சமணர் பௌத்தர்

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருமருகல் பண் : இந்தளம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் அறிவில் சமணும் அலர் சாக்கியரும் நெறியல்லன செய்தனர் நின்றுழல்வார் மறியேந்து கையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறை நீக்கினையே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thirumarugal paN : indhaLam Second thirumuRai thirucciRRambalam aRivil camNum alar cAkkiyarum n^eRiyallana ceythanar n^inRuzalvAr maRiyEn^thu kaiyAy marukaR perumAn n^eRiyAr kuzali n^iRai n^IkkinaiyE. thirucciRRambalam Meaning: The foolish jains and blaming buddhists did not righteous things. They will whirl (uselessly). Oh the One with cub in hand! Lord of thirumarugal! You removed the completeness of the well-formed plait lady! பொருளுரை: அறிவில்லாத சமணரும், புறங்கூறும் பௌத்தரும் நன்னெறிக்குப் புறம்பானவை செய்தார். அவர்கள் பயனற்று உழல்வார்கள். மான்குட்டியை ஏந்திய கையவனே! மருகற் பெருமானே! நன்கமைந்த கூந்தலுடைய இப்பெண்ணின் முழுமை நீங்கச் செய்தனையே! Notes: 1. நெறியல்லன செய்தனர் நின்றுழல்வார் "பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடி சேராதார்" - திருக்குறள் சமணரும் சாக்கியரும் இறைவனடி வணங்காது தம் முயற்சியையே நம்பி இருப்பதால் நன்னெறி விட்டு இவ்வுலகிலேயே உழல்பவர்கள்.

< PREV <
மரித்தல் இல்லாதவர்கள் பிரியாத பெருமான்
Table of Contents > NEXT >
அடியார்களின் ஆற்றல் திருவருள் வழிநிற்றலாலே

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page