பட்டினி கிடந்தாலும் பரமனை நினைமின்

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருவாவடுதுறை பண் : காந்தாரபஞ்சமம் மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலர் அடியலால் உரையாதென் நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரிதாயவனே. இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே. 3.4.9 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thiruvAvaDuthuRai paN : gAndhAra panycamam Third thirumuRai thirucciRRambalam uNNinum pacippinum uRaN^giunum n^in oNmalar aDiyalAl uraiyAthen n^Ak kaNNanum kaDikamaz thAmarai mEl aNNalum aLapparithAyavanE. ithuvO emaiyALumARu IvathonRemakkillaiyEl athuvO unathinnaruL AvaDuthuRaiyaranE. 3.4.9 thirucciRRambalam Meaning: Whether I eat, starve, sleep, other than Your beautiful floral Feet my tongue will not say (anything)! Oh the One immeasurable by the kRishNa and the reverend on the fragrant lotus! If this is the way to govern us and nothing to give us, that be Your nice blessings, oh the hara of thiruvAvaDuthuRai! பொருளுரை: உணவு உண்டாலும், பசித்து இருந்தாலும், உறங்கினாலும் உன்னுடைய அழகிஅ மலர்த் திருவடிகளை அல்லால் என் நாக்கு கூறாது. கண்ணனும், நறுமணம் கமழும் தாமரை மேல் உறையும் பெரியோனும் அளக்க இயலா வகை நின்றவனே! இவ்வகையே எம்மை ஆளும் வகையாக, எமக்குக் கொடுப்பது ஒன்றும் இல்லையானால், அதனையே உனது திருவருளாகக் கொள்வோம் திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே! Notes: 1. ஒ. நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார் - திருத்தொண்டர் புராணம் 2. தாமரை மேல் அண்ணல் - பிரமன் 3. ஒண்மை - அழகு; கடி - மணம்.

< PREV <
இடர்ப்பாடுகள் வந்த பொழுது...
Table of Contents > NEXT >
சிலர் வீண்பேச்சில் இழிய,
சிலர் பேரின்பம் துய்த்துய்ய

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page