பீடை தீரும், செல்வம் பெருகும், பேரருள் பெறும் வழி

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : பொது பண் : காந்தாரபஞ்சமம் மூன்றாம் திருமுறை பஞ்சாக்கரத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன; பின்னை நாள்தொறும் மாடு கொடுப்பன; மன்னு மாநடம் ஆடி உகப்பன அஞ்செழுத்துமே. 3.22.7 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : pothu paN : gAndhAra panycamam Third thirumuRai panycAkkarath thiruppathikam thirucciRRambalam vIDu piRappai aRuththu meccinar pIDai keDuppana; pinnai n^ALthoRum mADu koDuppana; mannu mAn^aDam ADi ugappana anycezuththumE. 3.22.7 thirucciRRambalam Meaning: Cutting off the lapsing birth, ruins the gloom for those who appreciate! Subsequently everyday gives the wealth; Pleases the Lord Who Dances great eternally - That is the Holy Five Syllables! பொருளுரை: வீழ்தலாகின்ற பிறப்பினை நீக்கி, மதித்துக் கூறுபவர்களின், பீடைகளைத் தீர்ப்பன; பின் அத்தகையோர்க்கு நாள்தொறும் செல்வம் கொடுப்பன; என்றும் நில்லாது பெருநடனம் செய்கின்ற இறைவனை மகிழச் செய்வன - திருவைந்தெழுத்தாகும்! Notes: 1. மெச்சினர் - இறைவனுடைய திருவைந்தெழுத்தினை உணர்ந்து ஓதுதல் (காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்) 2. வீடுபிறப்பு - அழிதலை உடைய பிறப்பு; மாடு - செல்வம்; மன்னுதல் - நிலையுடையதாதல்.

< PREV <
துன்பப்படும் பொழுது யார் துணை?
Table of Contents > NEXT >
இப்பேரண்டத்தை ஆள வேண்டுமா?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page