்ல தமிழ் வல்ல ஞானசம்பந்தன் உள்ளத்தே கொண்ட
இழுக்கற்ற மாலையாகிய திருவைந்தெழுத்தை உடைய இப்பத்தும்
வல்லவர்கள் இறைவருலகு வாழ்பவர்கள் ஆவர்.
Notes:
1. நான்மறை கற்றவன் - திருநான்மறை கற்றலைத் துவக்கும்
தமது உபநயனச் சடங்கிலேயே பிள்ளையார் "நான்மறை கற்றவன்"
என்று அருளிச்செய்தது உணர்ந்து மகிழவேண்டியது.
கலைஞானம் கல்லாமே கற்பிக்கப்பட்ட ஞானக்குழந்தையார்!
2. உன்னுதல் - உள்ளம் கொள்ளுதல்; அற்றம் - குற்றம்;
உம்பர் - (பொதுப்பொருள் - தேவர்) - சாலோக முத்தி பெற்றவர்.
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|