நிலையான பெருஞ்செல்வம் வேண்டுமா?

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருப்பிரமபுரம் பண் : சீகாமரம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் சிலையது வெஞ்சிலையாகத் திரிபுரமூன்று எரிசெய்த இலைநுனை வேற்றடக்கையன் ஏந்திழையாள் ஒருகூறன் அலைபுனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடிபணிந்தால் நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thiruppiramapuram paN : cI kAmaram Second thirumuRai thirucciRRambalam cilaiyathu venycilaiyAkath thiripuramUnRu ericeytha ilai n^unai vEl thaDakkaiyan En^thizaiyAL orukURan alaipunal cUz piramapuraththu arumaNiyai aDipaNin^thAl n^ilaiyuDaiya perunycelvam n^IDulagiR peRalAmE. thirucciRRambalam Meaning: One holding in long hands the (sharp) leaf like edge spear, Who burnt the three puras with the mount as the lethal bow; Partner of beautiful Lady; When the Rare Gem at thiruppirampuram surrounded by tidal waters is saluted, one can get eternal great wealth in this grand world. பொருளுரை: மலையே வலிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்த இலை போன்ற கூரிய சூலத்தைக் கொண்ட நீண்ட கைகளையுடையவன்; அழகிய பெண்ணை ஒரு கூறு உடையவன்; நீரலை சூழ்ந்த திருப்பிரமபுரத்து அருமணியை அடிபணிந்தால் நிலையான பெருஞ்செல்வத்தை இந்தப் பேருலகிலேயே பெறலாகும். Notes: 1. சிலை - மலை/வில்; தடக்கை - நீண்ட கை; ஏந்திழை - அழகிய பெண்.

< PREV <
எங்கு யாதாகப் பிறந்தாலும்
நம்மைச் சிவபெருமான் காப்பார்!
Table of Contents > NEXT >
தக்கார் என்பவர் யார்?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page