வினையை வெல்லும் ஆயுதம்

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : பொது பண் : காந்தாரபஞ்சமம் மூன்றாம் திருமுறை பஞ்சாக்கரத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச் சித்தத்தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு அத்திரமாவன அஞ்செழுத்துமே. 3.22.10 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : pothu paN : gAndhAra panycamam Third thirumuRai panycAkkarath thiruppathikam thirucciRRambalam buththar camaN kazukkaiyar poykoLAc ciththaththavarkaL theLin^thu thERina viththaka n^IRaNivAr vinaippakaikku aththiramAvana anycezuththumE. 3.22.10 thirucciRRambalam Meaning: Discerned and ascertained by those of conscience of not accepting the fallacy of buddhists and jains of set aside discipline! For the enmity of karma on those who wear the miraculous Holy Ash, the weapon is the Holy Five Syllables! பொருளுரை: புத்தர், சமணராகிய கடை ஒழுக்கத்தினர்களின் பொய் மொழிகளைக் கொள்ளாத சித்தமுடையவர்கள் தெளிந்து உறுதியும் அடைந்தன; வித்தகமான திருநீற்றினை அணிபவர்களின் வினையாகிய பகையை அழிக்கும் ஆயுதமாவன திருவைந்தெழுத்தே! Notes: 1. கழுக்கையர் - கடை ஆசாரத்தார் (கை - ஒழுக்கம்); அத்திரம் - (அஸ்திரம்) - படை.

< PREV <
பேசப் பேச ஆர்வங் கூட்டுவன
Table of Contents > NEXT >
சிவலோக வாழ்வு பெற

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page