|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
வைத்தீஸ்வரன்கோயில்
திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர் மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடம்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க்கு அரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruppuLLirukkuvELUr
paN : cIkAmaram
Second thirumuRai
thirucciRRambalam
kaLLArn^tha pUN^konRai mathamaththam kathir mathiyam
uLLArn^tha caDai muDi emperumAnAr uRaiyumiDam
thaLLAya cambAthi caDAyenbAr thAmiruvar
puLLAnArkku araiyaniDam puLLirukku vELUrE.
thirucciRRambalam
Meaning:
The residence of Our Lord Who has inside the twined hair
- floral konRai full of honey, pungent Umaththam and radiant moon -
is thiruppuLLirukkuvELUr which is the place of the King of
the two inordinary birds sampAthi and jaTAyu.
பொருளுரை:
தேன் நிறைந்த கொன்றைப் பூவும், கடுமணமுடைய ஊமத்தமும்,
ஒளிமிக்க சந்திரனையும் உள்ளே வைத்த சடைமுடியுடைய
எம்பெருமானாருடைய உறைவிடம்,
தள்ளத்தகாத பறவைகளாகிய சம்பாதி மற்றூம் சடாயு
என்னும் இருவருக்கும் தலைவனாகிய சிவபெருமானுடைய
திருப்புள்ளிருக்குவேளூர் ஆகும்.
Notes:
1. புள்ளிருக்குவேளூர் - வைத்தீஸ்வரன் கோயில்
(புள் - பறவையாகிய சடாயு மற்றூம் சம்பாதி,
இருக்கு - இருக்கு வேதம், வேள் - முருகப் பெருமான்
இங்கு சிவபெருமானைப் பூசித்ததால் இப்பெயர் பெற்றது.)
2. கள் - தேன்; மதம் - கடுமை; புள் - பறவை;
அரையன் - அரசன்.
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|