துன்பப்படும் பொழுது யார் துணை?

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : பொது பண் : காந்தாரபஞ்சமம் மூன்றாம் திருமுறை பஞ்சாக்கரத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த்து எய்தும் போழ்தினும் அம்மையினும் துணை அஞ்செழுத்துமே. 3.22.6 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : pothu paN : gAndhAra panycamam Third thirumuRai panycAkkarath thiruppathikam thirucciRRambalam thummal irumal thoDarn^tha pOzthinum vemmai n^arakam viLain^tha pOzthinum immai vinaiyaDarththu eythum pOzthinum ammaiyinum thuNai anycezuththumE. 3.22.6 thirucciRRambalam Meaning: Even when the sneezing and coughing continues, even when fiery hell results in, even when the karma crowds and inflicts suffering here, even in the afterlife - the safeguard is the Holy Five Syllables! பொருளுரை: தும்மல், இருமல் நோய்கள் தொடர்ந்த பொழுதும், கொடுமையான நரக வாழ்வு விளைந்தாலும், இம்மையிலேயே வினைகளால் மொய்க்கப்பட்டுக் கெட்டாலும், இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்னும் - துணையாக அமைவது திருவைந்தெழுத்தே! Notes:

< PREV <
இவையெல்லாம் ஐந்தே
Table of Contents > NEXT >
பீடை தீரும், செல்வம் பெருகும்,
பேரருள் பெறும் வழி

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page