|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
பொன்னும், போகமும், புண்ணியமும் பெறலாம்
திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்பிரமபுரம்
பண் : சீ காமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற் பிரமபுரத்து உறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவை வல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruppiramapuram
paN : cI kAmaram
Second thirumuRai
thirucciRRambalam
thannaDain^thArkku inbaN^gaL tharuvAnaith thaththuvanaik
kannaDain^tha mathiR piramapuraththu uRaiyum kAvalanai
munnaDain^thAn camban^than mozipaththum ivai vallAr
ponnaDain^thAr bOgaN^gaL pala aDain^thAr puNNiyarE.
thirucciRRambalam
Meaning:
One Who bestows with the joys for those who reach to Him!
One Who is the Principle! The Guard residing at the
thiruppiramapuram of stone-walls! These ten songs of
thirunyAnacambandhan who reached out to Him zealously,
those who are capable, they have got gold;
they have got very many enjoyments; they are virtuous!!
பொருளுரை:
தன்னை அடைந்தவர்களுக்கு இன்பங்கள் தருவானும்,
மெய்ப்பொருளாக இருப்பவனும், கல்லால் ஆன மதில் உடைய
திருப்பிரமபுரத்தில் உறையும் காவலனுமான பெருமானை
ஆர்வத்தோடு அடைந்த திருஞானசம்பந்தனின் இப்பத்து
பாடல்களையும் வல்லவர்கள் பொன் அடைந்தவர்களும்,
போகங்கள் பல அடைந்தவர்களும், புண்ணியரும் ஆவர்.
Notes:
1. முன்னுதல் - முற்படுதல்
ஒ: முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே - திருவெம்பாவை
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|