பேசப் பேச ஆர்வங் கூட்டுவன

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : பொது பண் : காந்தாரபஞ்சமம் மூன்றாம் திருமுறை பஞ்சாக்கரத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர்வணமாவன அஞ்செழுத்துமே. 3.22.9 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : pothu paN : gAndhAra panycamam Third thirumuRai panycAkkarath thiruppathikam thirucciRRambalam kArvaNan n^Anmukan kANuthaRku oNAc cIrvaNac cEvaDi cevvi n^ALthoRum pErvaNam pEcip pithaRRum piththarkaTku ArvaNamAvana anycezuththumE. 3.22.9 thirucciRRambalam Meaning: For the mad devotees, who talk and rave the glorious names everyday on the qualities of the Perfect-colorful-Feet That were beyond vision of the cloud-colored and four-faced, the excitement for them are the Holy Five Syllables. பொருளுரை: மேகவண்ணனும், நான்முகனும் காண இயலாத, சீர்மையும் அமைப்பும் உடைய செம்மையான திருவடிகளின் பெருமைகளை நாள்தொறும் பெயர் பல கொண்டு பேசிப் பிதற்றும் பித்துடையவராகிய அடியவர்களுக்கு, ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைவன திருவைந்தெழுத்தே! Notes: 1. கார் - மேகம்; செவ்வி - குணநலன்கள்; ஆர்வணம் - ஆர்வம்.

< PREV <
இப்பேரண்டத்தை ஆள வேண்டுமா?
Table of Contents > NEXT >
வினையை வெல்லும் ஆயுதம்

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page