தீவினை தாக்கினால் என் செய்ய

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருவாவடுதுறை பண் : காந்தாரபஞ்சமம் மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பா உன் அடியலால் அரற்றாதென் நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thiruvAvaDuthuRai paN : gAndhAra panycamam Third thirumuRai thirucciRRambalam veppoDu viraviyOr vinai varinum appA un aDiyalAl araRRAthen n^A oppuDai oruvanai uruvaziya appaDi azaleza viziththavanE. ithuvO emaiyALumARu IvathonRemakkillaiyEl athuvO unathinnaruL AvaDuthuRaiyaranE. thirucciRRambalam Meaning: Even if the karma comes in fieriness oh my Father, other than Your Feet my tongue will not utter! Oh the One Who stared raising the fire at the one parallel (in looks) destroying his form! If this is the way to govern us and nothing to give us, that be Your nice blessings, oh the hara of thiruvAvaDuthuRai! பொருளுரை: வெம்மை மிகுந்ததாகத் தாக்கக் கொடுவினை வந்தாலும், அப்பா, உனது திருவடியல்லாது என் நாக்கு அரற்றாது. ஒப்பான உருவம் உடைய ஒருவனை உருவழியத் தீயெழ விழித்தவனே! இவ்வகையே எம்மை ஆளும் வகையாக, எமக்குக் கொடுப்பது ஒன்றும் இல்லையானால், அதனையே உனது திருவருளாகக் கொள்வோம் திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே! Notes: 1. ஒப்புடை ஒருவன் - சிவபெருமான் போன்று அழகான மைந்தனை வேண்டி மன்மதனைத் திருமால் மகனாகப் பெற்றார். அம்மதனனை எரித்த நிகழ்வு இங்கு சுட்டப்படுகின்றது.

< PREV <
பெருந்துன்பத்திலும் உன்னைப் பாடுதல் ஒழியேன்
Table of Contents > NEXT >
இடர்ப்பாடுகள் வந்த பொழுது...

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page