எத்தொலைவிலிருந்தும் பூக்கொணர்ந்து வழிபட்டவர்

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருப்புள்ளிருக்குவேளூர் பண் : சீகாமரம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் வாச நலஞ் செய்திமையோர் நாடோறும் மலர்தூவ ஈசன் எம்பெருமானார் இனிதாக உறையுமிடம் யோசனை போய்ப் பூக்கொணர்ந்தங்கு ஒரு நாளுமொழியாமே பூசனை செய்தினிதிருந்தான் புள்ளிருக்குவேளூரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thiruppuLLirukkuvELUr paN : cIkAmaram Second thirumuRai thirucciRRambalam vAca n^alam ceythu imaiyOr n^AL thORum malar thUva Ican emperumAnAr inithAka uRaiyumiDam yOcanai pOyp pUkkoNarn^thaN^gu oru n^ALum oziyAmE pUcanai ceythu inithirun^thAn puLLirukkuvELUrE. thirucciRRambalam Meaning: Making fragrance, the dwellers of himAlaya, everyday showering flowers, the Master, our Lord happily residing place is thiruppuLLirukkuvELUr where (sambAdhi and jaTayu) traveled yojanai, bringing flowers and worshipped joyfully everyday without fail! பொருளுரை: இமையவர்கள் நறுமணம் செய்து, நாள்தோறும் மலர்தூவ, ஈசனும், எம்பெருமானுமானவர் இனிதாக உறையும் இடமாவது, நாள்தவறாமல் யோசனை தூரம் சென்று பூக்கொணர்ந்து (சம்பாதியும் சடாயுவும்) வழிபாடு செய்து மகிழ்ந்திருந்த திருப்புள்ளிருக்குவேளூர் ஆகும். Notes: 1. யோசனை - 13 மைல் தூரம்.

< PREV <
வைத்தீஸ்வரன்கோயில்
Table of Contents > NEXT >
அடியார்களின் சொந்த வீடு

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page