இங்கு நிலையிலர் அங்கு நிலைப்பர்

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருவாவடுதுறை பண் : காந்தாரபஞ்சமம் மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் அலைபுனல் ஆவடு துறை அமர்ந்த இலை நுனை வேற்படை எம் இறையை நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலை வல்லார் வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாக முன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே. 3.4.11 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thiruvAvaDuthuRai paN : gAndhAra panycamam Third thirumuRai thirucciRRambalam alaipunal AvaDuthuRai amarn^tha ilai n^unai vERpaDai em iRaiyai n^ala miku nyAnacamban^than conna vilaiyuDai arun^thamiz mAlai vallAr vinaiyAyina n^IN^gippOy viNNavar viyanulakam n^ilaiyAka mun ERuvar n^ilamicai n^ilaiyilarE. 3.4.11 thirucciRRambalam Meaning: On our God residing at the tidal thiruvAvaDuthuRai holding sharp edged spear arm, these valuable rare thamiz garland told by the highly virtuous thirunyAnacamban^than those who are adept in, will get rid of the karmas and get on to the grand world of the Celestial for sure and are impermanent on the earth. பொருளுரை: நீர்த்திரை கொண்ட திருவாவடுதுறை அமர்ந்த கூரிய சூலப்படை உடைய எம் இறைவனை, நலம் மிகுந்த திரும்ஞான சம்பந்தன் சொன்ன பயன்தரும் இவ்வரிய தமிழ் மாலையைத் தேர்ந்தவர்கள், வினைகள் நீங்கப்பெற்று, விண்ணவருடைய பேருலகம் ஐயமின்றிச் செல்வர்; இம்மண்ணில் (பிறத்தலிறத்தலாகிய) நிலை நீங்குவர். Notes: 1. இலை நுனை - கூரிய; வேற்படல் - சூலம்; வியன் - பெரிய.

< PREV <
சிலர் வீண்பேச்சில் இழிய, சிலர்
பேரின்பம் துய்த்துய்ய
Table of Contents > NEXT >
சந்தியாவந்தன மந்திரம்

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page